World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா:
ஐக்கிய அமெரிக்கா
ஙிusலீ ணீt tலீமீ ஹிழிணீ ஷ்ணீக்ஷீ நீக்ஷீவீனீவீஸீணீறீ tணீளீமீs tலீமீ ஜீஷீபீவீuனீ ஐ.நா.வில் புஷ் மேடையேறும் ஓர் போர் குற்றவாளி By Bill Vann ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ.புஷ் ஐ. நா. சபையில் செடபம்பர் 23 அன்று ஆற்றியுள்ள உரை அவரது அறியாமையுடன் அவதூறு செய்வதாக அமைந்திருக்கின்றது. அது ஒரு விடையத்தைத் தெளிவுபடுத்துகின்றது, ஈராக்கில் அமெரிக்க நிர்வாகம் தேச அளவில் குறிப்பிடத்தக்க அளவிற்கு ஆதரவை பெறமுடியும் என்ற நம்பிக்கையை புஷ் நிர்வாகம் அறவே இழந்துவிட்டதை அது எடுத்துக்காட்டுகின்றது. தனது செயலுக்கு வருந்தாத ஒரு போர்க் குற்றவாளியாக அந்த உலக அமைப்பின் முன்னர் புஷ் தோன்றினார். அவர் ஐ.நா. சாசனத்தையும் மற்றும் சர்வதேச சட்டத்தையும் மீறுகின்ற வகையில் ஒரு ஆக்கிரமிப்பு போரை நடத்தியிருக்கின்றார். அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில் ஹிட்லரிய ஆட்சி, ஆத்திரமூட்டப்படாமலே வலியத்தாக்கும் குற்றச்செயல் அடிப்படையிலான ஆக்கிரமிப்பு போரை நடத்தியதுபோல, இப்போது ஜனாதிபதி புஷ் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார். நியூயார்க் நகரத்திலும், வாஷிங்டன்DC பகுதியிலும் 2001 செப்டம்பர் 11 அன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கும் ஈராக் ஆட்சிக்கும் தொடர்பு இருந்தது என்பதற்கு எந்தவிதமான சான்றும் இல்லை என்று சென்ற வாரம் அமெரிக்கா பகிரங்கமாக ஒப்புக்கொண்டது. ஆனால் புஷ், உலக வர்த்தக மையம் சிதைந்து கிடப்பதை ``இன்னும் முற்றும் பெறாத போரின்`` அடையாளச் சின்னம் என்று ஐ.நா.வில் தனது உரையை துவங்கினார். சர்வதேச அளவில் தற்போது இழிவுபடுத்தப்பட்டு கிடக்கும் ஈராக் போருக்கான சாக்குபோக்கை மீண்டும் கடைவிரித்து விற்பதற்கு முயன்றிருக்கிறார். பாக்தாத் ஆட்சி, மிகப்பெருமளவிற்கு மக்களை கொன்று குவிக்கும் பேரழிவு ஆயுதங்கள் குவிக்கப்பட்டு மிக ஆபத்தான அச்சுறுத்தலாகயிருந்த காரணத்தினால் போர் தொடுக்கப்பட்டது என்ற கூற்றை மீண்டும் கூறியிருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் ஐ.நா.வினது கண்காணிப்பு அமைப்பின் தலைவரான ஹான்ஸ் பிளிக்ஸ் ஒரு வாரத்திற்கு முன்னர் அமெரிக்காவும், பிரிட்டனும், ஈராக் ஆயுதங்கள் தொடர்பாக தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை தேடுவது, ஐரோப்பிய மத்திய கால வரலாற்றில் சூனியக்காரிகளை கண்டுபிடிக்க நடத்திய வேட்டையை போன்றது என்று வர்ணித்திருக்கிறார், மற்றும் வாஷிங்டன் ஈராக் முழுவதையும் துருவித்துருவி சோதனை செய்வதற்காக அமைந்திருந்த சோதனைப் பிரிவு அந்நாட்டில் எல்லா சோதனைகளையும் நிறுத்தி வைத்தது என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஈராக்கிடம் தொன் கணக்கில் உயிரியல் மற்றும் இரசாயண ஆயுதங்கள் இருந்ததாக போருக்கு முன்னர் கூறப்பட்டது. உண்மையிலேயே புஷ் பயங்கர ஆயுதங்கள் குறித்து அவசரத் தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், பயங்கரவாதிகள் புதைத்து வைத்த ஆயுதங்களை கண்டுபிடித்துவிடப் போவதாகவும் தானாகவே கூறியிருந்தார். அமெரிக்க அதிகாரிகள் பழைய ஆட்சியின் பதிவேடுகளை ஆராய்ந்து வருவதாகவும், அவை ஆயுதங்கள் தயாரிப்பு திட்டங்கள் குறித்து முழுமையாக தகவல் தரும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதை வேறு வகையில் விளக்குவது என்றால், தொன் கணக்கில் ஈராக்கில் இருப்பதாக வாஷிங்டன்தான் குற்றம் சாட்டும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நச்சு வாயு ஆந்த்ராக்ஸ் செரின் மற்றும் இதர பயங்கரமான இரசாயணப் பொருட்களின் அடையாளம் கூட ஈராக்கில் கிடைக்கவில்லை. நியூயார்க்கில் உள்ள ஐ.நா. கட்டிடத்தில் அவரது பேச்சை கேட்பதற்காக திரண்டு இருந்த அரசுத் தலைவர்கள், வெளிநாட்டு அமைச்சர்கள், சர்வதேச இராஜதந்திரிகள் ஆகியோர் பத்திரிகைகளைக்கூட படிக்காத பாமரர்கள் என்று அமெரிக்க ஜனாதிபதியின் உரையை தயாரித்தவர்கள் நம்பினார்களா? உண்மையில் அவரது உரை மேலே குறிப்பிடப்பட்டவர்களுக்காக எழுதப்பட்டதல்ல, குடியரசுக்கட்சியில் ஆதிக்கம் செலுத்துகின்ற அரை பாசிஸ்ட்டுகள் மற்றும் தீவிர வலதுசாரிகள் ஆகிய அவரது அரசியல் செல்வாக்கின் அடித்தளத்தில் உள்ளவர்கள் மூளையில் பதியவேண்டும் என்பதற்காக அந்த உரை எழுதப்பட்டிருக்கின்றது. பூகோள இராணுவாதம் மற்றும் சூறையாடலில் இருந்து திரும்பப்போவதில்லை என்று தனது ஆதரவாளர்களுக்கு அவர் தனது உரை மூலம் உறுதியளித்திருக்கிறார். ராணுவ பலாத்காரத்தின் மூலம் ஈராக்கின் எண்ணெய் கிணறுகளை பிடித்துக்கொள்வதோடு மத்திய கிழக்கில் தனது மூலோபாய கிடுக்கிபிடியை நிலைநாட்டும் அமெரிக்காவின் செயல்திட்டம் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. பல ஊடக நிபுணர்கள் புஷ் சமரச முயற்சியை மேற்கொள்வார் என்று ஊகங்களை வெளியிட்டது. அதற்கு நேர்மாறாக புஷ் தனது உரையில் ஒவ்வொரு அம்சத்திலும், தனது ஆத்திரமூட்டும் போர் வெறிபோக்கை வெளிப்படுத்தியிருக்கின்றார். 2001 நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றிய புஷ் அமெரிக்காவை ஆதரிக்காதவர்கள், அமெரிக்காவின் எதிரிகள் என்று மிரட்டியதை போன்று இப்போதும் உரையாற்றியிருக்கிறார். சென்ற ஆண்டு ஐ.நா.வில் உரையாற்றிய புஷ் அந்த சர்வதேச அமைப்பிற்கே எச்சரிக்கை விடுத்தார். ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டுள்ள போர் ஆயத்தங்களுக்கு கீழ்படிந்து ஐ.நா. செயல்பட தவறுமானால் ஐ.நா. அமைப்பே காலத்திற்கு ஒவ்வாதது என்று ஆகிவிடும் என்பதாக எச்சரிக்கை விடுத்தார். குழப்பமும் குண்டரிய நடவடிக்கைகளும் ஐ.நா. பொது சபையில் உரையாற்றும் போது புஷ் ஒன்றை குறிப்பிட்டார்: ``கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற சம்பவங்கள் நம் முன்னால் இரண்டு தெளிவான அணிகளை நிறுத்தியுள்ளன. சமுதாயத்தில் ஒழுங்கை நிலைநாட்டுவோர் ஒரு பக்கமும், குழப்பத்தை உருவாக்குவோர் மற்றொரு பக்கமும் நின்று கொண்டிருக்கின்றனர். சமாதான முறையில் மாற்றம் காண விரும்புவோர் மற்றொரு பக்கமும், குண்டர் வன்முறை நடவடிக்கைகளை ஆதரிப்போர் மற்றொரு பக்கமும், மனிதனது உரிமைகளை மதிப்போர் ஒரு பக்கமும், திட்டமிட்டு மகளிர் குழந்தைகளின் வாழ்வை கருணையோ அல்லது வெட்கமோ இல்லாமல் பறிக்கின்றவர்கள் கொல்கின்றவர்கள் மறு பக்கமும், நின்று கொண்டிருக்கன்றனர்`` என்று குறிப்பிட்டார். உலக மக்களில் வளர்ந்து வருகின்ற மிகப்பெரும்பாலோர் உலகில் குழப்பத்தை உருவாக்குகின்ற மிகப்பெரிய சக்தி அமெரிக்க ராணுவாதம் என்று கருதுகின்றனர். புஷ் நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடைமுறைகள் முற்றிலும் குண்டர் வன்முறையாகவே அமைந்திருப்பதாக கருதுகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி ஒரு போரை கட்டவிழ்த்துவிட்டார். அந்தப் போர் அமெரிக்க நிர்வாக வட்டாரங்களிலேயே தேவையற்றது மற்றும் எந்தவிதமான ஆத்திரமூட்டலும் இல்லாது தொடுக்கப்பட்ட போர் என்ற கருத்தை பரவலாக ஒப்புக்கொண்டிருக்கின்றன. ஈராக் போரில் குறைத்து மதிப்பிட்டால் கூட குறைந்தபட்சம் 10,000 குடிமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.. கட்டாய இராணுவ சேவையில் ஈடுபட்டிருந்த ஈராக் இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கில் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் "மனித உரிமைகளை மதிப்பதற்கு" தான் அவ்வாறு செயல்பட்டதாக கூறிக்கொள்வது கொச்சைப்படுத்துவதாகும். அண்மையில் அமெரிக்கா தனது இராணுவ வலிமையில் பெற்றிருக்கும் ஒரு தரப்பு வெற்றி குறித்து புஷ் பெருமை பாராட்டுபவராக தோன்றுகிறார், இதன் மூலம் ஐ.நா. பேரவையில் திரண்டிருக்கின்ற நாடுகளுக்கு, அடுத்த குறி அவற்றுள் எந்த நாடாகவும் இருக்கலாம் என மறைமுகமான எச்சரிக்கையும் விடுத்திருக்கின்றார். ``ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானின் முன்னாள் ஆட்சிகளுக்கு மாற்று என்ன என்பது தெளிவாக தெரிந்திருந்த காரணத்தினால் அவர்கள் தங்கள் பாதையை தேர்ந்து எடுத்துக்கொண்டார்கள்`` என்று ஒரு கொலைகாரன் தான் கொன்று குவித்த பட்டியலை காட்டுவதை போன்று புஷ் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார். "தலிபான் பயங்கரவாதத்திற்கு தூபம் போட்டது, அதன் பணியாளர்களாகவும் செயல்பட்டது, ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டபோது சரணடைய மறுத்தது. இப்போது அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தது ஐ.நா.வின் நம்பகத்தன்மையை தற்காத்து நிற்பதற்குத்தான்" என்று நம்ப முடியாத அளவிற்கு ஒரு கூற்றை வெளியிட்டிருக்கிறார், ஆனால் ஐ.நா. ஈராக் மீது படையெடுப்பு நடத்துவதை எதிர்த்தது, அங்கீகரிக்க மறுத்துவிட்டது. அதற்கு பின்னர் உரையாற்றும்போது ஐ.நா. பொது சபையில் அமெரிக்கா நியமித்த ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாயை அவர் பெருமையோடு சுட்டிகாட்டியிருக்கிறார். அவரை "ஆப்கானிஸ்தானில் கண்ணியமானதும் நியாயமானதுமான ஒரு சமுதாயத்தை உருவாக்கிவரும் சுதந்திர மக்களின்" பிரதிநிதி என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் கர்சாய் திவாலாகிவிட்ட வெறும் ஆட்சிக்கு தலைமை தாங்குகிறார், தலைநகர் காபூலின் புறநகருக்கு அப்பால்கூட அவரது அதிகாரம் செல்லுபடியாகவில்லை, காபூலிலும், புறநகரிலும் கூட பரவலாக அவரது ஆட்சிக்கு எதிர்ப்பு நிலவுகிறது. இதற்கிடையில் அமெரிக்க படைகள் இன்னமும் எதிர்த்து தாக்கும் கெரில்லா இயக்கத்திற்கு எதிராக அமெரிக்க படைகள் இரத்தக்களரியான போரில் ஈடுபட்டிருக்கின்றன. ஐ.நா. பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஈராக் பிரதிநிதிகளை விடுவிக்கப்பட்ட நாட்டின் பிரதிநிதிகள் என்று அவர் வர்ணித்திருக்கிறார். புஷ் உரையாற்றுவதை படம் பிடித்த காமிராக்கள், ஈராக் பிரதிநிதிகள் வீற்றிருந்த கோணத்தை தங்களது கடமை தவறாது திருப்பிப் படம் பிடித்துகாட்டின. அங்கே கிணற்று தவளை முகத்தோற்றம் கொண்ட அகமது சலாபி உட்கார்ந்திருந்தார். அவர் வங்கி மோசடியில் தண்டிக்கப்பட்டவர். மற்றும் நவ-பழமைவாத சிந்தனைவாதி கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து கொண்டிருந்த அஹமட் ஷலாபியை அமெரிக்க இராணுவம் தனது விமானத்தின் மூலம் ஈராக்கிற்கு