:
ஆசியா
:
சீனா
Two Chinese workers sentenced to harsh prison terms
இரண்டு சீனத் தொழிலாளர்கள் கடுமையான சிறைத் தண்டனைக்கு ஆளாகியுள்ளனர்
By John Chan
14 May 2003
Use this version to print |
Send this link by email
| Email the author
Yao Fuxin, Xiao Yungliang
என்ற இரு சீனத் தொழிலாளரின் தலைவர்கள் ''நாட்டின் அதிகாரத்தைத்
தகர்த்தல்'' என்ற குற்றச்சாட்டின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு, நான்கு மாதகால விசாரணைக்குப் பின்னர்
Liaoyang நகர
நீதி மன்றம் ஒன்றினால் முறையே 7, 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்.
யோவும், ஜியாவும் 2002 மார்ச்சில், சீனாவின் வடகிழக்குபகுதி
Liaoyang என்னும்
நகரில் வேலைநீக்கம் செய்யப்பட்டிருந்த தொழிலாளர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை நடத்த உதவி செய்த பின்னர்
கைது செய்யப்பட்டனர். ஏறத்தாழ 30,000 தொழிலாளர்கள், ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டுமென்றும் பண உதவி கோரியும் அமைதியான முறையில் நடத்தப்பட்ட ஊர்வலங்களில் கலந்து கொண்டிருந்தனர்.
மே 9ம் தேதி இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை சீனாவில் அதிகரித்துவரும் வேலையிழப்புகள்,
சீர்குலைந்து வரும் வாழ்க்கைத் தரம் இவற்றிற்கெதிராகத் தொழிலாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை
அச்சுறுத்தும் முறையில் அவற்றை தடுப்பதை நோக்கமாகக் கொண்டவையாகும்.
ஜனவரி மாதம் ஆரம்ப விசாரணையின் போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் போலீஸ்
பயமுறுத்தலையும் மீறி அவ் இரண்டு தலைவர்களுக்கும் ஆதரவாக உள்ளுர் பொது நீதிமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம்
ஒன்றை நடத்தினர். கடந்த வெள்ளியன்று நடைபெற்ற வழக்கு நடவடிக்கைகள் கூடுதலான பாதுகாப்பின் கீழ் நடாத்தப்பட்டது.
இது ஒரு நீதிமன்ற அறையில் இல்லாமல், இரண்டு தொழிலாளரும் ஓராண்டுக்கும் மேலாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு
நிலையத்தில் விசாரணை நடைபெற்றது.
ஹாங்கொங்கிலிருந்து வெளிவரும் சீன தொழிலாளர் புலட்டின் (China
Labour Bulletin) பத்திரிகையின்படி, யோ மற்றும்
ஜியா இருவருடைய இரு மகள்கள் மட்டுமே தடுப்பு நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். வெளியே சில நூறு கலக
எதிர்ப்புப்பிரிவு காவல் அதிகாரிகள், கட்டிடத்தைப் பாதுகாக்கக் குவிக்கப்பட்டிருந்தனர். ஏனெனில் குறைந்தது 300
உள்ளுர் ஆதரவாளர்களாவது, இரண்டு தலைவர்களுக்கும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்த ஆர்ப்பாட்டம் செய்ய வந்திருந்தனர்.
அவர்களுடைய தரப்பின் வழக்கறிஞரான
Ma Shooping விசாரணைக்கு
வரமுடியவில்லை. நான்கு தினங்களுக்கு முன்பு தான், சார்ஸ் நோய் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கட்டாயமாக
10 நாட்கள் ''தனிமைப்படுத்தப்பட்டு'' இருக்க வேண்டும் என்ற உத்தரவு அவருக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அரசாங்கத்தின் செய்தி ஊடக நிறுவனமான
Xinhua, இரு
தொழிலாளர்களும் லியோலஸ் நகரத்தில் தடை செய்யப்பட்டுள்ள சீன ஜனநாயக கட்சிக்கு
(China Democracy Party)
ஒரு உட்கிளையை ஏற்படுத்த முயற்சி செய்த குற்றம் செய்தவர்கள் என கூறியது.
யோவும், ஜியாவும் ''வதந்திகளைப் பரப்புவதிலும் லியோலங் நகராட்சித் துறைகளிலுள்ள அரசாங்க அலுவலகங்களைத்
தாக்குமாறு மக்களைத் தூண்டியதாகவும், அவற்றின் வழமையான வேலைகளை தீவிரமாகக் சீர்குலைத்ததாகவும்''
குற்றஞ்சாட்டப்பட்டனர்.
இந்த குற்றச்சாட்டுகள் நகைப்பிற்குரியனவையாம். 1998ம் ஆண்டிலேயே அதிகாரிகள்
சீன ஜனநாயகக் கட்சியை சட்ட விரோதமான அமைப்பு என்று அறிவித்து அதன் தலைவர்களைக் கைது செய்ததுடன் அது
கிட்டத்தட்ட இல்லாதே போய்விட்டது. ஆயினும் கூட, கடந்த ஆண்டு வேலையற்ற தொழிலாளர்கள் லியோலங் நகரில்
நடத்திய ஆர்ப்பாட்டங்கள், சீன ஜனநாயகக் கட்சி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக அரசியல் சதித்திட்டத்தின் ஒரு
பகுதியாகத் தூண்டிவிட்டவை என அதிகாரிகள் கூறுகின்றனர்.
யோவின் மகள், யோ டான் நியூயோர் டைம்ஸ் பத்திரிகைக்கு ''சட்ட
நடவடிக்கைகள் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக முடிந்துவிட்டன. அரசாங்க வக்கீலின் குற்றச்சாட்டுகள், நீதிமன்றத்தால்
எந்தவிதமான விசாரணையுமின்றி ஏற்கப்பட்டன'' என்று கூறியுள்ளார். மேலும் ''இந்த தீர்ப்புகள் தவறானவையும்,
நியாயமற்றவையுமாகும். சமுதாயத்திற்கு எதிராகவோ, அரசாங்கத்திற்கெதிராகவோ இவர்கள் ஆபத்து விளைவிக்கப்
புறப்படவில்லை. தொழிலாளர்களுக்காகவும், அவர்களுக்குரிய உரிமைகளை பாதுகாக்கவுமே பேசினார்கள். நாங்கள்
விசாரணைக்கு உட்படுத்தப்படத்தேவையில்லை. ஊழல் புரியும் அதிகாரிகள் தான் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும்''
என்றும் கூறியுள்ளார்.
ஜியாவோவுடைய மனைவி, குற்றச்சாட்டுகள் தயாரிக்கப்பட்டவை என்று கண்டனம் செய்ததோடு
இந்தத் தீர்ப்பை நாங்கள் ஏற்பதற்கில்லை என்றும் அறிவித்தார்.
இரண்டு தண்டனைப் பெற்ற தொழிலாளர்களுமே நடுத்தர வயதினர். அதிக உடல்நலக்
குறைவான நோய்களுக்குட்பட்டவர்கள். யாவோ இரு முறை பக்கவாத விளைவினால் மருத்துவமனையில் இருந்தவர். ஜியாவோ
விழிப்படலத்தால் பாதிக்கப்பட்டு கண் பார்வை கடுமையாக மங்கிப் போய் தன் குடும்ப உறுப்பினரைக் கூட அடையாளம்
கண்டு கொள்ளமுடியாத நிலையில் இருப்பவர். ஓராண்டு சிறையில் இருந்ததே அவர்களுடைய உடல்நலத்தைப் பாதித்துள்ளது.
அவர்கள் இப்பொழுது முழு தண்டனையையும் அனுபவித்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.
விசாரணை முடிந்த பின்னரும் கூட போலீஸ் கெடுபிடிகள் தொடர்ந்தன.
China Labour Bulletin
''விசாரணை முடிந்தவுடன் யோ டான், ஜியோ யுன் இருவரும் (இரண்டு மகள்கள், தனித்தனியாக இரு போலீஸ் கார்களில்
அழைத்துச் செல்லப்பட்டனர். ஜியோவோ யுன்லியாங்கின் மனைவியான சூ அனுஹா, தன்னுடைய மகள் காரில் ஏற்றி அழைத்துக்
கொண்டு போவதைத் தடுக்க முயற்சித்த போது போலீசால் அடித்துக் கீழே தள்ளப்பட்டார். அவர் நினைவிழந்த நிலையில்
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் மருத்துவமனை அதிகாரிகள் மருத்துவ சிகிச்சைக்கு பணம் கேட்டதால்
அவர் தனது மூத்த மகளால் வீட்டிற்குத் திரும்ப அழைத்து வரப்பட்டார்''. இரு மகள்களும் பின்னர் விடுதலையாயினர்.
லியோயாங்கின் இடைத்தர மக்கள் நீதிமன்றமும், போலீஸும் ஐயத்திற்கிடமின்றி உயர்
சீனத் தலைமையிடத்தின் ஆணையின்படி நடந்து கொண்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கான
வேலையிழந்த தொழிலாளர்கள் ஈடுபட்டது வரலாற்றிலேயே மிகப்பெரியதும், அது ஸ்ரானிச அதிகாரத்துவத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஏனெனில் அப்படிப்பட்ட கொந்தளிப்பு தொடர்பான சமிக்கைகள் தொடர்பாக அது மிகவும் கவனமாக உள்ளது.
பெய்ஜிங்கின் முதலாளித்துவச் சார்புடைய கோட்பாடுகள் மில்லியன் கணக்கான
தொழிலாளர்களின் வேலையிழப்பிற்குக் காரணமாயிருக்கின்றன. அரசாங்க நிறுவனங்கள் மறு சீரமைப்பு செய்யப்படுவதால்
அவை விற்கப்படுகின்றன அல்லது முழுதாக மூடப்படுவதினாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நீக்கப்பட்ட தொழிலாளர்கள்
முன்பு அரசாங்க நிறுவனங்களால் வழங்கப்பட்ட சமூக நலச் சலுகைகளுக்கு இப்பொழுது உரிமை கொண்டாட முடியாத
நிலையிலுள்ளனர். இந்தக் கொடிய வறுமை பரந்த பகுதிகளில், ஆனால் தனித்தும் சிறிய அளவிலுமான எதிர்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.
பெய்ஜிங்கின் அச்சம் அத்தகைய அமைதியின்மை முழுமையாகத் திரண்டு பரந்த அளவிலான
அரசாங்க எதிர்ப்பு இயக்கமாக மாறிவிடுமோ என்பது தான். அரசாங்கம் நடத்தும்
Public Security Research
என்ற சஞ்சிகை கடந்த ஆண்டு பின்வருமாறு எச்சரிக்கை விடுத்தது. ''சந்தை
முறைப் பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில், பெருமளவிலான மக்கள் நிகழ்வுகள் இடைவிடாமல் தோன்றிய
வண்ணம் இருக்கின்றன. அவை உயர்மட்ட ஒழுங்கமைப்பை கொண்டிருப்பட்டுள்ளதுடன், வியப்பிலாழ்த்தும் தாக்கத்தையும்,
சமுதாயத்தில் பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன'`.
சார்ஸின் பரவுதல் சீனத் தலைமையின் அச்ச உணர்வை அதிகப்படுத்தியுள்ளது. இத்தொற்று
ஏற்கனவே அயல்நாட்டு முதலீட்டையும் ஏற்றுமதியையும் பாதித்துள்ளது. சமுதாய உறுதியற்ற நிலையின் எப்படிப்பட்ட வெளிப்பாடும்
கூடுதலான முதலீட்டுக் குறைப்பை ஏற்படுத்தினால், ஏற்கனவே அரசியல், பொருளாதாரச் சமூக நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள
பெய்ஜிங் ஆட்சிக்கு மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அரச திட்டமிடல் அபிவிருத்தி ஆணைக்குழு
சமீபத்தில் சார்ஸின் விளைவைக் கருத்திற்கொண்டு இந்த ஆண்டு வேலையின்மை
விகிதத்தை 4%லிருந்து 4.5% சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. உண்மையான எண்ணிக்கை நிச்சயமாக அதிக அளவிலேயே
இருக்கும். தொழிலாளர், சமுதாயப் பாதுகாப்பு அமைச்சகம் வேலையின்மையை ''அரசாங்கம் வழங்கும் அடிப்படைத்
தேவைக்கான உதவிப்பணத்தைவிட கூடுதலான வருமானத்தை ஈட்டமுடியாதவர்கள்'' என்று வரையறை செய்துள்ளது. அதன்
கணக்கின்படி வேலையின்மை 8 முதல் 10 சதவிகிதம் ஆகும். இதில் 120 மில்லியன் கிராமப்புற தொழிலாளர்கள் சேர்க்கப்படவில்லை.
ஏனெனில் அவர்கள் ''கூடுதலான தொழிலாளர்கள்` (surplus
labour) என்ற பிரிவில் கணக்கிடப்பட்டுள்ளனர்.
சார்ஸ் தொற்று நோயைக் காரணம் காட்டி தெருக்களில் கூடுதலான போலீஸ் நடமாட்டத்தை
ஏற்கனவே சீன அதிகாரிகள் அதிகரித்துவிட்டனர். அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது புதிய கட்டுப்பாடுகளைப் புகுத்தியுள்ளனர்.
இணைய தளத்தை ''தீங்கிழைக்கும் வதந்திகளைப் பரப்பி அதன் மூலம் சமுதாயப் பீதியை அதிகரிப்பதற்காகவும்,
நோய் பரவுதலுக்கு எதிரான போராட்டத்தை இல்லாதொழித்து சமுதாய ஒழுங்கமைப்பை அழிக்க முற்படுவதற்கு''
பயன்படுத்தியதற்காக 4 பேர் சிறையிலடைக்கப்பட்டனர். மற்றும் 107 பேர் அதே ''குற்றத்தை'' நடமாடும்
தொலைபேசி (Mobile phone)
மூலம் செய்ததற்காகக் கைது செய்யப்பட்டனர். இந்த ஒடுக்குமுறையான செயல்கள்
அனுமதியின்மையை உருவாகாது தடுக்கவும் மற்றும் அயல்நாட்டு முதலீட்டாளர்களுக்கு பெய்ஜிங் நிலைமையைக் கட்டுக்குள்
கொண்டு உள்ளது என்பதை அறிவிக்கும் வகையிலும் உள்ளன.
யாவோ புக்ஸினுக்கும், ஜியோவோ யுன்வியாங்கிற்கும் கொடுக்கப்பட்ட தண்டனையும்
இதே போன்ற நோக்கத்தைக் கொண்டது தான். அவர்கள் ''அரசாங்க கவிழ்ப்பில்'' ஈடுபட்டார்கள் என்பதற்காக
தண்டனை வழங்கப்படவில்லை மாறாக, முதலாளித்துவ சந்தையின் இயக்கத்தையும் வெளிநாட்டு முதலீட்டையும் அச்சுறுத்தும்
கீழ் மட்டத்தில் இருந்து வரும் எந்தவொரு எதிர்ப்பையும் சீன அதிகாரத்துவம் ஏற்றுக்கொள்ளாது என்பதை சர்வதேச
நிதி ஆதிக்க தட்டினருக்கு எடுத்துகாட்டுவதற்காகும்.
Top of page
|