World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா

Thousands dead as a result of Thailand's "war on drugs"

தாய்லாந்தில் "போதைப் பொருட்களுக்கு எதிரான போரில்" ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு

By Susanne Ilchmann
9 May 2003

Use this version to print | Send this link by email | Email the author

"Yaba" என்றும் "கிறங்க வைக்கும் மருந்து" என்றும் கூறப்படும், மெதாம்பிடமைன்ஸ் (Methamphetamines), போதைப் பொருளை விற்பதற்கு முற்றிலும் தடை செய்து ஒழிக்கும் பணிக்கு, போலீஸாருக்கு தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று கொடுக்கப்பட்ட அனுமதியை அடுத்து மேற்கொள்ளப்பட்ட கடுமையான போதைப் பொருள் எதிர்ப்பு இயக்கம் கடந்த வாரம் "வெற்றி" அடைந்து விட்டதாக தாய்லாந்தின் தலைமை அமைச்சர் தக்சின் ஷினாவத்ரா (Thaksin Shinawatra) அறிவித்துள்ளார்.

இந்த முன்று மாத காலம் நிகழ்ந்த போலீஸ் பயங்கரம் குறைந்தது 2,274 பேரை காவு கொண்டது. அரசாங்கமும் காவற்படையும், நம்பக் கூடிய தன்மையில்லாத வகையில் உயிர் சேதங்கள், சமுக விரோதச் சக்திகளின் உட்பூசல்களின் விளைவு என்றும், 42 போதை விற்பனையாளர்கள் என சந்தேகிக்கப்படுகிறவர்களை மட்டுமே, அதுவும் தற்காப்பிற்காகச் சுட்டு விழ்த்தினர் என்றும் அடித்துக் கூறிவிட்டன. உண்மையில் அரசாங்கம் அதனுடைய தன்னிச்சையான "போதைப் பொருட்களின் மீதான போர் இலக்கு, குறித்த காலத்திற்குள் அடையப்படுவதற்காக காவற்படையை வெளிப்படையாக, விசாரணைக்குட்படாத கொலைகளைச் செய்யுமாறு ஊக்குவித்தது.

போதைப் பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம் அளித்த குறியீடுகளாவன: 1765 பேர் பெரிய அளவிலான போதைப் பொருட்கள் வழங்குவோர், 15,244 பேர் சிறிய அளவிலான விற்பனையாளர்கள். 280,000 க்கும் மேற்பட்ட "போதை மருந்து கைமாற்றுவோர்" மற்றும் "அப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள்" தாங்களே அதிகாரிகளிடம் சரணடைந்த அளவில் மறுசீரமைப்பு வாழ்வு இல்லங்களுக்கு அனுப்பப்பட்டனர். மொத்தத்தில் கிட்டத்தட்ட 15.5 மில்லியன் மாத்திரைகள் (குளிசைகள்) பறிமுதல் செய்யப்பட்ட அளவில், பெப்ரவரி முதல் ஏப்ரல் 30 வரையிலான 3 மாத காலத்தில் தெருவில் அதன் விலை இரு மடங்கு, மற்றும் முன்று மடங்காக உயர்ந்தது.

தாய்லாந்தின் 75 ஆட்சி வட்டங்களிலும், போதை விற்பனையாளரை 50 சதவிகிதக் குறைப்பாவது செய்துவிட வேண்டும் என்ற இலக்கு அடையப்பட்டு விட்டதாக, அவ் அதிகாரிகள் அறிவித்துவிட்டனர். சில இடங்களில் 100 சதவிகிதம் "வெற்றிவீதம்" என, அதாவது தம் ஆட்சி வட்டத்தில் இருந்த எல்லா போதை வணிகர்களும் இறந்துவிட்டதாகவோ, சிறையில் தள்ளப்பட்டுவிட்டதாகவோ அதிகாரிகள் பெருமை பொங்கிட தெரிவித்தனர். அரசின் உள்நாட்டு அமைச்சர், வான் முகம்மது நோர் மதா (Wan Muhammad Nor Matha), 440 உள்ளுர் காவல் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும், இரு போலீஸ் கர்னல்கள் உட்பட போதைக் கடத்தலில் அவர்களுடைய தொடர்பிற்காகப் பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக அறிவித்தார்.

அரசாங்கம் இலஞ்சமும் அச்சுறுத்தலும் கலந்த ஒரு முறையைப் பயன்படுத்தி, வட்டார ஆளுனர்களும் காவற்படைத் தலைவர்களும் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதை உறுதிப்படுத்தியது. 3 பட்டியல்கள் தொகுக்கப்பட்டன: ஒன்று காவல் துறையால், இரண்டாவது வட்டார ஆட்சியமைப்புகளாலும், கிராமத்தலைவர்களாலும், கடைசியாக போதைத் தடுப்பு வாரியத்தால் ஆகும். தமக்கு அளிக்கப்பட்ட இலக்கைப் பூர்த்தி செய்ய முடியாத அதிகாரிகள் பணி நீக்கம் என்ற நிலையை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. "பெரிய அளவு போதைப் பொருள் விற்பனையாளரை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வருபவர்கள் பரிசாக ஒரு மில்லியன் பாத் (baht) (23,600 அமெரிக்க டாலர்கள்) பெற்றனர்.

கறுப்பு பட்டியலில் உள்ளோர்கள் மீதான குற்றச்சாட்டுகள் யாவும் சட்டத்தின் முன்பு கொண்டு வரப்படாததால், கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சுட்டு வீழ்த்தப்பட்டவர்கள் யாரென்று தெளிவாக இல்லை. மேலும் தங்களது பெயரை பட்டியலில் பார்த்தவர்கள் தங்கள் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டின் இயல்பு பற்றியும் அறிய இயலவில்லை. குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாக்கப்படுவோம் மற்றும் சுட்டு வீழ்த்தப்பட்டு விடுவோம் என்ற பீதியிலேயே, ஆயிரக்கணக்கானோர் தாங்களாகவே காவல் துறையினரிடம் சரணடைந்து, அதனால் காவல் துறையினரால் சித்திரவதைகளுக்கு ஆளாகினர்.

கொல்லப்பட்டோரில் பெப்ரவரி கடைசியில் சுட்டுக் கொல்லப்பட்ட 9 வயதுச் சிறுவனும் அடங்குவான். சீருடை அணியாத போலீஸ் அதிகாரிகள் குற்றஞ்சாட்டப்பட்ட செயலில் ஈடுபட்டதாக அந்தப் பையனின் தகப்பனாரைக் கைது செய்து கொண்டிருக்கும் போது, பீதியுற்ற தாயார் தனது குடும்ப வாகனத்தில் குழந்தையுடன் தப்பியோடிச் சென்றார். போலீஸ் அந்த வாகனத்தைத் துரத்திப் பிடித்தது. வாகனத்தின் கதவினைத் திறப்பதற்கு முன் மிக நெருக்கமான தொலைவில் காரினுள் சுட்டதில் அந்தச் சிறுவன் இறந்து போனான்.

சட்ட விரோதமான போதைக் கடத்தலுக்கு எதிரான மக்களுடைய எதிர்ப்பைப் பயன்படுத்தி தாக்சின் தன்னுடைய செல்வாக்கை உயர்த்திக் கொண்டார். வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, பிற சமுதாய நெருக்கடிகள் ஆகியவற்றினை அரசாங்கம் கவனிக்கத் தவறியது போதை பழக்கத்திற்கு அடிப்படைக் காரணம் என்பதைத் திசை திருப்பும் வகையில் இது நடந்தது. ஆயினும் ஒன்பது வயதுச் சிறுவன் ஈவு இரக்கமின்றிக் கொலை செய்யப்பட்டது மக்களிடையே பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அப்போது முதல் குறை கூறல் அதிகமாகியுள்ளது.

Assumption University நடத்திய கருத்துக் கணிப்புஆய்வு, 84.2 சதவிகித பாங்காக் வாழ் மக்கள் நடவடிக்கையை ஆதரித்ததாகக் கூறுகிறது. அதே சமயம் அவர்களில் 65.3 சதவிகிதம் பேர் ஊழல்மிகுந்த போலீஸ், நிரபராதிகளை மாட்டிவிடுவார்களா என்ற தங்கள் அச்சத்தையும் தெரிவித்தனர். திட்டத்தின் தன்மையைப் பார்க்கும் போது கறுப்புப் பட்டியலைத் தயாரிப்பவர்கள் தங்களுடைய தனிப்பட்ட விரோதத்தைக் கருத்தில் கொண்டு அரசியல் அல்லது வியாபார விரோதிகளை அழித்து விட வாய்ப்புகள் உண்டு என்ற நிலைமை உள்ளது.