கொண்டுவந்தது. புஷ் உரையில் ஒரு இடத்தில் அமெரிக்கா ஈராக்கை பிடித்துக்கொண்டிருப்பதால் ஈராக் மக்களது அன்றாட வாழ்வு மேம்படுவதற்கு உதவி வருவதாக குறிப்பிட்டிருக்கிறார். ஈராக்கின் முன்னாள் பாத் அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டு பட்டியலையே மந்திரம் போல் புஷ் படித்தார். ``பழைய ஆட்சி மாளிகைகளை கட்டியது பள்ளிக்கூடங்களை சிதைத்துவிட அனுமதித்தது. பழைய ஆட்சி மருத்துவமனைகளுக்கு நிதி ஒதுக்கீடும் வசதிகளும் செய்யாமல் தவிக்கவிட்டது. பழைய ஆட்சி ராணுவங்களையும், ஆயுதங்களையும் தயாரித்தது, குவித்தது, அதே நேரத்தில் நாட்டின் தொழிற்கட்டமைப்பு வசதிகள் சிதைவதற்கு அனுமதித்தது`` இவ்வாறு புஷ் கூறியிருக்கிறார். அமெரிக்காவின் உண்மையான நிலவரத்தையே புஷ் மிக எளிதாக அதேபோன்று வர்ணித்திருக்க முடியும். அமெரிக்காவில் இன்றைக்கு நிலவுவதைப் போல் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையில் நிலவுகின்ற ஏற்றத்தாழ்வுகள் இதற்கு முன்னர் எப்போதும் நிலவவில்லை. அமெரிக்காவில் ஒரு பக்கம் பணக்காரர்களுக்கு மாளிகைகள் எழும்பிக்கொண்டிருக்கின்றன மற்றொரு பக்கம் வீடற்றவர்கள் பட்டாளம் பெருகிக்கொண்டிருக்கின்றது. நாடு முழுவதிலும் எல்லா மாவட்டங்களிலும் பள்ளிக்கூடங்கள் சிதைந்துகொண்டு வருகின்றன. 40 மில்லியனுக்கு மேற்பட்ட அமெரிக்க மக்களுக்கு எந்தவிதமான சுகாதார காப்பீடும் இல்லை. அமெரிக்காவின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் அடிப்படை சமுதாய சேவைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதையும் சுருட்டிவிட்டு, ராணுவங்களையும் ஆயுதங்களையும் குவிப்பதற்காக பென்டகன் அரை திரில்லியன் டாலர்களுக்கு மேற்பட்ட தொகையை தனது பட்ஜெட்டில் உருவாக்கியிருக்கிறது. ஈராக்கில் சில சிறிய உதவித் திட்டங்களை அந்நாட்டின் முன்னேற்றத்திற்கான சான்றாக புஷ் சுட்டிக்காட்டியிருக்கிறார். அங்கே உண்மையான நிலவரம் என்னவென்றால் பெரும்பாலான மக்களுக்கு வேலை வாய்ப்பில்லை; பாதுகாப்பான அல்லது நிச்சயமான மின்சாரம், தண்ணீர் சப்ளை இல்லை. தனி மனிதர்களுக்கு அவர்கள் நடமாடுவதற்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை. அமெரிக்க மக்களில் மிகப்பெரும்பாலோர் பெருகி வரும் சமுதாய துன்பங்களை எதிர் கொண்டிருக்கும்போது அதற்கு புஷ் தருகின்ற ஒரே மருந்து பணக்காரர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குவது தான்.
பாலஸ்தீனியர்களுக்கு அச்சுறுத்தல் அமெரிக்க ஜனாதிபதி போரை நியாயப்படுத்துவதற்கு பொருத்தமற்ற ஒரு காரணத்தை கூறியிருக்கிறார், மத்திய கிழக்கில் ஜனநாயகத்தை பூத்து குலுங்கச் செய்யும் நடவடிக்கை தான் இந்த போர் என்று கூறியிருக்கிறார். ஆனால் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கும் எதிராக போராடுவதற்கு உறுதிகொண்டுள்ள மக்களை அரபு உலகம் முழுவதிலும் இருந்து திரட்டுகின்ற காந்த சக்தியாக ஈராக் மாறிவிட்டது என்பதை அமெரிக்க அதிகாரிகளே ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. மத்திய கிழக்கில் சமாதானம் என்று சொல்லப்படுவது அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு பின்னர் இஸ்ரேலில் ஷரோன் ஆட்சி ஈராக் படையெடுப்பால் பாரிய படுகொலைகளை பாலஸ்தீன மக்கள்மீது ஏவிவிடுவதற்கு துணிச்சல் பெற்றிருக்கிறது. மேலும் இது பாலஸ்தீன ஆணையத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட யாசீர் அராபத்தை கொலை செய்துவிடுவதாக அச்சுறுத்தும் முடிவிற்கு இப்போது இஸ்ரேலை கொண்டுவிவந்திருக்கின்றது. இஸ்ரேல் மீது புஷ் எந்தவிதமான கண்டனமும் தெரிவிக்கவில்லை. கடந்த 36 ஆண்டுகளாக மேற்குக்கரையிலும் காசா பகுதிகளிலும் சட்ட விரோதமாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளைவிட்டு வெளியேறவேண்டும் என்று ஐ.நா. சபை நிறைவேற்றியுள்ள தீர்மானங்களை இஸ்ரேல் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றது. இஸ்ரேலை கண்டிப்பதற்கு பதிலாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால் துன்புற்று வருகின்ற பாலஸ்தீனியர்களுக்கு புஷ் ஒரு இறுதி எச்சரிக்கையும் விட்டிருக்கிறார். ``ஈராக்கில் ஜனநாயக அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன, அவற்றின் முன்னேற்றம் பாலஸ்தீன மக்கள் உட்பட மற்றவர்களுக்கு முன் உதாரணமாக அமைந்திருக்கிறது. அந்த முன் உதாரணத்தை மற்றவர்கள் புத்திசாலிதனத்தோடு பின்பற்ற முன்வரவேண்டும்" என்று புஷ் அறிவித்திருக்கிறார். இது ஒரு ஆலோசனையா இல்லை அச்சுறுத்தலா? ஈராக் "முன் உதாரணம்" எப்படி உருவாக்கப்பட்டது, ஏவுகணைகள், விமானந்தாங்கி கப்பலில் இருந்து பறந்து வந்த ராக்கெட்டுக்கள், சரகுண்டுகள், ஈராக்கிற்கு குவியலாக கொண்டுவரப்பட்ட தளவாடங்கள் ஆகியவற்றால் அந்த முன் உதாரணம் உருவாக்கப்படவில்லையா? மேற்குக்கரைப் பகுதியிலும் காசா பகுதியிலும், இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதை நிறுத்திக்கொள்ளாவிட்டால் மற்றும் வாஷிங்டன் ஏற்றுக்கொள்ளும் தலைவர்களை பாலஸ்தீன மக்கள் தங்களது தலைவர்களாக தேர்ந்தெடுக்காவிட்டால் ஈராக்கிற்கு ஏற்பட்ட நிலைதான் அவர்ளுக்கும் உருவாகும் என எச்சரிக்கையாக அதை எடுத்துக்கொள்ள முடியும். புஷ் உரையாற்றும்போது ஐ.நா. பொது சபையில் கலந்துகொண்ட பெரும்பாலான பிரதிநிதிகள் எந்தவிதமான ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக கற்பாறைபோல் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தனர். ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அன்னன் கூட அமெரிக நிர்வாகத்தை கண்டிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார். அமெரிக்கா ஈராக் மீது படையெடுப்பதற்கு முன்னேற்பாடுகளை செய்துகொண்டிருந்த நேரத்தில் மிகக் கடுமையாக அவர் கண்டிக்க தவறிவிட்டார். அதன் மூலம் ஐ.நா. போருக்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கு பரபரப்பு இல்லாமல் வழியமைத்து கொடுத்தார். புஷ் நிர்வாகத்தின் தேசீய பாதுகாப்பு தத்துவத்தை மறைமுகமாக குறிப்பிட்ட கோபி அன்னான் எந்த நாட்டின் மீதும் திடீர் தாக்குதல் நடத்தி, அந்த தாக்குதல் நடத்தும் உரிமை உண்டு என்று வாஷிங்டன் கூறிவருவது உலகம் முழுவதிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார். "எனது கவலையெல்லாம் அமெரிக்காவின் திடீர் போர் தத்துவம் கடைபிடிக்கப்படுமானால் அது சில முன் மாதிரிகளை உருவாக்கிவிடும் தன்னிச்சையாக எந்தவிதமான சட்ட வரையறையும் இல்லாமல் எந்தவிதமான நியாயமோ நம்பகத்தன்மையோ இல்லாமல் அல்லது நம்பகத்தன்மையுடன் ஒரு தலைபட்சமாக ஒவ்வொரு நாடும் பலாத்காரத்தை ராணுவ வலிமையை பயன்படுத்துகின்ற குழப்பம்தான் ஏற்படும்" என்று கோபி அன்னான் குறிப்பிட்டிருக்கிறார். அவர் தனது உரையில் ஐ.நா. சாசனத்தை சுட்டிக்காட்டியுள்ளார். நேரடியாக தற்காப்பிற்காக மட்டுமே ராணுவத்தை பயன்படுத்துவதை அல்லது ஐ.நா.வின் ஒப்புதலோடு பயன்படுத்துவதில் தான் ஐ.நா. சாசனம் அனுமதித்திருக்கின்றது என்று விளக்கினார். இப்போது மக்களை கொன்று குவிக்கும் பயங்கர ஆயுதங்களோடு எந்த நேரத்திலும் திடீர் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டிருப்பதால் இந்தக் கருத்து எடுபடாது என்று தற்போது சிலர் கூறுகிறார்கள். இந்த கருத்தின் தார்மீக பின்னணியை ஆராய்ந்தால் கடந்த 58 ஆண்டுகளாக உலக சமாதானமும், ஸ்திரத்தன்மையும், குறைபாட்டோடுயிருந்தாலும், நிலைநாட்டப்பட்டு வருகின்றது. அந்தக் கொள்கைகளுக்கு அடிப்படையிலேயே சவால் விடுவதாக இந்த தார்மீக தத்துவம் அமைந்திருப்பதாக கோபி அன்னான் விளக்கம் தந்திருக்கிறார். அமெரிக்காவின் சட்டவிரோதமான போர் குறித்து ஐ.நா. சபையிலோ, பொதுச்செயலாளர் உரையிலோ எந்தவிதமான குறிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சுற்றி வளைத்து பேசியிருக்கிறார். கருத்து வேறுபாடுகள் காரணமாக கற்பனையான உதாரணம் காட்டுகின்ற அளவிற்கு காரியங்கள் நடைபெற்றது போன்று அவரது உரை அமைந்திருக்கின்றது. ஆனால் ஈராக்கில் ராணுவ வலிமையால் நாடு முழுவதும் அடிமைப்படுத்தப்பட்டிருக்கின்றது. இரத்தக்களரியான போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியிருக்கிறார்கள். இதைப் பற்றி எந்தவிதமான குறிப்பும் இல்லை. பிரான்ஸ் ஜனாதிபதி ஜாக் சிராக் ஓரளவிற்கு மிகுந்த வெளிப்படையாக ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்ததை கண்டித்திருக்கிறார். "அனைவர் சார்பிலும் ஒருவர் தனிப்பட்ட முறையில் செயல்பட முடியாது, எந்தவிதமான விதிமுறைகளும் இல்லாமல் ஒரு சமுதாயம் குழப்பத்தில் ஆழ்த்தப்படுவதை எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஐ.நா. பாதுகாப்பு சபையின் அங்கீகாரம் இல்லாமல் போர் தொடுக்கப்பட்டது பன்நாட்டு கட்டுக்கோப்பையே அது ஆட்டி அசைத்துவிட்டது. ஐ.நா. சபை தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆபத்தான நெருக்கடியை சந்தித்து வந்திருக்கின்றது" என்று சிராக் தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார். ஈராக்கில் புஷ் நிர்வாகம் ஐ.நா.விற்கு அரசியல் அதிகாரத்தை கொடுத்துவிட வேண்டும் என்று சிராக் கேட்டுக்கொண்டார். மக்களால் அதிகாரத்தை வழங்குவதற்கு விரைவான நிகழ்ச்சிநிரலை தயாரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.. பிரான்ஸ் அரசாங்கம் ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் ஆளும் குழுக்களின் சார்பில் கருத்து தெரிவித்தது. அமெரிக்காவின் பெரிய நிறுவனங்கள் அவற்றின் நலன்களுக்காக தலைமை அமெரிக்க நிர்வாகிகள் ஈராக்கில் பணியாற்றிக் கொண்டிருப்பதால் ஈராக்கில் தொடர்ந்து அமெரிக்கா தனது ராணுவ பங்களிப்பை நிலைநாட்டுவதற்கு பிரான்சும் இதர நாடுகளும் நிதி உதவி எதையும் தராது என்பதை பிரான்சு அரசு தெளிவாக அறிவித்துவிட்டது.. புஷ் பிரான்ஸ் நாட்டு கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். ஈராக்கில் ஆட்சி மாற்றம் ஈராக் மக்களது தேவைக்கு ஏற்ப தான் உருவாகும். அவசர வேகத்திலோ அல்லது தாமதமாகவோ, இதர தரப்பினரின் கருத்துக்களுக்காக நடவடிக்கை உருவாகாது என்று ஜனாதிபதி புஷ் கூறினார். ஈராக் மக்களது தேவைகளை முடிவு செய்வது யார்? புஷ் ஐ.நா.