French concessions on Iraq met by US threats
ஈராக் தொடர்பாக பிரான்ஸ் விட்டுக்கொடுத்தாலும் அமெரிக்காவின் மிரட்டல் அதிகரிக்கவே
செய்கிறது
By Alex Lefebvre
1 May 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
அமெரிக்க இராணுவவாதத்திற்கு பிரான்ஸ் கடைசியாக காட்டியுள்ள சலுகை-- ஈராக்கிற்கு
எதிரான ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகளை நிறுத்திவைக்க முன்வந்தமை-- புஷ் நிர்வாகத்தில் உள்ள மூத்த அதிகாரிகளிடமிருந்து
மேலும் மேலும் அச்சுறுத்தலையே தூண்டிவிட்டுள்ளது. இந்த பதில் நடவடிக்கை, ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஈராக்
மீது அமெரிக்கா தலைமையில் போர் தொடுப்பதற்கான தீர்மானம் வந்தபோது பாரிஸ் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியது
முதல் புஷ் நிர்வாகம் பாரிசிற்கு எதிராகப் பயன்படுத்தப்படும் அச்சுறுத்தி அடக்கும் நடவடிக்கைகளின் தொடர்ச்சி
ஆகும். இது, வருங்காலத்தில் ஐரோப்பிய விவகாரங்களை, மேலும் உண்மையில் சர்வதேச விவகாரங்களை எப்படி வாஷிங்டன்
நடத்த நோக்கங்கொண்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது. அமெரிக்கா -ஐரோப்பாவை
பிளவுபடுத்த வேலை செய்து வருகிறது. அமெரிக்க கொள்கைகளிலிருந்து, விலகி நின்று சுதந்திரமாக செயல்படுவதை
வலியுறுத்தும் எந்த நாட்டையும், தனிமைப்படுத்தி, இழிவுபடுத்த அமெரிக்க முயன்றுவருகிறது.
ஈராக்கில், அமெரிக்காவின் இராணுவ வெற்றியை பாராட்டி பல வாரங்களாக பிரான்ஸ்
அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது என்றாலும், பிரெஞ்சு-அமெரிக்க உறவுகளுக்கிடையில் உள்ள விரிசலை சரிகட்ட முயற்சிகள்
மேற்கொண்டாலும் புஷ் நிர்வாக அதிகாரிகளும், மற்றும் அவர்களது பழமைவாத குடியரசுக்கட்சி ஆலோசகர்களும்,
பிரான்சின் கருத்திற்கு உரிய மதிப்பை தரவில்லை. ஏப்ரல்-21-ந்தேதி, புஷ் நிர்வாக அதிகாரிகள் ஒரு கூட்டத்தை
நடத்தினர். அந்தக் கூட்டத்தில் பிரான்சை தண்டிப்பதற்குரிய வழிகள் விவாதிக்கப்பட்டன. அந்தக் கூட்டத்தில் தேசிய
பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன், செல்வாக்குமிக்க இரண்டு கொடுங் கொள்ளைக்காரர்களான,
துணை ஜனாதிபதி ரிச்சர்ட் செனியின் அலுவலர்கள் ஐ. லூயீஸ் லிப்பி, மற்றும் எரிக் இடெல்மன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தற்போது பிரெஞ்சு அரசாங்கம், அமெரிக்காவிற்கு கணிசமான சலுகைகளை வழங்க
முன்வந்திருக்கிறது. ஆயுதக் கட்டுப்பாடு மீறல்கள் தொடர்பாக ஈராக்கிற்கு எதிரான எந்தவிதமான தடைகளை அகற்றலும்,
ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் சோதனைகள் புதுப்பிக்கப்படல் மற்றும் முற்றுப்பெறல் வரை அதேபோல ஐ.நா.
பாதுகாப்பு சபையும் வாக்களிக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்று இதற்கு முன்னர் பிரான்ஸ் கூறிவந்தது. இந்த
நிலைப்பாட்டின் காரணமாக புஷ் நிர்வாகத்திற்கு கணிசமான அளவிற்கு அரசியல் நிர்பந்தம், கொண்டுவரப்பட்டது. ஏனெனில்
புஷ் நிர்வாகம் தான், ஈராக் மீது போர் தொடுப்பதை நியாயப்படுத்துவதற்காக கூறிவந்த பல்வேறு குற்றச்சாட்டுகளின்
குறைபாடுகளை ஐ.நா. ஆயுத சோதனை மேலும் அம்பலப்படுத்தும். ஐ.நா. பொருளாதாரத் தடைகளை உடனடியாக
நீக்குவதற்கு இணக்கம் தெரிவித்து ஏப்ரல்-22-ந் தேதியன்று பிரான்ஸ் தனது இந்த நிலைப்பாட்டை கைவிட்டது. நிரந்தரமாக
ஈராக் மீது பொருளாதாரத்தடை நீக்கப்பட வேண்டும் என்றால், ஈராக் ஆயுத குறைப்பை சரிபார்க்கும் வரை காத்திருக்க
வேண்டும் என்று மட்டும் பிரான்ஸ் வற்புறுத்தி வருகிறது.
அன்று இரவு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொலின் பவல், பிரான்ஸ் மீது அமெரிக்கா
அரசியல் அடிப்படையில் எதிர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவர் புஷ் நிர்வாகத்தில்
இடம்பெற்றுள்ள "மிதவாதி" என்று அடிக்கடி கூறப்பட்டு வருபவர். அமெரிக்க பொது தொலைக்காட்சி பேட்டியாளர்
சார்லி றோஸ் (Charlie Rose), ஏதாவது ஒரு நாடு
பிரான்சை போன்று அமெரிக்க கொள்கையை எதிர்க்குமானால் தனது நடவடிக்கைக்கான விளைவுகளை சந்திக்கவேண்டும்
அல்லவா? என அவர் கேட்டார். பவல் உடனடியாகவும், சட்டென்றும் "ஆம்" என்று பதிலளித்தார்.
அடுத்த நாள் காலை, அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் பவலின் அறிக்கை தவறானது
அல்ல, அது அதிகாரபூர்வமான கொள்கையின் எதிரொலிதான் என்று ஊர்ஜிதப்படுத்தினர். வெளியுறவுத்துறை அதிகாரியான
ரிச்சார்ட் புச்சர் (Richard Boucher) இதுபற்றி
கருத்து தெரிவிக்கும்போது, பிரான்ஸ் சந்திக்கவேண்டிய விளைவுகள் "தத்துவ்வியல் ரீதியானதற்கும் அதிகமானது" ஆக
இருக்கும் என குறிப்பிட்டார். அதே நேரத்தில் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் டொமினிக் டு-வில்ப்பன்
தொலைபேசியில் பவலை அழைத்து பேசியதைப் பற்றி ரிச்சர்ட் பவுச்சர் விளக்கம் தரும்போது, "ஆம்" என்ற
சொல்லைப் பற்றி சில பத்திரிகைகளில் மிதமிஞ்சிய கற்பனையோடு செய்திகள் வெளியிடப்பட்டிருப்பது குறித்து இருவரும்
வாய்விட்டு சிரித்தனர், சில பத்திரிகைகள் "ஆம்" என்ற சொல்லை "போர்" என்று விமர்சித்துவிட்டன என்று புச்சர்
விளக்கினார்.
பிரான்சின் அரசியல் செல்வாக்கை சர்வதேச ராஜ்ஜியத்துறை அரங்குகளில் குறைப்பதற்கும்,
மற்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்து தனிமைப்படுத்துவற்கும் வகைசெய்யும் அரசியல் எதிர்நடவடிக்கைகளை எடுப்பது குறித்து
அமெரிக்கா முக்கியமாக விவாதித்தது. பிரான்ஸ் பங்குகொள்ளும், நேட்டோ- வின் வடக்கு அட்லாண்டிக் கவுன்சிலை
புறக்கணித்துவிட்டு, பிரான்ஸ் இடம்பெறாத, நேட்டோ பாதுகாப்பு திட்ட கவுன்சிலில் அதிக அளவில் முடிவுகளை எடுப்பது
குறித்து அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது. அமெரிக்காவின் பாரம்பரிய ஆதரவு நாடுகளான இத்தாலியையும், ஸ்பெயின்
ஐயும், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐரோப்பிய - அமெரிக்க கூட்டங்களுக்கு அழைப்பது குறித்து அமெரிக்கா
ஆலோசித்து வருகிறது. வழக்கமாக இந்த ஆண்டுக் கூட்டங்களில் அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி மற்றும் பிரான்ஸ்
ஆகிய நாடுகள்தான் கலந்துகொள்ளும்.
இதுவரை அமெரிக்க அதிகாரிகள் வர்த்தக அல்லது பொருளாதார அடிப்படையில் பிரான்சிற்கு
எதிரான எதிர்நடவடிக்கைகளை எடுப்பதை தவிர்த்துவருகின்றனர். அமெரிக்காவுக்கான பொருட்களை தயாரிக்கும், பிரான்ஸ்
நாட்டிற்கு சொந்தமான நிறுவனங்களை குறிவைத்து நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது உண்டு.
ஆனால் அந்த முயற்சிகள் தோற்றுவிட்டன, ஏனென்றால் பெரும்பாலான பொருட்களை பிரான்ஸ் கம்பெனிகள் அமெரிக்காவிலேயே
அமெரிக்கத் தொழிலாளர்களை கொண்டு தயாரித்து வழங்குவதால், அந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது
என்ற ஆட்சேபனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இன்றைய தினம் உலகப் பொருளாதாரமே ஆட்டம்
கண்டு கொண்டிருக்கின்ற நிலையில் அமெரிக்கா, தனது வெளிவர்த்தக, பற்றாக்குறையை சரிக்கட்டுவதற்காக, வெளிநாட்டு
முதலீடுகளை குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளின் முதலீடுகளையே நம்பி இருக்கிறது. எனவே, பிரான்சிற்கும் அமெரிக்காவிற்கும்
இடையே முழுமையான வர்த்தக யுத்தத்தை தூண்டிவிடும் அளவிற்கு நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டால் அது மிகவும் ஆபத்தாக
முடிந்துவிடும். "அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரான்சிற்கு எதிராக, பொருளாதாரத் தடைகளை உருவாக்கும் பல
திட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை மிக இரகசியமாக சிதைக்கப்பட்டன, ஏனென்றால், வெள்ளை மாளிகை வர்த்தக
நலன்களை கருத்தில்கொண்டே செயல்பட்டு வருகிறது" என்று பிரான்ஸ் நாட்டு பழமைவாத பத்திரிகையான லு-பிகாரோ
எழுதியிருக்கிறது.
வாஷிங்டன் உடன் சமரசம் செய்துகொள்வதில் உறுதியாக செய்லபட்டுவரும்போதும்
பிரெஞ்சு வலதுசாரி அரசாங்கத்தின் அடிப்படை வெளியுறவுக் கொள்கைகளையும் அதன் போக்கையும் இந்த அச்சுறுத்தல்கள்
மாற்றவில்லை. துருக்கியில் சுற்றுப்பயணம் செய்யும்போது, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் வில்ப்பன் அங்காராவிலிருந்து
ஒரு அறிக்கை வெளியிட்டார். "போர் வேண்டுமா? இல்லையா என்ற கட்டம் முடிந்துவிட்டது. எதிர்காலத்தில் இணைந்து
செயல்படுவதை நாம் எதிர்பார்க்கவேண்டும். பிரான்ஸ் தனது நடைமுறைத் தன்மையையும், வெளிப்படையான
தன்மையுைம் காட்டிக்கொள்ள விரும்புகிறது" - என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.
பிரான்ஸ் நாட்டின் ஆளும் தட்டில் உள்ள வலுவான பிரிவுகள், அமெரிக்காவின் போர் வெறிப்போக்கிற்கு
எல்லா விதமான சலுகைகளையும் காட்டிய பின்னரும் வாஷிங்டன் பிரான்சை தண்டிப்பதில் உறுதியுடன் உள்ளதானது அதிக
அளவில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. லு பிகாரோ பத்திரிகை அண்மையில், ஈராக் பொருளாதாரத்
தடை பற்றிய விஷயங்களுடன் சேர்த்து ,மேலும் பிரான்ஸ் அமெரிக்காவிற்கு காட்டியுள்ள ஏனைய சலுகைகளை பட்டியலிட்டிருக்கிறது.
ஈராக் மீதான பொருளாதார தடைகளை நீக்குவதுடன், தற்போது முதல் தடவையாக நேட்டோ ஐரோப்பாவிற்கு வெளியில்தலையிடுவதை,
ஆப்கானிஸ்தானில், நேட்டோ சர்வதேச பாதுகாப்பு படைக்கு தலைமைவகிப்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறது. அத்துடன்
ஈராக்கில் ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள், அமெரிக்க மற்றும் பிரித்தானிய ஆயுத ஆய்வாளர்களுடன் அக்கம்பக்கமாக
நின்று வேலைசெய்யலாம் என்று முன்மொழிந்தது. ஈராக் போரின் 'சட்ட விரோதத்தன்மை' பற்றிய கண்டனக்குரலை,
பிரான்ஸ் அடக்கிக்கொண்டது. இவ்வளவுக்கு பின்னரும், அமெரிக்கா சமாதானம் அடையவில்லை. அமெரிக்காவை சமாதானப்படுத்துவதற்கும்
இவை உண்மையில் போதுமானவையாக இருக்கவில்லை", என்று அந்த பத்திரிகை எழுதியுள்ளது.
பிரெஞ்சு அரசாங்க பேச்சாளர் ஜோன்-பிரான்சுவா கொப்பே, பவலின் கருத்தின் முக்கியத்துவத்தை
குறைத்து மதிப்பிட்டு காட்ட முயற்சித்தார். பவல் கூறிய கருத்துக்கள், "ஜனாதிபதி சிராக்கிற்கும் ஜனாதிபதி புஷ்ஷிற்கும்
இடையில் அண்மையில் நடந்த தொலைபேசி உரையாடல்களை ஒருவர் கவனிக்கக் கூடியவாறு, நிலவுகின்ற நடப்பு உறவுகளை
சரியாக எதிரொலிக்கவில்லை" என்றார். ஆயினும், மைய இடது நாளிதழான லிபரேசன் சுட்டிக்காட்டுகிறவாறு, (அழைப்பை
வர்த்தக அடிப்படையில் அமைந்த பேச்சு) என்று அமெரிக்க அதிகாரிகள் வர்ணித்திருப்பது, ராஜ்ஜியத்துறை வட்டாரங்களில்
உறைநிலை சூழலை விளக்குவதற்கு ஆகும்.
பிரான்சிற்கும் -அமெரிக்காவிற்கும் இடையே நிலவுகின்ற பிணக்கு, முதலாளித்துவ ஐரோப்பிய
ஐக்கியத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதை பிரான்ஸ் நாட்டு ஆளும் வட்டாரங்கள் உணர்ந்திருக்கின்றன.
சிமீஸீtக்ஷீமீ திக்ஷீணீஸீஃணீவீs ஜீஷீuக்ஷீ றீமீs ணிtணீts-ஹிஸீவீs (சிதிணிஐக்கிய
அமெரிக்க அரசுகளுக்கான பிரெஞ்சு மையத்தின்) தலைவர்,Guillaume
Parmentier, பிரான்சிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உறவுகளில் விரிசல் நிலவுமானால்,
பொதுவான, ஐரோப்பிய வெளியுறவுக்கொள்கை என்ற கருத்தை நமது ஐரோப்பிய பங்காளர்கள் கைவிடவேண்டியதிருக்கும்.
அந்த நேரத்தில் பிரான்ஸ் முற்றிலும் அமெரிக்கா முன் தாழ்ந்து பணிந்து போகாவிட்டாலும், குறைந்த பட்சம் அந்தப்
போக்கு வம்பளக்கும்" என்று லி பிகாரோவிடம் கூறினார்.
அத்தகைய "வம்பளப்பு" புஷ் நிர்வாகத்தை அதன் ஆந்த்திரமூட்டும், அச்சுறுத்திப் பணியவைக்கும்
நிலையிலிருந்து பின்வாங்கும்படி நம்பச்செய்ய முடியவில்லை. ஜூன் முதல் தேதி G-8
தொழில்வள நாடுகளின் பொருளாதார உச்சிமாநாடு பிரெஞ்சு ஆல்ப்ஸ் பகுதியிலுள்ள எவியானில்
(Évian) நடைபெறவிருக்கும் அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக
வரும் ஜனாதிபதி புஷ் ஒவ்வொரு நாள் இரவிலும் பிரான்சில் தங்குவதற்கு மறுத்துவிட்டு, அருகாமையிலுள்ள சுவிட்சர்லாந்தின்
ஹோட்டலில் தங்குவார் என்று புஷ் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இதைப் பற்றி கருத்து தெரிவித்த, பெயர் குறிப்பிடா
பிரெஞ்சு அதிகாரி ஒருவர், "நாங்கள் எவரையும் பிரான்சில் இரவில் தங்குங்கள் என்று கட்டாயப்படுத்தமாட்டோம்"
என்று கருத்து தெரிவித்தார். ஈராக் மீது குண்டு வீசுவதற்கு அமெரிக்கப் போர் விமானங்கள் பிரெஞ்சு வான் எல்லை
வழியாக பறந்துசெல்வதற்கு அனுமதி வழங்கியது. சுவிட்சர்லாந்து அந்த அனுமதியை வழங்க மறுத்துவிட்டது. ஆனால் இப்போது,
பிரான்சில் இரவில் தங்கமாட்டேன், சுவிட்சர்லாந்தில் தங்குவேன் என்று புஷ் நிர்வாகம் கூறுகிறது, என்று அந்த அதிகாரி
முரண் நகைச்சுவை பற்றி அந்த அதிகாரி கருத்து தெரிவித்தார்.
மற்றய நாடுகளுக்கு எச்சரிக்கை தருகின்ற வகையில், பிரான்சிற்கு தண்டனை வழங்கப்படவேண்டும்
என்பதில் புஷ் நிர்வாகம் உறுதியாக இருக்கிறது- என்றாலும், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில்
தலையங்கம் எழுதுகின்ற ஜிம் ஹோக்லண்ட் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹொண்டாலீசா ரைஸ்ஸின் தாரக மந்திரத்தை
குறிப்பிட்டிருக்கிறார். "பிரான்சை தண்டி, ஜேர்மனியை புறக்கணித்துவிடு, மற்றும் ரஷ்யாவை மன்னித்துவிடு" இதுதான்
அவரது தாரக மந்திரம், இத்தகைய அச்சுறுத்தல் பிரான்சிற்கு மட்டுமல்ல, ஜேர்மனி, ஈராக் போரில் கலந்துகொள்ளாது
என்ற உறுதியான கொள்கை அடிப்படையில், 2002-தேர்தலில், மீண்டும் ஜனாதிபதியாக சுரோடர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு
பாராட்டுத் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கனடா பிரதமர் ஜோன் கிரெத்தியானையும் புஷ் நிர்வாகம் கண்டித்திருக்கிறது. அமெரிக்கா
தலைமையில் ஈராக் மீது நடத்தப்பட்ட போரில் போதுமான அளவிற்கு அவர் ஆதரவு காட்டவில்லை என குற்றம்
சாட்டியுள்ளது. கனடாவின் செய்திப் பத்திரிகையான, குளோப் அன்ட் மெயில் ஏப்ரல்-24-ந் தேதி மிகுந்த
ஆதங்கத்தோடு கனடா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பல இதர நீண்ட கால நெருக்கமான நட்பு நாடுகள், ஈராக்
போரில் தன்னை விரும்பி ஆதரிக்கவில்லையே என்ற கவலையை புஷ் நிர்வாகம் வெளிப்படுத்தியுள்ளதாகவும் அந்தப் பத்திரிகை
குறிப்பிட்டிருக்கிறது.
நியூயோர்க் டைம்சின் தலையங்க எழுத்தாளர் வில்லியம் சஃபயர் தற்போது வழக்கமாக
அரசாங்கத்தின் அகந்தைமிக்க பிரச்சார பீரங்கியாகவும், மற்றவர்களை மட்டம் தட்டுபவராகவும் செயல்பட்டு வருகிறார்.
அவர் ஏப்ரல்-24-ந் தேதி எழுதியுள்ள தலையங்கத்தில், ஈராக்கில் மறுநிர்மாண பணிகள் தொடர்பான,
பெருந்தொகை ஒப்பந்தங்களை பிரெஞ்சு கம்பெனிகள் பெறுவதை தடுத்துவிட்டார்கள் என்று, பிரான்ஸ் வேதனைப்படுவதாக
குறிப்பிட்டிருக்கிறார். ஐ.நா. ஈராக்கில் தலையிடுவதன் மூலம், நிதி ஆதாரங்கள், பாரிஸ், மொஸ்கோ மற்றும் டமாஸ்கஸ்ஸிற்கு
திருப்பப்பட்டுவிடும் என்று அந்த தலையங்க ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். ஐ.நா.வின் கால்கள் ஆழமாக ஈராக்கில்
பதிந்திருப்பது, அந்நாட்டு எண்ணெய் வசதியை பெறுவதற்காக என்று கேலி செய்திருக்கிறார். மேலும் சஃபயர்
தாக்குதலை முடிக்கையில், பிரான்சும் அமெரிக்காவும் மீண்டும் "நண்பர்களாக ஆக முடியும்" ஆனால் "சிராக்கும் அவரது
குட்டி நாயான புட்டீனும் ஐ.நா.வை கடுமையாக, சேதப்படுத்திவிட்டார்கள்" என்று எழுதியிருக்கிறார்.
இப்படி எழுதப்பட்டிருப்பவற்றில் சில, உண்மையில் தன்னையே மறுதலிப்பதில் அப்பட்டமான
நேர்மைக் குறைவு ஆகும். பிரெஞ்சு கம்பெனிகள், ஈராக்கில் "கொழுத்த காண்டிராக்ட்களை" பெற்றிருக்கும் என்று
சபையர் (Safire) புகை மூட்டிய போதிலும், பிரெஞ்சு
கார்ப்பொரேஷன்களைத் தடுக்கும் பொருட்டு, அவர்களின் அமெரிக்கப் போட்டியாளர்களுக்கு அதே ஒப்பந்தங்களை
உத்திரவாதப்படுத்தவும், "realpolitik" என்பதைப்
பயன்படுத்துவதில் அமெரிக்காவுடன் அவருக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை, இவ்வார்த்தை ஆரம்பத்தில்
பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரஷ்யாவின் இராணுவவாதம் மற்றும் விரிவாக்கக் கொள்கையை பெயர் சுட்டி அழைக்கப்படுவதற்கு
பயன்படுத்தினார். சபையர் நேர்மையின்மை மற்றும் பேராசையை ஐரோப்பியர்களுக்கு கற்பிக்க முயல்கிறார், ஆனால்
அவர் அத்தகைய நோக்கங்கள் அமெரிக்க கொள்கையுடன் ஏதாவது செய்வதிருக்கும் என்ற சாத்தியத்தை அவர் ஒரு
போதும் கூட உறுதியற்றவிதமாய் மேற்கொள்ளவில்லை..
ஐ.நா. ஆய்வாளர்கள் திரும்ப ஈராக்கில் சோதனைகள் நடத்த திரும்ப வேண்டும் என்று
பிரான்ஸ் கூறியிருக்கும் முன்மொழிவுகளைப் பொருத்தவரை, ஈராக் மற்றும் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய அமெரிக்க
கூற்றுக்களுக்கு ஏதாவது நம்பகத்தன்மையை ஒருவர் கொடுத்தால், அவை பொது அறிவிற்கு பொருத்தமான ஒரு
கோரிக்கைதான். மொத்தத்தில், சதாம் ஹூசேன் ஆட்சியை கவிழ்த்தது, பரவலாக, ஈராக் முழுவதிலும், பரந்த
மற்றும் கட்டுப்படுத்த முடியாத சூறையாடல்களைத் தூண்டிவிட்டுள்ளது. அப்பொழுது மிக வலுவான ஷியா இயக்கத்தின் கையில்
கற்பனையாக கூறப்பட்ட பயங்கர ஆயுதங்கள் கிடைத்திருக்கக்கூடும். இதனை அமெரிக்க அரசாங்கம் நீண்டகாலமாய் பயங்கரவாத
இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருக்கிறது என்றும் புஷ்ஷின் "தீய அச்சுக்களின்" பகுதியான ஈரானுடன் தொடர்பு வைத்திருக்கின்றதென்றும்
குற்றம் சாட்டி வருகிறது. இந்தப் பிரச்சனையை சபையர் முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்.
ஆயினும், சபையரின் குறிப்பிடத்தக்க மழுப்பும் பத்தியில் ஒருவேளை மிகவும் முக்கியமாய்
கவனியாது விடப்பட்டது, பிரெஞ்சு - அமெரிக்க மோதல்கள் மீது கருத்தைக் கூறும் புஷ் நிர்வாகம் மற்றும் அதன் செய்தி
ஊடக ஆதரவாளர்கள் அனைவருடனும் அவர் பகிர்நுது கொள்கிறார்: அவர்கள் அமெரிக்க நடவடிக்கைகளின் கணிக்க
முடியாத மற்றும் ஆபத்தான விளைவுகளைப் பற்றி அடிப்படைரீதியில் குறைத்து மதிப்பிடுகின்றனர்.
ஈராக் போருக்கு இட்டுச்சென்றதில் அதன் சர்வதேச ராஜிய தோலவிகளின் வரிசையுடன்
கடுமையாய் மாறுபடும் வழியில் ஐரோப்பிய அரசுகளை ஊக்கிவிடுவது தொடர்பான புஷ் திட்டங்களுடன் எளிதான
உத்திரவாதம் இருக்கிறது. அதன் இழிபுகழ்பெற்ற ராஜிய தகாவழிநடத்தை இறுதியில் அவர்களை திருப்பிச்சுட வைக்கும்
மற்றும் ஐரோப்பாவில், ஐரோப்பியத் தொழிலாள வர்க்கம் தங்களின் கோழைத்தனமான, அமெரிக்க சார்பு ஆய்சியாளர்களை
அதிகரித்த அளவில் அவமதிக்கும், அக்கறை கொண்ட அரசியல் எழுச்சிகளை விளைவிக்கும்.
பிரான்சுக்கு எதிரான அமெரிக்காவின் மிகத்தீவிரமான இராணுவமய நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை
யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. சபையரின் ஆசிரிய பட்டியல் பாரிஸ், மாஸ்கோ அதே மூச்சில் டமாஸ்கஸ்சுடன்
சேர்த்து குறிப்பிட்டிருக்கிறார். மத்திய கிழக்கில் அடுத்த தாக்குதலுக்கு இலக்காகும் நாடு, சிரியா என்று பரவலாக
வதந்திகள் நிலவுகின்றன. பாக்தாத் நகரம் வீழ்ச்சியடைந்த நாளில், பழமைவாத நாளிதழான நியூயார்க் போஸ்ட்
தனது தலையங்கத்திற்கு கொடுத்திருந்த தலைப்பு, ``பாரீஸ் மீது படையெடுப்பு!`` - என்பது முதல் உலகப்போரின்போது,
போர் துவங்கிய நாட்களில், ஜெர்மனி ராணுவத்தினர் எழுப்பிய குரல் இது.
அண்மை ஆண்டுகளில் அமெரிக்க ஊடகங்கள் ஒரு முக்கியமான பணியை நிறைவேற்றியுள்ளன:
அமெரிக்கா மேற்கொள்ளும் போர்களை நியாயப்படுத்தும் வகையில், பொதுமக்கள் ஆதரவை, இராணுவ ஆக்கிரமிப்பை
திரட்டும் வகையில், அமெரிக்க மக்களுக்கு தெளிவாக தெரியாத வெளிநாட்டு எதிரிகளை பூதாகாரமாக ஊடகங்கள்
சித்தரித்து வருகின்றன. அண்மைக்கால வரலாற்றிலேயே முதல் தடவையாக, இத்தகைய நிகழ்ச்சிப் போக்கு --அமெரிக்க
ஆளும் தட்டின் மிகவும் பின்தங்கிய, நிதானம் தவறிய சக்திகளை பெருமளவில் சார்ந்திருக்கும்-- ஒப்பீட்டளவில்
பாதுகாப்பற்ற மூன்றாம் உலக நாடுகள் மட்டும் இன்றி, மற்றொரு பிரதான முதலாளித்துவ சக்தி மீதும் திருப்பிவிடப்
பட்டிருக்கிறது.
Top of page
|