World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP holds May Day meeting in Colombo against imperialist war

ஏகாதிபத்திய போருக்கு எதிராக கொழும்பில் சோசலிச சமத்துவக் கட்சி நடத்திய மே தினக்கூட்டம்

By our reporter
13 May 2003

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (SEP) கொழும்பு நகரில், மே முதல் தேதி "ஏகாதிபத்திய போருக்கு எதிராக உலக சோசலிசப் புரட்சிக்கான`` மே தினம் என்ற தலைப்பில் வெற்றிகரமாக நடாத்தியது.

இலங்கைத் தீவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்து, இந்த மே தினக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். தங்களது பல்வேறு பணியிடங்களிலிருந்து தொழிலாளர்கள் வந்திருந்தனர். ஆண்களும், பெண்களுமாக, தமிழ் பேசுகின்ற தோட்டத் தொழிலாளர்கள் அவர்களில் ஏராளமாக இடம்பெற்றிருந்தனர். நகர, மற்றும் கிராமப் பகுதிகளிலிருந்து பெரும்பாலான இளைஞர்கள் வந்திருந்தமை, ஏகாதிபத்திய போரை தடுத்து நிறுத்துவதற்கு சர்வதேச சோசலிசம் தான் ஒரு வழி என்பதை புதிய தலைமுறை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதை குறிகாட்டுவதாக இருந்தது.

உள் விவகார அமைச்சகமும், மற்றும் போலீஸாரும், தடுத்து நிறுத்த முயன்றும் அந்தக் கூட்டம் நடைபெற்றது. SEP-க்காக பதிவு செய்யப்பட்ட புதிய டவுன் ஹால் மைதானத்தை பயன்படுத்தக்கூடாது என்று அவர்கள் தடுத்தார்கள். அரசாங்கத்திற்கு சொந்தமான ஊடகங்கள் திட்டமிட்டே மேலும் குழப்பத்தை உருவாக்கும் வகையில் கூட்டம் நடத்துவது தொடர்பாக, SEP-க்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டன.

பின்னர் பொதுக்கூட்டம் நடாத்தப்படும் இடம் மாற்றப்பட்டது தொடர்பாக தவறான தகவலைத் தந்தன. SEP அந்த பிரச்சாரத்திற்கு எதிராக தீவின் பல பகுதிகளில் தீவிரமான சுவரொட்டி இயக்கத்தை நடத்தியது.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு உறுப்பினரான கே.ரத்னாயகா கூட்டத்திற்கு தலைமை வகித்தார். ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போர் உருவாக்கிய உலக அளவிலான வரலாற்று மாற்றங்கள் மற்றும் போருக்கு எதிரான சர்வதேச அளவில் நடக்கும் எழுச்சிகள் ஆகிய சூழ்நிலைகளின் கீழ் இந்த மே தினம் நடைபெற்று வருவதாக ரத்னாயகா தமது தொடக்க உரையில் குறிப்பிட்டார். போருக்கு எதிரான இயக்கம் எவ்வளவோ பரவலாக எவ்வளவோ ஆழமாக நடந்தாலும் சர்வதேச அளவில் சோசலிச செயல் திட்டமும் மற்றும் ஒன்றுபட்ட உலகக் கட்சியும் தலைமை வழங்காமல் அது வெற்றிபெற முடியும் என்பதை அர்த்தப்படுத்தாது என்று ரத்னாயக்கா குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய முன்னணி (UNF) அரசாங்கம் சோசலிச சமத்துவக் கட்சியின் மே தினக்கூட்டத்தை சீர்குலைப்பதற்கு மேற்கொண்ட முயற்சி உழைக்கும் மக்களிடமிருந்து ஜனநாயக உரிமைகளைப் பறித்துக்கொள்ளும் ஒட்டுமொத்தக் கொள்கையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை ரத்னாயகா சுட்டிக்காட்டினார். இந்த முயற்சியை முன்னின்று தூண்டிவிட்ட உள் விவகார அமைச்சரை SEP வன்மையாகக் கண்டித்தது.

அமைச்சரின் இந்த நடவடிக்கை தற்போது இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தை சூழ்நிலையில் எடுக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் அரச எந்திரத்தைப் பலப்படுத்தி அரச படைகளைப் பெருக்கி உழைக்கும் மக்களுக்கு எதிராக அவர்களைத் திருப்பிவிடுவதன் பொருட்டு அமெரிக்காவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு தீர்வுக்குள் எல்.டி.டி.இயை இழுப்பது இந்த பேச்சுவார்த்தையின் நோக்கம் என்று ரத்னாயகா விளக்கினார்.

அந்த கூட்டத்தில் பிரதான உரையை SEP பொதுச்செயலாளர் விஜே டயஸ் சிங்களத்தில் நிகழ்த்தினார். மேடையில் அவர் ஆற்றிய உரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா தலைமையில் நடைபெற்ற போர் சர்வதேச அளவிலும் குறிப்பாக இந்தியத் துணைக் கண்டத்திலும் ஆழமான அரசியல் தாக்கங்களைக் கொண்டது என்று விஜே டயஸ் விளக்கினார்.

"புஷ் நிர்வாகம் ஈராக் மக்கள் மீது கொடூரமான குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியமை, அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது சொந்த நலன்களுக்கு ஏற்ப உலக அரசியல் வரைப்படத்தை மீண்டும் உருவாக்குவதற்கு எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதை காட்டுவதாக டயஸ் விளக்கினார். அமெரிக்கா, உலகின் இதரப் பகுதிகளில் இருந்து பசிபிக் மற்றும் அட்லாண்டிக் மகா சமுத்திரங்களால் பிரிக்கப்பட்டிருக்கிறது. கெடுபிடிப் போர்க் காலத்து நீண்ட கால நட்பு நாடுகளின் கவலைகளையும் பொருட்படுத்தாமல் ஒரு வெளிநாட்டின் மீது தன்னிச்சையாகவும் அகந்தை மனப்பான்மையோடும் அமெரிக்க போர் தொடுத்ததாக" அவர் சுட்டிக்காட்டினார்.

இதுவரை நடைமுறையில் இருந்துவருகின்ற எல்லா சர்வதேச சட்டங்கள் மற்றும் நடைமுறைகளை அப்பட்டமாக மீறி புஷ் நிர்வாகம் மேற்கொண்டுள்ள முயற்சி மூன்றாவது உலகப்போரில் ஈடுபடுத்துவது என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. இந்தச் சூழ்நிலைகளில் மே தினக்கூட்டங்களில் போலி இடதுசாரிகளும் சமாதானம் நாடும் போர் எதிர்ப்புத் தீவிரவாதிகளும் இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் வெளிப்படுத்தி வருகின்ற செயல்திட்டங்கள் இரண்டாம் உலகப்போர் தொடங்கும் நேரத்தில் ட்ரொட்ஸ்கி சொன்னதைப்போல், 'எரிமலை வெடிக்கும் முன் அதன் சரிவில் நடைபெறுகின்ற இது பிள்ளை விளையாட்டைப் போன்றது.'

உலகின் அதிகப் பலம் வாய்ந்த வல்லரசு நடத்துகிறது என்பதற்காக மிகக்கொடூரமான குற்றங்களை, ஈராக்கில் நடத்திய அப்பட்டமான கொடுமைகளை சர்வதேசச் சட்ட மீறல்களை மிக எளிதாக நிர்ப்பந்த முறையில் நியாயப்படுத்த உலகம் அதை ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட செயல்முறைவாத காலத்திற்கேற்ற அணுகுமுறையை ஆளும் வர்க்கப் பிரிவுகளும் உலகம் முழுவதிலும் நடுத்தர வகுப்பினரும் கூறிவருவதை சர்வதேச தொழிலாள வர்க்கம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று டயஸ் தெளிவுபடுத்தினார்.

சர்வதேசச் சட்ட வரையறைப்படி, தாக்குதல் நடந்தாலோ அல்லது தாக்குதல் நடக்கும் என்ற உடனடி ஆபத்து நிலவினாலோதான் தற்காப்பு நடவடிக்கை எடுக்கும் உரிமை உண்டு. சதாம் ஹூசேன் ஆட்சி, அமெரிக்கா மீது தாக்குதல் தொடுக்கவில்லை. அல்லது அதனால் எந்தவிதமான மிரட்டலும் இல்லை. முதலாம் வளைகுடாப் போரைத் தொடர்ந்து 12 ஆண்டுகளில் ஈராக்கின் இராணுவ வல்லமை மிகப்பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கிறது. எனவே, அந்த நாடு பக்கத்து நாடுகளையே மிரட்ட முடியாது. அப்படி இருக்கும்போது அமெரிக்காவை எப்படி மிரட்ட முடியும் என்று டயஸ் கேட்டார்.

"ஐ.நா. ஒப்பந்தத்தின் 33-வது பிரிவுப்படி தகராறுகளில் சமாதானத் தீர்வு காண்பதற்கான எல்லா வழிவகைகளையும் முழுமையாக பின்பற்றியாக வேண்டும் என்று சர்வதேசச் சட்டம் வலியுறுத்துகிறது" என அவர் குறிப்பிட்டார். ஆனால், புஷ் நிர்வாகம் ஐ.நா.வையும் அதன் ஆயுத ஆய்வாளர்களையும் புறக்கணித்துவிட்டு ஈராக் மீது தன்னிச்சையாகப் போர் தொடுத்தது. பயங்கர ஆயுதங்கள் என்று சொல்லப்படும் ஆயுதங்களைப் பயன்படுத்திய தவறு செய்த தரப்பு ஈராக் அல்ல. ஆனால் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியக் கூட்டணிப் படைகள்தான் என்று டயஸ் விளக்கினார்.

"சர்வதேச சட்டத்தை உயர்ந்த தத்துவங்களின் வெளிப்பாடு என்று நாங்கள் கொண்டாடவில்லை" என்றார் அவர். "கடந்த நூற்றாண்டில் இரண்டு உலகப்போர்களில் மிகவும் துயரமான அனுபவங்களைப் பெற்ற சர்வதேசச் சமுதாயம் வெளிப்படுத்திய கவலைகளின் ஒட்டுமொத்த வடிவம்தான் சர்வதேசச் சட்டக் கொள்கைகள். எனவே, ஜனநாயக உரிமைகளைப் பேணிக் காக்கிற சமுதாயத்தின் பரவலான தரப்பினர், இந்த சட்டங்கள் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பது குறித்து பயங்கரமான அச்ச உணர்வை வெளிப்படுத்தி உள்ளனர்" என டயஸ் விளக்கினார்.

டயஸ், அவரது உரையில், சர்வதேச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி C.G.வீரமந்திரி வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டினார். வீரமந்திரி அமெரிக்காவின் நடவடிக்கைகளைக் கண்டித்திருக்கிறார். ``ஒரு செயல் முடிந்துவிட்டது. அதை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். இது உண்மைக்குப் புறம்பானது. சர்வதேசச் சட்டத்தின் அடிப்படைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஒரு டஜன் கொள்கைகள் மீறப்பட்டுள்ளன. இது கடிகாரத்தில் பல நூற்றாண்டுகள் பின்னோக்கித் தள்ளுவதாகத்தான் ஆகும். உலகம் முழுவதும் ஒன்றுபட்டு நிற்காவிட்டால் நாம் தான் துன்புறுவோம். நமது குழந்தைகளும், அவர்களுக்கு பின்னால் வருகின்ற அவர்களது குழந்தைகளும் துன்புறுவார்கள் தொடர்ந்து சர்வதேச விதிமுறைகள் சட்டங்கள் மீறப்பட்டிருக்கின்றன. அதை உலக சமுதாயம் ஏற்றுக்கொள்ள முடியாது`` என்று வீரமந்திரி கூறியுள்ளார்.

வீரமந்திரி ஒரு சோசலிஸ்ட் அல்ல, உலகம் முழுவதும் ஈராக் போருக்கு எதிராக கண்டனப் பேரணி நடத்திய, கோடிக்கணக்கான சுதந்திர சிந்தனையுள்ள மக்களது கவலைகளின் வெளிப்பாட்டைத்தான் வீரமந்திரி எடுத்துக்காட்டியிருக்கிறார். ஏகாதிபத்திய போருக்கு எதிரான அவர்களின் எதிர்ப்புக்கள் ஏகாதிபத்தியப் போர்களின் சகாப்தத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு சர்வதேச போராட்டத்திற்கான உள்ளாற்றலை சக்திமிக்க வகையில் வெளிப்புடுத்துகிறது. ஆனால், சர்வதேச தொழிலாள வர்க்கம் சோசலிச வேலைத்திட்ட அடிப்படையில் தலைமை ஏற்று உலக அளவில் ஏகாதிபத்தியத்தை தூக்கி வீசும் பணிக்காக ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டினால்தான், இந்த முற்போக்கு எதிர்பார்ப்புக்கள், நிறைவேற்றப்பட முடியும்" என்று டயஸ் விளக்கினார்.

தெற்கு ஆசியாவில் அமெரிக்க தலையீடுகள்

டயஸ் பின்னர் இந்திய துணைக் கண்டத்து அரசியல் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது குறித்து விளக்கினார். நீண்ட காலமாக நிலவி வருகின்ற வகுப்பு மோதல்களை தீர்த்துவைக்கிறோம் என்ற பெயரால் அமெரிக்கா தலையிட்டுக் கொண்டிருக்கிறது. "இலங்கையில், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை இலங்கையின் அன்றாட விவகாரங்களை கவனிக்கின்ற காலனி அலுவலகமாக உண்மையிலேயே செயல்பட்டு வருகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ், மற்றும் கொழும்பிலுள்ள அவரது தூதர் ஆகியோர் எல்லாக் கட்சிகளுக்கும் என்னென்ன செய்யவேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்று கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்" என்று டயஸ் விளக்கினார்.

எல்.டி.டி.இ அண்மையில், சமாதானப் பேச்சுக்களில் கலந்துகொள்வதில் தற்காலிகமாக நிறுத்திகொள்வதாக அறிவித்தது. அதற்கு கொழும்பு அரசாங்கம் பதில் கருத்து வருவதற்கு முன்னரே, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதர் ஆஸ்லி வில்ஸ், மிகுந்த இறுமாப்போடு, இந்த முடிவை ரத்து செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தில் சில பிரிவினரது அணுகுமுறையை, ``ஐலண்ட் பத்திரிகை,`` மிகச் சுருக்கமாக எடுத்துக்காட்டியது. ஐலண்ட் பத்திரிகை தனது தலையங்கத்தில் அமெரிக்க தலையீட்டை வரவேற்றது. எல்.டி.டி.இ யின் கன்னத்தில் "ஓங்கி அறைந்தது போல்" இந்த தலையீடு இருப்பதாகவும், எல்.டி.டி.இ-யின் "மிரட்டலை" கண்டிப்பதாக இருப்பதாகவும், குறிப்பிட்ட அந்தப் பத்திரிகை அமெரிக்கா இன்னும் வலுவான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

``இந்திய துணைக்கண்டத்தில் நாம் காண்பது இதேபோன்ற நிலவரம் தான், காஷ்மீர் தொடர்பாக இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே தகராறை பயன்படுத்தி, அமெரிக்க நிர்வாகங்கள், குறிப்பாக கிளிண்டனுக்குப் பின்னர், இந்த பிராந்தியத்து, அரசியல் விவகாரங்களில் வாஷிங்டனின் கருத்தை வலுப்படுத்தியுள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும், இந்திய துணைக்கண்டம் பிரிக்கப்பட்ட 1947-க்குப் பின்னர் சந்தித்திராதா நெருக்கடியை சந்தித்துவருகின்றன. மற்றும் அந்த இரண்டு நாடுகளும், இந்தத் தகராறில் அமெரிக்க தலையீட்டை கோரி மன்றாடி நிற்கின்றன.`` இவ்வாறு டயஸ் குறிப்பிட்டார்.

