World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

Federal appeals court overturns postponement of California recall election

கூட்டாட்சி மேல் முறையீட்டு நீதிமன்றம் கலிபோர்னியத் திருப்பியழைத்தல் தேர்தல் ஒத்திவைப்பை மாற்றிவிடுகிறது

By Don Knowland and Barry Grey
24 September 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஒரு அவநம்பிக்கையான, அரசியல் உந்துதல் பெற்ற தீர்ப்பில் அமெரிக்க 9-வது சர்க்யூட் மேல் முறையீட்டு நீதிமன்றம், செவ்வாயன்று, ஒருமனதாக அக்டோபர் 7-ம் தேதி நடக்கவுள்ள கலிபோர்னியத் திருப்பியழைத்தல் தேர்தல் நடைபெற வேண்டும் என்று ஏகமனதாக தீர்ப்பளித்தது.

இதே 9-வது சர்க்யூட் நீதிமன்றம் செப்டம்பர் 15 அன்று மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று தேர்தலை மார்ச் 2004 வரை ஒத்திவைத்து அளித்த தீர்ப்பை, இம் முடிவு செல்லாததாகச் செய்து விட்டது. American Civil Liberties Union (ACLU) என்னும் அமைப்பு தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்திருந்தது. செவ்வாய் கிழமை தேர்தலுக்குப் பின்னர் இத்தீர்ப்பை எதிர்த்து அமெரிக்கத் தலைமை நீதிமன்றத்தில் முறையீடு செய்யப் போவதில்லை என்று அறிவித்து விட்டது. இதன் அர்த்தம் திருப்பியழைத்தல் தேர்தல் இன்னும் இரண்டு வார காலத்திற்குள் நடைபெறும்.

செவ்வாயன்று கொடுக்கப்பட்ட தீர்ப்பின் விளைவினால் நீதிமன்றத்தின் உள்ளே, வெளியே உள்ள அனைவருக்கும், கலிபோர்னியாவின் மக்கட்தொகை மிகுந்த தொகுதிகள் சிலவற்றில் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் அக்டோபர் 7-ம் தேதி, அவர்கள் தொகுதி பழைய, நம்பத்தகுதியற்ற, அழுத்த அட்டை வாக்குக் கருவிகள் பயன்படுத்த இருப்பதையொட்டி, வாக்களிக்கும் உரிமையை இழப்பர் என்பது முழுமையாக தெரிந்து போயிற்று. லொஸ் ஏஞ்சல்ஸ், சான்டா கிளாரா, சான்டியாகோ, சக்ரமன்டோ ஆகியவை உட்பட இத் தொகுதிகள் மொத்தம் 44 சதவிகித வாக்குரிமை உள்ள மக்கள் நிரம்பிய தொகுதிகளாகும். இவை மாநிலத்திலேயே மிக அதிகமான அளவில் தொழிலாளர் வர்க்கம், சிறுபான்மையினர், புலம் பெயர்ந்தோர் ஆகியவரது வாக்குகளைக் கொண்டுள்ளது.

இந்த முடிவின் அரசியல் உந்துதல் மிக வெளிப்படையாக இருக்க முடியாது. "ஒட்டு மொத்தமாக" பதினொரு 9-வது சர்க்யூட் நீதிபதிகளும் கொடுத்த தீர்ப்பு அமெரிக்கத் தலைமை நீதிமன்றம் (புஷ் எதிர் கோர்) கொடுத்த புளோரிடா மறு வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி, ஜோர்ஜ் டபிள்யு. புஷ்ஷை வெள்ளை மாளிகையில் இருத்திய தீர்ப்புடன் ஒரு விஷயத்தில் நிதர்சனமாகப் பொதுவாக அது இருந்தது. இரண்டு வழக்குகளிலும் கூட்டாட்சி நீதிமன்றங்கள் சமமற்ற முறையில் வாக்காளர்களை நடத்தியத்தையும் பிரதானமாக தொழிலாளர் குடிமக்கள் செலுத்தியவை, பல்லாயிரக்கணக்கான வாக்குகள் செல்லாமல் போவதை தடைசெய்வதற்கு தலையீடு செய்தன.

