World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

The John Christopher Burton campaign and the fight for socialist policies

ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டனின் பிரச்சாரமும், சோலிசக் கொள்கைகளுக்கான போராட்டமும்

3 October 2003

Use this version to print | Send this link by email | Email the author

கலிஃபோர்னியத் திருப்பியழைத்தல் தேர்தலில், சோசலிச சமத்துவ கட்சியால் ஆதரிக்கப்படும் ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டனுக்கு வந்த கடிதங்களுள் சிலவற்றைக் கீழே பிரசுரித்துள்ளோம்; சோசலிச சமத்துவ கட்சியின் ஜெரி ஐசக்ஸுடைய பதிலும் தொடர்கிறது.

ஹலோ,

ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டன் தேர்ந்தெடுக்கப்பட்டால், கூட்டாட்சி அளவிலும் தன்னுடைய மாநில சட்டமன்ற அளவிலும், எதிர்ப்புக்களால் சூழப்படுவார். சர்வதேச தொழிலாளர் புரட்சியில், தன்னுடைய கட்சியின் அடிப்படைகளைக் கொண்ட ஒரு கட்சி எவ்வாறு ஒரு முதலாளித்துவ அரசியல் அமைப்பு முறையில் சோசலிச கொள்கைகளை முன்னெடுக்க முடியும்? அமெரிக்க அரசியல் பெரும்பாலும் பெரு நிறுவனப் பணத்திலும், சிறப்பு நலன்களின் குழுக்களாலும் நடத்தப்படுவதால், புரட்சிகர சோசலிசக் கண்ணோட்டமுடைய ஒருவர், எப்படிக் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பது எனக்குப் புரியவில்லை. ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டனின் வேட்பு மனுவை, நான் ஆதரிக்கவில்லை என்று பொருள் இல்லை, ஆனால் உண்மையிலேயே எத்தகைய சோசலிச கொள்கைகள் இப்பொழுதுள்ள முறையில், நடைமுறைப்படுத்தப்படும் எனச் சந்தேகிக்கிறேன்.

NR

***

அன்புள்ள திரு பேர்ட்டன்,

ஒரு கலிஃபோர்னியன் என்ற முறையில் உங்களுடைய கவர்னர் பிரச்சாரத்தைப் பற்றி, நான் மிகவும் உற்சாகமாக உள்ளேன். ஆனால், முழுமையாக உங்கள் இலக்குகளைப் பற்றி அறிய ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். உங்களைத் தேர்ந்தெடுத்தால், கலிஃபோர்னியாவை சோசலிச பொருளாதார முறையில் வடிவமைக்கும் வகையில், வருமானவரியை, வருமான உயர்விற்கேற்றவாறு, கூடுதலாக ஆக்குவீர்களல்லவா?

பிலடெல்பியாவில், "வெள்ளையர் வெளியேற்றம்" நடந்ததுபோல், கலிஃபோர்னியாவின் செல்வந்தர்களும், தங்கள் பணம், உற்பத்திக் கருவிகளோடு, அவற்றை இழப்பதற்குப் பதிலாக, மாநிலத்தை விட்டே போய்விடுவார்கள் என நினைக்கிறேன். அதையொட்டி, மாநிலத்தில் நிதிகள் இல்லாமற் போய்விடும்.

இதைத் தடுக்க ஒரேவழி கூட்டாட்சியிலிருந்து விலகுவதுதான். இது, கலிஃபோர்னியத் தொழிலாளர் அரசை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்துவதோடு, அமெரிக்காவிற்குள் உள்நாட்டுப்போரை ஏற்படுத்தும்; எப்படியும் பாரிஸ் கம்யூன் வழி அல்லது ரஷ்ய வழியைப் பின்பற்ற நேரிடும் (அவசியமாக துப்பாக்கிகள் சம்பந்தப்படாவிட்டாலும், நசுக்கப்பட்டு) நிரந்தரமாக சிதைந்துவிடுவோம்.

புரட்சிகர (அல்லது சீர்திருத்த!) வாழ்த்துக்களுடன்,

ஒரு கலிபோர்னிய தோழர்.

