World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

US extends its military influence in Eastern Europe

கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்கா இராணுவ செல்வாக்கை விரிவு படுத்துகிறது

By Niall Green
11 November 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக் மீது போர் தொடுப்பதற்கான முன்னேற்பாடுகளை அமெரிக்கா செய்து கொண்டிருந்த நேரத்தில் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் டோனால்ட் ரம்ஸ்பெல்ட் ''புதிய'' ஐரோப்பா என்று முன்னாள் ஸ்ராலினிச ஆட்சிகள் இருந்த கிழக்கு ஐரோப்பா நாடுகளையும், ''பழைய'' ஐரோப்பாவாக பிரான்சையும் மற்றும் ஜேர்மனியையும் அடையாளம் காட்டினார் .

இந்த வேறுபாடுகளின் காரணம் பிரான்சும், ஜேர்மனியும் ஈராக் போரில் அமெரிக்க நிர்வாகத்திற்கு எரிச்சல் ஊட்டுகின்ற வகையில் நடந்து கொண்டன என்பதாகும். தற்போது அமெரிக்கா தனது பொதுவான இராணுவ உத்தியை மாற்றிக் கொண்டு வருகின்றதுடன், அது தனது முன்னாள் ஐரோப்பிய நட்பு நாடுகளை சார்ந்திருக்கும் நிலையில் இருந்து மாறி புதிய இராணுவ அணிகளை உருவாக்க முயன்று வருகின்றது என்பதை கோடிட்டு காட்டும் வகையில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் அப்போது கருத்து தெரிவித்தார்.

அதற்கு பின்னர் Jane's Intelligence Digest குறிப்பிட்டிருந்ததைப் போல் அமெரிக்காவின் இராணுவ உத்தியில் அடைப்படை மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. புஷ் நிர்வாகம் ''புதிய'' ஐரோப்பாவில், தான் அதிக அளவில் நம்புகின்ற நட்பு நாடுகளை தேடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் அமெரிக்காவின் ஐரோப்பிய இராணுவத் தளங்கள் பல்வேறு நாடுகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இது 1945 க்கு பின் அமெரிக்காவின் வெளிநாட்டு இராணுவத் தளங்களை சீரமைப்பதில் மிகப்பெரிய மாற்றமாக இருக்கிறது என்று இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சோவியத் யூனியனின் பொறிவிற்கு பின்னர் கிழக்கு ஐரோப்பாவிலும், பால்கன் பகுதியிலும் ரஷ்யாவிற்கு பதிலாக தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா விரும்புகிறது. அத்துடன் ஐரோப்பிய யூனியனில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக முன்னாள் சோவியத் ஒன்றிய சார்பு நாடுகளை நேட்டோ அமைப்பில் இணைவதற்கு அமெரிக்கா ஊக்குவிக்கின்றது. மேலும் இருதரப்பு பொருளாதார மற்றும் பாதுகாப்பு உடன்படிக்கைகளை பழைய சோவியத் ஒன்றிய நாடுகளுடன் அமெரிக்காகவும் உருவாக்கிற்று. இதில் ஒரு அம்சம் தான் போலந்திலிருந்து ரூமேனியா வரை பழைய வார்சா ஒப்பந்த இராணுவத் தளங்களுக்குப் பதிலாக புதிய அமெரிக்க இராணுவத் தளங்களை உருவாக்குகின்ற திட்டமாகும். இந்த தளங்கள் மிகச்சிறியவை மற்றும் குளிர்யுத்தக் காலத்தில் அமெரிக்கா வைத்திருந்த இராணுவத் தளங்களோடு ஒப்பிடும்போது, இப்போது உருவாக்கப்பட்டு வரும் தளங்கள் ''சிறிய குட்டைகள்'' என்று பென்டகன் வர்ணித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும் மத்திய ஆசியாவிலும், மத்திய கிழக்கு பிராந்தியங்களிலும் அமெரிக்கா தனது மூலோபாய பூகோள ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இத்தகைய தளங்களை அமெரிக்கா உருவாக்கிக் கொண்டு வருகின்றது.

ஐரோப்பாவில் பணியாற்றிவரும் அமெரிக்க முன்னணி கடற்படை தளபதியான ஜெனரல் எல். ஜோன்ஸ் ஏப்ரலில் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்: "நாம் இன்னொரு ராம்ஸ்டெய்ன் (Ramstein) (அமெரிக்காவின் மிகப் பெரிய ஜேர்மன் விமானத் தளம்) அல்லது மூலோபாய ரீதியான இன்னொரு பெரிய இராணுவத் தளத்தை, குடும்பங்கள் மற்றும் பாடசாலைகள் மற்றும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய அமெரிக்க சிறு நகர் ஒன்றை வரவிருக்கும் இடத்தில் கட்டுவதைப் பற்றிப் பேசுகிறோம் என்று நான் நினைக்கவில்லை. நாம் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் என்றால், அளவிடக் கூடிய வகையில் தளங்களின் குடும்பத்தை அபிவிருத்தி செய்கிறோம். அது இடர் நிறைந்ததிலிருந்து இதமானதாக இருக்க, வசதியானதாக இருக்க உங்களுக்கு தேவைப்படும் விதத்தில், மிகவும் திறமானதாகவும் சிக்கனமானதாகவும் கட்டப்படுவதாய் இருக்கும்'' என்று கூறினார்.

அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை மிகப் பிரம்மாண்டமான இராணுவ போக்குவரத்து விமானங்களுக்காக பெருமளவில் முதலீடு செய்திருக்கிறது. எதிர்வரும் போர்களுக்காக உலகம் முழுவதிலும் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு படைப்பிரிவுகளையும், தளவாடங்களையும் அனுப்புகின்ற வகையில் படைகளையும் தளவாடங்களையும் ஏற்றிச்செல்வதற்கும், போட்டி அரசாங்கங்கள் மற்றும் பொதுமக்களது எதிர்ப்பை தவிர்ப்பதற்கும் இந்த பெரிய போக்குவரத்து விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது பென்டகனில் உள்ள இராணுவக் கொள்கை வகுப்பாளர்களால் 1990 களில் ஏற்படுத்தப்பட்டது. சோவியத் ஒன்றியம் சிதைந்த பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியம் இதுவரை அடியெடுத்து வைக்காத பகுதிகள் அதன் செல்வாக்கின் கீழ் வரத் தொடங்கின.

ஜேர்மனியில் இயங்கிக் கொண்டுள்ள 16 பெரிய இராணுவ தளங்கள் மூடப்பட்டு அங்கிருந்து இராணுவத்தினர் வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர். அண்மை ஆண்டுகளில் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் ஜேர்மனியில் பயிற்சி தருவதற்கு சுற்றுப் புறச்சூழல் மற்றும் சட்டப்பூர்வமான கட்டுப்பாடுகள் இருப்பதாக புகார் கூறியுள்ளனர். எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் புதிய பகுதிகளில் செயல்படுவதற்கும் பிரச்சனைக்குரிய முக்கியமான ஐரோப்பிய நாடுகளோடு உரசல்களை மோதலை தவிர்ப்பதற்கும் தற்போது அமெரிக்கப் படைகள் கிழக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. ''எந்தெந்த நாடுகளில் அமெரிக்கப் படைகளுக்கு தேவை அதிகம் இருக்கிறதோ, எந்தெந்த நாடுகளில் அமெரிக்காவிற்கு எதிர்ப்பு குறைவாக உள்ளதோ, அந்த நாடுகளில் தற்போது அமெரிக்கப் படைகள் தங்களது புதிய தளங்களை அமைத்துக் கொண்டுள்ளன. மக்களது எதிர்ப்பு அதிகம் இருக்கும் பகுதிகளில் பயிற்சி அதிகம் செய்ய முடியாது என்பதால் இப்படி அமெரிக்கப் படைகள் புதிய தளங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாக'' புரூக்கின்ஸ் இன்ஸ்ட்டியூட் (Brookings Institute) பாதுகாப்புத் துறை ஆய்வாளர் பீட்டர் சிங்கர் பிரியூரோப் (Radio Free Europe) வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

புதிதாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க இராணுவத் தளங்கள் அமைக்கப்படுவதை நீண்டகால அடிப்படையில் உள்ளூர் மக்களது ஆதரவை நிலைநாட்டிக் கொள்ள முடியாது. ஈராக் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ''புதிய'' ஐரோப்பாவிலும் மேற்கு ஐரோப்பாவைப் போன்று பரவலான எதிர்ப்பு நிலவுகிறது. அதுமட்டுமல்ல முன்னாள் யூகோஸ்லாவியா பகுதிகளில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கப்படைகள் விபச்சாரம் மற்றும் பல கிரிமினல் குற்றங்களைச் செய்து வருகின்றன. இப்பொழுது முன்னாள் ஸ்ராலினிஸ்டுக்களும், அரைக் குண்டர்களும் பழைய சோவியத் நாடுகளின் ஆளும் தட்டுக்களுடன் செயல்பட்டு வருவதால் புஷ் நிர்வாகம் அவர்களை தனது இராணுவமய திட்டங்களுக்காக பயன்படுத்திக்கொள்ள முன்வந்திருக்கின்றது.

* நேட்டோ அமைப்பிலுள்ள போலந்து ஈராக் மீதான ஆக்கிரமிப்பை மிகத் தீவிரமாக ஆதரித்த, புஷ்ஷின் கூட்டாளி நாடாக இருந்தது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர்களாக சேர இருக்கின்ற 10 நாடுகளில் மிகப்பெரிய நாடாக போலந்து இருக்கின்றது. ஈராக் மீது அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்வதை ஜேர்மனியும், பிரான்சும் எதிர்ப்பு தெரிவித்த நேரத்தில் போலந்து உறுதியாக அமெரிக்காவை ஆதரித்து நின்றது. அமெரிக்கா ஈராக் மீது ஆக்கிரமித்த போது போலந்து ஈராக்கிற்கு தனது சிறப்புப் படைகளின் ஒரு படைப்பிரிவை அமெரிக்காவிற்கு உதவுவதற்காக அனுப்பியது. இதற்கு பதிலாக அமெரிக்கா போலந்தில் இராணுவத் தளம் அமைத்து தனது 10,000 இராணுவத்தினரை போலந்தில் இடம் பெறச்செய்வதன் மூலம் நிதி உதவிகளை போலந்து பெற்றுக் கொள்ளும். இது சம்மந்தமான செயல் திட்டம் விரைவில் இறுதியாக்கப்பட இருக்கிறது. மேற்கு போலந்தில் உள்ள கிரசினி (Kreziny) விமானத்தளத்தின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா தற்போது மில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டு வருகிறது.

* புதிய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் ஒன்றான ஹங்கேரியுடன் தனது இரு தரப்பை உறவை வலுப்படுத்திக் கொள்ள அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகின்றது. போலந்தைப் போன்று ஹங்கேரியும் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு மற்றும் ''பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்'' அமெரிக்காவை தீவிரமாக ஆதரித்து வருகின்றது. 1995 முதல் பால்கன் பகுதியில் பணியாற்றி வரும் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுக்கு இராணுவ கேந்திர உதவியளிக்கின்ற நிலையமாக ஹங்கேரியில் உள்ள டாசா விமானத்தளம் (Taszar air base) செயல்பட்டு வருகின்றது. ஈராக் மீதான ஆக்கிரமிப்பிற்கு முந்தைய மாதங்களில், ஈராக்கிலிருந்து வெளியேறி வெளிநாடுளிலிருந்த, அஹமது சலாபியுடன் சம்மந்தப்பட்டிருந்த கூலிப்படையினருக்கு பயிற்சியளிப்பதற்கு இந்த விமானத்தளத்தை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது.

*Jane's Intelligence Digest தந்திருகின்ற தகவலின்படி இந்த ஆண்டு தொடக்கத்தில் டொனால்ட் ரம்ஸ்பீல்ட்டின் அல்பேனியாவிற்கான பயனத்தின் பின்பு, அல்பேனியாவில் நிரந்தரமாக அமெரிக்கா தனது இராணுவத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளது. பால்கன் பகுதியில் அமெரிக்காவின் முக்கியமான நட்பு நாடாக அல்பேனியா செயல்பட்டு வருவதுடன், கொசோவோ விடுதலை இராணுவத்திற்கு ஆயுதங்களையும், நிதி உதவிகளையும் வழங்குவதில் அல்பேனியா முன்னணியில் நின்றது. கொசோவோ விடுதலை இராணுவமானது அமெரிக்காவின் ஆதரவு பெற்ற அமைப்பாக இருந்ததுடன், சேர்பியா மீது 1999 ம் ஆண்டு நேட்டோ தாக்குதல் நடத்திய போது, சேர்பியா படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு இந்த இராணுவத்தை அமெரிக்கா ஊக்குவித்தது.

* பல்கேரியா அடுத்த ஆண்டு நேட்டோ உறுப்பு நாடாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. சோவியத் யுகம் முடிந்த பின்னர், பல்கேரியாவில் அமெரிக்க ஆதரவோடு விரிவான அடிப்படையில் இராணுவ கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் திருத்தியமைக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்க விமானப் படையிலிருந்து ஹூக் ரக ஹெலிகாப்டர்களை (Huey helicopters) வாங்குவதற்கு பல்கேரியா 60 மில்லியன் டாலர்களுக்கான பேரத்தை செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்க இராணுவத் தளவாடங்களுக்கு பிரதான பிராந்திய பழுதுபார்க்கும் நிலையமாக செயல்படுவதற்கு அமெரிக்கா, பல்கேரிய நாட்டு பாதுகாப்புத்துறை ஒப்பந்தக்காரர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. தென்கிழக்கு ஐரோப்பாவில் ஜனநாயக வளர்ச்சி தகவல் பிராந்திய மையத்தை (Regional Information Center for Democratic Development in South-East Europe) சோபியாவில் (Sofia) அமெரிக்கா அமைத்திருக்கின்றது. இந்த நிலையமானது, இந்த மண்டலத்தில் C.I.A மற்றும் நேட்டோவின் உளவறியும் நடவடிக்கைகளுக்கு ஒரு கவசமாக செயல்பட்டு வருகிறது என்பது விரிவாக அனைவருக்கும் தெரியும்.

பல்கேரியாவின் சாராபொவோ (Sarafovo) விமான நிலையத்தை அமெரிக்கா தனது KC-135 ரக போர் விமானங்களுக்கு எரிபொருளை நிரப்ப, தனது கட்டளை மூலம் பயன்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் ஈராக் மீது போர் தொடுக்கப்பட்ட நேரத்தில் அருகாமையில் இருக்கும் பல்கேரிய துறைமுகத்தையும் அமெரிக்கா இராணுவம் பயன்படுத்துக் கொண்டது. பல்கேரியாவில் நிரந்தரமான இராணுவத் தளத்தை அமைப்பதற்குரிய சாத்தியக் கூறுகள் குறித்து பல்கேரியா மற்றும் அமெரிக்க அரசாங்கங்களுக்கு இடையே தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் ஆப்கனிஸ்தானில் தற்போது பல்கேரியாவின் சிறிய படைப்பிரிவு ஒன்று பணியாற்றி வருகின்றது.