வில் உரையாற்றுவதற்கு ஒரு நாளைக்கு முன்னர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொலின் பவெல் அமெரிக்காவின் ஈராக் நிர்வாகத்தை எவ்வளவு காலத்திற்கு நடத்தும் என்ற கேள்விக்கு பவள் பதிலளிக்கும் போது ஈராக் மக்கள் தாங்களே தங்களை எந்த வகையில் ஆட்சி செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்வதற்கு நாங்கள் அனுமதிக்கின்ற காலம் வரை ஈராக் மக்கள் அதற்குரிய தகுதியை பெற்றுவிட்டார்கள் என்று கருதுகின்ற வரை அமெரிக்க நிர்வாகம் ஈராக்கில் நீடிக்கும் என்று விளக்கம் தந்தார். பொருளாதார சூறையாடல் செயல்த்திட்டம் இதற்கிடையில் வாஷிங்டனில் உள்ள குண்டர் ஆட்சி திட்டமிட்டு ஈராக்கின் செல்வத்தை சூறையாடுவதற்கு எண்ணியிருக்கின்றது. பெருகிவரும் தேசீய எதிர்ப்பு இயக்கத்தை ராணுவ வலிமையால் ஒடுக்கிவிட நடவடிக்கை எடுத்து வருகின்றது. புஷ் நிர்வாகத்தின் திட்டங்கள் சென்ற வாரக் கடைசியில் வெளியிடப்பட்டன. ஈராக் துரோகிகள் ஆட்சியில் வாஷிங்டன் நியமித்திருக்கும் நிதியமைச்சர் எதிர்பாராத வகையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான செயல்திட்டத்தை வெளியிட்டார். இந்த பொருளாதார சீர்திருத்த திட்டம் துபாயில் நடைபெற்ற உலக நாணய நிதியம் உலக வங்கி கூட்டத்தில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. அந்த திட்டத்தில் பாக்தாத்தில் உள்ள வாஷிங்டனின் தலைமை நிர்வாகி ``போல் பிரேமர்`` கையெழுத்திட்டதன் மூலம் அது ஈராக்கில் சட்ட வடிவம் பெற்றுவிட்டது. ஈராக் பொருளாதாரத்தையே ஒட்டுமொத்தமாக தனியார்மயமாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஈராக் மக்களை நேரடியாக பாதிக்கின்ற வகையில், அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களை முற்றிலுமாக பேணிக்காப்பதை ஊக்குவிக்கும் வகையில், பொருளாதார சீர்திருத்த திட்டம் முதலீடு, வர்த்தகம் மற்றும் வரிக் கொள்கைகளை ஈராக் மீது திணிக்கின்றது. இந்த திட்டத்திற்கு முன்மாதிரி ஒன்று உண்டு, முன்னாள் சோவியத் யூனியன் 10 ஆண்டுகளுக்கு முன்னர் "அதிர்ச்சி வைத்திய" பொருளாதார பேரழிவுத் திட்டத்தை ஈராக் மீது திணித்தது. அந்த திட்ட செயல்பாட்டினால் மிகப்பெரும்பாலான மக்களது வாழ்க்கைத்தரம் அடிமட்டத்திற்கு சென்றது. ஈராக் சமுதாயத்தில் பணக்கார கிரிமினல் கும்பல் ஒன்று உருவாயிற்று. ஆனால் இன்றைய தினம் ஈராக்கில் அதே நடைமுறை அமெரிக்காவின் துப்பாக்கி முனையில் செயல்படுத்தப்படவிருக்கின்றது. Halliburton மற்றும் Bechtel போன்ற அரசியல் தொடர்புடைய அமெரிக்க கொர்ப்பரேட்கள் லாபத்தில் மிகப்பெரும் பங்கை பெறுகின்ற வகையில் உறுதி செய்து தருவதற்காக துப்பாக்கி முனையில் இப்போது அந்த திட்டம் செயல்படுத்தப்படவிருக்கின்றது. மின்சாரம் முதல் மருத்துவமனைகள் வரை ஈராக்கின் தொழிற் துறைகள் அனைத்தையும் தனியார்மயமாக்க திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருக்கின்றது.. அரசிற்கு சொந்தமான பல்வேறு தொழில்களை தனியார்மயமாக்கவும் திட்டமிடப்பட்டிருக்கின்றது.. இதில் மிகக் கொடூரமான ஓர் அம்சம் என்னவென்றால் இலாபம் தரும் என்று கருதப்படுகின்ற சில தொழில்கள் அமெரிக்க கம்பெனிகளால் எடுத்துக்கொள்ளப்படும் ஏனயவை மூடப்பட்டு அதன் தொழிலாளர்கள் குப்பை மேடுகளில் தூக்கி வீசப்படுவார்கள். இங்கு 100 சதவீதம் வெளிநாட்டு முதலீடுகளை எல்லா துறையிலும் அனுமதித்து, இயற்கை வளங்களை விரையம் செய்யாது, வர்த்தக வரியையும் குறைத்துள்ளது. சலுகைகள் வழங்கி, உடனடியாக எல்லா சொத்துகளையும் பணமாக கொண்டு செல்ல வெளிநாட்டு கம்பெனிகளுக்கு முழுமையான