WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரித்தானியா
An international socialist strategy is needed to oppose war
Statement by the Socialist Equality Party (Britain)
போரை எதிர்க்க ஒரு சர்வதேச சோசலிச மூலோபாயம் தேவை
சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை (பிரிட்டன்)
27 September 2003
Use this version to print |
Send this link by email
| Email the author
பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சியின் பின்வரும் அறிக்கை, ஈராக்கில் தொடர்ந்து
நடைபெற்று வரும் அமெரிக்க-பிரிட்டிஷ் போர் மற்றும் ஆக்கிரமிப்பிற்கு எதிரான உலகு தழுவிய போராட்டங்களின் ஒரு
பகுதியாக, இன்று லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விநியோகிக்கப்பட்டது.
அமெரிக்க-பிரிட்டனின் ஈராக்கிய ஆக்கிரமிப்புக்கும், மத்திய கிழக்கு மற்றும் சர்வதேச
அளவில் மேலும் கூடுதலான காலனித்துவ வென்று கைப்பற்றல் போர்களைப் பற்றிய அச்சுறுத்தலுக்கும் எதிராக தொடர்ந்து
வளரும் எதிர்ப்பிற்கும் சான்றாக, இன்று லண்டனில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் உள்ளது.
ஈராக்கிற்கு எதிராக வாஷிங்டனாலும் லண்டனாலும் தொடுக்கப்பட்ட போரைப்பற்றி
போர் எதிர்ப்பாளர்கள் கூறியவை அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஈராக்கில் நடைபெற்றது நாஜி ஜேர்மனியால்
காரணமின்றி நடத்தப்பட்ட குற்றவியல் தன்மை வாய்ந்த ஆக்கிரமிப்புப் போர்களைத்தான் வரலாற்று ரீதியான பரிமாணங்களில்
முன்னோடியாகக் கருதப்பட முடியும்.
இந்த சட்டவிரோதச் செயலை, ஈராக்கியப் பேரழிவு ஆயுதங்களின் அச்சுறுத்துதலிருந்து
உலக அமைதிப் பாதுகாப்பிற்காக நடத்தப்படுவது என்று சித்தரித்துக்காட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும்
பொய்கள் என்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க ஈராக் மீதான மதிப்பீட்டுக் குழு, (US
Iraq Survey Group) இரகசியமாக வெளியிட்டுக் கசிந்த 1400 பக்க அறிக்கை, "மிகச்சிறிய"
அளவு கூட இராசயன, உயிரியல், அணு ஆயுதப்பொருட்களை அது கண்டுபிடிக்கவில்லை எனக் கூறியுள்ளது. ஐநாவின்,
தலைமை ஆயுத ஆய்வாளர் ஹான்ஸ் பிளிக்ஸ், குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஈராக் தன் இராசயன, உயிரியல்
ஆயுதங்களைஅழித்திருக்கவேண்டும் என கூறக் கட்டாயம் ஏற்பட்டது. நாட்டை போரில் ஈடுபடுத்த தொழிற் கட்சி அரசாங்கம்
மேற்கொண்ட பொய்கள் அன்றாடம் புதிது புதிதாக அம்பலப்படுத்தப்படுகின்றன.
ஈராக்கிய எண்ணெய் வளத்தைக் கைப்பற்றவும், அமெரிக்கா உலகின் மீது மேலாதிக்கம்
கொள்ளவும் நோக்கமாகக் கொண்டிருந்த சம பலமற்ற நாடுகளிடையே நடைபெற்ற இப்போரில், பத்தாயிரம் ஈராக்கியக்
குடிமக்களும், எண்ணிக்கையில் அடங்கா இராணுவ துருப்புக்களும் பலியாயின. சமீபத்திய கணக்கின்படி வாரம் ஒன்றிற்கு
1000 ஈராக்கிய குடிமக்கள் ஆக்கிரமிப்பின் நேரடி விளைவாகவோ, நடந்து கொண்டிருக்கும் சமுதாய நிலை முறிவினாலோ,
இராணுவ துருப்புக்களுடன் மோதுதலாலோ உயிரிழக்கின்றனர்.
இப்பொழுது போர் நடந்த காலத்தைவிடப் படையினர் இறப்புக்கள் கூடுதலாகப் போய்விட்ட
அளவில், வியட்நாம் போன்ற புதைசேறு மாதிரிக்கு ஈராக் மாறிக் கொண்டிருக்கிறது. அது பல்லாயிரக்கணக்கான
பவுண்டுகள் வரியாகவும், தொடர்ந்து நூற்றுக்கணக்கில் உயிர் தியாகங்களையும் கோரும்.
ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷும், பிரதம மந்திரி டோனி பிளேயரும்,
போரானது, சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் கொண்டு வரும் எனக் கூறினர். ஆனால் அதற்குப் பதிலாக, வாஷிங்டனுக்கு
நேரடியாகப் பொறுப்புக்கூறும் கைப்பாவை அரசாங்கம் ஒன்று இருத்தப்பட்டுள்ளது மற்றும் மக்கள் அதிருப்தியைக்
கட்டுப்படுத்த சிஐஏ, சதாம் ஹுசேனுடைய முன்னாள் இரகசியப் போலீஸ் அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதாகச் செய்திகள்
வந்துள்ளன.
ஈராக்கின் சமுக அடிப்படைக் கட்டுமானத்தை மறுசீரமைக்க அதிகமாக ஏதும் செய்யப்படவில்லை;
இதனால் அங்கு வியாதிகளும், ஊட்டச் சத்துக்குறைவு அச்சுறுத்தலும் தோன்றியுள்ளன. மாறாக, பெரும் எண்ணெய்
நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களினுடைய கொள்ளையிடல் முறைக்கு உதவும் வகையில், சோவியத் யூனியனில்
கொண்டு வரப்பட்டு, அழிவைத் தந்த "அதிர்ச்சி வைத்தியம்" முறையில் தனியார்மயத் திட்டத்தை திணிப்பதன் மூலம் ஒவ்வொரு
முயற்சியும் செலுத்தப்பட்டுள்ளது --ஏற்கனவே போரினாலும், பொருளாதாரத் தடைகளாலும் அழிவுற்றுள்ள நாட்டில்
நிலைமையை மோசமடையச் செய்கிறது.
ஈரான் அணு ஆயுதத் திட்டத்தை வளர்க்க இருப்பதாகக் குற்றஞ்சாட்டி, அதற் கெதிராக
நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தன் விருப்பத்தையும், புஷ் நிர்வாகம் ஏற்கனவே தெளிவாக்கியுள்ளது. முன்கூட்டித்
தாக்குதல் என்ற கோட்பாட்டின்அடிப்படையில், நடத்தப்பெறும் தாக்குதல்கள் சர்வதேச உறவுகளை உறுதியற்ற
நிலைக்குத்தள்ளி இருக்கிறது மற்றும் இராணுவவாத வெடிப்பிற்கு வழிகோலி இருக்கிறது, அது "போக்கிரி நாடுகள்"
என்று குறிப்பிடப்படும் நாடுகளின் எல்லைக்குள் நின்றுவிடாது. வாஷிங்டனுடைய கொள்ளை நோக்கங்களிலிருந்து எந்த
நாட்டிற்கும் பாதுகாப்பில்லை.
போர் எதிர்ப்பு இயக்கம், ஈராக்கில் அது இரத்தம் சிந்துதலை நிறுத்தும் முயற்சியில்
கண்டுள்ள தோல்வி பற்றிய நிலுவை கணக்கை (Balance Sheet)
தயார் செய்யவேண்டிய கட்டாயத்தை இது ஏற்படுத்தியுள்ளது.
பெப்ரவரி15 ம் தேதி, போருக்கு எதிராக, முதன் முதலாக உலகெங்கிலும் நடத்திய
ஆர்ப்பாட்டங்களில் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். ஆயினும் கூட, இந்த சர்வதேச மனித
ஐக்கியத்தையும் பொருட்படுத்த வேண்டிய தேவையில்லை என புஷ்ஷூம், பிளேயரும் கருதி, மக்களின் ஜனநாயக
விருப்பத்தைத் தூக்கியெறிந்து தங்கள் இராணுவச் செயற்பட்டியலை நடைமுறைப்படுத்தினர்
ஆறு மாதங்களுக்கு முன்பிருந்ததைவிட, இப்பொழுது அரசாங்கத்தின் மீது விரோத உணர்வும்,
ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான எதிர்ப்பும் கூடுதலாகவும், மிக வலுவானதாகவும்தான் உள்ளது. பிளேயர், ஈராக்கைப்
பொறுத்தவரையில், ஒரு பொய்யர் எனக் கருதப்படுவதுடன், எந்தப் பிரச்சினையிலும் அவர் நம்பப்படுவதில்லை --
அமெரிக்காவில் புஷ் நிர்வாகம் அதற்கான ஆதரவில் தொடர்ந்து இரத்தக் கசிவைத்தான் கொண்டிருக்கிறது.
ஆனால், கூடுதலான எதிர்ப்பு தேவையாக இருக்கின்ற போதிலும், அந்த எதிர்ப்பு இந்த
அரசாங்கங்களை கூடுதலான குற்றங்களைச் செய்வதிலிருந்து தடுக்கப் போவதில்லை. போரை நிறுத்துக எனக் கூறும்
கூட்டணியினரின், "எங்கள் இயக்கம் கிட்டத்தட்ட போரை நிறுத்திவிட்டது" என்றோ, "அரசாங்கத்தைப் பொறுப்பிற்குக்
கொண்டு வருவதற்கு" நம் முயற்சிகளை இரட்டிப்பாக்குவோம் என்றோ விவாதம் பண்ணினால் மட்டும் போதாது.
போரெதிர்ப்பு இயக்கத்திற்கு இதுகாறும் வழிகாட்டி வரும் அரசியல் முன்னோக்கின் தோல்வியுடன் மோதவேண்டும்.
இதில் என்ன அடங்கியுள்ளது? பெப்ரவரி மாதம் வரை கூட ஐ.நாவும், ஐரோப்பாவில்
முக்கிய நாடுகளான பிரான்சும், ஜேர்மனியும், அமெரிக்காவின் ஒரு தலைப்பட்ச நடவடிக்கைகளுக்கு தடையாக
ஒருவேளை செயல்படுமோ என்று கருதப்பட்டது. மத்திய கிழக்கில் அமெரிக்க ஆதிக்கம் தங்களுடைய நலன்களுக்கு எதிராகச்
செயல்படுமோ என்ற ஷ்ரோடர், சிராக்கின் எதிர்ப்புக்களும், அவற்றின் அப்பகுதி நலன்களுக்கான உட்குறிப்புக்களும்,
தொழிலாள வர்க்கம், தங்கள் கொள்கை அடிப்படையிலான போரெதிர்ப்பைத் தெரிவிக்கக் கூடிய வழிமுறைகள் என
புகழ்ந்தேத்தப்பட்டது. பேச்சாளர்கள் அனைவரும் "பிரான்சு வாழ்க" என முழக்கமிட்டு, பிளேயரின் அரசாங்கத்தை
வாஷிங்டன் சார்பு உடையதாய் இருத்தலை நீக்கி ஐ.நாவின் அதிகாரத்தை நிலை நிறுத்திட ஆர்வத்துடன் கோரினர்.
மில்லியன் கணக்கான மக்கள் பின்னர் கசப்பான அனுபவத்தின் மூலம் ஒரு ஏகாதிபத்திய
சக்தியை எதிர்க்க, மற்றோர் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் இயலாது என்பதை அறிந்துள்ளனர்.
அமெரிக்காவோடு, பிரான்சோ, ஜேர்மனியோ, ஈராக்கிற்காக பூசலிடத் தயாராக
இல்லை. மாறாக, போர் கொள்ளையடிப்பில் தங்களுக்கு ஏதேனும் பங்கு கிடைத்தால், வாஷிங்டனுடன் இணைந்து செயல்பட
தயராக உள்ளன. அதே நேரத்தில், தங்களுடைய இராணுவ உந்துதலையும் முடுக்கிவிட்டு, ஆபிரிக்காவிலும், ஆப்கானிஸ்தானத்திலும்,
பால்கன் பகுதிகளிலும் ஐரோப்பியப் படைகளை நிறைத்து ஐ.நா. தலைமையில் இராணுவத் தலையீடுகளுக்காகவும்,
தங்களுடைய பூகோள பேரவாக்களுக்காகவும் செயல்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் வாஷிங்டனின் போதனையான தடுப்பதற்கு
முன்கூட்டியே தாக்குதல் கோட்பாட்டை ஏற்று நடக்கின்றன. ஜூன் மாதம் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு புதிய
பாதுகாப்பு மூலோபாய முறைக்கு ஒப்புதல் அளித்து அறிவித்தது: "வருங்காலத்தில் முக்கிய சிக்கல்களைத் தவிர்க்க, தடுப்பதற்கு
முன்கூட்டியே தாக்குதல் போர் முறையைக் கொள்ளலாம்.... விரைவில், முன்னதாக தேவைக்கேற்ப வலுவான தலையீட்டை
வளர்க்கும் மூலோபாய கலாச்சாரத்தை நாம் வளர்த்தெடுக்க வேண்டியது தேவையாகும்."
ஐக்கிய நாடுகள் சபை அதன் பங்கிற்கு, தான் எவ்வாறு ஏகாதிபத்திய சக்திகளின் கருவி
என விளக்கும் வகையில் அமெரிக்க/பிரிட்டனுடைய ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கு ஒப்புதல் அளித்தது; எனவே ஈராக்கிய
மக்களால், வாஷிங்டன் லண்டனைப் போன்றே ஐ.நாவும் அடக்கும் சக்தி என்ற வெறுப்பிற்கு ஆளாகி உள்ளது.
இந்த வாரம் ஐ.நாவில், தலைமைச் செயலாளரான கோபி அன்னன், "ஒரு தலைப்பட்ச
செயலைக் கண்டித்தால் மட்டும் போதாது, பாதுகாப்பு சபையானது ஒருங்கிசைந்த நடவடிக்கைகளுக்கு விரைவில்
இசைவு தரும் அளவு கோல்கள் பற்றி விவாதம் தொடங்க வேண்டும்" எனக் கூறினார்.
அத்தகைய கொள்கை ஏற்கப்பட்டால், வருங்காலத்தில் அமெரிக்கா என்ன போர்த்திட்டங்கள்
மேற் கொண்டாலும் அவற்றிற்கு ஒப்புதல் அளிப்பதோடு, ஐரோப்பிய வல்லரசுகளும், தங்கள் இராணுவ அவாக்களை
தடையின்றித் தொடரமுடியும்.
ஜேர்மனி, பிரான்சு, ஐ.நா இவற்றிற்குக் கொடுத்த வேண்டுகோள்களின் நிகர விளைவு,
தொழிலாள வர்க்கத்தை ஆளும் செல்வந்த தட்டுக்கு கீழ்ப்படுத்தியதும், பிளேயர் போன்ற அதன் அரசியல் பிரதிநிதிகளுக்கு
எதிராக சுயாதீனமான ஒரு இயக்கத்தின் வளர்ச்சியைத் தடுத்ததும் தான்.
முதலாளித்துவத்தின் தோற்றத்திற்கு ஆதாரமான பொருளாதார, சமுக முறைகளை எதிர்க்கும்
ஒரு முறையான வேலைத்திட்டம் இருந்தாலொழிய, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை எதிர்க்க முடியாது. போர் என்பது,
இலாப அமைப்பு முறைக்குள்ளே வேரூன்றியுள்ள அடிப்படை முரண்பாடுகளில் -உற்பத்தி பூகோளமயமாக்கல் மற்றும் உற்பத்தி
சாதனங்களில் தனிச்சொத்துடைமையை அடிப்படையாக கொண்ட குரோதம் மிக்க தேசிய அரசுகளாக உலகம்
பிளவுண்டிருத்தல்- உள்ளது. இதனால்தான் உலகின் பாரிய மூல வளங்களையும் சந்தைகளையும் கட்டுப்படுத்த வல்லரசுகளிடையே
போட்டி தோன்றி, இன்றைய பொருளாதார நெருக்கடி சூழ்நிலைகளில் வெடித்தெழும் வடிவங்களில் வெளிப்படுகின்றன.
