World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக சோசலிச வலைத் தள சர்வதேச மாநாடு

"War means an intensification of the exploitation of the US working class"

``போரென்பது அமெரிக்க உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டுவது தீவிரப்படுத்தப்படுவதே``

24 April 2003

Back to screen version

உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி ஆகியவற்றால், ``சோசலிசமும் ஏகாதிபத்தியம், போர் இவற்றிற்கெதிரான போராட்டமும்: ஒரு புதிய சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தின் வேலைத் திட்டமும் மூலோபாயமும்`` என்ற தலைப்பில், அன் ஆர்பர், மிச்சிகனில் மார்ச் 29-30, 2003 நடத்தப்பட்ட மாநாட்டில் ஜெர்ரி ஐசக்ஸ் ஆற்றிய உரையை கீழே வெளியிடுகிறோம்.

உலக சோசலிச வலைதள ஆசிரியர் குழுவிலுள்ள ஐசக்ஸ் மாநாட்டில் விவாதித்து ஏற்கப்ட்ட ஆறு தீர்மானங்களில் ஐந்தாம் தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார்: ``போரும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சமுதாய நெருக்கடியும்.``

ஏப்ரல் முதல் தேதியன்று உலக சோசலிச வலைத் தளமானது மாநாட்டைப் பற்றிய சிறு தொகுப்பு ஒன்றினைப் பிரசுரம் செய்தது. ("உலக சோசலிச வலைத் தளம் சோசலிசம் மற்றும் போருக்கெதிரான போராட்டத்தைப் பற்றிய சர்வதேச மாநாட்டை நடத்துகிறது"). இதைத் தவிர உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலாளருமான டேவிட் நோர்த் தொடக்க உரையை ("கட்டுக்கடங்காத நெருக்கடிக்குள்: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியும் ஈராக்கிற்கு எதிரான போரும்") வழங்கினார்.

மாநாட்டில் ஒருமனதாக ஏற்கப்பட்ட ஆறு தீர்மானங்களின் வாசகங்களும் ஏப்ரல் 2லிருந்து ஏப்ரல் 4 வரை வெளியிடப்பட்டன. (ஈராக்கில் நிகழ்த்தப்பெறும் போரை வன்மையாகக் கண்டிக்கும்; தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமைக்கு அறைகூவி அழைக்கும் தீர்மானங்கள்", "தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக அழைக்கும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்க்கும் தீர்மானங்கள்", "போர் மற்றும் அமெரிக்க சமுதாய நெருக்கடி மீதான தீர்மானம், உலக சோசலிச வலைத் தளத்தின் வளர்ச்சி பற்றிய தீர்மானம்")

ஏப்பிரல் 22 அன்று உலக சோசலிச வலைத் தளமானது முதலாவது மற்றும் இரண்டாவது தீர்மானங்களை அறிமுகப்படுத்திய பட்ரிக் மார்ட்டின் மற்றும் உல்றிச் றிப்பேர்ட் ஆகியோரின் கருத்துக்களை முறையே பின்வருமாறு வெளியிட்டது: (பார்க்க: "ஈராக்கிற்கெதிரான அமெரிக்கப் போர் விஷயத்தில் முரண்பாடுகளும் பொய்களும்", "தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றில் மையத்தில் நிற்பது சர்வதேசியம்")

ஏப்பிரல் 23 அன்று, மூன்றாவது மற்றும் நான்காவது தீர்மானங்களை அறிமுகப்படுத்திய பாரி கிரே மற்றும் லோரன்ஸ் போர்ட்டர் ஆகியோரின் கருத்துக்களை முறையே பின்வருமாறு வெளியிட்டது (பார்க்க: ``தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்ட உள்ளடக்கமும் வரலாற்றுப் பின்புலமும்", "எதேச்சாதிகார வழிமுறைகளுக்குத் திரும்புதல் அமெரிக்க முதலாளித்துவத்தின் தோல்வியின் ஒரு அறிகுறி")

வரும் நாட்களில் மற்றைய தீர்மானங்களைக் கொண்டுவந்தவர்களின் கருத்துக்களையும் எஞ்சிய தீர்மானங்களையும் மாநாட்டிற்கு சர்வதேச பிரதிநிதிகள் கொண்டுவந்த வாழ்த்துக்களின் தொகுப்பையும் நாம் பிரசுரிக்க இருக்கிறோம்.

நான் மாநாட்டுத் தீர்மானமான ``போரும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சமுதாய நெருக்கடியும்`` என்பதை ஆதிரிக்குமாறு பேராளர்களை வேண்டுகிறேன். இந்தத் தீர்மானம் கட்டுக்கடங்காத இராணுவ முயற்சிக்கு புஷ் நிர்வாகம் திரும்புதல் அமெரிக்கச் சமுதாயத்தில் ஆழ்ந்த அளவிலுள்ள உள் நெருக்கடியின் வெளிப்பாடாய் அது 1920களிலிருந்து காணப்படாத அளவு சமுதாய ஏற்றத்தாழ்வுகளில் தன் மிகக்கடுமையான புலப்படுத்தலையும் தெரிவிக்கிறது என்று தொடங்குகிறது.

அமெரிக்காவிலும் சர்வதேசிய அளவிலும் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களின் தன்மையை ஆராயும்பொழுது, இந்த ஏகாதிபத்தியப் போர், பல லட்சக்கணக்கான மக்களை அரசியல் போராட்டத்தில் ஈடுபடுத்திய ஊக்கியாக வேலை செய்தது என்பது தெளிவாகிறது. ஆனால் இந்த சமூக எதிர்ப்பிற்கும் அரசியல் போராட்டங்களுக்கும் மக்கள் வெள்ளத்தைச் சேர்ப்பதில் பங்குகொள்பவை பல ஊற்றுக்களிலிருந்தும் பெருகி வருகின்றன -முதலும் முக்கியமானதும் சமுதாய ஏற்றத்தாழ்வு, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், பரவலான மக்கட்கூட்டம் முதலாளித்துவ அரசைத் தம் செல்வாக்கிற்கு வசப்படுத்தலோ, செல்வாக்கிற்கு கட்டுப்படுத்தவோ முடியாமற்போவது ஆகும்.

1990களின் பொருளாதார மாபெரும் வளர்ச்சி 1970களின் இடையில் வேகமாக வளரத் தொடங்கிய சமுதாய வேறுபாடுகளின் இரு வேறுபட்ட நிலைகளை உச்ச நிலைக்குக் கொண்டுவந்தது. ஏற்றத்தாழ்வின் குறியீடுகள் இளைய தலைமுறையையும் பரந்த அளவிலான உழைக்கும் வர்க்கத்தின் பகுதிகளையும் மாறுதலுக்கு உட்படுத்தியுள்ளன. 1980க்கும் 2000க்கும் இடையே அமெரிக்காவின் உயர்மட்ட 5 சதவிகிதக் குடும்பங்களின் ஆண்டு வருமானம் 30 சதவிகிதம் உயர்ந்தது. 2000ஐ ஒட்டிய அளவில் இந்த உயர்மட்ட அடுக்கின் வருமானம், கீழ் 5 சதவிகிதக் குடும்பங்களின் வருமானத்தைவிட 10 மடங்கு உயர்ந்திருந்தன. உயர்நிலை அதிகாரியின் (Executive) ஊதியம் 571 சதவிகிதம் உயர்ந்த அளவில், மக்களில் பெரும்பான்மையானவருடைய வாழ்க்கைத்தரம் தேக்கமடைந்தது. பெரும் செழிப்புக்காலம் எனக் கூறப்படும் இக்காலகட்டத்தில் பாதிக்கும் மேலாக உருவாக்கப்பட்ட வேலைகள் வாழத் தேவையானதற்குக் குறைந்த ஊதியத்தையே அளிக்கின்றன.

தீர்மானம் கூறுகிறது: ``இராணுவ நெறியில் இரண்டு முக்கிய செயற்பாடுகள் உண்டு: முதலில், வெற்றியும், கொள்ளையும் குறுகிய காலத்திற்காவது பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்கக் கூடுதல் வருமான வழிவகை செய்யும். இரண்டாவதாக உள்நாட்டு சமுதாய நெருக்கடிகளை திசை திருப்பும் கருவியாகவும் பயன்படும்.``

தன்னுடைய ``ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்`` என்ற நூலில் லெனின் இந்தக் கருத்துக்களை விளக்கிக் கூறியுள்ளார். போயர்ப் போரிலும், ஆபிரிக்காவில் பிரிட்டிஷ் குடியேற்ற வெற்றிகளில் முக்கிய பங்குவகித்த இங்கிலாந்தின் மில்லியனர் -பெரும் தனவணிகரான செஸில் ரோட்ஸின் பேச்சை மேற்கோள் காட்டும்பொழுது லெனின் இவ்வாறு தெரிவிக்கிறார். இந்த ரோட்ஸின் பெயரில்தான் ஆப்ரிக்காவில் ரொடீசியா (இப்பொழுது ஜிம்பாப்வே) உள்ளது.

ரோட்ஸின் நண்பர் ரோட்ஸ் பள்ளியில் பேசும்பொழுது தெரிவித்த ஒரு செய்தியை லெனின் மேற்கோளிட்டுக் காட்டுகிறார். ``நேற்று லண்டனின் கிழக்குப் பகுதியில் இருந்தபோது ஒரு வேலையின்மையால் பாதிக்கப்பட்ட இளைஞர் கூட்டத்திற்குச் கென்றிருந்தேன். `ரொட்டி தேவை`, `ரொட்டி தேவை` என்ற கருத்துடைய தீவிரமான உரைகள் பலவற்றைக் கேட்டேன்; வீட்டிற்குத் திரும்பி வரும்போது அக்காட்சியை மனத்திரையில் அசைபோட்டபோது, எப்பொழுதையும்விட கூடுதலாக ஏகாதிபத்தியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நம்பிக்கையேற்பட்டது..... சமுக நெருக்கடியைப் பற்றி நான் சிந்தித்த எண்ணத்தின் முடிவு என்னவென்றால் 40 மில்லியன் யுனைடட் கிங்டத்தின் (இங்கிலாந்து) மக்களை பெரும் இரத்த ஆறு பாயும் உள்நாட்டுப் போரிலிருந்து காப்பாற்ற வேண்டுமென்றால், குடியேற்ற அரசியல் செல்வாக்காளராகிய நாம் எப்படியாவது மிகுந்திருக்கின்ற மக்களை குடியேற்றுவிக்கும் புதிய நிலப்பகுதிகளைக் கொள்வதோடு, தொழிற்சாலைகளிலும், சுரங்கங்களிலும் உற்பத்தியாகும் கூடுதல் பொருட்களுக்கு புதிய சந்தைகளையும் காணவேண்டும் என்பதேயாகும். பேரரசு என்பது, நான் எப்பொழுதும் குறிப்பிடுவதுபோல, ரொட்டி வெண்ணெய்ப் பிரச்சினை. உள்நாட்டுப் போரைத் தவிர்க்க விரும்பினால், நீங்கள் ஏகாதிபத்தியக்காரர்களாக மாறவேண்டும்."

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பன்னாட்டுச் சதியாலோசனைகள் சமுதாய நெருக்கடியைத் தீர்க்கும் தன்மையைவிட, போர் என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உழைக்கும் வர்க்கத்தை சுரண்டுதலைத் தீவிரப்படுத்தும் வழிவகையாகத்தான் உள்ளது. ஈராக்கிற்கு எதிரான போர் மற்றும் வருங்காலப் போர்கள் அனைத்துமே, நசுக்கப்பட்ட பாமர மக்களின் எதிர்ப்புக்களை ஒடுக்கவும், இயற்கை வளங்கட்கும் மிக அதிகமாய் சுரண்டப்பட்ட நிலையிலுள்ள உழைப்பின் சேர்மத்தை உறுதியாய் உத்திரவாதப்படுத்திக்கொள்ளவும் ஆகும் - அது, பதிலுக்கு முறையே முன்னேற்றமடைந்த நாடுகளில் சம்பளத்தின் மட்டங்களை குறைப்பதற்கு பயன்படுத்தப்படும்.

