World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரித்தானியா Britain: Anti-terror legislation opens up broad attack on civil liberties பிரிட்டன்: பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் சிவில் உரிமைகள் மீதான பரந்த தாக்குதலுக்கு வழிவகை செய்கிறது. By Chris Marsden கடந்த மாதம் வந்த இரு நீதிமன்ற தீர்ப்புகள், செப்டம்பர் 11-க்குப் பின்னர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகக் கூறிக்கொண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் கொடூரமான தன்மையை மட்டும் வெளிப்படுத்தாமல், தொழிற்கட்சி அரசாங்கமும் போலீசாரும் எந்த அளவிற்கு கடுமையான சட்ட அதிகாரங்களை பெற்றிருக்கின்றனர் என்பதையும் தெளிவாக்கியுள்ளது. 2001-ம் ஆண்டிலிருந்து எந்தவித விசாரணையோ அல்லது குற்றச்சாட்டோ கூறப்படாமல் காவலில் வைக்கப்பட்டுள்ள 10 பேர் செய்து கொண்ட மேல் முறையீடு அக்டோபர்-29-ந் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அல்கொய்தாவுடன் தொடர்புடைய குழுக்களோடு தொடர்புள்ளவர்கள் என உள்துறை செயலாளர் டேவிட் பிளங்கட் கூறியதன் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மிகப்பெரும்பாலோர் கடுங்காவல் சிறையில் அல்லது மனநல மருத்துவ மனைகளில் கடந்த இரண்டாண்டுகளாக காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இப் 10 பேர் 2001ல் இயற்றப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு, குற்றம் மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்புக் காவலில் வைக்கப்பட்டனர். 2000-த்தில் இயற்றப்பட்ட சட்டத்தில் கூடுதல் அதிகாரங்கள் சேர்க்கப்பட்டன. செப்டம்பர்-11 குண்டு வெடிப்பிற்கு இரண்டு மாதங்கள் கழித்து இச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. புதிய சட்டப்படி 16 வெளிநாட்டு குடிமக்கள் இதுவரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ATCSA சட்டவிதிகளின் படி ''சர்வதேச பயங்கரவாதிகள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தாக செயல்படக்கூடும்" என உள்துறை செயலாளர் சந்தேகித்து அறிக்கையிடும் வெளிநாட்டுக் குடிமக்களை விசாரணையோ அல்லது குற்றச்சாட்டோ இல்லாமல் காலவரையற்று காவலில் வைக்க சட்டம் வகை செய்கிறது. இரகசியமாக பெறப்பட்ட சாட்சியத்தின் அடிப்படையில் ஒருவரைக் காவலில் வைக்க முடியும் - காவலில் வைக்கப்பட்டவர் அல்லது அவரது வழக்கறிஞர், பார்க்கவோ, கேட்கவோ அல்லது குறுக்கு விசாரணை செய்யவோ முடியாது. மூன்று நீதிபதிகள் குழு சிறப்பு குடியேற்ற மேல் முறையீட்டு கமிஷனில் (SIAC Special Immigration Appeals Commission) இரகசியமாக மேல் முறையீட்டை விசாரித்தனர். ஜூரிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை. இப்படி இரகசியமாக விசாரணை நடத்தப்பட்டதால் காவலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு பேரைத்தவிர மற்றவர்களது பெயர் கூடத்தெரியவில்லை. ஒருவர் Jamal Ajouaou இவர் மொரோக்கோ குடிமகன், தன் நாட்டிற்கு திரும்பிச்செல்ல ஏற்கனவே சம்மதித்திருக்கிறார். மற்றொருவர் பாலஸ்தீன புகலிடம் கேட்பவரான, 32-வயதான முகம்மது அபு ரிதே ஆவார், இவர் ஐந்து குழந்தைகளுக்கு தந்தை, மற்றும் 1995 முதல் பிரிட்டனில் வாழ்ந்து வருகிறார். அவர் கடும் பாதுகாப்புடைய பிரோட்மூர் மனநல மருத்துவமனையில் (Broadnmoor high-security mental hospital) அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மீதமிருந்த எட்டுகைதிகளின் பெயர் அகரவரிசை எழுத்து