:
பிரான்ஸ்
US seizure of Baghdad provokes political crisis in France
அமெரிக்கா பாக்தாதைக் கைப்பற்றியது
பிரான்சில் அரசியல் நெருக்கடியை தூண்டுகிறது
By Alex Lefebvre
21 April 2003
Back
to screen version
பிரெஞ்சு ஆளும் தட்டுக்களிடையே ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தின் வெற்றி
குழு மோதல்களை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கம், அதன் சொந்த வலதுசாரி
UMP (Union for Popular Majority)-க்குள் வழிவழிப்
பகையை எதிர்கொண்டுள்ள நிலையில் உத்தியோகபூர்வ இடதுகளால் பெரும்பாலும் ஆதரிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில்
அமெரிக்காவைச் சமாதானப்படுத்தும் முயற்சியும் சுதந்திரமான ஐரோப்பிய நிலையைக் கட்டுவதையும் நாடும் ஜனாதிபதி
ஜாக் சிராக் பிரதம மந்திரி ஜோன் பியேர் ரஃப்ரன் இருவரின் அயலுறவுக் கொள்கையே அதிர்ந்த நிலையிலுள்ளது
பாக்தாத்தில் அமெரிக்கப் படையெடுப்பின் எதிர்ப்பு தோல்வி அடையும் என்ற நிலையில் சிராக்,
அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்ததையும் படுகொலை செய்து வருவதையும் புகழ்வதில் கண நேரம்கூட தாமதிக்கவில்லை.
ஏப்ரல் 10ம் தேதி பாக்தாத் அமெரிக்கப் படைகளால் வீழ்த்தப்படுவது பற்றி தான் "களிப்படைவதாக" சிராக் கூறினார்.
ஒரு "ஜனநாயக அரசு" சர்வாதிகாரத்தின் வீழ்ச்சியில் ஒருபோதும் மகிழாமல் இருக்கமுடியாது என்று பின்னர் விளக்கம்
அளித்தார். ஏப்பிரல் 7ம் தேதி ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பேசியபொழுது, பிரான்சின் அயல்நாட்டு அமைச்சர் டொமினிக்
டு வில்ப்பன் "அமெரிக்க ஆங்கிலேயக் கூட்டுப் படைகள் ஈராக் பகுதியில் இருப்பது நம்முடைய பொது விருப்பத்தை புலப்படுத்துகின்றது"
எனக் கூறினார்.
ஈராக்கின் ஆக்கிரமிப்பு மூலமும் ஈராக்கை மீளக் கட்டியெழுப்பும் பணி யாதேனுமாயிலும்
தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்ற நம்பிக்கையை பிரெஞ்சு ஆளும் வட்டாரங்கள் முற்றிலும் கைவிட்டுவிடவில்லை.
பிரான்சின் வணிகக் கூட்டமைப்பான மெடப் (Movement of
French Enterprises -Medef) ஈராக்கிய ஒப்பந்தங்களில்
பிரெஞ்சுக் கம்பெனிகள் தங்கள் பங்கைப் பெறப் போராடுவதற்கு ஆதரவைத் திரட்டும் குழுக்களை நிறுவி உள்ளது.
Total Fina Elf
என்ற பெரிய பெட்ரோல் இரசாயன நிறுவனம் ஈராக் பற்றிய அதனுடைய உயர்ந்த
நில இயல் ஆய்வுகள், ஈராக்கிய எண்ணெய் வளத்தைப் பயன்படுத்துவதில் மற்றும் அபிவிருத்தி செய்வதில் அதனுடைய
போட்டியாளரைவிட ஓராண்டு முன்னேற்றத்தில் அந்நிறுவனத்தை நிலைகொண்டதாக திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டி உள்ளது.
ஆயினும், பிரெஞ்சு நிறுவனங்களுக்குப் பெருமளவு போர்க் கொள்ளையில் பங்கு கிடைக்காமல்
தடுக்க அமெரிக்கா ஆவன செய்யும் என்ற நாளுக்கு நாள் உணரப்படும் கருத்தையும் பிரான்சிற்கு எதிரான அமெரிக்கக்
கண்ணோட்டத்தையும் அனைவரும் அறிவர். அமெரிக்கத் துணை பாதுகாப்பு அமைச்சர் போல் வொல்போவிட்ஸ், பிரான்சிற்கு
ஈராக்கிலிருந்து வரவேண்டிய பாக்கி கிடைக்காததன் மூலம், பிரான்ஸ் அமெரிக்க போரை எதிர்த்ததற்கான `விலை`
யைக் கொடுத்தே தீரவேண்டும் என கூறியவுடன், பிரெஞ்சு அதிகாரிகள் "கருத்து நெறிகளைப் பற்றிய விவாதங்களில் தாங்கள்
ஈடுபட" போவதில்லை எனக் கூறிவிட்டனர். ஒரு மிதவாத போக்காளர் எனப் பெயர் வாங்கியுள்ள, புஷ் நிர்வாகத்தின்
மீது வலுக்கட்டாயமாய் செல்வாக்கு கொண்டவரான, அமெரிக்க அரசு செயலர் கொலின் பவெல் ஏற்கனவே பிரான்ஸ்
அமெரிக்காவின் அரசியல், வணிகப் பதிலடிகளைச் சந்தித்தே தீரவேண்டும் எனக் கூறியுள்ளார்.
மெடெப்பின் தலைவரான ஏர்நெஸ்ட் அந்துவான் சிலியேர், (Ernest-Antoine
Seillière) ஏப்ரல் 15ம் தேதி அமெரிக்க நாட்டிற்கு தங்கள்
நாட்டின் பொருட்கள் மீது புறக்கணிப்பு நடத்தவேண்டாம் என இறைஞ்சியுள்ளார். "பிரான்ஸ் ராஜதந்திர உறவில் நடந்துகொண்டவிதம்
சரியில்லை என சிலர் கருதினால் அவர்கள் எங்களுடைய தூதரகங்களுக்கு தந்தியடிக்க வேண்டுமேயன்றி, எங்களுடைய
வைன்களையோ, யோகர்ட்டுகளையோ, விமானங்களையோ வாங்குவதை நிறுத்திவிடுதல் கூடாது" என்று அவர் கூறினார்.
ஈராக்கை "மீளக் கட்டிஎழுப்பலுக்கு" ஐ.நா.வின் கூடுதலான பங்கிற்கு பிரெஞ்சு அரசாங்கம்
ஆற்றொணா வேண்டுகோள்களை செய்தது. கொள்ளைப் பொருளில் பிரெஞ்சு கம்பெனிகளுக்கு பெரும் பங்கை ஒதுக்கும்
கவனத்துடன், மத்திய கிழக்கிலும் பிரான்சிலும் அமெரிக்க ஆக்கிரமிப்பால் விளைந்த வெகுஜனங்களின் கோபத்தை அமைதிப்படுத்தும்
வகையிலும் முயற்சிக்கின்றது.
போரின் தொடக்கத்தில் பிரிட்டனுடன் உறவுகள் மிகவும் நலிந்த நிலையில் காணப்பட்டதால்,
தற்பொழுது அதனுடன் தொடர்புகளை புதுப்பிக்கும் நடவடிக்கைகளில் பிரெஞ்சு அதிகாரிகள் இறங்கியுள்ளனர். ஏப்ரல் 9ம்
தேதி பிரிட்டிஷ் அயலுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோவும் (Jack
Straw) டு வில்ப்பனும் (De
Villepin) போருக்குப் பிந்தைய ஈராக்கில் ஐ.நாவின் பாத்திரம்
பற்றி விவாதிப்பதற்கு
பாரிசில் சந்தித்தனர். (ஈராக்கின்) எல்லைப்புற ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தவும்
மோதலுக்குப் பிந்தைய பொருத்தமான ஒரு நிர்வாகத்தை அமைப்பதை உறுதிப்படுத்தவும் பாதுகாப்பு சபையில் புதிய
தீர்மானங்களை பிரிட்டன் கேட்கும்" என்று ஸ்ட்ரோ அறிவித்தார்.
ஐக்கிய அமெரிக்க அரசுகள், ஈராக்கை ஐ.நா.வின் கட்டுப்பாடினுள் அனுமதிக்காது என்ற
உறுதியான விருப்பம், மற்றும் ஒரு பொம்மை அரசை ஈராக்கில் நிறுவுவதில் உள்ள அதன் தொடக்க முயற்சிகளின் முன் பிரிட்டனின்
அறிவிப்புக்களை மதிப்பேதும் இல்லாமல் ஆக்கின. ஆயினும், பிரெஞ்சு அரசாங்கத்தினைப் பொறுத்தவரை அவற்றின் முக்கிய
வேலை ஐரோப்பிய உடன்படிக்கைகளுக்கு மீண்டும் உரம் கொடுத்தலும் இங்கிலாந்து மூலமாக அமெரிக்காவிடம் சிறிது
செல்வாக்கு பெறுவதும் ஆகும்.
François Goulard, ஒரு
UMP பாராளுமன்ற
பிரதிநிதி லு மொண்ட் க்கு பின்வருமாறு கூறினார்: "ஆங்கிலேயர் இடைத்தரகர் போல் நடந்துகொள்ளலாம்....
ஆனால் பிரான்சின் நிலையை "அமெரிக்காவிற்கு தெளிவாக்குவதற்கு ஐரோப்பிய நல்லிணக்கம் மீளமைக்கப்பட வேண்டும்."
அமெரிக்க புவிசார் அரசியல் அதிகாரத்திற்குச் சமன் செய்யும் வகையில் ஐரோப்பிய "துருவத்தை" உருவாக்குதற்கு அவர்
அழைப்பு விடுத்தார்.
பிரெஞ்சு - பிரிட்டிஷ் உறவுகளிடையே நல்லிணக்கம் ஒரு திட்டவட்டமான இராணுவத்தன்மை
கொண்டது. பெல்ஜியம் மற்றும் ஜேர்மனி உடனான, கடந்த ஏப்ரல் உச்சி மாநாட்டின்பொழுது ஆயுதப்படைகளை ஒரு
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டுமென பிரான்ஸ் அறிவித்திருந்தது. ஆயினும், பத்திரிகையோ இத்திட்டங்களை கடுமையாக
விமர்சித்தது. ஐரோப்பாவில் இராணுவச் செலவு அதிகம் செய்வது இங்கிலாந்து,
அத்தோடு நெருங்கிய இரண்டாம் இடத்தில் பிரான்சு உள்ளது. ஆனால் ஜேர்மனியும் பெல்ஜியமும் பெருமளவு இராணுவச் செலவு
செய்பவை அல்ல. ஒருங்கிணக்கப்பட்ட ஐரோப்பிய இராணுவ அமைப்பில் பிரிட்டன் இல்லாமற்போனால் அது ஒருங்கிணைக்கப்பட்ட
ஐரோப்பிய நிதி ஒன்றியத்தில் (European monetary
union) ஜேர்மனி இல்லாது இருப்பதுபோலாகும்.
அரசாங்கத்தின் அநேக அயல்நாட்டுக் கொள்கைகளைப் போல, ஆயினும், பிரிட்டனைச் சேர்த்துக்கொள்ளும்
முயற்சியும் முழுமையாக நம்புவதற்கில்லை. பிரிட்டனை தற்போது ஐரோப்பாவில் உள்ள பிரதான அமெரிக்க சார்பு அரசை
--இராணுவ ஆணையகத்தில் இணைத்துக்கொள்வது, அதுவும் அமெரிக்கப் படைகட்குச் சமன் செய்யும் எதிரெடையான அமைப்பில்
சேர்த்துக்கொள்ளுவது, கடுமையான அரசியல் பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
உலக அரசியலில் நெருக்கடியும் ஈராக்கில் அமெரிக்கப் படையெடுப்பினால் தூண்டிவிடப்பட்ட
பிரெஞ்சு வெளிநாட்டுக் கொள்கையும் ஆளும் பழமைவாத கட்சிகளின் போட்டியிடும் பிரிவுகளுக்கு
(கன்னைகளுக்கு) இடையில்
வெளிப்படையான யுத்தத்திற்கு வழிவகுத்திருக்கிறது. UDFன்
பெயர் சொல்ல விரும்பாத உறுப்பினர் ஒருவர், இது முழுமையாக
UMPயுடன் இணையவில்லை;
ஆனால் ஆளும் கூட்டணியில் ஒரு பாகமாக இருக்கிறது, அது
Liberation க்கு அளித்த பேட்டியில் "பிரான்ஸ் தனிமைப்படுத்தப்படும்,
தோல்வியடைந்த முகாமில் பங்குகொண்டதற்காக நாம் மிகமிக இழப்பிற்கு உள்ளாவோம்" எனக் கூறியுள்ளார்.
Purne Lellouche எனும் அமெரிக்க
சார்புடைய UMP
பிரதிநிதி, பிரான்ஸ் எந்த ஒரு சட்டபூர்வமான அல்லது அறநெறிக்
கோட்பாட்டையும் கொள்ளாமல் அமெரிக்காவுடன் உறவை பழைய நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும், அதாவது:
"அமெரிக்காவுடன் போரின் சட்டபூர்வத் தன்மை பற்றி கருத்தியல்ரீதியான போரை நாம் கட்டாயம் நிறுத்த வேண்டும்
மற்றும் "ஒன்றுமில்லா"
கலாச்சாரத்தின் வழிநின்று தனித்துப்போய்விடக்கூடாது." எனக் கூறியுள்ளார்
UMP க்கு உட்பட்ட வட்டங்களில் நிகழும்
விவாதங்கள், அலன் மட்லன் (Alain Madelin),
Droite Libérale
-ன் முன்னாள் தாரளவாத தலைவர் (DL-
ஒரு சுதந்திர சந்தை வலதுசாரி கட்சி, பாசிச குழுக்களுடன் மறைமுக தொடர்புடையது) அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டை
தொடர்ந்து தெரிவிக்கின்றார். அண்மையில் நியூயோர்க் டைம்ஸ், மட்லனை மேற்கோள் காட்டி,"பிரான்ஸ் ஒரு
தப்புக்கணக்கைப்போட்டு, தவறான முடிவெடுத்தது. இப்போர் நீண்டதாக;
கடினமானதாக இருக்கும், அரபு நாடுகளில் தொடர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில்..." என்று மட்லன் கூறியதாக
தகவல் அளிக்கிறது.
பிரதம மந்திரி ஜோன் பியேர் ரஃப்ரன், மட்லனுடைய நண்பரும்
DL ன் நீண்ட நாள்
உறுப்பினரும் ஆவார். UMP
உறுப்பினர்களைச் சமாதானப்படுத்தும் வகையில் ``சில பொருட்களைப் பற்றிப்
பேசும்பொழுது விவாதங்கள் பயனற்றவையாகும்`` எனக் கூறினார். ஆனால் ஆபிரிக்க ஏடான
L'Intelligent,
``பிரெஞ்சு ராஜதந்திர சூழ்ச்சிகள் பற்றிய அறிவுடைமை பற்றி (சிராக்கால் தலைமை தாங்கப்படும் அரசாங்கத்தில் உள்ள)
அவருடைய அந்தஸ்துதான் உண்மையான சந்தேகங்களைக் கூறவிடாமல் தடுக்கிறது, இதை அவருடைய நண்பர்கள் (ரஃப்ரன்கள்)
அறியுமாறு கோரப்படுகின்றனர்" என்று ஏடு மேலும் கூறுகிறது.
பிரெஞ்சு - அமெரிக்க உறவுகள்
UMP இல் தவறான அரசியல் வழியில் பிளவுகளை ஏற்படுத்துகின்றன,
கூடுதலான சர்வாதிகாரப்போக்கும், அமெரிக்க சார்புடைய சக்திகளும்
பொதுவான பழமைவாத முதலாளித்துவ பாரம்பரிய பிரதிநிதிகளுக்கு எதிராக அணிசேர்ந்துள்ளனர். போருக்கு முன் அமெரிக்காவுடனான
பேச்சுவார்த்தைகளின்போது, டு வில்ப்பனின் அரசியல் நிலையில் ஏற்பட்டுள்ள ஏற்றமும் பிரான்சில் அவருக்கு நிலவும் உயர்ந்த
செல்வாக்கும், எதிர்காலத்தில் சிராக்கிற்கு பிறகு அவரை ஜனாதிபதியாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா என்ற எண்ணத்தை
ஏற்படுத்தியுள்ளன. இது உள்நாட்டு அமைச்சரான நிக்கோலா சார்கோசி (Nicolas
Sarkozy) ஜனாதிபதியாவர் என்ற அழுத்தமான வதந்தியைத் தகர்த்துவிடும்.
சிராக்கும், சார்கோசியும் ஏற்கனவே அயல்நாட்டுக் கொள்கை விஷயங்களில் பூசலிட்டுள்ளனர்;
அதிலும் குறிப்பாக சார்கோசி, சிராக்கிற்கு முன்பாக அல்ஜீரியாவிற்கு செல்வதாக இருந்தபோது அவ்விரிசல் தோன்றியது.
UMP தோன்றுவதற்கு
முன்பு சார்கோசி DL
சார்பில் உயர் பதவிக்கு பல தடவைகள் வேட்பாளராக நின்றார்.
இடதுசாரிகள் வலது பிரிவைவிட சிராக்கிற்கு ஆதரவாளர்களாக மாறியது முக்கியத்துவம்
வாய்ந்தது;
2002 ஜனாதிபதித் தேர்தல்களை ஒத்தது போன்ற அரசியல்நிலையே இதுவாகும். பாராளுமன்றத்தில் சோசலிஸ்ட்
கட்சியின் தலைவர் Jean-Marc Ayrault
- "அமைதியைக் காத்திட என்ன செய்யவேண்டும் என்பதை சிராக் உரைக்கவேண்டும்" என்று கூறினார். கட்சியின் தேசியச்
செயலாளரான, ஃபிரான்சுவா ஒலாண்ட், துல்லியமாய் சிராக்கின் வழியை பிரதிபலித்தார். அவர் கூறியதாவது: "நான்
சதாம் ஹூசேனின் வீழ்ச்சியைப் பாராட்டுகிறேன். (...) ஆனால் இப்போரில் பாதிக்கப்பட்ட ஏனையோரையும் கணக்கில்
கொள்ளவேண்டும். மேலும், ஈராக் அரசாங்கத்தை அமைக்க, சர்வதேச சட்டமுறைமையுடன் கொண்ட ஒரே நிறுவனம்
ஐ.நா தான் என்று கூறினார்.
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரான
மரி ஜோர்ஜ் புஃபே
(Marie George Buffe)
பாக்தாதின் வீழ்ச்சியைப் பாராட்டியதோடு, ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் ஈராக்கைக் கட்டியமைக்க ஒரு சர்வதேச
மாநாட்டிற்கும் அழைப்பு விடுத்தார். ஈராக் நெருக்கடிக்கான அவர்களின் பதில்கள், எந்த அளவிற்கு பிரான்சின் உத்தியோகபூர்வ
இடதுகள், சிராக்குடனும் அவரின் சமூகப் பிற்போக்கின் பொறுக்கியெடுக்கப்ட்ட சக்திகளுடனும் ஓரணியில் சேர்ந்துள்ளனர்
என்பதைக் காட்டுகின்றது.
|