மனித உரிமைக் கழகம் பல பேரால் தொடர்பு கொள்ளப்பட்டுத் தாங்கள் தவறாக கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அரசாங்க அதிகாரிகள் அப்படிப்பட்ட புகார்களை போதைத் தடுப்பு அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் மனித உரிமைக் கழக அமைப்பான Forum Asia அமைப்பின் Sunai Phasuk, கூறுகையில் "கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் போலீஸ் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பும் வழியில் கொல்லப்பட்டனர். தங்கள் பெயர் கறுப்புப் பட்டியலில் உள்ளதைப்பார்த்த மக்கள் காவல் நிலையத்திற்குச் சென்றனர், பின்னர் இறந்து கிடந்தனர்" என்றார்.

வளரும் விமர்சனங்கள்

தாய்லாந்தின் செய்தி ஊடகமும் மற்ற மக்கள் உரிமை அமைப்புகளும், அரசாங்கத்தின் ஜனநாயக உரிமைகளின் அத்துமீறலையும் புறக்கணிப்பையும் அதனுடைய கொலையைப் பற்றிய நியாயப்படுத்துதல்களின் தன்மையையும் குறித்து கவலை கொண்டுள்ளன. "போலீஸ் சம்பந்தப்பட்டிருக்காவிட்டால் ஏன் ஒரு கொலைகாரன் கூடக் கைது செய்யப்படவில்லை?" என்று மனித உரிமைகள் வழக்கறிஞரான Sunai Phasuk வினவுகிறார். "இதிலிருந்து பெறக்கூடிய அறிவார்ந்த முடிவு போலீஸே மரணப்படையை அனுப்பிவைத்திருக்க வேண்டும்."

Nation என்ற பத்திரிகையின் ஆசிரியரான Thepchai Yong, ஆஸ்திரேலிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான Datelineக்கு கொடுத்த பேட்டியில் கூறுவதாவது, "அரசாங்கத்தின் கூற்றை ஒருவரும் நம்பவில்லை. ஏனெனில் அதிகாரிகள், குறிப்பாக காவல் துறையினர், பல கொலைகளிலும் தொடர்பு கொண்டிருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம். உள்துறை அமைச்சர் கூறுவது உண்மையானால், கொலைகள் இரட்டை ஏமாற்றுதலின் விளைவுகளாக இருக்கும், அல்லது தங்களுக்குள்ளேயே போதை பங்கீட்டாளர்கள் ஒருவரையொருவர் கொலை செய்திருக்க வேண்டும். போதைப் பங்கீட்டாளர்கள் தாம் நாட்டைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளார்கள் என்றே தோன்றுகிறது."

Forum Asia கூறுகையில், அரசாங்கம் தான் போலீஸை முடுக்கிவிட்டு குற்றத்தில் ஈடுபட்டுள்ளவர் எனக் கருதப்படுவோரை கொலை செய்து விடுமாறு ஊக்கம் அளிக்கிறது. இது காவல்துறைக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் தங்களுக்குப் பிடிக்காதவர்களைத் தீர்த்துக்கட்டிவிட அதிகரித்த அளவில் மிக எளிதாக்கிவிட்டது. பெப்ரவரி கடைசியில் இக்குழு ஓர் அறிக்கையை விடுத்தது. "கொலைகளைப் பற்றி உடனடியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சிலர் கைவிலங்கிடப்பட்டும், குழுவாகவும் கொல்லப்பட்டனர். 3 இறப்புகளில் வல்லுனர்கள் ஆய்வு நடத்தியபோது, சந்தேகத்திற்குட்பட்டவர்கள் இறந்த பின் அவர்களுடைய உடலில் போதை மருந்து செலுத்தப்பட்டிருக்கக் கூடும் என்றும், சவப்பரிசோதனை மேற்கொள்ளப்படும் முன்பே தோட்டாக்கள் அகற்றப்பட்டுவிட்டன என்றும் தெரிய வந்துள்ளது."

குற்றஞ்சாட்டப்பட்டவர்களை வளைத்துப் பிடித்தலோ அல்லது ஏராளமான போதைப் பொருள் அடிமைகளும் சிறு அளவு விற்பனையாளர்களும் கொலையுண்டதோ போதைக் கடத்தலை நிறுத்தி விடாது என்றும் வேறு சிலர் சுட்டிக் காட்டியுள்ளனர். ஏனெனில் இந்தக் கடத்தலில் ஈடுபட்டிருப்போர், கட்டுப்படுத்துவோர் இராணுவத்திலோ, காவல்துறையிலோ மிக உயர்ந்த தொடர்பைக் கொண்டிருப்பவர்கள் என்கின்றனர்.

முன்னாள் தேசிய காவல் துறை தலைவரான Pol Gen Sawat Amornwiwat ஜனவரியில் அறிவித்தார்: "சீனியர் அரசாங்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் போதைக் கடத்தல்காரர்களுடைய நெருங்கிய கூட்டாளிகள்." Drugs Enforcement Agency 1992ல் தயார் செய்த பட்டியலில் ஒரு மிக மூத்த தாய்லாந்து அரசியல்வாதியின் பெயர் இருந்தது. "முக்கியமான தடை என்னவென்றால் செல்வாக்குடையவர் போதைக்கடத்தல்காரர்களுக்கு தக்க ஆதரவு அளிப்பதுடன் பெரும் பொருளையும் ஈட்டுகின்றனர்" என்றும் தெரிவித்தார்.

விமர்சிப்போரை அமைதிப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. மார்ச் முன் பகுதியில், தாய்லாந்தின் மனித உரிமைக் கழகத்தின் ஆணையாளர் Dr Pradit Chareonthaitawee, ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்தப் பிரச்சினையை எடுத்துச் செல்லக் கூடாது என்ற எச்சரிக்கை பொருந்திய அனாமதேய கொலை மிரட்டல்களைப் பெற்றார். அதைத் தொடர்ந்து Suranand Vejjajiva, ஆளும் தாய் ராக் தாய் கட்சியின் (Thai Rak Thai Party) சார்பு பேச்சாளர், ஆணையாளர் மீது பெரிய குற்ற விசாரணை நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். ஏனெனில், ஆணையாளர் ஐநாவிடம் அரசாங்கத்தின் கறுப்பு பட்டியல், நீதித்துறை சாரா கொலைகள், போதை மருந்து தொடர்புடைய கொலைகளில் வழக்குத் தொடுக்காமலிருத்தல் ஆகியவை பற்றிப் பேசியிருந்தார்.

எதிர்க்கட்சி அரசியல் வாதிகள் "போதைப்பொருள் மீதான போர்" மீது மனித உரிமைகள் மீறலுக்காகப் பன்னாட்டு அளவில் கண்டனங்கள் எழும் என்றும் அவற்றின் விளைவாக அயல்நாட்டு முதலீட்டாளர்கள் அச்சப்பட்டு முதலீடு செய்யமாட்டார்கள் என்றும் எச்சரித்தனர். பிரதம மந்திரி இறுமாப்புடன் இத்தகைய அக்கறைகளைப் பொருட்படுத்துவதில்லை. அரசாங்கம் ஒத்துழைப்பு தரமறுத்துவிட்டதால், ஐநாவின் மனித உரிமைகளுக்கான ஹை கமிஷனர் ஒரு சிறப்புத் தூதரை அனுப்புவதாக இருந்த நிலைமையை கைவிடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்.

போலீஸ் நடவடிக்கைகளைப்பற்றி ஒரு விசாரணை நடத்த வேண்டும் என்ற செனட்டின் திட்டத்தினைப் பற்றிப் பேசுகையில், தலைமை அமைச்சர், "அயல் நாட்டினரின் எண்ணங்களை" கவனிக்கத்தேவையில்லை என்று அறிவுறுத்தியவர், தாய்லாந்து ஐநாவிற்கு இதைப்பற்றிய விளக்கம் அளிக்கத் தேவையில்லை, நாம் ஒரு இறைமை பெற்ற நாடு. எந்த நாடாவது நாம் செய்வதற்காக உதவிகளைக் குறைத்தால், வெளிப்படையாகச் சொன்னால் எனக்கு அது பற்றி அக்கறையில்லை" என்றும் கூறினார்.

தாய்லாந்துக்குப் பண உதவியும், இராணுவத்திற்குத் தொழில் நுட்ப உதவியும் நிறுத்தப்படும் என்ற ஆலோசனைகள் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் விமர்சனங்களாக கூறப்பட்டதையடுத்து, அதே போன்று எதிர் விளைவையே அரசாங்கம், இந்த வாரம் கொண்டது. வாஷிங்டனில் தனக்கு ஆதரவு உள்ளது என்ற நம்பிக்கையில் தக்சின் அறிவித்தார்: "இதைப்பற்றிய விளக்கத்தை (போதைப்பொருள் மீதான போர்) அமெரிக்கத் தூதரிடம் தெரிவித்துள்ளோம். அமெரிக்க நிர்வாகம் அதை நன்கு உணர்ந்துள்ளது."

நாட்டின் மிகப் பெரிய வணிகச் செல்வந்தருள் ஒருவரான தாக்ஸின் நாட்டின் பாதுகாப்புப் படைகளோடும் நெருங்கிய தொடர்பு உடையவர். அவருடைய பெரும் சொத்தில் கணிசமான பகுதி ஏக போக உரிமைகளாலும், முந்தைய இராணுவ அரசாங்கங்கள் கொடுத்திருந்த ஒப்பந்தங்கள் மூலமாகவும் அடையப்பட்டதாகும்.

தாக்ஸினும் அவருடைய தாய் ராக் தாய் கட்சியும் 2001 தேர்தல் முயற்சியில் வெற்றி பெற்றதே, அவருடைய முன்னோடியான Chuan Leekpaiயால் கொண்டுவரப்பட்ட IMF ன் மறுசீரமைப்புத் திட்டத்தின் விளைவுக்கு பரந்த மக்களின் குரோதத்தை சுரண்டிக்கொண்டதால்தான். மக்களை மயக்கும் திட்டங்களைப் பற்றிப் பேசியும், விவசாயம் செய்வோருக்கு கடன் நிவாரண உதவி வழங்குவதாகவும், அதே நேரத்தில் நலிவடைந்த தாய்லாந்து வர்த்தகர்களுக்கு நலிவுப் போக்கிலிருந்து மீட்பதாகவும் கூறி பிராச்சாரங்கள் செய்தார்.

ஆனால் அரசாங்கத்திடம் பெரிய அளவிலான, பெரும்பாலான மக்களின் வாழ்வைப் பாதிக்கும் சமுதாயச் சிக்கல்களுக்கு பரிகாரம் இல்லை. "போதைப் பொருளின் மீதான போர் என்ற போர்வையில் அரசாங்கம் ஜனநாயக உரிமைகளை மேலும் தாக்க வழி வகை செய்து கொண்டிருக்கிற போதிலும், மேலும் அம்முறைகள் எதிர்காலத்தில் அரசியல் எதிரிகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படலாம்.

ஏற்கனவே அரசாங்கம் போதைப் பொருள் மீது தாக்குதல் நடத்துவோருக்குத் தக்க சன்மானங்கள் வழங்குவதற்கான நிதி முறையை அறிவித்துள்ளது. பெப்ரவரி 1ம் தேதியிலிருந்து செயல்படுவதாகக் கருதப்படும், ஒரு புதிய சட்டம், நிறைவேற்றப்பட இருக்கிறது. இதன் படி போதை தொடர்பு உடைய சொத்துக்கள் அரசாங்கத்தால் பறி முதல் செய்யப்படும் பொழுது அவற்றின் 30 சதவிகித மதிப்பு வட்டார ஆளுநர்களுக்கு வெகுமதியாக அளிக்கப்படும். மற்றொரு 15 சதவிகிதம் வெற்றிகரமாக துப்பு துலக்குபவர்களுக்கும் துப்பு கூறுபவர்களுக்கும் ஒதுக்கப்படும்.

போதைப் பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம், தேசிய காவல் துறை மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவை நாடு தழுவிய, போதைப்பங்கீட்டாளர்கள் மற்றும் போதைக்கு அடிமையுற்றோர் குறித்த தகவல் தொகுப்பு ஒன்றை தயாரிக்க உள்ளன. வட்டார அரசுகள் சிறப்பு விசாரணை அலுவலகங்களைத் தொடக்கக் கேட்டுக் கொள்ளப்படுவார்கள். Anti-Money Laundering அலுவலகங்கள் தொலை பேசிகளை ஒட்டுக் கேட்க கூடுதலான அதிகாரங்களைப் பெறும்.

Top of page