WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
கலை விமர்சனம்
Sale of Breton archives breaks up legacy of Surrealist movement
பிரெட்டன் ஆவணக்
காப்பகம் விற்பனை மிகையதார்த்தவாத இயக்கத்தின் மரபுவழி கலைச் செல்வத்தை உடைக்கிறது
By Paul Mitchell
6 May 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
"Deux mille euros, cinq cent, trois mille, cinq cent,
quatre mille, cinq cent .. இரண்டாயிரம் யூரோக்கள்,
ஐந்நூறுகூட, மூவாயிரம் யூரோக்கள், ஐந்நூறுகூட, நாலாயிரம் யூரோக்கள், ஐந்நூறுகூட....."
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாற்றல் கொண்டவருள் ஒருவரான ஆந்திரே
பிரெட்டனின் உடைமைப் பொருட்கள் பாரிஸ் நகர ஏல நிறுவனம் ஒன்று அவற்றை விற்றுக்கொண்டிருந்தபொழுது இரண்டு
வாரங்களும் இந்தத் தன்மையிலான சொற்றொடர்கள் ஒலித்தன. 5000 பொருட்கள், 305 கையெழுத்துப் பிரதிகள்,
141 புத்தகங்கள், மற்றும் 84 பிரெட்டனுடையதான கலைப் படைப்புக்கள் முதலியன அடங்கியவை $50 மில்லியனுக்கு
விற்கப்பட்டன. இந்த வழிவகையில், மிகையதார்த்த இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, சர்ச்சைகள் இவற்றின் தனிச்சிறப்பான,
முழுமைபெற்ற வரலாற்று நிகழ்ச்சித் தொடர் ஒரு பண்பாட்டுக் கொள்ளையினால், இழக்கப்பட்டுவிட்டது.
1966ல் பிரெட்டன் இறந்த பின்னர் அவருடைய மனைவியார் எலிசாவும் ஒரு சிறிய மிகையதார்த்தக்
குழுவும் (கலைஞர்கள் குழு) விலைமதிப்பற்ற இந்த மரபுமாண்பின் பெட்டகத்தை ஒருங்கே வைத்திருக்கப் போராடினர்,
ஆனால் பிரெஞ்சுப் பண்பாட்டுக் குழுமமும், ஸ்ராலினிச கட்சிகளும், பிற தீவிரவாதக் கட்சிகளும், அம்முயற்சியை
பொருட்படுத்தவில்லை.
ஏலம் தொடர்ந்து நடைபெற்ற அளவில், ஏன் இந்த அமைப்புக்கள் பிரெட்டனின் மரபுப்
பெட்டகத்தைக் காப்பாற்றவில்லை என்பது தெளிவாயிற்று. 1936ம் ஆண்டு மொஸ்கோ பழைய போல்ஷிவிக் தலைவர்கள்
மீது விசாரணை நடத்தியதை எதிர்த்த, கண்டித்த, மேலும் ஸ்ராலின்தான் "பாட்டாளி வர்க்கப் புரட்சியின் முக்கிய
விரோதி" என்பதையும் முடிவாகக் கண்டறிந்த அறிவர்கள் சிலரில் பிரெட்டனும் ஒருவர் ஆவார். ஒன்றன்பின் ஒன்றாக
விற்கப்பட்ட பிரெட்டனின் உடைமைகள் அவருடைய சோசலிசப் புரட்சி மற்றும் சர்வதேசியக் கருத்துக்களின் வழி
வளர்ச்சியை வழியிட்டுக் காட்டுவதோடு, அந்த எண்ணங்கள் 1930களின் கடைசிப் பகுதியில் லியோன் ட்ரொட்ஸ்கியுடன்
இணைந்து செயலாற்றியதில் மற்றும்
"தடையற்ற புரட்சிகர கலையை நோக்கி"
"Towards a Free Revolutionary Art" -
என்ற அறிக்கையை வெளியிட்டதன் மூலம் அவற்றின் உச்ச நிலையை அடைந்ததும் தெளிவாக உணர்த்தின.
இந்தப் பெரிய மனிதர்களின் வாழ்வும் அவர்களின் காலகட்டமும் ஏல அறையில் நிழலாகப்
படர்ந்திருந்தது. மிகப்பரபரப்பான விற்றல், விற்றல், விற்றல், வாங்குதல், வாங்குதல், வாங்குதல் என்ற வெறி
கொண்ட சூழ்நிலை கூட மன அழுத்த உணர்வை மயக்கம் கொள்ள வைக்க முடியவில்லை. இடையிடை நிகழ்வாக பிரெஞ்சு
அதிகாரி சட்ட உரிமையைப் பயன்படுத்தி ஒரு பொருளை அருங்காட்சியகத்திற்கோ அல்லது கலைப்பொருட்கள்
கண்காட்சி வரிசைக்கோ மிக அதிக ஏலத்தொகை கொடுத்து வாங்குவார். ஒரு பொருள் தனியார் சேகரிப்பில்
மறைந்துவிடாமற் செய்யும் இந்தக் கடைசி முயற்சி ஒரு பாராட்டுக் கரவொலியை எழுப்பும்.
ஆனால் பெரும்பாலான நேரம் எண் பலகையில் யூரோக்களில், டாலர்களில், பவுண்டுகளில்,
யென்களில் விலைகள் பளிச்சென்று குறிக்கப்பட்ட அளவில், தங்களுடைய நோக்கங்களைப் புலப்படுத்தும் வகையில்,
விற்போரின் பட்டியலைப் பற்றிக்கொண்டும், பக்கங்களைப் புரட்டிக் கொண்டும், காகிதக் கத்தைகளைக் கொண்டு
குறிப்பெடுப்பது அல்லது அடையாளமிடுவது போன்ற நடவடிக்கைகள் அமைந்திருந்தன. `ஊ` என்றும் `ஆ` என்றும் முழங்கிய
ஒலி, ஏலத்தொகை வழிகாட்டும் விலையைவிட அதிகரித்தபோது உயர்ந்தும், கூட்டம் அதற்குக் காரணமானவரைத் தேடி
வாழ்த்துத் தெரிவிப்பதிலும், மிகையாயின. எப்பொழுதாவது ஏலக்கடையின் உரிமையாளர் - வாங்குபவருக்குத் தன்
ஆசிகளை நல்குவார். ஏலம் போடுபவர் ஒவ்வொரு பொருளையும் அதனுடைய புது உரிமையாளரிடம் அளிக்க இரண்டு
நிமிஷம் எடுத்துக்கொள்வார். அதன் பின்னர் சுத்தியலை மேசையில் தட்டி கூவத்தொடங்குவார், "அடுத்தது பட்டியல்
எண்......"
மொத்தத்தில் இழிவான வெறுக்கத்தக்க காட்சியாக அமைந்தது, சபின் வைஸ்ஸின் (Sabine
Weiss) 1965ம் ஆண்டு எடுக்கப்பட்ட பிரெட்டனின் புகைப்படங்களைப்
பார்த்தால் - தொகுதி எண் 5329 ல் உள்ளவையில் எது இழக்கப்பட்டது என்பது தெரியவரும்.
பிரெட்டன் தன்னுடைய இரு அறை கொண்ட அடுக்ககத்தில் பெரிய டெஸ்க் ஒன்றிற்குப்
பின்னால் அமர்ந்திருக்கிறார். இந்த 42, ஃபொன்ந்தேன் வீதி
(42, Rue Fontaine)
இல்லத்தில்தான், அவர் தன்னுடைய பெரும்பாலான வாழ்நாட்களைக் கழித்தார்.
நமக்கு அந்த இடத்தின் சூழ்நிலையின் தன்மையை அறிய முடிகிறது. ஜூலியன் க்ராக் (Julien
Gracq) என்ற எழுத்தாளர் அதை விவரிக்கிறார்: "கலைப்பொருட்களின்
மிகுதி சுவரையடைந்து எங்கும் படர்ந்து விரிந்திருந்த அளவில் மற்ற இடத்தைக் குறைத்துவிட்டது. குறிப்பிட்ட பாதையின்
வழியாகத்தான் ஒருவர் சுற்றிவரமுடியும் - செல்லும் வழியிலுள்ள கிளைகளையும், கொடிகளையும், முட்களையும்
காட்டுப்பாதையில் தவிர்ப்பது போல்." (Enlisant
en ecrivant).
பிரெட்டனுடைய புத்தகங்களையும், கையெழுத்துப் பிரதிகளையும் விற்பதற்கு ஐந்து நாட்கள்
பிடித்தன. அவை 450 பிரிவுகளாக்கப்பட்டு, மிகையதார்த்த வாதத்தின் மிக முக்கியமான தொடக்க ஆவணங்களையும்,
பிரெட்டனின் அரசியல் பேச்சுக்களையும், கையெழுத்திட்ட முதல் பதிப்புக்களையும் கொண்டிருந்தன.
ஏலத்திலிருந்த மிகையதார்த்த வாதத்தின் மிக ஆரம்பகால ஆவணங்களில் மயக்கநிலைத்
தூக்கத்தில் (hypnotic sleep) 1922---TM
(தொகுதி எண் 2026) வெளித்தோன்றிய கருத்துக்கள் - 500 தாள்களில் குறிப்பாக எழுதப்பெற்றவை
அடங்கியுள்ளன. மேலும் நினைவுகளும் பிரெட்டன் கருத்தின்படி, "இந்தக் கனவுகளின் தன்மையும் அதோடு தொடர்புடைய
வகையினங்களும் அனைத்து மிகையதார்த்த ஆதாரங்களில் தொடக்கத்தில் கொண்டிருந்தன என்று போகிற போக்கில் கூற
இயலும்" (Entrerines).
பிரெட்டன், பால் எலுவார்ட், லூயி அரகோன் ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட
1924ம் ஆண்டு மிகையதார்த்தப் பிரகடனம் விற்பனைக்கு வந்திருந்தது. பட்டியல் எண் 2119, நட்ஜா
(Nadja) வின் 1928ம் ஆண்டு முதல் பதிப்பின் மூலம்
ஆகும். இது வாழ்க்கை, அன்பு, கவிதை, தற்செயல் நிகழ்வு இவைபற்றிய மிகையதார்த்தக் கோட்பாடுகளை ஆராய்கிறது.
நட்ஜாவிலிருந்து அனுப்பப்பட்ட கடிதங்களுடன் சேர்ந்து இது விற்கப்பட்டது, இரண்டாண்டுகளுக்கு முன்பு பிரெட்டன்
நட்ஜாவின் மீது காதல் வயப்பட்டிருந்தார்.
1934ம் ஆண்டு பிரெட்டன் வெளியிட்ட மிகையதார்த்தம் என்றால் என்ன?
(தொகுதி எண் 148) என்ற துண்டுப் பிரசுரம் ஏலத்திலேயே ஒரு புத்தகத்துக்குக் கொடுக்கப்பட்ட உயர்ந்த விலையாகும்
- $250,000. வரைவு கவினுறு வடிவமைப்பு
(Draft designs), பிரெட்டன் மற்றும் ரெனே
மாக்கிரைட் (René Magritte) ஆகியோரிடையே
நடைபெற்ற கடிதப் போருக்குவரத்தும் இதில் அடங்கும். அந்த கவினுறு வரைவுகளில் ஒன்றுதான் அந்த அட்டைக்கு அமைப்பாக
உள்ளது.
ஆர்கேன் 17 என்ற 1944ம் ஆண்டுப் பதிப்புதான் (தொகுதி எண் 2254) பிரெட்டனின்
கையெழுத்துப் பிரதிகளில் ஒன்றுக்குக் கிடைத்த உயர்ந்த விலையாயிற்று - $750,000. அதில் பிரெட்டன் மீண்டும் மிகையதார்த்த
வாதத்தை தோற்றுவிக்க மந்திர, மறைபொருள் கருத்துக்களினின்றும் கையாள முற்பட்டார். புரட்சியின் சேவையில்
மிகையதார்த்தவாதம் (Surrealism at the Service of
the Revolution) என்ற பத்து ஆண்டுகளுக்கு
முன்னர் அவர் வெளியிட்ட நூலின் ஆவணங்களின் அரசியல் ஆற்றல் இந்தப் புத்தகத்தில்
(Arcaue 17) காண்பதற்கில்லை.
பட்டியல் எண் 2166ல், 1931ம் ஆண்டு, முன்பு யாராலும் பார்க்கப்படாத,
எலுவார்ட் மற்றும் சூசான் முஸார்ட் (Suzanne Muzard)
ஆகியோரால் தயாரிக்கப்பட்ட கைவினைப்பொருட்கள் அடங்கும். தொகுதி எண் 1113ல் புரட்சியின்
சேவையில் மிகையதார்த்தவாதம் நூலுக்குப் போட்ட இறுதி வடிவம் கொண்ட கவினுறு முகப்பு வடிவமைப்பு உள்ளது.
மிக அதிகமான ஒரு தனி மனிதரது நூல்கள் ஏலமிடப்பட்டது, என்ற பெருமை பிரெட்டுனுடைய
சொந்த எழுத்துக்களுக்கே கிடைத்தது. அதற்கு அடுத்தபடியாக இருந்தவை ட்ரொட்ஸ்கியுடன் இணைந்து எழுதியவை
அல்லது ட்ரொட்ஸ்கியால் எழுதப்பெற்றவை. இவற்றில் பலவற்றில் ட்ரொட்ஸ்கி கையெழுத்திட்டுள்ளார்; இவற்றில்
1933ம் ஆண்டு அவருடைய ரஷ்ய புரட்சியின் வரலாறு (History
of the Russian Revolution) (தொகுதி
எண் 1494) இன் முதல் பிரெஞ்சுப் பதிப்பும் அடங்கும். அதில் "என்னுடைய நண்பர்கள் ஜாக்குலினிற்கும் (Jacqueline)
ஆந்திரே பிரெட்டனுக்கும் என்னுடைய நிறைந்த, ஆழ்ந்த, போற்றும் உணர்வுகளுடன்`` என்று எழுதப்பட்டுள்ளது.
ஃபொன்ரைன் தெரு சுவர்களில் தொங்கிய அக்காலத்திய ஓவியர்களான
றிவீநீணீssஷீ, ஞிணீறீவீ, ஞிமீ சிலீவீக்ஷீவீநீஷீ, விணீஜ் ணிக்ஷீஸீst, யிஷீணீஸீ
விவீக்ஷீர, யிமீணீஸீ கிக்ஷீஜீ, விணீக்ஷீநீமீறீ ஞிuநீலீணீனீஜீ, கிக்ஷீsலீவீறீமீ நிuக்ஷீளீஹ், சீஸ்மீs ஜிணீஸீரீuஹ், கிஸீபீக்ஷீங விணீssஷீஸீ
போன்றோருடைய படைப்புக்களும், அதிகம் புகழ்பெற்றிராத அக்காலத்திய, மிகையதார்த்தத்திற்கு முந்தைய
ஓவியர்களின் படைப்புக்களும் இடம்பெற்றிருந்தன. இவருள் பலர் பிரெட்டனின் நண்பர்கள்; பிரெட்டனே தன் திறமையினால்
பெரிய ஓவியர் என்ற பெயர் எடுத்தவர்.
ஏறத்தாழ ஏலத்தில் கிடைத்ததில் பாதித் தொகையான 23 மில்லியன் டாலர்கள் இந்த
ஓவியங்கள் மூலம் கிடைத்தன. Arp ளில் தீட்டப்பட்ட பெண்
1927ல் படைக்கப்பட்டது (தொகுதி எண் 4016), மற்றும் Le
Piége - 1924ல் மீரோ ஆல் தீட்டப்பெற்றது
(பட்டியல் எண் 4040), $2,500,000 தொகையை ஈட்டின.
பிரெட்டன் மிகையதார்த்த வாதத்திற்கு முந்தைய ஓவியர்களின் படைப்புக்களையும் ஏராளமாகச்
சேர்ந்திருந்தார்; இவற்றில் அடையாளமுறைக் கலைஞரான (Symbolist
Artist) Gustave Moreau (1826-1998),
மறைபொருள் ஓவியங்கள் (Mystical Paintings)
Aloys Zotl (1803-1887) வரைந்த நல்ல வண்ணப்பூச்சுடன்
கூடிய மற்றும் விலங்கினங்களைப் பற்றி விளக்கும் ஓவியங்கள், அயர்லாந்தின்
பின்பதிவுவாத (Post-Impressionist)
ரொடெரிக் ஒ கொனோரின் (Roderic O'Conor
(1860-1940) நிலத்தோற்றச் சித்திரக் காட்சிகளும் அடங்கும்.
பிரெட்டனுடைய நூலான
மிகையதார்த்தமும் பூச்சுஓவியக்கலையும் (Surrealism and
Painting) என்பதில் மேற்கூறிய படைப்புக்கள் வெளிவந்தன. 1928ம் ஆண்டு இந்நூல் முதலில் வெளியிடப்பட்டது;
பிரெட்டன் தன் வாழ்நாள் முழுவதும் மிகையதார்த்தத்தின் மூலத்தோற்றம், செல்வாக்கு மற்றும் வளர்ச்சி இவற்றுக்குள்ள
தொடர்பு பற்றியும் நவீனப்படுத்தி வந்தார். பிரெட்டனின் கலைப்பொக்கிஷங்கள் ஒரே இடத்தில் குவிந்திருந்தால்,
இந்த நூல் பிரத்தியேகமான - தனிப்பட்ட அனுபவம் ஒன்றைப் பற்றிய குறிப்பை பாதுகாத்திருக்கும் .
மிகையதார்த்தத்தில் முக்கிய செல்வாக்கு பெற்றவை பழங்குடியினரின் கலையும்,
நாட்டுப்புறக் கலையும் ஆகும். மரம், கல் இவற்றில் இழைக்கப்பட்ட கலைப்பொருட்கள் - உலகின் பல பழங்குடி
இனமக்கள் படைத்தவை - நூற்றுக்கும் மேற்பட்டவை ஏலம் விடப்பட்டன; அவற்றுள்
Hopi Indian Dolls, Inuit masks Inuit masks,
African Statues ஆகியவையும் (தொகுதி எண் 6138) அடங்கும்.
