World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Worsening global economic problems see G8 divisions deepen

ஜி8ல் உள்ள பிளவுகள் பூகோள பொருளாதார சீர்கேடுகளால் தீவிரமடைகின்றன
By Nick Beams
20 May 2003

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த வார இறுதியில் பிரான்ஸ் டோவில் (Deauville) இல் நடைபெற்ற ஜி8 குழுவின் நிதி அமைச்சர்கள் கூட்டம் - ஏழு பெரிய தொழிற்துறைப் பொருளாதாரங்களும் ரஷ்யாவும்-- இரண்டு முக்கியம் வாய்ந்த போக்குகளுக்கு விளக்கம் அளித்தது. பெரிய முதலாளித்துவ சக்திகளிடையே பிளவுகள் ஆழ்ந்த அளவில் சென்றுள்ளதும் அவற்றுக்கிடையே உடன்பாடு ஏற்பட்டாலும் உலகப் பொருளாதாரத்தின் சிக்கல்களும் அவற்றை எதிர்கொள்ளும் அளவில் ஜி-8 நாடுகளின் திராணியற்ற தன்மை வளர்கின்றது.

இந்தக் கட்டத்தின் முடிவு, ஜி-8 அரசாங்கத் தலைவர்கள் உச்சிமாநாடு இன்னும் இரண்டுவார காலத்தில் நடைபெற இருக்கின்ற நிலையில், ஆஸ்திரேலியன் பைனான்சியல் ரிவியூ என்ற பத்திரிகை திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், துல்லியமாகத் தொகுத்துக் கூறப்பட்டுள்ளது.

"அமெரிக்க டாலரின் அதிகமான சரிவு ஐரோப்பிய ஜப்பானிய காகித நாணயத்திற்கெதிரான அளவில் ஏற்படுத்தியுள்ள கடுமையான அழுத்தம் இருப்பினும், ஒருங்கிணைந்த பண, நிதி மற்றும் தாள் (காகித) நாணய கொள்கை நடவடிக்கை எந்தவித முன்னேற்றத்தையும் கொண்டுவரவில்லை என்று நிதி அமைச்சர்கள் தெளிவாகக் கூறிவிட்டனர்."

இந்த ஆண்டு துவக்கத்திலிருந்தே ஒரு டாலர் தன்மதிப்பில் யூரோவுக்கெதிராக 9 சதவிகிதம் குறைந்து விட்டது; போன ஆண்டு இதேநேரத்தில் இருந்ததைவிட 25 சதவீதமும், மிக உச்சத்தில் அதன் 2000 பிந்தைய பகுதியில் இருந்ததைவிட 40 சதவீதமும் குறைந்து விட்டது. இதன் பொருள் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கடுமையான போட்டியை அமெரிக்க ஏற்றுமதிகளோடு சந்திக்கின்ற அதேவேளை, ஐரோப்பிய ஏற்றுமதியாளர்கள் தங்கள் அமெரிக்க சந்தை லாபம் கால்பகுதி இழந்து போவதைப் பார்க்கின்றனர்.

அமெரிக்க கருவூலச்செயலர் ஜோன் ஸ்நோ, அதிகாரபூர்வமாக "வலிமை மிக்க டாலர்" கொள்கை இருந்தபோதிலும், அமெரிக்க நிர்வாகம் நாணயத்தின் சரிவை வரவேற்கிறதோ என்ற சந்தேகத்தைத் தீர்த்து வைக்க எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. சொல்லப் போனால், அதனுடைய சமீபத்திய சரிவை "ஓரளவு சரியான மறுதிருத்தம்" என்று அழைத்த அளவில் மேலும் அதன் பலவீனத்துக்குத்தான் வழிவகை செய்தார்.

இறுதி அறிக்கையில் நாணயங்களைப் பற்றிய குறிப்பு ஏதும் கிடையாது; கூட்டம் முடிந்தவுடன் அதைப்பற்றி யாரும் பேசக் கூடாது என்ற உடன்பாட்டிற்கும் நிதி அமைச்சர்கள் வந்து விட்டனர்.

பேசுவதற்காக வைத்திருந்த குறிப்புக்களின் துணைகொண்டு உரையாற்றிய ஜேர்மன் நிதி அமைச்சர் ஹான்ஸ் ஐஷெல் (Hans Eichel) அறிவித்தார்:" 'செய்தியாளர்களால் நாணயமாற்று விகிதங்கள் பற்றி வினா எழுப்பப்பட்டால், எல்லா பகுதிகளும் அவர்களுடைய கொள்கையையும் எடுக்க இருக்கும் நிலையையும் பற்றிய கருத்துக்களை கடந்த சில தினங்களில் கூறியுள்ளன. எனவே ஜி-8ல் புதிதாக எதையும் சேர்க்கவில்லை' என்று அது கூறுகிறது."

இறுதி அறிக்கை இப்படிப்பட்ட கூட்டங்களில் சமீபகாலமாக கூடுதலாகப் பயன்படுத்தப்படும் பொருளற்ற சொற்றொடர்களின் இணைப்பாக அமைந்திருந்தது. தங்களுடைய பொருளாதாரங்கள் "பல சவால்களை" சந்தித்தாலும், "வலுவான வளர்ச்சியின் ஆற்றல் அவற்றிடம் உள்ளது என்ற நம்பிக்கை "தங்களுக்கு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக அமெரிக்கா வேலைவாய்ப்புக்களைப் பெருக்கவும், சேமிப்பு, தனியார் முதலீடு இவற்றை அதிகமாக ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியது. ஜப்பான் கட்டமைப்பு சீர்திருத்தங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் "பணச் சுருக்கத்தை (deflation) எதிர்க்கும் முயற்சிகளை அது தீவிரப்படுத்தும்" என்றும் உறுதிமொழி அளித்தது; ஐரோப்பா பொருளாதாரத்தில் கூடுதலான "நெகிழ்ச்சியுடைய பொருளாதாரத்தை" ஏற்படுத்தப் பாடுபடும் என்று கூறியது.

இந்தகு கூட்டங்களைப் பார்க்கையில் ஒரு புதிய சர்வதேசிய அரசியல் பொருளாதாரச்சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறதோ என்று தோன்றும். உலகப் பொருளாதாரம் கூடுதலான நெருக்கடியைச் சந்தித்தால், பலம் வாய்ந்த முதலாளித்துவ அரசுகளின் பிரதிநிதிகள் அதைப்பற்றிக் குறைவாகவே பேசுவர். அதையும் விடக் குறைவாகவே அதைப்பற்றிய நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.

டாலரின் சரிவைத் தொடர்ந்து ஏற்படும் அதிகரித்த சீரின்மை நிலை ஒருபுறம் இருக்க, பூகோள பொருளாதார மந்த நிலையின் தெளிவான அடையாளங்களுக்கிடையே இக்கூட்டம் நடந்தது. கூட்டம் தொடங்கியளவில், நெதர்லாந்து ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் பொருளாதாரங்கள் - 0.3,-0.2,-0.1 என்ற வளர்ச்சி விகிதத்தில் முதல் கால்பகுதி முறையே சுருங்கி இருந்தன என்ற புள்ளிவிவரம் வெளியிடப்பட்டது. நெதர்லாந்தும் ஜேர்மனியும் இப்பொழுது இரண்டு தொடர்ச்சியான காலாண்டுகளில் எதிர்மறை வளர்ச்சியைக் கொண்டதால் இப்பொழுது அதிகாரப் பூர்வமான பொருளாதாரப் பின்னடைவு நிலையை அடைந்தன.

ஐரோப்பியக் கொள்கை திட்மிடுவோர் பொருளாதார தேக்க நிலைக்கு பதில் நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளில் தோல்வியுற்றதை, கடந்த வெள்ளிக் கிழமை அன்று பிரிட்டீஷ் ஃபைனான்சியல் டைம்ஸ் ஒரு கடுமையான தலையங்கத்தில் சாடியது. அவர்கள் "நிரந்தரமாக பொய்த் தோற்றத்தில் ஏமாந்துள்ள நம்பிக்கையாளர்கள் இங்கு வசித்து வருகின்ற, ஒரு இணை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்."

கடந்தவாரம் ஐரோப்பிய நிதி அமைச்சர்கள் ஆண்டின் இரண்டாம் பகுதியில் பொருளாதார மீட்பு 'கூடுதலாக ஏற்படலாம்' என்று தெரிவித்துள்ளனர்; தாங்கள் வருங்காலத்தைப் பற்றி இத்தகைய கணிப்புக்களை 2001ன் துவக்கத்திலிருந்து கூறிக் கொண்டிருந்து, பின்னர் அந்தக் கணிப்புக்களை பலமுறை மீண்டும் குறைத்துக் கொள்வதையும், அதனை அவர்கள் திரும்பவும் முன்னறிவித்தல்கள் செய்வதை திரும்பப்பார்ப்பதை "மறந்துவிடுங்கள், என்று எப்படி குறிப்பிட்டது.

ஐரோப்பிய மத்தியவங்கி "அதைவிடப் பிரமாதமாக இல்லை", ஏனென்றால் அதன் மாதாந்திர அறிவிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஆண்டின் இறுதியிலிருந்து வளரத் தொடங்கி 2004ல் சற்று வலுவான வளர்ச்சியைக் கொள்ளும் என்ற கணிப்பைக் கொடுத்துள்ளது. "இந்தத் தலையங்கத்தை எழுதியவர்களுக்கு வேறு ஒரு ஊக்கம் தேவைப்படவில்லை; கடந்த நவம்பரின் அறிவிப்பிலும் '2003 திறன் வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்றும் அதிலும் கூறப்பட்டிருந்தது. '2003ல் உறுதியான வளர்ச்சி விகிதம் அடையப்பட்டுவிடும் என' ஓராண்டிற்கு முன்னர் ECB முடிவு செய்தது" என்று எப்டிபி தொடர்ந்து கூறியது.

எப்படி தலையங்கம், ஐரோப்பியப் பகுதி " நாள்பட்ட தேக்க நிலையாக இருக்கும் ஒரு வீழ்ச்சிக்குத் தள்ளப்படும். அதில் ஒவ்வொருவரும் மற்றவரைப் பொருளாதாரத் துன்பங்களுக்காக குற்றம் கூறிக் கொண்டு நிற்பர்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. 1990களில் ஜப்பானில் இத்தகைய நிலை ஏற்பட்டது. அதனுடைய ஐரோப்பிய பதிப்பு ஏற்படும் போன்ற புதிய காரணிகள் இருக்கின்றன.

இன்னமும் சாதாரண வளர்ச்சி வீதத்தை கொண்டிருந்தாலும் அமெரிக்கப் பொருளாதாரம் அதனுடைய எச்சரிக்கை அடையாளங்களை கொடுத்துள்ளது. ஏப்பிரல் மாதம் புள்ளிவிவரங்கள் முப்பத்தேழு ஆண்டுகளில் குறைவான விலை அதிகரிப்புக் காட்டப்பட்டு நேரடியான பணச்சுருக்கம் ஏற்படக் கூடும் என்ற அபாயத்தைத் தூண்டி விட்டுள்ளன. ஆனால் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஜப்பானிய பணச் சுருக்க வழியில் செல்வத்தைத் தடுக்கும் முயற்சிகள் பற்றி எதுவம் பேசப்படவில்லை. ஐஷலின் (Eichel) படி, "பணச்சுருக்கம் ஏற்படக் கூடும் என்ற அபாயத்தைப் பற்றி பாவனைகொள்ளத் தேவையில்லை என்று நாங்கள் உடன்பட்டோம்"

உலகத்தின் முப்பத்தோராவது பெரிய வங்கியான ஒசாகாவிலுள்ள Resona Holdings-ன் படி புள்ளிவிவர கணக்கெடுப்பு பற்றிய அறிவிப்பு --சனிக்கிழமை இரவு அன்று ஜப்பானிய அமைச்சரவையின் அவசரக் கூட்டம் நடத்த இது காரணமாயிற்று-- ஒரு முக்கிய விவாதத்தைக் கூட விளைவிக்கவில்லை.

ஜப்பானிய அராசாங்கத்தின் 17 மில்லியன் டாலர் உதவியைத் தொடர்ந்து அந்த நெருக்கடி தீர்க்கப்பட்டது. --அந்த முயற்சி ஸ்நோவினால் ஆதரிக்கப்பட்டது-- தலைமை அமைச்சர் கொய்சுமி பண நெருக்கடியைத் தடுக்க ஆவன செய்ததின் உறுதி "ஜப்பான் இத்தகைய நெருக்கடிகள் மூலம் சரியான வழிமுறைகளைப் பின்பற்றி வருவது ஊக்கத்தை அளிக்கிறது" என்று மேலும் சுட்டிக் காட்டப்பட்டது.

இந்தச் சொற்கள் ஜப்பானிய நிதி அதிகாரிகளுக்குத் தேவையான உத்தரவாதத்தை அளிக்கப் போதுமானவை அல்ல. கடந்த பத்து ஆண்டுகளில் குறைந்த வளர்ச்சி விகிதம் மற்றும் அதையொட்டிய பணச்சுருக்கம் ஜப்பானிய வங்கி முறை நெருக்கடிக்குப் பெரிய அளவிலான காரணமாகும். ஜப்பானிய விலைகள் 3.5 வீதத்தில் ஆண்டு ஒன்றுக்கு குறைந்த வண்ணம் உள்ளது. ஆயினும் கூட டாலர் மதிப்பைக் குறைக்கும் அமெரிக்காவின் முயற்சி மற்றும் அதன் விளைவாய் யென்னின் மதிப்பை உயர்த்தல், இரண்டுமே நெருக்கடிகளை அதிகரிக்கும்.

அதேபோல் ஏற்றுமதிகளிலிருந்துதான் ஐரோப்பியப் பகுதிக்கு குறிப்பிடத்தக்க அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலைமையில், டாலரில் ஏற்படும் வீழ்ச்சி ஐரோப்பாவை பணக் குறைப்புக்குத் தள்ளும், அதனுடைய ஏற்றுமதிகள் அதிக செலவுடையதாகவும் செய்துவிடும். ஏற்கனவே வளர்ந்து வரும் பணச்சுருக்க அழுத்தங்கள் இறக்குமதிகளை எளிதாக்கி ஐரோப்பிய உற்பத்தியாளர்க்குப் பாதிப்பை இலாபக் குறைவின் மூலம் ஏற்படுத்தும்.

இந்த பொருட்கள் பற்றிய சிந்தனைகள் ஏன் ஜி8 கூட்டம் பூகோள பொருளாதாரத்தை எதிர் நோக்கும் பெரிய நெருக்கடிகளை விவாதிக்க மறுக்கிறது என்பதை விளக்க உதவுகின்றன. அவ்வாறு விவாதித்து இருந்தால், உடனடியாக பெரிய முதலாளித்து நாடுகளுக்கு இடையே உள்ள ஆழமாகி வரும் மோதல்கள் உடனடியாக வெளிப்பட்டிருக்கும்.

Top of page