:
பிரான்ஸ்
Protests in France against the war
பிரான்சில் போருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்கள்
By Antoine Lerougetel
19 March 2003
Back
to screen version
மார்ச் 15ம் தேதி நடந்த சர்வதேச இயக்கத்தின் ஒரு பகுதியாக பிரான்சின் 100க்கும்
மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய நகரங்களில் நடந்த பொதுக் கூட்டங்களில் ஈராக்கிற்கு எதிரான போர் எதிர்ப்பு சக்திவாய்ந்த
வெளிப்பாடாக அமைந்தது.
80000 க்கும் அதிகமானோர் பாரிசிலும், 10000க்கும் அதிகமானோர் மார்சை
(Marseilles)
யிலும் குழுமினர். அமியன் (Amiens)
இல் 2000க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்கேற்ற
போருக்கு எதிரான மிகப் பெரிய கண்டனக் கூட்டமாக நடந்தேறியது.
அனைத்து தொழிற் சங்கங்கள், சோசலிச கட்சியின் வெவ்வேறு பிரிவுகள், கம்யூனிஸ்ட்
கட்சி, இனவெறிக்கு எதிரான அமைப்புகள், ATTAC
- உலகமயமாக்கலுக்கு எதிரான இயக்கம் மற்றும் இடது சாரி அணிகளான
Ligue communiste Revolutionnaire (LCR),
Lutte Ouvriere மற்றும்
Parti des Travailleurs
ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் எண்ணற்ற சிறு குழுக்கள் மற்றும் பிரிவுகள் இந்தக் கண்டனக் ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு
செய்திருந்தன.
பாரிசிலிருந்து ஒரு வாசகர் கூறுகிறார் :
பாரிசில் 60000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கண்டனக் கூட்டம்,
"ஈராக்கிற்கு எதிராக
போர் வேண்டாம். நீதி மற்றும் அமைதி மத்திய கிழக்கில் நிலவிட வேண்டும்"
என்ற கொடிகளைத் தாங்கி
Place de la Nation
என்ற இடத்திலிருந்து கிளம்பி
Place de la Republique
என்ற இடத்தை நோக்கிச் சென்றனர்.
" பல்வேறு தொழிற்சங்கங்கள், சமாதானம்
வேண்டுவோர், இனவெறிக்கு எதிரானோர், மனித உரிமைக்கான அமைப்புகள், பாலஸ்தீனியர்கள், கருத்துக்கள், சிலியன்கள்,
அர்ஜென்டினியர்கள், கொலம்பியர்கள் ஜபாடிஸ்டாக்கள், அட்டாக் மற்றும் இடது சாரி அரசியல் கட்சிகள் (பசுமை கட்சியினர்
உண்மையாகவே அங்கேயில்லை)"
ஆகியோர்களால் அமைந்த ஒரு குழு,
"இந்த அமைதிக்கான
நடவடிக்கை நாளுக்கு"
ஏற்பாடு செய்திருந்தது.
இந்தப் பேரணி பலதரப்பட்டதாக, வண்ணமயமானதாக, புத்துணர்ச்சியுடனும் நல்லெண்ணத்துடனும்
நடந்தது. கொடிகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் ஒருமித்த நிலையில்
"வேண்டாம் போர்"
என்று பறைசாற்றியது. மேலும் அனைத்துக் குழுக்களும் "ஐ.நா.வின்
ஆதரவுடனோ அல்லது ஆதரவின்றியோ, எங்களுக்குப் போர் வேண்டாம்"
என்று குரலெழுப்பினார்கள். மிதமித்த அமைதி தேவை என்பதே அங்கு
பங்கேற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் வெவ்வேறு நிறுவனங்களிடையே காண முடிந்தது.
" ஒவ்வொரு குழுவும் அவர்களுக்குரிய வண்ணத்தைக்
கொண்டு வந்திருந்தனர்": Lutte Ouviere
படைப்பிரிவு மற்றும் துருக்கிய மார்க்கிஸ்ட்-லெனின் கட்சி ஆகியவற்றின் சிவப்பு
வண்ணம், வந்திருந்தோர் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் அராஜகவாதிகள், பெண்கள் குழுக்கள் ஆகியோர் வைத்திருந்த
கொடிகள், பதாதைகள் ஆகியவற்றின் கறுப்பு வண்ணம், இடது சாரி சாலிடேர் தொழிற் சங்க பேரணியினர் வைத்திருந்த
பல வண்ணங்கள் மற்றும் தன்னார்வலர்கள் வைத்திருந்த வானவில்லின் வண்ணங்கள் கொண்ட கொடிகள் மற்றும் கூர்ட்டிஸ் குழுக்கள்
எடுத்து வந்திருந்த Ocalan
சித்திரங்கள் தாங்கிய பதாதைகள் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டக்காரர்களில் பத்தில்
ஒருவர் வைத்திருந்த பாலஸ்தீனியர்களின் மிகப் பெரிய பதாதைகள் அணி வகுப்பில் ஒரு அணியாய் வந்தது மனதை ஆழ்த்தும்
விடயமாக இருந்தன.
" குழுக்கள் ஒவ்வொன்றும் அவர்களுக்குரிய
வாசகங்களைக் கொண்டு வந்திருந்தனர் : "இளம்
கம்யூனிஸ்ட்டுகள் "போருக்கு
எதிராக எங்களது ஆயுதங்களைக் கீழே வைக்கமாட்டோம்"
என்றும் "போருக்கு
பணம் தேவையில்லை,
மருத்துவமனை மற்றும் மகப்பேறு மருத்துவமனைகளுக்கு பணம் தேவை"
அல்லது "எண்ணெய்க்காக
இரத்தம் வேண்டாம்"
என்று Parti des
Travailleurs கட்சியினரும்,
"போரினை உருவாக்காதீர்கள்"
என்று Pink
Panthers என்று அழைக்கப்படும்
Pantheres Roses
கட்சியினரும் கோஷமிட்டனர். பாலஸ்தீனிய ஆதரவு குழுக்கள் "புஷ்,
ஷாரன் கொலைகாரர்கள்"
என்று மீண்டும் மீண்டும் கோஷமிட்டனர். அராஜக பிரிவினரான
CNT "போருக்கு எதிராக
பொது வேலை நிறுத்தம் "
என்று கோஷமிட்டனர். பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி ஒலி பெருக்கி பிரெஞ்சு நாட்டின்
தேசீய கீதத்தின் மெட்டிற்கு ஏற்ப "அமைதியை
விரும்பிடும் மக்கள் அனைவரும் வாருங்கள்"
என்று பாடியது. Marseillaise
மற்றும் UNEF
மாணவர்கள் சங்கத்தினர் (உதை பந்து விளையாட்டின் பார்வையாளர்கள் கோஷமிடுவதைப்
போன்று) "
தொடர்ந்து
செல் சிராக்"
என்று கோஷமிட்டனர்.
பங்கேற்ற அனைத்து அமைப்புகளின் முக்கிய நோக்கம் என்பது, புஷ்ஷின் ஒரு தலைப்பட்சமான
செயல்பாட்டினை எதிர்க்கும் ஜனாதிபதி ஜாக் சிராக்கின் நிலையை வலியுறுத்தி, ஐநா பாதுகாப்பு சபையில் வீட்டோ
அதிகாரத்தை பிரயோகிக்கச் செய்வதே. ஆனால் ஈராக்கினை ஐநா சபையின் பாதுகாப்பினுள் கொணர்ந்திடும் தீர்மானம்
1414க்கு ஆதரவாக பிரான்ஸ் ஓட்டளித்தது பற்றிய ஆதாரம் எங்கேயும் இல்லை.
அமியனில் Daniele
என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர்
WSWS க்கு கூறுகையில் :
" போரினை எதிர்ப்பதன் வாயிலாக ஷிராக்
ஒரு நல்ல காரியத்தைச் செய்கிறார். அவர் ஒரு நல்ல விஷயமொன்றைச் செய்கிறார் என்றால் நாம் அவரை கட்டாயம்
ஆதரிக்க வேண்டும்"
என்றார். இத்தகைய கண்டனக் கூட்டங்கள் உடனடியாக எந்தவொரு மாற்றத்தைக்
கொண்டு வந்திடாது என்பதை அவர் ஒத்துக் கொண்டாலும் "பல
துளி தண்ணீர் தான் ஒரு பெரு வெள்ளத்தை உருவாக்கும்"
என்றும் சேர்த்துக் கூறினார்.
பாரிசில் உள்ளதாகக் கூறியுள்ளது போன்று ஒத்த அமைப்புகள் உள்ளன. இளைய கம்யூனிஸ்ட்டுகள்
விநியோகித்த துண்டு பிரசுரங்கள், "இந்த
சிக்கலான பிரச்சனைக்கு அமைதியான, அரசியல் திறமுடைய (இராஜதந்திர) தீர்வினைக் காண நாம் தொடர்ந்து வலியுறுத்த
வேண்டும்". "ஈராக்
மக்களை மிக மோசமாக பாதித்துக் கொண்டிருக்கும் வணிக தடை நடவடிக்கையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து, மீண்டும்
சதாம் உசைனின் அதிகாரத்தை அங்கீகரிக்க வேண்டும்".
சோசலிச கட்சியின் முன்னாள் உள்நாட்டு அமைச்சரான
Jean-Pierre Chevemement
இன் தேசியவாதக் குழுவான குடியரசுவாத மற்றும் குடிமக்கள் இயக்கம் ''உலகத்தை ஆதிக்கம் செலுத்த அமெரிக்கா
நடத்திடும் படுகொலைக்கு'' எதிர்ப்பு தெரிவித்ததுடன் பிரான்ஸின் கொள்கையும் அதற்கு முக்கிய பொறுப்பாகின்றது
என்றும் கூறியுள்ளது. சிராக் மற்றும் ரஃப்பரின் ஆதரவும் காரணம் என்றாலும் ''இந்த நீதியற்ற போரிற்காக பிரெஞ்சின்
வீட்டோ அதிகாரத்தினை ஆதரித்திட வேண்டுமா என்ற கேள்வியே பொது மக்களிடம் உள்ளது.'' என கூறியது.
சிராக் மற்றும் புஷ் ஆகியோரிடையே காணப்படும் வேறுபாடுகள் எண்ணைய் வளங்கள் மீதுள்ள
போரட்டமே என்று LCR
விளக்கமளித்துள்ளது. ''பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடைய ஆளுங்கட்சியினரின்
விருப்பங்கள் உண்மையாகவே புஷ் நிர்வாகத்தின் திட்டங்களிலிருந்து வேறுபட்டே உள்ளது.
TotalElfFina
குழுவின் விருப்பங்கள், Texaco
குழுவினைப் போன்று இல்லை.'' ஆனால் அவர்களால் சிராக் மற்றும்
Jean Marie Le Pan
ஆகியோரிடையே நடந்த ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் தெரிவித்ததைப்
போன்று சிராக்கிற்கு எதிராக தங்களது எதிர்ப்பைக் காட்ட இயலவில்லை. சிராக்கின் அரசினை வழி நடத்திச் செல்லும்
பிரதம மந்திரி Jean Pierre Raffarin,
ஒட்டு மொத்தமாக ஒய்வூதியம், கல்வி மற்றும் சமுதாய நலன்களைப் பாதிக்கும் செயல்களில்
ஈடுபட்டுள்ளார். ''நாங்கள் சிராக் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி எதுவரை தன்னுடைய எதிர்ப்பைக் காண்பிக்கப்
போகிறார் என்று பார்க்க வேண்டும்'' என்று கூறியுள்ளனர். ஆனால் சிராக், அமெரிக்கர்கள் மற்றும் தன்னுடைய அரசியல்
ஆதரவாளர்களுக்கு தெளிவாகக் கூறியுள்ளார், வீட்டோ அதிகாரம் என்பது ஈராக்கினை காலனி ஆதிக்கத்திற்கு உள்ளாக்கிடும்
செயலிலோ அல்லது வெற்றி பெற்றோரிடமிருந்து ஆதாயம் பெறும் முயற்சியிலோ பிரான்ஸ் ஈடுபடாது என்பதைக் கூற
இயலாது என்றும் கூறியுள்ளார்.
|