World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Naval incident exposes deep rift in Sri Lankan ruling circles

படகு சம்பவம் இலங்கை ஆளும் வட்டாரத்தில் ஆழமான பூசலை அம்பலப்படுத்துகிறது

By Wije Dias
11 March 2003

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் கடந்த மாதம் பேர்லினில் ஆரம்பிக்கவிருந்த வேளை, மூன்று விடுதலைப் புலி காரியாளர்கள் உயிரிழந்த படகுச் சம்பவமானது கொழும்பில் ஆளும் வட்டாரம் ஆழமான அரசியல் பிளவுகளுக்குள் மூழ்கிக்கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.

ஒரு புறம் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் நாட்டின் நீண்ட உள்நாட்டுப் போருக்கு முடிவு கட்டுவதற்காக விடுதலைப் புலிகளுடன் ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுள்ளதோடு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுவருகின்றது. மறுபுறம் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டுள்ள பொதுஜன முன்னணியின் தலைவியான ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சமாதான முன்னெடுப்புகளை துணிவுடன் கீழறுத்து வருகின்றார்.

பெப்பிரவரி 6-7 ல் விவகாரம் உச்சகட்டத்துக்கு வந்தது. இலங்கை கடற்படைக்கும் ஒரு சிறு தொகை ஆயுதங்களை கொண்டு சென்ற விடுதலைப் புலிகளின் நெடுநாள் படகுக்கும் இடையில் நெருக்கடியான முரண்பாடு வளர்ச்சி கண்டது. 22 மணித்தியால விட்டுக்கொடுப்பற்ற நிலைமையானது, கடற்படையினரால் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக மூன்று விடுதலைப் புலி காரியாளர்கள் தற்கொலை செய்துகொண்டதையடுத்து முடிவுக்கு வந்தது. கொழும்பு மற்றும் அனைத்துலக ஊடகங்களும் பேச்சுவார்த்தைகளை தடம்புரளச் செய்ய அச்சுறுத்திய கிளை கதைகளும், விடுதலைப் புலிகளைக் குற்றம் சாட்டியதோடு ஒரு பக்கத்தை துடைத்தன.

எவ்வாறெனினும், ஊடகங்களால் புதைக்கப்பட்டது என்னவென்றால், குமாரதுங்க இந்த விட்டுக்கொடுப்பற்ற நிலைமையில் தலையீடு செய்வதற்காக நாட்டின் இராணுவ உயரதிகாரிகளின் பின்னணியுடன் முன்னொருபோதும் இல்லாத விதத்தில் நடவடிக்கை எடுத்தார் என்பதையேயாகும். அவர் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட இன்றைய அரசாங்கத்தை அலட்சியம் செய்ததுடன் விடயத்தை சமாதானமாக தீர்ப்பதற்காக பேர்லினில் இருந்து எடுக்கப்பட்ட முயற்சிகளை குறுக்கே வெட்டுவதற்காகவும், சேனாதிபதி என்ற வகையில் தனது அதிகாரங்களைப் பாவித்து விடுதலைப் புலிகளின் வள்ளத்தைக் கைப்பற்றுமாறு கட்டளையிட்டார். விளைவு மூன்று விடுதலைப் புலி உறுப்பினர்களின் தேவையற்ற மரணமாகியது.

இந்தச் சம்பவம் சமாதானப் பேச்சுவார்த்தைகள் சம்பந்தமாக கொழும்பில் ஏற்பட்டுள்ள பிளவுகளின் ஆழத்தை அம்பலப்படுத்துகிறது. பெரும் வல்லரசுகளின் ஆதரவுடன் மிகவும் செல்வாக்குச் செலுத்தும் வர்த்தகர் பிரிவினர், நாட்டின் ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக ஒரு சமாதானத் தீர்வை நோக்கி தள்ளிவருகின்றனர். ஆனால் இரண்டு தசாப்தகால யுத்தமானது, யுத்தத்தால் இலாபம் பெற்ற இராணுவம், அரச அதிகாரத்துவம் மற்றும் வியாபாரத்துக்குள்ளும் சக்திவாய்ந்த நலன்களை தோற்றுவித்துள்ளதோடு, அவர்கள் நாட்டின் தமிழ் சிறுபான்மையினருக்கு எந்தவொரு சலுகை வழங்குவதையும் எதிர்க்கின்றனர்.

அரச அதிகாரத்தின் இரண்டு எதிர் மையங்கள் வளர்ச்சி கண்டுவருகின்றன.. ஒன்று ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு). இது உள்நாட்டு யுத்தத்துக்கு ஒரு முடிவை வேண்டி நின்ற மக்களின் பரந்த பகுதியினருக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் 2001 தேர்தலில் வெற்றியீட்டியது. அடுத்தது, சிங்களப் பேரினவாத குழுக்களின் பின்னணியுடன் ஆயுதப் படைகளின் கட்டுப்பாட்டை தன்னுடன் கொண்டுள்ள குமாரதுங்கவாகும். ஜனாதிபதி, தனக்கு விசுவாசமான கடற்படைத் துணைத் தளபதியான அட்மிரால் தயா சந்தகிரி உட்பட பல முக்கியமான இராணுவ தலைவர்களின் ஓய்வு பெறும் வயதை தவிர்த்து அவர்களின் பதவிக் காலத்தை ஒருதலைப்பட்சமாக நீடித்தார். பெப்பிரவரி 7, கடற்படைக்கு ஒரு நேரடி கட்டளை விடுத்ததன் மூலம், அவர் அரசாங்கத்தின் அதிகாரங்களுக்கு நேரடியாக சவால் செய்தும், அடிப்படை ஜனநாயக செயல்முறைகளை புறக்கணித்தும் ஒரு படி மேலே சென்றார்.

பெப்பிரவரி 6 சுமார் பி.ப. 2 மணியளவில், சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான பிரதிநிதிகள் பேர்லினில் கூடும்போது இந்த கடற்படை முரண்பாடு ஆரம்பமாகியது. இலங்கைக் கடற்படை படகுகள் இரண்டு விடுதலைப் புலிகளின் படகுகளை வழிமறித்தன --வடக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு அப்பால் நெடுந்தீவுக்கருகில் இயந்திரப் படகு ஒன்று ஒரு பெரிய நெடுநாள் படகை இழுத்துக்கொண்டு வந்தது. கடற்படையினர் இரண்டு படகுகளையும் ஆய்வு செய்வதற்காக யுத்த நிறுத்த உடன்படிக்கையை மேற்பார்வை செய்யும் நோர்வே தலைமையிலான இலங்கை கண்காணிப்புக் குழுவின் அலுவலர்களுக்கு அழைப்பு விடுத்தனர். எவ்வாறெனினும், விடுதலைப் புலி காரியாளர்கள் --இயந்திரப்படகில் 12 பேரும் நெடுநாள் படகில் 3 பேரும்-- கடற்படை அதிகாரிகளின் சுற்றிவளைப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை கடுமையாக எதிர்த்ததோடு தற்கொலை செய்துகொள்ளவும் தள்ளப்பட்டனர்.

அவ்வாறான சோதனைகள் எதிர்விளைவுகளை தோற்றுவிக்கும் அரசியல் விடயங்களாகும். யுத்த நிறுத்த உடன்படிக்கையில் விடுதலைப் புலிகளின் படகை இடைமறிப்பதற்கு இலங்கை கடற்படைக்கு உள்ள உரிமையையிட்டு எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அது விடுதலைப் புலிகள் அரசாங்கக் கட்டுப்பாட்டிலான பிரதேசங்களுக்கு ஆயுதங்களை நகர்த்துவதை தடை செய்கிறது. அது "வெளியார் ஆக்கிரமிப்பிலிருந்து இலங்கையின் இறைமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டையும்" பாதுகாப்பதற்கு இலங்கை ஆயுதப் படைகளுக்கு அனுமதியும் வழங்குகின்றது. ஆனால் அரசாங்கம் கண்காணிப்புக் குழுவின் பின்னணியுடன், கடற்படை சோதனைகளையும் சேர்ப்பதற்காக இந்த உடன்படிக்கையின் உட்கூறுகளை விரிவுபடுத்துகிறது.

கொழும்பில், விடுதலைப் புலிகளின் படகுகள் மற்றும் ஆயுதப் படகுகளை நிறுத்தி, சோதனையிட்டு, கைப்பற்றுவதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை கண்டனம் செய்வதன் பேரில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) போன்ற சிங்களப் பேரினவாத குழுக்கள் இந்த விவகாரத்தை இறுகப் பற்றிக்கொண்டன. கடந்த ஜூனில் இதே போன்ற ஒரு சம்பவத்தில், அரசாங்கம் ஜே.வி.பி. யினதும் மற்றும் குமாரதுங்கவின் பொதுஜன முன்னணியினதும் ஒரு தொகை விமர்சனங்களுக்கு உள்ளானது. படகோட்டிகள் தற்கொலை செய்துகொள்வதாக அச்சுறுத்தியதையடுத்து, ஆயுதங்கள் கொண்டு சென்றதாக கூறப்பட்ட விடுதலைப் புலிகளின் நெடுநாள் படகை விடுவித்ததற்காக இந்த இரண்டு கட்சிகளும் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை நோக்கி நகர்ந்தன.

இந்த சோதனைகள் விடுதலைப் புலிகளுக்குள்ளும் பதட்டங்களை தோற்றுவித்தது. விடுதலைப் புலிகளின் படகுகள் சோதனை செய்யப்பட்டு வருவதோடு அதன் ஆயுதங்களை பறிமுதல் செய்வதாக அச்சுறுத்தும் அதே வேளை, அரசாங்கம் அதனது ஆயுதப் படகளை பலப்படுத்துவதற்கு தரம் உயர்ந்த ஆயுதங்களை வாங்குவதற்காக பில்லியன் கணக்கான ரூபாய்களை தொடர்ந்தும் செலவிட்டுவருகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக, பெரும் பகுதியில், ஏற்கனவே வருடக் கணக்கான இராணுவ அடக்குமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த தமிழ் மீனவர்களுக்கு மத்தியில் வெறுப்பை வார்ப்பதற்காக, கடற்படையினர் சாதாரண மீன்பிடி படகுகளை இடைமறித்து வருகின்றனர்.

ஒரு பிரதான முரண்பாடு

பெப்பிரவரி 6 இடைமறிப்பானது ஒரு பிரதான முரண்பாட்டை வேகமாக தீவிரப்படுத்தியது. இலங்கை கண்காணிப்புக் குழுவின் அதிகாரிகளுக்கு இரண்டு படகுகளையும் சோதனை செய்ய அனுமதிப்பதன் மூலம் நிலைமையை மட்டுப்படுத்துவதே கடற்படை அதிகாரிகளின் ஆரம்ப நடவடிக்கையாக இருந்தது. இயந்திரப் படகில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படாததோடு அது தளத்தில் இருந்த 12 விடுதலைப் புலி உறுப்பினர்களோடு பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. சில மனித்தியாலங்களின் பின்னர், கண்காணிப்புக் குழு அதிகாரி ஒருவரும் தான் படகில் எந்தவொரு ஆயுதத்தையும் கண்டுபிடிக்கவில்லை என அறிவித்தார்.

எவ்வாறெனினும் பி.ப. 8 மணியளவில், கடற்படை தளபதி சந்தகிரி தலையீடு செய்ததுடன் சமரச நிலைக்கு முடிவுகட்டவும் கட்டளையிட்டார். விடுதலைப் புலி காரியாளர்களின் தற்கொலை அச்சுறுத்தல் இருந்த போதிலும், கடற்படை அதிகாரிகளால் இரண்டாவது முறையாக நெடுநாள் படகு சோதணைக்குள்ளாக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார். சந்தகிரியின் முடிவானது நிலைமையை கண்காணித்துக் கொண்டிருந்ததோடு பேர்லினில் இருந்து வரும் ஆலோசனைகளுக்காக காத்திருந்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் ட்ரொன்ட் பர்ஹொவ்டாவின் (Trond Furuhovda) அறிவுறுத்தல்களுக்கு எதிராகவே எடுக்கப்பட்டது. சந்தகிரி விட்டுக்கொடுப்பற்ற நிலைமையை பற்றி அவர் அறிந்துகொண்டதில் இருந்து குமாரதுங்கவுடன் தொடர்புகொண்ட வண்ணம் இருந்தார் என ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டியிருந்தன.

கடலில் இந்த முறுகல் நிலை தொடர்ந்துகொண்டிருந்த போது, பேர்லினில் இருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோ மற்றும் கொழும்பில் இருந்து பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரப்பனவுக்கும் இடையில் சூடான தொலைபேசிக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. குமாரதுங்கவும் அவரது கூட்டணியினரும் அரசாங்கத்தை திட்டுவதற்காக இந்த சம்பவத்தைப் பற்றிக்கொள்ளக் கூடுமென கவலை கொண்ட இருவரும், மீன்பிடிக்கும் போது படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது என்ற விடுலைப் புலிகளின் கூற்றை நிராகரித்ததோடு இரண்டாவது முறை சோதனையிடவும் வலியுறுத்தினர். அதே சமயம், இந்த விட்டுக்கொடுப்பற்ற நிலைமை அடுத்த நாள் இடம்பெறவிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளை தகர்க்கும் மூலங்களைக் கொண்டிருப்பதையிட்டும் கவனமாக இருந்தனர்.

பேர்லினில் இருந்த பிரதிநிதிகள் சமரசம் காண்பதற்காக அவசரமாக கூடினர். அது ஒரு முன்னோடி நிகழ்வாக எடுத்துக்கொள்ளப்படாத வரை, அரசாங்க உத்தியோகத்தர்கள் கடற்படை அதிகாரிகள் இன்றி கண்காணிப்புக் குழு அதிகாரிகளால் இரண்டாவது முறை சோதனை செய்யப்படுவதற்கு உடன்பட்டனர்.. பேச்சுவார்த்தைகளுடன் முன் செல்லும் ஆவலின் பேரில், விடுதலைப் புலிகள் அடுத்த நாள் காலை வரை ஒத்திவைக்கப்பட்டிருந்த சோதனையை மேற்கொள்வதற்கு கடற்படைக்கு உரிமையுள்ளதாக ஏற்றுக்கொண்டனர். அப்போது கொழும்பு நேரப்படி மு.ப. 1 மணியாகும்.

பெப்பிரவரி 7, சுமார் மு.ப. 7.30 மணியளவில் நெடுநாள் படகில் ஏறிய இரண்டு கண்காணிப்புக் குழு அலுவலர்கள், மறைவான ஒரு பகுதியில் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட ஒரு விமான எதிர்ப்பு துப்பாக்கி, ஒரு கைத் துப்பாக்கி, மூன்று கைக் குண்டுகள் மற்றும் இரண்டு பெட்டி ரவைகளைக் கண்டுபிடித்தனர். குமாரதுங்க கடும்போக்கைக் கடைப்படிக்கவும் நிலைமையை பெருமதியான சகல பக்கங்களிலும் சுரண்டிக்கொள்ளவும் உறுதிபூண்டார். அவர் நெடுநாள் படகு, ஆயுதங்கள் மற்றும் விடுதலைப் புலி உறுப்பினர்களையும் உடனடியாக கைப்பற்றுவதற்காக கடற்படைக்கு கட்டளையிடுமாறு வலியுறுத்துவதற்காக மு.ப. 8 மணியளவில் பாதுகாப்பு அமைச்சர் மாரப்பனவைத் தொடர்புகொண்டார். அவர் குமாரதுங்கவுக்கு பேச்சுவார்த்தைகளின் நிலைமைகளைப் நினைவூட்டியதோடு பேர்லினில் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளின் ஊடாக இந்த நெருக்கடிக்கான ஒரு தீர்வை எட்டும் முயற்சியை முன்வைத்தார்.

தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதியான மாரப்பனவில் நம்பிக்கை வைக்கத் தவறிய குமரதுங்க, சேனாதிபதி என்ற வகையில் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி தனது சொந்தக் கட்டளைகளை வெளியிட்டார். ஆரம்பத்திலேயே அவர் ஆயுதங்கள் கடத்தியதாக விடுதலைப் புலிகளை குற்றம் சாட்டியதோடு, இரண்டாவது சோதனையை செய்வதற்கான கடற்படையின் உரிமையை வலியுறுத்தத் தவறியதற்காக அரசாங்கத்தை விமர்சித்தார். அவர் படகையும் ஆயுதங்களையும் கைப்பற்றுமாறு கட்டளையிட்டார். எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என எழுதப்பட்ட ஒப்பந்தத்தில் அவர்கள் கையொப்பமிட்டால் மட்டுமே விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்பது மட்டுமே பேச்சுவார்த்தைகளுக்கான அவரது சலுகையாக விளங்கியது.

சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு சென்ற எல்லாப் பிரதிநிதிகளும் பேர்லினில் செயலற்றிருந்ததன் காரணமாக ஜனாதிபதியின் கட்டளையானது சம்பவம் தொடர்பாக எந்தவொரு சமாதானமான தீர்மானத்தையும் எட்டுவதை முன்கூட்டியே விளைபயன் மிக்கதாக தடுத்தது. அது "எந்தவொரு முரண்பாடான விவகாரத்தையும் தீர்ப்பதற்காக இரு சாராரினதும் முழு ஒத்துழைப்பைக்" கோரும் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் தானாகவே பிளவை ஏற்படுத்தியது. ஜானாதிபதியின் கட்டளையுடன், கடற்படையினர் நெடுநாள் படகை கைப்பற்றி அருகில் உள்ள கடற்படைத் தளமான குறிக்கட்டுவானுக்கு இழுத்துச் செல்லத் தயாராகினர். மூன்று விடுதலைப் புலி உறுப்பினர்களும், இந்தத் திட்டத்துக்கு தயக்கத்துடன் உடன்பட்ட இலங்கைக் கண்காணிப்புக் குழுவிடம் ஒப்படைக்கவிருந்தனர்.

எவ்வாறெனினும், தமது இராணுவத் தளபதிகளுடன் தொடர்பு கொண்டிருந்த விடுதலைப் புலி காரியாளர்கள் தமது படகை ஒப்படைக்க மறுத்ததன் பேரில் விட்டுக்கொடுப்பற்ற நிலைமை தொடர்ந்தது. தற்கொலை செய்துகொள்வதற்கான அவர்களின் முடிவுக்கு உடனடிக் காரணமாக அமைந்தது என்ன என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. கண்காணிப்புக்குழு அலுவலர்களின்படி, நண்பகல் அளவில் ஒரு நீண்ட வானொலி மூலமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு கட்டளையின் பிரதிபலிப்பாகவோ அல்லது, கடற்படையினர் படகை பலாத்காரமாக எடுத்துக்கொள்ள முற்பட்டதாலோ, விடுதலைப் புலி உறுப்பினர்கள் படகுக்கு தீமூட்டியுள்ளனர். கண்காணிப்புக் குழு அலுவலர்கள் கடலுக்குள் குதித்து பின்னர் காப்பாற்றப்பட்டனர். பின்னர் மூன்று விடுதலைப் புலி உறுப்பினர்களும் ஒன்றாக சேர்ந்து வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட அங்கி ஒன்றை அணிந்துகொண்டனர்.

ஒரு முகம் காக்கும் கருவி

பேர்லினில் இருந்த அரசாங்க மற்றும் விடுதலைப் புலி அலுவலர்கள், சம்பவத்தை மறைக்கவும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதற்கு அனுமதிப்பதற்காகவும் உடனடியாக ஒரு கலவையைத் தேடினர். குமாரதுங்கவின் தலையீட்டைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதற்குப் பதிலாக விடுதலைப் புலிகளின் பிரதான பேச்சாளர் அன்டன் பாலசிங்கம், இந்த முழு அவல நிகழ்வையும் விடுதலைப் புலிகளின் தளபதிகளுக்கும் நெடுநாள் படகுக்கும் இடையிலான "தொடர்பு துண்டிப்புக்கு" கீழ்ப்படுத்தி மரணமான மூன்று விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீதும் பழி சுமத்தினார்.

பாலசிங்கத்தின் சமிக்ஞை, எவ்வழியிலேனும் அரசாங்கத்துடன் ஒரு அதிகாரப் பகிர்வு ஒழுங்குக்கு செல்லும் விடுதலைப் புலிகளின் முயற்சியுடன் சேர்ந்துகொண்டுள்ளது. விடுதலைப் புலிகள் இலங்கையின் வடக்கு கிழக்கில் ஒரு தனியான தமிழ் அரசுக்கான கோரிக்கையை ஏற்கனவே உத்தியோகபூர்வமாக கைவிட்டுள்ளதோடு, சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் கொழும்புடன் ஒரு "பங்காளியாக" இயங்குவதற்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ளது.

இந்த சலுகைகள் நிச்சயமாக விடுதலைப் புலிகளின் காரியாளர்களுக்குள் பதட்டங்களை ஏற்படுத்தும். பெப்பிரவரி 9 அன்று ஜேர்மனியில் விடுதலைப புலி ஆதரவாளர்களின் ஒன்று கூடலின் போது, இயக்கத்தின் இராணுவத் தலைவர்கள் "அழிப்பதில் மாத்திரமே அனுபவம் கொண்டவர்கள்" எனவே பேச்சுவார்தை மேசையில் அவர்களைக் கட்டுப்படுத்துவதும் அமைதியாக வைத்திருப்பதும் கடினமானதாகும்," என கூறிய பாலசிங்கம் வேறுபாடுகளை மறைமுகமாக குறிப்பிட்டார்.

இலங்கையில், ஒரு சிரேஷ்ட விடுதலைப் புலி அலுவலரான இளம்பரிதி என்ற ஆஞ்சனேயர், உயிரிழந்த மூன்று விடுதலைப் புலி உறுப்பினர்களின் இறுதிக் கிரியைகளின் போது கூடியிருந்தவர்களின் மத்தியில், யுத்த நிறுத்தமே பொறுப்பு எனக் கூறினார். சன்டே லீடர் பத்திரிகையின் அறிக்கைப் படி, கடந்த காலத்தில் கடற்படையினர் விடுதலைப் புலிகளின் படகை இந்த விதமாக அணுகத் துணிந்தது கிடையாது என அவர் குறிப்பிட்டிருந்தார். இப்பொழுதுதான் அந்த "துணிச்சல்" வந்துள்ளது, எனெனில் விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தத்தால் வெளிப்படையாக நிராயுதபாணிகளாக இருப்பதும் கட்டுண்டிருப்பதும் பழிவாங்குவதற்காக அல்ல, எனவும் குறிப்பிட்டார்.

செய்திப் பத்திரிகை சுட்டிக்காட்டியிருப்பதாவது: "வாயடிப்புகளாக இருந்த போதிலும், இளம்பரிதியின் வலியுறுத்தல்களில் சில உண்மைகள் உள்ளன. இலங்கை கடற்படை உண்மையில் யுத்த நிறுத்தத்தின் பின்னரே தனது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. கடற்படையினர் பல சந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகளுடன் ஆழ்கடலில் மோதுவது, சில வேளைகளில் மோதல்கள் இடம்பெறாது என அறிந்திருப்பதனாலாகலாம். யுத்த நிறுத்தத்தின் பின்னர் "கோழைத்தனத்திலிருந்து மடத்துணிவுக்கு" மாறும் கடற்படையின் மனப்பாங்கை முரண்பாடுகளை கண்காணிப்பவர்கள் அசட்டை செய்யமுடியாது."

உண்மையில், பேர்லின் பேச்சுவார்த்தைகளுக்கு சற்று முன்னதாக, கடற்படையினர், கடற்கரைக்கு அப்பால் ஒரு கப்பலில் இருந்து ஆயுதங்களை இறக்கியதாக நம்பப்படும் விடுதலைப் புலிகளின் நெடுநாள் படகுகளை சுற்றிவளைப்பதற்கான திட்டங்களை விரிவுபடுத்தியதாக சுட்டிக்காட்டும் பத்திரிகை அறிக்கைகள் காணப்பட்டன. மர்மமான கப்பல் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் கடற்படையினர் சமாதானப் பேச்சுவார்த்தைகளை கீழறுக்க பயன்படக்கூடிய ஒரு சம்பவத்தை முன் கூட்டியே உற்பத்தி செய்யும் சாத்தியங்களையிட்டு அறிக்கைகள் சுட்டிக் காட்டின.

ஜனவரியில் தாய்லாந்தில் இடம்பெற்ற முன்னைய சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஆயுதப் படைகளால் இயக்கப்படும் உயர் பாதுகாப்பு வலயங்கள் பற்றிய கூருணர்ச்சி மிக்க விடயத்தில் இராணுவத்தின் தலையீட்டை அடுத்து அநேகமாக ஸ்தம்பித நிலையை எட்டியது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் மாத்திரம் ஒரு மதிப்பீட்டின்படி 130,000 மக்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றியதன் மூலம், 160 சதுர கிலோமீட்டர்கள் அல்லது மொத்த நிலப் பரப்பில் 18 வீதத்தை பிடித்துக்கொண்டுள்ள 15 உயர் பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. விடுதலைப் புலிகள் இடம்பெயர்ந்துள்ளவர்களை அனுமதிக்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்..

ஜனவரி பேச்சுவார்த்தைகளுக்கு சற்று முன்னதாக, மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகள் "தனது காரியாளர்களை நிராயுதபாணிகளாக்கவும் அதனது ஆயுதங்களை கைவிடுவதற்கும்" உடன்பட்டால் மாத்திரமே உயர் பாதுகாப்பு வலயங்களில் பொதுமக்களை மீளக் குடியமர்த்துவது பற்றி அக்கறைகொள்ள முடியும் எனப் பிரகடனப்படுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டார். விடுதலைப் புலிகள் இராணுவ விவகாரங்கள் சம்பந்தமான ஒரு பிரதான உப குழுவில் இருந்து வெளியேறி, கூர்மையாக எதிர்ச் செயலாற்றியது. விடயம் மூடிவைக்கப்பட்ட போதிலும், பேர்லினில் இடம்பெற்ற புதிய சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னரும் தீர்க்கப்படாமல் உள்ளது.

குமாரதுங்கவின் தலையீடும் இந்த விடயத்தில் தெளிவாக இருந்தது. இராணுவ அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டதும் அவர் உடனடியாக அதனது ஆசிரியருடனும் -யாழ்ப்பாணத் தளபதி பொன்சேகா- இராணுவத் தளபதி எல். பலகல்லவுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனது உள்ளடக்கத்தையிட்டு பகிரங்கமாக குறிப்பிடப்படாத நிலையில், குமாரதுங்கவின் நடவடிக்கைகள் அவர் எங்கு நிற்கின்றார் என்பதை தெளிவாக சமிக்ஞை செய்தன. அந்த அறிக்கையை உடனடியாகப் பற்றிக்கொண்ட சிங்களத் தீவிரவாதக் குழுக்களில் உள்ள அவரது கூட்டணிகள் விடுதலைப் புலிகள் நிராயுதபாணிகளாக்கப்பட வேண்டும் என கோரின.

கடந்த மாத படகு சம்பவமானது, குமாரதுங்க, இராணுவம் மற்றும் பேரினவாத கும்பலகளும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை குழுப்புவதற்கான அவர்களின் முயற்சியில் மிகவும் உச்சக்கட்டத்துக்கு வந்துள்ளார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. படகு மூழ்கடிக்கப்பட்டதை அடுத்து, எதிர்க்கட்சியான பொதுஜன முன்னணியும் ஜே.வி.பி.யும் பாதுகாப்பு அமைச்சர் மாரப்பனவுக்கு எதிரான ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்தனர். ஜே.வி.பி. தலைவரான விமல் வீரவன்ச, யுத்த நிறுத்த உடன்படிக்கையின் வரம்புக்கு வெளியில் விடுதலைப் புலிகளுக்கு சலுகைகள் வழங்குவதாக அமைச்சரை கடுமையாகத் திட்டினார்.

எதிர்க் கட்சி வாக்கெடுப்பில் தோல்விகண்டிருந்தாலும், அரசியல் ஆரம்பிப்புகளில் முன்னணியில் இருப்பது எதிர்க்கட்சியே அன்றி அரசாங்கம் அல்ல. முழு விவகாரத்திலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது மாரப்பனவோ கடற்படைக்கு நேரடி தலைமைக் கட்டளையை விடுக்கும் குமாரதுங்கவின் தீர்மானத்தை விமர்சிக்கவில்லை. எதிர்க் கட்சியைப் போலவே அரசாங்கக் கட்சிகளும் சிங்களப் பேரினவாதத்தில் மூழ்கிப் போயுள்ளன. விக்கிரமசிங்க குமாரதுங்கவை விமர்சிக்கத் தயங்குவாரேயானால், அது விடுதலைப் புலிகளுக்கு அதிகப்படியான சலுகைகள் வழங்கியதையிட்டு வெறுப்புடன் இருக்கும் அரசாங்கத்துக்கு உள்ளேயே உள்ள சொந்த கோஷ்டிகளுக்கிடையில் கிளர்ச்சியைத் தூண்டிவிடக் கூடும் என்ற காரணத்தினாலேயே ஆகும்.

அவர்கள் அதிகளவில் பெரும் வல்லரசுகளின் பின்னணியைக் கொண்டுள்ளதனால், குமாரதுங்க சமாதானப் பேச்சுவார்த்தைகளை கீழறுப்பதற்கான அவரின் நகர்வுகளில் மிகவும் கவனமாக உள்ளார் என்பது தெளிவு. அவரது வளர்ச்சி கண்டுவரும் நம்பிக்கைக்கு காரணம், ஒரு சமாதான தீர்மானத்தில் எந்த இடத்தில் விடுதலைப் புலிகள் உடன்பட்டாலும் அவர்கள் நிராயுதபாணிகளாக்கப்பட வேண்டும் என்ற புஷ் நிர்வாகத்தின் சார்பிலான அதிகரித்து வரும் கறகறத்த வலியுறுத்தல்களேயாகும்.

பெப்பிரவரி 14 அன்று, அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரிச்சட் ஆர்மிடேச் விடுதலைப் புலிகளுக்கு விளைபயனுள்ள ஒரு இறுதி நிபந்தனையை விடுத்தார். "அது (படகு சம்பவம்) முன்னெடுப்புகள் (சமாதான) சம்பந்தமான விடுதலைப் புலிகளின் அக்கறையை கேள்விக்கிடமாக்குகிறது... விடுதலைப் புலிகள் அரசியல் தீர்வொன்றுக்காக அர்ப்பணித்துக் கொண்டுள்ளதை வெளிப்படுத்துவதற்காக பல சிரமமான அடிகளை எடுத்து வைக்க வேண்டியுள்ளது. புலிகள், அவர்களின் ஆயுத வழங்கள் -மற்றும் எதிர்கால பேச்சுவார்த்தைகள்- தொடர்பாக யுத்த நிறுத்தத்தால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நிபந்தனைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்... தர்க்க ரீதியில் இது நிராயுதபாணியாக்குவதை உள்ளடக்கியுள்ளது.."

வியப்பற்ற முறையில், அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகள் ஜப்பானில் இடம்பெறுவதற்கு சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர், இலங்கை கடற்படை பேச்சுவார்த்தைகளை தடம்புறலச் செய்யும் இன்னுமொரு மோதலில் ஈடுபட்டது. சர்வதேச கடற்பரப்பில் சட்டரீதியில் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தம்முடைய சரக்குக் கப்பல்களில் ஒன்று என விடுதலைப் புலிகளால் உரிமை கோரப்பட்ட ஒரு இயந்திரப் படகு தாக்கப்பட்டதோடு ஒரு படகு மூழ்கடிக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் சக்திவாய்ந்த சாத்தியமான சொல்வார்ப்புகளில் "இந்த துண்பகரமான சம்பவம் சமாதான முன்னெடுப்புகளுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்," என எச்சரித்து ஒரு கண்டணத்தை வெளியிட்டது.

குமாரதுங்க மற்றும் இராணுவத்தின் நடவடிக்கைகள் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளுக்கும் அப்பால் செல்லும் அறிகுறிகளைக் கொண்டுள்ளன. இராணுவ ஆத்திரமூட்டல்களை மீண்டும் மீண்டும் உருவாக்குதல், பாராளுமன்ற விதிமுறைகளை மீறல் மற்றும் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தை புறக்கணித்தல் போன்றவற்றையிட்டு அவர்கள் கொண்டுள்ள ஆர்வமானது, யுத்தத்துக்கான தமது எதிர்ப்பை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டும் உழைக்கும் மக்களை அவர்கள் அவமதிப்பதையே கோடிட்டுக் காட்டுகின்றது. இது குமாரதுங்கவும் அவரது கூட்டாளிகளும் தமது முடிவுகளை எட்டுவதற்காக மேலதிக ஜனநாயக விரோத வழிமுறைகளை பயன்படுத்தத் தயங்கமாட்டார்கள் என்ற எச்சரிக்கை தொழிலாளர் வர்க்கத்துக்கு விடுக்கின்றது.

Top of page