World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்குIsrael steps up its war against the Palestinians பாலஸ்தீனியர்களுக்கு எதிரான போரை இஸ்ரேல் முடுக்கி விடுகிறது By Jean Shaoul இஸ்ரேலில் உள்ள ஷெரோன் ஆட்சி வாஷிங்டனின் நிபந்தனையற்ற முழு ஆதரவு உறுதியாக உள்ளது என தெரிவதால் 1967-முதல் சட்டவிரோதமாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்து கொண்டுள்ள மேற்குக்கரை மற்றும் காசா பகுதிகளில் பாலஸ்தீன குடிமக்களுக்கு எதிரான தனது இராணுவ தாக்குதல்களை முடுக்கிவிட்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சிபோக்கில் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் ஐ.நா. பொதுச்சபையின் முடிவுகளை மற்றும் உண்மையில் மத்திய கிழக்கில் சமாதானத்தை உருவாக்குவதற்கு அமெரிக்கா முன்நின்று உருவாக்கிய "சாலை வரைபட" சம்பிரதாய நடவடிக்கைகளை அவமதிப்பு செய்வதை இஸ்ரேல் சமிக்கை செய்கிறது. மேற்குக்கரைப் பகுதியில் எழுப்பப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்புச்சுவரை நீக்கிவிட ஷெரோன் அரசாங்கம் முன்வரவில்லை என்பதுடன் அதையே கெட்டியாக பிடித்துக்கொள்ள உறுதி கொண்டிருக்கிறது. சியோனிச குடியிருப்பை விரிவுபடுத்துவதிலும் உறுதியான நடவடிக்கைகளை அறிவித்து இருக்கின்றது. வழக்கம் போல் சர்வதேச பத்திரிகைகள் இந்த சம்பவங்களை பற்றி செய்திகள் வெளியிடுவதில்லை, அவற்றைக் கண்டிப்பதும் மிகக் குறைவு. அக்டோபர் 20-ந்தேதி காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தொடர்ச்சியா விமான குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தியது, அதில் குறைந்த பட்சம் 11-பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 100-பேர் காயம் அடைந்தனர். அவர்களில் மிகப்பெரும்பாலோர் குடிமக்கள் ஆவர். ஹமாஸ் உறுப்பினர் ஒருவரால் ஓட்டிச் செல்லப்பட்ட வாகனத்தைக் குறிவைத்து ஹெலிகாப்டர் பீரங்கிகள் மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது மற்றும் ஹமாஸ் இயக்கத்தின் ஆயுதப்பட்டறை என்று இஸ்ரேல் குறிப்பிட்ட ஒரு கட்டடத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. கார்டியனின் கிறிஸ் மக் கிறீல் எழுதிய அக்டோபர் 27 செய்தி அறிக்கை ராஃபாவில் நடத்தப்பட்ட வன்முறை மற்றும் பேரழிவின் அளவினைத் தெளிவுபடுத்தியது, அது ஐ.நா.வால் "மிதமிஞ்சிய" தண்டனை என்று கண்டிக்கப்பட்டிருந்தது. கடந்த இரண்டு வாரங்களில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், "கால்வாய் வழி நடவடிக்கை" என்று அது அழைக்கும் தாக்குதலில் இறங்கியது, அது இஸ்ரேல் கூறுகிறபடி தரையிலிருந்து வானத்திற்கு ஆன ஏவுகணைகள் உட்பட ஆயுதங்களை பயங்கரவாதக் குழுக்களுக்கு கொண்டு வருவதற்கு பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் டசின் கணக்கான சுரங்கப்பாதைகளைக் கண்டு பிடிக்கவும் அழிக்கவும் வெளிவேடத்திற்கு நோக்கம் கொண்டதாகும். சுமார் 65-டாங்கிகள் கவசவாகனங்கள் மற்றும் புல்டெளசர்கள் இத்தாக்குதல்களில் சம்பந்தப்பட்டுள்ளதுடன், மூன்று குழந்தைகள் உட்பட 18 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 120-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர். "மூன்று சுரங்கப்பாதைகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன, ஆனால் எந்தவிதமான ஆயுதமும் கிடைக்கவில்லை. ஆனால் இந்நடவடிக்கையால் 200-வீடுகள் அழிக்கப்பட்டன, சுமார் 1700-மக்கள் வீடுகளை இழந்து நடுத்தெருவிற்கு வந்துவிட்டனர். அப்படி எதுவும் நடக்கவில்லை, 10-வீடுகள் மட்டுமே அழிக்கப்பட்டது என இஸ்ரேல் இராணுவம் கூறியது. அதற்குப் பின்னர் அந்தப் பகுதியில் வீடுகள் இருந்த அடையாளமே தெரியாத அளவிற்கு புல்டெளசர்கள் அனுப்பப்பட்டது" என மெக்ரியல் எழுதுகிறார். இண்டிஃபதா ஆரம்பித்த பின்னர் றாபா பகுதியில் மூன்று இஸ்ரேல் போர்வீரர்களையும் ஒரு குடியேற்றக்காரரையும் பாலஸ்தீன போராளிகள் கொன்றனர், ஆனால் அதேவேளை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் 280-பாலஸ்தீன மக்களை கொன்று குவித்திருப்பதாக மெக்ரியல் குறிப்பிடுகிறார். பாலஸ்தீன மக்கள் கையில் கிடைத்த பழைய ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்துகின்றனர். ஆனால் இஸ்ரேல் இராணுவம் நவீன ஆயுதங்கள் மூலம் பாலஸ்தீன மக்களை நசுக்கி வருகின்றது. இதனால் ஏரியல் ஷரோனின் வலதுசாரி கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் உறுப்பினர்கள்- அவர்கள் அரசாங்கத்திலிருந்து விலகா விட்டாலும் கூட- இராணுவ நடவடிக்கைகளை கண்டித்த அளவுக்கு பாலஸ்தீனியர்களின் பழமைவாய்ந்த ஆயுதங்களால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்கு இஸ்ரேலிய திருப்பித்தாக்குதல் மற்றும் சேதவிவரங்களின் அளவு அளவுக்குப் பொருந்தாதிருந்தது. ''இரண்டு அல்லது மூன்று பயங்கரவாதிகளை கொல்வதற்காக பொதுமக்களை பெருமளவில் கொன்று குவித்து விடக்கூடாது'' என்று கூட்டணி ஷினுய் (Shinui) கட்சியைச் சார்ந்த உள்துறை அமைச்சர் ஆவ்ரஹாம் போராஸ் குறிப்பிட்டதாக BBC- தகவல் தந்திருக்கிறது. அதே கட்சியை சார்ந்த இன்னொரு காபினெட் அமைச்சரான கட்டமைப்பு வசதி அமைச்சர் யுசுப் பிரிட்ஸ்க்கி இஸ்ரேல் பகிரங்கமாக மன்னிப்புக்கேட்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என்று வலியுறுத்திக் கோரியுள்ளார். ''நாம் பாலஸ்தீன மக்களோடு போர்புரிந்து கொண்டிருக்கவில்லை,'' என்றும் அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற விமர்சனங்கள் மூலம் பாரிட்ஸ்கி தன்னைத்தானே முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார். அவர், அரசியல் படுகொலைகள், குடிமக்களை கொன்றுகுவிப்பது அவர்களை முடமாக்குகின்றது, கூட்டாகத் தண்டனை தருவது, வீடுகளை இடிப்பது நாடுகடத்துவது உள்பட, பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இடைவிடாது போர் புரிந்து கொண்டிருக்கின்ற ஒரு அரசாங்கத்தின் உறுப்பினர் ஆவார். பலர் ஊரடங்கு உத்தரவு மற்றும் சாலைத்தடைகளால் பணியாற்ற, பள்ளிகளுக்குச்செல்ல, மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல் போய்விடுகின்றனர் மற்றும் இதுபோன்ற நடவடிக்கைகளால் பெரும்பாலான மக்கள் பட்டினி நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் நம்முடைய தரப்பிலிருந்து யாரோ ஒருவர் பாலஸ்தீன சமுதாயம் முழுவதும் நமக்கு எதிரி என்று முடிவு செய்வதை கற்பனை கூடசெய்து பார்க்க முடியுமா?'' என்று அலெக்ஸ் பிஸ்மான் Yediot Aharonot- TM எழுதுகிறார். இஸ்ரேல் இராணுவ ஆய்வாளர் டாக்டர் ஷிமுயெல் பார் இதுதான் விஷயம் என்கிறார். இஸ்ரேல் இராணுவத்தின் நோக்கமே பாலஸ்தீன மக்கள் அனைவரையும் அச்சுறுத்துவதுதான் என்று ஜெருசலேம் போஸ்டில் மேற்கோள் காட்டப்பட்டார். இஸ்ரேல் தனது விமானப்படைத் தாக்குதல் மூலம் பாலஸ்தீன மக்களுக்கு "சகித்துக்கொள்ள முடியாத நரக வேதனையை" உருவாக்குவதன் மூலம் இஸ்லாமிய போராளிகளுக்கு எதிராக அதே மக்கள் திரும்ப வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் இஸ்ரேல் எதிர்பார்த்ததற்கு மாறாக இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கமான ''ஹமாஸ்'' அமைப்பிற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் திரும்புவதற்கு மாறாக, அவர்களுக்கு மக்களது ஆதரவு பெருகிக் கொண்டே வருகின்றது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாலஸ்தீன மக்களின் எழுச்சி இயக்கம் இன்டிப்தா துவக்கப்பட்ட பின்னர் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவு 60சதவீதம் அதிகரித்திருக்கின்றது. தனது நடவடிக்கைகளுக்கு பெருகி வரும் விமர்சனங்களைத் தொடர்ந்து, தனது ஏவுகணையை மக்கள் அதிகம் வாழும் இடத்தில் செலுத்தவில்லை என்றும் அமைதியான ஒரு சாலையில் "பயங்கரவாதிகள் குழு" ஒன்று பயணம் செய்த காரை குறிவைத்து ஏவப்பட்டதாகக் காட்டுவதற்கு இஸ்ரேல் இரணுவம் ஒரு சிறிய வீடியோ செய்திப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. இஸ்ரேல் ஏவுகணையால் அந்தக்கார் வெடித்து சிதறியது. ஹமாஸ் இயக்க உறுப்பினர்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். அந்த காருக்கு அருகில் இருந்த ஒருவரும் கொல்லப்பட்டார். இத்தகைய அரசியல் கொலைமூலம் எப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் என்பதை இஸ்ரேல் இராணுவம் விளக்கவில்லை. இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷெரோன் பாலஸ்தீன பிரதமர் அகமத் குரேய் விடுத்த போர் நிறுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்துவிட்டார். இஸ்ரேல் தாக்குதலையும் அதேபோல பாலஸ்தீன போராளிகளது தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும் என்பன அதில் உள்ளடங்கும். பதிலாக அவர், இஸ்ரேலிய இராணுவத்தால் முற்றிலும் அடிப்படைக் கட்டுமானம் சிதைக்கப்பட்ட பாலஸ்தீன நிர்வாகம், இஸ்ரேலியர்கள் மீதான அனைத்து தாக்குதல்களையும் தடுப்பதற்கு போராளிகள் அணியினைக் கலைக்கவும் ஆயுதங்களைக் களையவும் கோரினார். அத்தகைய நசுக்குதலுக்கான ஷெரோனின் கோரிக்கை, அப்படி செய்வது சாத்தியம் என்றாலும்கூட அதன் விளைவு உள்நாட்டுப் போராகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அக்டோபர் 22-ந்தேதி இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீன போராளிகள் என்று "சந்தேகிக்கப்படும்" மூன்றுபேரை சுட்டுக் கொன்றனர். இவர்களில் ஒருவர் கால்கிலா என்ற இடத்திலும் மற்ற இருவர் ஹெப்ரான் என்ற இடத்திலும் தனித்தனி சம்பவத்தில் கொல்லப்பட்டனர். ஹெப்ரான் பாலஸ்தீன மக்கள் வாழுகின்ற நகரம். அந்த நகரத்தில் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான ஆத்திரமூட்டும் எண்ணற்ற நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான 400 சியோனிஸ்டுகளின் வேற்று நாட்டு எல்லைக்குட்டபட்ட பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள் மற்றும் அவர்களுக்கு 1500-துருப்புக்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டிருக்கின்றனர். பாலஸ்தீனியர்களை ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில் இருந்து பலவந்தமாக வெளியேற்றுவதற்கு ஒரு சாக்காகப் பயன்படுத்தக்கூடிய மேலும் அவர்களை பயங்கரவாத நடவடிக்கைக்குள் தூண்டிவிடும் மற்றொரு சம்பவத்தில், இஸ்ரேலிய துருப்புக்கள் பாலஸ்தீனிய முதியவர் ஒருவரை, வட காசா பகுதியில் உள்ள ஒரு குடியேற்றமான, எலிசினாய் அருகில் சுட்டுக் கொன்றனர். முதலில் அவர் யூதர் குடியிருப்பில் புகுவதற்கு முயன்றதாக இராணுவம் சமாதானம் கூற முயற்சித்தது. அதற்குப் பின்னர் அந்த முதியவர் தங்களுக்கு தெரிந்தவர் தான் என்றும் அவர் யூதர்களுக்கு மிரட்டலாக இல்லை என்றும் இஸ்ரேல் இராணுவம் ஒப்புக்கொண்டது. அந்த சம்பவம் நடந்த பல மணிநேரத்திற்குப் பின்னர், மத்திய காசாவில் உள்ள நெட்சாரிம் மீதான தாக்குதலில், துப்பாக்கி ஏந்திய பாலஸ்தீனியர்கள் மூன்று இஸ்ரேல் இராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றனர், இரண்டு பெண்களும் மற்றொருவரும் அந்த தாக்குதலில் பலியானார்கள். அதைத் தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைவீரர்கள் விரட்டிச்சென்று பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த போராளி ஒருவரை சுட்டுக்கொன்றனர். சர்வதேச சட்டத்தை மீறுகின்ற வகையில் மற்றொரு கடுமையான நடவடிக்கையை இஸ்ரேல் துருப்புக்கள் மேற்கொண்டன. மேற்குக்கரை பகுதியில் செயல்பட்டுவரும் மருத்துவ மனைகளில் திடீர் சோதனை நடத்தி பாலஸ்தீன போராளிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை இஸ்ரேல் இராணுவம் கைது செய்தது. அக்டோபர் 25-அதிகாலையில் ஜீப்புகளில் வந்த இஸ்ரேலிய ராணுவத்தினர் நாபுலஸ் பகுதியிலுள்ள ஆங்கிலிகன் மருத்துவ மனையில் திடீர் என்று புகுந்து கதவுகளை தகர்த்துக் கொண்டு அறைக்கு அறை சோதனை நடத்தினர், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹமாஸ் உறுப்பினர் காலித் ஹமீதை கைது செய்து சென்றனர். அப்போது அந்த மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் அண்ணான் அப்துல் ஹக் அசோசியேட் பிரஸ்ஸிடம்: "இராணுவ வீரரிடம் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக விளக்கினேன். பின்னர் அவர்கள் அவரது உடலில் பொருத்தப்பட்டிருந்த மருத்துவ சாதனங்ளை அப்புறப்படுத்தினர்." எனக் கூறினார். அந்தப் போராளி ஏற்றிச்சென்ற வெடிகுண்டு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே வெடித்ததால் அவர் கடுமையாக காயம் அடைந்ததாக இஸ்ரேல் இராணுவ பெண் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அக்டோபர் 21-ந்தேதி ஐ.நா பொதுச்சபை, மேற்குக்கரை பகுதியில் பாலஸ்தீன எல்லைக்குள் ஆழமாக ஊடுருவி பாலஸ்தீன மக்களை அகதிகளாக ஒதுக்குகின்ற வகையில் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டிருப்பதையும் இஸ்ரேலுக்கும் மேற்குக் கரைக்கும் இடையில் எல்லையை மாற்றியமைக்கின்ற வகையில் இஸ்ரேல் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக ஐ.நா-பேரவை இஸ்ரேலைக் கண்டிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஜெருசலத்திற்கு வடக்கே அமைக்கப்பட்ட தடுப்புச்சுவருக்குள் பல்லாயிரக் கணக்கான பாலஸ்தீன மக்களை நகரத்தில் இருக்க அனுமதி இல்லாமலும், அதேநேரத்தில் ஜெரூசலத்தின் தெற்கு பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தங்களது குடும்பங்கள், பணியிடங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு விடுவர். மற்றவர்கள் இதன் மூலம் நகரிலிருந்து துண்டிக்கப்படுவார்கள், அது அவர்களது ஜெரூசேலம் குடியுரிமையும் பெறுவதற்கான உரிமையும் பாதிக்கும். இவ்வாறு, இச்சுவரானது பாலஸ்தீனியர்களுக்கு வாழ்க்கையை சகிக்க முடியாத்தாக ஆக்கும் இன்னொரு நடவடிகையாக இருக்கும், அவர்கள் தாமாகவே ஜெரூசலேத்தை விட்டு மற்றும் இஸ்ரேலிய சுவர்ப்பக்கம் விட்டு அகலுவார்கள், சரியான பெயரைக் கொடுக்க வேண்டுமானால், இது இனத்துடைத்துக் கட்டல் ஆகும். அத்தீர்மானமானது, இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன எல்லைப் பகுதிகளில் "சுவர் கட்டுதலை நிறுத்தவும் திரும்பப்பெறவும்" கோரியதுடன், அத்தடுப்பானது "சர்வதேச சட்டத்தின் பொருத்தமான விதிமுறைகளுக்கு முரண்பாடாக" இருந்தது. ஆனால் ஐரோப்பிய அரசுகள் அமெரிக்க அழுத்தத்திற்கு அடிபணிந்து, அரபு கோரிக்கையான அது ஹேக்கில் உள்ள சர்வதேச நீதி மன்றத்தில் முறையிடப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவு தர மறுத்தன. ஐ.நா-பேரவையில் இந்தக் கண்டன தீர்மானம் மிகப்பெரும் அளவில் உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா இஸ்ரேல், மற்றும் பெயருக்காக சுதந்திர நாடுகள் என்று அழைக்கப்படும் மைக்ரோனேஸியா மற்றும் மார்ஷல் தீவுகள் ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. பாலஸ்தீன மக்களை இடம் பெயரச்செய்யலாம், அவர்களது எல்லையைத் பிடித்துக்கொள்ளலாம், பாலஸ்தீன மக்களுக்கு எதிராக போர் புரியலாம் என வாஷிங்டன் தற்போது இஸ்ரேலுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டது. ஐ.நா- பேரவைத் தீர்மானத்தின் படி இஸ்ரேல் ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கத் தவறுமானால், அது பற்றி ஐ.நா-பொது செயலாளர் கோபி அன்னான் அறிக்கை தந்து, மேல் நடவடிக்கை பற்றி பரிந்துரைக்க வேண்டும். இதன் படி ஐ.நா-பேரவைத்தீர்மானம் எதற்கும் பயன்படாத வெறும் வார்த்தைகள் என்பது தான் உண்மை. ஜனாதிபதி புஷ் இந்த ஆண்டு தொடக்கத்தில் இஸ்ரேல் எழுப்பிக் கொண்டுள்ள தடுப்புச் சுவர் ''ஒரு பிரச்சனை'' என்று கூறியபோதிலும், இப்பொழுது குடியரசுக் கட்சி நிர்வாகம் இஸ்ரேல் புரியும் எந்தக்குற்றத்தையும் சர்வதேச சட்ட மீறலையும் ஒப்புக்கொள்வது என்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டது என்பதை சமிக்கை காட்டியது. விடுமுறைக்கு பின்னர் இஸ்ரேல் நாடாளுமன்ற முதல் கூட்டம், நடைபெற்ற போது பிரதமர் ஏரியல் ஷெரோன் உரையாற்றும்போது 12-மாதங்களுக்குள் தடுப்புச்சுவற்றைக் கட்டி முடித்து விடுவதாக உறுதியளித்தார். துணைப்பிரதமர் எகுட் ஒல்மர்ட் ஐ.நா-பேரவைத் தீர்மானம் பற்றி இஸ்ரேல் வானொலியில் உரையாற்றும் போது," வேலியை எழுப்பிக் கொண்டே இருப்போம். இஸ்ரேல் குடிமக்களின் பாதுகாப்பிற்கு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருவோம்" என்று குறிப்பிட்டார். மேற்குக்கரைப் பகுதியில் இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவும் பாலஸ்தீன மக்களுக்கு மேலும் ஆத்திரமூட்டும் வகையிலும், இஸ்ரேல் வீட்டு வசதி அமைச்சர் மேற்குக்கரையின் வடக்கில் உள்ள ஒரு குடியேற்ற இடமான கார்னேய் ஷோம்ரானில் மற்றும் ஜெருசேலத்தின் வடக்கு பகுதியான Givat Ze'ev - ல் 300க்கு மேற்பட்ட வீடுகளை புதிதாக கட்டுவதற்காக டெண்டர்களை கோரியுள்ளார். இதனை அடுத்து இந்த மாதத் தொடக்கத்தில் மேற்குக் கரையில் உள்ள குடியேற்றங்களில் மேலும் 600 புதிய வீடுகளை கட்டுவதாக அறிவித்தது. பீஸ்நவ் அமைப்பு தந்திருக்கின்ற தகவலின்படி இந்த ஆண்டு மட்டும் இஸ்ரேல் அரசாங்கம் இத்தகைய புதிய வீடுகளுக்கான ஒப்பந்த புள்ளிகளை கோரி 1500-க்கு மேற்பட்ட டெண்டர்களை பிரசுரித்திருக்கிறது. ஆக்கிரமிப்பின் கீழ் இப்படி புதிய குடியிருப்புக்களை அமைப்பது சர்வதேச ஒப்பந்தங்களின் படி சட்ட விரோதமானது என்பது மட்டுமல்ல, இந்த இடம் பாலஸ்தீனியர்களிடம் ஒரு அரசுக்காக ஒப்படைக்கப்பட வேண்டியதாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதி புஷ் புதிய குடியேற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு அழைப்பு விடுத்திருக்கிற அதேவேளை, இம்முறை கோரிக்கை விடுத்திருப்பது "பயனற்றது" மற்றும் கடுமையான ஆட்சேபனைகள் எதுவும் இல்லையென்று இஸ்ரேல் நம்புகின்றது. அதுமட்டுமல்ல ஈராக் போரிலும், 2004-ல் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலிலும் தனது கவனம் முழுவதையும் வாஷிங்டன் ஈடுபட்டுக்கொண்டிருப்பதால் தனது விருப்பப்படி செயல்படுவதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கிவிட்டதாக இஸ்ரேல் தெளிவாக நம்புகிறது. அக்டோபர் 4-ந்தேதி அதிகாலை 2.30-மணிக்கு ஷெரோன் ஆட்சி மற்றொரு அட்டூழியத்தை செய்திருக்கின்றது. காசாவில் உள்ள அல்சகரா பகுதியில் 13-மாடி கட்டிடங்களில் குடியிருந்த 2000-த்திற்கு மேற்பட்ட பாலஸ்தீன மக்களை நள்ளிரவில் தட்டியெழுப்பி வெளியேற்றிவிட்டு அந்தக் கட்டிடங்களை குண்டுவைத்து இஸ்ரேல் தகர்த்தது. ஒரே குண்டில் இப்படி அவர்கள் புரிந்த நாசவேலைகளால் அருகாமையில் இருந்த பல குடியிருப்புக்கள் நொருங்கின, குறைந்த பட்சம் 1000-மக்கள் வீடுகளை இழந்து தத்தளிக்கின்றனர். பாலஸ்தீன போராளிகளை கட்டுப்படுத்துகின்ற பாலஸ்தீன தற்காப்பு படையைச் சார்ந்தவர்கள் பல மாடி கண்காணிப்பு கட்டிடங்களை கட்டி வந்தார்கள். அவற்றை இஸ்ரேல் இராணுவம் பிடித்துவிட்டது. இந்தக் கட்டிடங்களை கண்காணிப்போர் அமைப்பாக பாலஸ்தீன போராளிகள் பயன்படுத்திக் கொண்டிருப்பதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கட்டிடங்களை தகர்ப்பதற்கு 11-மாதங்களுக்கு முன்னரே திட்டங்கள் தீட்டப்பட்டன. அந்தக் கட்டிடங்களை போராளிகள் பயன்படுத்திக் கொள்ளாமல் தடுப்பதற்கு பாலஸ்தீன நிர்வாகத்திற்கு அவகாசம் தருவதற்காக இவ்வளவு நாட்கள் காத்திருந்ததாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர். 140-க்கு மேற்பட்ட இதுபோன்ற மாடிக் குடியிருப்புக்கள் தகர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த செயல் "போர் குற்றமாகும்" என பாலஸ்தீன தரப்பில் உடன்பாட்டு பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கின்ற சாப் எரெக்காட் கருத்து தெரிவித்தார். அப்பகுதியில் ஐ.நா-தூதராக பணியாற்றி வருகின்ற Terje Roed-Larsen இத்தகைய கட்டிடங்கள் இடிப்பு குறித்து தனது கடுமையான வருத்தத்தை தெரிவித்துக் கொண்டிருக்கிறார். "சர்வதேச சட்ட விதிகளுக்கு புறம்பாக இது போன்ற சொத்துக்களை அழித்துக்கொண்டு வருகிறார்கள்", "அத்தகைய நடவடிக்கைகள் இது இஸ்ரேலின் நியாயமான பாதுகாப்பு நடவடிக்கைகக்கு பாதகமாக அமைந்துவிடும். இதுபோன்ற நடவடிக்கைகள் பாலஸ்தீன மக்களிடம் ஆத்திரத்தை, விரக்தியை உருவாக்கிவிடும்" என்று அவர் மேலும் கூறியுள்ளார். அன்று காலையிலேயே இஸ்ரேல் இராணுவத்தினர் Gush Kati எனும் மற்றொரு குடியிருப்பு பகுதியில் ஒரு பாலஸ்தீன குடிமகனை சுட்டுக் கொன்றனர். காசா நகரத்து மருத்துவமனை ஒன்று, துப்பாக்கி குண்டு காயங்களுடன் 17-வயது இளைஞர் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார், அவர் சென்ற புதன் கிழமையன்று காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் காயம் அடைந்தவர். மேற்குக் கரைப்பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த இன்னொருவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டார், என்று குறிப்பிட்டது. |