World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா War on terror methods for Miami anti-globalization protests பூகோளமயமாக்கலுக்கு எதிரான மியாமி ஆர்ப்பாட்டக்காரர்களுக்காக பயங்கரவாத எதிர்ப்பு போர் முறையில் நடவடிக்கை By Patrick Martin அமெரிக்க நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை உருவாக்குவதற்காக (Free Trade Agreement of the Americas -FTAA), மேற்குப் பாகத்திலிருந்து வரும் வர்த்தக அமைச்சர்களின் கூட்டத்திற்கு எதிராக நடைபெறவிருக்கும் பூகோளமயமாக்கலுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் புளோரிடா, மியாமியில் திரளுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 17-21-ந்தேதி வரையில் 34 நாடுகளைச் சேர்ந்த - கியூபா தவிர இப்பாதி பூகோளத்தின்- அதிகாரிகள் சந்திக்கவிருக்கின்றனர் புஷ் நிர்வாகமும் மியாமி உள்ளூர் அதிகாரிகளும் பூகோளமயமாக்கல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை அவர்கள் போரில் ஈடுபட்டிருப்பதாக கருதி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான போலீசார் மியாமி பகுதியில் அணிதிரட்டப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கு 8.5 மில்லியன் டாலர்கள் செலவிடப்படும். ஈராக்கை பிடித்துக் கொண்டுள்ள அமெரிக்கப் படைகளுக்காக சென்ற வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்ட 87 பில்லியன் டாலர்கள் துணை ஒதுக்கீடுகளில் இந்த செலவும் உள்ளடக்கப்பட்டது. மியாமி-டேட் கவுன்டி மற்றும் அருகாமையிலிருக்கும் நகரங்களைச் சார்ந்த போலீசாருக்கு ஓவர்டைம் அலவன்சுகள் வழங்குவதற்காக, ஒதுக்கப்பட்ட பணத்தில் பெரும் பகுதி சென்று விடும். மியாமி ஹோட்டல் இன்டர் கான்டினென்டலில் வர்த்தக அமைச்சர்கள் மாநாடு நடைபெறவிருக்கிறது. நகரின் உள் புறம் 50 சதுர வடிவிலான க்ண்கானிப்பு பகுதிகளில் மொத்தம் 2,500 போலீசார் நிற்க வைக்கப்படுவர். போலீசார் மோட்டார் சைக்கிள்கள், கலவர தற்காப்பு தலைக்கவசங்கள், தண்ணீரை வேகமாக இறைத்துக் கூட்டத்தைக் கலைக்கும் கருவிகள் மற்றும் எட்டடி உயர பாதுகாப்பு வளையங்கள் ஆகியவற்றை போலீசார் குவித்துவைத்திருக்கின்றனர். லிபேர்ட்டி சிட்டி பகுதியில் தற்காலிக சிறை அமைக்கப்பட்டிருக்கிறது. ஏழ்மை நிறைந்த இந்தப் பகுதியில்தான் 20 ஆண்டுகளுக்கு முன் போலீஸ் கொடுங்கோன்மையை எதிர்த்து கலவரம் நடைபெற்றது. மியாமி நகர மையப் பகுதி ஏறத்தாழ முற்றுகையிட்டது போன்ற நிலையில் இருக்கும். ஏற்கனவே பல வர்த்தக நிறுவனங்கள் ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு முடிவெடுத்து விட்டன. மத்திய நீதிமன்றங்களும் ஒருவாரத்திற்கு மூடப்படும் மற்றும் மியாமி - டேட் சர்க்கியூட் நீதிமன்றத்தில் நடைபெற வேண்டிய குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. மியாமி டேட் கல்லூரி உள்பட பல பள்ளிக்கூடங்கள் மூடப்படும், அல்லது வகுப்புக்கள் தள்ளிவைக்கப்படும் மற்றும் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் அப்புறப்படுத்தப் பட்டுவிட்டன. கண்டன பேரணிகளுக்கு ஏற்பாடு செய்தவர்கள் ஏற்கனவே போலீஸ் கெடுபிடி தொடர்பாக புகார் கூறியிருக்கின்றனர். நவம்பர் 11-ந்தேதியன்று பூகோளமய எதிப்பு செயல்பாட்டாளர்கள் மூன்று பேர் கொள்ளையடித்தார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஒரு கிடங்கிற்கு நடுவில் அவர்கள் நடந்து சென்றார்கள் அங்குதான் காகித பொம்மைகள், இதர ஆர்ப்பாட்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த மூன்று பேரும் தங்கள் தோளில் பைகளை போட்டுக்கொண்டு போர்வீரர்கள் தினத்தில் நடந்து சென்றதுதான் அவர்கள் செய்த "குற்றம்" என்று, எதிர்ப்பு ஏற்பாட்டாளர் சார்பில் பேசிய பேச்சாளர் கூறினார். நவம்பர் 20-ந்தேதி வியாழக் கிழமை மிகப்பெரும் அளவிற்கான ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. AFL-CIO தொழிற்சங்கங்கள் இந்த பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளன. இந்த வாரக் கடைசியில் ஆர்ப்பாட்ட இயக்கம் தொடங்க இருக்கின்றது. அப்போது வடக்கு, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவை சேர்ப்பதற்கு தற்போது நடைமுறையில் உள்ள NAFTA கட்டமைப்பை விரிவுபடுத்துதற்கு விவாதிக்க உள்ள அவர்களின் கூட்டத்தை அமைச்சர்கள் ஆரம்பிப்பதற்கு முன்னர், ஒவ்வொரு நாளும் சிறு நடவடிக்கைகளுக்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது. போலீஸ் தலைமை அதிகாரி ஜோன் திமோனியால் போலீஸ் அணிகளோடு இணைக்கப்பட்டு ஊடக நிருபர்கள் பணியாற்றுவதற்கு எடுக்கப்பட்டிருக்கும் முடிவு ஒடுக்குமுறைக்கான மிகவும் தீக்குறியான தயாரிப்புக்களுள் ஒன்றாகும். இவற்றுள், நகரும் தாக்குதல் படைப்பிரிவாக மிதிவண்டி அதிரடி தாக்குதல் படைப்பிரிவுகளும் அடங்கியிருக்கும், அதேபோல கடல் எல்லைக் காவல் பிரிவுகளும் பயன்படுத்தப்படும் மற்றும் மாநாடு நடக்கும் இண்டர்-கான்டினென்டல் ஹோட்டல் பகுதியைச் சுற்றி தொடர்ச்சியான போலீஸ் ரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதும் இவற்றுள் உள்ளடங்குவனவாகும். நிருபர்களுக்கு தலை கவசமும், மூக்கு கவசமும் தேவைப்படும் மற்றும் தங்களின் சொந்த பாதுகாப்பிற்கு அவர்களே பொறுப்பாவர். ஒவ்வொரு நிருபரும் தாங்கள் வெளியிட இருகின்ற செய்தி தொடர்பான ஒரு படிவத்தில் கையெழுத்திட வேண்டும் மற்றும் போலீஸ் நடவடிக்கைகளின் தந்திரோபாய விபரங்கள் பற்றி, ஒரு குறிப்பிட்ட யூனிட்டில் எத்தனை போலீசார் இருக்கின்றனர் அல்லது ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையில் எத்தனை யூனிட்டுக்கள் பங்கெடுக்கின்றன என்பது பற்றி செய்தி அளிப்பதில்லை என்பதற்கு உட்பட வேண்டும். திமோனி, அசோசியேட்டட் பிரஸ், NBC, ராய்டர்ஸ் மியாமி ஹெரால்ட் CNN, ெபாக்ஸ் மற்றும் பல தொலைக்காட்சி நிலையங்களுக்கு தங்கள் நிருபர்களை போலீஸ் பிரிவுகளோடு இணைந்து பணியாற்றுவதற்கு அனுப்புமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். அசோசியடட் பிரஸ் மட்டும் இதுவரை அந்த யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் போலீஸ் பிரிவுகளில் இணைந்து பணியாற்றுகின்ற நிருபர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து இறுதி நகல் அறிக்கை வெளியிடப்படவில்லை. இப்படி மியாமியில் "இணைந்த" பத்திரிக்கையாளர்கள் உள்நாட்டு போலீஸ் முன்அணிக்கு கொண்டு வரப்படல், போருக்கு ஆதரவான செய்திகள் எந்த விதமான இடையூறும் இல்லாமல் கிடைப்பதற்கு அமெரிக்க ராணுவத்துடன் ஊடக நிருபர்கள் இணைக்கப்பட்டு சென்றபொழுது, ஈராக் படையெடுப்பின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட ஊடக சூழ்ச்சிக்கையாளல்களை நினைவு படுத்துவதாக அமைந்திருக்கின்றது. இராணுவம் மற்றும் ஒரு போலீஸ் கமிஷனராக இருந்த தனது சொந்த காவல்துறை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஏற்பாட்டை செய்திருப்பதாக திமோனி தெரிவித்தார். பிளடெல்பியா பகுதியில் குடியரசுக் கட்சி தேசிய மாநாடு 2000-ம் ஆண்டு நடைபெற்றபோது குடியரசுக் கட்சியின் முன்மொழிவு வேட்பாளர் ஜோர்ஜ்.டபிள்யு.புஷ்-ன் வலதுசாரி கொள்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது திமோனி கொடூரமான அடக்கு முறைகளை மேற்கொண்டார். அவர் போலீஸ் பிரிவுகளோடு இணைந்து பணியாற்றுவதன் மூலம் கிடைக்கின்ற அனுகூலங்களை நிர்வாகத்தின் நிலைப்பாட்டிலிருந்து எடுத்துரைத்தார். "இது கேமரா இயக்குபவர் அல்லது செய்தியாளர் ஒரு சம்பவம் நடக்கும் போது காட்டுகின்ற விஷயம் அல்ல," அவர் AP- இடம் கூறினார். "அது ஒரு நொடிப்பொழுதிலான படப்பிடிப்பு அல்ல. நீங்கள் பெறுவது ஒட்டுமொத்தமும் முன்னரும், தற்பொழுதும், பிறகுமாகும். உங்களுக்கு இதில் தெளிவு பிறக்கும் மற்றும் நல்ல விஷயம் கிடைக்கும். இதன் மூலம் நீண்டகால அடிப்படையில் பொதுவாக நாம் வெற்றி பெற முடியும் என்று நான் நினைக்கிறேன். நவம்பர் 10-ந்தேதியன்று AP இணைந்து செல்லும் திட்டம் சம்மந்தமாக தகவல் தந்திருந்தும், சட்டபூர்வமாக உள்நாட்டில் நடைபெறும் ஒரு அரசியல் கண்டனத்தைப்பற்றி சட்டபூர்வமாக செய்தி சேகரிப்பதற்கு இப்படி இராணுவ பாணியில் மேற்பார்வையிடுவதைப்பற்றி எந்தவித எதிர்ப்புத் தெரிவிக்காவிட்டாலும், இது தொடர்பாக தேசிய ஊடகங்களில் எந்தவிதமான கவனமும் எடுக்கப்படவில்லை. மியாமி ஹெரால்ட் நிர்வாக ஆசிரியர் டாம் பிட்லர் கொள்கை அடிப்படையில் இணைந்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. "இந்த நடைமுறை, "எந்த வகையிலும் சட்டம் அமல்படுத்துபவர்களின் கூட்டாளிகளாக எம்மை ஆக்காது" என்று அவர் AP- யிடம் கூறினார். ''கூட்டாளிகளாக இருப்பதைக்காட்டிலும், நாம் அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பவர்களாக இருக்கின்றோம்'' என்று கருத்து தெரிவித்தார். செய்தியாளர்களை இணைத்துச்செல்வதற்கான திட்டம் போலவே, இந்த மியாமி பகுதியில் போலீசாருக்கு ஆகும் செலவுகளை ஈராக் போர்ச்செலவு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்வதற்கான முடிவும் பெரும் அடையாள முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. புஷ் நிர்வாகம் உள் நாட்டில் எழும் அதிருப்திகளை ஒடுக்குவதை, அதன் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" எனும் பூகோள நடவடிக்கையின் பகுதியாக பார்க்கிறது, அதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளின் எந்த எதிப்பாளருக்கும் மற்றும் அனைத்து எதிர்ப்பாளர்களுக்கும் எதிராக இராணுவ வன்முறையைப் பயன்படுத்துவதற்கு உரிமையை எடுத்துக்கொள்கிறது. |