World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஸ்பெயின் Spain: Aznar's Popular Party faces growing criticism over Iraq ஸ்பெயின்: அஸ்னரது பொதுஜன கட்சி ஈராக் தொடர்பாக பெருகிவரும் கண்டனங்களைச் சந்திக்கின்றது By Keith Lee ஸ்பெயின் நாட்டு பிரதமர் ஜோசே மரியா அஸ்னர் மற்றும் அவரது வலதுசாரி பொதுஜன கட்சி (PP) அரசாங்கத்தின் கூற்றான ஈராக்கிடம் உள்ள மக்களைக் கொன்று குவிக்கும் பேரழிவு ஆயுதங்களால் ஸ்பெயினுக்கு இராணுவ மிரட்டல் என்பதை சீர்குலைக்கும் வகையில் அரசாங்கத்திற்கு சொந்தமான எதிர்வேவு-counterespionage- அமைப்பு படைகளின் தலைவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார். ஸ்பெயின் நாட்டு இரகசியச் சேவையின் தலைவரான ஜார்ஜ் டெஸ்காலர், சதாம் ஹூசேன் ஆட்சி WMD-யைப் பெற்றிருக்கிறது என்று நம்பும் நிலை மட்டுமே தமக்கு ஏற்பட்டதாகவும் பயங்கரவாதக் குழுவான அல்க்கைடாவிற்கும் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஈராக் தலைவருக்கும் இடையில் எந்தவிதத் தொடர்பும் இருந்ததாகத் தான் நம்பவில்லை என்றும் குறிப்பிட்டார். ரகசிய நிதிகள் கட்டுப்பாடு தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். சதாம் ஹூசேன் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு மதிப்புக் கொடுக்கவில்லை என்று அல்க்கைடா அமைப்பு கண்டனங்களை தெரிவிப்பதை அவர் ஒப்புக்கொண்டார். ஈராக் மீது வாஷிங்டன் போர் தொடுத்ததற்குகும், அதற்குப் பின்னர் தொடர்ந்து அந்நாட்டைப் பிடித்துக்கொண்டிருப்பதில் மேலும் பிரச்சனைகள் உருவாகிக்கொண்டிருப்பது தொடர்பாகவும் ஸ்பெயின் நாடு ஆதரவு தெரிவித்து வருவது குறித்தும் அதன் விளைவுகள் தொடர்பாகவும் ஸ்பெயின் நாட்டு ரகசிய சேவையும், அந்நாட்டு இராணுவக் குழுக்களும் அதிக அளவில் கவலையடைந்து கொண்டிருப்பது டெஸ்காலரது கூற்று மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்டில் ணிறீ றிணீணs பத்திரிகை ஸ்பெயின் நாட்டு புலனாய்வு சேவையான CNI ஈராக்கிடம் WMD- இல்லை என்று கூறியதாக தகவல் தந்திருக்கின்றது. WMD தயாரிக்கும் வல்லமை ஈராக்கிடம் இருப்பதாக மட்டுமே CNI- கூறியுள்ளது. ணிறீ றிணீணs ஒரு விமர்சனத்தைப் பிரசுரித்திருக்கின்றது. ''முப்படைகளின் தளபதிகள் அடங்கிய நிர்வாகக் குழு ஒரு அரசியல் அமைப்பல்ல, சட்டத்தில் அதற்கு 'பிரதமருக்கு இராணுவம் பற்றிய மதிப்பீடுகளை தருவது என்றும் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஆலோசனைகளை வழங்குவது' என்றும் விளக்கம் தரப்பட்டிருக்கின்றது. எனவே அவர்களது பங்களிப்பு அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறுவதாகும், அவர்கள் என்ன சொல்லவேண்டும் என்று அரசாங்கம் அவர்களுக்கு ஆலோசனை கூறமுடியாது. ஈராக்கிடம் இருப்பதாக கூறப்படும் WMD தொடர்பான அச்சுறுத்தலை எந்தவிதமான ஆட்சேபனைக்கும் இடமின்றி அந்த ஆவணம் உறுதிப்படுத்துகின்றது. மற்றும் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு சதாம் ஹூசேன் ஆட்சி பயன்படுத்தக்கூடிய இரசாயன மற்றும் மரபியல், மூலப்பொருட்களின் அளவுகளையும் அந்த ஆவணங்கள் உறுதி செய்திருக்கின்றன. இதே வாதத்தைத்தான் பிப்ரவரி-5ந்தேதி ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜோசே மரியா அஸ்னர் எழுப்பினார். அமெரிக்காவும், பிரிட்டனும், போருக்குச் செல்வதற்கு இதே வாதத்தைத்தான் பயன்படுத்தின இந்த அரசுகள் எதுவும் இதுவரை தங்களது கூற்றுக்களுக்கு ஆதரவாக எந்தவிதமான நிரூபிக்கத்தக்க சான்றுகளையும் தரவில்லை.'' இவ்வாறு பத்திரிகை விமர்சனம் செய்திருக்கின்றது.டெஸ்கார் வெளியிட்டுள்ள விமர்சனங்கள் பிரதமர் அஸ்னர் அடிக்கடி கூறி வருகின்ற கருத்துக்களை குறிப்பாக பிப்ரவரி 5-ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் அல்கொய்தாவிற்கும் ஈராக் குடியரசுத் தலைவருக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக வலியுறுத்திக் கூறியதை மறுக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் டெஸ்காலர் உரையாற்றுவதை பிரதமர் இதுவரை தடுத்தே வந்திருக்கிறார். ஈராக்கிடம் WMD- இருப்பதாக கூறப்பட்டது குறித்து விசாரிப்பதற்கு மறுத்திருக்கிறார். டெஸ்காலர் விமர்சனம் குறித்து ஆளும் பொதுஜன கட்சி எந்தவிதமான விமர்சனமும் செய்யவில்லை ஆனால் ஒரு விடையத்தை ஆளும் கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. சதாம் உசேனிடம் WMD- இருந்தது என்பதை மறுத்துக்கூறுகின்ற எவரையும் சகித்துக்கொள்ளப் போவதில்லையென்று ஆளும் கட்சி அறிவித்துள்ளது. எடுத்துக்காட்டாக ஐ.நா-வில் ஸ்பெயின் நாட்டு நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றிவரும் இனோசென்சியோ அரியாஸ் தனது விடுமுறை நாட்களை குறைத்துக்கொண்டு நியூயார்க்கிற்கு திரும்புமாறு கட்டளையிடப்பட்டார். WMD- எதுவும் கண்டுபிடிக்கப்படாவிட்டால் ஈராக்குடனான போர் சந்தேகத்திற்குரியதாக ஆகிவிடும். என்று இனோசென்சியோ கருத்து தெரிவித்த பின்னர் அவருக்கு மேற்கண்டவாறு கட்டளையிடப்பட்டது. ஐ.நா- பாதுகாப்பு சபைக்கு ஸ்பெயின் அரசாங்கத்தின் சார்பில் போருக்கு ஆதரவு திரட்டுவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்த அரியாஸ் ஸ்பெயின் நாடு ஈராக் மீதான போரை ஆதரித்ததற்கு முதன்மைக்காரணம் ஈராக்கில் ஆயுதங்களை கண்டுபிடிப்பதுதான் என்று பிரதமருக்கு நினைவுறுத்துகின்ற வகையில் உரையாற்றியதைத் தொடர்ந்து பிரதமருக்கு மேலும் சங்கடம் ஏற்பட்டது. ஆயுதங்களை ஈராக்கில் கண்டுபிடிகக தவறியது அனைத்து நடவடிக்கைகளையும் சந்தேகத்தில் ஆழ்த்திவிட்டது என அரியாஸ் கருத்து தெரிவித்தார். பின்னர் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் வடகொரியாவை தாக்குவதைவிட "ஈராக்கை தாக்குவது செலவு குறைவு என்பதால்தான்" அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தது என்று குறிப்பிட்டார். ஈராக்கில் ஏற்கெனவே பணியாற்றி வரும் 2000 ஸ்பெயின் நாட்டு துருப்புக்களை திரும்ப அழைக்கவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியான சோசலிஸ்ட் கட்சி (PSOE) அதிக அளவில் பிரதமர் அஸ்னருக்கு நிர்பந்தங்களை கொடுத்து வருகின்றது. புஷ் நிர்வாகத்திற்கும் ஆளும் பொதுஜன கட்சிக்கும் இடையில் நிலவுகின்ற நெருக்கமான உறவை கருத்தில் கொண்டு தான் பிரதமர் அத்தகைய நடவடிக்கை எதையும் எடுக்க மறுத்து வருகிறார். இரண்டாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் செப்டம்பர்-11 அன்று நடத்திய தாக்குதல்களை அஸ்னர் பிடித்து கொண்டு பொதுஜன கட்சியின் சார்பில் சொந்த முறையில் பயங்கரவாத்திற்கு எதிரான போரை பிரகடனப்படுத்தினார். அண்மையில் நடைபெற்ற நகரசபை தேர்தல்களில் பாஸ்க் பிரிவினைவாத போராளி இராணுவமான ETA- விற்கு தடைவிதித்தது தொடர்பான பிரச்சனையை பிரதான தேர்தல் பிரச்சாரமாக மேற்கொண்டு ஜனநாயக உரிமைகளை மிகப்பரவலாக ஒடுக்குவதற்கு நடவடிக்கைகளை பிரதமர் மேற்க்கொண்டார். நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் இயக்கத்தில் பொதுஜன கட்சி பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறப்படுவதை பொதுஜனகட்சி மத்திய திட்டமாக மேற்க்கொள்ள விருக்கின்றது. புஷ் நிர்வாகம் அமெரிக்காவில் மேற்கொண்டு வரும் வலதுசாரி பொருளாதாரக் கொள்கைகளை போன்று பொதுஜன கட்சியும் நடவடிக்கைகளை எடுத்து சாதாரண உழைக்கும் மக்களது வாழ்க்கைத்தரத்தை வெட்டித்தள்ளுகின்ற வகையில் நடவடிக்கைகளை மேற்க்கொள்ள பிரதமர் திட்டமிட்டிருக்கின்றார். ஈராக்கிலும், மத்திய கிழக்கு முழுவதிலும் ஸ்பெயின் நாட்டிற்கும் அதன் சொந்த நலன்கள் பெருமளவு உண்டு, அமெரிக்காவை ஈராக் போரில் ஆதரித்து ஈராக்கை பிடித்துக்கொள்வதற்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் சிறப்பாக ஸ்பெயினின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று அஸ்னர் நம்புகிறார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பத்திரிகைகளில் பிரதமருக்கு சங்கடம் தருகின்ற சில விபரங்கள் அம்பலப்படுத்தப்பட்டன. 1997-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிற்கு சொந்தமான எண்ணெய் கம்பெனி ரெப்சாலுக்கு(Repsol) ஈராக் எண்ணெய் ஒப்பந்தங்களை வழங்குமானால் பாக்தாத்திற்கு பண உதவி செய்வதாக அஸ்னார் உறுதியளித்திருந்தார். என்று El Mundo, பத்திரிகையில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. ஈராக்கில் உள்ள நாசிரியா எண்ணெக் கிணறுகளில் கச்சா எண்ணெய் எடுப்பதற்கான ஒப்பந்தங்களை ஈராக் Repsol நிறுவனத்திற்கே வழங்குமானால் ஸ்பெயின் அரசாங்கம் பல்வேறு நன்கொடைகளை ஈராக்கிற்கு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததாக El Mundo பத்திரிகை விபரம் தந்திருந்தது, அப்படி நடந்திருக்குமானால் ஈராக் மீது ஐ.நா. விதித்திருந்த பொருளாதார தடைகளுக்கு எதிரானதாக ஸ்பெயின் நாட்டு நடவடிக்கை அமைந்திருக்கக்கூடும். நன்கொடை பணம் பின்னர் அனுப்பப்படும் என்று பேரம் பேசப்பட்டது. அந்த பேரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. ஸ்பெயின் நாடு அமெரிக்காவிற்கு ஆதரவு தெரிவித்ததன் நேரடி விளைவுகளில் ஒன்று ஈராக்கை பிடித்துக் கொண்டுள்ள அமெரிக்க அரசாங்கம் ரெப்சால் நிறுவனத்திற்கு எண்ணெய் ஒப்பந்தத்தை வழங்கியிருப்பதுதான். ஆனால் ஸ்பெயின் நாடு ஐரோப்பாவில் தலைமை தாங்கி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒரு வாய்ப்பை அது அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகொண்டிருப்பதால் இழந்துவிட்டதாக வாதம் புரிவோரும் இருக்கிறார்கள். ணிறீ றிணீணs பத்திரிகையில் ஜூலை-22-அன்று தலையங்கத்தில் ஒரு விமர்சனம் வெளியிடப்பட்டிருக்கின்றது. அந்த விமர்சனத்தில் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளையும் ஐ.நா-வையும் ஈராக்கில் நெருக்கமாக ஈடுபடுத்துவதற்கு அமெரிக்கா மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து அந்த தலையங்கத்தில் கவலைகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. ''ரஷ்யா, ஜெர்மனி, ஏன் பிரான்ஸ்சும் சிலிநாடும் கூட ஒரு புதிய தீர்மானத்திற்கு பின்னால் அணிவகுத்து நிற்கின்றன. அந்த தீர்மானத்தின் மூலம் ஈராக்கில் ஐ.நா-விற்கு மீண்டும் ஒரளவிற்கு அதிகாரம் வழங்கிவிட முடியுமென்றும் ஈராக்கில் தேர்தல்களை விரைவுபடுத்தி அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியுமென்றும் அந்த நாடுகள் நம்புகின்றன. ஸ்பெயின் நாடு இந்த இயக்கத்திற்கு சர்வதேசத் தலைமை ஏற்கும் அருமையான வாய்பை இழந்துவிட்டது வருத்தம் தருவதாக உள்ளது. குறிப்பாக ஐ.நா-பாதுகாப்பு சபைத் தலைவராக இரண்டாண்டு சுழற்சி முறையில் வரும் வாய்பை பயன்படுத்திக் கொள்ள ஸ்பெயின் தவறிவிட்டது.'' என்று ணிறீ றிணீணs தனது தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கின்றது. அதே நேரத்தில் சட்டரீதியிலான அரசியலிலிருந்து மிகப்பெரும்பாலான மக்கள் அன்னியமாகும் போக்கு வளர்ந்து வருவதனையிட்டு ஆளும் குழுவிற்குள் கவலை அதிகரித்து வருகின்றது. அரசாங்கத்தின் பொய்கள், மற்றும் ஜனநாய நெறிமுறைகளை புறக்கணித்துவிட்டு ஒரு கிரிமினல் போருக்கு ஆதரவு காட்டி வரும் போக்கின் உண்மைகள் முழுமையாக அம்பலமாகும்போது மக்களது இந்த அன்னியமாதல் போக்கு ஆழ்ந்த முறையில் அதன் முழு அளவினையும் எட்டும். |