World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Countdown to Poland's entry into the European Union

ஐரோப்பிய ஒன்றியத்தில் போலந்தின் நுழைவிற்கு நாட்கள் நெருங்குகின்றன

By Marius Heuser
4 October 2003

Back to screen version

போலந்து, சைப்ரஸ், செக் குடியரசு, லாட்வியா, லிதுவேனியா, மால்டா மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள், மார்ச் 1, 2004 அன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) உறுப்பு நாடுகளாகும். இந்த நாடுகளில், போலந்து மிக உயர்ந்த மக்கள் தொகையும் மற்றும் உயர்ந்த பொருளாதாரத்தையும் கொண்டது. 36 மில்லியன் மக்கள் தொகை கொண்ட, போலந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே விகிதாச்சார பிரதிநிதித்துவத்திற்கும் கூட தகுதிபெற இருக்கின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்குப்புற விரிவாக்கம், குறைந்த ஊதிய ஆதாரங்களையும், சந்தைகளைப் பெறுவதையும், ஐரோப்பிய பொருளாதார மற்றும் அரசியல் முக்கியத்துவத்தை அதிகரிப்பதையும் அதன் நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்பொழுது போலந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நான்காவது பெரிய வெளிநாட்டு வர்த்தகப் பங்காளராக உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாவதை, போலந்து மக்கள் கலப்பு உணர்வுகளுடன்தான் எதிர்நோக்குகின்றனர். பல போலந்து தொழிலாளர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உறவினரைக் கொண்டுள்ளனர், அல்லது அங்கு தொடர்ச்சியாகப் பயணம் செய்கின்றனர். அவர்களுக்கு ஐரோப்பியநாடுகள், தங்களுடைய கிழக்குப்புற நாடுகளைவிடச் செல்வம் படைத்தவையாகவே தோன்றுகின்றன. குறிப்பாக இளம் போலந்து தலைமுறையினர், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாவதைப்பற்றி வளமான கற்பனையைக் கொண்டுள்ளனர். ஜூன் 7-8 தேதிகளில் EU உறுப்பு நாடாவது பற்றிய வாக்கெடுப்பில், 59 சதவீதம் மக்கள் கலந்துகொண்டு, அதில் 77 சதவீதத்திற்கும் மேலாக சேரவேண்டும் என்ற ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

அதேநேரத்தில், மக்கள் வலதுசாரி விவசாய கட்சியான சுய பாதுகாப்பு (Samoobrona), தேசிய சமய போலந்து குடும்பங்கள் கழகம் (LPR) ஆகியவற்றிற்கும் ஆதரவு கூடியுள்ளது. இரண்டு அமைப்புகளுமே ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராவதை நிராகரிக்கின்றன, சமுக நலன்கள் மீதான தாக்குதல்கள், சமுதாயத்தில் பரந்த தட்டுகளின் ஏழ்மை நிலை இவற்றின் விளைவாக எழுந்துள்ள எதிர்ப்பு உணர்வை தங்கள் தேசியவாத நலன்களுக்காக பயன்படுத்திக்கொள்ள பார்க்கின்றன. சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராவதைத் தொடர்ந்து ஆதரித்து வாதாடும் பழைய ஸ்ராலினியக் கட்சியான, ஆளும் SLD (Alliance of the Democratic Left), 70 சதவீதம் மக்களால் எதிர்க்கப்படுகிறது.

1989 லிருந்து, சாதாரண மக்கள் வாழ்க்கை வியக்கத்தக்க முறையில் மோசமாகி விட்டிருக்கிறது. இது முக்கியமாக, உறுப்புநாடாவதற்கு போலந்து நாட்டிற்கு, ஐரோப்பிய ஒன்றியம் முன்நிபந்தனையாக கட்டாயமாக செயல்படுத்த வேண்டியவற்றை விதித்ததன் விளைவினால் ஆகும். 1998ல் உறுப்பினர் நாடாக போலந்து ஏற்கப்பட்டு, சில "முன்னுரிமைகள்" கட்டாயமாக்கப்பட்டன. ஏனையவற்றுள் தனியார்மயமாக்கப்படல் முழுமைப்படுத்தப்படல், மீன்துறையில் அடிப்படை கட்டமைப்பு சீர்திருத்தம், வேளாண்மை மற்றும் நிதித்துறைகளில் தாராளமயமாக்குதல் ஆகியவை உள்ளடங்கும்.

போலந்தின் காலாவதியான தொழில்துறை மற்றும் விவசாயத்துறை, ஐரோப்பிய எதிர்ப்பாளர்களுடன் போட்டியிடமுடியாது. நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தனியார்மயமாக்குதல்களும், பகுத்தறிவுபூர்வமானதாக ஆக்குதலும், வேலையின்மை, சமுதாய வறுமை அளவுகளைக் கொடூரமான நிலைக்குக் கொண்டு வந்து விட்டுள்ளன. முதலாளித்துவம் மீண்டும் புகுத்தப்பட்டதிலிருந்து, சுரங்கத் தொழிலில் மட்டும், 250,000 வேலைகள் அழிக்கப்பட்டுவிட்டன. அதிகாரபூர்வமான வேலையின்மையே, 18 சதவீதம் அளவை எப்பொழுதோ தாண்டிவிட்டது. வேலையின்மை உதவிகள் குறைந்த அளவில், சிலருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வருகின்றன. இது சுகாதார, பொதுநலத்துறைகள் தனியார்மயமாக்கப்பட்டதின் நேரடி விளைவாகும்.

விவசாயிகள் எதிர்கொள்ளும் நிலையோ இன்னும் இருண்டதாகும். தேசிய மொத்த உற்பத்தியில், விவசாயத்துறையின் பங்கு 3.3 சதவீதம் தான் என்றாலும், போலந்து உழைக்கும் சக்தியில் கிட்டத்தட்ட 20 சதவிகிதத்தினர், நிலத்தில்தான் வேலை செய்கின்றனர். சராசரியாக, ஒரு ஹெக்டர் நிலத்தில் சாகுபடி செய்ய 26பேர் ஈடுபடுகின்றனர். அப்படியென்றால் போலந்து விவசாயிகள் உலகச்சந்தையில் போட்டியிடமுடியாது என்று பொருள். அதேநேரத்தில், மேற்கு ஐரோப்பாவிலிருந்து மானிய உதவிபெற்ற மலிவான உற்பத்திப் பொருட்கள் போலந்து சந்தைகளில் அதிக அளவில் கிடைகின்றன.

சமீபத்திய அடிப்படை சீர்திருத்தங்களையடுத்து, பல பெரிய, நவீன விவசாயத்துறை நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டாலும்கூட, மொத்த போலந்து பண்ணைகளில் 55 சதவீதம் 5 ஹெக்டேருக்கும் குறைவான பரப்பளவைத்தான் கொண்டுள்ளன. அவை மொத்த வேளாண் நிலத்தில் 21 சதவீதம் தான் ஆகும். மாறாக, பெரியபண்ணைகளில் 19 சதவீதம் வேளாண் நிலத்தில் 56 சதவீதம் சாகுபடி செய்கின்றன. பாதிக்கும் மேலான (56 சதவீதம்) பண்ணைகள் அபிவிருத்தி செய்யப்பட முடியாதவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன; இப்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டியையும் எதிர்நோக்கும் நிலையில் அவை மூடப்படும் தன்மையைத்தான் கொண்டுள்ளன. பல விவசாயிகளும் ஏற்கனவே தாங்கள் நுகர்வதற்கானதைத்தான் உற்பத்தி செய்கின்றனர். முழுமையாக இரந்து நிற்கும் நிலையலிருந்து அவர்களைக் காப்பது அவர்களுடைய நிலங்கள்தாம். சமீபத்திய அடிப்படைச் சீர்திருத்தங்கள் நிச்சயமாக மில்லியன் கணக்கான மக்களை அழிவிற்கு இட்டுச்செல்லவிருக்கின்றன.

