:ஆசியா
:
கொரியா
Pentagon sabre-rattling prior to
US-North Korean talks in Beijing
பெய்ஜிங்கில் அமெரிக்கா வடகொரியா பேச்சுவார்த்தைகள்
தொடங்கும் முன்னர் பென்டகன் மிரட்டல்
By Peter Symonds
23 April 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
வடகொரியா ஆட்சியின் செய்லபாட்டையும், மற்றம் அதன் தலைவர் கிம் ஜோங் இல்
(Kim Jong Il) ஐயும், அவதூறு செய்கின்ற வகையில்
சர்வதேச ஊடகங்களில், "ஆத்திரமூட்டல்", "கவனமில்லாத செயல்", "அறிவிற்கு பொருத்தமற்ற செயல்" என்ற வார்த்தைகள்
பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் மூத்த அமெரிக்க, சீன மற்றும் வடகொரிய அதிகாரிகள் இன்று பெய்ஜிங்கில்
மூன்று நாட்கள் பேச்சுவார்த்தையை தொடக்குவதற்கான முன்னேற்பாடுகளை செய்துவரும் இந்த நேரத்தில், மேலே
கூறப்பட்ட கடுமையான சொற்கள் மிரட்டுகின்ற முறையில் தன்னுடைய போக்கை, நிலைநாட்டிக் கொண்டுவரும் புஷ்
நிர்வாகத்தை குறிப்பாகவே, மிகச்சரியாக அமைந்திருக்கின்றன. வடகொரியாவின் அணு ஆயுதத் திட்டங்கள் ரத்து செய்யப்படவேண்டும்
என்ற தனது கோரிக்கையை வடகொரியா ஏற்றுக்கொள்ள மறுக்குமானால் கொரிய தீபகற்பத்தை போரில் ஆழ்த்திவிடுவதாக
புஷ் நிர்வாகம் மிரட்டிக்கொண்டிருக்கிறது.
பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர், அமெரிக்க நிர்வாகத்தின்
மிகத்தீவிரமான இராணுவமய பிரிவுகள், யாங்கியாங் (Pyongyang)
இற்கு தெளிவான செய்தியை அனுப்பின. வடகொரியா முழுமையாக, அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால்தான்
வாஷிங்டன் சமாதானம் அடையும் என்று தெளிவாக அறிவிக்கப்பட்டது. மிகப்பெரும் அளவில் ஆத்திரமூட்டும் முயற்சியாக
பென்டகன் அதிகாரிகள், நியூயோர்க் டைம்ஸ் ற்கு ஒரு இரகசியத் தகவல் ஒன்றை தந்தனர். அதன்படி வடகொரியாவில்
ஆட்சி மாற்றம் செய்யப்படவேண்டும் என்பது நோக்கம், இந்த குறிப்பை பாதுகாப்புத்துறை அமைச்சர், டொனால்ட்
டிரம்ஸ்பீல்ட், துணை ஜனாதிபதி ரிச்சார்ட் செனி உட்பட மூத்த வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு சுற்றுக்குவிட்டார்.
இப்படி பெய்ஜிங்கோடு சேர்ந்துகொண்டு, கிம் ஜோங் இல் ஐ பதவி நீக்கம் செய்யவேண்டும்
என்பது புஷ் நிர்வாகம் அடிக்கடி கூறிவரும், எங்களிடம் அத்தகைய செயல்திட்டம் எதுவுமில்லை என்ற அறிக்கையை நேரடியாக
மறுப்பதாக உள்ளது. நியூயோர்க் டைம்ஸ் விளக்கம் அளித்துள்ளதைப்போல், "இந்தக் குறிப்பின் பிரதான
வாதக்கருத்து, வாஷிங்டனின் குறிக்கோள் கிம் ஜோங் இல் அரசாங்கத்தை கவிழ்க்கவேண்டும். ஆனால் அமெரிக்காவின்
வெளியுறவுத்துறை "அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு நாங்கள் முயற்சிக்கவில்லை" என்று கூறிவருவதற்கு சற்றும் ஏற்புடையதாக
இல்லை."
இந்த குறிப்பு சுற்றுக்குவிடப்பட்டிருப்பது, யாங்கியாங் பகிரங்கமாக தெரிவித்துவரும்
அச்ச உணர்வுகளை அதிகரிப்பதாக அமைந்து இருக்கிறது. ஈராக்கை பிடித்துக்கொண்ட புஷ் நிர்வாகம், வடகொரியாவிற்கு
எதிராக திடீர் தாக்குதல் நடத்தும் தத்துவத்தை, தனக்கு ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று கருதுகின்ற நாட்டை
தாக்கி, அந்த ஆபத்தை நீக்குகின்ற தத்துவத்தை செயல்படுத்த எண்ணியுள்ளது என்பதுதான் யாங்கியாங்கின் அச்சமாகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக புஷ் நிர்வாகம் யாங்கியாங் தொடர்பாக, மிகவும் அதிக அளவில் மோதல்
போக்கோடு செயல்பட்டு வருகிறது. கிளிண்டன் நிர்வாகத்தில் நடைபெற்ற உயர் அதிகார பேச்சுவார்த்தைகள் ரத்து
செய்யப்பட்டன. பின்னர், 2002-தொடக்கத்தில் வடகொரியாவை, ஈராக் மற்றும் ஈரானோடு இணைத்து "போக்கிரி
நாடு" களின் ஒரு பாகம் என வர்ணித்தது.
ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள், எந்தவிதமான பயங்கர ஆயுதங்களும் இருப்பதற்கான
தடையம் எதையும் கண்டுபிடிக்கவில்லை என தெரிந்த பின்னரும் ஈராக்கோடு போர் தொடங்குவதற்கு, வாஷிங்டன்
முடிவு எடுத்தது. இதேபோன்று வாஷிங்டன் முடிவு செய்தால் அதேபோன்ற கதி தனக்கும் ஏற்பட்டுவிடாது தவிர்ப்பதற்கு
ஒரேவழி தனது ஆயுத பலத்தை பெருக்கிக்கொள்வதுதான் என வடகொரியா முடிவு செய்தது. சென்ற வெள்ளிக்கிழமை
வடகொரியா அதிகாரபூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், "ஈராக் போர் நமக்கு வழங்கும்
படிப்பினை என்னவென்றால் போரை தவிர்க்கவும் மற்றும் நாட்டின் பாதுகாப்பை மற்றும் இறையாண்மையை காத்துநிற்கவும்,
அவசியமான படைபலத்தை பெருக்கிக்கொள்வது ஒன்றுதான் வழி" என்று குறிப்பிட்டிருந்தது.
நியூயோர்க் டைம்ஸ் கட்டுரையில், பென்டகனின் இரகசிய அறிக்கை ராஜ்ஜியத்துறை
நிர்ப்பந்தங்கள் மூலம் யாங்கியாங் ஆட்சியை கவிழ்க்கவேண்டுமே தவிர, தீவிரமான நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது
என குறிப்பிட்டிருந்தது. சென்ற மாதம் அமெரிக்கா, வடகொரியாவின் அணு வசதிகள் மீது விமானப்படைத் தாக்குதல்
நடத்துவதற்கு வசதியாக, B-1- மற்றும்
B-52- தொலைதூர இலக்கு குண்டுவீச்சு விமானங்களை
குவாம் பசிபிக் தீவிற்கு இரண்டு டஜன் விமானங்களை அனுப்பியதுடன்,
F-117-A இரகசிய போர் விமானங்களையும் அமெரிக்கா அனுப்பியது. இத்தகைய பெருகிவரும் நெருக்கடிகளில்
கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக, ஜனாதிபதி புஷ் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் வடகொரியா மீது இராணுவ
தாக்குதல்கள் நடத்துவதை திட்டவட்டமாக மறுப்பதற்கு தயாராக இல்லை.
