World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பால்கன்

The Milosevic Trial: Last prime minister of Yugoslavia breaks 12-year silence

மிலோசெவிக் வழக்கு விசாரணை: யூகோஸ்லாவியாவின் கடைசிப் பிரதம மந்திரி 12 ஆண்டுகள் மெளனத்தைக் கலைக்கிறார்

By Paul Mitchell
11 November 2003

Use this version to print | Send this link by email | Email the author

யூகோஸ்லாவியாவின் கடைசிப் பிரதம மந்திரி, தன்னுடைய 12 ஆண்டுகள் மெளனத்தை கலைத்து, 1990களில் அவருடைய நாடு உடைந்தபோது நடந்த நிகழ்ச்சிகளைப்பற்றி, பொதுவில் பேசினார்.

ஆன்டே மார்கோவிக், யூகோஸ்லாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசு (SFRY) இன் பிரதம மந்திரியாக, மார்ச் 1989லிருந்து டிசம்பர் 1991 வரை இருந்தார். ஹேக்கில் உள்ள பழைய யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICTY), பழைய சேர்பிய ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசெவிக்கிற்கு எதிரான வழக்கில், அரசாங்கத்தரப்பு சாட்சியாக, அவர் சமீபத்தில் வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொசோவா, பொஸ்னியா, குரோஷியா, ஆகிய நாடுகளுக்கெதிரான போர்க்குற்றங்கள், இனக்கொலைகள் ஆகியவற்றிற்காக மிலோசெவிக்கின்மீது குற்றவிசாரணை நடைபெற்று வருகிறது.

ICTY யில் தோன்றும் பழைய யூகோஸ்லாவியாவின் தலைவர்களின் வரிசையில், மார்க்கோவிக், கடைசியாக வந்திருப்பவர் ஆவார். பழைய யூகோஸ்லாவியா சிதையும் வகையில் அங்கு வெடித்த உள்நாட்டுப்போர்களில் தங்களுக்கு எந்தப் பங்கும் கிடையாது என்றே, இவர்கள் அனைவரும் கூறியுள்ளனர். அதற்கு, மிலோசெவிக்தான் முற்றிலும் பொறுப்பு என்றும் இவர்கள் கூறுகின்றனர். இதுவரை ஹேக்கில், தங்கள்மீது குற்றமில்லை எனக்கூறித் தப்பித்துக்கொண்டவர்களில், யூகோஸ்லாவியா உடைந்ததற்கு உண்மையில் மார்க்கோவிக் வித்திட்டார் எனக் கூற இயலும்.

தன்னுடைய உத்தியோக வாழ்க்கையை மின்சார பொறியாளராகத் தொடங்கியதாகவும், ஒரு வெற்றிகரமான வணிகர் எனப்பெயெரெடுத்த பின்னர், 1982ல் அரசியலில் நுழைந்ததாகவும், அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ராடே கொன்கர் என்னும் யூகோஸ்லாவியாவின், பெரிய நிறுவனங்களுள் ஒன்றிற்குத் தலைவராக இருந்தார். யூகோஸ்லாவிய பொருளாதார ஒத்துழைப்பு வங்கியில் ஒரு முக்கிய புள்ளியாக விளங்கி, பின்னர் குரோஷியா நாட்டு ஜனாதிபதியாக உயர்ந்தார். 1989ம் ஆண்டு, 21 பில்லியன் டாலர்கள் கடன்சுமையும், ஆயிரக்கணக்கான சதவிகித பணவீக்கமும் இருந்த யூகோஸ்லாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசு (SFRY) இன் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1990ல் Alliance of Reform Forces of Yugoslavia என்ற தன்னுடைய கட்சியைத் தொடங்கினார்.

உறுதிப்படுத்துதல், தனியார்மயமாக்குதல், ஜனநாயகம் என்ற தன்னுடய "சீர்திருத்த" வேலைத் திட்டத்திற்கு கூட்டாட்சி அரசாங்கம் முழுவதும் இணங்கி நடந்ததாக, மார்கோவிக் தெரிவித்தார். கூட்டாட்சி சட்டமன்றத்தில், நாணயம் மாற்றுமுறைக்கு உட்படுத்தப்படும் என்று தான் அறிவித்தவுடன், அவையில் எவ்வாறு "இடிமுழக்கம் போன்ற கைதட்டல்களும்", பெரும் களிப்பு ஆரவாரங்களும் எழுந்தன என்பதை நீதிமன்றத்தில் அவர் கூறினார். ஆனால், சில தனிநபர்கள் இவருடைய கொள்கைகள் "நாட்டின் செல்வம் கொழிக்கும் சில பகுதிகளை மேலும் செல்வவளம் மிகுந்ததாக்கி, ஏழ்மைப்பகுதிகளை மேலும் வறுமைக்கு உட்படுத்தும்" என்று தெரிவித்ததாகவும் கூறினார்.