* 1997 ல் கிளிண்டன் ருமேனியாவுடன் மூலோபாய உறவு பற்றி கொள்கைப் பிரகடனம் செய்த பின்னர் பால்கன் பகுதியில் ருமேனியா அமெரிக்காவின் பிரதான நட்பு நாடாக செயல்பட்டு வருகின்றது. நேட்டோவின் சமாதான உடன்படிக்கை திட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட முதல் நாடு ருமேனியாவாகும். அந்த திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பழைய சோவியத் ஒன்றிய நட்பு நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு வழிவகை செய்யப்படுகின்றது. அமெரிக்கா ருமேனியாவில் மிக்கையில் கோகல்நிசோ விமானத்தளத்தையும் (Mikhail Kogalniceau) கருங்கடலில் இருக்கும் கொன்ஸ்ரான்சா (Konstanca) துறைமுகத்தில் கடற்படை தளத்தையும் அமைக்க திட்டமிட்டிருக்கின்றது. ஈராக் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட நேரத்தில் இந்த துறைமுகம் அமெரிக்க இராணுவத்தினால் பயன்படுத்தப்பட்டது. அத்தகைய நடவடிக்கை குறித்து ருமேனியா பிரதமர் அட்ரின் நாஸ்ராஸ் (Adrian Nastase) மற்றும் அமெரிக்க இராணுவ ஜெனரல் மேயர் (Myers) மற்றும் விமானப்படை அதிகாரியான கிறகரி மாட்டின் ஆகியோர் (Gregory Martin) பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மத்திய கிழக்கு மற்றும் காக்கஸஸ் பகுதியில் உள்ள பிராந்தியங்களுக்கு ருமேனியா ''சிறப்பான உந்துதளமாக பயன்படும்'' என்று ருமேனிய பிரதமர் அமெரிக்காவிற்கு உறுதியளித்திருக்கிறார்.

பல்கேரியாவும் ருமேனியாவும் 2007 ம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக சேர முடியும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் ஆவதற்கு உரிய முன்னேற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவிற்கு இந்த இரு நாடுகளும் முழு ஆதரவு தந்ததை பிரஞ்சு ஜனாதிபதி சிராக் கண்டித்தார். குறிப்பாக இந்த இரண்டு நாடுகளும் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் நிலைப்பாட்டை மறுக்கின்ற வகையில் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருவதால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்குரிய அவர்களது கோரிக்கைக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டார்கள் என்று சிராக் கண்டித்தார். ஆனால் பல்கேரியாவிலும், ருமேனியாவிலும் ஆளுகின்ற குழுக்கள் தற்காலிக பிரான்சின் கோபத்திற்கு மாற்றாக பென்டகன் வழங்க இருக்கும் எதிர்கால லாபம் தரும் ஒப்பந்தத்தை ஆறுதலாக எடுத்துக் கொள்ளலாம் என்று கருதின. வாஷிங்டன் D/C யில் செயல்பட்டுவரும் மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தை சேர்ந்த ஜேனஸ் லுகாஸ்கி அமெரிக்கா இவ்விரு நாடுகளிலும் அமைக்கவிருக்கின்ற நிரந்தர இராணுவத் தளங்கள் பற்றி விளக்கம் தந்தார். ''இவ்விரு நாடுகளும் ஈராக் போரின் போதும் ஆப்கானிஸ்தான் சீரமைப்பு போன்ற இதர பிரச்சனைகளிலும் பொதுவாக பயங்கரவாதத்திற்கு எதிரான இயக்கத்திலும் நல்ல நட்பு நடுகளாக செயல்பட்டு வந்திருக்கின்றன. எனவே இதற்கு பரிசளிக்கின்ற வகையில் இந்த நிரந்தர இராணுவத் தளங்கள் அமைக்கப்படுகின்றன'' என்று அவர் விளக்கம் தந்தார்.

ஈராக் போரில் ஒத்துழைத்ததற்கு வெகுமதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக, அதற்கு மேலாக இந்த நோக்கங்கள் செல்கின்றன. அமெரிக்கா தனது ஐரோப்பிய இராணுவ கட்டமைப்புக்களை பால்கன் தீபகற்பத்தை சுற்றி அமைப்பதற்கு திட்டமிட்டு வருகிறது. ஏனென்றால் உலகில் பிரதான எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் அருகாமையில் உள்ள காஸ்பியன் பகுதிகளில் கிடைக்கின்றன. யுகோஸ்லாவியா 1990 களின் தொடக்கத்தில் சிதைவதற்கு அமெரிக்கா ஊக்குவித்ததன் பின்னர் சேர்பியாவை நேட்டோ படைகள் விமானத்தாக்குதல் நடத்தின. தற்போது அமெரிக்க துருப்புக்கள் அந்தப் பகுதியில் அமையும் புதிய தளங்களுக்கு அனுப்பப்படுகின்றன. தென் மேற்கு ஐரோப்பாவில் அமெரிக்கா ஏகாதிபத்தியம் தன்னை ஒரு மேலாதிக்க வல்லரசாக நிலைநாட்ட முயன்று வருகின்றது. அங்கிருந்து அமெரிக்க இராணுவம் மத்திய கிழக்கிற்கும் காஸ்பியன் படுகை பகுதிக்கும் சுற்றியுள்ள புதிய அமெரிக்கத் தளங்கள் மூலம் எளிதாக சென்று விட முடியும். தற்போது ''பயங்கரவாதத்திற்கு எதிரான போர்'' என்ற போர்வையில் கத்தாரில் இருந்து கிர்குஸ்தான் வரை அமெரிக்கா தனது இராணுவத் தளங்களை அமைத்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியம் இந்தப் பிராந்தியத்தில் கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் பொருளாதார மேலாதிக்கத்தை நிலைநாட்டி வந்தாலும் அதையும் மீறி அமெரிக்கா தனது செல்வாக்கை விரிவுபடுத்த முடிந்திருக்கின்றது. மற்றும் தனது இராணுவத்தை இடம் பெறச் செய்யவும் முடிந்திருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கு எல்லையில் உள்ள மிகப்பெரும்பாலான நாடுகள் அடுத்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர்களாக சேரவிருக்கின்றன. அல்லது அதற்கு பின்னர் சேர முடியும் என்று நம்புகின்றன. இந்த நாடுகளின் நாணயங்கள் பெரும்பாலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ நாணயத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் இவை ஜேர்மன் மார்க் நாணயத்தோடு இணைக்கப்பட்டிருந்தன. புதிதாக ஐரோப்பிய யூனியனில் சேரவிருக்கும் நாடுகளின் பொதுவான சர்வதேச வர்த்தகம் பாதிக்கு மேல் ஐரோப்பிய யூனியன் நாடுகளோடுதான் ஏற்கெனவே நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. அமெரிக்காவுடன் நேரடி வர்த்தகம் மிக சொற்ப அளவிற்குத்தான் நடைபெற்று வருகின்றன. எடுத்துக்காட்டாக போலந்து தனது ஏற்றுமதிகளில் 70 சதவீதத்தை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்புகிறது. இறக்குமதிகளில் 61 சதவீதத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம்தான் பெற்று வருகிறது. அமெரிக்காவுடன் போலந்தின் நேரடி ஏற்றுமதி 2.4 சதவீதமும், இறக்குமதி 3.4 சதவீதமும் தான் உள்ளது.

தற்போது இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது இராணுவ ஒப்பந்தங்களை புதிதாக உருவாக்கிக் கொண்டிருப்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார மேலாதிக்கத்தை சமநிலைப்படுத்துகின்ற ஒரு முயற்சிதான். அமெரிக்க இராணுவமயத்திற்கு கீழ்படிந்து நடப்பதன் மூலம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அரசாங்கங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள முடியும் மற்றும் தங்ளுக்கு சாதகமாக அமெரிக்காவின் ஆதரவை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்புகின்றன.

வாஷிங்டனும், ஐரோப்பிய நாடுகளை பிரித்து வைக்கும் தனது இருதரப்பு ஒப்பந்தங்கள் அச்சுறுத்தல்கள் மற்றும் லஞ்ச ஊழல்கள் ஆகியவற்றின் மூலம் தனது உடனடி வெளியுறவு கொள்கையின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று நம்புகிறது. ஐரோப்பிய ஒன்றியம் தனியாக தனக்கு என்று பாதுகாப்பு படையை உருவாக்கும் திட்டத்தை முடக்குவதற்காகத்தான் அமெரிக்கா இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறது.