அண்மைய ஆண்டுகளில் நுகர்பொருட்கள் விலை ஐரோப்பிய அளவிற்கு உயர்ந்துவிட்டன என்றாலும், ஊதியங்கள் குறைவான நிலையில்தான் உள்ளன சமீபத்திய, வார்ஸா பல்கலைக்கழக பொருளாதார பள்ளி ஆய்வின்படி, 40 சதவீதம் போலந்து குடும்பங்கள் தங்களுடைய அடிப்படைத் தேவைக்கு போதுமான அளவுமட்டுமே வருமானத்தைக் கொண்டுள்ளன. போலந்தின் மக்கள் தொகையில் கால் பகுதியினர், உத்தியோக ரீதியிலான வறுமைக் கோட்டிற்குக் கீழேதான் வாழ்கின்றனர்.

கிழக்கத்திய கூட்டின் சிதைவிற்குப் பிறகு, போலந்தை ஆண்ட பல அரசாங்கங்கள், தம் சமுதாய விரோத நடவடிக்கைகளைச் செயல்படுத்த பரந்த அளவிலான மக்கள் எதிர்ப்பைக்கடும் இடர்ப்பாடுகளிடையே சந்திக்கவேண்டியிருந்தது. 1997ல் அதிகாரத்திற்கு வந்த வலதுசாரி Election Action Solidarity (AWS), தாராளவாதக் கொள்கை "சுதந்திர ஒன்றியம்" (UW) இவற்றின் கூட்டணி, தம் சொந்த அணிகளுக்குள்ளேயான உட்பூசல்களின் விளைவாகவே 2000 கோடையில் தனியாகப்போயின. கிராமப்புற தட்டுக்களை அடிப்படையாக கொண்டிருந்த AWS உடைய பழமைவாத பிரிவுகள், ஐரோப்பிய ஒன்றியத்துடைய கோரிக்கைகளை, எஞ்சியுள்ள தங்கள் செல்வாக்கையும் இழக்க நேரிடும் என்ற அச்சத்தால் ஏற்க மறுத்துவிட்டன. பின்னர் ஆட்சிக்கு வந்த AWS உடைய சிறுபான்மை அரசாங்கத்தின் காலத்திலும் இப்பூசல்கள் தொடர்ந்தன.

செப்டம்பர் 2001 தேர்தல்களை தொடர்ந்து, AWS, UW இரண்டுமே அழிவுகரமான தோல்விகளை சந்தித்து போலந்து பாராளுமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாமற்போயின. SLD இந்த தேர்தலில் வெற்றிபெற்றது; இது வேர்க்கர்ஸ் யூனியன் (Workers Union) (UP) என்ற சிறுகட்சியுடன் சேர்ந்து 41 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. SLD மற்றும் UP சேர்ந்து Leszek Miller தலைமையிலான விவசாயிகள் கட்சியுடன் (PSL) சேர்ந்து கூட்டணி அரசாங்கம் அமைத்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக வேண்டும் என்ற வாதத்தைத் தொடர்ந்து வலியுறுத்திய ஒரே பெரிய கட்சி SLD தான்.

ஐரோப்பிய ஒன்றியம், தன்னுடைய கிழக்கத்திய விரிவாக்கத்திற்கு போலந்தில் முக்கியமாக நம்பியுள்ள அரசியல் வட்டம், பழைய ஸ்ராலினிச அதிகாரத்துவத்திலிருந்து வெளிப்பட்ட, பெரும்பாலான குற்றஞ்சார்ந்த கூறுபாடுகள்தாம், 1980களின் இறுதியில் போலந்தின் அரசியல்முறை சிதைந்தபொழுது, ஸ்ராலினிச தேசியக்கட்சியின் தலைமையின்கீழ் PZPR எனும் அமைப்பு குறிப்பிடத்தக்க அளவு மாற்றத்தைக் கண்டது. பழைய அதிகாரத்துவத்தினர், வரவிருக்கின்ற மாறுதல்களிலிருந்து தங்கள் பைகளை நிரப்பிக்கொள்ளும் நவீன தாராண்மை சந்தர்ப்பவாதிகளாக மாறினர். புதிதாக தனியார்மயமாக்கப்பட்டுள்ள நிறுவனங்கள், வங்கிகள், முக்கியச்செய்தி ஊடகங்கள், அரசு அமைப்புக்கள் ஆகியவற்றின் நிர்வாகக்குழுக்கள், இவற்றில் முக்கிய பொறுப்புக்களை வகிக்க தந்திர உத்திகளைக் கையாண்டனர். இதுதான் "சிவப்பு இயக்குநர்கள்" என வந்த நிலையின் தொடக்கமாகும்; இன்று இவர்கள் கணிசமான அளவில் போலந்து நிறுவனங்களின் உடைமையாளர்கள் ஆவர்.

1993TM SDRP (பின்பு SLD), மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அதனுடைய வாடிக்கையாளரை திருப்தி செய்ய தன்னுடைய நவீன தாராண்மைக் கொள்கைகளைத் தொடர்ந்தது. அதே நேரத்தில் Solidarity அரசாங்கத்தால் இயற்றப்பட்ட சட்டங்களையும் ரத்து செய்தது. அரசியல்வாதிகளுக்கும் பழைய ஸ்ராலினிச இரகசியப் போலீசார் KGBக்கும் இடையே இருந்த உறவுகளின் பரப்பை வெளிப்படுத்தும் நோக்கங்களில் இவை இயற்றப்பட்டன. பழைய ஆளும் செல்வந்த தட்டினர் தங்களுடைய அரசு பதவிகள், செய்தி ஊடகப்பதவிகள் ஆகியவற்றில் மீண்டும் அதன் நிலையை நிலை நிறுத்திக்கொண்டது.

இப்பொழுது ஜனாதிபதியாக உள்ள Alexander Kwasnievski, தன்னுடைய அரசியல் வாழ்வை, கட்சியின் மிகப்பெரிய பதவிகளுக்கு உயரும் முன், ஸ்ராலினிச இளைஞரமைப்பில் ஆரம்பித்தார். 1990ல், SDRP யில் அவர் தலைவராகயிருந்தார். அரசாங்கத்தின் தலைவரான Leszek Miller, SDRP உடைய மத்திய குழுவின் செயலாளராக இருந்து, கடுமையான ஸ்ராலினிசவாதி என புகழ் பெற்றிருந்தார். இப்போதோ, போலந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக வேண்டும் என்பதற்காக வாக்காளரின் ஆதரவைக் கோருகிறார்.

ஆளும் அரசாங்கத்தின் தன்மை, கடந்த ஆண்டு பரந்த அளவிலான ஊழல்கள் வெளிப்பட்டதில், நன்கு தெளிவாயிற்று. போன ஜூனில், நடிகர் Lew Rywin-ஐ 17.5 மில்லியன் டாலர் லஞ்ச முயற்சியில் ஈடுபடுத்த மில்லர் முயன்றதாகச் சந்தேகம் எழுந்தது. இது நிரூபிக்கப்பட முடியவில்லை என்றாலும் இதுபற்றிய குற்றச்சாட்டு விசாரணையின்போது, தங்களுடைய சொந்த பிழைப்பை பெருவர்த்தகத்தில் தொடங்க கட்சியைப் பயன்படுத்துபவர்கள் நிறையப்பேர் SLDல் இருப்பது தெளிவாயிற்று. இந்த விவகாரத்திற்கு பின்னர், மில்லர் தன்னுடைய அமைச்சர் குழுவை மாற்றியமைத்தாலும் கூட, அது அரசாங்கம் பற்றிய எண்ணத்தை முன்னேற்றவில்லை.

சுகாதார மந்திரி Mariusz Lapinsky, அவருடைய உதவி மந்திரி Waldemar Deszynski, சுகாதாரநிதித் தலைவர் Aleksander Naumann, ஆகியவர்களைப் பாதித்த மற்றொரு ஊழலும் வெளிவந்தது. அதிகாரிகளுக்கு சில ஆதாயங்கள் வழங்கப்பட்ட பின்னர், மருந்து உற்பத்தியாளர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்ட்டன என்பது வெளியாயிற்று. இவ்விவகாரம் பொதுமக்கள் கவனத்திற்கு வந்தவுடன், லாபின்ஸ்கி கட்சியிலிருந்தும் அரசாங்கத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டார்.

மீண்டும் ஆளும் கட்சியின் கிரிமினல் தொடர்புகள், Starachowice இல், உள்ளூர் SLD குழுவினர்மீது மத்திய போலீசமைப்பு குறிப்பிட்ட நடவடிக்கை எடுப்பதாக உள்ளது என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், Andrzej Jagiello எச்சரித்ததை அடுத்து அம்பலமாயிற்று. உள்ளூர் குழுவினர் முறையான குற்றஞ்செய்வோருடன் தொடர்புகளைக் கொண்டிருந்தனர்.

PSL-SLD கூட்டணி மார்ச் 2003ன் தொடக்கத்தில் பிரிவுற்றது. PSL கிராமப்புற தட்டுக்களின் ஆதரவை ஆதாரமாகக்கொண்டுள்ள நிலையில், சமுதாயத்தின் நலிந்த பிரிவுகளின் மீது தாக்குதல் நடத்தும் அரசாங்கத்தில் பங்கையும் கொண்ட ஒற்றைக் கயிற்றில் நடக்கும் வித்தையையும் ஒரே நேரத்தில் செய்யமுடியவில்லை. கருத்துக்கணிப்புக்களில் PSL தொடர்ந்து Samoobrona க்குத் தன் இடத்தை கொடுக்க நேரிட்டது. அதன்பின் SLD ஒரு சிறுபான்மை அரசாங்கமாக நாட்டை, சிறிதளவே மக்கள் ஆதரவைக் கொண்டு ஆண்டுவருகிறது. ஊழல் நிகழ்ச்சிகள் மீண்டும், போலந்து சமுதாயத்தின் உயர்மட்டத்திலுள்ள குற்றக்குழுக்களுக்கும், பெரும்பாலான மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை வெளிப்படுத்தியுள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் அந்தஸ்து, போலந்து மக்களுக்கு சமுதாய பாதுகாப்பையும், ஜனநாயகத்தையும் கொடுத்துவிடப்போவதில்லை. பெரும்பாலான மக்களுடைய இழப்பில் தங்களைக்-கொழுக்க வைத்துக் கொண்டிருக்கும் ஊழல் தட்டுக்களே நாட்டை ஆண்டு வருகின்றன. அடிப்படை கட்டமைப்பு சீர்திருத்தங்களாலும், தனியார்மயமாக்கப்படுதலாலும் மில்லியன் கணக்கில் மக்கள் வறுமையில் வாடி வருகின்றனர். இதற்கு மாறாக, மேற்கு ஐரோப்பிய ஆளும் செல்வந்த தட்டு போலந்து தொழிலாளரின் சமுதாய நிலையை பயன்படுத்தி தங்கள் நாட்டு தொழிலாளருடைய நிலையையும் குறைக்கப் பார்க்கின்றனர். ஐரோப்பிய அரசை ஒன்றுபடுத்துதல் போலந்து மக்களுக்கும் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் முக்கியமான அடிப்படைதான். ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆளும் செல்வந்த தட்டால் இதை அமைக்க முடியாது, மாறாக அவர்களுக்கு எதிராக பரந்த அளவில் வரும் மக்கள் இயக்கத்தால்தான் இயலும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved