:
பிரான்ஸ்
French government party leaders solidarize
themselves with American imperialism
பிரெஞ்சு அரசாங்க கட்சித் தலைவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் நட்புறவு
By Stephane Hughes and David Walsh
21 February 2003
Back
to screen version
பிரான்ஸ் ஜனாதிபதி ஜாக் சிராக்கிற்கும், புஷ் நிர்வாகத்திற்கும் இடையே ஈராக், போர்
தொடர்பாக நடைபெறுகின்ற, நடப்பு மோதல்கள் பிரெஞ்சு அரசாங்கம் தற்காலிகமாக, உலக அரங்கில் ஒரு சமாதான
சக்தியாகவும், சர்வதேச சமரசத்திற்கு பாடுபடும் நாடாகவும், வேடம் கட்டிக்கொண்டு காட்சி தருவதற்கு வழி செய்திருக்கிறது.
என்றாலும், பிரெஞ்சு ஏகாதிபத்தியம் தனது குறிப்பான விடையங்களை மாற்றிக்கொள்ளவில்லை, இன்றைய சச்சரவுகள்,
அதன் பொருளாதார மற்றும் பரிய அரசியல் நலன்கள் எந்த அளவிற்கு பாதுகாக்கப்படும் என்பதில், பாரிஸ் ஆட்சியின்
நம்பிக்கை எவ்வாறுள்ளது என்பதுடன் இணைந்துள்ளது.
பெரும்பான்மை ஆளுங்கட்சி முன்னணித் தலைவர்கள் நடத்திய பத்திரிகையாளர் கூட்டம் பெப்ரவரி
15-ந் தேதி நடைபெற்றது சேர்வதெல்லாம்
சேரட்டும் என்ற பாணியில் புதிதாக, வலதுசாரி அரசியல்வாதிகள் இணைந்து உருவாக்கிய அமைப்புத்தான்
ஹிவிறி இந்த நிருபர்
கூட்ட நடவடிக்கைகளை கவனித்தவர்கள், சிராக் அரசின் கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் பற்றி ஏதாவது மாயையில்
இருந்தால், அதைவிட்டுவிட வேண்டும், என்கிற அளவிற்கு இக் கூட்டணியின் நிலைப்பாடு இருக்கின்றது.
UMP
அமைப்பை, முன்னாள் பிரதமர் அலன் யூப்பே மிகுந்த ஆரவாரத்தோடு, பல தசாப்பங்களாக
பிரெஞ்சு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வலது மத்திய கட்சி இது என்று அறிமுகப்படுத்தினார், ஆனால் அது எழுந்து
நிற்பதே கடினமாக இருந்தது, அவ்வாறாக பரபரப்போடு ஒன்றும் நடைபெறவில்லை.
எப்படி யூப்பே இன் அரசாங்கம் வெறுத்து ஒதுக்கப்பட்டதோ, தனிமைப்படுத்தப்பட்டதோ,
அதே அடிப்படையில்தான் இன்றைய பிரதமர்
ஜோன் பியர் ரஃப்ரன் அரசாங்கத்திற்கும் குறிப்பிடும் அளவிற்கு அடிப்படை மக்கள்
ஆதரவு எதுவும் இல்லை. அன்றைய யூப்பே அரசாங்கம், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றிருந்தபோதிலும்,
1995-96-ல் வெடித்துக் கிளம்பிய, பெரும் அளவிலான வேலை நிறுத்தத்தின் விளைவாக மக்களால் வெறுத்து, ஒதுக்கப்பட்டு
தனிமைப்படுத்தப்பட்டது. இதன்போது, பல ஆண்டுகளாக "இடது" அல்லது "பன்மை இடது" (சோசலிஸ்ட் கட்சி,
கம்யூனிஸ்ட் கட்சி, பச்சை கட்சி) அரசாங்கங்கள் தொழிலாளர்களது உரிமைகள், வாழ்க்கைத் தரத்தை ஒழித்துக்கட்டுகின்ற
நடவடிக்கைகளை, ஒன்றன்பின், ஒன்றாக எடுத்துக்கொண்டு வந்ததனால் பொதுமக்களது ஏமாற்றமும், வெறுப்பும்,
கோபதாபங்களும் அங்கு வெளிப்பட்டது. UMP
கூடவோ குறையவோ ஒரு "மெய்யான கட்சி" என சிலர் கூறினர்.
இலட்சக்கணக்கான மக்கள் பாரீஸ் வீதிகளில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்த
நேரத்தில், பத்திரிகை நிருபர்கள் மாநாடு சனிக்கிழமை பிற்பகல் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது மக்களிடமிருந்து
UMP
எவ்வளவுதூரம் விலகிச் சென்றுவிட்டது என்பதற்கு அடையாளமாக விளங்கியது.
அந்தக் காரணத்தினாலும், பொதுவாக
UMP
பற்றி அக்கறையில்லாததாலும், ஊடகங்களிலிருந்து எந்தப் பிரதிநிதியும் இந்த நிருபர்கள்
பேட்டிக்கு வரவில்லை. UMP
யின் தலைமை அலுவலகம்
Rue La Boétie இல்
உள்ளது. அங்கு வந்திருந்த ஒன்றிரண்டு நிருபர்கள் காலியாகக்கிடந்த நாற்காலிகளைத் தான் பார்த்தார்கள். குறிப்பிட்ட
நேரத்தில், ஐந்து UMP
தலைவர்கள் தங்களைத் தாங்களே உயர்வாக கருதிக்கொண்டு கம்பீர
நடை நடந்துவந்து, அவர்களது இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள்.
இந்தக் கனவான்கள்:
UMP -கட்சியின் பொதுச் செயலாளர்
Philippe Douste-Blazy,
அவர் Toulouse
மேயர் முன்னாள் போட்டிக் கட்சியான
UDF ன் முன்னாள்
உறுப்பினர். முன்னாள் கலாச்சாரத்துறை அமைச்சர், சென்ற தேர்தலில் பிரதமராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டர்.
பிரெஞ்சு பாராளுமன்றத்தில் UMP
குழுவின் தலைவராக பணியாற்றும்
Jacques Barrot,
Guy Tessier
பாராளுமன்றத்தின் பாதுகாப்பு மற்றும் ஆயுதப்படைகள் குழுவின் தலைவரான இவர்
ராணுவ மற்றும் புலனாய்வு விவகாரங்களில், மிகப்பெரும் அளவிற்கு செல்வாக்கு பெற்றுள்ள பிரெஞ்சுப் பெரும் புள்ளியுமாவார்.
Renaud Donnedieu de Vabres
இவர் இதற்கு முன் UMP
இல் இருந்ததுடன், கடந்த இளவேனிற்காலத்தில் ரஃப்ரனின் முதலாவது மந்திரி சபையில் துணைப் பிரதமராகவும் இருந்தவர்.
பின்னர் கட்சி நிதி திட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டதால் பதவி விலகினார்.
சேவியர் டு வில்பன் (Xavier
de Villepin) இவரும் ஆரம்பத்தில்
UDF
ல் இருந்து வந்தவர். பிரெஞ்சு செனட் சபையின் வெளிவிவகாரங்கள், பாதுகாப்பு
மற்றும் ஆயுதப்படைகள் குழுவின் முன்னாள் தலைவர், இவர் இன்றைய வெளியுறவு அமைச்சரான டொமினிக் டு வில்பன்
(Dominique de Villepin)
இன் தந்தை.
ஆக மொத்தம் இந்த ஐந்து பேரும், மிக நெருக்கமாக இணைந்தவர்கள், மிகவும்
பிற்போக்கான குழுவைச் சேர்ந்தவர்கள்.
Douste-Blazy நிருபர் கூட்டத்தை
ஆரம்பித்து வைத்து மிக பெருமையோடு ஒன்றை பிரகடனப்படுத்தினார். ஐ.நா. பந்தோபஸ்து கவுன்சிலில் இந்த நிருபர்
பேட்டிக்கு முதல் நாள், பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் டொமினிக் டு வில்பன் ஆற்றிய உரை, ஒவ்வொருவரையும்
பெருமைபட வைத்ததாக குறிப்பிட்டார். பிரெஞ்சு ராஜ தந்திரத்தின் "மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட பலம்" என்று வர்ணித்தார்.
