WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
European poll identifies Israel and US as greatest threats to world peace
உலக அமைதிக்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் பெரிய அச்சுறுத்தல்கள் என ஐரோப்பியக்
கருத்துக்கணிப்பு அடையாளம் காட்டுகிறது
By Brian Smith
8 November 2003
Use this version to print |
Send this link by email
| Email the author
சமீபத்திய ஒரு ஐரோப்பிய குழுவின், பொதுக்கருத்துக் கணிப்பின்படி, பதிலளித்தோரில்
59 சத விகிதத்தினர் உலக அமைதிக்கு இஸ்ரேல் பெரிய அச்சுறுத்தலாக உள்ளதென நம்புவதாக தெரிகிறது. இது அமெரிக்காவுடன்
இணைந்தவகையில் இஸ்ரேலை பட்டியலில் முதலிடத்திலும் வடகொரியா, ஈரான் ஆகியற்றை, 53 சதவீதம் பெற்றுக்
கூட்டாக இரண்டாவது இடத்திலும், ஈராக் அடுத்தபடியாக 52 சதவீதம் பெற்ற நிலையிலும், ஆப்கானிஸ்தான்
50சதவீதம் என்றும் வைத்துள்ளது.
இந்தக் கருத்துக்கணிப்பு, யூரோ பாரோமீட்டர் என்ற நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது
மற்றும் (ஒவ்வொரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாட்டிலிருந்தும் 500 பேர்வீதம்) 7,500 பேர் பேட்டி காணப்பட்டனர்.
ஒவ்வொருவருக்கும், 15 நாடுகள் அடங்கிய பட்டியல் ஒன்று கொடுக்கப்பட்டு உலக அமைதிக்கு அவை ஆபத்து
விளைவிக்கக் கூடியவையா இல்லையா எனக்குறிக்க கேட்டுக்கொள்ளப்பட்டனர். பாகிஸ்தான், சிரியா, லிபியா, சீனா,
செளதி அரேபியா, ரஷ்யா, சோமாலியா, ஐரோப்பிய ஓன்றியம் இவை பட்டியலில் இருந்த மற்ற நாடுகளாகும்.
அமெரிக்க தலைமையிலான ஈராக்கின் மீதான போர் தவறானது என்றும், மூன்றில் இரு
பங்கு ஐரோப்பியர்கள் நம்புவதாகவும் இக்கருத்துக்கணிப்பு குறிப்பிடுகிறது.
கருத்துக்கணிப்பின் முடிவுகள் இஸ்ரேலிய அரசாங்கத்தாலும் செய்தி ஊடகத்தாலும், பெரும்
தாக்குதலுக்கு உட்பட்டது. பிரஸ்ஸல்ஸில் உள்ள இஸ்ரேலியத் தூதரகம், "இது வருத்தத்தை அளிப்பதோடு மட்டமல்லாமல்
சீற்றத்தையும் கொடுக்கிறது. ஐரோப்பிய குடிமக்கள்மீது அல்ல, பொதுமக்களிடையே கருத்து உருவாக்கும் பொறுப்பு
உடையோரிடம்" என கூறியது.
இஸ்ரேலிய வெளிநாட்டில் சென்று வாழும் மக்கள் பற்றிய விவகாரங்களின் மந்திரியான
நாடன் ஷரன்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றியம் யூத எதிர்ப்பைத் தூண்டிவிடுவதாக குற்றஞ்சாட்டியதோடு, இன ஒழிப்பையும்
துணைக்கு அழைத்தார் -- "இத்தகைய பரந்த அளவிலான இஸ்ரேலுக்கு எதிரான மலிந்த மூளைச்சலவையையும், இதை
அரக்கநாடுபோல் சித்தரித்துக் காட்டுவதையும், ஐரோப்பா மீண்டும் தன்னுடைய கடந்தகாலத்தின் இருண்ட பகுதிகளுக்குள்
இழிந்து செல்வதற்கு முன்னரே நிறுத்திக்கொள்வது நல்லது" என்றார்.
அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட
Simon Wiesenthal Centre, இந்தக் கருத்துக்கணிப்பை, தர்க்கத்தை மீறுகிறது எனக்கூறி கண்டனத்திற்கு
உட்படுத்தியுள்ளது. ஐரோப்பா யூத எதிர்ப்பைக் கொண்டுள்ளது என குற்றஞ்சாட்டிய இவ்வமைப்பு, நால்வர் குழு (Quartet
Group) எனப்படுவதிலிருந்து (அமெரிக்கா, ரஷ்யா, ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம்) வெளியேற்றப்படவேண்டும்
என்றும், வாஷிங்டனுடைய "சாலை வரைடத்தை" பாலஸ்தீனியரிடையே புகுத்தி, இஸ்ரேலுக்கு எதிராக இன்டிபடா செயல்படுவதையும்
நிறுத்தும் முயற்சிகளான மத்திய கிழக்கு "அமைதி வழிவகை" யிலிருந்தும் ஐரோப்பிய ஒன்றியம் ஒதுக்கப்பட வேண்டும்
என்றும் கோரியுள்ளது.
இஸ்ரேலிய மந்திரிகள் சமீபத்தில் யூத எதிர்ப்பிற்கு ஒரு புதிய வரையறை கொடுக்க வலியுறுத்தியுள்ளனர்;
இதன்படி, இஸ்ரேல் தப்பி இருப்பது மீதான தாக்குதலாக விமர்சனம் விளக்கப்படுதல், ஆகவே, யூதமக்கள் அனைவர்
மீதுமான மறைமுகத்தாக்குதல் என்பதால் இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள விரும்பும் முயற்சிகள் பற்றி எவரும்
குறைகூறக்கூடாது என்பதை உள்ளடக்கி இருக்க வேண்டும்.
யூத-எதிர்ப்பு என்ற கூற்றை நிராகரித்த வெகு சிலரில், இஸ்ரேலிய வெளிநாட்டு மந்திரியான
சில்வன் ஷலோமும் ஒருவராவார். கருத்துக்கணிப்பு முயற்சியை, (அதிலும் குறிப்பாக பிரான்சுடையது) தன்னை அமெரிக்காவிற்கு
மாற்றாக, அல்லது குறைந்தபட்சம் அதை தடுத்துநிறுத்தக்கூடிய வலிமையுடையதாகக் காட்டிக் கொள்ளும்
ஐரோப்பாவின் முயற்சிகள் என்பதுடன் தொடர்புபடுத்தி பேசியுள்ளார். "இது இஸ்ரேல்-எதிர்ப்பு என்றோ, பாலஸ்தீனிய
சார்புடையது என்றோ கொள்ளவேண்டியதில்லை; இது ஒரு பரந்த பிரச்சினை ஆகும், ஒரு வல்லரசு என தன்னைப் பறைசாற்றிக்
கொள்வதற்கு, அமெரிக்காவிலிருந்து வேறாக வெளிப்படுத்திக் கொள்ளும் கருத்தாகும்."
சமீபத்தில் இஸ்ரேலிய-ஐரோப்பிய ஒத்துழைப்புடன் நடந்த பல செயல்களையும், மேற்கோளிட்டுக்
காட்டினார். இதில், "பிரிக்கும் வேலி" பிரச்சினையை ஹேக் சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச்செல்லும் பாலஸ்தீனிய
முயற்சியைத் தடுத்துவிட்டதையும் குறிப்பிட்டார்.
முன்னாள் இஸ்ரேலிய வெளியுறவு மந்திரி அலோன் லியலும், பயந்தாங்கொள்ளித்தனமான
விளைவுகளைக் காட்டாமல் இருக்குமாறு எச்சரித்துள்ளார். "இயல்பாகவே நாம், நம்முடைய பாதுகாப்பு ஆயுதமான
யூத-எதிர்ப்பு என்ற ஆயுதத்தை எடுக்கப் பார்க்கிறோம்; இது, அதைப் பயன்படுத்த தவறான இடமாகும்" என்று
கூறினார்.
ஐரோப்பா முழுவதும் வாக்கெடுப்பின் முடிவகள் மாறுபட்ட தன்மையைக் கொண்டிருந்தன.
48 சதவீத இத்தாலியர் மட்டும்தான் இஸ்ரேல் ஓர் அச்சுறுத்தல் எனக்கருதினர்; ஆனால் 74 சதவீத ஒல்லாந்து மக்கள்
இஸ்ரேல் ஓர் அச்சுறுத்தல் எனத்தான் கருத்துக் கொண்டிருந்தனர். ஆனால், பெரும்பாலான மக்கள், இஸ்ரேல் அமைதிக்கு
பெரும் ஆபத்தை கொடுக்கக்கூடியதாகத்தான் நினைத்துள்ளனர். கிரேக்கநாடுதான் இதற்கு விதிவிலக்காக இருந்தது. அங்கு
அமெரிக்காதான் மிகப்பெரிய ஆபத்து என 88 சதவீத மக்களிடையே கருத்து உள்ளது, இஸ்ரேல் இரண்டாமிடத்தில்
61சதவீத வாக்குகள் பெற்று உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மந்திரிகளும், செய்தித்தொடர்பாளர்களும், இக்கருத்துக்
கணிப்பிலிருந்து தங்களை ஒதுக்கிவைத்துக்கொள்ள ஆர்வத்துடன் முயன்றனர். சுழற்சிமுறையில் தற்பொழுது, ஐரோப்பிய
ஒன்றியத்தின் தலைவராக உள்ள இத்தாலிய பிரதம மந்திரி, சில்வியோ பெர்லுஸ்கோனி, கணிப்பு முடிவகளை
தாக்கிப்பேசியதோடு, ஏரியல் ஷரோனுடைய அலுவலகத்திற்கு தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டார். தான், "வியப்பும்
கோபமும் உற்றதாகவும்", இம்முடிவுகள், ஐரோப்பா, இஸ்ரேல்மீது கொண்டுள்ள பார்வையை பிரதிபலிக்கவில்லை என
தான் உறுதியுடன் நம்புவதாகவும் அவர் கூறினார்.
கருத்துக்கணிப்பு, தெளிவற்ற வினாக்களின் அடிப்படையில் அமைந்திருந்ததாகவும், அதன்
மூலம் "தவறான அடையாளக் குறிப்புக்கள்" வெளிவந்துள்ளன என்றும், இத்தாலிய வெளியுறவு மந்திரி, பிராங்கொ பிராட்டினி
கூறினார்.
ஐரோப்பியக் குழுவின் தலைவரான, ரோமனோ பிரோடி, கருத்துமுடிவுகள்பற்றி கவலை
தெரிவித்ததோடு, பாலஸ்தீனியர்கள் மிருகத்தனமாக அடக்கப்படுதலுக்கு மக்கள் விரோதம் துல்லியமாகக்
காட்டியிருப்பதின் குறிப்பு என்பதற்குப்பதிலாக, யூத-எதிர்ப்பின் வெளிப்பாடாக சித்தரித்துக்காட்டுகிறது எனக்
கொள்ளலாம் என்றார். "தொடர்ந்திருக்கும் எதிர்ப்பு உணர்வு கண்டிக்கத்தக்கது. இது யூத உலகிற்கு எதிரான,
ஆழ்ந்த பொது விரோதப் போக்கின் தன்மையை கொண்டிருப்பதாலும், இதைப்பற்றிய நம்முடைய கசப்பு உணர்வு மிகத்
தீவிரமானதும் கூட" என்றும் அவர் கூறினார்.
அமெரிக்கா உலக அமைதிக்கு அச்சுறுத்தல் என்பது பற்றிய அதேபோன்ற பொது அச்சத்திற்கு
யாரும் இவ்வளவு முயற்சி செய்து காரணங்கள் கற்பிக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், தன்னுடைய வழிகாட்டும் நெறிகளுக்கு மாறாகவே, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள
எல்லைப் பகுதிகளில், இக்கருவிகள் பயன்படுத்தப்படும் என்று நன்கு தெரிந்தும்கூட, பிரிட்டன் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை
விற்றுள்ளது தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த ஆண்டு ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ள பட்டியலில், காலுக்கு
போடும் இரும்புகள், மின் அதிர்ச்சி பெல்ட்டுக்கள், உயிரியல் மற்றும் இரசாயன ஊக்கிகள் முதலியவை அடங்கியுள்ளன.
பாதுகாப்பு எறிகுண்டுகள், ஏவுகணை செலுத்தும் கருவிகள், டாங்கி-எதிர்ப்பு ஆயுதங்கள், இராணுவ வெடிமருந்துகள்,
ராடார் உணர்வறியும் கருவிகள் ஆகியவைகளும் பட்டியலில் அடங்கும்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆயுதக்கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிகளின்படி, "உள்நாட்டு
அடக்குமுறைக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என்றோ அல்லது ஆயுதப்பூசல்கள் தொடர்ந்து நீடிக்க அல்லது இருக்கும்
பூசல்கள் மோசமாக்க இவ்வாயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்று தெளிவான ஆபத்து இருப்பதாக தோன்றினாலோ,
அல்லது ஆயுதம் வாங்குவோர், அதை மற்ற நாடுகளின்மீது ஆக்கிரமிக்க போர்தொடுக்கலாம் அல்லது நிலத்தின் மீதான
உரிமையை நிலைநாட்டப் பயன்படுத்தப்படலாம் என்ற தெளிவான அபாயம் இருந்தாலும்" ஏற்றுமதிகள் அனுமதிக்கப்படமாட்டா
என உள்ளது. மின்சார அதிர்ச்சி பெல்ட்டுகள், உள்நாட்டு அடக்குமுறை தவிர வேறு எதற்குப் பயன்படக் கூடும் என்று
புலப்படவில்லை; ஆயினும்கூட மேலே கூறப்பட்டுள்ள எல்லா எதிர்மறை வகைகளையும் இஸ்ரேல் பெற்றுள்ளது.
See also:
பாலஸ்தீனியர்களுக்கு
எதிரான போரை இஸ்ரேல் முடுக்கி விடுகிறது
அரஃபாத்தைக் கொன்று விடுவதாக இஸ்ரேல் அரசு அச்சுறுத்துவது ஏன்?
Top of page
|