World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Provocateurs and criminals in the employ of the Brandenburg intelligence service

ஆத்திரமூட்டும் இரகசிய ஒற்றர்களும் குற்றவாளிகளும், பிராண்டன்பேர்க் உளவுப்பணித்துறையின் கீழ் வேலை பார்க்கின்றனர்

By Lena Sokoll
17 November 2003

Use this version to print | Send this link by email | Email the author

"வி-மனிதர்கள்" என அழைக்கப்படும், ஜேர்மன் இரகசிய உளவாளிகள், உளவுப்பணித் துறையினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாநில மற்றும் தேசிய அளவில், உளவுத்துறையினர் அரசியலில் சந்தேகம் கொண்டுள்ள குழுக்களில், ஊடுருவிப் பணியாற்ற, வாடிக்கையாக உபயோகப்படுத்தப்படுகின்றனர். இத்தகைய உளவாளிகளின் அதிகாரபூர்வமான பணி அக்குழுக்களைப் பற்றி நேரடித்தகவல் அறிந்துகொள்வது ஆகும்.

ஆயினும், நடைமுறையில், இவர்கள் தங்களுடைய செயல்களை, வெறும் தகவல்கள் சேகரிப்பதோடு நிறுத்திக் கொள்வதில்லை சிலசமயங்களில், அவர்கள் பெரிய அளவிலான சட்ட விரோதமான, வன்முறைச் செயல்களையும் செய்திருப்பதோடு, தாங்கள் வேவுபார்க்கும் அமைப்புக்களில் முன்ன்னிப் பாத்திரத்தையும் அடிக்கடி செய்துள்ளனர். அவர்கள் புத்தக ஆசிரியர் Rolf Gössner படி, சமீபத்தில் இரகசியத் தகவலறிவோர் (Geheime Informanten (Secret Informants)), என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள புத்தகத்தில் பொருத்தமாகக் குறிப்பிட்டுள்ளதுபோல், "அரசாங்கப் பணியில் உள்ள குற்றவாளிகளாக"[1] விளங்குகின்றனர்.

ஜேர்மன் ஜனநாயக குடியரசு (GDR) வீழ்ச்சியுற்ற பின்னர் அது நிறுவப்பட்டதிலிருந்து, அதன் செயல்பாட்டின் சில ஆண்டுகளில், பிராண்டன்பேர்க் உளவுத்துறை அதன் இரகசிய ஒற்றர்களாலும், குற்றவாளிகளாலும், பெரும் இழிபெயரைத்தான் பெற்றுள்ளது.

Carsten Szczepanski மற்றும் Toni Stadler என்ற இரு புது-நாசிகள், பிராண்டன்பேர்க் உளவுத்துறைக்காக தீவிர வலதுசாரி, நவீன நாசி அமைப்புக்களில் பணிபுரிந்து, மிகப்பெரிய அளவில் பொது கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்துக்கது ஆகும். தாங்கள் தொடர்பு கொண்டிருந்த அமைப்புக்களை வளர்ப்பதில் பெரிதும் தீவிரமான முறையில் செயல்பட்டு, உளவுத்துறை தடுத்து நிறுத்த வேண்டிய, அதன் சட்ட விரோத நடவடிக்கைகளில், அதிகமாகப் பங்கு பெற்றனர்.

Carsten Szczepanski ஏற்கனவே 1990களின் தொடக்கத்தில் ஒரு நவீன-நாசி என்ற புகழை அடைந்திருந்தார். இவர் வலதுசாரித் தீவிர மொட்டைத்தலை அமைப்பில் (skinhead milieu) ஒரு முக்கியமானவராக இருந்ததுடன், தேசிய முன்னணியின் தலைமையிடத்துடனும் தொடர்பு கொண்டிருந்தார். அவர் ஜேர்மனியில் Ku Klux Khan அமைப்பின் கிளை ஒன்றை ஏற்படுத்தக் காரணகர்த்தாவாகவும் இருந்துள்ளார்.