பிரெட்டனின் நாட்டுப்புற கலைப்படைப்புக்கள் மற்றும் நாணயங்கள் சேகரிப்பில், நூற்றுக்கணக்கான
bénitier - புனித நீரைக்கொண்ட சிறிய
பீங்கான் கலங்களும் அடங்கும். அவருடைய குளியலறையில் உருவ வழிபாட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தும் பொருட்களிலிருந்து
தனிமைப்படுத்தப்பட்ட ஒற்றை பீங்கான் கலம் இப்பொழுது ஒரு சேகரிப்பவரின் அலமாரியில் வருந்தி நின்று, அதனுடைய
அர்த்தத்தின் பெரும்பாலானவற்றை இழந்திருக்கக்கூடும் (தொகுதி எண் 3210).
பிரெட்டனின் புகைப்படச் சேகரிப்பு, ஏலத்தின்போது கூறுபோடப்பட்டு விற்கப்பட்டது நெகிழவைக்கும்
அனுபவமாக இருந்தது. அவருடைய வாழ்வே துகள் துகளாக ஆக்கப்படுவதைப் பார்ப்பதுபோல், சிலேடையாக ஒரு
மனிதனுடைய வாழ்வைப் புரிதல் பற்றிய வியத்தகு உணர்வைப் பெற முடிந்தது.
அப்படச் சேகரிப்புக்களில் முதல் உலகப்போரில் பிரெட்டன் ஒரு படைத்துறை மருந்தக
துணை ஏவலராக இருந்தது, "Photomatons" எனப்
பெறும் முன்னணி மிகையதார்த்த கலைஞர்கள் கனவுக் காட்சிகளில் வருவதுபோன்ற புகைப்படத் துணுக்குகளின் தொகுப்புக்கள்,
பிரெட்டன் விருந்துகளிலும், மனமகிழ்ப் பயணங்களிலும் பங்குபெற்றதின் புகைப்படங்கள் - பிற்காலத்தில் உலகப் புகழ்
ஈட்டிய பெருமக்களோடு இயல்பாகப் பழகியிருந்த காட்சிகள்; இருபதாம் நூற்றாண்டின் வியப்பால் அதிரவைக்கும் சிறந்த
புகைப்பட தொகுப்புகள், 1938
International Exhibition of Surrealism Man
Ray, Raoul Ubac ல் காடப்பட்ட Mannequins
போன்றவை, Hans Hellmer's La Poupée series (lot
5046) -ல் உள்ள மனதிற்குத் திகிலூட்டும் அழகிய சிதைந்த உடல்கள்,
Fntz Bach, Diego Rivera, Trotsky, பிரெட்டன் மூவரும் மெக்ஸிகோ சென்றபோது எடுக்கப்பட்ட
Fritz Bach's photos புகைப்படங்கள், குறிப்பாக
உள்ளத்தில் சோக வேதனையை ஏற்படுத்தும் நத்தாலியா ட்ரொட்ஸ்கி, மே 11, 1941ல் கோயோகானில் அவருடைய
கணவர் கொல்லப்பட்ட ஒராண்டிற்குப்பின், கையெழுத்திட்ட தொகுப்பு (தொகுதி எண் 5420) ஆகியன உள்ளடங்கும்.
1924ல் பிரெட்டன் எழுதினார்: "என்னால் முடிந்த அளவு தீரம், பலம், நம்பிக்கை
இவையனைத்தையும் சிந்தனையில் புலப்படுத்துவதாக நான் நினைக்கிறேன். அது பொறாமையுடனும், உலகப்பொருட்களை
ஏளனம் செய்யும் வகையிலும் என்னை முழுமையாக பற்றிக்கொண்டுள்ளது."
பிரெட்டனுடைய உடைமைகளை சிதறடித்தலை நியாயப்படுத்துவதாய், ஏலப் பட்டியலின்
முன்னுரை மேலே உள்ள மேற்கோளுடன் முடிவடைகிறது. ஆனால் இந்தத் தொகுப்புக்களை வெறுமனே உலகியல் பொருட்களின்
வெளிப்பாடுகள் எனக் கூறுவதே, பிரெட்டன் வாழ்வின் முடிவில் சுட்டிக்காட்டிய ஒரு போக்கினை மட்டுமே உறுதிப்படுத்துகிறது-
"மிக அடிப்படையான தார்மீக ஒழுக்க நெறிகளை கிறுகிறுக்க நிலை முறித்தல், கலாச்சாரத் தாழ்வை பொதுமைப்படுத்துவதாகும்."
Top of page
|