* * *

ஹலோ,

கலிஃபோர்னியாவிற்கு, ஏன், உலகத்திற்கே, சோசலிசம்தான் விடை, ஆனால், ஒரு முதலாளித்துவ நாட்டுக்குள், சோசலிச அரசை உருவாக்க முடியுமென நான் நினைக்கவில்லை. உதாரணத்திற்கு பார்ப்போமாயின், மற்ற நாடுகளில், அவர்களுடைய தொழிற்சாலைகளையும் வங்கிகளையும், சோசலிசப் பாதையின் முதற்படிகளாக தேசியமயமாக்கும் முயற்சியை செய்தன-- அவை அனைத்தும் பொருளாதாரத் தடைகள் மற்றும் அவதூறு பிரச்சாரங்கள் என்றோ அல்லது நேரடி அரசியல் கொலைகளுக்கோ உட்பட்டன. கலிஃபோர்னிய மாநிலத்தை, சோசலிசமாக்கும் முயற்சியை, முதலாளித்துவம் எளிதில் ஏற்காது. இதற்கு மாறாக நடக்கும் என்றால், சரியான முறையில் நம்பிக்கையூட்டுங்கள்.

நன்றி,

L

சோசலிச சமத்துவக் கட்சி, ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டன் தேர்ந்தெடுக்கப்பட்டால், தன்னுடைய சோசலிச கொள்கைகளை எவ்வாறு செயல்படுத்துவார் எனக் கேட்டுப் பல கடிதங்களைப் பெற்றுள்ளது.

அமெரிக்காவிலுள்ள 50 மாநிலங்களில் தனிமைப்படுத்தப்பட்ட முறையில் ஒரு மாநிலத்தில் மட்டும், பேர்ட்டன் மற்றும் சோசலிச சமத்துவ கட்சி அறிக்கையில், கோடிட்டபடி ஜனநாயக, சோசலிச வேலைத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாது என்று பல கடிதம் எழுதியவர்கள் சுட்டிக்காட்டியிருப்பது சரியே. தேர்தல் அறிக்கையிலும் வேறுவிதமாகத் தெரிவிக்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கான சமுக உரிமைகள் சட்டம் --வேலைகள், கல்வி, சுகாதாரப்பாதுகாப்பு, வீட்டுவசதி, புலம்பெயர்ந்தோர் உரிமைகள் போன்றவை-- அடையப்படுவதற்கு அமெரிக்கப் பொருளாதாரம் புரட்சிகரமான முறையில் சீரமைக்கப்படவேண்டும் என்றும் அது சர்வதேச அளவில் சோசலிச மாற்றத்தின் மூலோபாய அணுகுமுறையின் ஒரு பகுதியாகத்தான் முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, உழைக்கும் மக்களின் நலன்களையும், தேவைகளையும் கூறும் ஒரு வேலைத்திட்டம் இத்தகைய கோரிக்கைகளை முன்னெடுப்பதோடு, தொழிலாள வர்க்கத்தின் கட்சி அவற்றை நிறைவேற்ற கட்டாயம் போராட வேண்டும். உழைக்கும் மக்கள், நடைமுறையில் உள்ள பொருளாதார அமைப்பிற்குப் பொருந்தும்படி தங்கள் தேவைகளைக் குறைத்துக்கொண்டு, உற்பத்தி முறைகள் தனியாரிடம் இருப்பதற்கு சவால் விடாமல், சமுதாயத் தேவைகளை தனிமனிதன் சொத்துக்குவிப்பு, பெருநிறுவன லாபம் ஆகியவற்றிற்கு கீழ்ப்படுத்திக் கொள்ளவேண்டும் எனக்கூறும் கருத்தை -தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் சீர்திருத்த அமைப்புக்கள் பகிர்ந்துகொள்ளும் முன்னோக்கு-- சோசலிச சமத்துவக் கட்சியினதும் மற்றும் பேர்ட்டனினதும் அறிக்கைகள் நிராகரித்துள்ளன.

பெருவர்த்தகக் கட்சிகளின் கொள்கைகளுக்கு ஒரு மாற்றீடு இருப்பதை முடிந்தவரை அதிக அளவிலான மக்களுக்கு முன்வைப்பதும், உழைக்கும் மக்களுடைய அரசியல் புரிந்துணர்வின் தரத்தை உயர்த்துவதும், அதன் மூலம் சோசலிச சமத்துவக் கட்சியை தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான பரந்த கட்சியாக கட்டியெழுப்புவதும்தான், பேர்ட்டனின் பிரச்சாரத்தின் மைய நோக்கமாகும்.

ஒரு சோசலிஸ்ட் கவர்னர் எதைச் சாதிக்கமுடியும் என்பது, வர்க்க உறவுகளிடையே இருக்கும் நிலையைப் பொறுத்து, அதாவது, உழைக்கும் மக்கள் மற்றும் அரசியல் அதிகார நெம்புகோல்களை தற்போது கட்டுப்படுத்தும் நிதிச்செல்வந்த தட்டு ஆகிய சக்திகளுக்கிடையே உள்ள உறவுதான் நிர்ணயிக்கும். ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டன் தேர்ந்தெடுக்கப்படுதலே, தொழிலாள வர்க்கத்தினரிடையே சக்திவாய்ந்த அரசியல் விழிப்புணர்வு வெளிப்படுதலைச் சிறப்புடன் குறிக்கும்; அதன் வர்க்க நலன்களின் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தும். அதிகாரத்தில் வேரூன்றியுள்ள செல்வந்த தட்டின் வலிமை, பேர்ட்டனின் கொள்கைகளினால் தாக்கப்படுவது, தொழிலாள வர்க்கம், இளைய தலைமுறை, புத்திஜீவிகள் என என்றுமில்லா அளவு கூடுதலான அடுக்குகள் செயலூக்கமான அரசியல் வாழ்விற்குள் ஈர்க்கப்படுவதைப் பொறுத்து இருக்கும். இந்த வழியில்தான், பெருவர்த்தகம் மற்றும் அதன் அரசியல் ஏஜண்டுகளின் தவிர்க்கமுடியாத தடுக்கும் சக்தியை, எதிர்த்து விரட்ட முடியும்.

ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டன் தேர்ந்தெடுக்கப்பட்டால், தொழிலாள வர்க்கத்தைத் அணி திரட்டவும், அதற்கு கல்வி புகட்டவும், தக்க வலிமை வாய்ந்த அரங்காகத்தினுடைய பதவியை பயன்படுத்துவார். தற்போது மக்களின் பார்வையில் இருந்து இரகசியமாக வைக்கப்பட்டுள்ள மாநில அரசாங்கத்தின் கணக்கு புத்தகங்களையும், மற்றய சான்றுகளையும் பகிரங்கப்படுத்தி யார் உண்மையிலேயே கலிஃபோர்னியாவை வங்குரோத்தாக்கியது என்பதைக் காட்டுவார். இது வரிச்சலுகைகள், சட்டத்தில் உள்ள ஓட்டைகள், பெருவர்த்தகத்திற்கும் செல்வந்தருக்கும் மானிய உதவியளிக்க பொதுப்பணம் எவ்வாறு ஊழல் முறையில் வீணடிக்கப்பட்டது என்பதையும் காட்டும்.

குறிப்பாக, என்றோன், டியூக் சக்தி மற்ற சக்தித்துறை ஊகவாணிபம் செய்பவர்கள் 2001 இருட்டடிப்பின் போது, மாநிலத்தை முறையாகக் கொள்ளையடித்தது பற்றி விசாரணை நடத்தி, இழப்பீட்டுத் தொகை கோருவார். அத்தகைய ஆய்வின் மத்திய பகுதியாக, புஷ்ஷின் வெள்ளை மாளிகைக்கும் என்றோன் தலைமை நிர்வாக அதிகாரி கென்னத் லேக்கும் உள்ள தொடர்பு பற்றியும், என்றோனுடைய குற்றங்களை வசதிப்படுத்த வெள்ளை மாளிகையின் பங்கு பற்றிய விசாரணையும் அடங்கும். மேலும், அவர் சக்தி கட்டுப்பாடு தளர்த்தலை நீக்கக்கோருவதோடு, பயனீட்டுத் தொழில்கள், உழைக்கும் மக்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டுக்குள் பொதுச்சொத்துடைமை ஆக்கவும் கோருவார்.

1990களின் ஊகநடவடிக்கைகள் பற்றி, குறிப்பாக டொட்.கொம் குமிழ் பற்றியும், தொழிலாளர்கள் மற்றும், சிறுபங்குதாரர் கஷ்டப்பட, பெருநிறுவன இருப்புக்களை பிரதம நிறைவேற்று அதிகாரிகள் (CEO க்கள்) கொள்ளையடித்தது பற்றியும் விசாரணைகளுக்கு ஏற்பாடு செய்வார். இந்த அடிப்படையில், தொழிலாளர்களை அணிதிரட்டி, திருடப்பட்ட செல்வத்தை மீட்டு, சமுதாயப் பணிகள் முன்னேற்றப்படவும், வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படவும் பாடுபடுவார்.

தொழிலாள வர்க்கத்தைப் பாதுகாக்க ஒரு சோசலிச கவர்னர், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி எவ்வளவு தேவையான நடைமுறை நடவடிக்கைகளை எடுக்கமுடியுமோ, அவற்றைச் செய்வார். உதாரணமாக, புலம்பெயர்ந்தோர் என்ற அந்தஸ்த்தை பொருட்படுத்தாமல், அனைத்து கலிஃபோர்னியத் தொழிலாளர்களும், அமெரிக்கக் குடிமக்கள் கொண்டிருக்கும் உரிமைகளைப் பெற பிரகடனப்படுத்துவார். கலிஃபோர்னியத் தேசியப் பாதுகாப்புப் படைகளை, ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானத்திலும் புஷ் நிர்வாகம் உபயோகிப்பதைத் தடுப்பார்; மற்ற மாநிலங்களும் அதைப் பின்பற்ற வேண்டும் எனத் தீவிரமாக பிரச்சாரம் செய்வார். அட்டர்னி ஜெனரல் ஜோன் ஆஷ்கிராப்ட்டினுடைய ஜனநாயக விரோத "தேசபக்த சட்டத்தை" மீறுவதோடு, மரணதண்டனையை ஒழித்துக்கட்டி, சிறைக்கட்டிடங்கள் கட்ட பயன்படுத்தும் தொகையைப் பொதுப்பள்ளிகள், மருத்துவமனைகள், இயலக்கூடிய வீட்டுவசதிகள் கட்டவும் உத்திரவு இடுவார்.

கடிதம் எழுதியவர்கள் குறிப்பிட்டிருப்பதுபோல், அத்தகைய திட்டம், மாநில மற்றும் கூட்டாட்சி அளவில், பெருவர்த்தகம், புஷ் நிர்வாகம், ஜனநாயக, குடியரசு கட்சிகள் ஆகியோரின் உறுதியான எதிர்ப்பை தோற்றுவிக்கும். கிளின்டன் மீதான பதவி நீக்க குற்றவிசாரணை, 2000ம் ஆண்டு தேர்தல் திருடப்பட்டமை மற்றும் கலிஃபோர்னியத் திருப்பியழைத்தல் தேர்தல் ஆகியவற்றில், குடியரசு வலதுசாரியினர், தம்முடைய வேலைத் திட்டத்தைச் சுமத்துவதற்காக, பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு எதிராக தாம் நடந்துகொள்ளத் தயாராக உள்ளதை திரும்பத்திரும்ப வெளிப்படுத்தியுள்ளனர். அரசியல் ரீதியாக தொழிலாள வர்க்கம் முழு நனவுடன், தன்னுடைய செல்வத்திற்கும், அதிகாரத்திற்கும் சவால் விட்டால், இச் சிறு ஆளும் செல்வந்த தட்டின் விடை, இன்னும் எத்தனை ஈவிரக்கமற்றதாக இருக்கும்?