மட்டுமே தெரியும். குற்றம் புரிந்ததாக அவர்கள் எவர்மீதும் எந்தவிதமான குற்றச்சாட்டும் கூறப்படவில்லை. பயங்கரவாத நடவடிக்கை சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ள 39-அமைப்புகளில் ஒன்றில் அவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பது தான் அந்தக் குற்றச்சாட்டு. பிரிட்டனின் பாதுகாப்பு சேவைகளைச் சார்ந்த பிரதிநிதிகள் சாட்சியம் அளித்தனர். அந்த சாட்சியத்தின் தன்மை என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு கூட குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை. தனது தீர்ப்பை வழங்கும் போது, அரசாங்கம்தான் கைது செய்யப்பட்ட நபர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளோடு தொடர்பு வைத்திருக்கிறார்கள் என ''சந்தேகிப்பதற்கு நியாயமான அடிப்படைகளை" கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்க மட்டும் வேண்டி இருந்தது என்ற அனுமானத்தின் அடிப்படையில் SIAC செயல்பட்டிருக்கிறது. அரசாங்கம் தந்திருக்கும் சாட்சியம் சட்ட நீதிமன்றத்தின் முன் நிற்காது என்பதை ஒப்புக் கொண்டு ''சாட்சியம் பற்றிய சான்றின் தரம் நம்பகத்தன்மைக்கு குறைவாக இருக்கின்றது'' என தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருக்கின்றனர். அந்த தீர்ப்பு சாட்சியங்கள் சித்திரவதை மூலம் பெறப்பட்டிருக்க கூடுமா என்பதை பகிரங்கமாகவும் கூட விவாதித்திருக்கின்றது. அப்படி ஏதாவது சாட்சியம் பெறப்பட்டிருக்குமானால் அவற்றை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துதான் ஆகவேண்டும் என்ற அவசியமில்லை என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கின்றனர். அமெரிக்காவில் குடியரசுக் கட்சி நிர்வாகம் குவாண்டனாமோ எக்ஸ்-ரே முகாமில் தனிமைச்சிறையில் காவலில் வைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு எதிராக சித்திரவதைகள் மூலம் பெறப்பட்ட சாட்சியத்தை பயன்படுத்தி வருகிறார்கள். நீண்ட நேரம் உடலை வருத்துகின்ற நிலையில் ஒரேநிலையில் நிற்கவைப்பது, தூங்காமல் தடுப்பது, விளக்கில்லாத இருட்டறையில் வைத்திருப்பது, உணவு, குடிநீர் மருத்துவ உதவியின்றி சித்ரவதை செய்வது போன்ற வழிமுறைகளை அதன் சொந்த விசாரணை செய்பவர்கள் பயன்படுத்துகின்றனர் என அமெரிக்க அதிகாரிகளே ஒப்புக்கொண்டிருக்கின்றனர். இதைவிட மோசமாக, எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் தட்டிக்கேட்க ஆளில்லாமல் சித்ரவதைகள் சர்வசாதாரணமாக நடைபெற்று வரும் மூன்றாம் தரப்பு அமெரிக்க நட்பு நாடுகளுக்கு விசாரணைக்காக கைதிகளை மாற்றும் நடவடிக்கையையும் அவர்கள் எடுத்தார்கள். தற்போது பிரிட்டனின் அரசாங்கமும் நீதித்துறையும் இந்த கீழ்த்தரமான களங்கப்பட்ட "சான்றை" பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்திருப்பதாக தெளிவாக அறிவித்து விட்டது. தீர்ப்பு பற்றி விமர்சனம் செய்த பிளாங்கெட் கூறினார்: ''நாம் சர்வதேச பயங்கரவாதிகள் என்று நம்புகின்ற வெளிநாட்டு குடிமக்கள் நமது தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தாக செயல்படக்கூடும் என்று கருதும் நிலையில், அவர்களை நாம் நாடுகடத்த விரும்பும்போது பல்வேறு காரணங்களால் அவ்வாறு நாம் அவர்களை நாடுகடத்த முடியாத சூழ்நிலையில் அவர்கள் பிரிட்டனில் எந்தவிதமான கண்காணிப்பும் இல்லாமல் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவதில்லை, இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் பொது அவசர நிலையை கருத்தில் கொண்டு புதிய பயங்கரவாத சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் அவர்களே விரும்பி எந்த நேரத்திலும் பிரிட்டனை விட்டு வெளியேறலாம். அப்படி இரண்டு பேர் வெளியேறி இருக்கிறார்கள்.'' இது அப்பட்டமான பொய் உரையாகும். பயங்கரவாத எதிர்ப்பு, குற்றம் மற்றும் பாதுகாப்பு சட்டத்தில் நான்காவது பகுதியில் காவலில் வைக்கப்படுவது தொடர்பான அதிகாரங்கள் விவரிக்கப்படுகின்றன. அவை தற்போது பிரிட்டனில் குடியேறியுள்ள வெளிநாட்டவருக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அரசாங்கம் ஒரு வெளிநாட்டு குடிமகனை காவலில் வைத்து நாடுகடத்த விரும்பும்போது அப்படி செய்ய முடியாத சூழ்நிலையில் சம்மந்தப்பட்ட நபரை காவலில் வைத்திருக்க அவை அனுமதிக்கின்றன. தனிப்பட்ட நபர்கள் நாடுகடத்தப்படும்போது அவர்களது தாய் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்படலாம், சித்ரவதை விதிக்கப்படலாம், மனித நேயமற்ற முறையில் இழிவு படுத்தப்படலாம், என்ற காரணத்தினால்தான் அவர்கள் நாடுகடத்தப்பட முடியாது - அப்படிப்பட்டவர்களை நாடுகடத்துவது சர்வதேச சட்டத்திற்கு முரணானதாக இருக்கும் என்பதெல்லாம் அப்பட்டமான பொய். மூன்றாவது தரப்பு நாடு அவர்களை ஏற்றுக் கொள்ளக் கூடும் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது, ஏனென்றால் பிரிட்டனில் கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர்கள் பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்டவர்கள். ஆகையால், பெரும்பான்மையான விஷயங்களில், தடுப்புக்காவலில் உள்ளவர்கள் வெளியேறுவதற்கு சுதந்திரமாக விடப்படுகிறார்கள் என்ற பிளாங்கட்டின் கூற்றுக்கு, பிரிட்டனில் அவர்கள் தாங்கள் வாழ்நாள் முழுவதும் கைதிகளாக சிறையில் வாட வேண்டும் மற்றும் அவர்கள் திரும்பி தாய் நாடு செல்வதென்றால் திரும்பி அந்த நாட்டில் அவர்கள் பலாத்கார முறையில் கொல்லப்படலாம், இவை இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ள சுதந்திரமாக இருக்கின்றனர் என்றுதான் அர்த்தம். இந்த தீர்ப்புப் பற்றி கருத்து தெரிவித்த சர்வதேச பொதுமன்னிப்பு சபை ''நீதி புரட்டு'' என்று விமர்சனம் செய்திருக்கின்றது. "மனவுறுதி இழக்கப்பண்ணும் வகையில், SIAC ஆனது, ATCSA-ன் கீழ் அந்தப் பத்துப்பேரை கடும் பாதுகாவலில் வைத்திருப்பதை நியாயப்படுத்துவதற்கு அரசுத்துறை செயலாளர் சாதாரணமாக எதிர்கொள்ள வேண்டிய சான்று ''சரியான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட'' குற்றவியல் அளவுகோலை அல்ல, மாறாக சாதாரண வழக்குகளுக்கு தேவைப்படுவனவற்றை விடவும் குறைவானதாகும் என்று தீர்ப்பளித்தது என்று குறிப்பிட்டது. அரசு செயலாளர் ஆதாரம் காட்டுவதற்கான குறைவான சுமையை சந்திக்க வேண்டும் என SIAC அதிர்ச்சிகரமாய் தீர்ப்பளித்திருப்பது, குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படுகின்ற வரை குற்றம் சாட்டப்படுபவர் அப்பாவி என்று கருதுகின்ற குற்றவியல் அடிப்படை உரிமையையே மீறுகிறது.... "மேலும் இன்றைய தீர்ப்பு பற்றி சர்வதேச பொதுமன்னிப்பு சபை கலவரம் அடைந்துள்ளது. ஏனென்றால் சித்ரவதை மூலம் வாங்கப்பட்ட வாக்கு மூலங்கள் அடிப்படையில் SIAC-ஆல் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கக் கூடும். அரசுதுறை செயலாளரால் நம்பப்படும் சில இரகசிய ஆதாரங்கள் பாக்ராம் விமான தளத்திலும் மற்றும் எங்கும் அமெரிக்க பொறுப்பிலும் காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களிடம் இரகசியமாக பெறப்பட்ட வாக்கு மூலங்களையும் உள்ளடக்குவன என்று கூறப்படுகின்றன, அங்கு