World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

European Union summit: France, Germany seek rapprochement with US

ஐரோப்பிய ஒன்றிய உச்சி மகாநாடு:
அமெரிக்க ஐக்கிய அரசுகளுடன் நல்லிணக்கத்திற்கு பிரான்சும் ஜேர்மனியும் அவா

By Chris Marsden and Julie Hyland
19 April 2003

Back to screen version

அமெரிக்காவின் ஈராக் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் புஷ் நிர்வாகத்துடன் தம்முடைய சமரசப் போக்கு கொள்கையைத் தொடர்கின்றனர். ஏப்ரல் 17ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தால், ஏதென்ஸ் உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கை வாஷிங்டனின் போரை முறைமையானதாக விளக்குகிறது.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் இணக்கம்பெறாமல் போர் தொடுத்தது பற்றியும் மற்றும் அதன் காரணமாக அப்போர் சர்வதேச சட்ட நெறிகளுக்குப் புறம்பானது என்பது பற்றியும் ஐரோப்பிய ஒன்றிய தீர்மானம் ஏதும் கூறாமலுள்ளது. பல்லாயிரக்கணக்கான குடிமக்களின் உயிரிழப்பு பற்றியோ கிளஸ்டர் குண்டுகள் போன்ற சட்டவிரோத குண்டுகளின் தாக்குதலால் நேரிட்ட காயங்களைப் பற்றியோ அத்தீர்மானம் எந்தக் குறிப்பும் தரவில்லை. மேலும் பாத்திஸ ஆட்சியின் வீழ்வை அடுத்து, குடிமக்களைக் கொள்ளையடிப்போரிடமிருந்தும் சமூக விரோதிகளிடம் இருந்தும் அமெரிக்கப் படைகள் காப்பாற்றத் தவறியதைப் பற்றியும், தேசிய அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகம் போன்ற, உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஈராக்கியப் பண்பாட்டுப் பொக்கிஷங்களை அழிவினின்றும் தடுத்து நிறுத்தாததைப் பற்றியும் அறிக்கை மெளனம் சாதிக்கிறது.

உண்மையிலேயே இத்தீர்மானம் போரின் பின்னர் அமெரிக்காவின் நடவடிக்கைகளைப் பற்றி ஒரு சொல்கூடக் கூறவில்லை, அமெரிக்கப் படைகள் நிராயுதபாணியான மக்கள் கூட்டத்தைச் சுட்ட நிகழ்வுகளோ, காலனித்துவ ஆட்சி பாணியை அமெரிக்கத் தளபதி டொமி ஃபிராங்க்ஸ், பழைய தளபதி ஜே கார்நர் (Jay Garner) போன்றோரின் தலைமையில் நிறுவ எடுக்கப்படும் முயற்சியைப் பற்றியோ ஒரு குறிப்பும் கிடையாது.

மாறாக, ஐரோப்பிய ஒன்றியம் தற்போது ஈராக் உடனடியாக "கூட்டுப் படைகளால்," அதாவது இங்கிலாந்தின் உதவியுடன் அமெரிக்கா ஆளவேண்டும் என்பதை ஏற்கிறது. "ஒரு பாதுகாப்பான சூழ்நிலையை" அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டு வரவேண்டும், அதாவது ஈராக் ஆக்கிரமிப்பை எதிர்ப்போரை சுட்டுவீழ்த்தியும்கூட -என்ற கருத்தே மேலோங்கி நிற்கிறது. "ஈராக் மக்கள் தங்கள் நாட்டின் வருங்காலத்தைத் தாமே உருவாக்கும் வாய்ப்பு" என்பது இந்தக் கூட்டுப் படைகளின் நடவடிக்கைகளுடன் இயைந்தே நிற்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அபத்தமாய் கூறுகிறது.

ஐக்கிய நாடுகள் மன்றத்தை ஒரு நொண்டிச்சாக்காய் நிறுத்திக்கொண்டு மத்திய கிழக்கில் தத்தம் பொருளாதார புவிசார் அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக்கொள்ள வேண்டும் என்பதே ஐரோப்பிய வல்லரசுகளின் முக்கிய அக்கறையாக உள்ளது. தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பெரும்பகுதி ஒரு புறம் இங்கிலாந்திற்கும் மறுபுறம் பிரான்சிற்கும் இடையே ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பங்கு "மையமானதா" அன்றி "முக்கியமானதா" என்ற சச்சரவிடும் வடிவத்தை எடுத்தது. பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர் "முக்கியமானது"` என்ற கருத்தைக் கொண்டபோது பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக் அந்நிலை "மையமானது" என வலியுறுத்தினார். சிராக்கினுடைய கருத்து ஏற்கப்பட்டது என்றாலும் பிரிட்டிஷ் அரசின் சார்பிலான பேச்சாளர், தீர்மானமானது ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு மைய பாத்திரம் வழங்கப்பட வேண்டும், ஒரு மைய நிலையை அல்ல என்று முன்மொழிந்ததாகக் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் மன்றத்தின் "மையப்" பங்கு தொடக்கத்தில் மனிதாபிமான அடிப்படையிலான உதவியைத் தருவதில் மட்டுமே என்பதை ஒப்புக்கொண்டது. புஷ் நிர்வாகத்தின் இசைவுடன்தான் ஐ.நா.வின் பணி "அதன் தனித்தன்மையான, பூசல்கள் முடிந்த நாட்டின் சீரமைப்புப் பணியின் திறமையையும் அனுபவத்தையும்" பிரதிபலிப்பதற்கு நீட்டிக்கப்பட்டது.

இத்தீர்மானம் ஐ.நா.வின் தலைமைச் செயலாளரான கோஃபி அன்னானின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டது.

சிராக்கின் கண்ட சொற்பிரயோக வெற்றி, முற்றிலும் பெருமுயற்சியால் கிடைத்தது. புஷ் நிர்வாகம் ஈராக்கினை அமெரிக்காவின் காப்பாட்சி நாடாக மாற்றும் எண்ணத்தையுடையது என்பதில் ஐரோப்பியத் தலைவர்களுக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது, மேலும் அமெரிக்கா, ஈராக்கை ஐ.நா. பாதுகாப்பிற்குக் கீழ்கொண்டுவரும் எந்த முயற்சியையும் தடுத்து நிறுத்திவிடும் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் இதுவரை வாஷிங்டனின் போர் முனைப்பையும் ஈராக்கின்பால் அதனுடைய காலனித்துவ குறிக்கோள்களையும் ஆதரிப்பதன் காரணம் போரின் இறுதியில் தமக்கும் திறைப்பொருட்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையேயாகும். தற்பொழுது பிரான்சும் ஜேர்மனியும் போருக்கெதிரான தங்கள் முந்தைய தந்திரோபாய எதிர்ப்பை கைவிட்டுக்கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட புதிய முயற்சியில் இரு நாடுகளும் அமெரிக்காவுடன் உறவைச் சீராக்கிக்கொண்டுவிடவும், புஷ் நிர்வாகத்தில் உள்ள ஐரோப்பிய எதிர்ப்பு குரல்களை சமாதானப்படுத்திக்கொள்ளவும் மற்றும் எண்ணெய் வளம் செழிக்கும் ஈராக்கில் தம் பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்ளவும் இயலும் என்ற நம்பிக்கையில் உள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாட்டிற்கு முன்னரே, பாரிசும் பேர்லினும் மொஸ்கோவும் வாஷிங்டனுடன் நல்லிணக்கம் கொள்ள மிகுந்த குழப்பம் கொண்டிருந்தன. இராணுவ அளவிலான வெற்றி உறுதியாகிவிடும் என்று தெரிந்த உடனேயே அமெரிக்காவுடன் துண்டிக்கப்பட்டிருந்த தம் உறவுகளைச் சீரமைப்பதில் வெறிபிடித்த முயற்சிகளில் இந்நாடுகள் ஈடுபட்டன. ஜேர்மன் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் (Gerhard Schröder) புஷ்ஷுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடக்க வழிமுறையாக உச்சிமாநாட்டிற்குச் செல்லும் பிளேயரைச் சந்தித்தார். அதே காலகட்டத்தில் சிராக் ஆறு வாரங்களில் முதன்முறையாக அமெரிக்க ஜனாதிபதியுடன் தொலைபேசித் தொடர்புகொண்டு தம் நாடு ஈராக் பற்றிய காரியங்களில் "நடைமுறைத் தேவையின்படியும் ஒவ்வொரு செயலின் தன்மையின்படியும்" நடந்துகொள்ளும் என்ற உறுதியை அளித்தார்.

வாஷிங்டன் நிர்வாகத்தின் போர் சதிக் குழுவினிடத்தில் ஐரோப்பிய நாடுகள் நெடுஞ்சாண்கிடையாக விழுந்த நிலை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோள மேலாதிக்க முயற்சிகளை ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை. புஷ் ஆட்சியோ ஏற்கனவே சிரியாவிற்கெதிரான அச்சுறுத்தல்களை வெளியிட்டு இராணுவ நடவடிக்கை தோன்றுமோ என்ற நிலையை ஏற்படுத்திவிட்டது.

தங்களை அமெரிக்காவுடன் நட்புக்கு உகந்தவராகக் காட்டிக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ரஷ்யா அப்பாதையில் எதிர்பார்க்கும் நன்மைகளைப்பெற முடியாது. புஷ் நிர்வாகத்தின் முக்கிய பருந்துகள் ஐரோப்பாவை இழிவுபடுத்தலில் ஆரவார மகிழ்ச்சியைக் காட்டுவதுடன் அமெரிக்காவின் போட்டியாளர்களுக்கு எந்தச் சலுகையும் கூடாது என்பதிலும் தீவிரமாக உள்ளனர். அண்மையில் அமெரிக்காவின் பாதுகாப்புத் துணை அமைச்சர் பால் வொல்போவிட்சும் அமெரிக்க கருவூல செயலர் ஜோன் ஸ்நோவும் (John Snow) பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா ஆகியவை ஈராக்கின் வருங்காலத்திற்காகச் செய்யக்கூடிய முக்கிய பங்கு தமக்கு அந்நாடு கொடுக்கவேண்டிய பில்லியன் கணக்கான டாலர்களைத் தள்ளுபடி செய்துவிடல்தான் எனக் கூறியுள்ளனர். ஈராக்கின் எண்ணெய் வருமானம் போர்ச் செலவை ஈடுகட்டப் பயன்படுத்தப்படும் என்பதை எடுத்துக் கொண்டால் அமெரிக்காவிற்கு இது ஐரோப்பா மறைமுகமாகச் செலுத்தும் கட்டணம் என்பதைப் பிரதிநிதித்துவப்படுத்தும்.

எந்த அளவிற்கு ஐரோப்பா கேவலத்திற்கு இடமாகக் கருதப்படுகிறது என்பதற்கு ஏப்ரல் 14ல் வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையால் ஆன ஒரு சுருக்கமான மாதிரியாக அமைவது, "சில குறிப்பிட்ட உதவிப் பணிகளிலும் ஆட்சித்துறையிலும் ஓரளவிற்கு உதவ அழைக்கப்படலாம்" என்று கூறப்படுவதுடன் 1945ம் ஆண்டு பிரான்ஸ் பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பு நாடாகச் சேர்க்கப்பட்டதே "தவறான நடத்தையால் அதனுடைய சுயமதிப்பீட்டை இழந்த தாழ்நிலையிலிருந்து அதை உயர்த்துவதற்காகக் மேற்கொள்ளப்பட்ட மனநிலைத் தெளிவு மருத்துவம் போன்றதேயாகும்" என்ற கூற்றாகும்.

அக்கட்டுரை மேலும் கூறுவதாவது: "பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா மற்றும் ஐக்கிய நாடுகள் மன்றம் ஆகியவை எப்பயனையும் பெறக்கூடாது. ஏனெனில் சதாம் ஹூசைனைப் பதவியில் நீட்டிக்க இவைகள் தம்மால் இயன்றளவு செய்தன, கொடுங்கோன்மைக்கும், போர்க் குற்றங்களுக்கும் அவ்வாதரவினால் அவை துணை நின்றன."

ஐரோப்பிய முதலாளித்துவ அரசாங்கங்கள், அமெரிக்காவால் நடத்தப்பட்ட சட்டத்திற்கு புறம்பான கொள்ளைப் போரை, அது முடிந்த பின்னர் முறையாக்கியதின் மூலம் புஷ் நிர்வாகத்திற்கு பன்னாட்டு அளவில் நம்பகம் அளிக்கும் தேவையை முக்கிய பணியாய்ச் செய்து வருகின்றன. தங்கள் நாடுகளிலும், உலகம் முழுவதிலும் அமெரிக்காவிலும் தோன்றிய கடும் போர் எதிர்ப்பு உணர்வை இந்த அரசாங்கங்கள் நன்கு அறியும். ஈராக் வெற்றி சதாம் ஹூசேனை வீழ்த்தியதின் மூலம் நியாயப்படுத்தப்பட்டுள்ளது என்பதை கருத்தாலோசனையாகத் தெரிவிப்பதால், ஜனநாயகமும் முன்னேற்றமும் அமெரிக்க ஏகாதிபதித்தியத்தின் ஆதரவின் கீழ், வலியத்தாக்குதல் மூலமாகவும் இராணுவ ஆக்கிரமிப்பின் மூலமாகவும் மலரும் என்ற வாதத்தினால், இவ்வரசாங்கங்கள் அரசியல் குழப்பங்கட்கு வித்திடுவதுடன், சிறப்பாக அமெரிக்காவிற்குள்ளும் வாஷிங்டன் பொதுக்கருத்தை உருவாக்கும் முயற்சிக்கு துணை நிற்பதுடன் வருங்காலத்திற்கும் இன்னும் அதிகமான அளவு கொடூரமான இராணுவ சாகசங்களுக்கும் துணை நிற்கின்றன.

புஷ் இன் ஜனாதிபதிப் பதவி கூடுதலான உள்நாட்டு எதிர்ப்பைச் சந்திக்கிறது, செய்தி நிறுவனங்களே தன் தகப்பனார் போல் புஷ்ஷும் போரை வென்று தேர்தலில் தோல்வியைத் தழுவுவாரா என்ற ஊகங்களில் இறங்க வழிவகுத்துள்ளன. பொருளாதாரம் கடுமையான நெருக்கடியிலுள்ளபோது மற்றும் பல அமெரிக்க மாநிலங்கள் ஓட்டாண்டியாகும் பொழுது, முக்கியப் பணிகளில் வெட்டுக்களைத் திணிக்க வெள்ளை மாளிகை முயல்கிறது. அதே நேரத்தில் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு இல்லாத போர்க் கொள்கையினையும் அது கடைப்பிடிக்கிறது.

போர் எதிர்ப்பு இயக்கத்திற்குள்ளே ஜேர்மனி, பிரான்ஸ் அல்லது ரஷ்யாவை அமெரிக்க இராணுவ வாதத்திற்கு எதிரிடையாகச் செயல்படுமெனப் பார்த்த போக்குகளின் உள்ளார்ந்த அரசியல் அபாயங்களை, ஏதன்ஸின் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மகாநாட்டின் நிலை கோடிட்டுக் காட்டுகிறது. சிராக், ஷ்ரோடர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மூவருமே தத்தம் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் பிரிதிநிதிகள் மற்றும் போர் மூட்டத்தைக் கடுமையாக எதிர்க்கும் சக்தி அவர்கட்குக் கிடையாது. அவர்களுடைய அரசாங்கங்கள் அமெரிக்கப் போர்த் திட்டங்கட்கு ஆதரவளிக்காதது அடிப்படையில் ஏனென்றால், இப்பிராந்தியத்தில் உள்ள அவர்களின் சொந்த நலன்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகின மற்றும் ஐரோப்பிய வல்லரசுகளின் பூகோள நலன்களை அமெரிக்க இராணுவ வாதமும் ஒருதலைப்பட்சமும்தான்.

மக்களின் போர் எதிர்ப்பு உணர்வை ஓரளவு பயன்படுத்தி வாஷிங்டனிடம் செல்வாக்குப் பெறலாம் எனத் தயாரானாலும், தொடக்கத்தில் உலகெங்கும் தோன்றிய போர் எதிர்ப்பிற்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்திற்கும் குரோதத்தைக் காட்டின, ஏனெனில் தம்முடைய நலன்களையே அச்சுறுத்துமோ என்ற பயமும் இது கட்டுப்படுத்த முடியாது கைமீறிச் சென்றுவிடுமோ என்ற அச்சமுமே காரணமாகும்.

இந்த "மக்களின் போர் எதிர்ப்பு உணர்வு" இன்னமும் உள்ளது. ஏதென்ஸ் உச்சிமாநாடு ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களால் முற்றுகையிடப்பட்டதுடன் பிரிட்டிஷ் தூதரகமும் பிரிட்டிஷ் விமானப் போக்குவரத்தும் தாக்குதலுக்கு உள்ளாயின.

போரை நோக்கிய உந்துதல் அமெரிக்காவில் அதிகாரம் செலுத்தும் வலதுசாரிக் சதிக்குழுவின் அகநிலை விருப்பங்களின் விளைவு மட்டுமே அல்ல. உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் நெருக்கடியிலும் இது வேர் ஊன்றியுள்ளது; இதனுடைய வன்மையான மற்றும் மிகவும் வெடிக்கும் தன்மைய வெளிப்படுத்தலை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சமூக மற்றும் அரசியல் நெருக்கடியில் கண்டன.

அமெரிக்கா தற்போது அதன் ஐரோப்பியப் போட்டியாளரைவிட கொண்டுள்ள மகத்தான இராணுவ சாதக தன்மை, வாஷிங்டனைத் திருப்தி செய்வதில் முனைப்புக் காட்டுவதை விளக்குகிறது. ஆனால் அமெரிக்காவினை சவால் செய்யும் இராணுவவலிமையை கொண்டதாக ஐரோப்பாவை மாற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளை இந்நிலை தூண்டிவிடும்; ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலையையும் ஜனநாயக உரிமைகளையும் தாக்குவதன் மூலமே அக் கொள்கையை நடைமுறைக்குக் கொண்டுவர இயலும்.

ஏதென்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன்பு பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா இவற்றின் சார்பில் சென்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் கூடிய பிரதிநிதிகள் ஐரோப்பிய ஆயுதப் படைகளுக்கான பொது பாதுகாப்புப் படைப் பொருட்கள் வாங்கும் கொள்கையை நிறுவ வாக்களித்தது மற்றும் பொது மூலோபாயத்தை விவாதித்தது. பிரான்ஸ், ஜேர்மனி ஆதரவுடன் ஐரோப்பிய பாதுகாப்பிற்கான உச்சிமாநாட்டை ஏப்ரல் 29ம் தேதி கூட்ட பெல்ஜியம் அழைப்புவிடுத்துள்ளது.

இவ்வாறு, வாஷிங்டனிடமிருந்து தனித்து நிற்கும் நிலையை வளர்க்க விரும்பும் ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் ஒரு மாற்று இராணுவவாத வடிவத்தை வழங்கும், இக்கண்ணோட்டத்தில் மூன்றாம் உலகப் போரை நோக்கிச் செல்லும் புதிய ஆயுதப் போட்டியை அதனுடன் கொண்டு வரும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved