World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : இத்தாலி

Italy: 10-million-strong general strike protests pension cuts

இத்தாலியில் ஓய்வூதிய வெட்டுக்களை கண்டித்து, 10 மில்லியன் ஊழியர் பொதுவேலை நிறுத்தம்

By Marianne Arens
28 October 2003

Use this version to print | Send this link by email | Email the author

இத்தாலியின் சில்வியோ பெர்லுஸ்கோனி அரசாங்கம் மேற்க்கொண்டு வரும் பென்சன் கொள்கையை, கண்டிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு வெள்ளிக் கிழமையன்று (அக்டோபர் 24) பத்து மில்லியன் தொழிலாளர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இத்தாலியின் பிரதான நகரங்களில் நடைபெற்ற கண்டன பேரணிகளில் பென்சன் பெறுவோர், மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்கள் 1.5 மில்லியன் பேர் கலந்து கொண்டனர். அவர்கள் முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். "நமது எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்" மற்றும் "பெர்லுஸ்கோனி திட்டம், வெற்றி பெறுமானால், வயது முதிர்ந்து சாவதை விட இளமையில் செத்து விடுவதே நல்லது" என்பது போன்ற முழக்கங்களுடன் அணி வகுத்து வந்தனர்.

பென்சன் தொடர்பான புதிய நகல் திட்டத்திற்கு அக்டோபர் 3-ந் தேதி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது, அதன்படி 2008 முதல் ஊழியர்கள் குறைந்த பட்சம் 40 ஆண்டுகளுக்கு பென்சன் சந்தா செலுத்தியிருக்க வேண்டும், அல்லது பென்சன் பெறுவதற்கு தகுதி பெறும் முன்னர், ஆண்களாகயிருந்தால் குறைந்த பட்சம் 65 வயதாயிருக்க வேண்டும். (பெண்களாயிருந்தால் 60 வயதாயிருக்க வேண்டும்). இத்தாலியில் தற்போது உள்ள நடைமுறைப்படி 32 ஆண்டுகள் சந்தா செலுத்திய பின்னர் 57 வயதில் ஓய்வு பெற்று பென்சன் பெற முடியும். 37 ஆண்டுகள் வரை கட்டணம் செலுத்தியவர்களில் வயது வரம்பு பற்றி கவலையின்றி, ஓய்வூதியம் பெறமுடியும்.

2008-ம் ஆண்டு முதல், 40 ஆண்டுகளுக்கு குறைவாக ஓய்வூதிய சந்தா செலுத்திய அனைவரது ஓய்வூதியம் பெறும் தொகையும் கணிசமாக குறைக்கப்படுகின்ற நிலைமை தோன்றியுள்ளது. இத்தாலியில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வருகின்றது. குறுகிய கால அடிப்படையில் குறைந்த ஊதிய வேலை வாய்ப்புக்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இது பலருக்கு இயலாத காரியமாக ஆகிவிடும். சிலருக்கு 40 ஆண்டுகள் சந்தா செலுத்துவது சங்கடமாக ஆகிவிடும். 24 வயதிற்கு குறைந்த இளைஞர்கள், மூன்று பேரில் ஒருவருக்கு வேலையில்லை. மேலும், இத்தாலியின் தெற்குப் பகுதியில் இந்த எண்ணிக்கை 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற வேலை நிறுத்தத்தால் நான்கு மணி நேரம், எல்லா பிரதான இத்தாலி நகரங்களிலும் ரயில், விமானம், கப்பல் மற்றும் பேருந்து போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டு விட்டன. இத்தாலியின் விமான நிறுவனமான அல்இத்தாலியா 155 விமானங்களை ரத்து செய்தது. நாட்டில் ஓடிய 50 சதவிகித ரயில்கள் பாதிக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை முழுவதும், பல பள்ளிக் கூடங்கள், வங்கிகள், அருங்காட்சியகங்கள், நூல் நிலையங்கள், அஞ்சல் நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. துப்புரவு தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்ததால், மருத்துவ மனைகளில் அவசர உதவி சேவைகள் மட்டுமே இயங்கின.

தனியார் துறையை சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வது பரவலாக நடைபெற்றது. சிசிலி நகரில் உள்ள பியட் கார் தொழிற்சாலையில், வேலை நிறுத்தம் முழுமையாக நடைபெற்றது. வேறு சில நகர்களிலும், Gela - வில் உள்ள பெட்ரோகெமிக்கல் கம்பெனியிலும், பாலெர்மோ கப்பல் தளத்திலும், வேலை நிறுத்தம் நடந்தது. இத்தாலியில் வடக்குப் பகுதியில் உள்ள பெரிய தொழிற்சாலை பகுதிகளில் 50 முதல் 70 சதவிகித ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

இத்தாலியின் மூன்று மிகப்பெரும் தொழிற்சங்க சம்மேளனங்கள் CGIL, CISL, UIL ஆகியவை வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. கீழணி உறுப்பினர்கள் நிறைந்துள்ள தொழிற்சங்கமான, COBAS வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டது, ரோம் நகரில் தனது சொந்த முறையிலான ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

நேப்பிள்ஸ் நகரத்தில், ஆர்ப்பாட்டங்களிலும் பேரணியிலும் சுமார் 80,000 பேர் கலந்து கொண்டனர். அந்தப் பேரணியில் பிரதானமாக உரையாற்றியவர் (UIC) தொழிற்சங்க செயலாளரான Luigi Angeletti (UIL) அவரை எதிர்த்து, தொழிலாளர்கள் ஆவேசமாக குரல் எழுப்பினார்கள். குறிப்பாக, ஆஸ்பெஸ்டாஸ் தொழிலைச் சேர்ந்த தொழிலாளர்கள் மிகுந்த ஆவேசம் கொண்டவர்களாக காணப்பட்டனர். ஆபத்தான தொழில்களில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற தொழிலாளர்கள் குறைந்த பணிக்காலத்தில், ஓய்வு பெறுவதை தடுக்கும் புதிய சட்டத்திற்கு எதிராக அவர்கள் முழக்கம் எழுப்பினார்கள். "இந்த அரசாங்கம் அநீதி புரிவதை தனது முதல் நடவடிக்கையாக எடுத்து வருகின்றது" என்பதை "உங்களது அணிவகுப்பு எதற்கு பயன்படும் உடனடியாக நடவடிக்கை தேவை" என்பது போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன மற்றும் கண்டன, முழக்கங்கள் அடங்கிய பதாகைகளையும், அவர்கள் ஏந்தி வந்தனர்.

டூரின், புளோரன்ஸ் மற்றும் போலோக்னா நகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் எண்ணிக்கை 70,000 இருக்கும். ஜேனோவா நகரில் 60,000 பேர் கலந்து கொண்டனர். மிலான் நகரில் நடைபெற்ற எதிர்ப்பு பேரணியில் அரேசில் உள்ள (பியட் கார் தொழிற்சாலையின் துணை நிறுவனமான ஆல்ஃபா-ரோமியோ ஊழியர்கள் உட்பட 2 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்த தொழிற்சாலை சிசிலியில் உள்ள பியட் தொழிற்சாலையுடன் சேர்த்து மூடப்படும் அச்சுறுத்தலில் உள்ளது. மிலான் நகரத்தில்தான் பெர்லுஸ்கோனி பிறந்து வளர்ந்தார். எனவே, அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் அளவு பலருக்கு வியப்பளித்தது. தொழிற்சங்க தலைவர்கள் எவரும் மிலான் பேரணியில் உரையாற்றவில்லை. பேரணியில் கலந்து கொண்டவர்களில் பாதிப்பேர், ஆபத்தான பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள், வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கித் தவிப்பவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் ஏழைகள் ஆவர். பெர்லுஸ்கோனி அரசாங்கத்திற்கு எதிராக ஆவேச முழக்கம் இட்டவர்கள் UIL தொழிற்சங்க பிரதிநிதி பேசும் போது, கைதட்டவில்லை.

ரோம் நகரில் Piazza della Bocca della Verità- லிருந்து Piazza Navona -க்கு சென்ற பேரணியில் காகிதத்தால் செய்யப்பட்ட "உண்மையின் குரல்" என்ற பொம்மையை தூக்கிச் சென்றனர். அது தெய்வ வாக்கு கூறும் பாத்திரத்தை செய்ய இருந்தது மற்றும் அதன் வாயில் கைவைப்பவர்களின் உண்மைத் தன்மையை சோதிக்க இருந்தது. பெர்லுஸ்கோனி முகமூடி அணிந்த ஒரு தொழிற்சங்கவாதி தனது கையை அதன் வாயிலில் வைத்து, இத்தாலி பிரதமர் தனது உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறிவிட்டார் என்பதை சித்தரித்து கேலி செய்கின்ற வகையில் அந்த பொம்மை பேரணியில் கொண்டு செல்லப்பட்டது.

அது எப்படியிருந்தாலும் தொழிற்சங்கங்களின் இயலாமையை இந்தப் பேரணி எடுத்துக் காட்டியது- புராதன காலம் தொட்டு உண்மையில் ஒருவரும் "Bocca"-வினால் கண்டிக்கப்பட்டிருக்கவில்லை.. அரசாங்கத்திற்கு உண்மையிலேயே அச்சுறுத்தலாக எந்த தொழிற்சங்கமும் செயல்படவில்லை. UIC மற்றும் CISL ஆகிய இரண்டு தொழிற்சங்கங்கள் 2002 ஜூலை மாதம் பெர்லுஸ்கோனியுடன் "இத்தாலிக்கான ஒப்பந்தம்" எனும் ஒப்பந்தத்தை செய்து கொண்டு இருக்கின்றன. அதற்குப் பின்னர் அந்த இரண்டு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும், தொழிலாளர், வேலை நிலவரம் தொடர்பான "சீர்திருத்த" சட்டங்கள் பற்றி பேச்சு வார்த்தை நடாத்திக் கொண்டிருக்கின்றன.

கடைசியாக நடைபெற்றுள்ள நான்கு மணி நேர பொது வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்களிலேயே நிலவுகின்ற ஒற்றுமையை வெளிப்படுத்தும் மிகப் பொதுவான பெயரிடப்படுவதாக காணப்படுகிறது. மிகப் பெரிய தொழிற்சங்கமான CIGL ன் நோக்கம் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்துடன், பேச்சு நடத்த வேண்டும் என்பதுதான். சங்கத்தின் அரசியல் முன்னோக்கு ஒலிவ் மர கூட்டு- பெர்லுஸ்கோனி பதவிக்கு வருவதற்கு முன்னர் பதவியில் இருந்த இடது மற்றும் முதலாளித்துவ இயக்கங்களின் கூட்டுக்கு ஆதரவு அளிப்பதாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. உண்மையில் ஒலிவ் மர கூட்டு, இருக்கின்ற அரசாங்கத்திற்கு ஒரு மாற்றைத் தருகின்ற வகையில் ஒன்றையும் வழங்கவில்லை. பதவியிலிருந்த போது இத்தாலியின் நலன்புரி அரசின் கட்டுக் கோப்புக்களை தகர்ப்பதற்கான நடவடிக்கைளை தொடக்கியது, தனியார்மய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியது மற்றும் மாஸ்ட்ரிச் உடன்பாட்டின் ஆணைகளுக்கு ஒன்றிப் போகும் வகையில் இத்தாலியின் பொது நிதியை வெட்டிக் குறைக்கும் பொருட்டு சமூக பாதுகாப்பு செலவினங்களை வெட்டியது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் அக்டோபர் 24 பொது வேலை நிறுத்தத்தை தங்களது செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காக ஒரு அரங்காக பயன்படுத்திக் கொண்டார்கள். ரோம் நகரத்தின் பிரதான தெருக்களின் வழியே CISL- லிருந்து Savino Pezzotta வழியே அணிவகுத்து வந்த தலைவர்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலியில் உருவான கம்யூனிச இயக்கங்களை சேர்ந்தவர்கள்-Fausto Bertinotti (மீள நிறுவப்பட்ட கம்யூனிஸ்டுகள்), Piero Fassino (ஜனநாயக இடதுகள் Democratic Left, DL) and Armando Cossutta (இத்தாலிய கம்யூனிஸ்டுகள்). தேசிய உணர்வை வெளிப்படுத்துகின்ற வகையில் தேசிய வண்ணங்களில்- சிவப்பு, பச்சை மற்றும் வெள்ளை என பல வண்ணங்களில் பேரணியில் பிடித்து வரப்பட்டன.

போலாக்ஙா நகரில் CGIL பொதுச் செயலாளர் Guglielmo Epifani, முன்னாள் பொதுச் செயலாளர் செர்ஜியோ கோபாராட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். கோபாராட்டி, போலாக்ஙா நகர மேயர் பதவிக்கு மைய-இடது கட்சிகளின் வேட்பாளராக போட்டியிடுகின்றார். பெர்லுஸ்கோனி அரசாங்கம் கவிழுமானால் கோபாராட்டி பிரதமராக வரக்கூடும் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

அரசாங்கமும், முதலாளிகளும் வேலை நிறுத்தத்தின் சிறப்பை குறைத்து மதிப்பிடுகின்ற வகையில் அறிக்கைகளை வெளியிடுகின்றன. இத்தாலிய முதலாளிகள் சம்மேளனம் Confindustria தலைவர் Antonio D'Amato, வெள்ளிக் கிழமை அன்று பகல்வேளை 30 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே வேலை நிறுத்தம் செய்தனர் என்று ஏற்கனவே அறிவித்தார், அதேவேளை தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சர் றொபர்ட்டோ மரோனி (வடக்கு கழகம்) "இந்த பகுதி நேர வேலை நிறுத்தம்" என்று மிகவும் இழிவு படுத்துகின்ற வகையில் பேசினார்.

உண்மையிலேயே, இந்த வேலை நிறுத்தத்தால் அரசாங்கம் பீதியடைந்திருக்கின்றது. 1994-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஓய்வூதிய சீர்திருத்த திட்டங்களால் ஏற்பட்ட கிளர்ச்சிகளின் விளைவாக பெர்லுஸ்கோனி தலைமையில் நடைபெற்றுவந்த முதலாவது அரசாங்கம் பதவி விலக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இன்றைய தினம் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் போக்கிற்கு மாறாக, சமூக நலத் திட்டங்களை வெட்டியதற்கும், ஈராக் மீது அமெரிக்கா நடத்திய படையெடுப்பை ஆதரித்ததற்கும் தொழிலாளர்களில் மிகப் பரந்த பகுதியினர் பெர்லுஸ்கோனி அரசாங்கத்திற்கு எதிராக ஆத்திரம் கொண்டிருக்கின்றனர். ஊழியர்களை தன்னிச்சையாக பணிநீக்கம் செய்வதற்கு எதிராக பாதுகாக்கும் பந்தி 18ஐ ரத்து செய்யும் திட்டத்திற்கு எதிராக சென்ற ஆண்டு 13 மில்லியனுக்கு மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆண்டு வசந்த காலத்தில், ஈராக் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து 3 மில்லியன் மக்கள் ரோம் வீதியில் பேரணி நடத்தினர்.

கடந்த சில வாரங்களில் பல்வேறு பெரும் மோதல்களின் காரணமாக அரசாங்கம், பலவீனப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. அக்டோபர் மாத தொடக்கத்தில், இத்தாலியின் துணை பிரதமரும் நவ பாசிச தேசிய முன்னனியின் (NA) தலைவரும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இத்தாலியின் பிரதிநிதியுமான கியான் பிராங்கோ பினி (Gianfranco Fini), இத்தாலி குடிமக்களாக ஆகிவிட்ட அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று, மிகவும் வியப்பளிக்கின்ற வகையில் கோரிக்கை ஒன்றை விடுவித்தார். இப்படி ஒரு வியப்பூட்டும் கோரிக்கையை முன் வைத்திருப்பது, படுபயங்கரமான இன வெறி கொண்ட வடக்கு லீக்கின் தலைவரான உம்பர்ட்டோ போசிக்கு எதிராக வடக்கு கழகத்தின் கரத்தை வலுப்படுத்த நோக்கம் கொண்ட, ஒரு ராஜதந்திர நடவடிக்கை என்று கருதப்படுகிறது. ஏனென்றால், போசி அத்தகைய கோரிக்கைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஓய்வூதிய பிரச்சினையில், போசி தான் "வடக்கு ஓய்வூதியங்களை" பாதுகாக்கப் போவதாக வாயளந்தார் ("இத்தாலியின் வடக்குப் பகுதியில், ஓய்வூதியம் தொடப்படாது") அதே அமைப்பைச் சேர்ந்த றொபர்ட்டோ மரோனி அரசாங்கத்தின் திட்டம் "மீற முடியாதது" என்று குறிப்பிட்டுள்ளார்.

UGL தொழிற்சங்கம் தேசிய கூட்டணியுடன் நெருக்கமான உறவு கொண்டிருக்கின்றது. ரோம் நகரில் ஓய்வூதிய திட்டங்களுக்கு எதிராக UGL சொந்த முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது. அரசாங்கத்திற்குள் நிலவுகின்ற பிளவுகளின் காரணமாக, பெர்லுஸ்கோனி தனது "சீர்திருத்தங்களை" செயல்படுத்துகின்ற காலக்கெடுவை 2008-ம் ஆண்டு வரை தள்ளிப் போட்டிருக்கிறார். தானாக முன்வந்து நீண்ட நேரம் பணியாற்ற உடன்படும் ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் திட்டத்தையும் அவர் அறிவித்தார்.

அரசாங்கம் பீதியடைந்திருக்கிறது மற்றும் பலவீனப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகின்ற வகையில் பொது வேலை நிறுத்தத்தின்போது, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அன்றைய தினம், இத்தாலி பத்திரிக்கைகளில், இத்தாலியின் செம்படைகளைச் சார்ந்தவர்கள் எனக் கூறப்படும் 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்போடு பிரசுரிக்கப்பட்டிருந்த்து. வேலை நிறுத்தம் தொடங்குவதற்கு முன்னர் அதிகாலையில் இத்தாலி முழுவதிலும் அதிகாலையில் நூற்றுக்கணக்கான போலீசார் திடீர் சோதனைகள் மற்றும் தேடுதல்களில் உண்மையில் பரந்த அணிதிரளலில் பங்கேற்க திட்டமிட்டிருந்தவர்களை அச்சுறுத்துவதற்கு உண்மையில் நோக்கங் கொண்டிருந்தது மற்றும் அவர்களை பயங்கரவாதிகள் என்று சித்தரித்துக் காட்டுவதற்கும் நோக்கங் கொண்டிருந்தது.

கைது செய்யப்பட்டவர்கள், (தொழிலாளர் அமைச்சகத்தின் இரண்டு ஆலோசகர்கள்) Massimo D'Antona and Marco Biagi ஆகியோர் கொலை செய்யப்பட்டதற்கு காரணமானவர்கள் என்று கருதப்படுவதாக, உள்துறை அமைச்சர் Giuseppe Pisanu தெரிவித்தார். தொழிலாளர்களின் வேலை நிலைமைகளில் பெரும் மாறுதல்களைக் கொண்டு வருவதற்கான சட்டத்தை வரைவதற்கு பொறுப்பாக இருந்தவர் பியாகி ஆவார். அது பொது வேலை நிறுத்தம் நடந்த அக்டோபர் 24 அன்றுதான் அமலில் வர இருந்தது.

அக்டோபர் 30-ம் தேதி, மேலும் வேலை நிறுத்தம் செய்வதற்கு தொழிற் சங்கங்கள் அறிவிப்பு செய்திருக்கின்றனர். நவம்பர் 7-ந் தேதி FIOM பொறியியல் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யவிருக்கின்றனர், இது மாற்று தொழிற்சங்கங்கள் பலவற்றால் ஆதரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வேலை நிறுத்தம் செய்யும் உரிமை தொடர்பான சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது. நவம்பர் 7-ந் தேதி, நடைபெறவிருக்கும், வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்படவிருக்கும் தொழில் அதிபர்களுக்கு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Top of page