உத்தரவாம் அளித்துள்ளது ஈராக்கின் பரவலான எண்ணெய் வளம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று திட்டத்தில் சம்பிரதாய முறையில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் ஈராக்கில் மீதமிருக்கும் எல்லாத் தொழில்களையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்க பன்நாட்டு நிறுவனங்கள் எண்ணெய் வளம் தமது கட்டுப்பாட்டில் வந்ருவதனை உறுதியாக்கிவிடும். பொருளாதார நிர்பந்தங்கள் மூலம் உலகம் முழுவதிலும் வாஷிங்டன் தனது பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை நிலைநாட்டுவதற்கு ஈராக் மீது நடத்தப்பட்ட படையெடுப்பு மற்றும் ஆதிக்கத்தை முன்மாதிரியாக பயன்படுத்தி வருகின்றது. புஷ் வெள்ளை மாளிகையில் நிர்வாகம் நடத்திக்கொண்டிருக்கின்ற வலதுசாரிச் சதிகாரக்கும்பல் ஈராக்கை தங்களது சமுதாய மற்றும் பொருளாதார கொள்கைகளுக்கான சோதனைக்களமாக ஆக்கி, மிதமிஞ்சிய இராணுவ வலிமை மூலம் மூலம் முதலாளித்துவத்தின் ''சுதந்திர சந்தை'' கொள்கைகளை தடையேதுமற்று கொண்டு செலுத்த முடியுமா என்று பரிசோதித்துப் பார்க்கின்றார்கள். அமெரிக்க கம்பெனிகளின் இலாபம் அதிகரித்தாக வேண்டும் என்ற நெருக்கடி அதிகரித்து வருகின்றது, எனவே இதன்மூலம் ஈராக்கில் தடையேதுமற்று சுரண்டலாம், சூறையாடலாம் என்று அது கருதுகின்றது. ஐ.நா.வில் புஷ் ஆற்றியுள்ள உரை ஈராக் மக்களுக்கும், அமெரிக்க உழைக்கும் மக்களுக்கும் எச்சரிக்கை விடுப்பதாக அமைந்திருக்கின்றது. ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தின் தொடரும் ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு வலுத்துகொண்டு வருகின்றது. அமெரிக்க இராணுவ வீரர்கள் பலியாகும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவிற்கு அமெரிக்காவினுள் எதிர்ப்பு வலுத்துக்கொண்டு வருகின்றது. இந்தக் கொச்சையான காலனி ஆதிக்கப் போருக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்படியிருந்தும் புஷ் நிர்வாகம் தொடர்ந்து ஈராக்கின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கைவிடவில்லை. ஈராக்கில் தனது மூலோபாயம் எந்த அளவிற்கு இழிவுபடுத்தப்பட்டாலும் தான் மீழமுடியாத அளவிற்கு இந்த குற்றவியல் நடவடிக்கையில் புஷ் நிர்வாகம் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுவிட்டது. சூறையாடும் நோக்கில் ஈராக்கில் அமெரிக்கா உருவாக்கியுள்ள பொருளாதார திட்டங்கள் ஈராக்கில் அமெரிகிக படைகளின் ஆக்கிரமிப்பு நிர்வாகத்திற்கு எதிர்ப்பை தூண்டிவிடத்தான் செய்யும். அமெரிக்க மக்களது விருப்பத்திற்கு எதிராக புஷ் நிர்வாகம் தன்னை ஆதரிக்கும் கம்பெனிகளது இலாபத்தை பெருக்குவதற்காக அவர்களுக்கு பாதுகாப்பு தருவதற்காக அமெரிக்க இளம் போர் வீரர்கள், ரிசர்வ் படை வீரர்கள் மற்றும் தேசீய பாதுகாப்பு பிரிவு உறுப்பினர்கள் திசனரி மடிவதை பற்றி கவலைப்படவில்லை, மேலும் பலி கொடுக்கவே அது அதிகம் விரும்புகிறது. இவ்வாறு ஆழமாக பெருகிக்கொண்டு வரும் பேரழிவை ஐ.நா.வோ அல்லது அமெரிக்காவின் முன்னாள் ஐரோப்பிய கூட்டாளி நாடுகளோ தடுத்து நிறுத்திவிட முடியாது. ஈராக் போர் மற்றும் ஆக்கிரமிப்பு மற்றும் பூகோள அளவில் அமெரிக்க இராணுவவாதம் விடுத்துவரும் மிரட்டல்கள் அதிகரிப்பு ஆகியவற்றை முடிவுகட்ட வல்ல ஒரே ஒரு சக்தி சோசலிச முன்நோக்கின் அடிப்படையில் சுதந்திரமாக ஒன்று திரண்ட சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். |