பிரான்சில் ஓய்வூதியம் அச்சுறுத்தலுக்குள்ளாகிறது
By Antoine Lerougetel
7 March 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
சென்ற வருட தொடக்கத்தில் ரஃப்ரனின் அரசாங்கம் பிரான்சில் ஓய்வூதிய முறையில்
சீர்திருத்தம் கொண்டுவர புதிய முயற்சியை ஆரம்பித்தது. தொழிற்சங்கங்கள் அரசின் இப்புதிய கொள்கைக்கு
அடிபணிந்துள்ளபோதிலும், தொழிலாளர்கள் மத்தியில் இது பாரிய எதிர்ப்பை நோக்குகின்றது.
பெப்ரவரி 1 அன்று ஏறத்தாழ அரை மில்லியன் மக்கள் பிரான்சின் 100 நகரங்களிலும்,
புற நகர் பகுதிகளிலும் தங்கள் ஓய்வூதிய உரிமைகளைக் காப்பதற்காக ஆர்பாட்டங்களை நடத்தினர் இவர்களுடைய ஆர்ப்பாட்டங்களுக்கு
முன்பாகவே மாநில மின்சார மற்றும் எரிவாயு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள்
(EDF-GDF) ஏற்கனவே ஓய்வூதிய சீரமைக்கும் திட்டத்தையும்,
தொழிற்சாலைகளை தனியார்மயமாக்கும் திட்டங்களையும் நிராகரித்துவிட்டனர். அத்துடன் 80% தொழிலாளர் 3
அக்டோபர் 2002 அன்று பெரிய அளவு ஆர்பாட்டம் மேற்கொண்டனர்.
ரஃப்ரனின் அரசிற்கு ஆதரவான நிர்வாகமும் பெரும்பான்மையான தொழிற்சங்க
தலைமையும் நிர்பந்திக்கும் தீர்மான முடிவுகளை எதிர்த்து ஜனவரி 9 அன்று 140,000
EDF-GDF இன் தொழிலாளர்களில் 53.4 % பேர் எதிராக
வாக்களித்தனர். தொழிலாளர்கள் எதிர்த்த திட்டங்களுள் ஓய்வூதிய சந்தாவுக்கான தொகையை 7.75% இலிருந்து
12% ஆக 50 வீதத்தால் அதிகரித்து தங்கள் ஊதியத்திலிருந்து பிடிப்பதையும், சம்பளத்தில் கிட்டதட்ட 4% உத்தேசிக்கப்பட்ட
வெட்டையும் எதிர்த்தனர். ஓய்வூதிய திட்டத்தின் நிதிச்சுமையைக் குறைக்க அது தனியார்மயமாக்கப்பட உள்ளதற்கான வேறு
மாற்றங்களும் முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கு மறுநாள் ஜனவரி-10-ம் தேதி பிரதமர் ரஃப்ரனும் அவரது பொருளாதார
மற்றும் நிதித்துறை அமைச்சருமான Francis Mer ம்
மின்சாரத்துறை மற்றும் எரிவாயுத்துறை தொழிலாளர்களின் வாக்குகளை உதாசீனப்படுத்தவும் அதனை எதிர்த்து அவர்கள்
மீது ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்தை அமுலாக்குவது என்று தங்கள் நிலைப்பாட்டை கூறிவிட்டார்கள்.
மூன்று கட்டங்களான தாக்குதல்
ஓய்வூதிய திட்டமுறையை மூன்று கட்டங்களாக தாக்க அரசு இலக்கு வைத்துள்ளது.
1) அவர்களது துறையை தனியார்மயமாக்குவதற்கு முன்னதாக,
EDF-GDF தொழிலாளர்களை ஓய்வூதிய முறையின் சீர்திருத்தங்களை
ஒப்புக்கொள்ள நிர்பந்திக்கிறது.
2) அரசாங்க பணியாளர்களின் 37.5 வருடங்கள் தமது பங்களிப்பை கட்டிமுடித்தால்
முழு ஓய்வூதியத்தை பெறும் உரிமை மாற்றப்படவுள்ளது. தனியார் துறையினரின் இந்த உரிமை 1993ம் ஆண்டு
இல்லாதொழிக்கப்பட்டது. தற்போது இது 40 வருடங்களாக்கப்பட்டுள்ளது. அரசாங்க பணியாளர்களும் தனியார்துறையினரைப்போல்
இப்போது அந்த தகுதிக்கு 40 வருட காலத்திற்கு பணி செய்திருக்க வேண்டும் என மாற்றப்படவுள்ளது.
