World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா50 Years of the International Committee of the Fourth International Public meetings of the Socialist Equality Party of Britain and the Partei für Soziale Gleichheit of Germany நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் 50 ஆண்டுகள் பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஜேர்மனியின் சோசலிச சமத்துவக் கட்சியின் பகிரங்கக் கூட்டங்கள் 1 November 2003 Speakers :Peter Schwarz, secretary of the ICFI Chris Marsden, national secretary of the SEP (Britain) Frankfurt London ஜேர்மனியிலும் பிரிட்டனிலும் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகள் உலக சோசலிச வலைத் தளத்தின் வெளியீட்டாளரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நிறுவப்பட்டதன் 50வது ஆண்டு நிறைவை நினைவு கூறும் வகையில் பகிரங்க கூட்டங்களை நடத்துகின்றன. சோவியத் ஒன்றியத்தில், முதலாவது தொழிலாளர் அரசில், அதிகாரத்தைப் பறித்துக் கொண்ட மற்றும் "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" என்பதைக் கட்டி அமைப்பதற்கு சாதகமாக சர்வதேச சோசலிச முன்னோக்கை நிராகரித்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, 1938ல் லியோன் ட்ரொட்ஸ்கியால் நிறுவப்பட்ட சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் வேலைத் திட்ட அடித்தளங்களைப் பாதுகாப்பதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அமைக்கப்பட்டது. நடைமுறையில் இதன் அர்த்தம் என்னவென்றால், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளை ஈவிரக்கமற்று ஒடுக்குவதன் மூலம் அதன் ஒப்பீட்டளவிலான சலுகைகளைப் பாதுகாக்க விழைந்த அதிகாரத்துவ செல்வந்தத் தட்டால் சோசலிசத்திற்கான போராட்டம் எந்த வடிவத்திலும் கைவிடப்பட்டது என்பதாகும். பெரும் அரசியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்கையில், இடது எதிர்ப்பும் பின்னர் நான்காம் அகிலமும் ஸ்ராலினிசத்திற்கு எதிராகவும் புதிய சர்வதேச சோசலிச தலைமையை கட்டுவதற்காகவும் போராடியது- இத்தேவை இரண்டாம் உலகப் போரின் கொடுமைகளால் துன்பகரமான முறையில் நிரூபிக்கப்பட்டது. ஆயினும், போருக்குப் பின்னர், முதலாளித்துவத்தின் தோற்ற அளவிலான ஸ்திரத்தன்மை மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் செய்யப்பட்ட முன்னேற்றங்களுக்கு காட்சிவாத முறையில் பதிற்செயலாக நான்காம் அகிலத்திற்குள்ளே ஒரு சந்தர்ப்பவாத போக்கு தோன்றியது. மிசேல் பப்லோ தலைமையின் கீழ், பப்லோவாதிகள் தொழிலாள வர்க்கத்திற்குள் சுயாதீனமான புரட்சிகர தலைமையை கட்டி எழுப்புவதற்கான சாத்தியத்தை நிராகரித்தனர். அவர்கள் கிழக்கு ஐரோப்பாவிலும் - பின்னர் சீனாவிலும்-- மேற்கொள்ளப்பட்ட அரசுடைமையாக்கல், ஏகாதிபத்தியத்துடனான அதன் மோதலின் அழுத்தத்தின் கீழ் சோவியத் அதிகாரத்துவம் புரட்சிகர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிர்பந்திக்கப்படும், சுயசீர்திருத்த நிகழ்ச்சிப்போக்கை முன்முயற்சிக்கும், அது ஸ்ராலினிசத்திற்கு எதிரான ஒரு அரசியல் புரட்சிக்கான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தை முன்கூட்டிக் காணமுடியாத வழிகளில் உய்த்துணரும் வகையில் மெய்ப்பிக்கும் என்றனர். சமூக ஜனநாயக சீர்திருத்தவாதக் கட்சிகளால் மேலாதிக்கம் செய்யப்படும் நாடுகளில், பப்லோவாதிகள் வெகுஜனங்களினால் கொண்டு வரப்படும் அழுத்தங்கள் அவர்களை சோசலிசக் கொள்கைகளை அமல்படுத்தும்படி நிர்பந்திக்கக் கூடும்; அதேவேளை அரைக் காலனித்துவ நாடுகளில், அதே பாத்திரம் முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களுக்கு விடப்பட்டது. ஐக்கிய அமெரிக்க அரசுகளில் ஜேம்ஸ் பி.கனனாலும் சோசலிசத் தொழிலாளர் கட்சியாலும் 1953 பகிரங்கக் கடிதத்தில் உள்ளடங்கி இருந்த வேண்டுகோளுக்கு அணிதிரண்ட, மரபு வழி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் நடத்திய, சோசலிசமல்லாத போக்குகளுக்கு ஒட்டுமொத்த அடிபணிதலுக்கும் எதிரான அரசியல் போராட்டத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தோன்றியது. இது ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர தன்மையையும் நான்காம் அகிலத்தை சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள் மார்க்சிச தலைமையாகக் கட்டி எழுப்பும் அடிப்படை பணியையும் வலியுறுத்தியது. பப்லோவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட முன்னோக்கு கடந்த அரைநூற்றாண்டில் வெளிப்படுத்தி இருப்பது என்ன? கிழக்கில், பப்லோ முன்கணித்தவாறு "நூற்றாண்டுகால ஊனமுற்ற தொழிலாளர் அரசுகளுக்கு" தலைமை தாங்குவதிலிருந்து விலகி, ஸ்ராலினின் வாரிசுகளின் இறுதி எதிர்ப்புரட்சிகர செயல்பாடு சோவியத் ஒன்றியத்தை கலைத்துவிடுவதாக இருந்தது மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் முதலாளித்துவ சொத்துடைமை உறவுகளை மீளமைப்பதாக இருந்தது. மேற்கில், சமூக ஜனநாயகக் கட்சிகளை இடித்துத் தள்ளி அவற்றை இடது திக்கில் தள்ளும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வி அடைந்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், பிரிட்டனில் டோனி பிளேயரின் புதிய தொழிற்கட்சி மற்றும் சுரோடரின் சமூக ஜனநாயகவாதிகள் தங்களின் பழைய சீர்திருத்தவாத வேலைத் திட்டங்களைக் கைவிட்டுவிட்டனர், ஒரு சமயம் பழமைவாத வலதுகளோடு தொடர்புடையதாக இருந்த கொள்கைகளை இப்பொழுது முன்னெடுக்கின்றனர். மேலும் அரைக் காலனித்துவ நாடுகளில், பப்லோவாதிகளால், தொழிலாள வர்க்க ஆட்சிக்கு வரக்கூடிய, "முனை மழுங்கிய ஆயுதம்" என்று புகழப்பட்ட தேசியவாத இயக்கங்கள், சர்வதேச நாணய நிதியங்களின் ஆணைகளுக்கு, சமூக செலவினங்களை வெட்டுவதன் மூலமும் ஒட்டுமொத்த தனியார்மயமாக்கலை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் தலை வணங்கின. அனைத்து பழைய தலைமைகளும் அந்த அளவு தெளிவாகத் தோல்வியுற்றிருக்கும் பொழுது, தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய தலைமைக்கான தேவை இன்று போல் அந்த அளவு தெளிவாக ஒருபோதும் இருந்திருக்கவில்லை. இது மில்லியன் கணக்கானோரை அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பு மற்றும் புதிய வடிவிலான காலனித்துவ ஆட்சியை மீண்டும் திணிப்பதை எதிர்க்கும் எந்தவித அரசியல் வழிமுறைகளும் இல்லாது விட்டிருப்பதானது, ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் அவர்களின் அரசியல் வக்காலத்துவாங்குவோருக்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் நடத்தப்பட்ட போராட்டத்திலிருந்து பெறக்கூடிய படிப்பினைகளில் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளை கல்வியூட்டலில் முற்றுமுழுதான ஊக்கமளித்து வளரச்செய்வதில் வைக்கிறது. உலக சோசலிச வலைத் தளம் எமது வாசகர்கள் அனைவரையும் பிராங்க்பேர்ட்டிலும் லண்டனிலும் நடக்கும் 50வது ஆண்டு நிறைவு கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறும் இந்த அடிப்படைப் பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடல்களில் செயலூக்கத்துடன் பங்கேற்குமாறும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறது. |