World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Heinrich Hannover defends WSWS against slanderous attack by Brandenburg intelligence service

ஹென்ரிக் ஹனோவர், உலக சோசலிச வலைத் தளத்தை, பிராடன்பேர்க் உளவுத்துறையின் அவதூறிலிருந்து பாதுகாக்கிறார்

13 November 2003

Use this version to print | Send this link by email | Email the author

உலக சோசலிச வலைதளத்தின் மீதும், லேனா சோகோல் எழுதி, பெப்ரவரி 24, 2001 அன்று உலக சோசலிச வலைத் தளத்தில் வெளிவந்த கட்டுரையொன்றின்மீதும், தாக்கி எழுதிய பிராண்டன்பேர்க் உளவுப்ணித்துறையினரைப் பற்றி, டாக்டர் ஹென்ரிக் ஹனோவர் (Dr. Heinrich Hannover) எழுதியுள்ள கடிதம் ஒன்றை கீழே பிரசுரம் செய்கிறோம். உளவுப்பணித்துறை, அக்கட்டுரையை ("The deadly consequences of Germany's Refiugee Policy), செப்டம்பர் 16, 2003 அன்று அடையாளம் தெரியாத நபர்களால் பிராங்க்பேர்ட்-ஒடெர் நகரக் குடியேற்ற அலுவலகம் வன்முறை தாக்குதலுக்கு உட்பட்டதற்கு காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளது. [பார்க்க "ஜேர்மனி : பிராண்டன்பர்க் உளவுப்பணித்துறை உலக சோசலிச வலைதளத்தை அவதூறுக்கு உட்படுத்துகிறது"]

1925-ல் பிறந்த, ஹென்ரிக் ஹன்னோவர், வழக்குரைஞர், ஆசிரியர் என்ற பணிகளுக்காக மிகவும் புகழ்பெற்றவராவார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தொடர்ந்து, முக்கியமான அரசியல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக, Gunter Walraff, Ulrike Meinhof, Peter-Paul Zahl, Daniel Cohn-Bendit, Hans Modrow போன்றோருக்கு வாதாடியுள்ளார். பல ஆண்டுகளாக, தேசிய சோசலிச நீதித்துறை விட்டுச்சென்றவற்றுடன், பலவற்றுள், குறிப்பாக எர்னெஸ்ட் தால்மன் (Ernst Thälmann) (ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக 1920களிலும், 1930களிலும் இருந்தவர்) கொலை நடந்த சூழ்நிலைபற்றி தெளிவாக்கவேண்டும் எனக்கூறும் நடவடிக்கைகளை தொடங்கியும், நாஜிக்களால் தேசத்துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனைபெற்ற பாசிச-எதிர்ப்பாளர் கார்ல் வான் ஒசியட்ஸ்கி (Carl von Ossietzky), மறுவழக்கிற்கு உட்படுத்தப்படவேண்டும் எனவும் வாதாடி வருகிறார்.

ஹென்ரிக் ஹனோவர் கணக்கிலடங்கா புத்தகங்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எலிசபெத் ஹன்னோவர்- டுரூக்குடன் (Elisabeth Hannover-Drück) இணைந்து, The Murder of Rosa Luxemburg and Karl Liebknecht என்ற நூலையும் எழுதியுள்ளார்; இவருடைய Political Justice 1918-1933 என்ற புத்தகம், அத்துறையில் ஒரு பெருமதிப்புடைய புத்தகமாகக் கருதப்படுகிறது. வழக்கறிஞர் என்ற முறையில் தன் வாழ்க்கையை நினைவுகூறுதலான Die Republik vor Gericht என்ற புத்தகம் போருக்குப்பிந்தைய ஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசின் தன்மை பற்றிய வரலாற்று ஆய்வு ஆகும்; இது அரசியல், வரலாறு பற்றிய ஆர்வம் உடையவர் அனைவருக்கும் மதிப்பற்ற ஓர் உயர்ந்த புத்தகமாகும்.

* * *

அன்புடன் செல்வி சோகோல் அவர்களுக்கு,

உளவுப்பணித்துறையினரால், குற்றம் கூறப்பட்டுள்ள கட்டுரை மிக பாராட்டத்தக்கதாக உள்ளது. நீங்கள் விமர்சித்துள்ள நாட்டைவிட்டு வெளியேற்றும் வழக்கம், மிகவும் அயோக்கியத்தனமானது என்பதுடன், மிகப்பரந்த அளவில் தாராளக் கொள்கையுடைய, ஜனநாயகக் கருத்துடைய சமுதாயம் அனைத்தாலும் கண்டிக்கத்தக்கதாகும்.

சமீபத்தில்தான், அக்டோபர் 30அன்று Weser-Kurier (மூன்றாம் பக்கத்தில்), ஒரு குர்திஷ்-லெபனிய பெண்மணி, அவருடைய குழந்தைகளை ஜேர்மனியில் வளர்த்துவந்தவர், துருக்கிய நாட்டிற்கு, கொடிய வறுமைநிலையில் வாழ்வதற்கு நாடுகடத்தப்பட்டுள்ள கொடுஞ்செயல்பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறது. இதையும் இதேபோன்ற பல சம்பவங்களும் தகவல்களாக வந்துள்ள போதிலும்கூட, பொதுமக்களிடையே பதில் விளைவு குறைவாகவே இருக்கிறது, இத்தகைய அரசாங்க ஒப்புதலுடன் கூடிய வன்முறையைச் செய்யும் அதிகாரிகள், சிறிதும் தடுப்பாரின்றி பதவியில் தொடர்ந்து இருக்கின்றனர்.

என்னைப் பொறுத்தவரையில், இது மெதுவாக ஊர்ந்து,அன்றாடவாழ்வில், உள்ளே நுழையும் பாசிச வடிவம் ஆகும். இத்தகைய வழக்கங்களுக்கு இசைவு தெரிவிக்கும் ஓர் உளவுத்துறை எதற்காக அது நிற்கிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. உங்களைப்பற்றியும், உங்களுடைய திறனாய்வுக்கட்டுரை பற்றியும் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள், அத்தகைய போக்கைத்தான் ஒத்துக் காணப்படுகின்றன.

உங்களுடைய அடுத்த வேலைகளுக்கு சிறந்த வாழ்த்துக்களுடன்.

உங்கள் உண்மையுள்ள,

டாக்டர் ஹென்ரிக் ஹனோவர்.

See Also:

ஒரு சர்வாதிகார அரசாங்கத்தின் வாதங்கள்: பிராண்டன்பேர்க் உளவுப்பணித்துறை உலக சோசலிச வலைத் தளத்தை அவதூறுக்கு உட்படுத்துகிறது

பிரான்டன்பேர்க் உளவுத்துறையினர் உலக சோசலிச வலைத் தளத்தின் மீது அவதூறு கூறுகின்றார்கள்: பிராங்பேர்ட்-ஓடர் இல் உண்மையில் நிகழ்ந்தது என்ன?

ஜேர்மனி : பிராண்டன்பர்க் உளவுப்பணித்துறை உலக சோசலிச வலைதளத்தை அவதூறுக்கு உட்படுத்துகிறது

Top of page