வடகொரியா மீது தாக்குதல் நடத்தும் சாத்தியக்கூறு அதிகரிக்கிறது என்பதை வலியுறுத்தும்
வகையில் ஆஸ்திரேலியன் செய்திப் பத்திரிகையில் திங்களன்று வடகொரியா மீது பென்டகன் விமான தாக்குதல்
நடத்துவதற்கு அவசரத் திட்டத்தை அறிவித்திருக்கிறது என்ற விபரங்களை வெளியிட்டிருக்கிறது. அணு ஆயுதங்கள் தயாரிக்கும்
வலிமையுள்ள புளுடோனியத்தை தயாரிக்க வடகொரியா நடவடிக்கை எடுக்குமானால் அத்தகைய தாக்குதல் நடைபெறும்
என்று பென்டகன் அவசரத் திட்டம் தீட்டியிருப்பதாக ஆஸ்திரேலியன் பத்திரிகை செய்தி வெளியிட்டது. அமெரிக்காவின்
சிந்தனைக்கு நெருக்கமாக உள்ள விபரம் அறிந்த கேன்பரா வட்டாரங்கள் அந்த அவசர தாக்குதல் திட்ட விபரங்களை
தெரிவித்தன. தென்கொரியா எல்லைக்கு அருகில் உள்ள வடகொரியாவின் பீரங்கி நிலைகள் மீதும், மற்றும்
யோங்பயோங் அணு ஆயுத நிலைகள் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக அந்தப் பத்திரிகை தகவல்
தெரிவித்திருக்கிறது. இப்படிப்பட்ட, முழுமையான கவனம் எதுவும் இல்லாத தாக்குதல் திட்டம் இத்தகைய தாக்குதலால்
மிகவும் ஆபத்தான அணுக்கதிர்வீச்சு எதுவும் நடக்காமல் வடகொரியா பொதுவான போர் நடத்துவதற்கு வழிவகுக்காது
என்ற அனுமானத்தின் அடிப்படையில் இந்த அவசரத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கின்றது.
அத்தகைய அவசரத் திட்டம் இருப்பதை ஏற்றுக்கொள்ள பென்டகன் மறுத்துவிட்டது. ஆனால்,
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் டவுனர் அந்த கட்டுரையை மறைமுகமாக உறுதிப்படுத்தும் வகையில்,
செவ்வாய்க்கிழமையன்று வானொலி நிலையத்திற்கு பேட்டியளித்தார். "அந்த பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளில்,
இது மிகவும் உண்மையான தகவல், ஆனால் அமெரிக்கர்கள் எந்த தொலைதூர இலக்கையும் அடிப்படையாகக் கொண்டு
அவசரத் தாக்குதல் திட்டத்தை வகுத்திருக்கலாம்" -என்று குறிப்பிட்டிருக்கிறார். அதேநேரத்தில் டவுனர் குறிப்பிடுவது,
அமெரிக்கா அத்தகைய தாக்குதலை நடத்தப்போகிறது என்று வெளியில் சொல்லக்கூடாது, அது பற்றிய தகவல்களை
திட்டமிட்டு வெளியில்விட்டு இருப்பதன் நோக்கம் யாங்கியாங்கிற்கு நிர்பந்தம் கொடுக்கவேண்டும் என்பதாக இருக்கலாம்.
வளர்ந்துவரும் மோதல் போக்கு
வாஷிங்டனுக்கும், யாங்கியாங்கிற்கும் இடையிலான நடப்பு மோதல் போக்கு சென்ற
அக்டோபர் மாதம் வெடித்தது. ஜேம்ஸ்-கெல்லி தலைமையில், வடகொரியா சென்றிருந்த அமெரிக்க உடன்பாட்டு
பேச்சு குழுவினர், சர்வதேச உடன்படிக்கைகளை மீறி, யூரேனியத்தை செறிவூட்டும் திட்டத்தை வடகொரியா மேற்க்கொண்டிருப்பதாக,
வடகொரிய அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக அந்தக்குழு தெரிவித்தது. யாங்கியாங் தனது அணு உலைகளையும் இதர
தொடர்புடைய வசதிகளையும் மூடிவிட 1994-ம் ஆண்டு செய்துகொண்ட ஒப்பந்தப்படி அதற்கு ஈடுகட்டும் வகையில்
எண்ணெயை வழங்க வகை செய்கிறது. இந்த எண்ணெய் வழங்குவதை புஷ் நிர்வாகம் ரத்து செய்ததோடு பதட்டநிலை வேகமாகத்தொடங்கியது.
1993-ம் ஆண்டு, ஜோங்பயான் அணு நிலை மீது தாக்குதல் நடத்த கிளிண்டன் நிர்வாகம் மிரட்டியதைத் தொடர்ந்து
இந்த பேரத்திற்கு நிர்பந்த அடிப்படையில்தான் வடகொரியா இணங்கியது.
வடகொரியா அக்டோபருக்கு பின்னர், சர்வதேச அணு ஆய்வாளர்களை தனது
நாட்டிலிருந்து வெளியேற்றிவிட்டு, அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டதோடு ஜோங்பயானில்,
தனது சிறிய சோதனை அணு உலையை மீண்டும் இயக்கத் தொடங்கியது. அமெரிக்கா இராணுவ தாக்குதல்களை நடத்தாது,
என்ற உத்திரவாதம் வழங்குமானால் அணு பாதுகாப்பு பற்றி உடன்பாட்டு பேச்சுவார்த்தைகள் நடத்த தயாராகயிருப்பதாக
யாங்கியாங் தொடர்ந்து எத்தனையோ முறை முன்வந்தும் வாஷிங்டன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மறுத்துவிட்டது.
அல்லது வடகொரியா தனது அணு திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முன்னர் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று
மறுத்துவிட்டது.
இன்றைய தினம் பெய்ஜிங்கில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் சீனா மீது கடுமையான
நிர்பந்தம் கொண்டுவந்து அதன் நட்பு நாடான வடகொரியாவை இணங்கச் செய்யவேண்டும் என்ற அடிப்படையில் செய்யப்பட்ட
ஏற்பாடாகும். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில், ஏப்ரல்-4-ந்தேதி ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.
அதில், சீன துணை வெளியுறவு அமைச்சர் வான்-இ-யாங்கியாங்கிற்கு எச்சரிக்கைவிடுத்த செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.
பெப்ரவரி நடுவில், வடகொரியா வெளியுறவு அமைச்சர் பேக் நாம் சன்னை, சீன துணை வெளியுறவு அமைச்சர் சந்தித்தபோது
நெருப்போடு விளையாடுவதை நிறுத்திக்கொள்ளுமாறு எச்சரித்தார். இந்த எச்சரிக்கையில் உறுதிபடுத்துகின்ற வகையிலும்
தனது பொருளாதார அடிப்படைக்கு சீனாவை பெருமளவில் வடகொரியா சார்ந்திருக்கிறது என்பதை வலியுறுத்தும் வகையிலும்,
வடக்கு டாக்கிங் எண்ணெய் கிணறுகளிலிருந்து குழாய் மூலம் வடகொரியாவிற்கு, எண்ணெய் செல்வதை மூன்று நாட்கள்
வரை சீனா துண்டித்திருந்தது.
கடந்த மாதம் ஐ.நா. பந்தோபஸ்து சபை வடகொரியாவை கண்டிக்கும் தீர்மானத்தை
ஆதரிக்க சீனா மறுத்துவிட்டது. அப்படியிருந்தும், பெய்ஜிங் தற்போது நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு
செய்தது. புஷ் நிர்வாகத்தின் மிகத்தீவிரமான வலதுசாரி பிரிவுகள் பென்டகனில் இடம்பெற்றுள்ள புதிய கன்சர்வேட்டிவ்கள்
-வடகொரியா- அமெரிக்காவின் கோரிக்கைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் முன்னர் எந்தவிதமான பேச்சுவார்த்தையும்
நடத்தக்கூடாது என வலியுறுத்தி வருகின்றன. அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறைகளுக்கு இடையே கடுமையான
மோதல்களுக்கு இடமளிக்கும் பிரச்சனைகள், வடகொரியா அணு வசதிகள் சம்மந்தப்பட்டவையாகும்.
சென்ற வாரம் பென்டகன், பெய்ஜிங் பேச்சுவார்த்தைகளின் நிகழ்ச்சி குறிப்பை தனது
கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்றது. நேற்று வாஷிங்டன் போஸ்ட்டில், பேச்சுவார்த்தைக்கு செல்லும்
தூதுக்குழுவிற்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை ஆயுதக் கட்டுப்பாட்டு துணைச் செயலாளர் ஜோன்-போல்டன் தமைமை
தாங்கி செல்லவேண்டும் மற்றும் ஜேம்ஸ் கெல்லியை மாற்றிவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜோன்
போல்டன், டிரம்ஸ்பீல்ட்டுடனும் இதர புதிய கன்சர்வேட்டிவ்களுடனும் நெருக்கமான உறவு கொண்டிருப்பவராவர்.
அந்த ஆலோசனை மறுக்கப்பட்டதும், சென்ற வெள்ளிக்கிழமையன்று வடகொரியா வெளியிட்ட
அறிக்கையை வலியுறுத்தி பென்டகன் அதிகாரிகள் பெய்ஜிங் பேச்சுவார்த்தையை சீர்குலைக்க முயன்றனர். புளுடோனியம்
பதப்படுத்தும் திட்டம், தெரிவிக்கப்பட்ட திட்டம் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று வடகொரியா அப்போது அறிவித்திருந்தது.
அந்தத் தகவல் தொடர்பாக விசாரித்ததில் வடகொரியா வெளியிட்ட அறிக்கை தொடர்பான ஆங்கில மொழிபெயர்ப்பு
தவறானது மற்றும் சரியான திருத்தப்பட்ட மொழிபெயர்ப்பானது வடகொரியா, பயன்படுத்தப்பட்ட துண்டுகளை
(Rods) மறு பயன்பாட்டிற்கு எதிர்காலத்தில் வெற்றிகரமாக
செயல்படுத்த ஆய்வு நடத்திவருகிறது என்பதுதான். பேச்சுவார்த்தைகளை தடுத்து நிறுத்தும் முயற்சியாக பென்டகன்
இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
புஷ் நிர்வாகத்திற்குள், வெளியுறவுத்துறைக்கும் பாதுகாப்புத்துறைக்கும் நிலவும் கொந்தளிப்புகளில்
உள்ள கருத்து வேறுபாடுகள் தொடர்பாக அமெரிக்க பத்திரிகைகள் பெருமளவிற்கு கவனம் செலுத்தி வருகின்றன, ஆனால்
அந்த வேறுபாடுகள் முழுமையாக தந்திரோபாயங்கள் சம்மந்தப்பட்ட விசயங்களேயாகும். இரண்டு பிரிவுகளுமே
1994-ம் ஆண்டு, வடகொரியாவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. குடியரசுக்கட்சி
வலதுசாரி குழுவினர் வடகொரியாவிற்கு அந்த ஒப்பந்தம் அனுமதிக்க முடியாத சலுகைகளை காட்டிவிட்டதாக கண்டித்தன.
அதன் மூலம், மேலும் வடகொரியா அமெரிக்காவை மிரட்டி வருவதாக கண்டனம் செய்தன. 1994-உடன்படிக்கைக்கு
இனி இடம் இல்லை; வடகொரியா தனது அணு ஆலைகள்
முழுவதையும் ஒழித்துக்கட்டிவிட வேண்டும். மூடிவிடுவதை மட்டும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று வாஷிங்டன் தெளிவுபடுத்தியுள்ளது.
நேற்று வெளியுறவுத்துறை அதிகாரி, ரிச்சர்ட் பவுச்சர் கருத்து தெரிவிக்கும்போது வடகொரியாவின் அணுத் திட்டத்தை
- இனி செயல்படுத்த முடியாது என்கின்ற வகையில் சோதனையிட்டு எப்படி நிலைநாட்டுவது என்பதுதான், எங்களுக்குள்
பிரச்சனை என்று அவர் கூறினார்.
யாங்கியாங்கில் "ஆட்சி மாற்றம்" என்பது தனது கொள்கையல்ல;
என்று வாஷிங்டன் கூறிக்கொண்டாலும், அதன் நோக்கங்கள் வலுவாக அந்த அர்த்தத்தை நோக்கியே செல்கின்றன. அமெரிக்கா
பன்னாட்டு பேச்சுவார்த்தைகள் என்று வலியுறுத்தி வருவது, சீனா, தென்கொரியா, ஜப்பான் மற்றும் ரஷ்யாவை மிரட்டி
வடகொரியாவை அரசியல் அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும், தனிமைப்படுத்தவேண்டும் என்ற
தந்திரோபாய முயற்சிதான்; அத்தகைய தந்திரத்தில்
அடங்கியிருக்கின்ற பொருள் என்னவென்றால், வாஷிங்டனின் கோரிக்கைகளை வடகொரியா ஏற்றுக்கொள்ள வேண்டும்
இல்லையேல் பொருளாதார மற்றும் அரசியல் சீர்குலைவை சந்திக்கவேண்டும் என்பதுதான். அந்த முயற்சி தோல்வியடையுமானால்,
புஷ் ம் மற்ற அதிகாரிகளும் திரும்பத் திரும்ப அறிவிப்புக்களை வெளியிட்டிருப்பதைப்போல, இராணுவ நடவடிக்கைகள்
உட்பட எல்லா நடவடிக்கைகளும் அமெரிக்காவின் உசிதத்தில் அடங்கியிருக்கிறது.
வடகொரியா அமெரிக்காவிற்கு இராணுவ மிரட்டலாக உள்ளது என வாஷிங்டன் கூறுவது
அபத்தமானது, வடகொரியா ஒரு சிறிய ஏழ்மை நிலையில் உள்ள நாடு, சோவியத் யூனியன் உடைவுடன், அந்த
நாடுக்கு வழங்கிய பொருளாதார உதவிகள் நிறுத்தப்பட்டுவிட்டது. அதன் ஏற்றுமதிகள் மிகப்பெருமளவிற்கு குறைந்துவிட்டன.
எனவே வடகொரியா பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பிற்கே வந்துவிட்டது. வடகொரியாவின், ஸ்ராலினிச ஆட்சியின்,
தேசிய சர்வாதிகார கொள்கைகளாலும் உள்நாட்டு ஒடுக்குமுறைகளாலும் அந்த நாட்டின் பொருளாதார நெருக்கடி
முற்றியது. அத்துடன், வாஷிங்டன் தொடர்ந்து அந்நாட்டின் மீது பொருளாதார முற்றுகை நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருவதால் அந்த நெருக்கடி மேலும் ஆழமாகிச் செல்கின்றது.
ஈராக்கை போன்று, புஷ் நிர்வாகம் வடகொரியா சம்பந்தமாக தெரிவித்துவரும் கவலைகள்,
பயங்கர ஆயுதங்கள் மற்றும் அதன் உள்நாட்டுக் கொள்கைகள் ஆகியவை அமெரிக்கா தனது சொந்த பொருளாதார
மற்றும் இராணுவ கேந்திர அபிலாஷைகளை முன்னுன்கு கொண்டுவரும் சாக்குபோக்குகள் தான். ஈராக்கைபோன்று,
கொரியா வளைகுடாவில் மிகப்பெரும் அளவிற்கு எண்ணெய் வளம் இல்லை, ஆனால் அதன் இராணுவ கேந்திர முக்கியத்துவம்
வாய்ந்த பூகோள படத்தில், அமெரிக்கா - ஜப்பான் - ரஷ்யா குறிப்பாக சீனா மீது நிர்ப்பந்தங்களை தொடுப்பதற்கு
வசதியாக அமைந்திருக்கிறது. வரும் மூன்று நாட்களில், பெய்ஜிங் பேச்சுவார்த்தைகள் மூலம் எத்தகைய கருத்துக்கள்
அறிக்கைகளாக வெளியிடப்பட்டாலும், மேலே கூறப்பட்ட இராணுவ கேந்திர நலன்களை இரகசியமாக வாஷிங்டன் வலியுறுத்தும்
என்பதில் சந்தேகம் இல்லை.
Top of page
|