World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Dollar decline accelerates as US Treasury abandons "strong" currency policy

அமெரிக்க கருவூலம் 'வலுவான' நாணயக் கொள்கையைத் துறந்த அளவில் டாலர் மதிப்பு குறைதல் அதிகரிக்கிறது

By Nick Beams
21 May 2003

Use this version to print | Send this link by email | Email the author

புஷ் நிர்வாகம், அமெரிக்க டாலரின் மதிப்பைக் குறைக்கும் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளது என்ற, கடந்த சில நாட்களில் ஏற்பட்டுள்ள வளரும் அக்கறை, உலகளாவிய பணச் சந்தைகளில் பெரிய நெருக்கடியைத் தோற்றுவிக்கும் திறனுடையதாக விளங்குகிறது.

அமெரிக்காவின் கொடுப்புத்தொகைச் சமநிலையில் (Balance of Payments) பற்றாக்குறை, உள் நாட்டு மொத்த உற்பத்தியில் 5 சதவீதம் அளவில் இருப்பது, செல்வமுடையோருக்குக் கூடுதலான வரிவிலக்கை நிர்வாகம் கொடுப்பதால் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் கூடுதலான வளர்சியில் பற்றாக்குறையும் ஏற்படுவதையடுத்து, டாலரின் மதிப்பு வீழ்ச்சியடையும் என்பது உறுதி. சொல்லப்போனால் ஜனவரி 2002லிருந்தே வணிக அளவு அடிப்படையில் அனைத்து நாணயங்களின் மதிப்பில் அது 22 சதவிகிதம் குறைந்துள்ளதோடு, கடந்த 2 மாத காலத்தில் 8 சதவிகிதத்திற்கு மேலாகக் குறைந்துள்ளது.

ஆனால் இப்பொழுது ஒரு புதிய காரணியும் பங்கைக் கொண்டுள்ளது; அதாவது அதிகரித்துவரும் வேலையின்மை, பணப் புழக்கக் குறைவு, குறைவான வளர்ச்சி விகிதம் இவற்றின் அரசியல் விளைவுகளால் ஏற்படக்கூடிய அச்சத்தினால், புஷ் நிர்வாகமே, அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க டாலரின் சரிவை ஆதரிக்கிறதோ என்ற கண்ணோட்டம்தான் அது.

1995ம் ஆண்டு அமெரிக்க நாணயம் 79 யென் என்ற குறைந்த அளவை எட்டியபோதே, அமெரிக்கா 'பலமான டாலர்' என்ற கொள்கையைத் தொடரத் தொடங்கியது. அது இப்பொழுது அநேகமாகக் கைவிடப்பட்டு விட்டது. கடந்த வார இறுதியில் பிரான்சில் நடைபெற்ற G-8 நிதியமைச்சர்கள் மாநாட்டிற்குப் பின்னர் கூறப்பட்ட விமர்சனங்களைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கக் கருவூலச் செயலர் ஜோன் ஸ்நோ, சமீபத்திய டாலர் சரிவை 'சுமாரான அளவு புதுவகைக்குட்படுத்தல்' (Modest realignment) என்று கூறியதோடு, "பலமான" டாலருக்கு மறுவிளக்கம் கொடுக்கும் வகையில் மற்றைய நாணயங்களுக்கு எதிரான மதிப்பைக் கணக்கில் கொள்ளாத முறையில் தெளிவாக்கினார். ஸ்நோவின் சிந்தனைப்படி, 'டாலர் ஒரு சக்திவாய்ந்த (பலமான) நாணயம்; ஏனெனில் மக்கள் அதன்மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள், மற்றும் அதைப் போலியாகத் தயாரிப்பது மிகக் கடினம்.

G-8 மாநாட்டில் டாலர் பற்றி விவாதம் கூட இல்லை என்பதும் ஒருங்கிணைந்த நாணய கொள்கையைப் பற்றி முடிவோ எடுக்கப்படவில்லை என்ற அளவில், பணச்சந்தைகள் ஸ்நோவுடைய கருத்துக்களை, புஷ் நிர்வாகம் டாலரின் மதிப்பு குறைவதை ஊக்குவிக்காவிட்டாலும், தடுக்கப் போவதில்லை என்று விளக்க ஆரம்பித்துள்ளன. இதன் விளைவாக இந்த வாரம் வணிகத்தில், யூரோ அதன் வெளியீட்டு மதிப்பில் 1.17 டாலரை அடைந்து அது 1.20 டாலருக்கு விரைவிலேயே சென்றுவிடும் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. சில பகுப்பாய்வாளர்கள் 1985லிருந்து 1995 வரை நீண்டகால இறங்குமுகத்தை டாலர் கொண்டது போல நிலை மீண்டும் உருவானால், யூரோவும் 1.40 டாலர் என்ற அளவு உயர்வைக் கூட எட்டக்கூடும் என்று கூறுகிறார்கள்.

ஒரு குறையும் மதிப்புடைய டாலர் அமெரிக்காவின் பணப் புழக்கக்குறைப்பு அழுத்தங்களுக்கு வரவேற்கத்தக்க நிவாரணமாகவும், வளர்ச்சிக்குத் தக்க ஆதரவாகவும் இருக்குமென்றாலும் பின்னர் ஒரு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தக் கூடிய திறன் அந்தக்குறைப்புக்கு உள்ளது. இந்த குறைவுப் போக்கு சற்று விரைவாயிற்று என்றால், அகன்று விரிந்து வரும் அமெரிக்க Balance of Payments-ன் இடைவெளிக்கு நிதியூட்டிய அயல்நாட்டு முதலீட்டாளர்கள், தங்கள் நிதியங்களை திரும்பப்பெற்றுக் கொண்டுவிடக்கூடிய அபாயமும் உள்ளது.

அமெரிக்க அரசாங்க கடன் பத்திரங்களில் 45 சதவிகிதமும், பெரு வணிக நிறுவன கடன் பத்திரங்களில் 35 சதவிகிதமும், equities களில் 12 சதவிகிதமும் அயல்நாட்டு முதலீட்டாளர்கள் கொண்டுள்ள அளவில், அப்படிப்பட்ட திரும்பப்பெறும் நடவடிக்கை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

டாலரின் சரிவினால் ஏற்படக்கூடிய இந்த இருபுறத்துக் கூர்மைத்தன்மை -Australian Financial Review வுக்காக தயாரிக்கப்பட்ட பகுப்பாய்வு ஒன்றில் நன்கு புலப்படுத்தப்பட்டது. ஒரு கணிப்பின்படி படிப்படியான 10 சதவிகிதத்தை ஒட்டிய மதிப்புக்குறைவு, அமெரிக்க ஏற்றுமதியின் போட்டித்தன்மையை அதிகரித்து, ஆண்டின் எஞ்சிய பகுதியில் அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஏற்றத்தை 0.7 சதவீதம் என்ற அளவிற்கு கொண்டு செல்லும்.

ஆனால் டாலரின் மதிப்பு அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீது முதலீட்டாளர்களின் நம்பிக்கைக் குறைவினால் சரிந்தால், அது "அயல் மூலதனம் அமெரிக்காவை விட்டு அலறிப்புடைத்துக் கொண்டு ஒடிவிட்டால்" பங்குச்சந்தை வீழ்ச்சியையும், உயர்ந்த வட்டி விகிதத்தையும், வளர்ச்சி விகிதத்தில் எதிர்மறை விகிதத்தையும் ஏற்படுத்தும் அச்சம் உள்ளது.

அமெரிக்க கொடுப்புச் சமநிலை பற்றாக்குறை (Balance of Payment deficit) 500 பில்லியன் டாலர் என்ற உயர்ந்த அளவை எட்டியிருக்கும் நிலையிலும் உலகளாவிய வெளி சமச்சீர் அற்ற நிலை காணப்படுவதாலும்-- பற்றாக்குறைகளும் உபரிகளும் -- உலக உள்நாட்டு மொத்த உற்பத்திக்கு 1.5 சதவிகிதம் என்ற அளவுக்கு சமமாக இருப்பதாலும், நாணய மறு மாற்றுவிகித ஒழுங்குநெறிகள் ஏற்படுத்தக்கூடிய நிலைமைகளைத் தோற்றுவித்தால், மிகப்பெரிய அளவிலான பொருளாதார நெருக்கடியை ஆரம்பித்து வைத்துவிடக்கூடும், என்ற கணிப்பு உள்ளது.

திங்களன்று Financial Times ல் சிகாகோவில் உள்ள புகழ் பெற்ற பொருளாதார நிபுணர் டேவிட் ஹேல் எழுதியுள்ள கட்டுரையில், அமெரிக்கப் பொருளாதாரம் எதிர்கொண்டிருக்கும் சூழ்நிலை "நவீன சகாப்தத்தில் தனித்தன்மை கொண்டுள்ளது" என்று விவரித்திருக்கிறார்.

ஓராண்டுக்கு முன்னரே டாலரின் சரிவு தொடங்கிவிட்டது என்றாலும், கடந்த சில வாரங்களாக, புஷ் நிர்வாகத்தின் நிதிக்கொள்கை பட்ஜெட் பற்றாக்குறையை 500 பில்லியன் டாலர் உயர்த்தக்கூடும் என்ற அளவில் வெளிநாட்டுக் கொடுப்புப் பற்றாக்குறை 600 மில்லியன் டாலராகுமோ என்ற கவலையினால், கூடுதலான சரிவைக்கண்டுள்ளது.

மேலும் "அமெரிக்கா ஓர் ஏகாதிபத்திய அயல் நாட்டுக் கொள்கையை செயல்படுத்தத் தொடங்கியிருப்பதால், அதனுடைய நிதிக் கொள்கை, அயல் வணிகம், மற்றய நாடுகளுடன் தொடர்பு ஆகியவற்றுக்கு தெரியாத விளைவுகளை ஏற்படுத்தக் கூடுமோ என்ற கவலை சந்தைகளில் உள்ளது. தன்னுடைய பேரரசின் உச்சிக்காலத்தில் நடப்பு இருப்புக் கூடுதல்கள்தாம் இங்கிலாந்தில் இருந்தது. கணிசமான அயல்நாட்டுக் கொடுப்புப் பற்றாக்குறையை வைத்துக் கொண்டு பூகோள பெரும் வல்லரசு என்ற பங்கை எந்த நாடும் இதுவரை பெற்றிருந்தது கிடையாது."

ஈராக்கியப் படையெடுப்பால், அரசியல் அளவில் அமெரிக்கா ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகள், எந்த அளவிற்கு இருக்கிறதென்றால், வெள்ளை மாளிகைதான், பிரான்சிற்கும் ஜேர்மனிக்கும் எதிராக அவை போரை எதிர்த்ததற்குப் பதிலடியாக, பொருளாதார அளவில் பெருந்தண்டனையாக கொள்ள வேண்டும் என்பதற்குத் திட்டமிட்டு, டாலர் சரிவு ஏற்பாடுகள் செய்திருக்கக் கூடுமோ என்ற ஊகம் சில பெரிய இடங்களில் ஏற்பட்டுள்ளது.

ஆனால் Deutsche Bankன் தலைமைப் பொருளாதார நிபுணர் நோபேர்ட் வால்டர், அமெரிக்கக் கொள்கையில் அடிப்படை மாறுதல் ஏதுமில்லை என்ற கருத்தையே கூறியுள்ளார். "டாலர் எங்களுடைய நாணயம், உங்களுடைய தலைவலி" என்ற இறுமாப்புத்தான் எப்பொழுதுமே அமெரிக்கரின் திட்டம் என்று தெரிவிக்கிறார்.

அது அப்படிப்பட்ட பெரிய தலைவலியாகத்தான் மாறிக் கொண்டிருக்கிறது. ABN AMRO வில் உள்ள பொருளாதார நிபுணர் Matthew Wickens, International Herald Tribune இடம் கூறியதாவது: யூரோ மதிப்பில் உயர்வு "அதிகம் கூடுதல்" காரணமாக ஐரோப்பிய ஏற்றுமதியாளர் கொள்ளவெண்டிய போட்டித்தன்மை இழப்பு மிகக் கடுமையான விளைவை ஏற்படுத்தும். நாணயமதிப்பு உயர்வு, "அடிப்படை ரீதியாக ஐரோப்பாவிலிருந்து வளர்ச்சியை அப்படியே பெயர்த்து வேறிடங்களில் மறுபங்கீடு செய்துவிடும்."

அதிகாரபூர்வமான மதிப்பீடுகள் ஐரோப்பாவின் வளர்ச்சி இந்த ஆண்டு 1 சதவிகிதம்தான் இருக்கும் என்று தெரிவிப்பதுடன், யூரோவின் மதிப்பு ஒவ்வொரு 10 சதவிகிதமும் உயர்ந்தால் வளர்ச்சி விகிதம் 0.5 லிருந்து 1 சதவிகிதம் குறையும் என்று கூறுகின்றன. யூரோப்பகுதி ஏற்றுமதிகளை நம்பியிருக்கும் தன்மை, கடந்த ஆண்டின் 75 சதவிகித கூடுதல் வளர்ச்சி விகிதத்தில் ஏற்படுத்தியது 0.8 சதவிகிதம் வெளித்தேவையிலிருந்து வந்தது என்பதால்தான்.

ஜப்பான் ஏற்கனவே பணப் புழக்கக்குறைவையும், மந்த நிலையையும் அனுபவிப்பதோடு டாலரின் சரிவால் ஏற்படும் அழுத்தத்தையும் சந்திக்க நேரிடுகிறது. நிதியமைப்பு நிர்வாகிகள், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் யென் 115-120 ஐத் தாண்டாமல் இருப்பதற்கு $20 பில்லியன் டாலர்களுக்குச் சமமான தொகையைச் செலவழித்துள்ளதாகத் தெரியப்படுத்தியுள்ளனர்.

ஐரோப்பிய பணஅளவு நிர்ணய நிர்வாகிகள் யூரோவின் உயர்வைப்பற்றி இன்னும் சரியான அக்கறையைக் காட்டவில்லை. ஆனால் டாலர் சரிவு மோசமாகப்போனால், யூரோப்பகுதி கடுமையான தாக்குதலுக்கு உட்படும். இது நாணயச்சந்தை மூவழிப் போட்டி நாணய மதிப்புக்குறைவின் போட்டி மோதலை (Three way comperitive devaluation conflict) உலகின் மூன்று பொருளாதாரப் பகுதிகளிலும் -அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான்- ஏற்படுத்தும், அனைத்துமே பூகோள சந்தைகளுக்காகக் கடுமையான போராட்டங்களை தொடர்ந்து அதிகரித்து, தங்கள் நாட்டு நாணய மதிப்பைக் குறைத்துக் கொள்ளும் முயற்சி மூலம், உள்ள நிலைமையைத் தக்க வைத்துக் கொள்ளப் பார்க்கும்.

Top of page