ஐரோப்பா
:
பிரான்ஸ்
A political strategy to fight the attack on workers' pensions in France
பிரான்சில் தொழிலாளர்களின் ஓய்வுதியங்கள் மீதான
தாக்குதலை எதிர்த்துப் போராட ஒரு அரசியல் மூலோபாயம்
By the World Socialist Web Site Editorial Board
24 May 2003
Back
to screen version
பின்வரும் அறிக்கையானது, ஓய்வூதியங்கள் மற்றும்
பொதுக் கல்வி மற்றும் உடல்நல சேவைகள் இவற்றை வெட்டுவதற்கான
பிரெஞ்சு அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிரான எதிர்ப்பில் மே 25
அன்று அழைப்பு விடப்பட்டிருக்கும் வெகு ஜன ஆர்ப்பாட்டங்களில்
உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்
குழுவின் ஆதரவாளர்களாலும் விநியோகிக்கப்படுகின்றது.
மே 25 ஆர்ப்பாட்டங்கள் பிரெஞ்சு அரசாங்கத்தின்
தாக்குதல்களுக்கு எதிராக வளர்ந்து வரும் இயக்கத்தின் உச்சப்
புள்ளியைக் குறிக்கும். ஓய்வூதியம் மற்றும் அடிப்படை சமூக சேவைகள்
மீதான முன் என்றும் எதிர்பார்த்திரா தாக்குதலை எதிர்த்துப்
போராடுதற்கான தங்களின் உறுதியை பல லட்சம் தொழிலாளர்
காட்டுவர்.
ஓய்வூதிய "சீர்திருத்தங்கள்" மீதான அரசாங்கத்
தாக்குதலின் மையம், தொழிலாளர் பெற்ற பலாபலன்களை 30லிருந்து
50 சதவீதம் வரை குறைக்கும், 25,000 பொதுக் கல்வி பணியாளர்கள்
குறைப்பு மற்றும் சுகாதார சேவையில் கடும் வெட்டு, குறிப்பாக
வயதானவர்களுக்கானதில், இவற்றுடன் சேர்ந்து, 110,000 வேலைகளை
தேசிய கல்வி அமைப்பு முறையிலிருந்து பிராந்திய அரசாங்கத்திற்கு
மாற்றும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முன்முயற்சி
எடுக்கப்பட்ட சமூகநல சேவைகளின் முழு கட்டமைப்பின் மீதுமான
ஒரு அடிப்படைத் தாக்குதலை ஜனாதிபதி ஜாக் சிராக் மற்றும்
பிரதம மந்திரி ஜோன்-பியர் ரஃபரன் இவர்களால் முன்மொழியப்பட்ட
"சீர்திருத்தங்கள்" பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தொழிலாளர்கள்,
ஏதாவதொரு அரசியல்வாதி அல்லது முன்மொழிவுக்கு எதிரான ஒரு
போராட்டத்தை எதிர்கொள்ளவில்லை, மாறாக சிராக்- ரஃபரன்
அரசாங்கத்திற்கு எதிராகவும் அது பேசுகின்ற கார்ப்பொரேட் தட்டிற்கும்
எதிரான போராட்டத்தை எதிர்கொள்கின்றனர்.
இந்த தாக்குதல்களுக்கு எதிரான இயக்கம்,
தனியார் தொழில்துறையில் உள்ள தொழிலாளர்கள் அதேபோல
பொதுத்துறையில் உள்ள தொழிலாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர்
(இளைப்பாறியோர்) அதேபோல மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்,
மற்றும் புலம்பெயர்ந்தோர் அதேபோல பிரான்சை பிறப்பிடமாய்க்
கொண்ட தொழிலாளர்கள் ஆகியோரை
செயலூக்கத்துடன் அணிதிரட்டுதற்கு ஆழப்படுத்தல் மற்றும் அகலப்படுத்தல்
வேண்டும். ஆயினும், இந்த இயக்கம் வெற்றி பெறுதற்கு, அது இந்தத்
தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள இயக்கு சக்திகளைப் பற்றி
தெளிவாகப் புரிந்து கொள்ளல் மற்றும் இந்தப் புரிந்து கொள்ளல்
அடிப்படையில் நன்றாகத் தயாரிக்கப்பட்ட அரசியல்
மூலோபாயம் இவற்றால் வழிநடத்தப்பட்டாக வேண்டும்.
வெளிப்படையான எச்சரிக்கையை வழங்க வேண்டியது
இன்றியமையாததாகும். தொழிலாள வர்க்கத்தின் கடந்தகால
சமூக வெற்றிகள் அனைத்தையும் நிர்மூலமாக்கும் ஆளும் தட்டின்
உறுதிப்பாட்டை எதிர்கொள்கையில், போர்க்குணமுள்ள எதிர்ப்புக்கள்
மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கை இவை கூட தொழிலாள வர்க்கத்தின்
வேலைகளையும் சமூக நிலைமைகளையும் பாதுகாக்காது. இது
எதிர் வர்க்கத்திற்கு --மக்கள் தொகையின் மிகவும் செல்வந்த மற்றும்
சலுகை மிக்க தட்டுக்கள், கார்ப்பொரேட் மற்றும் நிதித்தட்டுக்கள்
இவற்றுக்கு-- எதிராக குழிபறிக்கும் ஒரு வர்க்கத்தின்-- உழைக்கும்
பரந்த மக்களின் அரசியல் போராட்டம் ஆகும். அது முதலாளித்துவ
அமைப்பின் பூகோள நெருக்கடியால் இயக்கப்படுகிறது, அது ஏற்கனவே
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
வன்முறை வெடிப்பை உருவாக்கி உள்ளது, மற்றும் வாஷிங்டனுக்கும்
ஐரோப்பாவில் உள்ள அதன் வெளிவேடக் கூட்டாளிகளுக்கும் இடையிலான
வெளிப்படையான மோதல், ஒவ்வொரு நாட்டிலும் ஜனநாயக
உரிமைகள் மீதான ஒரு பெரும் தாக்குதல், மற்றும் ஆழமாகிவரும்
பொருளாதாரப் பின்னிறக்கம் அது பூகோள பணப்புழக்கக்
குறைவு மற்றும் பொருளாதாரத் தாழ்வு இவைகளாய்க் குறைக்கும்
அச்சுறுத்தல் இவற்றை உருவாக்கி உள்ளது.
மாபெரும் தீங்கு எல்லோராலும் செய்யப்பட்டது,
அவர்களுள் தொழிற்சங்க அலுவலர்கள், அரசியல்வாதிகள், அதிஇடதுகள்
என அழைக்கப்படுவர்களில் சந்தர்ப்பவாதிகள் இது அரசியல்
போராட்டம் அல்ல என்று மறுப்பர். அப்பட்டமான உண்மை
என்னவெனில், தொழிலாள வர்க்கம் எதிர் கொள்ளும் போராட்டத்தினுடைய
நனவு பூர்வமான இலக்கு சிராக்-ரஃபரன் அரசாங்கத்திற்கு அழுத்தமோ
அல்லது விலகலோ கட்டாயம் கொடுக்கப்படாததாக, அல்லது
உத்தியோக ரீதியிலான இடது கட்சிகளின் இன்னொரு முதலாளித்துவ
அரசாங்கத்தால் பதிலீடு செய்யப்படுதல் கூட கட்டாயம் செய்யப்படக்
கூடாது, மாறாக தங்களது அரசியல் அதிகாரத்தை அதன் சொந்தக்
கரங்களுக்குள் எடுக்க வேண்டும். இந்த வழியில் மட்டுமே உழைக்கும்
மக்கள் பொருளாதார வாழ்க்கையை உண்மையான ஜனநாயக
மற்றும் சமத்துவ வழிகளின் வழியாக மறு ஒழுங்கு செய்ய முடியும்,
எனவே தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட வளங்கள் அவர்களின்
தேவைகளுக்கு ஏற்ப அபிவிருத்தி செய்யப்படவும் விநியோகம் செய்யப்படவும்
முடியும்.
செல்வந்தருக்கும் ஏழைகளுக்கும் இடையில்
வளர்ந்து வரும் இடைவெளியும் சமூக சேவைகளின் மீதான தாக்குதலும்
பிரான்சுக்கே உரிய தனிச்சிறப்பான ஒன்றல்ல. உலகெங்கிலும் உள்ள
தொழிலாளர்கள் அதேவிதமான அடிப்படைத் தாக்குதல்களுடன்
முரண்கொண்டுள்ளனர். ஐக்கிய அமெரிக்க அரசுகளிலும் பிரிட்டனிலும்
செல்வம் துருவமுனைப்படல் ஏற்கனவே மேலும் கூடிய நிலையை
எடுத்துள்ளது. றேகனிலிருந்து புஷ் வரை மற்றும் தாட்சரிலிருந்து
பிளேயர் வரை, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் வீழ்ச்சி
அடைந்துள்ள அதேவேளை செல்வந்தர் என்றுமில்லா அளவு
அதிகமாய் வாய்ப்புக்களைப் பெருக்கிக் கொண்டுள்ளனர்.
ஐரோப்பாவில், ஜேர்மன் அதிபர் ஹெகார்ட்
ஷுரோடர், அவரது
"2010 நிகழ்ச்சிநிரல்" உடன் ஜேர்மன் சமூகப் பாதுகாப்பு
முறை மீது என்றுமில்லா, மிக நீண்ட விளைவு கொண்ட தாக்குதல்களைத்
தொடுத்திருக்கிறார். பிரெஞ்சு சோசலிசக் கட்சியின் சகோதரக்
கட்சியான சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சுரோடர், சிராக்
மற்றும் ரஃபரன் உடையது போன்ற தாக்குதல்களை மேற்கொண்டிருக்கின்றனர்.
இது பூகோளப் பிரச்சினை ஆகும். ஏனைய நாடுகளில்
போல, சிராக்-ரஃபரன் அரசாங்கம் மற்றும் அதன் பின்னே நிற்கும்
கார்ப்பொரேட் தட்டினர் உலகப் பொருளாதார நெருக்கடிக்கான
விலையை தொழிலாள வர்க்கம் செலுத்துவதற்கு முயற்சி செய்கின்றனர்.
முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து சுயாதீனமான அரசியல் சக்தியாக,
தொழிலாள வர்க்கத்தை அனைத்து தேசிய எல்லைகளையும் கடந்து
ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு மூலோபாயத்தின் அடிப்படையில் மட்டுமே,
தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றப் போராட முடியும்
மற்றும் பரந்த பெரும்பான்மையிரின் நலன்களில் இந்த நெருக்கடியைத்
தீர்க்க முடியும்.
அனைத்திற்கும் மேலாக இந்த முன்னோக்கிற்கான
போராட்டத்திற்கு, பழைய மற்றும் செல்வாக்கிழந்த கட்சிகளுடன்
ஒரு உடைவும் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத் திட்டத்தின்
அடிப்படையில் ஒரு புதிய அரசியல் கட்சியைக் கட்டி எழுப்புவதும்
தேவைப்படுகிறது.
கடந்த 35 ஆண்டுகளாக தொழிலாளர்கள் கடந்து
வந்த மிக முக்கியமான அரசியல் அனுபவங்கள், கார்ப்பொரேட்
மற்றும் அரசியல் நிறுவனத்தின் மீது தொழிற்சங்க அழுத்தத்துடன்
இணைந்த ஒரு தேசிய பார்வையின் வரம்பிற்குள்ளே கிடந்த
போராட்டங்களின் பயனின்மையை விளக்கிக் காட்டுகிறது. 1968 மே-ஜூனில்
சார்லஸ் டு கோலுக்கும் ஐந்தாம் குடியரசுக்கும் எதிரான ஒரு
அரசியல் வேலை நிறுத்தத்தில் ஒரு கோடி தொழிலாளர்களுக்குமேல்
கலந்து கொண்டனர். கம்யூனிஸ்ட் கட்சியும் சிஜிடி தொழிற்சங்கமும்
கோலிச ஆட்சியை கீழிறக்குவதற்கு மறுத்து, பதிலாக ஒரு சில அற்ப
சலுகைகளுக்கு கைமாறாக வேலை நிறுத்தத்தைக் கைவிடச்செய்து
ஒரு வரலாற்றுக் காட்டிக்கொடுப்பை செய்தனர். அடுத்து வந்த
ஆண்டுகளில் இந்த பலாபலன்களை கீழறுப்பதில் டு கோல் மற்றும்
அவருக்குப் பின்னர் ஜோர்ஜ் பொம்பிடோவும் நேரத்தை செலவழிக்க
விடாமல் செய்தனர்.
இடைப்பட்ட ஆண்டுகளில் பிரான்சுவா மித்திரோன்
-ஆல் தலைமை வகிக்கப்பட்ட பல்வேறு "இடது அரசாங்கங்களுக்கு"
எதிராக பல வெஜன சமூக இயக்கங்கள் இருந்தன. அவை அனைத்தும்
தொழிற்சங்க தலைமையால் தரகு செய்யப்பட்ட பேரங்களில்
முடிந்தன. அது அடிப்படைத் தாக்குதல்களை தக்க இடத்தில்
வைத்தது 1980களின் தொடக்கத்தில் இரும்பு எஃகு தொழிற்சாலை
மூடல், இரண்டாண்டுகளின் பின்னர் விரைவுபடுத்தல் மற்றும் வெளியேற்றியது
இவற்றைக் குறிப்பிடுவதென்றால் இரண்டைக் கூறலாம்.
இறுதியாக, 1995 நவம்பர்-டிசம்பர் பொதுத்துறை
தொழிலாளர்களின் பரந்த வேலை நிறுத்தம் அலன் யூப்பே அரசாங்கத்தை
பொறியும் விளிம்பிற்கு கொண்டு வந்தது. இருப்பினும் தொழிற்சங்கங்கள்
ஏற்றுக் கொண்ட பேரம், சமூக சேவைத் திட்டத்தில் யூப்பேயின்
தாக்குதல்களை மட்டும் இடத்தில் வைக்கவில்லை, மாறாக முந்தைய
பிரதமர் எட்வார்ட் பலடூரால் தனியார் துறை தொழிலாளர்கள்
மீது 1993ல் மேற்கொள்ளப்பட்டதையும் விட்டுச்சென்றது. 37.5
சதவீதத்திலிருந்து 40 சதவீதத்துக்கு தனியார் துறைத் தொழிலாளர்கள்
பங்களிப்பு நீட்டிப்பு, இப்பொழுது அதேவழியில் பொதுத்துறை சேவைகளின்
தொழிலாளர்கள் ஓய்வூதியத்திற்கான பங்களிப்புக் காலகட்டம் நீட்டிக்கப்படுவதை
நியாயப்படுத்துதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
இடது அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால்
பின்பற்றப்பட்ட அழுத்தம் கொடுக்கும் அரசியலின் வரவு- செலவுக்
கணக்கு யாதெனில் காட்டிக் கொடுப்பு மற்றும் துரேகமாகும்.
இந்த தலைவர்களால் வழங்கப்பட்ட சலுகைகள் ஒவ்வொன்றும்
புதிய சலுகைகளுக்கே இட்டுச்செல்கின்றன. தொழிலாளர்கள் தங்களின்
வாழ்க்கைத் தரங்களும் நிலைமைகளும் முப்பது வருடங்களாக
படிப்படியாகக் கீழறுக்கப்படுவதைக் கண்டிருக்கின்றனர். இப்பொழுது
சிராக், அவர்களின் ஓய்வூதியங்கள், கல்வி மற்றும் சுகாதார
சேவையையும் கூட எடுப்பதற்கு முன்மொழிகிறார்.
போராட்டத்திற்கு பிரதான தடைகள் தொழிலாளர்
இயக்கத்தில் --சோசலிசக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்
தொழிற்சங்க சாதனம் இவற்றில்-- நீண்டகாலமாய் காலாவதியாகிப்
போன அதிகாரத்துவங்கள் ஆகும். அவர்களை மூடி மறைத்த மற்றும்
அனைத்து விமர்சனங்களையும் திசைதிருப்பி அவர்களைக் காத்த சந்தர்ப்பவாத
அமைப்புக்களால் அவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்:
அலன் கிரிவினின் (Alain Krivine) புரட்சிக்
கம்யூனிஸ்ட் கழகம் (எல்சிஆர்), ஆர்லெட் லாகியே (Arlette
Laguiller) லுத் ஊவரியேர் (எல்ஓ) மற்றும்
பியர் லம்போர்ட்டின் (Pierre
Lambert) தொழிலாளர் கட்சி (பிடி) ஆகியன.
தற்போதைய போராட்டத்தில், உண்மையைப்
பேசுவதற்கு ஒருவருக்கும் துணிவில்லை. சோசலிச கட்சியானது,
தனது அண்மைய காங்கிரசில் சில விடுமுறை கால பேச்சினைத் தவிர,
ரஃபரன் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு விரலைக் கூட உயர்த்த
விருப்பம் கொண்டிருக்கவில்லை.
பலடூரின் "சீர்திருத்தங்கள்" மற்றும் சமூக
சேவை மீதான யூப்பே யின் தாக்குதல்கள் இவற்றுக்குப் பின்னர் ஆட்சி
அதிகாரத்துக்கு வந்த லியோனல் ஜொஸ்பனின் சோசலிசக் கட்சி
மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கம் ஆகியன தங்களின் ஐந்தாண்டு
பதவிக்காலத்தில் இந்த நடவடிக்கைகளுள் ஒன்றைக் கூட ரத்துச்செய்யவில்லை.
இந்தக் காட்டிக் கொடுப்பை ஒரு தொழிற்சங்கம் கூட எதிர்க்கவில்லை.
2002 ஜனாதிபதி தேர்தலின் முதலாவது சுற்றில் பாசிச
லூபென்னுக்கு பெரும் வாக்குகள் கிடைக்க வழிவகுத்தது,
ஜொஸ்பன் அரசாங்கத்தின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளாகும்.
சோசலிசக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் பதில் செயலானது-
சிராக்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்கான பிரச்சாரமாக
இருந்தது. வலதுசாரி முதலாளித்துவக் கட்சிகளுக்கு எதிராக
அரசியல் மாற்றீட்டை தொழிலாள வர்க்கம் முன்னிலைப்படுத்துதற்கான
எந்த போராட்டத்தையும் அவர்கள் எதிர்த்தனர். அதன் காரணமாக
சிராக் முதற்கொண்டு மேற்கொண்டு வரும் தொழிலாளர்
விரோத நடவடிக்கைகள் அனைத்திற்கும் அரசியல் பொறுப்பை
அவர்கள் ஏற்கிறார்கள்.
உத்தியோகபூர்வ இடதுகளின் அனைத்துக் கட்சிகளும்,
சிராக் மற்றும் ரஃபரன் இவர்களின் தாக்குதல்களால் எழுப்பப்பட்ட
பிரச்சினைகள் இந்த ஆட்சிக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தீர்க்கப்பட
முடியும் என்று தொடர்ந்து கூறுகின்றன. கம்யூனிஸ்ட் கட்சி அவர்கள்
"தங்களின் கணக்கைச் செய்திருக்கிறார்கள்" மற்றும் ஓய்வூதிய
பிரச்சினையை தீர்ப்பது சாத்தியமே எனக் கூறுகின்றனர். எல்சிஆர்,
"ஓய்வூதியங்களுக்கு நிதி அளிப்பது சாத்தியமே" என அறிவிக்கின்றது.
எல்ஒ, "இவற்றுடன் சேர்த்து நாம் அரசாங்கத்தை பின்னுக்கு
தள்ள முடியும்" என கூறுகிறது.
அவர்கள் தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக
நிராயுதபாணி ஆக்க மட்டுமில்லை, அரசாங்கத்துடன் ஒரு
மோதலைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக தொழிற்சங்கங்களைப் பொறுத்த
அளவில் போராட்டத்தை ஊக்கங்கெடுப்பதற்கு மற்றும் கருச்சிதைப்பதற்கு
ஒரு மூடுதிரையை வழங்குகின்றனர்.
தொழிற்சங்க அதிகாரத்துவ குழாமின் துரோகம்
அரசாங்கத்தின் ஓய்வூதிய முன்மொழிவினை ஏற்றுக் கொள்வதற்கான CFDT
தலைமையின் முடிவில் ஏற்கனவே விளக்கிக் காட்டப்பட்டுள்ளது.