சோசலிச சமத்துவ கட்சி அத்தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள நடவடிக்கைகள், சாதாரணமாக கவர்னருடைய பிரகடனங்கள் மூலம் அடைந்து விடக்கூடியவையல்ல; மாறாக, நிதி செல்வந்த தட்டு மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோரின் எதிர்ப்புக்கு எதிராக பரந்த அளவிலான உழைக்கும் மக்களுக்கு கல்வியறிவூட்டி அவர்களை அணிதிரட்டுவதன் மூலமே ஆகும். இது சம்பந்தப்பட்டதில் முக்கியமானது பொருளாதாரப் பாதுகாப்பு, ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றிற்கு உத்திரவாதமளிக்கும் திட்டங்களை வகுத்தலின் மூலம் பரந்த தட்டுக்களான சிறுவர்த்தகர்கள், தொழில் வல்லுனர்கள் ஆகியோருடைய செயலூக்கமான ஆதரவையும் அனுதாபத்தையும் வென்றெடுப்பதாகும். இதில் சிறுவர்த்தகத்தின் மீதான வரிச்சுமையை குறைத்து, பெரு நிறுவனங்கள், பெருஞ்செல்வந்தர் ஆகியோர் மீது வரிவதிப்பை அதிகரித்தலும் அடங்கும்.

கடிதம் எழுதியுள்ள ஒரு தொடர்பாளர், சோசலிச சமத்துவக் கட்சி அத்தகைய கூடுதலான வரிவிதிப்பு முறைகளைக் கையாண்டால் "கலிஃபோர்னியாவின் செல்வந்தர்கள் தங்கள் பணத்தையும், உற்பத்திக் கருவிகளையும் எடுத்துக்கொண்டு மாநிலத்தைவிட்டு சென்று விடமாட்டார்களா" என்று கேட்டுள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளாகச் செய்துள்ளது போலவே, அதிக ஊதியங்கள் கொடுக்காமல் இருப்பதற்கும், வரிக்கடமைகளிலிருந்து தப்புவதற்கும், சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து தப்பிக்கவும், இப்பொழுதும், பெருநிருவனங்கள் உற்பத்தியையும், சொத்துக்களையும், கலிஃபோர்னியாவிலிருந்து அகற்றிவிடத்தான் முயற்சியெடுக்கும் என்பதில் ஐயமுமில்லை. ஆனால், சந்த மொனிக்கா கல்லூரி அரங்கத்தில் செப்டம்பர் 18 அன்று, ஜோன் கிறிஸ்டோபர் பேர்டன் விளக்கியதுபோல், "கொழுத்த ஊதியம் வாங்கும் CEO க்கள் போகட்டும், சொத்துக்கள் இங்குதான் இருக்கும்."

கலிஃபோர்னிய தொழிலாளர்களுடைய ஆதரவுடன், ஒரு சோசலிச கவர்னர், இயந்திரங்களும் மூலப்பொருட்களும் மாநிலத்தைவிட்டு நீங்காமல் தடுத்துவிடுவார். இந்தச் சொத்துக்கள் முதலாளிகளுடைய தனியுரிமை அதை அவர்கள் எதுவும் செய்யலாம் என்னும் வாதத்திற்கு, இந்த உடைமைகள் தொழிலாளர் வர்க்கத்தினால் தோன்றியது எனவும், முழுச் சமுதாயத்திற்கும் உரிமையானது என்றும் பதில் கூறுவார். இவ்வாய்ப்பு வசதிகள் பொது நிறுவனங்களாக மாற்றப்பட்டு, மக்களின் சமுக தேவைகளுக்கு ஏற்ப தொழிலாளர்களாலேயே நடத்தப்படும்.

அதேநேரம், வங்குரோத்தாகியுள்ள மாநிலத்திற்கு வந்துள்ள அச்சுறுத்தலை, தனியே கலிஃபோர்னியாவிற்கு உள்ளே உள்ள வளங்களை மட்டுமே கொண்டு தோற்கடிக்க முடியாது. தங்களுடைய வேலைகளையும் வாழ்க்கைத் தரத்தையும் காப்பாற்றிக்கொள்ள, அமெரிக்கா முழுவதிலுமுள்ள தொழிலாளர்களிடம் உதவிகோரவேண்டும். கவர்னர் பேர்ட்டனே, புஷ் நிர்வாகத்தின் செல்வந்தர்களுக்கு வரிச்சலுகை, ஈராக்கில் காலனித்துவ ஆக்கிரமிப்பினால் ஏற்படும் செலவுகள் ஆகியவற்றினால் அழிவுநிலையிலுள்ள மாநிலங்களுடைய தொழிலாளர்களை பெருநிறுவனங்கள், இரு பெருவர்த்தக கட்சிகள் இவற்றிற்கு எதிரான பொதுப்போராட்டத்தில் சேருமாறு அறைகூவி அழைப்பார்.

அத்தகைய அறைகூவல் அமெரிக்காவோடு நின்றுவிடாது. கவர்னர் பேர்ட்டன் சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு, கலிஃபோர்னியாவிலிருந்து சொத்துக்களையும், உற்பத்தியையும் மாற்றுவதை தடுக்க கோரிக்கை விடுப்பார். இது வெறும் தார்மிக அளவிலான ஒன்றுபடுதலுக்குக் குரல் எழுப்புவதாக இருக்காது. உலகம் முழுவதும் தொழிலாளர்களை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் ஒரேமாதிரியானவைதாம். சர்வதேச நிறுவனங்கள் தொடர்ந்து கூடுதலான இலாபத்தை பெறுவதற்காக தொழிலாளர்களின் ஊதியங்களையும், வாழ்க்கைத் தரத்தையும் குறைப்பதை தடுத்து நிறுத்த ஒரேவழி, அமெரிக்கத் தொழிலாளர்கள் அனைத்து வேலைகலைகளையும் பாதுகாக்க மற்றும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த தங்களது போராட்டங்களை, மெக்சிகோ, ஆசியா, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் போராட்டங்களோடு ஒருங்கிணைக்க வேண்டும்.

இறுதிக் கடிதத்தில் BL, "கலிஃபோர்னியாவிற்கு, ஏன், உலகத்திற்கே, சோசலிசம்தான் விடை என நான் நம்புகிறேன்; ஆனால், ஒரு முதலாளித்துவ நாட்டுக்குள், சோசலிச அரசை உருவாக்கமுடியும் என நான் நினைக்கவில்லை. உதாரணத்திற்கு பார்ப்போமாயின், மற்ற நாடுகளில் அவர்களுடைய தொழிற்சாலைகளையும் வங்கிகளையும், சோசலிசப் பாதையின் முதல் படிகளாக, தேசியமயமாக்கும் முயற்சியை செய்தன --அவை அனைத்தும் பொருளாதாரத் தடைகள், பிரச்சார கரிபூசல்கள் என்றோ அல்லது நேரடி அரசியல் கொலைகளுக்கோ உட்பட்டன. கலிஃபோர்னிய மாநிலத்தை, சோசலிசமாக்கும் முயற்சியை, முதலாளித்துவம் எளிதில் ஏற்கப்போவதில்லை. இதற்கு மாறாக நடக்கும் என்றால், சரியான முறையில் நம்பிக்கையூட்டுங்கள்" என எழுதுகிறார்.

எமது முன்னோக்கு அமெரிக்காவிலிருந்தும், உலகப் பொருளாதாரத்தில் இருந்தும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு கலிஃபோர்னிய சோசலிச அரசை உருவாக்குவது அல்ல. "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" என்ற கோஷத்துடன் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் தேசியவாத வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்ட சோவியத் ஒன்றியத்தின் துன்பியலான அனுபவம், அக்டோபர் 1917 புரட்சியைக் காட்டிக் கொடுத்து, பின்னர் முதலாளித்துவ புனருத்தானத்திற்கு வழிவகுத்தது, சமூக சமத்துவமும், மனித விடுதலையும் ஒரு நாட்டின் மூல வளங்களின் அடிப்படையில் அடையப்படமுடியாது, மாநிலத்தைப் பற்றி பேசவே தேவையில்லை என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.

முதலாளித்துவத்தின் கீழ் வளர்ந்துள்ள பூகோளப் பொருளாதார ஒருங்கிணைப்பு, சர்வதேச உழைப்பு பிரிவினை, மிக உயர்ந்த அளவிலான அறிவியல், தொழில்நுட்ப சாதனைகள் என்ற பொருளாதார முன்னேற்றங்கள் அனைத்தையும், தற்கால பாரிய மக்கள் சமூகத்திற்கு வேண்டிய பன்முகத்தேவைகளுக்குப் பயன்படுத்தப்படவேண்டும். மனிதகுலத்தின் உற்பத்தி சக்திகளை, தனியார் சொத்து குவிப்பிற்கு சமூகத்தேவைகளைக் கீழ்ப்படுத்துதலையும், உலகை போட்டியிடும் தேசிய அரசுகளாகப் பிரித்தலையும் கொண்டுள்ள பொருளாதார முறையின் இடுக்கிப்பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும்.

கலிஃபோர்னியாவில் ஒரு சோசலிச கவர்னர் அதிகாரத்திற்கு வருவதை, அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் முதலாளித்துவ வர்க்கம் வரவேற்காது. அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சிகள், இரத்தம் தோய்ந்த CIA தூண்டுதல்களில் நிகழ்ந்த ஆட்சி மாற்றங்கள் இவற்றின் வரலாற்றைப் பார்த்தால், அத்தகைய அரசாங்கத்தைக் கவிழ்க்க அது எதையும் செய்யும். தொழிலாள வர்க்கத்தின் இதைத் தடுக்கும் திறமையானது, அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தை விரிவாக்குவதிலும், தன்னுடைய அரசியல் நனவின் மட்டத்தை உயர்த்திக்கொள்வதிலும் தன்கையிலேயே அரசியல் அதிகாரத்தைக் கொள்ள வேண்டும் என்ற உறுதியையும் பொறுத்துத்தான் உள்ளது. ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டன் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரமானது, இந்த புரிந்துணர்வை மிகப்பரந்த அளவிலான உழைக்கும் மக்களின் மத்தியிலே கொண்டு செல்லவேண்டும் என்பதே ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சிக்காக,

Jerry Isaacs

See Also:

ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டன்: "திருப்பி அழைத்தலை புஷ்ஷின் போர் மற்றும் சமூகப் பிற்போக்கின் கொள்கை மீதான சர்வஜன வாக்கெடுப்பாக மாற்றுக"

சோசலிச வேட்பாளர் பிரச்சாரத்தைத் தொடர உறுதிமொழி அளிக்கிறார்
கலிஃபோர்னியத் திருப்பியழைத்தல் தேர்தல் வாக்கெடுப்பைத் தாமதப்படுத்தும் நீதிமன்றத் தீர்ப்பிற்கு, ஜோன் கிரிஸ்டோபர் பேர்ட்டன் கொள்ளும் கருத்து

கலிஃபோர்னியா திரும்ப அழைத்தல் தேர்தலில் முதல் விவாதம்: அரசியல் நெருக்கடி பற்றிய ஒரு புகைப்படம்

கலிஃபோர்னியாவின் திருப்பியழைத்தல் தேர்தலில் சோசலிச சமத்துவ கட்சியின் அறிக்கை
கலிஃபோர்னியத் திருப்பியழைத்தல் தேர்தலில் ``வேண்டாம்`` என்று வாக்களியுங்கள், நெருக்கடிக்குச் சோசலிசத் தீர்வுகாண ஜோன் கிரிஸ்டோபர் பேர்ட்டனுக்கு கவர்னர் பதவிக்கான வாக்கை அளியுங்கள்

Top of page