அண்மையில் அமெரிக்க பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் போல் உல்பொவிச் நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள ஒரு பேட்டியில், அமெரிக்கா புதிதாக உருவாக்கி வருகின்ற இராணுவத் தளங்கள் அவற்றின் உண்மையான இராணுவ முக்கியத்துவத்தை விட அரசியல் அடிப்படையில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை சம்மந்தப்பட்டவர்களுக்கு பிரகடனப் படுத்துவதாகவே அமைந்திருக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

தற்போது ஜேர்மனியில் உள்ள தளங்களில் இருக்கும் 68,000 அமெரிக்க ஆயுதப்படைகள் புதிய கிழக்கு ஐரோப்பிய இராணுவத் தளங்களுக்கு மாற்றப்படுகின்றன. இப்படி மாற்றப்படுவதை ஜேர்மன் அரசாங்கத்திற்கும் ஒரு எச்சரிக்கை செய்கின்ற சமிக்கையாக அமையும் என்று புஷ் நிர்வாகம் நம்புகிறது. ஏனெனில் ஈராக் மீது அமெரிக்கா ஆக்கிரமிப்பு நடத்துவதற்கு முன்னர் ஜேர்மன் அரசாங்கம் ஐ.நா வில் அமெரிக்காவை கண்டனம் செய்தது. அதே தவறை மீண்டும் செய்யக்கூடாது என்று எச்சரிப்பதற்காகவே இவ்வாறு அமெரிக்க துருப்புக்கள் புதிய நாடுகளின் புதிய தளங்களுக்கு நகர்த்தப்படுகின்றன. அதே போன்று துருக்கி அரசாங்கம் தனது எல்லையில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் ஈராக் மீது தாக்குதல் நடத்த அனுமதி வழங்க மறுத்துவிட்டதால் தற்போது துருக்கி விமானத்தளத்தில் இருக்கும் 3,000 அமெரிக்கப் படைகளில் 500 அளவிற்கு குறைக்கப்பட்டிருகின்றன. இதில் பொதுவாக அமெரிக்கா தனது அரசியல் கொள்கை பற்றி ஒரு சமிக்கையையும் தந்திருக்கின்றது. அதாவது பழைய குளிர்யுத்த காலத்தின் நட்பு நாடுகளை கைவிட்டு விட முடியும் என்றும், நீக்குப் போக்குள்ள புதிய நட்பு நாடுகளை சேர்த்துக்கொள்ள முடியும் என்றும் அமெரிக்கா கருதுகின்றது.

அமெரிக்கா, தனது தளங்களை குறைந்தபட்சம், குறைந்தகாலத் திட்டத்தில் கிழக்கு ஐரோப்பா நாடுகளுக்கு மாற்றும் போது உடனடியாக ஏராளமாக பணம் செலவாகும். தற்போது ஜேர்மனியில் இருக்கின்ற தளங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் 7 பில்லியன் டாலர்கள் செலவாகின்றன. அவற்றில் 1 பில்லியன் டாலரை ஜேர்மன் அரசாங்கத்திற்கு மானியமாக வழங்குகிறது. பொருளாதாரத்தில் முடக்கப்பட்டுக் கிடக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எந்த விதமான மானியமும் கிடைக்காது. மாறாக அமெரிக்கத் தளங்களுக்கான கட்டமைப்புக்களை உருவாக்க இந்த நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து பணத்தை எதிர்பார்க்கின்றன. அது மட்டுமல்ல, ஜேர்மன் தளங்களில் இருந்து கிழக்கு ஐரோப்பிய இராணுவத் தளங்களுக்கு அமெரிக்க துருப்புக்கள் மாற்றப்பட்ட பின்னர், ஜேர்மனியில் அமெரிக்க தளங்கள் தற்போதுள்ள பகுதிகளை தூய்மையாக்கவும், மேம்படுத்தவும் அமெரிக்கா செலுத்த வேண்டிய தொகை இன்னும் எட்டு ஆண்டுகளுக்கு தளங்கள் நீடித்தால் என்ன செலவாகுமோ அதற்கு இணையான தொகையை அமெரிக்க பாதுகாப்புதுறை உடனடியாக ஜேர்மனியில் செலவிட்டாக வேண்டும். இப்படி பில்லியன் கணக்காக கூடுதலாக செலவாகும் தொகை அமெரிக்க இராணுவ செலவினங்களை மேலும் அதிகரிக்க செய்யும்.

Top of page