``எல்.டி.டி.இ-யின் அணுகுமுறை இதிலிருந்து வேறுபட்டதல்ல" என்றார் டயஸ். "எல்.டி.டி.இ -யின் தலைமைப் பேச்சாளர் பாலசிங்கம், உடனடியாக வருத்தம் தெரிவிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். சமாதான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதை தற்காலிகமாகவே நிறுத்திவைப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு உறுதியளிக்கும் வகையில் பாலசிங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தார்`` என்று குறிப்பிட்ட டயஸ், அவர்களது அரசியல் தந்திரங்களில் உத்திகளில் வேறுபாடுகள் இருந்தாலும் சிங்கள மற்றும் தமிழ் பூஷ்வாக்கள் ஆகிய இருவரும், ஒரே ஏஜமானர்களுக்கு அடிபணிந்து நடப்பவர்கள் மற்றும் ஏகாதிபத்திய தலையீட்டிற்கு வழி செய்துகொண்டிருக்கிறார்கள் என்று டயஸ் விளக்கினார்.

"இந்தியத் துணைக் கண்டத்தில் நாம் காண்பதும் இதனையேதான். இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் காஷ்மீர் மீதான தகராறைப் பயன்படுத்திக் கொண்டு, அமெரிக்க நிர்வாகங்கள், குறிப்பாக கிளிண்டன் நிர்வாகத்திலிருந்து இப்பிராந்தியத்தின் அரசியல் விவகாரங்களில் வாஷிங்டனின் கரத்தைத் தொடர்ந்து பலப்படுத்தி வருகின்றன. 1947 துணைக்கண்டப் பிரிவினையிலிருந்து இரு நாடுகளும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன மற்றும் இந்தத் தகராறைத் தீர்ப்பதற்கு அமெரிக்காவின் உதவியை நாடிக் கொண்டிருக்கின்றன."

ஈராக்கிற்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்க்கொள்வதில் குவைத்தை சாக்காகக் கொண்டு, முதலாவது வளைகுடாப்போரை தொடக்கியது. தற்போது நடைபெற்று வருகின்ற ஆக்கிரமிப்பு போரினால் அமெரிக்க இராணுவம் ஈராக்கை பிடித்துக்கொண்டது. இலங்கையிலோ, அல்லது இந்திய துணைக்கண்டத்திலோ, உள்நாட்டு தகராறுகளை தீர்த்து வைப்பது என்பது பூகோள மேலாதிக்கத்தின் அதன் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, மிக எளிதாக அமெரிக்க தலையீடுகளை மேலும் வரவழைப்பதற்கு வழி அமைத்துவிடுகிறது என்று டயஸ் எச்சரிக்கை விடுத்தார்.

டயஸ் தன்னுடைய உரையை முடிக்கும்போது இலங்கையிலும், இந்திய துணைக்கண்டம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட எல்லா இராணுவ உடன்படிக்கைகளையும் ரத்து செய்யுமாறு கோரவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். சோசலிச அடிப்படையில், சர்வதேச ஐக்கியத்திற்காக தொழிலாள வர்க்கத்தால் போராடப்படும் சுதந்திரமான வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இது கட்டாயம் இருக்க வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், அதன் சர்வதேச அங்கமான உலக சோசலிச வலைத் தளமும் மட்டும்தான் இந்த வேலைத் திட்டத்தின் அடிப்படையில் பொதுமக்களை அணிதிரட்ட போராடி வருகின்றன என்று டயஸ் கூறினார்.

SEP- மத்தியக்குழு உறுப்பினர்களான, விலானி பீரிஸ், எம்.அரவிந்தன் ஆகியோரும் கூட்டத்தில் உரையாற்றினர். ஈராக் போரைத் தொடர்ந்து தெற்கு ஆசிய மண்டலத்தில் தனது தலையீட்டை அமெரிக்கா தீவிரப்படுத்தியிருப்பதாக பீரிஸ் விளக்கினார். இந்தியாவையும், பாகிஸ்தானையும் காஷ்மீர் பிரச்சனையில் ஒரு தீர்விற்கு வருமாறு, அமெரிக்கா, நிர்பந்தித்து வருவதாகவும், இந்திய துணைக்கண்டத்தில் சமாதானத்தை நிலைநாட்டுவது அமெரிக்காவின் நோக்கமல்ல, ஆனால், சீனா மீது நிர்பந்தம் கொடுப்பதை தீவிரப்படுத்துவதற்கு வழி அமைக்கவே, இந்த முயற்சியில் இறங்கியிருப்பதாகவும், இப்படிச் செய்வதன் மூலம் இந்த மண்டலம் முழுவதிலும் கொந்தளிப்பை மட்டுமே, அமெரிக்கா கிளப்பிவிடும் என்றும் விலானி பீரிஸ் விளக்கினார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தின் நிறுவன பொதுச்செயலாளர், கீர்த்தி பாலசூரியாவின் கருத்துக்களை பீரிஸ் மேற்கோள் காட்டினார். 1948-ம் ஆண்டு, இந்திய துணைக்கண்டத்தின் ஏகாதிபத்திய பிரிவினை, வகுப்பு மோதல்களை முடிவிற்கு கொண்டுவருவதற்காக என்று அர்த்தப்படுத்தப்பட்டது. ஆனால், பேரழிவையும் எதிர்காலத்தில் மிகப்பெரிய மோதல்களையும் தூண்டிவிடுகின்ற தூபம் போடுகின்ற காரியமாக அது அமைந்துவிட்டது என்று கீர்த்தி பாலசூரியா அப்போது கூறியிருந்தார். ``முதலாளித்துவ முறை சிதைந்துகொண்டு வருவதால் எழுகின்ற பிரச்சனைகளை சர்வதேச சோசலிச வேலைத்திட்ட அடிப்படையில்தான், ஒரு தீர்விற்கு கொண்டுவர முடியும். இப்போது, ஏகாதிபத்தியம் மனித இனத்தை மூன்றாம் உலகப்போருக்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. அந்தச் சூழ்நிலையில் இந்த நேரத்தில் தேவைப்படுவது, சர்வதேச அடிப்படையிலான சோசலிச வேலைத்திட்டம் தான்`` என்று பீரிஸ் குறிப்பிட்டார்.

M.அரவிந்தன் சர்வதேச நிலவரம் குறித்தும், WSWS-பங்களிப்பு குறித்தும், விரிவாக உரையாற்றினார். குறிப்பாக, எல்.டி.டி.இ -யின் தேசியவாத மற்றும் இனவாத முன்நோக்கின் வெற்றுத் தன்மையை விளக்கினார். தனது ஆயுதம் தாங்கிய போராட்டம், பெரிய நாடுகளை கொழும்பு ஆட்சியை நிர்பந்தித்து தமிழ் மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வழங்கச் செய்ய வற்புறுத்தும் என்று பிரகடனப்படுத்தி, அந்த அடிப்படையில் எல்.டி.டி.இ பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை பலிகொடுத்தது. "இருபது ஆண்டுகளுக்கு மேலாக, தேசிய பிரிவினைவாத ஈழ தனி நாட்டு கோரிக்கைக்காக நடத்தப்பட்டு வந்த ஆயுதம் தாங்கிய போராட்டத்தின், அரசியல் வரவு செலவு கணக்கு என்ன?" என்று அரவிந்தன் கேட்டார். "இறுதியாக எல்.டி.டி.இ- இதர, ஒவ்வொரு தேசிய இயக்கத்தைப் போன்றும், மேலைநாட்டு அரசுகள் காட்டுகின்ற வழியில் நடைபோட வேண்டிய நிலைக்குத்தானே வந்திருக்கிறது" என்றும் அரவிந்தன் குறிப்பிட்டார்.

கூட்ட முடிவில், சோசலிச சமத்துவக் கட்சி நிதிக்காக, 3670 ரூபாய் நன்கொடை வசூலிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட பலர், கூட்டம் முடிந்த பின்னரும், காத்திருந்து, பேச்சாளர்கள் மற்றும் இதர சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடினர்.

Top of page