World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Blair suffers second parliamentary rebellion over war vs. Iraq

பிரிட்டன்: ஈராக்கிற்கு எதிரான போர் மீதாக இரண்டாவது பாராளுமன்ற கிளர்ச்சியால் பிளேயர் பாதிப்பு
By the Editorial Board
20 March 2003

Use this version to print | Send this link by email | Email the author

மார்ச் 18, செவ்வாய் அன்று பிரிட்டன் பாராளுமன்றம் ஈராக்கிற்கு எதிராக வரவிருக்கும் போர் மீது விவாதம் நடத்தவும் வாக்களிக்கவும் கூடியது. தொழிற்கட்சி அரசாங்கமானது ஒரு பெரிய கிளர்ச்சியால் மீண்டும் பாதிக்கப்பட்டது, இது கடந்த மாதம் நிகழ்ந்ததை விடவும் பெரியதாகும். 139 தொழிற்கட்சி அதிருப்தியாளர்கள், 15 பழமைவாதிகள் (Conservatives) மற்றும் அனைத்து 53 தாராண்மை ஜனநாயகவாதிகள் உள்ளடக்கிய மொத்தம் 216 பாராளுமன்ற உறுப்பினர்கள், போரை எதிர்க்கும் மாற்றுத் தீர்மானத்திற்காக வாக்களித்தனர்.

மாற்றுத் தீர்மானமானது பழமைவாதிகளின் ஆதரவுடன் தோற்கடிக்கப்பட்டது, மற்றும் அரசாங்கமானது போருக்கு ஆதரவளிக்கும் அதன் தீர்மானத்தை, 52 பேர் பங்கெடுக்காமையுடன், 149 வாக்குகள் எதிர்ப்புக்கு 412 வாக்குகள் ஆதரவில் வசதியாக வென்றது. ஆனால் எவ்வாறாயினும் இது ஏற்கனவே படையை அணியில் நிறுத்தி இருக்கும் அரசாங்கத்தின் செல்வாக்கிற்கு இன்னொரு பெரும் அடி ஆகும்.

பிரதமர் டோனி பிளேயர் தனது அரசாங்கத்தின் ஜனநாயக பொறுப்பிற்கு ஒரு சான்றாக பத்து மணி நேர விவாதத்தை முன்வைத்தார். பிரிட்டனின் தொன்மையான அரசியற் சட்டத்தின் கீழ், அரச தனிச்சிறப்புரிமையைப் பயன்படுத்தி, பிரதமர் மட்டுமே போருக்குப் போவதைத் தீர்மானிக்க முடியும், எனவே விவாதமும் வாக்கெடுப்பும் மேலதிக சலுகையாக நடைபெற்றன.

போருக்கான முடிவு ஏற்கனவே செய்யப்பட்டிருந்தது -- சுமார் 45,000 பிரிட்டிஷ் துருப்புக்கள், கொடிய இராணுவத் தாக்குதலாக இருக்கும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றதில், பெரிய அளவிலான அமெரிக்கப் படைகளுடன் சேர்வதற்கு பாரசீக வளைகுடாவில் அணிவகுத்திருக்கின்றன. பாராளுமன்றம் விவாதிக்கும்பொழுது கூட, பிரிட்டிஷ் படைகள் ஆக்கிரமிப்பிற்கான முடிவான தயாரிப்புக்களை செய்திருந்தன.

அமெரிக்கா தலைமையிலான போரில் பிரிட்டிஷ் பங்கேற்புக்கான அவரது ஆதரவில் இருந்து அவர் பின்வாங்கமாட்டார் என்பதை பிளேயர் நுட்பமாய் தெளிவாக்கினார். பழமைவாதிகள் மற்றும் அவரது சொந்த கட்சியிலேயே அமைச்சரவை சம்பளங்களில் தங்கி இருப்பவர்கள் அவருக்கு பாராளுமன்ற பெரும்பான்மையை உத்தரவாதம் செய்பவர்களின் ஆதரவு மீது அவ்வாறு அவர் கணக்கிட முடிந்தது. ஆயினும், நல்லெண்ணத்திற்காக, பிரதமர் பொதுமக்கள் சபையில் தனது விருப்பம் மறுக்கப்பட்டால் தான் ராஜினாமா செய்வதாகக் கூறினார். "போரிலிருந்து பின்வாங்கும்" ஒன்றாக தான் இருக்கமாட்டார் என பிளேயர் அறிவித்தார்.

பிரச்சினைகளின் ஈர்ப்பு மையம் ஈராக்கிற்கு எதிரான போரில் சம்பந்தப்பட்டிருந்தது என மறைமுகமாகக் குறிப்பிட்டார். பணயம் வைக்கப்பட்டிருந்தது பிரிட்டிஷ் வெளிவிவகாரக் கொள்கையின் முழு எதிர்காலப் போக்கும் ஆகும். தனது பூகோள மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு உறுதியாக இருக்கும் விரிவாக்க வாத ஐக்கிய அமெரிக்க அரசுகளுடன் எப்படி சகவாழ்வு கொள்வது அல்லது கட்டுப்படுத்துவது என்பது மீது அது மையப்படுத்தப்பட்டதாக அவர் மறைமுகமாய் குறிப்பிட்டார்.

"அது 21ம் நூற்றாண்டின் மைய பாதுகாப்பு அச்சுறுத்தலை பிரிட்டனும் உலகமும் முரண்கொள்கின்ற வழியை, ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தியை, ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவை, ஐரோப்பிய ஒன்றியத்துக்குள்ளேயான உறவை மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஏனைய உலக நாடுகளுடன் ஈடுபடும் வழியை தீர்மானம் செய்யும். ஆகையால் அது மிகவும் முக்கியமானதாக அரிதாகவே இருக்க முடியும். அது அடுத்த தலைமுறைக்கான சர்வதேச அரசியலின் பாணியை தீர்மானம் செய்யும்" என அவர் எச்சரித்தார்.

"எமது வேண்டுகோள் அமெரிக்கா மற்றவர்களுடன் சேர்ந்து வேலை செய்வதற்கானதாக இருந்தால், சக்திமிக்க கூட்டாளிகளாக இருந்தால் நல்லது," அவர் தொடர்ந்தார், "எமது பின்வாங்கல் அதனை பன்முகப்படுத்தமாக ஆக்குமா அல்லது அது நாம் சாத்தியமான அளவு கற்பனை செய்யக்கூடியவாறு ஒருதலைப்பட்சத்திற்கு மிகப் பெரிய தூண்டலாகவே இருக்காதா? எமது செல்வாக்கை முற்றிலும் இல்லாதாக்குகையில் மற்றும் எமது வலியுறுத்தலைப் பறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபை பற்றியோ, ஈராக்கின் எதிர்காலம் பற்றியோ மற்றும் மத்திய கிழக்கு நிகழ்ச்சிப் போக்கு பற்றியோ என்ன கவலை?"

உண்மையில் அவரது வார்த்தைகள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி மற்றும் தூய்மைப்படுத்தலை தொகுத்துக் கூறுகிறது. புதிய உலக ஒழுங்கில் அதாவது அமெரிக்காவின் ஆதரவின் கீழ் ஒழுங்கு செய்யப்படும் ஒழுங்கில் அதன் இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டி, ஆயிரக் கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தல் மற்றும் கொலைசெய்வதில் பிரிட்டன் பங்கேற்க இருக்கிறது.

பிரிட்டனின் எதிர்காலத்தை அந்த அளவு முழுமையாக புஷ் நிர்வாகத்துடன் இணைப்பதற்கு பிளேயரின் விருப்பமானது நிறுவனத்தின் பகுதிகளின் மத்தியில் பேரார்வத்தை உருவாக்கி இருக்கிறது.

உலகின் பெரும்பான்மைப் பகுதிகளிலிருந்து எதிர் கொள்ளும் கண்டனத்தில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகியன "விருப்பின் கூட்டணி" ஒன்றை ஒன்று கூட்டி சேர்த்திருந்தன, ஏழ்மை பீடித்த நாடுகளின், உயர்ந்த விலை கேட்பவருக்கு விற்கத்தயாராக இருக்கும் ஆளும் மேற்தட்டை உடைய, பிரதானமாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் யார் யார் இருக்கிறார்களோ அவர்களைப் போல என கூறுகிறது. அவ்வாறு செய்வதன் மூலம், பிரிட்டன் அதன் பல ஐரோப்பிய கூட்டாளிகளில் இருந்து அந்நியப்பட்டிருக்கிறது மற்றும் பின்னர், இங்கிலாந்து தன்னை தன்பக்கத்தில் வைத்திருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லாமல், ஆபத்தான ஒருதலைப்பட்ச அமெரிக்கா உலகை வென்று கைப்பற்றுவதற்கான அதன் பணியை முன்னெடுக்க ஊக்கப்படுத்தியது என்று பிளேயரின் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அத்தகைய கவலைகள் ஏற்கனவே மூன்று தொழிற்கட்சி அமைச்சர்கள் ராஜினாமாவை விளைவித்திருக்கிறது-- மிகக் குறிப்பிடத்தக்கது, பொதுமக்கள் சபையின் தலைவர் ரொபின் குக் ராஜினாமா. விவாதத்திற்கு ஒருநாள் முன்னர் அவரது ராஜினாமா உரையில், முன்னாள் வெளியுறவு செயலர், தொழிற் கட்சி அதிருப்தியாளர்களின் கவலைகளை தெளிவாகப் பேசினார்.

சர்வதேச உடன்பாடு இல்லாமல் அல்லது உள்நாட்டு ஆதரவு இல்லாமல் நான் போரை ஆதரிக்க முடியாது.... நாம் முன்னணி பங்காளராக இருக்கும் சர்வதேச அங்கம் எதிலும் --நேட்டோ அல்ல, ஐரோப்பிய ஒன்றியம் அல்ல மற்றும் இப்பொழுது பாதுகாப்பு சபை அல்ல-- உடன்பாடு இல்லாமல் பிரிட்டன் போருக்குப் போக கேட்கப்படுகிறது" என குக் கூறினார்.

அவர் தொடர்ந்தார்: "அமெரிக்காவானது அது தனியாக செல்வதற்கு தகுதி பெற்றிருக்கிறது, ஆனால் பிரிட்டன் ஒரு வல்லரசு அல்ல. எமது நலன்கள் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையால் அல்ல, மாறாக பல்முகப்படுத்தப்பட்ட உடன்பாட்டால் மற்றும் விதிமுறைகளால் ஆளப்படும் ஒழுங்கால் சிறப்பாய் பாதுகாக்கப்படும். இந்த இரவுவரை எமக்கு மிகவும் முக்கியமான சர்வதேச பங்காண்மைகள் பலவீனப்பட்டிருக்கின்றன-- ஐரோப்பிய ஒன்றியம் பிளவுபட்டுள்ளது; பாதுகாப்பு சபை ஸ்தம்பிதம் அடைந்திருக்கிறது."

போர் மற்றும் பிளேயரின் நடவடிக்கை போக்குக்கு ஆதரவான பெரும்பான்மை நியாயப்படுத்தல்களை குக் நிராகரித்தார். ஐ.நா அங்கீகாரத்துக்கு தனித்ததொரு தடை பிரான்ஸ் அல்ல, மற்றும் உண்மையில் அதில் தனிமைப்படுத்தப்பட்டவை பிரிட்டனும் அமெரிக்காவும்தான் என்று அவர் வலியுறுத்தினார். "நேட்டோவால் ஆன பல்முகப்படுத்த ஆதரவு, ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு" இன்மையின் காரணமாக, வருகின்ற போருக்கு எந்தவித சட்டரீதியான அடிப்படையும் இல்லை என்று அவர் குறிப்பால் அறிவித்தார். 1991 பாரசீக வளைகுடா போர் "இந்தப் பிராந்தியத்தில் உள்ள ஏழு அண்டை அயலார்களின் ஒவ்வொரு தனிநபராலும் ஆதரிக்கப்பட்டது. பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி எமது செயலூக்கமான கூட்டாளிகளாக இருந்தன. இம்மியும் வழுவாமல், அதன்காரணமாக இந்த விஷயத்தில் அந்த ஆதரவில் ஒன்றையும் நாம் பெற்றிருக்கவில்லை, சர்வதேச உடன்பாட்டினை எடுத்துக்காட்டும் கடைசி நம்பிக்கையாக பாதுகாப்பு சபையில் உடன்பாட்டை அடைவது எல்லாவற்றிலும் மிக முக்கியமானது.

போருக்கான அமெரிக்க -பிரிட்டிஷ் சுருக்க விளக்கத்தில் விசித்திரமான முரண்பாடுகளுள் ஒன்றை சுட்டிக்காட்டி, அவர் குறிப்பிட்டார்: "வஞ்சப் புகழ்ச்சியாய், ஈராக் இராணுவம் அந்த அளவு பலவீனமாக இருப்பதன் காரணமாகத்தான் அதன் ஆக்கிரமிப்பை நாம் கவனமாகப் பார்க்க வேண்டும். மோதலுக்கு வக்காலத்துவாங்குவோர் சிலர், போர் சிலநாட்களில் முடிந்து விடும் அளவுக்கு சதாமின் படைகள் பலவீனமாக இருக்கின்றன, அந்த அளவு உள்ள உரம் குலைந்திருக்கின்றன மற்றும் மோசமாக ஆயுதந்தரித்து இருக்கின்றன என்று கூறுகின்றனர். சதாம் பலவீனமாக இருக்கிறார் என்ற கருதுகோளை நாம் எமது இராணுவ மூலோபாயத்திற்கு அடிப்படையாகக் கொள்ள முடியாது மற்றும் அதேவேளை அவர் ஒரு அச்சுறுத்தல் என்ற கூற்றின் அடிப்படையில் முன்கூட்டிய தாக்குதலை நியாயப்படுத்தவும் முடியாது."

"ஈராக் குறிப்பிடத்தக்க பேரழிவுகர ஆயுதங்களை உடைமையாகக் கொண்டிருக்கிறது என்ற கூற்றுக்களை நிராகரித்து அவர் மேலும் கூறினார்," பொதுவாக புரிந்து கொள்ளக்கூடிய அர்த்த்த்தில் ஈராக்கிடம் பேரழிவுகர ஆயுதங்கள் -- பெயர் குறிப்பிட வேண்டுமானால் ஒரு மூலோபாய நகர இலக்கிற்கு எதிராக செலுத்தப்படும் ஆற்றலைக் கொண்ட ஒரு நம்பத்தகுந்த சாதனம் இல்லாமல் இருக்கலாம் ."

கடத்தப்பட்ட 2000-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை மறைமுகமாகக் குறிப்பிட்டு, புஷ் நிர்வாகம் மீதும் அதன் "ஆட்சி மாற்ற" போர் இலக்கின் மீதும் ஒரு கூர்மையான தாக்குதலை அவர் விடுத்தார். அவர், "கடந்த வாரங்கள் முழுவதும் எனக்கு மனக்கஷ்டத்தை கொடுத்திருப்பது, புளோரிடாவில் உள்ள தொங்கும் chads மற்றவிதமாகப் போயிருந்து அல்கோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், பிரிட்டிஷ் துருப்புக்களை இப்பொழுது ஒப்படைத்திருந்திருக்க மாட்டோம் என்ற சந்தேகம்தான்." எனக் கூறினார்

தொழிற்கட்சி அதிருப்தியாளர்கள் மத்தியில், இந்த கவலைகளின் மாறுபடுகின்ற வீதம் நேரத்தே மீண்டும் வெளிப்படுத்தப்பட்டன. [See "Labour MPs animated by concerns over Britain's isolation"] அத்தகைய கவலைகள், ஈராக் மீதான போருக்கு தொழிற் கட்சி "கிளர்ச்சியாளர்கள்" எதிர்ப்பானது, இராணுவத் தாக்குதலுக்கு பொது குரோதத்தின் ஓசையற்ற எதிரொலிப்புக்கும் சற்று குறைவானது. அது அவர்களுக்கு அளவுக்கு அதிகமான நற்சான்றை வழங்கும். இன்னும் சொல்லப்போனால், அவர்களின் மிதமிஞ்சிய அக்கறைகள் ஏகாதிபத்திய வெளிநாட்டுக் கொள்கையின் எதிர்காலப் போக்குக்கானதாகும். பிளேயருடன் அவர்களுக்கு வேறுபாடுகள் இருப்பினும், அவர்கள் விசுவாசமான எதிர்ப்பினராக தொழிற்படுவர் என பலர் வலியுறுத்தினர்.

அவர்கள் முன்மொழிந்த மாற்றுத் தீர்மானத்தின் வார்த்தையில் "ஈராக்கிற்கு எதிரான போருக்கான விஷயம் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை, சிறப்பாகக் குறிப்பிட்ட ஐக்கிய நாடுகள் அங்கீகாரம் இல்லாத நிலையை எடுத்துக் கொண்டால்" என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுவதில், ஆனால் "மத்திய கிழக்கில் ஈடுபட்டிருக்கும் பிரிட்டிஷ் துருப்புக்களுக்கான முழு ஆதரவுக்கு..... குரோதங்கள் தொடங்கும் சம்பவத்தில்" உறுதி எடுக்க அவசரப்படுத்தல், மற்றும் "அவர்களின் பணிகள் எல்லாப் பக்கங்களிலும் குறைந்த சேதங்களுடன் உடனடியாக முடிவடைய" நம்பிக்கையை வெளிப்படுத்தல் ஆகியவற்றில், இந்த உத்தியோக ரீதியிலான எதிர்ப்பின் தந்திரோபாய மற்றும் கோட்பாடற்ற இயல்பை குறிப்பாகத் தெரிவிப்பதாய் இருந்தது.

செய்தி ஊடகத்தின் பொதுவான போக்கு, விவாதத்திலிருந்து பிளேயர் புண்படுத்தப்பட்டவராக ஆனால் வெற்றிபெற்றவராக வெளிப்பட்டிருந்தார் என்பதாக இருந்தது, சிலர் கணித்திருந்தவாறு தொழிற் கட்சியின் எதிர்ப்பு வாக்கு உயர்வாக இருந்திருக்கவில்லை. ஆனால் இது கிட்டத்தட்ட வராமற் போய்விட்ட எண்ணிக்கை மீது சிறப்பான ஒருமுகப்படுத்தல் ஆகும், அது அரசியல் ரீதியாய் அத்தியாவசியமானது:

பிளவுபட்ட கட்சியுடன் மட்டும் பிளேயர் ஒரு போரை தொடங்கி இருக்கவில்லை. அவர் மக்கள் தொகையினர் பெரும்பான்மையினரின் விருப்பங்களுக்கு எதிராக அவ்வாறு செயலாற்றினார். அதன்விளைவாக, தாட்சர் வாதத்திற்கு புதிய தொழிற் கட்சி மற்றும் அதன் "மூன்றாவது வழி" யை ஒரு ஜனநாயக மாற்றீடு என்று கட்டுக்கதையை கவனமாக வளர்த்தெடுத்தது அழிவில் கிடக்கிறது.

பொதுமக்கள் சபை விவாதத்தினைத் தொடங்கும் "என்னை ஆதரியுங்கள் ஏனென்றால் மாற்று இல்லை" என்ற அவரது பேச்சை வழங்கியபொழுது, பலத்த கரகோஷம் டோரி இருக்கைகளில் இருந்து வந்தது, அவர்களின் தலைவர்கள் Ian Duncan Smith மற்றும் முன்னாள் தலைவர் William Hague இருவரும் பிளேருக்கு ஆதரவாகப் பேசினர். அவர்களுடன் இந்த நிலைப்பாட்டில் உல்ஸ்டர் தொழிற்சங்கவாதிகள் தலைவர், David Trimble மற்றும் புரொட்டஸ்டாந் குறுங்குழுவாத மதவெறியனின் தனிப்பட்ட பண்புருவமான, ஜனநாயக தொழிற்சங்கவாத கட்சியின் Reverend Ian Paisle ஆகியோர் இருந்தனர். ருப்பர்ட் முர்டோச்சின் படையணியைச் சேர்ந்த வெளியீடான, சன் பத்திரிகை, பிளேயர் "சேர்ச்சில் மற்றும் தாட்சருடன் சேர்ந்து வரலாற்றில் அவரது இடத்தை வென்றார்" என்று உணர்வு பொங்க குறிப்பிட்டது-- இவ்விருவரும் பிரிட்டிஷ் பழமைவாதத்தின் நன்கு அறியப்பட்ட தலைவர்கள் ஆவர்.

இந்த உள்நாட்டு அரசியல் அணிவரிசையில் மேலே, பிளேயர் அமெரிக்க வரலாற்றில் மிகவும் அதிவலதுசாரி ஆட்சியின் பிரதான கூட்டாளியாக, மற்றும் தேர்தலைத் திருடிய மற்றும் எண்ணெய் சக்கரவர்த்திகளின் மற்றும் கார்ப்பொரேட் மோசடிப்பேர்வழிகளின் அரை - குற்றத்தன்மை உடைய குழுவின் சார்பாக செயல்படும் ஒரு கயவனாக பரவலாக எளிதில் உணரப்படும் அமெரிக்க ஜனாதிபதியின் கூட்டாளியாக, போருக்குச் செல்கிறார்.

30 பலமான "விருப்பின் கூட்டணி" யில் மற்றைய பிரதான பங்காளர்கள் மேற்கு ஐரோப்பாவில், பெனிட்டோ முசோலினியின் அரசியல் வாரிசுகளுடன் கூட்டணியில் ஆட்சி செய்யும் ஊடக சக்கரவர்த்தி சில்வியோ பெர்லுஸ்கோனியின் Forza Italia, மற்றும் பிராங்கோவின் பாசிசத்தை மீளக் கட்டி அமைக்கும் ஸ்பானிய கட்சியான, ஜோசே மேரி அஜ்னாரின் மக்கள் கட்சி ஆகியன பிரதிநிதித்துவம் செய்கின்றன.

பழைய சீர்திருத்தவாத தொழிற்கட்சி இராணுவவாத மற்றும் சுதந்திர சந்தை சித்தாந்தவாதிகளின் ஒரு வலதுசாரி முதலாளித்துவ உருவாக்கமாக மீட்டுப்பெறமுடியாத மற்றும் முற்றிலுமான உருமாற்றத்தை அதிகம் தெளிவாக கோடிட்டுக் காட்டக்கூடியது வேறு எதுவுமில்லை.

பாராளுமன்ற வாக்கினை அடுத்து உடனடியாக திரைவிலக்கிக் காட்டும் அறிக்கை பிபிசி-ன் அண்ட்ரூ மாரிடமிருந்து வந்தது. அவர் தரங்குறைந்த மற்றும் கடுப்பூட்டும் அரசியல் விமர்சனத்தில் இப்பொழுது சிறப்புத்தேர்ச்சி பெறும் ஒரு முன்னாள் தீவிரவாதி ஆவார். பாராளுமன்றத்திற்கு வெளியில் முழக்கமிட்டுக் கொண்டிருக்கும் அவர்களுக்குள்ள எதிர்ப்பானது தொடர்ந்து கட்டுண்டிருக்கும் வரையில், பிளேயர் அந்த நாள் இரவு மகிழ்வுடன் வீட்டுக்குச் செல்ல முடியும் என்று மார் (Marr) கூறினார். இந்த முட்டாள்தனமான குறிப்பு அரசியல் யதார்த்தத்திலிருந்து எவ்வளவுதூரம் செய்தி ஊடக நிறுவனம் விலக்கப்பட்டிருக்கிறது என்பதின் ஒரு குறிகாட்டலை வழங்குகிறது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எதிர்கொள்ளும் நெருக்கடி வரலாற்று பரிமாணத்தைக் கொண்டது மற்றும் அது பாராளுமன்ற கணக்குகளால் தீர்மானிக்க முடியாது. வாக்கெடுப்புக்குமுன், பிரிட்டனில் பெரு முதலாளிகளின் அதிகாரபூர்வ குரலாக தொடர்ந்து இருக்கும், பைனான்சியல் டைம்ஸ் -ஆல் பிளேயரின் கஷடங்கள் பற்றி குறைந்த நல்லார்வ தொடர்பு இராத மதிப்பீடு செய்யப்பட்டது. பிளேயர் அரசாங்கத்திற்கு ஆதரவாக மற்றும் ஈராக்குடன் போருக்கு பொதுவாக ஆதரவாக இருந்தாலும், மார்ச் 18க்கான அதன் இரட்டை தலையங்கங்கள் உள்நாட்டிலும் பூகோளரீதியாகவும் முன்வைக்கப்பட்ட ஆபத்துக்களைப் பற்றி எச்சரித்தன.

"டோனி பிளேயரின் தனிமை" என கூர்மையாகத் தலைப்பிடப்பட்ட ஒன்று, இரண்டாவது ஐ.நா தீர்மானத்தை உத்திரவாதம் செய்வதற்கான அவரது முயற்சிகள் "ஒன்றுமில்லாமல் ஆகி இருக்கிறது." அது தொடர்ந்தது: "குறிப்பிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் இன்றி மற்றும் பொதுமக்கள் கருத்தின் பெரும்பான்மைக்கு எதிராக மற்றும் அவரது சொந்த கட்சியின் கணிசமான பகுதியினருக்கு எதிராக, பிரதமர் ஈராக்கில் அமெரிக்காவின் படைகளுடன் சேர்த்து படைகளை சண்டைக்குள் நிறுத்தி வைக்க ஆணையிட்டு இருக்கிறார்."

ஆசிரிய உரையானது "(தொழிற் கட்சியினர் மத்தியில்) கிளர்ச்சி ஆனது தனது நாட்டுக்காக இன்னும் நிறைய வழங்க இருக்கிற ஒரு பிரதமரை அகற்றிச்செல்லும் அந்த அளவுக்கு இருந்ததா" என்பது பற்றி கவலையை வெளிப்படுத்தியது.

மற்ற தலையங்கம் "ராஜதந்திர தோல்வி" பற்றிப் பேசியது மற்றும் இந்த நெருக்கடியால் சர்வதேச உறவுகளின் கட்டுமானத்திற்கு இழைக்கப்பட்ட பாதிப்பை மிகை மதிப்பீடு செய்தல் அரிது. மேலும் புஷ் நிர்வாகம், திரு. பிளேயர் ஆல் பக்க அணியாய் அமையப்பெற்றும் கூட, சரியான வகையில் கைம்மாறு கருதாத ஒருதலைப்பட்சவாதம் என்று வார்த்தையிடப்பட்டதிலிருந்து எளிதான வழுக்கிய பாதை இல்லை என்பதை கண்டுகொள்ளும், பல்முகப்படுத்தத்திற்கு திரும்புவதில் அமெரிக்காவும் உலகமும் முன்னே உள்ள சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.

பிளேயர் அவரது பாராளுமன்ற எதிராளிகள் பெரும்பான்மையோரது கோட்பாடற்ற பண்புகளில் இருந்து வசதியை எடுத்துக் கொள்வார். டோரிக்களது ஆதரவு மற்றும் தாராண்மை ஜனநாயகவாதிகளை மற்றும் தொழிற்கட்சி அதிருப்தியாளர்களை கடும் சொற்களால் அடக்கும் தனது திறன் ஆகியன அவரை எந்தவிதமான சீரிய அரசியல் சவாலிலிருந்தும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் --குறைந்தபட்சம் போரின் பொழுதாவது என்று அவர் கணக்குப் போடுகிறார். பின்னர் அவர் சதாம் ஹூசேன் மீதான குறுகிய வெற்றி, அவரை பாக்லாந்து/மால்வினாஸ் போருக்குப் பின்னர் அவரது மாதிரி மார்க்கரெட் தாட்சர் போல அவரை யூனியன் ஜாக் கொடியில் பதிக்க வைக்கும் என்று நம்பிக்கை கொள்கிறார்.

அவரது கணிப்பீடுகளில் பல அனுபவத்திலிருந்து பெறப்படுகின்றன. பிளேயர், அவரது முதலாவது அமைச்சரவை விமர்சகர் கிளேர் ஷோர்ட் தனது கொழுத்த அமைச்சரவை சம்பளத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டி வயிற்றைத் தளர்த்திக் கொண்டதையும் வாக்கை போருக்கு ஆதரவாக திரட்டுவதற்கு தலைமைவகிப்பதையும் பார்த்தார். பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்கள் கூட பிளேயர் தலைமையைப் புகழும் மற்றும் அவருக்கு எதிராக சவால்கள் குவிக்கப்படாது என்று அவருக்கு உத்திரவாதம் கொடுக்கும் கருத்தைக் கூறினர்.

எடுத்துக்காட்டாக, குக் பொதுமக்கள் சபை உரையை, "தற்போதைய பிரதமர் எனது வாழ்நாளில் கண்ட தொழிற்கட்சியின் மிகவும் வெற்றிகரமான தலைவர் ஆவார், எமது கட்சியின் தலைவராக அவர் தொடர்ந்து இருப்பார் என நான் நம்புகிறேன் மற்றும் தொடர்ந்து வெற்றிகரமாக இருப்பார் எனவும் நம்புகிறேன், இந்த நெருக்கடியை அவரை இடமாற்ற பயன்படுத்த விரும்புவோருக்கு நான் வாய்ப்பு கொடுக்க மாட்டேன் மற்றும் ஆதரவு தரமாட்டேன்" என்று அறிவித்ததன் மூலம் தொடங்கினார்.

செவ்வாய்க்கிழமை வாக்கிற்குப் பின்னர், அவர் CNN- ன் லாரி கிங்கிடம், "(பிளேயரின்) சொந்த நிலைப்பாடு மற்றும் அந்தஸ்து பாதிக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. தொழிற்கட்சியின் தலைமைக்கு அவரை செல்வாக்குடன் சவால் செய்யக்கூடிய ஒருவரும் இல்லை" என்றார்.

இது உண்மையாக இருக்கலாம், ஆனால் அது உழைக்கும் மக்கள் மத்தியில் நிலவுகின்ற பெரும் அரசியல் அவநம்பிக்கை, பாரம்பரிய பாராளுமன்ற நடைமுறைகள் வழியாக வெளிப்படுத்தும் சரியான வழிகளைக் காணமுடியாது என்பதையே அர்த்தப்படுத்துகின்றது.

தொழிற்சங்க விஷயத்திலும் அதுதான் உண்மை, அதன் தலைவர்கள் அவர்களின் உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் அக்கறை உடைய மிக அடிப்படை ப் பிரச்சினைகள் மீது அவர்களின் உண்மையான மெளனத்தால் தங்களையே வேறுபடுத்திக் கொண்டார்கள். பிளேயரை எதிர்க்க தொழிற்சங்கங்கள் மறுப்பதை அடையாளப்படுத்தும் விதமாய், பாராளுமன்ற வாக்கு நடைபெற்ற அதே இரவு தீ அணைப்புப்படை தொழிற்சங்கத்தின் (FBU) பகட்டான "இடது" தலைமை, 30 சதவீதம் சம்பள உயர்வு பெறுவதற்கு, திட்டமிடப்பட்ட 24 மணிநேர வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கியது. பின்னர் அவர்கள் ஆள்களில் குறிப்பிடத்தக்க வெட்டுக்களையும் சேர்த்து, மாற்ற அரிதான மூன்று ஆண்டுகளுக்கு 16 சதவீதம் வழங்க முன்வந்ததை ஏற்பதற்குப் பரிந்துரைத்தனர். இந்த முன்மொழிவு தீ அணைப்பு ஊழியர்களால் இருமுறை நிராகரிக்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையுடன், FBU பொதுச்செயலாளர் அண்டி கில்கிறிஸ்ட் உள்நாட்டில் தொழிற்துறை ஒழுங்கமைதிக்கு உறுதிகொடுத்தார், எனவே ஈராக்கிற்கு எதிரான இரத்தம் தோய்ந்த போர் தொடுக்கப்பட முடியும்.

பிளேயர் அரசாங்கத்தினை நோக்கி உணரப்படும் கோபத்திற்கான பரந்த அரசியல் வெளிப்படல் இல்லாததுடன், போர் எதிர்ப்பு இயக்கம் இதுவரையிலும் அதன் தன்னெழுச்சி மற்றும் அதற்குள்ளே வெளிப்படுத்தப்பட்ட பல்வேறுபட்ட கண்ணோட்டங்களால் பண்பிடப்படுகின்றது. ஆனால் அது அரசாங்கத்தின் முதலாளித்துவ ஆதரவு கொள்கைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் அத்தியாவசிய சமூகப் பணிகள் மீதான அதன் தாக்குதல்கள் ஆகியவற்றுடன் கொண்ட பரந்த விரக்தியின் குவிமையமாகவும் கூட அது ஆகி இருக்கிறது. போருக்கான பிளேயரின் பேரார்வத்தைப் பகிர்ந்து கொள்ளாத, பத்துலட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் மத்தியிலான சிலர், அமெரிக்காவிற்கு எதிராக ஏனைய ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளுடன் தொழிற்கட்சி அதிருப்தியாளர்கள் ஒரு கூட்டை அமைப்பதற்கான அல்லது பிளேயரின் அரசியல் உயிர்பிழைப்புக்கு ஆர்வமிக்க வாழ்த்துக்களின் அரசியல் குறி இலக்கை அணைத்துக் கொள்ளலாம்.

இதுநாள் வரை, தொழிற்கட்சி இடதுகள் போர் எதிர்ப்பு இயக்கத்தின் இயல்பான தலைவர்களாக தங்களை முன்னிறுத்திக்கொள்ள முடிந்திருக்கிறது-- மற்றும் சோசலிசத் தொழிலாளர் கட்சி போன்ற பொறுக்கி எடுக்கப்பட்ட தீவிர குழுவினரின் ஆசீர்வாதத்துடன் அவ்வாறு செய்திருக்கின்றனர். ஆனால் இப்பொழுது இதனை மாற்றுவதற்கான நிலைமை தோன்றிக்கொண்டிருக்கிறது.

அடுத்த கட்டத்தில் போர் எதிர்ப்பு இயக்கத்தினுள்ளே அரசியல் வேறுபடுத்தல்கள் இடம்பெறும், அது ஏகாதிபத்திய எதிர்ப்பு கரு பலன்தர ஆரம்பிப்பதைக் காணும். போருக்குப் போவதற்கான முடிவானது பிளேயரின் விமர்சகர்கள் அஞ்சுகின்றவாறு அரசியல் ரீதியாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு பேரழிவுகரமானதாகும்.

Top of page