அதன் பங்குக்கு CGT
தலைவர் பேர்னார் திபோல்ட் (Bernard
Thibault), ஓய்வூதிய சீர்திருத்தம் பாராளுமன்றத்தில்
வைக்கப்படுவதற்கு முன்னர், மே 28க்குப் பின்னர் வரை எந்தவிதமான
அதிகாரபூர்வ தொழில்துறை நடவடிக்கையையும் பொருத்தமற்றதென
விலக்கினார். அவர் தலைநகரில் இயக்கத்தை சீர்குலைத்த, பாரிஸ்
நகரப் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முற்றிலுமாய்
கைவிட்டிருந்தார்.
போர்ஸ் ஊவ்ரியேர் சங்கத்தின் தலைவர் மார்க் ப்ளோண்டல்
(Marc Blondel),
அரசாங்கத்துடன் ஒரு அரசியல் போராட்டத்தில் ஈடுபடுவதைத்
தவிர்ப்பதில் உறுதியாய் இருப்பதை தெளிவான முறையில் விளக்கிக்
காட்டினார். அண்மைய பேட்டி ஒன்றில் ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு
அழைப்பு விடுக்க அவர் திட்டமிட்டுள்ளாரா எனக் கேட்கப்பட்டார்.
அவர் பதிலளித்தார், "இல்லை....பொது வேலை நிறுத்தத்தின் இந்த
கருத்து எப்பொழுதும் ஒரு அரசியல் தோற்றத்தை எடுக்கும்.
நான் ரஃபரனுடன் ஒரு போராட்டத்தில் இல்லை, மாறாக
பியோனின் (Fillon சமூக
விவகார அமைச்சர்) ஓய்வூதியங்கள் பற்றிய சீர்திருத்தத்திற்கு எதிரான
போராட்டத்தில் இருக்கிறேன்."
போராட்டத்தை முற்றிலும் முடிவுக்குக்
கொணரும் தனது நோக்கத்தை முன்நிழலிட்டுக் காட்டும் விதமாய்,
அவர் மே19 அன்று Agence France
Presse-இடம், "மே 25 லிருந்து....
நாம் தொழிற்சங்கப் போராட்டத்தின் கடைசி வாரத்தில் இருப்பதாக
நான் உணர்கிறேன் மற்றும் அதற்கப்பால் இப்பிரச்சினை பெரும்பான்மையினருக்கும்
எதிர்க்கட்சியினருக்கும் நடக்கும் ஒரு பாராளுமன்ற போராட்டமாக
ஆகும். அது எனது பிரச்சினை அல்ல" என கூறினார்.
அடிப்படை உற்பத்தி சக்திகளை சமூக உடைமை ஆக்கவும்
தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் செல்வத்தை
மறுபங்கீடு செய்யவுமான பணிகளை வலிந்து ஏற்கச்செய்யும், ஒரு
பொதுவேலைத் திட்டத்தின் அடிப்படையிலான ஒரு போராட்டத்தில்
பிரெஞ்சுத் தொழிலாளர்கள், சர்வதேச ரீதியாக தொழிலாளர்களுடன்
கட்டாயம் ஐக்கியப்பட வேண்டும். இதற்கு ஒரு சோசலிச
முன்னோக்கின் அடிப்படையில் போராடும் ஒரு புதிய சர்வதேச
தொழிலாளர் கட்சியைக் கட்டி அமைப்பது தேவைப்படுகிறது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின்
நாளாந்த இணைய வெளியிஈடான உலக சோசலிச வலைத் தளம்,
அத்தகைய ஒரு கட்சியைக் கட்டுதற்கான ஒரு சாதனமாக பணியாற்றுகிறது.
உலக சோசலிச வலை தளத்தை வாசிக்குமாறும், ஆசிரியர்
குழுவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுமாறும் எமது வேலைகளின்
அபிவிருத்திகளுக்கு பங்களிப்புச் செய்யுமாறும் இந்த ஆர்ப்பாட்டத்தில்
பங்கேற்கும் அனைவரையும் நாம் அழைக்கின்றோம். |