செவ்வாயன்று தீர்ப்பில் மற்றொரு சிறப்பான அம்சமும் இருந்தது. தலைமை நீதிமன்றத்தின் வலது சாரிப் பெரும்பான்மை பொருந்தாத வகையில் புஷ் எதிர் கோர் வழக்கில் சட்டத்தின் சமப் பாதுகாப்பு என்னும் கொள்கையை உறுதிபடுத்தியது-- மிகவும் எரிச்சலூட்டும் மற்றும் ஜனநாயக விரோத நோகங்களுக்காக பற்றிக் கொள்ளப்பட்டது-- அந்த ஒரே தனிப்பட்ட தன்மையுடைய வழக்கிற்குத்தான் பொருந்தும். அதாவது அமெரிக்க அரசியலமைப்பின் சமப்பாதுகாப்புக் கொள்கை வலதுசாரிக் குடியரசுக் கட்சியினர் தேர்தல்களைத் திருட மட்டுமே வேண்டி வரவழைக்கப்பட முடியும்.

2001ல் ஒரு நீதிமன்றத் தீர்ப்பு அனைத்து கலிபோர்னிய தொகுதிகளிலும் அழுத்த அட்டை வாக்கு அளிக்கும் முறை (punch-card voting systems) பழையதும் ஏற்கத்தக்கதும் அல்ல என்று அவரே ஒப்புக்கொண்டதை கலிபோர்னியாவில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி முதல் சுற்று தேர்தல் தேதியான மார்ச் 2, 2004க்குள் மாற்றிவிடுவதாக கலிபோர்னிய மாநில அரசுத்துறை செயலர் ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் அதைத் தொடர்ந்து எதிர்பாராத விதமாக ஜனநாயகக் கட்சியாளரான, இப்பொழுதுள்ள கவர்னர் கிரே டேவிஸ், இரண்டாம் முறையாக 2002 நவம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் திருப்பியழைக்கப்படவேண்டும் என்ற வாக்கெடுப்புத் தேர்தலுக்குக் கட்டாயம் ஏற்பட்டது.

2003 ஜூலை மாதம் பல்லாயிரக்கணக்கான கலிபோர்னிய வாக்காளர்கள் பெயரைக் கொண்ட மனுக்கள் பல மில்லியன் அதிபதி, வலதுசாரித் தேசியச் சட்டமன்றத்தின் உறுப்பினர் டாரேல் ஐசாவின் தலையீட்டின் மூலம் அடையப்பெற்றவை, சான்றிதழ் பதிவு பெற்று கலிபோர்னிய அரசியலமைப்பின்படி டேவிசைத் திருப்பியழைக்கும் தேர்தல் அக்டோபர் 7ம் தேதிக்குக் குறிக்கப்பட்டது. ACLU அதன் பின்னர், இப்பொழுதைய வழக்கை அழுத்த அட்டை முறை ஆறு தொகுதிகளில் பயன்படுத்தப்படுவதைச் சுட்டிக்காட்டி அரசாங்கத்தால் நவீனமானதும், நம்பத்தகுந்ததுமான வாக்குப்பதிவுக் கருவிகளை அக்டோபர் 7க்குள் அமைக்க இயலாது என்ற காரணம் காட்டி ஒத்திவைப்பு கோரி தற்போதைய சட்டத்தை எதிர்த்து மனுச்செய்தது.

வழக்கில் ACLU, 40 000க்கும் மேற்பட்ட வாக்குகள், இந்த 6 தொகுதிகளில் புதிய கருவிகளோடு ஒப்பிடுகையில் அழுத்த அட்டைக் கருவிப் பயன்பாட்டினால் கூடுதலான பிழைகளுக்கு உட்பட்டுச் செல்லுபடியாகாமற் போய்விடும் என்ற சான்றினை முன்வைத்தது. இதற்காக சட்ட ஆதாரமாக ALCLU பெருமளவு தலைமை நீதிமன்றத்தின் புஷ் எதிர் கோர் வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பை ஆதாரம் காட்டியது. இவ்வழக்கில் தலைமை நீதிமன்றம் புளோரிடா அரசாங்கத்தை 2000 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மறு எண்ணிக்கை நடத்துவதைத் தடுத்தது; அதற்குக் காரணமாக வெவ்வேறு தொகுதிகளில் மாறுபட்ட முறையில் வாக்குகள் எண்ணப்படுவது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள சமவாய்ப்பு உறுதியை மீறியதாகும் என்ற காரணம் கொடுக்கப்பட்டது. ACLU கூட்டாட்சி நீதிமன்றத்தை மார்ச், 20004 வரை ஒத்திவைக்கவும், அதற்கிடையில் கலிபோர்னியா முழுவதும் அழுத்த அட்டை வாக்குப்பதிவுக் கருவி பதிலீடு செய்யப்படுமாறு உத்திரவிடவும் கோரியது.

அத்தகைய தடையை உடனடியாக அளிப்பதா என்ற முடிவில், நீதிமன்றம் வாதி அவ்வழக்கை விசாரணை நீதிமன்றத்தில் வெல்ல முடியுமா, உடனடி இடைமாற்று கொடுத்தால் அல்லது கொடுக்கப்படாவிட்டால் இருபுறத்திலும் ஏற்படக்கூடிய கஷ்ட நஷ்டங்கள் பற்றிக் கருத்துக்கொண்டும் சமநெறியைப் பின்பற்றுதல் என்ற சட்டமுறைப்படி தீர்ப்பளிக்க கடப்பாடுடையாதாக இருந்தது. இதன் வெளிப்பாட்டின் மீதான பொது நலனும் கருத்தில் கொள்ளப்பட வேண்டி இருந்தது.

ஆகஸ்ட் 20 அன்று கூட்டாட்சி நீதிபதி ஸ்டீவன் வில்சன் ACLU கோரிய தடை உத்திரவைப் பிறப்பிக்க மறுத்துவிட்டார். ACLU விசாரணை நீதிமன்றத்தில் அழுத்த முறை அட்டை வாக்குப்பதிவு முறையால் சமபாதுகாப்புச் சட்டம் மீறப்படும் என்பதில் வெற்றியடையமாட்டா என்ற கருத்தில் அவ்வாறு வில்சன் தீர்ப்பளித்தார். அக்டோபரில் தேர்தல்களை நடத்துவதில் கலிபோர்னிய நலன், வாக்குகள் சமமான முறையில் எண்ணப்படாமல் போய்விடக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் நலனை விட மேம்பட்ட முக்கியத்துவம் பெறும் என்றும் அவர் கண்டார்.

இதன் பின் ACLU தேர்தல் ஒத்திவைப்பு வில்சனால் மறுக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்தது. இம்முறையீடு தீர்ப்பிற்காக ஜனாதிபதி கிளின்டனால் நியமிக்கப்பட்டிருந்த ஒன்பதாவது சர்க்கியூட் நீதிமன்ற மூவர் குழுவிற்கு அனுப்பப்பட்டது, அதில் குறைந்தபட்சம் இரண்டு பேராவது குடியுரிமைப் பிரச்சினைகளில் தாராளக் கொள்கையுடையவர்கள் எனப் பெயர் பெற்றவர்கள். செப்டம்பர் 15ம் தேதி இந்த மூன்று நீதிபதிகள் கொண்ட குழு, மத்திய கீழ் நீதிமன்றத் தீர்ப்பை நீண்ட எழுத்து மூலக் கருத்துத் தெரிவித்து, திருப்பியழைத்தல் தேர்தல் மார்ச் 2, 2004 வரவிருக்கும் கலிபோர்னிய ஜனாதிபதி முதல் சுற்றுத் தேர்தல் வரை ஒத்திவைத்து உத்திரவு அளித்தது.

இந்நீதிபதிகள் ACLU வழக்கில் வெற்றிகொள்வது அதிக வாய்ப்புடையது; புஷ் எதிர் கோர் வழக்கில் கூறப்பட்டுள்ள ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற அரசியலமைப்புக் கோட்பாடு இதற்குப் பயன்படுத்தாவிட்டால், மற்ற வாக்குப்பதிவு தொழில்நுட்பக் கருவிகளைவிட குறைந்தது இரு மடங்குகள் வாக்குகள் செல்லுபடியாகாமற்போகலாம் என்ற முறையில் இக்கருத்தை அது கொண்டது. வாக்குகள் சமமான முறையில் எண்ணப்பட வேண்டும் என்ற நலன் அரசியலமைப்பின்படி திருப்பியழைத்தல் குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தப்படவேண்டும் என்ற விதியைவிட முக்கியத்துவம் வாய்ந்ததால், மற்றும் தேர்தலை தள்ளிப்போடுதற்கு பொது நலனும் சாதகமாக இருப்பதால், மற்றொரு தேர்தல் நடத்தப்பட உள்ள மார்ச் மாதத்திற்கு இத்தேர்தலையும் ஒத்திவைத்தது.

அரசியல் சலசலப்பு

இந்நீதிமன்றத்தின் திருப்பியழைத்தல் தேர்தல் ஒத்திவைப்பு, அரசியல் செய்தி ஊடகங்களிடையே பெரும் சலசலப்பை குறிப்பாகக் கலிபோர்னியாவில் ஏற்படுத்தியது. கலிபோர்னியாவின் முக்கிய செய்தித்தாளான ெலாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், ஏற்கனவே பெருங்குழப்பம் மலிந்துள்ள நிலைமையில் இன்னும் தாமதப்படுவதை எதிர்த்து எழுந்த செய்தி ஊடகப் பரபரப்பிலும் முன்னின்றது.

முக்கிய ஜனநாயகக்கட்சி பிரமுகர்கள், டேவிஸ் திருப்பியழைக்கப்பட்டால் கவர்னராகக் கூடிய, துணை கவர்னர் க்ரூஸ் பஸ்டமன்டே உட்பட, டேவிஸும் கூட மரபின் படிப்பினையின்படி, மார்ச்சில் கூடுதலான ஜனநாயகக் கட்சியினர் ஜனாதிபதி தலைவர் முதல் சுற்று வாக்கெடுப்பில் பங்குபெற வருவர் என்றாலும் அக்டோபரிலேயே தேர்தல்கள் நடத்தவேண்டும் என்று வெளிப்படையாகவே கூறினர். நீண்டகால வலதுசாரி குடியரசுக் கட்சியினரின் குற்றச்சாட்டுக்களான ஒன்பதாவது சர்க்யூட் நீதிமன்றம் பொறுத்துக்கொள்ள முடியாத அளவு தாராள, தீவிர மற்றும் ஒருதலைப்பட்சத் தன்மையுடையது என்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டன.

செப்டம்பர் 15ம் தேதித் தீர்ப்பு பெருமளவு விவாதங்களைக் கிளப்பி ஏற்கனவே ஆழ்ந்த நெருக்கடியில் உள்ள அரசியல் முறையில் தொலை நோக்கான விளைபயன்களையும் வெளிக்கொண்டுவந்தது. தலைமை நீதிமன்றம் புஷ் எதிர் கோர் வழக்கில் கொண்ட சமபாதுகாப்பு வாதத்தை மேற்கொண்டு, ஆனால் அவ்வழக்கு ஒன்றுக்குத்தான் பொருந்தும் என்ற குறிப்பைப் புறக்கணித்து மூவர் குழு அமெரிக்கத் தேர்தல் முறையைச் சூழ்ந்துள்ள நியாயமற்ற தன்மைகள் பலவற்றை உயர்த்திக்காட்டி, 2004 ஜனாதிபதி தேர்தல் உட்பட, அனைத்து வரவிருக்கும் தேர்தல்களிலும் சட்டமுறையில் எதிர்ப்புக்கள் எழுவதற்கு வழிகோலியது.

இந்தத் தீர்ப்பு அமெரிக்க ஜனநாயக முறையில் ஏற்கனவே உள்ள சிதைவையும் நெருக்கடியையும் முன்னுக்குக் கொண்டுவந்து காட்டியது; குடியரசுக்கட்சி ஒரு பாலியல் இழிவைப் பயன்படுத்திக் கிளின்டன் நிர்வாகத்திற்கு எதிராக அரசியல் ஆட்சிக் கவிழ்ப்பைக் கொண்டதும் அப்படிப்பட்ட வெளிப்பாடுகளின் உந்துதல்களில் ஒன்றேயாகும்; அதன்பின் வந்த 2000ம் ஆண்டுத் தேர்தலில் மக்கள் வாக்கு ஆதரவிருந்த வேட்பாளரான அல்கோருக்கு எதிராக முயற்சிகள் செய்து, முடிவைக் கவிழ்த்து இறுதியில் நீதித்துறை வழியாக -தலைமை நீதிமன்றத்தின் பெரும்பான்மை வலதுசாரிக் குடியரசுக் கட்சியின் செல்வாக்கு நிறைந்த தன்மை- புஷ் எதிர் கோர் வழக்கின் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற வழிவகையும் செய்யப்பட்டது.

மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவின் செப்டம்பர் 15ம் தேதித் தீர்ப்பு, உறுதியான அரசியலமைப்புச் சட்ட நிலைப்பாடுகளின்படி கலிபோர்னியத் திருப்பியழைத்தல் வழக்கில் அத்துமீறிய ஜனநாயக விரோத கூறுபாட்டின் விளைவை மாற்றும் வகையில், அதுவும் தற்கால அமெரிக்க அரசியலில் தேர்தல்கள் நடத்துவதையே பிரச்சினைகளாக்கிவிட்ட நிலையில் சிறந்த முறையில் இருந்தது.

அரசியல் முறையின் நெருக்கடிக்கு அடித்தளத்தில் ஆழ்ந்த மற்றும் கேடு விளைவிக்கும் சமுக நிகழ்ச்சிப்போக்குகள் உள்ளன; முதலாளித்துவ அரசின் நிறுவன அமைப்புக்களான நீதிமன்றங்களே இவற்றைச் சரிசெய்துவிட முடியாது. அத்தகையவற்றுள் தலையாயது நிதிநிறை சிறுகுழுவிற்கும் பெரும்பாலான மக்களுக்கும் இடையேயுள்ள வளர்ந்து வரும் துருவமுனைப்படலும் செல்வக் குவிப்பும் ஆகும்.

அமெரிக்க ஆளும் தட்டைப் பொறுத்தமட்டில் ஒட்டுமொத்தமாக, மூவர் நீதிபதி நடுவர் மன்ற செப்டம்பர் 15 தீர்ப்பை மாற்றுவது மிக அவசரமானது என்ற உணர்வு மேலோங்கி நின்றது. அரசியல் நடைமுறையில் தலைமை நீதிமன்றத்தை இந்த வழக்கிலிருந்து புறத்தே வைப்பதும், ஒன்பதாவது சர்க்யூட் நீதிமன்றமே அதன் மூன்று தாராள நீதிபதிகள் அளித்த தீர்ப்பை செல்லா நிலைக்கு மாற்ற வைப்பதும் அதற்குப் பெரும் பொறுப்பாயிற்று.

ஏனெனில், அமெரிக்கத் தலைமை நீதிமன்றம் ஏற்கனவே தன் தலையீட்டினால் ஜோர்ஜ் புஷ்ஷை வெள்ளை மாளிகையில் இருத்தியதற்காக பரந்த அளவில் செல்வாக்கை இழந்திருக்கும் நிலைமையில் உள்ள அரசியல் முறையின் உறுதித்தன்மை பாதுகாக்கப்பட, அது தன்னுடைய புஷ் எதிர் கோர் வழக்கில் கொடுக்கப்பட்ட சம பாதுகாப்பு அறிவுரையிலான அதே காரணங்களுக்காகத் தள்ளுபடி செய்யவேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டால் பொதுமக்களுடைய பார்வையில் எஞ்சியுள்ள மதிப்பையும் இழக்க நேரிடும். இவ்வழக்கு தலைமை நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தால் அம்மன்றம் மூவர் தீர்ப்பை மாற்றியிருந்தால் எரிந்துவிழும், ஒருதலைபட்சமான மற்றும் ஜனநாயக விரோத தன்மை படைத்த அதனுடைய 2000 ஆண்டுத் தேர்தல் பற்றிய தீர்ப்பின் உண்மை உறுதி செய்யப்படுவதோடு, முழு நீதித்துறையின் செயல்களின் மீதுள்ள எஞ்சியுள்ள நம்பிக்கையும் இழப்பிற்கு உள்ளாக்கப்பட்டிருக்கும்.

எனவே மாபெரும் அளவில் அரசியல் அழுத்தங்கள் ஒன்பதாவது சர்க்யூட்டின் முழுக் குழுவின் மீது கொண்டுவரப்பட்டு, அதன் சகாக்கள் மூவர் செப்டம்பர் 15 அன்று கொடுத்த தீர்ப்பில் தலையீடு செய்து மாற்றும் பொறுப்பு அளிக்கப்பட்டது. ஒன்பதாவது சர்க்யூட் நீதிபதிகளும் காலத்தை வீணடிக்காமல், அசாதாரண முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு, தேவையான விளைவை இப்பொழுதிற்காவது அரசியல் தேர்தல் முறைகளின் இரத்தக்கசிவை நிறுத்தும் முயற்சியைச் செய்து முடித்தது.

சர்க்யூட்டின் பெரும்பாலான நீதிபதிகளுக்கு மூவர் குழு வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய "ஒட்டுமொத்தமாக" என்ற வழியைக் கடைப்பிடித்து மாற்ற நான்கு நாட்கள் தான் பிடித்தது. அத்தகைய மறுபரிசீலனையே அசாதாரணமானது; ஒட்டுமொத்த முறையில் 11 நீதிபதிகளும் இதுவரை முன்னோடி இல்லாத அளவிற்கு விரைவுடன் செயல்பட்டு, வாய்மொழி வாதங்கள் திங்களன்று கேட்கப்படும் என்று கூறி (அதைத் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்ப அனுமதித்து) புதிய ஒருமனதான தீர்ப்பை மறுநாள் காலை வழங்கினார்கள்.

செப்டம்பர் 15ம் தேதி தீர்ப்பு தன்னுடைய முடிவிற்குக் காரணங்களைத் தொகுத்துப் பல டஜன் பக்கங்களில் விளக்கியிருந்தது; இதற்கு மாறாக இப்பொழுது வந்துள்ள தீர்ப்பு திடீரென்ற முறையிலும் மேம்போக்காகவும் உள்ளது. தன்னுடைய தீர்ப்பிற்கான காரணங்களைக் கூற எட்டு சிறிய பங்கங்கள் விவாதத்தையே அது கொண்டுள்ளது.

சமபாதுகாப்பு முறை, ஒருவருக்கு ஒரு வாக்குக் கோட்பாடு மற்றும் அதிகாரபூர்வமாகக் கலிபோர்னிய அரசே ஒப்புக்கொண்டுள்ள கருவிகளின் நம்பிக்கையற்ற தன்மை அவற்றை மீறுகிறது ஆகியவற்றைப் பற்றிய எந்த பொருள் பொதிந்த விவாதத்தையும் தீர்ப்பில் காண்பதற்கில்லை. இந்த விஷயத்தில் இரு மேம்போக்கான கேள்விக்குரிய சட்டக் குறிப்புக்களைத்தான் கூறியுள்ளது.

முதலில், முந்தைய தலைமை நீதிமன்ற வழக்குகளை மேற்கோள்காட்டி, நடைபெற உள்ள தேர்தல்களில் மிகத் தவிர்க்க முடியாத நிலையில்தான் குறுக்கிடவேண்டும், அப்படிப்பட்ட குறிப்பீடு இன்றியமையாதது என்றால் தான் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற வாதத்தைக் கூறுகிறது. ஆனால் அவ்வழக்குகள் அத்தகைய முறையில் எந்தத் தீர்ப்பையும் கொள்ளவில்லை. மாறாக, அனைத்துச் சூழ்நிலைகளும், இடர்பாடுகளும் கருத்தில் கொள்ளப்பட்டு, வாக்குப்பதிவுக் களத்தில் அரசியலமைப்பு மீறாமல் முடிவு தேதிக்கு உட்படுத்திச் செயல்பாடு இருக்கவேண்டும் என்று தான் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உண்மையில், பல நேரங்களில் தலைமை நீதிமன்றம் தேர்தல் மாற்றங்களில் சிறுபான்மையினர் பங்கில் பாரபட்ச நோக்கம் இருந்தால் வாக்களிக்கும் உரிமைச் சட்டம், 1965ஐ பிரயோகித்து, வெளியே சென்றவர் வாக்குகள் பதிவாகிவிட்ட நிலையில் தேர்தல்கள் நடத்தப்பெற, அதைத் தொடரத்தான் கூறியுள்ளது.

ஒன்பதாவது சர்க்யூட் நீதிபதிகள் புஷ் எதிர் கோர் வழக்கின் முன்னோடித் தன்மையையும் அசட்டை செய்து அதன்படி, புளோரிடா வாக்கு எண்ணுதலை சில மாதங்களுக்கல்ல, எப்பொழுதுமே நிரந்தரமாக நிறுத்தி வைத்தது; செப்டம்பர் 15 தீர்ப்பில் பலமுறை மேற்கோளிடப்பட்ட, புஷ் எதிர் கோர் வழக்கில் கூறப்பட்டுள்ள, செவ்வாயன்று புறக்கணிக்கப்பட்ட கருத்து இதுதான்: ``காலக்கெடு உள்ளது என்பதனால் அரசியலமைப்பு அக்கறை குறைக்கப்படலாகாது. விரைவாகச் செயல்படவேண்டும் என்பதற்காக சமபாதுகாப்பு உரிமைகளின் உத்திரவாதம் அசட்டை செய்வதற்குக் காரணமாகிவிடக் கூடாது.``

இரண்டாவது, செவ்வாய் தீர்ப்பு, கீழ் நீதிமன்றங்களின் தடைகள் பற்றிய உத்தரவு தவறு என்று தெளிவானால் ஒழிய மாற்றப்படக்கூடாது என்பதனால் நீதிபதி வில்சன் அளித்த ஒத்திவைப்பு கூடாது என்ற தீர்ப்பு மாற்றப்பட்டிருக்கக்கூடாது என்று கூறுகிறது. ஏன்? நீதிமன்றம் கூறுகிறது, ஏனெனில், பகுத்தாராயும் நீதிபதிகள் வெவ்வேறு கருத்துக்களை சமபாதுகாப்பு முறை தொடர்ந்த அழுத்த அட்டைக் கருவி பயன்படுத்தப்படுவதால் மீறப்படுகிறது என்பது பற்றி கொள்ள இடமுண்டு. இது ஒரு வியக்கத்தக்க சுற்றிவரும் வாதமாகும். முடிவு தொடக்கக் கொள்கையிலேயே உறைந்து நிற்பதாக ஏற்கும் சாமர்த்தியம் ஆகும்.

செப்டம்பர் 15 முடிவை செல்லாததாக்கும் தங்களது தீர்ப்பில், புஷ் (எதிர்) கோர் நிலக்கண்ணியிலிருந்து அகன்று செயல்பட நீதிபதிகள் மிகவும் பிரயாசப்பட்டனர். டிசம்பர் 2000 தலைமை நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து ஒரே ஒரு சொற்றொடரைத்தான் மேற்கோள் கூறியுள்ளனர். ``நீதிமன்றத்தின் முன் எழுந்துள்ள வினா, பகுதி ஆட்சி அமைப்புக்கள் தங்கள் அதிகாரச் செயல் அனுபவத்தைக் கொண்டு தேர்தல் நடத்த புதிய முறைகளைக் கையாளலாமா என்பது அல்ல`` என்பது தான் அந்தச் சொற்றொடர்.

இந்த விருப்பம் தலைமை நீதிமன்றத்தின் ஆணித்தர கருத்தான, புஷ்ஷை அது வெள்ளை மாளிகையில் இருத்திய தீர்ப்பு, ஒரு தேர்தல் அதிகார வரம்பு மற்ற அதிகார வரம்பிலிருந்து மாறுபட்டுச் செயல்படும் மாநிலங்கள் தங்களுக்குள்ளேயும், கூட்டாட்சியின் மற்ற பகுதிகளுக்கும் இடையே உள்ள குழப்பங்கள் மலிந்த, பகுத்தறிவுக் காரணங்கள் அற்ற, முறையற்ற வழிவகைகள் ஆகியவற்றிலிருந்து எழும் சம்மற்றதன்மையை சவால் செய்ய, மாறுபாடுகளைத் தீர்க்க வரையறுக்க ஒரு முன்னோடியாக பயன்படுத்தக் கூடாது என்பதற்கு நல்ல உரமிட்டுள்ளது.

தேர்தல் அக்டோபரில், மார்ச்சுக்கு பதிலாக நடத்தப்படுவதில் உள்ள ஒப்பீட்டுக் கஷ்டங்கள் சமன் செய்யப்பட வேண்டியது பற்றிய விவாதத்தில், ஒன்பதாவது சர்க்யூட் கோர்ட் சில முறையான பிரச்சனைகளை வாதத்திற்குரியவை என்றாலும், தேர்தல் ஒத்திவைப்பினால் ஏற்படுபவற்றை உதாரணமாக ஏற்கனவே பதிவாகிவிட்ட 500,000 அஞ்சல் வாக்குகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டது.

ஆனால் அஞ்சல் வாக்குகள் செப்டம்பர் 15 தீர்ப்பின்படி திருப்பியழைத்தல் தேர்தல் புதிய வாக்குக் கருவிகள் உபயோகிக்கப்படும் வரை ஒத்தி வைக்கப்பட்டால் மீண்டும் அனுப்பி வைக்கப்படலாம். மார்ச் 2 ஜனாதிபதி முதல் சுற்று வாக்கெடுப்போடு திருப்பியழைத்தல் தேர்தலும் நடத்தப்பட்டால் குழப்பங்கள் விளையும் என்று அதிகாரிகள் கூறிய கூற்றை ஒட்டிய சிக்கல்கள் திருப்பியழைத்தல் தேர்தலை வேறு தேதியில் கொள்வதின் மூலம் தீர்க்க முடியும்.

அடிப்படை ஜனநாயக கோட்பாட்களின் நிலைப்பாட்டிலிருந்து, எல்லாவற்றுக்கும் மேலாக, வாக்குப் போடுவதும், அது எண்ணப்படுவதும் ஆன உரிமை மற்றவற்றைவிட உயர்ந்தவையாகும். செவ்வாயன்று ஒன்பதாவது நீதிமன்ற நீதிபதிகள் அடிப்படை அரசியலமைப்பு பிரச்சினையான வாக்குகள் பற்றிய உரிமைகளுக்குப் பேச்சு மரியாதை மட்டுமே கொடுத்துள்ளனர்.

இத்தீர்ப்பு ஆளும் செல்வந்த தட்டினுள், ஜனநாயகக் கட்சி உட்பட, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் முக்கிய பிரிவினர் இல்லை என்பதைத்தான் மீண்டும் நிரூபித்துள்ளது. ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு பற்றிய வாதங்கள், வாக்களிப்பது, எண்ணப்படுவது ஆகியவை இறுதியாக நீதிமன்றங்கள் வழியாக அடையப்பட முடியாதவை. முடிவாக அவை சுயாதீனமாகச் செயல்படும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் போராட்டத்தால் தான் உத்திரவாதம் செய்யப்பட முடியும்.

Top of page