"சமாதான முகாம்" என்பது பற்றி பேசினார், அந்தக் குழுவில் பிரான்ஸ் இடம்பெற்றிருப்பதாக கூறினார். "ஈராக்
பற்றி நாம் மேற்க்கொள்ளும் ஒவ்வொரு அணுகுமுறையும், நம்பகத்தன்மை உள்ளதாகவும், அதே நேரத்தில் பொறுப்பானதாகவும்"
இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். "பொறுப்பானதாக" என்று அவர் குறிப்பிட்டதன் பொருள் ஈராக் மீது,
நிர்ப்பந்தங்களை தொடுத்து, முழுமையாக, அந்த நாட்டை "முற்றுமுழுதாக ஒத்துழைக்கச்" செய்வதுதான்.
பிரெஞ்சு அரசாங்கம் அமெரிக்காவுடன் எந்த விதமான மோதலிலும் ஈடுபட்டிருக்கவில்லை,
ஆனால் இரண்டு விதமான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பிரான்ஸ் செயல்பட்டு வருவதாக
Douste-Blazy குறிப்பிட்டார்.
"சமாதானமான முறையில், திட்டவட்டமான வகையில் ஈராக்கிடம் உள்ள அனைத்து ஆயுதங்களும் ஒப்படைக்கப்படவேண்டும்,
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் வெற்றிபெற வேண்டும். "இரண்டு ஆபத்தான அணுகு முறைகள் உண்டு; ஒன்று சுயதிருப்பதிக்காகவும்
மெத்தனமாக விபரம் தெரியாமலும் சாத்வீகம் பேசுவது, மற்றொன்று உடனடியாக போர் புரியவேண்டும் என்று கோருபவர்களுக்கு
சர்வதேச சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்று தருவது" [என அவர் விளக்கினார்].
ஆக, UMP
பொதுச்செயலாளர் ஒன்றை தெளிவுபடுத்திவிட்டார். புஷ் அரசு என்ன
காரணங்களை கூறி வருகிறதோ, அதையே தான் சிராக் அரசும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஈராக் ஒரு ஆபத்தான போக்கிரி
அரசு, அது எப்படியும் "ஆயுதக்குறைப்பு" செய்தாக வேண்டும், காலனி ஆதிக்க பாணியில் தலையிடுவதற்கு வல்லரசுகள்
உரிமை படைத்தவை என்று அவர் கூறிவிட்டார்.
இதில், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் உலக சோசலிச வலைத் தள நிருபர், கீழ்கண்ட கேள்வியை
கேட்டார்; "இன்றைய சர்வதேச ஆர்ப்பாட்டங்களில் வெளிப்பட்டுள்ளதுபோல் சர்வதேச அளவிலான பொதுமக்கள் எதிர்ப்பு
உணர்விற்கு இடையில் இதற்கு முன்னர் எந்த அரசாங்கமாவது போருக்கு சென்றிருப்பதாக உங்களால் நினைவு கூரமுடியுமா?"
இத்தகைய கேள்விகளை அங்கு கூடியிருந்த
UMP
தலைவர்கள் வரவேற்கவில்லை என்பது தெளிவாக தெரிந்தது; அவர்கள் மிக
அவசரமாக பதில் கூறினார்கள். Jacques Barrot
கீழ்கண்டவாறு கூறினார்: "எந்த விதமான தவறான கருத்தையும் தவிர்ப்பது
அவசியம். நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கவில்லை. சர்வதேச விதிமுறைகள் தொடர்பாக, எங்களுக்கு அதிக
அளவில் பூகோள பார்வை உண்டு. உலகில் மீண்டும் சம நிலை ஏற்படவேண்டும், குறிப்பாக மத்திய கிழக்கு விவரகாரங்களில்,
அதிக அளவில் சர்வதேச நடவடிக்கை தேவை" மேலும் "அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை நாம் தொடர்வோம்.
அமைதிவாதத்தில் வீழ்வதற்கோ அல்லது அமெரிக்க எதிர்ப்புவாதம் என்பதற்கோ இங்க இடமில்லை" என அவர் குறிப்பிட்டார்.
Renaud Donnedieu de Vabres
அவரைவிட சற்று வெளிப்படையாகவே கருத்துத் தெரிவித்தார். அமெரிக்காவின் நோக்கங்களில் பிரான்சு அரசிற்கு எந்தவிதமான
கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் அவசரக் கோலத்தில் எடுக்கப்படும் கவனக்குறைவான நடவடிக்கைகளால் வரும்,
விளைவுகள் குறித்து பிரான்ஸ் கவலை கொண்டிருப்பதாகத் தெளிவுபடுத்தினார். "கேலி பேசுவதை விட்டுவிட வேண்டு"
என்றார். "பிரான்ஸ் அமெரிக்காவின், மிகப்பெரும், விசுவாசங்கொண்ட நட்பு நாடாகச் செயல்பட்டு வருகிறது. சர்வதேச
வன்முறை என்கிற வெடிமருந்தோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே நாம் மிகுந்த விழிப்புணர்வோடும்,
முன்னெச்சரிக்கையோடும் செயல்படும் கடமை நமக்கு உண்டு. பிரான்சின் நிலைப்பாடு, கோழைத்தனத்திற்கு முற்றிலும் நேர்
எதிரானது. [சதாம்
ஹூசேன் ஆட்சி] ஆயுதங்களைக்
கைவிட வேண்டும் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக பயனுள்ள இயக்கம் நடத்தப்படவேண்டும்" என்ற இந்த இரட்டை
நோக்கம் அதற்கு உண்டு என்று அவர் விளக்கினார்.
உலக சோசலிச வலைத் தள நிருபர் பின்னர், இரண்டாவது கேள்வி ஒன்றை எழுப்பினார்;
"இந்த முரண்பாடுகளின் விளைவாக போர்க் குற்றங்கள் பற்றிய விசாரணை வரும் சாத்தியக்கூறை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?"
இந்தக் கட்டத்தில் UMP
தலைவர்கள் மத்தியிலிருந்து பெருமூச்சு வருவதை கேட்க முடிந்தது.
அவர்கள் எல்லோருக்கும் சேர்த்து சேவியர் டு வில்பன் கருத்துத் தெரிவித்தார்; "செனட்
சபையில் எங்களில் பலர், பிரெஞ்சு-அமெரிக்க நட்புறவுக் குழுவைச் சார்ந்தவர்கள்" அமெரிக்கா அல்லது வாஷிங்டனது
கொள்கைகளை "திட்டமிட்ட வகையில் எதிர்க்க வேண்டுமென்ற விருப்பம் எங்களுக்கு இல்லை." "அமெரிக்கர்களை விசாரணைக்கு
உட்படுத்த வேண்டுமென நாங்கள் விரும்பவில்லை, ஆனால் நாம் எமது கருத்தை தெரிவிக்கும், வெளிப்படுத்தும் ஒரு நண்புறவாக
இருக்க விரும்புகின்றோம்" என்றார் அவர்.
Guy Tessier, தீவிர வலதுசாரி,
இவர் தன்னை புஷ் நிர்வாகத்தோடு நட்புறவு முறையில் ஐக்கியப்படுத்திக்கொண்டாவர். ஈராக்கிற்கு இரட்டை நிர்ப்பந்தங்கள்
கொடுக்க வேண்டுமென வாதிட்டார். ஒரே நேரத்தில் இந்த இருவகை நிர்ப்பந்தங்களும் கொடுக்கப்பட வேண்டுமென்றார்.
குவைத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான துருப்புகள் மூலம் நிர்ப்பந்தம் தரவேண்டும். மறுபக்கம் ராஜீயத்துறை நிர்ப்பந்தங்கள்
பிரயோகிக்கப்பட வேண்டுமென்றார். சாத்வீகம் என்று மட்டுமே, அசட்டுத்தனமாகக் கூறிக்கொண்டிராமல், இந்த
நாட்டில் (ஈராக்கில்) முழுமையான, ஆயுதரக்குறைப்பு செய்யப்படவேண்டும். அதே நேரத்தில் சதாம் ஹூசேனுக்கு
நெருக்கடி கொடுத்து அவர் பதவியை விட்டுச் செல்லும் நிலையை உருவாக்க வேண்டும். ஏனெனில் இதே நிலவரம் ஏன்
நீடித்துக்கொண்டே இருக்கக்கூடாது என்பது விளங்க முடியாத ஒன்றல்ல" என்று விளக்கினார்.
இதுதான் அதிகாரபூர்வமான பிரெஞ்சு "சமாதான முகாம்". |