3) 1993ன் சீர்திருத்தத்தினாலான அதிகரிக்கும் நஷ்டங்களுக்காக செலுத்தும் காலத்தை
42 வருடங்களாய் அதிகரிப்பதாகும்.
EDF-GDF தொழிலாளர்கள் மீதான
தாக்குதலுக்குப்பின் ஒட்டுமொத்த ஓய்வூதிய திட்டத்தையே வலுவிழக்கச்செய்யும் முக்கிய திட்டமும் அதில் உள்ளது. அரசும்
பிரதான முதலாளிகள் சங்கமான MEDEFஉம்
சேர்ந்து இந்தச் சிறப்பு ஓய்வூதிய திட்டத்தையும் மற்றும் 37.5 வருட செலுத்தும் காலத்தை மாற்றுவதையும் அமுல்படுத்தினால்
முழு உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்க்கைத்தரம் வரலாறு காணாத அளவுக்கு சீரழிந்துபோவதற்கான வாயிற்கதவுகள்
திறக்கப்படும்.
MEDEF இற்கு, முன்னாள் பிரதமர்
எடுவார்ட் பலடூரினதும் (Edouard Balladur)
ரஃப்ரனினது அரசாங்கத்தின் வலதுசாரி கட்சியான UMP
இன் கூடுதலான உறுப்பினர்களதும் திட்டங்கள் போதுமானதாக
இல்லை. அவர்கள் செலுத்தும் காலத்தை 47 ஆண்டு ஆக அதிகரிக்கும்படியும் கேட்டுள்ளதுடன், அரசின் ஆர்வமற்ற
போக்கையும் விமர்சித்துள்ளனர். EDF-GDF
ன் திட்டங்கள் பரந்த நோக்கமாக உள்ளதாக அவர்கள் கருதுகின்றனர்.
செலுத்தம்காலம் நீண்டுகொண்டே போனால் பதவி ஓய்வுக்குபின் வரவேண்டிய ஊதியம்
குறைந்துபோகும். வேலையில்லாமை, நோய், குடும்பப்பொறுப்புகள் மற்றும் இயலாமை போன்ற காரணங்களால் கூடுதலானோர்
அதனை ஏற்கனவே செலுத்தமுடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளனர். பிரான்சில் சராசரியாக பதவி ஓய்வு பெறும் வயது
58.5-ஆகும் "A la Carte''
என்ற MEDEF
இன் ஓய்வூதியக் கொள்கையானது நிலையான, முழு ஓய்வூதியம் பெறுவதற்கு தேவையான செலுத்தும்காலம் அளவிற்கு பணியாற்ற
முன்னரே அவர்கள் பணியிலிருந்து விலக கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதை மூடி மறைக்க உதவுகிறது.
தொழிலாளர்கள் புள்ளிவிபர அமைச்சகத்தின் கணக்குப்படி செலுத்தும்காலத்தை 45 வருடங்களாக
உயர்த்தினால் 2023ம் ஆண்டுக்குள் ஓய்வூதியம் 35 முதல் 50% வரை குறையக்கூடும் என தொழில் அமைச்சின் மதிப்பீடு
ஒன்று கணிப்பிட்டுள்ளது. இலாபம்தான் மிகவும் பெறுமதியானது என கருதும் இந்த அதிகாரத்துவம், மனிதனின் அதிகரித்த
ஆயுட்காலத்தை மனிதனுடைய ஆக்கபூர்வத்தன்மையினதும் விஞ்ஞானத்தினதும் வெற்றி என பார்க்காமல் மனித
வாழ்கைத்தரத்தின் மேம்பாடு ஒரு பாரம் எனவும் ஒரு வேண்டாத சுமையாகவும் நினைக்கிறார்கள்.
MEDEF ஆனது ஓய்வூதியம் பற்றிய
பொறுப்பை முதலாளிகளிடமிருந்து எடுத்துவிட உள்ளது. தற்சமயம் ஓய்வூதியத்திற்கான செலுத்துமதி மொத்த சம்பளத்தில்
25% எனவும், அதில் 10% தொழிலாளர் செலுத்தவேண்டியுள்ளது என்று புகார் கூறிவருகிறார்கள். இது தொழிலாளிடமிருந்தும்,
நிறுவனமிடமிருந்தும் வரும் ஓய்வூதியங்களுக்கான நிதியுதவியை நேரடியாக குறைப்பதுடன், மிகுதியாகும் நிதியை முதலீட்டு
நிதியில் (Investment funds)
இடலாம். இதனால் தொழிலாளர்கள் இந்த ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்ய
கட்டாயப்படுத்தப்படுவதுடன், சாத்தியமானால் அமெரிக்காவின் என்ரோனைப்
(Enron) போல்
நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்ய வழி செய்யும்.
1982 முதல் தொடர்ச்சியான தாக்குதல்கள்
பிரான்சில் ஒவ்வொரு தொழிலாளியும் தன்னுடைய சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட சதவிகிதத்தை
செலுத்துவதுடன், அதற்கு மேல் ஒரு தொகையை நிறுவனங்களும் ஒரு நிதியத்தில் செலுத்த பின்னர் அது பதவி ஓய்வு
பெற்றவர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படும். சராசரியாக கடைசி ஊதியத்தில் 78 சதவிகிதமே ஓய்வூதியமாக
கிடைக்கும். வேலைவாய்ப்பு ஏற்ற இறக்கத்திற்கேற்ப இதனை சமப்படுத்துவதற்கு ஒரு சில வழிமுறைகள் நடைமுறையில்
உள்ளன.
1982 இல் சோசலிச கட்சித் தலைவர் பிரான்சுவா மித்திரோன் ஜனாதிபதியாக
இருந்த காலத்தில் ஓர் சீர்திருத்தம் மூலம் தனியார் துறைகளில் ஓய்வுபெறும் வயதை 65 இருந்து 60 ஆக குறைத்தும்
முழு ஓய்வூதியம் பெறுவதற்கான செலுத்தும் காலத்தை 37.5 ஆக குறைத்திருந்தார். முதலாளிகள் எப்போதுமே
1982ல் வந்த சீர்திருத்த முறையின்படி தாம் செலுத்தும் அதிகரித்த தொகையை எதிர்த்தே வந்தனர். அதனால்
MEDEF அதன் வைப்பு நிதியில் ஐந்து மேலதிக ஆண்டுகளுக்கு
நிதிவழங்குவதை நிறுத்தப்போவதாய் அச்சுறுத்தியும் வந்துள்ளது.
மோசமான கொள்கைகளால் தனது வாக்காளர்களை ஏமாற்றிய இடதுகள் 1993 தேர்தலில்
படுதோல்வி அடைந்து வலதுசாரி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. வலதுசாரி பிரதமர் எடுவார்ட் பலடூர் மற்றும் சிமோன்
வேய் ஆகியோர்,
"régime general" என்ற எதிர் சீர்திருத்தத்தை தனியார்
துறை ஓய்வூதியத்திற்கு புகுத்தினர்.
அதில் உள்ளடங்கியிருந்தவை:
1) செலுத்தும் காலத்தை 37.5 இலிருந்து மீண்டும் 40 வருடமாக படிப்படியாய்
நீடிப்பதும்.
2) ஓய்வூதிய கணக்கெடுப்பின் அடித்தளமாக 10 சிறந்த ஆண்டுகளில் இருந்து முதல் 25
சிறந்த ஆண்டுகளாக படிப்படியாக அதிகரிக்கும். இது ஒருவரின் உழைப்புக் காலத்தில் இறுதியில் அவரது ஊதியம் அதிகூடிய
அளவை அடையுமாதலால், குறைந்த ஓய்வூதியத்திற்கு வழிவகுக்கும்.
3) விலைக்குறியீட்டிற்கு தகுந்தாற் போல்தான் ஓய்வூதியம் அதிகரிக்கப்படுமே தவிர
ஊதியத்தின் அடிப்படையில் இனி ஒருபோதும் இல்லை. இது உழைப்பவர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இடைவெளியை
அதிகப்படுத்தும். அதேபோல் ஓய்வூதியம் பெறும் தனியார் துறையினருக்கும் பொது துறைகளில் பதவியிலிருந்து ஓய்வுபெற்றவர்களுக்கும்
இந்த இடைவெளி அதிகரிக்கும். விலைக்குறியீட்டுடன் இணைக்கப்படுவதால், ஊதியங்கள் உயரும் அதேநேரத்தில் ஓய்வூதியம்
பெறுவோரின் வாங்கும் சக்தி ஒரு தேக்க நிலையையே அடையும்.
தனியார் மற்றும் பொதுதுறையினரின் ஓய்வூதியத்திற்கு இடையிலான வித்தியாசம் குறைந்து
கொண்டுவந்தவை, அலன் யூப்பே இன் 1996 ஓய்வூதிய சீர்திருத்தத்தின்படி அது வெகுவாக உயர்ந்துவிட்டது.
(தொழிலாள வர்க்கம் அதற்கான விலையை செலுத்தியது ஏனெனில் ''யூப்பே திட்டத்திற்கு" எதிரான 1995ன்
மாபெரும் வேலைநிறுத்த போராட்டத்திலிருந்து தொழிற்சங்கங்களும், இடதுசாரி கட்சிகளும் சேர்ந்து பின்வாங்கினர்)
துணி மற்றும் ஆடைகள் தொழில் துறைகளில் சராசரி ஓய்வூதியமானது ஒரு மாதத்திற்கு
740.96 யூரோ ஆகும். (ஏறக்குறைய அமெரிக்க டொலரிலும் அதே அளவுதான்)
1993ல் மற்றும் 1996ல் எதிர் சீர்திருத்தங்களில் தொழிற்சங்கங்களும் இடது கட்சிகளும்
பங்கு கொள்ளவில்லை. இருந்தபோதும் யூப்பேயின் அரசு சமூக பாதுகாப்பு மீது நடந்த தாக்குதலை மையமாக வைத்து,
ஓய்வூதிய செலுத்தும் காலத்தை அரசு தொழிலாளர்களுக்கும், தனியார் துறையினருக்கும் சமனாகச் செய்ததானது,
1968 மே, ஜூன் ற்கு பின்னர் நடந்த மிகப்பெரும் வேலைத்திட்டத்திற்கு பதிலடி தரவும் செய்தார்.
ஒரு வருடத்தின் பின்னர் அவரை ஆட்சியிலிருந்து இறக்கிய பன்மை - இடது அரசு,
ரஃப்ரனின் புதிய விரோத போக்குக்கு வழிசெய்தது. 1997ல் ஜொஸ்பன் செலுத்தும் காலத்தை நீடித்து பரிந்துரை செய்யவும்
அறிக்கையின் பொறுப்பை J.M.Charpan இடம்
தந்துவிட்டார்.
பிரெஞ்சு ஓய்வூதிய திட்டத்தின் மீதான தாக்குதல் என்பது உலகம் முழுவதும் உள்ள
போக்கான ஊதியக்குறைப்பின் ஒரு அம்சமாகும். இதில் ஓய்வூதியம் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது. பிரித்தானியாவில் பதவி
ஓய்வு பெறும் வயது தற்சமயம் 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை 70 ஆக உயர்த்த பரிசீலித்து வருகிறார்கள்.
மார்ச் 2002ல் 15 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மாநாடு பார்சிலோனாவில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு
ஜொஸ்பனும், சிராக்கும் ஒப்புதல் அளித்தனர். இந்த சந்திப்பின் முக்கிய அம்சம் என்னவென்றால் ஓய்வூதியம் பெற ஓய்வுபெறும்
வயதை (சட்டபூர்வமான வயதல்ல) ஐந்து வருடம் குறைக்கவேண்டும் என்பதாகும் இன்று அது 60 வயதாக உள்ளது.
இதன் காரணமாகவே ஜொஸ்பன் மற்றும் பன்மை இடது கட்சிகள் அவருடைய வாக்காளர்களால் ஜனாதிபதி தேர்தலில்
பின்தள்ளப்பட்டனர். MEDEF இற்கு ஆறுதலான செய்தி
என்னவென்றால் பின்லாந்திலும், அமெரிக்காவிலும் சட்ட ரீதியான ஓய்வு பெறும் வயதை 67 ஆக உயர்த்த உள்ளது
என்பதுதான், நியூசிலாந்தில் மேலும் மூன்று வருடங்களாலும், ஜப்பான், கொரியா, ஸ்பெயின், மற்றும் இத்தாலியில்
மேலும் ஐந்து வருடங்களாலும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஜனவரி 21 அன்று ஐரோப்பிய நிதி அமைச்சர்கள் பிரான்சுக்கு வெற்று எச்சரிக்கை விடுத்ததால்
பிரெஞ்சு அரசாங்கம் திட்டத்தை சற்று நிறுத்தியுள்ளது. 2003ல் பிரான்ஸ் பொதுபற்றாக்குறை மொத்த உள்ளூர் உற்பத்தியில்
3% அபாய அளவை தாண்டும் அபாயத்தை அடையவுள்ளது. பொருளாதார நலன் பற்றிய மாஸ்ரீச்
(Maastricht) வரையறை இதுதான். இது அரசிற்கு
4-5 பில்லியன் யூரோக்கள் கடனாக கிடைப்பதை முடக்கியுள்ளது. சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்புத் துறைகள்
இந்த வரவுசெலவு திட்ட உயர்வால் பயன்பெறுவது கட்டுப்படுத்தாது பாதுகாக்கப்படுவதால், பொதுப்பணி சேவைகளை
இது பெரிதும் பாதிக்கும்.
தொழிற்சங்கங்களின் பங்கு
தொழிற்சங்கங்கள் அடையாள வேலைநிறுத்தத்தையும் ஆர்பாட்டங்களையும் நடத்தி அரசு
திட்டங்களுக்கு எதிரான மொத்த எதிர்ப்பை காட்டியபோதும் அரசு சீர்திருத்தங்களுக்கு பெயர் வாங்கி கொடுத்து
ஏற்றுக்கொள்ளச் செய்யும் முயற்சி மிகவும் வெளிப்படையாய் தெரிகிறது. ஜனவரி 6ம் தேதி
EDF-GDF தேர்தல் முடிவுகளுக்குக்கூட காத்திராமல் பெரிய
தொழிற்சங்க அமைப்புகளுடன் (CFTD, CFDT, CGC, CGT, FO,
FOU, UNSA) ஒரு உடன்படிக்கைக்கு வந்தது. ஓய்வூதிய பிரச்சனையில், பெப்ரவரி 1 அன்று நடந்த ஆர்பாட்டத்தில்
40 வருட செலுத்தும் காலத்தையும் அறிவித்து, 37.5 வருட செலுத்தும் காலத்தை தியாகம் செய்தது. 1993 இலிருந்து
இதுதான் பொதுத்துறையிலும் தனியார் துறையிலும் நடைமுறையில் இருந்தது.
யூப்பே இன் திட்டத்திற்கு எதிராக 1995 இல் நடந்த பெரும் வேலைநிறுத்தங்களின்போது
அப்போதைய CFDT தலைவியான நிக்கோல் நோத்தா
சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக அவர் பேச்சு அமைந்ததால் தனது அங்கத்தவரிடையை எதிர்ப்புக்குள்ளானார்.
CGT தொழிற்சங்கத்தின் இரயில்வே தொழிலாளர்களின் தலைவராக
பேர்னாட் திபோல்ட் (Bernard Thibault)
இருந்தார், இரயில்வே தொழிலாளர்கள்தான் இயக்கத்தின் முன்னணிப்படையாக இருந்து போராட்டத்தை நடத்தினார்கள்.
அந்த வேலைநிறுத்த காலத்தின்போது நடந்த காங்கிரசில் CGT
''உற்பத்தி பொது உடமையாக்கப்படுவதின் அடிப்படையில் புதிய சமுதாயத்தை உருவாக்குவது'' என்ற
கொள்கையை உத்தியோகபூர்வமாக கைவிட வாக்களித்தனர். இந்த அதிகாரபூர்வமான நீண்டகால நிலைப்பாட்டை
அதிகாரத்துவம் கைவிட்டதானது, ஸ்ராலினிச அதிகாரத்துவ CGT,
முதலாளித்துவத்திற்கு எதிரானது என்ற தனது தோற்றப்பாட்டையும் கூட கைவிட்டதை காட்டியது.
திபோல்ட் (Thibault)
க்கு பின்னர் வியன்னே
(Viannet)
CGT இன் தலைவரானார்.
லு மொண்ட் பத்திரிகை கூறுவதுபோல்,
''CGT எதிர்ப்பாளர்களின் தொழிற்சங்கமாவதைவிட ஆதரவாளர்களின்
தொழிற்சங்கமாகிவிட்டது''. பிரெஞ்சு முதலாளித்துவத்தின் உலக வர்த்தத்திற்கான போட்டிக்கு உழைக்கும் வர்க்கம்
நிறைய தியாகங்களை செய்ய வேண்டும் என்பதன் மூலம் அதற்கு பகிரங்கமாக ஆதரவளிப்பதுதான் அதன் பங்காகும்.
See Also :
ஓய்வூதிய
வெட்டுகளுக்கு எதிராக பிரெஞ்சு பொதுத்துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
Top of page
|