Szczepanski குடியிருந்த வீட்டைப் போலீசார் 1992ல் சோதனையிட்டு, நான்கு குழாய்க் குண்டுகள், மற்றும் பல வெடிமருந்துப் பொருள்களையும் கைப்பற்றியிருந்தனர். போலீசார் இதைத் தொடர்ந்து, இவர் ஒரு பயங்கரவாத இயக்கத்தைத் தொடங்க உள்ளாரோ என்ற சந்தேகத்தின் பேரில் தொடக்க விசாரணை ஒன்றை மேற்கொண்டனர். ஆனால், இவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவும் இல்லை, அக்குற்றங்களுக்காகத் தண்டனையும் கொடுக்கப்படவும் இல்லை; இது அப்பொழுதே இவர் உளவுத்துறையில் வேலைபார்த்து வந்ததோடு அதன் பாதுகாப்பிற்கும் உட்பட்டிருந்தார் என்பதைக் குறிப்பிடுகிறது.

பிராண்டன்பேர்க் உளவுத்துறையின் கூற்றின்படி, அது முதலில் Szczepanski உடன் 1994ல் வேலைசெய்யத் தொடங்கியது; இது அவர், ஸ்டீவ் எரென்ஹி என்ற நைஜிரியாக்காரரை கொலை செய்ய முயற்சித்ததற்காக நீண்ட சிறைதண்டனையைத் தொடங்கியதற்குப் பின்னர் ஆகும். அக்குற்றத்தின் தீவிரத்திற்குப் பிறகும் 1997லேயே அவர் விடுதலையாகிவந்து, தன்னுடைய நடவடிக்கைகளை, நவ-நாசிச அமைப்பில் V-மனிதன் "Piato" என்ற பெயரில் புதுப்பித்துக்கொண்டு செயல்பட்டு வரலானார்.

சிறையிலிருந்து வெளிவந்தவுடன், Szczepanski/Piato கிழக்கு ஜேர்மனிய சிறுநகரமான Königs Wusterhausen ல், ஒரு கடையைத் தொடங்கி, அங்கு புத்தகங்களையும் இசைபற்றிய பொருட்களையும், நவ-நாசிசப் புத்தகங்களுடனும் இசைப் பாடல்களுடன் சேர்த்து விற்று வந்தார். United Skins என்ற தீவிர வலதுசாரி இதழ் ஒன்றிற்கும் இவர் வெளியீட்டாளராக இருந்ததோடு, உளவுத்துறைக்காக ஒற்று அறிந்தார் என்று கூறப்படும் நவபாசிச அமைப்பை, நன்கு வளர்க்கும் பணியில் முக்கியபங்கையும் கொண்டிருந்தார். ஜேர்மன் தேசியக் கட்சியின் (NPD) உள்ளூர் கிளைக்கு தலைவராகவும் இருந்த, Spreewald பகுதியில் NPD யின் தலைமைக் குழுவில் ஓர் உறுப்பினராகவும் இருந்தார். மேலும் பிராண்டன்பேர்க்-பேர்லின் மாநில NPDயின் அமைப்புத் தலைமையையும், குழு உறுப்பினர் பதவியையும் கொண்டிருந்தார்.

"Piato" என்ற V-மனிதர், பிராண்டன்பேர்க் உளவுத்துறைக்காகத் தான் வேவுபார்க்க வேண்டிய கட்சி அமைப்பிலேயே முக்கிய பதவி வகிக்கத் தலைப்பட்டார். இவரைப் பொறுத்தவரை மட்டும் இவ்வாறு நடக்கவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக ஜேர்மன் அரசாங்கம் NPDஐ தடைசெய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இவ்வாண்டு வசந்தகாலத்தில் ஜேர்மனிய அரசியலமைப்பு நீதிமன்றம், விசாரணையின்போது கட்சி முழுவதும் மிக அதிக அளவில் உளவுத்துறைப் பணியாளர்கள் நிறைந்துள்ளனர் என்பது தெரியவந்தவுடன், முழுவழக்கையும் தள்ளுபடி செய்தது. NPD மொத்த உறுப்பினர்களில் ஏழில் ஒரு பகுதியினர் உளவுத்துறையிலிருந்து வந்துள்ளனர் என்பதால், இக்கட்சியைத் தடைசெய்ய அரசு பயன்படுத்த விரும்பிய சாட்சி சம்பவங்களை நடத்தை மற்றும் செயல்பாடுகள் இவற்றை, இப்பணியாளர்களே பெரும்பாலும் செய்திருக்கக் கூடும் என்ற கருத்தை நீதிமன்றம் எதிர்நோக்க வேண்டியிருந்தது.

Toni Stadler ஐப் பொறுத்தவரையில், நவ-நாசிக்களால் தீவிர வலதுசாரி விஷயதானங்களை பரப்பிய குற்றங்கள் உட்பட பலவற்றில் பிராண்டன்பேர்க் உளவுத்துறையினரின் பொறுப்பு இதைவிட நேரடியாகத்தான் உள்ளது.

Stadler இசை மற்றும் இலக்கியம் விற்பனையில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற ஒரு நவ-பாசிச கடை ஒன்றை நடத்தினார். இவர் "Notes of Hatred" என்ற பெயரில் CD தயாரித்து, விற்பனை செய்வதில் பங்கு கொண்டிருந்தார். இதில் "White Aryan Rebels" என்ற குழு தயாரித்திருந்த பாடல்கள் இருந்தன. அப்பாடல்களில் அயல்நாட்டவர், யூதர்கள், நாஜி எதிர்ப்பாளர்கள் ஆகியோரின் குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்படுதலும், பெரியவர்களை கொலை செய்தல், கற்பழித்தல் ஆகியவற்றைத் தூண்டும் பாடல்களும் இருந்தன.

ஸ்டாட்லெர் பாடல்கள் பதிவுசெய்து குறுந்தகடுகளுக்கு (CD) தக்க முகப்பு அட்டைகளும் வரிக் குறிப்புக்களும் தயாரித்தளித்ததற்காக கமிஷன் பெற்றவுடன், பிராண்டன்பேர்க் உளவுத்துறை அவரை இரகசிய ஒற்றராகத் தேர்ந்தெடுத்தது. ஸ்டாட்லருடைய நண்பர் ஒருவர், மிர்கோ ஹெஸ் (Mirko Hesse) என்பவர் அயல்நாட்டை தளமாகக் கொண்டிருந்த குறுந்தகடு (CD) வெளியீட்டு நிறுவனத்தோடு தொடர்பு கொண்டிருந்ததோடு, தேசிய உளவுத்துறைக்காகவும் வேலை பார்த்து வந்தார். இரண்டு உளவுத்துறை அதிகாரிகளுடைய முழுத் தெரிதல் மற்றும் ஆதரவுடன் இவ்விரண்டு நவ நாசிகளும் கொலை செய்யுமாறும் தூண்டும் வசனங்களுடைய குறுந்தகடுகளின்க் 3000க்கும் மேற்பட்ட படிகளை விற்பனை செய்து வந்தனர். அவை தீர்ந்துபோனவுடன், இருவரும் இன்னும் கூடுதலான தயாரிப்பில், உளவுத்துறைக்குத் தெரிந்தே ஈடுபட்டனர்.

ஸ்டாட்லர், ஹெசே இவர்களின் இரகசிய நடவடிக்கைகளைப்பற்றி ஒன்றுமே தெரிந்திராத பேர்லின் போலீஸ், இவர்கள்மீது நவ- நாசிச இசை வெளியீட்டிற்காக நடவடிக்கை எடுத்தபோது, இறுதியில் இவர்கள் ஒற்றர்கள் என்பது அம்பலமாயிற்று. அதற்கு முன்பு, உளவுத் துறையினர் ஸ்டாட்லரைப் போலீசிடமிருந்து பாதுகாக்க என்னென்ன செய்யமுடியுமோ அதனை, இவருடைய உளவுத்துறை மேலாளர் வீடு சோதனைக்கு உட்படப்போவது பற்றி எச்சரித்தல், எந்த ஆதாரமும் காட்டாத "புதிய" கணினி வழங்குதல், "நிலவறை அமைத்து" கடையின் சட்டவிரோதப் பொருள்களை மறைக்க ஆலோசனை வழங்கல் போன்ற, அத்தனையும் செய்தனர்:

ஸ்டாட்லெருக்கு எதிரான வழக்கு விசாரணையின்போது, பேர்லின் அரசாங்க வழக்கறிஞர் Jürgen Heinke, முடிவரையாகக் கூறினார்: "பிராண்டன்பேர்க் உளவுத்துறையின் உதவி இல்லாமல், நவ- நாசியினரின் வெள்ளை இன ஆரிய கிளர்ச்சியாளர்களால் குறுந்தகட்டை தயாரிப்பு செய்திருக்க முடியாது". தலைமை வகித்த நீதிபதி, Hans-Jürgen Brüning, தன்னுடைய தீர்ப்பில் "அதிகாரிகளுக்கு தெரிந்தே, அவர்களுடைய கண்காணிப்பில்தான்" இக்குற்றங்கள் நடத்தப்பட்டன" என்றும் உளவுத்துறை, "தொடக்கத்திலேயே இக்குற்றத்தைத் தடுத்து அழித்திருக்க முடியும்" என்றும் அறிவித்திருந்தார். தன்னுடைய தீர்ப்பில், பொதுவாக நீதிபதிகள் கோராத பாராளுமன்ற விசாரணை இதற்குத் தேவை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பிராண்டன்பேர்க்கிலிருந்து வந்துள்ள இந்த இரு வழக்குகளும், உளவுத்துறையுடன் ஒத்துழைக்கும் நபர்களுடைய வழிவகைகளையும், குணநலன்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. பிராண்டன்பேர்க்கில், இரகசிய ஒற்றர் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுத்தல் பற்றி எவ்விதமான வரையறைகளும் இல்லை. மாநில உள்துறை மந்திரி, பழைய தளபதியான Jörg Schönbohm (Christiam Democratic Union--CDU), இந்தச் செயல்களுக்கு ஆதரவு கொடுத்து, அம்பலப்படுத்தலை தவிர்க்க அதிக தக்க உதவிகள் கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்ததை வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

ஷோன்போமின் கருத்துக்கள் பற்றி எதிர்ப்புக்கள் தோன்றியவுடன், பிராண்டன்பேர்க் மாநில பிரதம மந்திரியான மத்தியாஸ் ப்ளாட்செக் (சமூக ஜனநாயக்க் கட்சி-SPD) , சர்ச்சைக்கு ஆளாகிய தன்னுடைய உள்துறை மந்திரியை, ஸ்டாட்லர் வழக்கில், வெளிப்படையாக ஆதரித்தே பேசினார். பிராண்டன்பேர்க்கிற்கு "வெளிப்படையாகச்" செயல்படக்கூடிய உளவுத்துறையைவிட "திறமையுடன் இயங்கும்" உளவுத்துறைதான் வேண்டும் என்றும் அவர் அறிவித்தார். இதேபோல் மாநிலத்தின், உளவுத்துறையை மேற்பார்வையிடும் மாநில பாராளுமன்றக் குழுவும் Szczepanski, Stadler வழக்குகளில் உளவுத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு ஆதரவே தந்துள்ளது. உண்மையில், "பியட்டோ" முகவரைப் பொறுத்தவரையில் பாராளுமன்றக் குழுவிற்கு தொடர்ச்சியான அறிக்கைகள் முதலிலிருந்தே உளவுத்துறையினர் அனுப்பி வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இது ஸ்டாட்லரோடு உளவுத்துறை ஒத்துழைப்பதற்கு அதிகாரபூர்வ ஒப்புதல் கொடுத்துள்ளது போல் ஆகிறது. பேர்லின் போலீஸ், பாராளுமன்றக் குழுவிடமும், உளவுத்துறையிடமும் தகவல் தெரிவிக்காமல், இனவெறி தூண்டும் குறுந்தகடுளை விநியோகித்தவர்கள் மீது நடவடிக்கைகளை எடுத்ததற்காக குறையே கூறியுள்ளது.

"இடதுசாரித் தீவிரவாத" அமைப்புக்களுடன் பிராண்டன்பேர்க் உளவுத்துறை கொண்டுள்ள தொடர்பு பற்றி சமீப ஆண்டுகளில் அதிக விஷயங்கள் அம்பலமாகவில்லை. உள்துறை மந்திரி, ஷோன்போம் இடதுசாரித் தீவிரத்தினால் நேரக்கூடிய அச்சுறுத்தல்பற்றி வலியுறுத்தக் கூடிய எந்த வாய்ப்பையும் நழுவ விட்டதில்லை என்பதைக் காணும்போது, உளவுத்துறை அந்த வட்டங்களிலும் இரகசிய ஒற்றர்களை நியமித்திருக்க வேண்டும் என்பது முற்றிலும் ஏற்கக் கூடிய கருத்தேயாகும். இடதுசாரி வட்டங்களில் உளவுத்துறை மேற்கொண்ட ஒற்றர் தேர்ந்து எடுக்கும் முயற்சிகள், வழக்கமாக, அதற்கென அணுகப்பட்டோர் அப்பணியை ஏற்க மறுத்து, அத்தகவலின் முழு விவரங்களையும் வெளியிட்ட பொழுது தெரிய வந்துள்ளன.

இந்த ஆண்டு மார்ச் மாதம், பிராண்டன்பேர்க்கிலிருந்து வெளிவரும் உள்ளூர்ச் செய்திப் பத்திரிகையான Märkischen Allgemeinen Zeitung, "உழைக்கும் குழு - அறிவும் முன்னேற்றமும்" என்ற தலைப்பில், "அரசியலில் ஈடுபாடு கொண்ட 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு" பகுதி நேர வேலை தருவதாக ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருந்தது. அதைப் படித்துவிட்டு, குறிப்பிட்ட நபருடன் தொடர்பு கொண்ட ஒரு மாணவர், "இடதுசாரி இயக்கம், உதாரணமாக அமைதி இயக்கம்" பற்றித் தகவல் கொடுத்தால், பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டார். சற்று கூடுதலான ஆராய்ச்சி, "உழைக்கும் குழு -அறிவும் முன்னேற்றமும்" என்ற தலைப்பு ஒரு கற்பனையே என்பது தெரியவந்தது. இதற்குச் சில மாதங்கள் முன்பும், பேர்லின் உளவுப்பணித்துறை மாணவர்களை, இடதுசாரி அணிகளில் வேவு பார்ப்பதற்காக "Team Base Research" என்ற மாற்றுப்பெயரில் தேர்ந்தெடுக்கவும் முயற்சி செய்திருந்தது.

இந்த தேர்ந்தெடுக்கும் முயற்சிகளின் விளைவுகள் என்னவாயின என்பது பற்றிய முடிவுகள் தெரியவில்லை. ஆனால், உளவுத்துறை நவ-நாசிக்கள் குழுக்களில் ஒற்றர்களை உபயோகித்தது போல், இடதுசாரி அமைப்புக்களிலும், குழுக்களிலும் ஒற்றர்களையும், இரகசியத் தகவல் கொடுப்போரையும் தேர்ந்தெடுத்து அனுப்பாமல் இருந்திருப்பர் என்று நினைத்தால் அது வெகுளித்தனத்தின் உச்சக்கட்டமாக இருக்கும்.

See Also :

ஒரு சர்வாதிகார அரசாங்கத்தின் வாதங்கள்: பிராண்டன்பேர்க் உளவுப்பணித்துறை உலக சோசலிச வலைத் தளத்தை அவதூறுக்கு உட்படுத்துகிறது

பிரான்டன்பேர்க் உளவுத்துறையினர் உலக சோசலிச வலைத் தளத்தின் மீது அவதூறு கூறுகின்றார்கள்: பிராங்பேர்ட்-ஓடர் இல் உண்மையில் நிகழ்ந்தது என்ன?

ஜேர்மனி : பிராண்டன்பர்க் உளவுப்பணித்துறை உலக சோசலிச வலைதளத்தை அவதூறுக்கு உட்படுத்துகிறது

Top of page