போருக்கான உந்துதல், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தின் மீது இடைவிடாமல்
நடத்தப்படும் தாக்குதல்களினால், சமுக உச்சியிலுள்ள செல்வந்த தட்டின் ஒரு சிலவராட்சியை கொழுக்க வைக்கும்
உள்நாட்டுக் கொள்கைகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அதனால்தான், இச்செல்வந்த தட்டின் பிரதிநிதியாகச் செயல்படும்
பிளேயர் அரசாங்கம், வாக்காளர்களின் விருப்பத்தை காது கொடுத்துக் கேட்பதில்லை. சுகாதாரப் பணிகள், கல்வி,
மற்றும் பல முக்கிய பணிகள் தனியார் மயமாக்கப்படக் கூடாது என்பதை எப்படிக் கேட்பதில்லையோ, அப்படித்தான்
போர் உந்துதலை நிறுத்துக என்ற கோரிக்கைகளையும் கேட்கப்போவதில்லை.
இராணுவ வாதத்திற்கு எதிரான
போராட்டம் உழைக்கும் மக்களின் சமுக நிலை, அவர்களுடைய ஜனநாயக உரிமைகள் இவற்றின் பாதுகாப்போடு பிரிக்க
முடியாமல் பிணைந்துள்ளது. தலைவர்களையோ, அரசாங்கங்களையோ மாற்றுவது என்பது பிரச்சினையல்ல; எந்த
வண்ணமுடைய அதிகாரபூர்வமான அரசியல் கட்சியானாலும், அவை கொழுத்த செல்வந்தரின் நலன்களைத்தான் பெருக்குவதற்கு
தீவிரமாகச் செயல்படும். பெரும்பாலான மக்களுடைய தேவைகளான வேலைகள், கெளரவமான ஊதியங்கள், வீட்டுவசதி,
உடல் நலப்பாதுகாப்பு, கல்வி இவற்றைப் பொருளாதார வாழ்வின் மையமாகக் கொண்ட புதிய சமுக ஒழுங்கு இதற்கு
தேவை.
சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்பாமல் போரெதிர்ப்பு இயக்கம்
தன்னுடைய நோக்கங்களில் வெற்றி பெறமுடியாது. பிரிட்டனில் தொழிலாளர்களுடைய நண்பர்கள், ஐரோப்பிய, அமெரிக்க
மற்றும் பூகோளரீதியான உழைக்கும் மக்ககளே அன்றி, ஐரோப்பிய அரசாங்கங்களோ, ஐ.நாவோ கிடையாது.
பொது எதிரிக்கு எதிராக, போரெதிர்ப்பியக்கம் அனைத்து நாட்டு தொழிலாளர்களையும் ஒன்றுபடுத்த வேண்டும்.
முதலாளித்துவ முறைசார்ந்த கட்சிகளான, தொழிற்கட்சி, தாராளவாத கட்சி, பசுமை
கட்சி எவையாயினும் சரி, அவற்றிலிருந்து சுயாதீனமாக செயல்படும் இயக்கமாக போரெதிர்ப்பு இயக்கம் கட்டாயம்
இருக்க வேண்டும். தொழிலாளர்கள் அரசியல் அதிகாரத்திற்குப் போராடக் கூடிய வகையில் சர்வதேச சோசலிச
வேலை திட்ட அடிப்படையில் ஒரு புதிய கட்சி கட்டாயம் கட்டி எழுப்பப்படவேண்டும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஒரு பகுதியாக, சோசலிச சமத்துவ கட்சியானது
அத்தகைய முன்னோக்கில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த தன்னை, அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.
உலக நிகழ்ச்சிகளை அன்றாடம் அது இணையற்ற முறையில் பகுப்பாய்வு செய்து, ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள சோசலிச
சிந்தனையுடைய அறிவுஜீவிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகிய ஒரு புதிய தட்டிற்கு வழங்குவதால், இந்த இலக்கு
அடையப்படக்கூடிய சாதனம் உலக சோசலிச வலைத் தளம் ஆகும். இன்றைய ஆர்ப்பாட்டத்தில் பங்குபெறுபவர் அனைவரையும்,
உலக சோசலிச வலைத் தளத்தை தினமும் வாசித்தும், அதன் அறிக்கைகளை பலருக்கு வழங்கியும், சோசலிச சமத்துவ
கட்சியில் இணைந்து புதிய சர்வதேச சோசலிசக் கட்சியைக் கட்டுவதில் பங்கு பெறுமாறு அழைக்கிறோம்.
See Also:
சி.ஐ.ஏ சதாம் ஹுசேனின் ரகசிய போலீசாரை பணியில் அமர்த்திக் கொண்டிருக்கின்றது
Top of page
|