மேலும், போர்ச் செலவு - இளம் வீரர்களின் வாழ்க்கை, மற்றும் வரவு செலவுத் திட்டத்தில் தொகையைக் குறைத்தலும் வாழ்க்கைத் தரங்களில் அதிகரித்த தாக்குதல்கள் ஆகிய இரு அர்த்தத்திலும் - உழைக்கும் மக்களாலேயே சுமக்கப்படும். சமூக நலத் திட்டங்கள் மீதான தொடர்ச்சியான ஆழமான தாக்குதல்கள், தொழிலாள வர்க்கத்திடமிருந்து எப்பொழுதும் மிகக்கூடுதலான உற்பத்திக்கான கோரிக்கைகள், சம்பளத்தில் வெட்டுக்கள் -விமானப் பணித் துறையில் பார்த்துள்ளவாறு- மற்றும் தொடர்ந்த ஆட்குறைப்பு இவற்றுடன் அது தொடர்பு கொண்டிருக்கும். மிகப்பெரிய அளவிலான போர்த் தயாரிப்புச் செலவு தொழிலாள வர்க்கத்தாலேயே சுமக்கப்படுகிறது மற்றும் செல்வமானது மாபெரும் மறு பங்கீடு வழியாக தொழிலாள வர்க்கத்திடமிருந்து பெரும் பணக்கார தட்டிற்குச் செல்கிறது ஒரு பகுதியாகவும், பெரும் அளவிலான வரிவிலக்குகளை பெரும் வியாபாரத்திற்கும் செல்வந்தர்க்கும் அளிப்பதாக மற்றொரு பகுதியிலும் அமையும்.

1980ல் குளிர் யுத்தத்தின் உச்சக்கட்டத்தில் அமெரிக்கா பென்டகனுக்கு நகரங்களுக்குக் கொடுக்கப்படும் ஒவ்வொரு டாலருக்கும் இரண்டு டாலர் வீதம் செலவிட்டது. பென்டகன் இராணுவ இயந்திரம் கூட்டு அரசாங்கத்தின் வருமானத்தில் 40 சதவிகிதம் எடுத்துக்கொள்கிறது. ஈராக்கில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு க்ரூஸ் ஏவுகணையும் 1 மில்லியன் டாலருக்கும் கூடுதலான செலவில் ஏவப்படுகிறது. ஒரே இரவில் 800க்கும் மேற்பட்டவை பாக்தாதுள்ளும் மற்ற நகரங்களின் மீதும் ஏவப்பட்டன - 1 பில்லியன் டாலர் செலவில் அமெரிக்காவின் சமுதாயத் தேவைக்கான பெரிய பட்டியலில் உள்ளவற்றை செயல்படுத்த பணம் கொடுக்கப்படுவதில்லை; அதே நேரத்தில் பெருமளவு வளங்கள் பெருங்குற்றமான தற்பொழுதையப் போருக்கு ஒதுக்கப்பட்டுவிடுகின்றன.

2000 ஆண்டு கணக்கெடுக்கின்படி, 7.5 லட்சம் அமெரிக்க வீடுகளில் போதுமான அளவு பிளம்பிங் வசதி இல்லை.75 லட்சம் அமெரிக்க மக்கள் 2002ல் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மருத்துவ வசதியின்றி இருக்க நேரிட்டது. அரசாங்கத் தணிக்கை அலுவலகம் நடத்திய ஒரு கணக்கின்படி பள்ளிக்கட்டடங்களில் மூன்றில் ஒரு பகுதி மிக அதிகமான பழுதுபார்க்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது அல்லது புதிய கட்டங்களை எழுப்பவேண்டிய நிலையிலுள்ளது.

இந்த நிலைமை வர்க்கப் போராட்டத்தை வலுப்படுத்தவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தல். ஆனால் மிக முக்கியமான கேள்வி இதுதான்: ``திரளான மக்கள் போராட்டத்திற்குள் நுழையும்பொழுது அவர்கள் தாம் முழுமையான அரசியல், பொருளாதார, சமுதாய அமைப்பிற்கு எதிராகப் பூசல்களைக் கொண்டுள்ளோம் என்ற உணர்வினைப் பெறவேண்டும். அப்படிப்பட்ட புரிந்துகொள்ளும் தன்மை மிக ஆர்வத்துடன் நடத்தப்பட்டும் எதிர்பார்க்காமலிருந்து கூடத்தானே தோன்றிவிட்டது. WSWS-ல் பணியும் SEPயின் பணியும் தொழிலாள வர்க்கம் அரசியல் செயல்பாடுகளைப் பற்றி நனவு கொள்ளச் செய்தல்தான்.``

எம்முடைய தீர்மானம்: ``இந்த மாநாடு இராணுவ வாதத்திற்கெதிரான போராட்டம் ஜனநாயக உரிமைகளையும், உழைக்கும் மக்களின் சமுக நிலையின் பாதுகாப்போடும் பிரிக்கமுடியாமல் கட்டுண்டு உள்ளது. ஒரு சிறிய, எவருக்கும் பதில் கூறவேண்டிய தேவையின்றி இருக்கும், செல்வத் தட்டின் ஏகபோக உரிமைக்கு எதிரான தளத்தில் இருக்கவேண்டும். ஜனநாயக சமுதாயத்திற்கு அத்தகைய செல்வத் தட்டு ஒவ்வாத நிலையில்தான் இருக்கும். போருக்கு எதிரான போராட்டத்தின் மத்தியில் உண்மையான சமூக சமத்துவத்திற்காகப் பாடுபடுதல், பரந்த சமுதாய ஏற்றத்தாழ்வை அகற்றுவதற்கான வழிவகை, உழைக்கும் மக்களுக்குத் தேவையான வேலை, வாழ்வதற்குத் தேவையான சம்பளம், பாதுகாப்பான ஓய்வு, தரமான கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, வீடு முதலிய தேவைகளுக்கான உத்தரவாதம் அளிப்பதற்கான போராட்டமாக கட்டாயம் இருக்க வேண்டும்" எனக் கூறுகின்றது.

ஒரு வரலாற்று ஒப்புமையை உங்கள் முன் ஆலோசனைக்காக வைத்து உரையை முடிக்கிறேன். மாநாட்டில் அமெரிக்க உள்நாட்டுப் போரும் ஆப்ராகாம் லிங்கனும் பற்றி பலமுறை பேசப்பட்டன. உள்நாட்டுப் போருக்குமுன் அடிமைகளின் முதலாளிகளோடுகூட சமரசம் செய்துகொண்டுவிட முடியும் என்று தோன்றியது. லிங்கன் அடிமை முறையைக் கொண்டிருந்தோரின் மீது போர் தொடுத்தபொழுதும்கூட சிலர் அடிமை முறை பற்றிய சிக்கலை புறங்கட்டி வைத்து முடிவெடுக்கலாம் என்று நினைத்திருந்தனர். முடிவில் தெற்குப் பகுதியின் ஆளும் உயர் தட்டையும் அதனுடைய சண்டை போடும் ஆற்றலையும் அழிப்பதற்கு ஒரே வழி அவர்களுடைய சொத்துக்களையும் உடைமைகளையும் அழிப்பதுதான் என்று உணர்ந்தார். அதற்காக அடிமை முறையை ஒழிப்பதும் அதன் விளைவாக தெற்கில் 40 லட்சம் அடிமைகளை விடுவிப்பதும் தேவைப்பட்டது.

இலாப நோக்கு முறையில் இயங்கும் பொருளாதாரச், சமுதாய அடிப்படையைத் தாக்கும் ஒரு வேலைத் திட்டத்தை அபிவிருத்தி செய்யும் தொழிலாள வர்க்கத்தை வெளியே வைத்துவிட்டு, இன்று போர் எந்த வழியிலும் தடுத்து நிறுத்தப்பட முடியாது.

மீண்டும் முடிவில், இந்தத் தீர்மானத்தை ஆதரிக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved