WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
அவுஸ்திரேலியா
As Iraq war looms: Australian government shuts down parliament for two weeks
ஈராக் போர் சூழலால் அவுஸ்திரேலிய அரசாங்கம் பாராளுமன்றத்தை இரு வாரங்களுக்கு மூடிவிட்டுள்ளது
By James Conachy and Richard Phillips
8 March 2003
Back
to screen version
அமெரிக்கத் தலைமையிலான ஈராக்குக்கு எதிரான போரில், ஜனநாயகத்திற்கு கொடுத்த
வாக்குறுதி மற்றும் மனிதாபிமான மதிப்பு என்ற அடித்தளத்தில் நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்து வரும் அவுஸ்திரேலிய
பிரதமர்
ஜோன் ஹவார்ட்டின் (John Howord)
அரசாங்கமானது, புதன் கிழமையன்று போரில் பங்குகொள்வதை குறித்து ஓர் அவசரக் கூட்டத்திற்கு விடுத்த
கோரிக்கையை தடுத்து நிறுத்திவிட்டுள்ளது. இதன் காரணமாக, கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்த இரு பாராளுமன்ற
உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு அரசாங்கம் இரு வாரங்களுக்கு பாராளுமன்றத்தை மூடியுள்ளது.
இப்போரிற்கு மிதமிஞ்சிய எதிர்பபைக்காட்டி வரும் அவுஸ்திரேலிய மக்களுக்கு ஹவார்ட் தொடர்ந்தும்
இதுவரை உறுதியாக எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் 2000 க்கும் மேற்பட்ட அவுஸ்திரேலிய இராணுவ வீரர்கள் ஏற்கெனவே
பாராசீக வளைகுடாவிற்கு அனுப்பப்பட்டு விட்டதால் அவர் போருக்கு ஆயத்தமாகவே இருந்து கொண்டுள்ளார்.
நடப்பு கூட்டத்தொடரின் இறுதியான நேரங்களில் பிரதிநிதிகள் சபை உறுப்பினரான பீட்டர்
ஆன்டரன், (Peter Andren)
வாக்குவாதத்தை வைக்கவேண்டிய ஒரு அவசரத் தீர்மானம் கொண்டு வருவதற்காக கேள்வி நேரத்தை ஒத்திவைத்து பாராளுமன்றத்தின்
நிசப்தத்தைக் கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். Calare
லுள்ள தெற்கு வேல்ஸ் தொகுதி சுயேட்சை உறுப்பினாரான ஆன்டரன், கன்சர்வேடிவ் அரசியல் பார்வையைக்
கொண்டிருந்தபோதிலும், அவரது பேச்சில் ஈராக் மீதான தாக்குதலுக்கு ஆழமான எதிர்ப்பு இருந்து வருவது வெளிப்பட்டது.
''இந்தத் தீர்மானம் அவுஸ்திரேலிய மக்களின் வருத்தத்தை மற்றும் சட்டத்திற்குப் புறம்பான
போரைப் பற்றியதாகும்.'' என்று அவர் தெரிவித்தார். ''கடந்த சில மாதங்களில் நான் போன இடங்களில் எல்லாம்
மக்கள் பல கேள்விகளை என்னிடம் கேட்டனர். அவர்களில், பிரதிநிதிகள் அவையில் இதுவரையிலும் இந்த இராணுவ பற்கேற்பு
குறித்த வாக்களிப்புக்கு வாதாடுவதற்கு கூட ஏன் ஒரு வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதை தெரிந்துகொள்ள விழைபவர்களே
அதிகமாக இருந்தனர்.
''ஏன் இந்த முக்கியத்துவம்? ஏனென்றால் இதுதான் முதல் முறையாக ஒரு நாட்டின் தலைவர்
வெட்கமின்றி ஆர்வத்தோடு மற்றொரு நாட்டின் மீது நடக்கும் தாக்குதலுக்கு துணை போகின்றார். அந்த நாடு
எந்தவொரு தாக்குதலையும் அண்டை நாட்டுடன் நடத்தாதபோது இது நிகழ்கிறது.... அவுஸ்திரேலியா, ஒரு புதுவித இராணுவ
திட்டமாக பிரிட்டன் மற்றும் அமெரிக்க நிர்வாகத்தோடு சேர்ந்து ஒரு வெற்றுத் தாக்குதலை நடாத்துவதற்கு உள்ளது. அங்கே
அமெரிக்கா தனக்கு சார்பான ஆட்சியை உருவாக்கி, மத்திய கிழக்கின் பூகோள அரசியல் நிலப்பரப்பை புதிதாய் வரைவது
என்ற இந்தப்போக்கு உலகத்தை சர்வதேச ஒழுங்கில்லாமைக்குள் தள்ளிவிடும்''.
''ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோவை பிரான்ஸ், ரஷ்யா அல்லது சீனா கொண்டு
வந்தாலும் அதற்கு கீழ்படிய மறுக்கும் நாடுகளுடன் கூட்டு சேர அவுஸ்திரேலியா தயாராகி வருவதைப் பார்த்தும் இந்தப்
பாராளுமன்றம் மெளனம் சாதிக்கிறது. இந்த இடத்தில் (பாராளுமன்றத்தில்) ஜனநாயகத்தை பரிகாசம் செய்து வாக்கெடுப்பு
தேவையில்லை என்றாகிவிட்டது'' என அவர் குறிப்பிட்டார்.
இதற்கு அரசாங்கத்தின் பதில் அலட்சியமாக இருந்தது. ஹவார்ட் இதற்கு பதில் அளிக்கும்போது,
''அவுஸ்திரேலிய படைகளை போருக்கு அனுப்ப அனுமதி கொடுத்தது
காபினெட்டின் பொறுப்பு. விவாதம் நடத்த பாராளுமன்றத்துக்கு அவகாசம் அளிக்கப்படும். ஆனால் காபினெட்டின் முடிவே
இறுதியானது'' என்றார். சொல்லப்போனால் நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அவுஸ்திரேலியா போருக்கு
போகிறதா அல்லது இல்லையா என்பதில் எந்தப் பங்கும் இல்லை. இந்தப் பிரச்சனைக் குறித்து ''விவாதிக்கலாம்'' ஆனால்
அரசாங்கத்தைக் கவிழ்க்க எண்ணுவார்களேயானால் அவர்கள் பதவி உதாசீனப்படுத்தப்படும் என்று இது குறிக்கின்றது.
குறிப்பிட்டுச் சொன்னால் அன்டரனுடைய தலையீட்டினால் தொழிற்கட்சியானது,
தாராளவாதக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு எந்த ஒரு விவாதத்தையும் அடக்க இருக்கும் முயற்சி அம்பலமாகியது.
இந்தப் பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்தையும், தொழிற் கட்சியையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதுடன், மக்கள்
எல்லோரும் ஒரு விவாதத்தை மட்டும் எதிர்ப்பார்க்கவில்லை. அவர்களது வாக்களிக்கும் உரிமையைக் கொண்டு, தங்கள்
பிரதிநிதிகளின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்துகொள்ள நினைக்கின்றார்கள் என்பதையும் வெளிக்கொண்டுவந்தார்.
பிடிபட்டு விட்டோம் என்று தெரிந்ததுமே தொழிற்கட்சி உறுப்பினர்கள் அவசரமாய் தங்கள்
நம்பகத்தன்மையை நிரூபித்துக்கொள்ள அன்டரனின் அவசரத் தீர்மானத்திற்கு ஆதரவாய் பேசினார்கள். தொழிற்துறை உறவுகள்
அமைச்சர் டொனி அபோட்டுக்கும் (Tony Abbot)
தொழிற்கட்சி உறுப்பினர் வான் ஸ்வானுக்கும் (Wayne
Swan) இடையே காரசாரமான சூடான விவாதம் நடைபெற்றது. அதில்
அபோட் தொழிற்கட்சியினரைப் பார்த்து ஈராக் மீது ஒரு போலித்தனமான அணுகுமுறையை வைத்ததாக கூறினார். ஸ்வான்
இந்த விவாதத்தை எதிர்க்க அரசாங்கமானது ''அரசியல் ரீதியான அடாவடித்தனத்தை'' மேற்கொள்வதாய்
குற்றஞ்சாட்டினார். அரசாங்கம் தன் பெரும்பான்மையை வைத்து ஸ்வான், தன் விமர்சனத்தை திரும்பப்பெறும் வரை
பாராளுமன்றத்திலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக கூறும் மட்டும் இந்த அமளி நடைபெற்று வந்தது. பிறகு அது அன்டரனின்
ஈராக் பற்றிய விவாதத்திற்கான தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த பின் பாராளுமன்றம் மார்ச் 18 வரை ஒத்திவைக்கப்பட்டது.
ஸ்வானின் விமர்சனமான ''அடாவடித்தனம்'' என்று அரசை சொன்னது மிகவும் சிடுமூஞ்சித்தனமானதாகும்.
ஈராக் மீதான போரை எதிர்ப்பதில் தொழிற் கட்சிக்கு ஒரு கொள்கை இருந்ததில்லை. உண்மை என்னவெனில், இவர்கள்
கடந்த ஆறுமாதத்தில் இரு தடவைகள் (செப்டம்பர் 2002- மற்றும் பிப்ரவரி 2003) பாராளுமன்றத்தில் அரசாங்கத்துடன்
இணைந்து சதிக்கு துணைபோனார்கள். தற்போது அன்டரனுடைய தீர்மானத்தை எதிர்த்து முறியடிக்கவும் மற்றும் ஈராக்
போரில் அவுஸ்திரேலிய படைகள் கலந்து கொள்வதை எதிர்க்கும் பசுமைக் கட்சியை தடுக்கவுமே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகும்.
கடந்த வாரங்களில் போர் எதிர்ப்பு இயக்கங்கள் பெருகிவிட்டன. ஆதலால் தொழிற்கட்சி
தன்னை கடந்தகால செயல்களிலிருந்து விலகி இருக்க முயற்சித்து போரை எதிர்ப்பதாகவும் காட்டிக்கொண்டுள்ளது. இதனால்
தான் பிரதிநிதிகள் சபையில் ஸ்வான்சின் ''கூச்சலும் கோபமும்'' விளைந்தது. ஆனால் செனட் சபையில் தொழிற்கட்சியின்
திட்டமிட்ட செயல்பாடு மிகவும் தெளிவாகவே வெளிப்பட்டது.
ஹவார்ட் அரசாங்கத்திற்கு செனட்டில் அறுதிப் பெரும்பான்மை இல்லாததால் தொழிற்கட்சியானது,
பசுமைக் கட்சி, ஜனநாயக மற்றும் சுயேட்சைகளுடன் சேர்ந்து ஈராக் பற்றிய விவாதத்திற்கு தடைபோடலாம்.
ஈராக் மீதான விவாதத்திற்கு குரல் கொடுத்த நேட்டில் (Nettle)
என்பவர் பின்வருமாறு கூறுகிறார்: ''பிரதமர் இப்பிரச்சனையைப் பற்றிய
பொதுமக்கள் கருத்தை கண்மூடித்தனமாக உதாசீனப் படுத்தினார். இரண்டு வாரங்களுக்கு முன்பு போர் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில்
கலந்துகொண்ட மில்லியன் கணக்கான மக்களை அவர் நிராகரித்துவிட்டார். பெருத்த அவமானமான இதைப்பற்றியும், ஏன்
பாராளுமன்றத்தில் ஒரு வாக்களிப்பை இது போன்ற முக்கிய விஷயத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது? என்பது பற்றியும் நேற்று
அவரிடம் கேட்டதற்கு ''அது ஆட்சியாளரின் தனியுரிமை'' என்று பிரதமர் பதில் சொன்னதாக் குறிப்பிட்டார்.
அரசாங்க செனட்டர் கம்பெலினின் (Ian
Campbell) தீர்மானத்தை தள்ளுபடி செய்து இதனை ''கொடூரமான
மற்றும் வெட்கக்கேடான நாடகம்'' என்று வர்ணித்து, ''இந்தப்பெரிய அரசியல் நிறுவனத்தின் நடத்தையானது அவுஸ்திரேலியாவின்
ஜனநாயகமாகும்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றம் இக்கேள்விக்கான விவாதத்தை ஏற்கெனவே நடத்திவிட்டது என்று
தாராளவாத செனட்டர் பீட்டர் ஆல்டன் தெரிவித்தபோது தொழிற்கட்சி செனட்டர் பில் லூத்விக் (Bill
ludwig) அதற்கு ஆதரவளித்தார். தொழிற்கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும்
இடையே உள்ள இணைக்க முடியாத பிளவைப்பற்றி லூத்விக்
கூறியதுடன், அரசாங்கத்துடன் பெட்ரோலிய மசோதா சம்பந்தமான
(திமோர் கடல் ஒப்பந்தம்) கலந்துரையாடல் இதற்கு முன்பு நடைபெற்றதால் அவுஸ்திரேலியா ஈராக்குக்கு எதிரான அமெரிக்க
போரை ஆதரிக்கிறதா இல்லையா எனக் கலந்துரையாட அவகாசம் இல்லாமல் போனதாக அவர் தெரிவித்தார்.
கலந்துரையாடலின்போது பசுமைக்கட்சியின் தலைவர் பொப் பிரவுன், செனட் இந்த உத்தரவுகளை
தற்காலிகமாக விலக்கிக்கொண்டால் ''திமோர் Gap Oil
மூலம் நிதி பெற்றுக்கொள்ளலாம்'' என்பதைக் குறிப்பிட்டார். அவர்
மேலும் கூறுகையில் ''அவுஸ்திரேலிய பாதுகாப்பு வீரர்களின் உயிரும், ஈராக்கியர்களின் உயிர்களும் டொலர் முன் வரவேண்டும்
என இந்த அரசாங்கம் விவாதிக்க விரும்புகிறது. அதுவும் எண்ணெய் கழகத்தின் சார்பாக எப்படி கிழக்குத் திமோர் மக்களின்
எண்ணெய் வளத்தின்மேல் கை வைப்பது என்பதைப் பற்றியதாகும். இன்று இது நிகழ்ச்சி நிரலில் உள்ளதால் மிகவும் வெறுப்பூட்டுவதாய்
உள்ளது'' என்றார்.
எப்படியும் இந்த விமர்சனங்கள் தொழிற்கட்சி செனட்டர்கள் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஏனெனில் அவர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டு நெட்டிலின் (Nettle)
தீர்மானத்தை எதிர்த்தவர்கள் ஆவர். அத்துடன் அவர்கள் பிரவுனை
பாராளுமன்ற கூட்டத் தொடரிலிருந்து கலந்துகொள்ள விடாமல் வெளியேற்றுவதற்கு அரசாங்கத்துக்கு துணைபோனார்கள்.
செனட்டில் தொழிற் கட்சியினரின் வாக்களிப்பும் பிரவுனின் தற்காலிக வெளியேற்றத்திற்கான
அதன் ஆதரவையும் பார்க்கும் போது அரசாங்கத்திடம் இருந்து உண்மை எது கொள்கை எது என்று வேறுபடுத்திப்
பார்க்கமுடியாத நிலை உள்ளது. பிரவுன் மற்றும் பசுமைக் கட்சியினரின் கோரிக்கைக்கு முரண்பாடாக, மார்ச் 6 அன்று
பாராளுமன்றத்தின் கேவலமான இராணுவ நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக நடந்த மிகப்பெரிய ஆர்பாட்ட ஊர்வலங்கள்
இந்த இரு கட்சியையும் பாதை மாற்றுவதற்கு பதிலாக இரண்டையும் அருகாமையில் கொண்டு வந்திருக்கின்றது. |