இவருக்கு, மேற்கின் ஆதரவு நிரம்பியிருந்தது; பெல்கிரேடில் அமெரிக்கத்தூதராக இருந்த வாரன் ஜிம்மர்மன், மார்கோவிக் "ஒரு தற்பெருமை மிகுந்தவராகவும், தன்னை யூகோஸ்லாவியாவிற்கு பெரிய இறைத்தூதர் போலவும் கருதியவர்" என்றார். நாட்டின் பிரதம மந்திரி ஆனவுடன், இவருடைய ஆக்கத்திறனும், தன்னம்பிக்கையும் மேலைநாடுகளிலிருந்து வந்த பெரும் புள்ளிகளைக் கவர்ந்தது. கிழக்கு ஐரோப்பிய அரசியல்வாதிகளை திறமையுடன் எடை போடக்கூடிய, நிதியாளர் அறக்கொடையாளரான (Financier-philanthropist) ஜோர்ஜ் சோரஸ், பெல்கிரேடுக்கு விஜயம் செய்துவந்தபின், தான் சந்தித்த மிகக்குறிப்பிடத்தகுந்த தலைவர்களுள், மார்க்கோவிக்கும் ஒருவர் என என்னிடம் குறிப்பிட்டார்" என்று தெரிவித்துள்ளார்.

மார்க்கோவிக், சிம்மர்மானிடம், மூத்த ஜோர்ஜ் புஷ்ஷினுடைய நிர்வாகத்தின் தெளிவான ஆதரவு வேண்டும், அதற்கும் மேலாக தனக்குப் பணம் வேண்டும் எனக் கூறினார். எவ்வளவு? "நன்று, நான் ஒரு பெரிய விளையாட்டு விளையாட வேண்டும். அதற்குப் பெரிய அளவில் பணம் தேவைப்படும். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், சீர்திருத்த வகையில் துணைபுரிவதற்கு, சிலவற்றைத் தொடக்குவதற்கு, ஒரு நான்கு பில்லியன் டாலர்கள், நல்ல தொடக்கமாக இருக்கும்."

யூகோஸ்லாவியாவில் அரசாங்கம் நடத்திவந்த பொருளாதாரத்தைத் தகர்த்து, முதலாளித்துவமுறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட கிழக்கு ஐரோப்பாவில் மற்றைய பகுதிகளையும்விட 'கூடுதலாக' சீர்திருத்தம் செய்ய, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சில மாதங்களுக்குள்ளேயே, அரசாங்கத்தின் தொழிற்துறையில் பாதிக்குமேல் மூடப்பட்டு, இரண்டு மில்லியன் தொழிலாளிகள் வேலையிழந்தனர். கிட்டத்தட்ட 65,000 நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டன. சர்வதேச நாடுகளுக்கு கொடுக்கப்படவேண்டிய தேசியக் கடன்கள் திருப்பிக் கொடுக்கப்படுவதற்காக, கூட்டாட்சியோடு இணைந்திருந்த குடியரசுகளுக்கு தரவேண்டிய பணங்கள் முடக்கப்பட்டன.

யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், தன்னுடைய கொள்கைகள் "ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கும் எதிராகப் போராட வேண்டிய" நிலைமையை ஏற்படுத்தியதுபற்றி, மார்கோவிக் வியந்ததாகக் கூறினார். தனக்காகத் தானே வழக்கை வாதாடிக்கொள்ளும் மிலோசெவிக், பிரதம மந்திரி என்னும் முறையில், "சட்ட அளவிலும், நடைமுறையிலும் கூட்டாட்சி அரசாங்கத்தின்மீது முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்ததால்" அவரும் முக்கிய பங்கை அனைத்து நிகழ்வுகளிலும் பெற்றிருந்தார் என்று தெரிவித்தபோது, மார்க்கோவிக் தன்னுடைய பதவி "மிகச் சாதாரணமான திறமையைத்தான்" கொண்டிருந்ததாகவும், யூகோஸ்லாவியச் சிதைவைப் பற்றித் தன்னால் அதிகம் ஏதும் செய்யமுடியாமற் போயிற்று என வலியுறுத்தினார். ஓர் அதிர்ச்சி தரும் நிகழ்ச்சியை, எவ்வாறு சிதைவு வடிவம் கொண்டிருந்தது என்பதற்குக் கூறினார். மிலோசெவிக், 1989ம் ஆண்டு, மார்கோவிக் அரசாங்கத்தில், எவ்வாறு உள்துறை அமைச்சகம் தன் கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும் என வலியுறுத்திப் பெற்று, கூட்டாட்சி உளவுத்துறைப்பணிகள் முழுவதையும் பொறுப்பிற்கொண்டார் என நீதிமன்றத்திடம் தெரிவித்தார். ஆனால் இது பெரிய விளைவாகாது என்றும், ஒவ்வொரு குடியரசும், இராணுவமும் தத்தம் உளவுத் துறைகளை அமைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் வேவு பார்த்த வண்ணம் இருந்தனர் என்றும் மார்கோவிக் கூறினார்.

1991ல், பொஸ்னிய ஜனாதிபதி Alija Izetbegovic யிடமிருந்து, மிலோசெவிக் பொஸ்னியாவிற்கு துணை இராணுவப்படைகளை அனுப்பத்திட்டமிட்டிருந்தார் எனக் கூறும் வகையிலிருந்த ஒலி நாடாக்களை அனுப்பிவைத்தார் என்றும் மார்கோவிக் அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தெரிவித்தார்.

ஒவ்வொரு குடியரசிலும், யூகோஸ்லாவிய மக்கள் இராணுவமும், தலைமையும், எவ்வாறு தத்தம் சிறப்புச் சலுகைகளைக் காத்துக் கொள்ள முற்பட்ட அளவில், யூகோஸ்லாவியா பெருங்குழப்பத்தில் இழிந்துபோயிற்று என்றும் விளக்கினார். சேர்பிய தேசிய வங்கி, 2பில்லியன் டாலர்களை, கூட்டாட்சி நிதியிலிருந்து தனக்கே மாற்றிக்கெண்டது என்றும் தெரிவித்தார். ஸ்லோவேனியா, குரோஷியா இரண்டும் கூட்டாட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு வரிகள் செலுத்த மறுத்ததையும், பொதுவில் அச்செலவில் 81சதவீதம் இராணுவத்திற்கே போயிற்று என்றும் குறிப்பிட்டார். பெல்கிரேடில் 600,000 தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்து, தொழிலாள வர்க்கமே தெருவிற்கு வந்துவிட்டபோது, இராணுவம் சதியில் ஆட்சியைக் கைப்பற்றக் கருதியது. இராணுவத் தலைமைத் தளபதி, ஸ்லோவேனிய, குரோஷியத் தலைமையைக் கைது செய்யத் திட்டமிட்டு மிலோசெவிக்கின் ஆதரவை எதிர்நோக்கினார். "மிலோசெவிக் ஒருவர்தான் யூகோஸ்லாவியாவிற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கின்றி வேறு யாருக்கு உதவ முடியும்" என இராணுவத் தலைமைத் தளபதி Veljko Kadijevic, மார்கோவிக்கிடம் கூறினார் மற்றும் இவரை ஜனாதிபதியாக ஆக்குவதாகவும் தெரிவித்தார்.

இப்பொழுது, இவருடைய திட்டம் உண்மையிலேயே "ஒவ்வொருவரும், ஒவ்வொருவருக்கு எதிரான" என்ற போராட்டத்தை ஏற்படுத்தியதால், மார்கோவிக் ராஜிநாமா செய்துவிட்டு, 1991 டிசம்பர் மாதம் ஆஸ்திரியா பறந்து சென்றுவிட்டார். பதவி விலகல் உரையில், "கூட்டாட்சி நிர்வாகக் குழு, மிகப்பெரிய பணவீக்கம், மில்லியன் கணக்கில் வேலையின்மை, உற்பத்திக்குறைவுகள், மில்லியன்கணக்கான மக்களுக்கு வறுமை இவற்றால் தீவிரமான சமுதாய வெடிப்பு ஏற்படக் காரணமாகப் போகும் "பொருளாதாரப் பேரழிவை"த் தடுக்க, முற்றிலும் திராணியற்று உள்ளது. இவை அனைத்திற்கும் நாட்டின் குடிமக்கள் பொறுப்பு இல்லை" என்றார்.

Top of page