சித்ரவதை தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகின்றன. சர்வதேச சட்டப்படி சித்ரவதை மூலம் வாங்கப்படும் எந்த வாக்கு மூலமும் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படுவதில்லை என்று நிலைநாட்டப்பட்டு வந்திருக்கின்றது." சுதந்திரம் அமைப்பின் இயக்குநரான ஷாமி சக்ரபர்த்தி (Shami Chakrabarti) மேல் முறையீட்டு தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போது, ''பிரிட்டனின் உள்துறை அலுவலகத்திடம் நான் இரண்டு கேள்விகள் கேட்க விரும்புகிறேன். கடந்த இரண்டாண்டுகளாக சிறையில் இருக்கின்ற இவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் சம்மந்தப்பட்டவர்கள் என்று உண்மையிலேயே அரசாங்கம் நம்புமானால் அவர்கள் ஏன் குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்கை தாக்கல் செய்யக் கூடாது? காவலில் இருந்த அவர்களிடம் பிரிட்டனின் நட்பு நாடுகள் என்று கருதப்படுவனவற்றின் இரகசிய போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்டு இந்த வாக்குமூலம் பெறப்பட்டது மற்றும் மனித உரிமைகளை இழிவுபடுத்தியதற்கான நிரூபிக்கப்பட்ட சான்றின் காரணத்தினால் வழக்கை தாக்கல் செய்யவில்லையா? ''உண்மை என்னவென்றால் நாம் அமெரிக்காவின் முன்மாதிரியை பின்பற்றி வருகிறோம். வெளிநாட்டு சித்ரவதை முகாம்களில் நமது கீழ்த்தர வேலை நடைபெறுவதற்கு அனுமதிக்கிறோம்.'' "தற்போது காவலில் உள்ள நபர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் வாடுகின்ற நிலைதான் ஏற்படும். இப்போது காவலில் இருக்கின்ற ஒவ்வொருவரும் தெளிவாக ஒன்றை அறிந்திருக்கிறார்கள். பயங்கரவாதத்திற்கு ஆதரவாக அவர்கள் எந்த விதமான நடவடிக்கையிலும் சம்மந்தப்பட்டிருக்க வில்லை. பெரும்பாலான விசாரணைகள் ரகசியமாக நடைபெற்று வருவதால் தங்களைப்பற்றி விசாரணையில் என்ன கூறப்பட்டது என்பதே கைதிகளுக்கு தெரியாது. சட்ட நடைமுறைக்கு பதிலாக இரகசிய விசாரணை என்பது மிக ஆபத்தான எதிர்கால முன்மாதிரியாக பிரிட்டனில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். கைது செய்வது சட்ட நடைமுறைகளுக்கு அப்பால் காவலில் வைத்திருப்பது ஆகிய நடைமுறைகள் இப்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்காக மட்டுமல்ல, எதிர்காலத்திற்குமான ஆபத்தான முன்னோடி ஆகும். அவர்களை கைது செய்து சட்ட நடைமுறை இன்றி காவலில் வைத்திருப்பது அநீதி என்கிற இருண்ட காலத்தில் இந்த நாடு அடியெடுத்து வைக்கின்ற கட்டத்தைக் குறிப்பதாக அமைந்திருக்கின்றது" என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். கார்டியன் பத்திரிகையில், சித்ரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ உதவி அமைப்பை சார்ந்த ஷெர்மன் கரோல், ஆசிரியர் கடிதப் பகுதியில் ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். ஜனநாயக உரிமைகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து கடுமையான கண்டனம் எழவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு பயங்கரவாத குழுவோடு அல்லது அது போன்ற குழுக்களோடு சம்மந்தப்பட்டிருக்கிறார் என்று தொடர்புபடுத்தும் இரகசிய சாட்சியத்தின் அடிப்படையில் மக்களை நீண்ட நெடுங்காலத்திற்கு காவலில் வைத்திருக்க முடியும்? அப்படியிருந்தும் பத்திரிகை ஆசிரியர்களாகிய நீங்கள் ஆறாம் பக்கத்து செய்தியாகத்தானே வெளியிடுகிறீர்கள்?" என்று அவர் கேட்டிருக்கிறார். கார்டியன் பத்திரிகையில் வந்திருப்பதை விட மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட மந்தமான முறையில்தான் இதர ஊடகங்களிலும் தீர்ப்பு பற்றிய செய்தி வந்திருக்கிறது. மறுநாள் சிவில் உரிமைகளை நேரடியாக அச்சுறுத்துகின்ற தீர்ப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதைப்பற்றியும் ஊடகங்கள் மிக சர்வசாதாரணமாக செய்திகளை வெளியிட்டன. சென்ற செப்டம்பர் மாதம் லண்டன் டொக்லாண்ட்ஸ் பகுதியில் உள்ள எக்ஸல் சென்டரில் ஐரோப்பாவின் மிகப்பெரும் ஆயுத கண்காட்சி நடைபெற்றது. அந்த கண்காட்சிக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்வதற்கு லண்டன் பெருநகர போலீஸ் ஆணையர் சேர் ஜோன் ஸ்டீவன்ஸ் மற்றும் உள்துறை அமைச்சர் பிளங்கட் ஆகியோர் பயங்கரவாத சட்டம் 2000ன் கீழ் அதிகாரங்களை எடுத்துக்கொண்டனர். இதற்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டை நவம்பர்-30-ந்தேதி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கை மாணவர் கெவின் கில்லன் மற்றும் சுதந்திர புகைப்பட பத்திரிகையாளர் பென்னி குவிண்டான் ஆகியோர் சார்பில் லிபர்ட்டி அமைப்பு தாக்கல் செய்தது. அப்போது நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் டஜன் கணக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட 154 பேரில் இரண்டு பேர் பயங்கரவாத சட்டப்படி கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் "பயங்கரவாதம் தொடர்பான ஆபத்தின் தன்மையின் ஏற்புடைய வகையில்தான் அதிகாரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது" என்று கண்டதாக தீர்ப்பளித்திருக்கின்றது. "லண்டன் நகரத்து தெருக்களில் தினசரி ரோந்து பணிகளில் இத்தகைய அதிகாரத்தை போலீசார் பயன்படுத்தியிருப்பார்களானால் இந்த வழக்கில் சற்று வலிமையிருந்திருக்கும்" என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஹென்றி புரூக்ஸ், கடுமையை தணிக்கும் விதமாய், தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதே அதிகாரங்களை வழக்கமாய் பயன்படுத்துதல் என்பது, துல்லியமாக போலீஸ் இப்போது செய்வதாகும், உண்மையிலேயே பல ஆண்டுகளாக போலீசார் லண்டன் பெருநகரத்தில் தங்களது அதிகாரங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்ற சாட்சியங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியே கூறப்படாத நெருக்கடி நிலையின் கீழ் செயல்பட்டு வந்திருக்கிறனர். போலீசுக்கு தேவையான சிறப்பு அதிகாரங்கள் தரப்பட்டிருக்கின்றன. லண்டன் பெருநகரத்தில் 2001-பெப்ரவரிக்கு பின்னர் இருந்து பயங்க்கரவாத சட்டத்தின் கீழ் அங்கீகாரத்துடன் இங்கொன்றும் அங்கொன்றுமாக கட்டடங்களையும் மக்களையும் பிரிவு 44ன் கீழ், உள்துறை செயலரின் ஒப்புதலோடு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். எத்தனை நாடுகளில் இது போன்று போலீசாருக்கு அசாதாரணமான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்து இதுவரை எவரும் கூறமுடியவில்லை என்று சுதந்திரம் அமைப்பு குறிப்பிட்டது. இதற்கிடையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், பொது முக்கியத்துவம் பெற்றதாக எழுப்பப்பட்டிருப்பதன் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களை பிரிட்டனின் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்ய அனுமதித்ததன் மூலம் ஒரேயொரு சலுகை செய்திருக்கின்றனர். அதிகரித்த அளவில் அரசாங்கமும் போலீஸ் எந்திரமும் எதேச்சதிகாரமாகி வருவதை கட்டுப்படுத்தலாக அதன் மீது எந்தவித நம்பிக்கை வைப்பதற்கும் எதிராக இதுவரையிலான நீதிமன்ற பதிவுச்சான்றுகள் சக்திமிக்க வகையில் வாதிடுகின்றன. |