World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The presidential press conference

ஜனாதிபதியின் செய்தியாளர் மாநாடு

By David North
8 March 2003

Use this version to print | Send this link by email | Email the author

பொய்களும் சிலவேளை அர்த்தமுள்ளதாக இருக்கலாம் என ஒரு முதுமொழி உள்ளது. முக்கியமாக அரசியல்ரீதியாகவும், பகுதி உளவியல் ரீதியாகவும் அமெரிக்க ஜனாதிபதி அவதானிக்க முடியாதவராக இருப்பது என்பது ஒரு சட்டமாகிவிட்டது. ஜனாதிபதி என்ன கூறுகின்றார் என்பதற்கும் பரந்த மக்கள் பொதுவாக அவதானிப்பதற்கும் இடையில் உள்ள தொடர்புகள் அனைத்தும் இழக்கப்பட்ட நிலையில் உண்மையை தொடர்ச்சியாகவும் மோசமாகவும் திரிபுபடுத்துவது புஷ் நிர்வாகத்தின் அரசியல் நோக்கத்திற்கு தேவையாக உள்ளது. இந்நிர்வாகத்தின் பொய்கள் அவர்களது முகத்தின் மீது திரும்பிதாக்கும் தன்மையுடையதாக கருதவேண்டியுள்ளது.

ஜனாதிபதிக்கு சிந்திக்கும் ஆற்றல் இல்லை என கூறுவதன் மூலமும், புத்திஜீவித ஒழுக்கம் இல்லாதாலும், அவரால் ஒரு தர்க்கரீதியான விவாதத்தை செய்வதற்கு முடியாதிருக்கின்றது என கூறுவது விடயங்களை விளங்கிக்கொள்ள உதவிசெய்யாது. தற்போது, அவரது அறிக்கைகள் எவ்வளற்கு முட்டாள்தனமானதாகவும், தர்க்கமற்றதாகவும் இருந்தாலும் மக்கள் அதைப்பற்றி சிந்திக்காமலும், பிரதிபலிப்பில்லாமலும் மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, அவர்கள் (மக்கள்) தொலைத்தொடர்பு சாதனங்களின் பிரதிநிதிகள் போல் நடக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை இரவு ஜனாதிபதியின் செய்தியாளர் மாநாட்டிற்கு முன்னர், ஈராக் மீதான ஆக்கிரமிப்பு அவசியமானதும், தவிர்க்கமுடியாததாதும் என அமெரிக்க மக்களுக்கு விளங்கப்படுத்த புஷ் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்துவார் என தொலைத்தொடர்பு சாதனங்கள் அனைத்தும் முற்கூறியிருந்தன. அவர் அங்கு உண்மையாக வழங்கியது என்னவெனில், மாறுதலே இல்லாமல் பாடப்படும் முக்கிய பொய்களும் தொடர்புகள் அற்றதுமாகும்.

புஷ் நிர்வாகத்தின் யுத்தத்தின் சட்டபூர்வமான தன்மை தொடர்பாக மறைமுகமாக கூட ஒரு கேள்வியையும் கேட்கூடாது என்பதை விளங்கிக்கொண்ட ஒரு சிறிய கட்டுப்பட்ட செய்திதுறையினரின் முன்னர், புஷ் வழமையான முட்டாள்தனமான சுலோகங்களானதும், தொடர்ச்சியாக ஒரேமாதிரியான கட்டுக்கதைகளுமான, பேய்த்தனமான காட்டுமிராண்டியால் உடனடியாக எதிர்நோக்கப்படும் அபாயம் மற்றும் சதாம் ஹூசேனின் பாரிய அழிவுகரமான ஆயுதங்கள் பற்றியும் திரும்பதிரும்ப குறிப்பிட்டார்.

அவர் ''அமெரிக்காவும், சமாதானமும் சதாம் ஹூசேனாலும் அவரது பயங்கர ஆயுதங்களாலும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருப்பதாக'' குறிப்பிட்டார்.

ஒரு குறிப்பிடத்தக்க அமெரிக்க வரலாற்று ஆசிரியரான Richard Hofstadter, பல பத்தாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க அரசியலில் மனநோயின் பங்கு பற்றி முக்கியமான ஆய்வு ஒன்றை எழுதியிருந்தார். அவர் உயிருடன் இருந்திருந்தால், சதாம் ஹூசேன் உடனான தற்போதைய ஜனாதிபதியின் உறுதிப்பாடு தொடர்பான ஒரு முழு அத்தியாயத்துடன் தனது புத்தகத்தை மறுபதிப்பு செய்திருப்பார். பாக்தாத்தின் கெட்ட மனிதன் தொடர்பான புஷ் இடம் உள்ளடங்கியிருந்த வெறிபிடித்த கருத்தை ஒருவர் பார்க்கையில், Dubya (புஷ்ஷின் கொள்கைகளுக்கு எதிரான ஒரு தகவல் நடுவம்) வின் வித்தியாசமான முதிர்ச்சியடையாத கற்பனையின் வரையறையினுள் ஏற்படும் தாக்கத்தை தவிர்த்துக்கொள்வது கடினமாகும். அதாவது ஈராக்கின் ஜனாதிபதி ஒரு பேயின் வடிவம் என கருத வேண்டும் என்பதாகும்.

''சதாம் ஹூசேனும் அவரது பேரழிவை உருவாக்கும் ஆயுதங்களும் இந்நாட்டிற்கு ஒரு நேரடியான ஆபத்தாக உள்ளது. நான் அமெரிக்க மக்களை ஈராக்கின் சர்வாதிகாரியிடமும், அவரின் ஆயுதங்களினதும் தயவில் விட்டுவைக்க விரும்பவில்லை. சதாம் ஹூசேன் எமது நாட்டிற்கு ஒரு அச்சுறுத்தல். அவரது பாணியிலான அபாயத்திலிருந்து கடல்கள் எம்மை பாதுகாக்கும் எனவே சதாம் ஹூசேன் போன்ற ஒரு மனிதனை நீங்கள் அடக்கி வைத்திருக்கலாம் என கூறப்படுகின்றது. சதாம் ஹூசேன் அமெரிக்க மக்களுக்கு ஒரு அச்சுறுத்தல என நான் கருதுகின்றேன். அவர் ஒரு கொலைகாரன். அவர் ஏமாற்றுவதில் வல்லவர். சதாம் ஹூசேன் பேரழிவை உருவாக்கும் ஆயுதங்களை வைத்திருப்பது அமெரிக்க மக்களுக்கு தெரியும்.....''

இந்த திட்டமிடப்பட்ட வாசகங்களைவிட்டு புஷ் விலகி செல்ல முயலும்போதெல்லாம் அவர் பிரச்சனைக்குள்ளாகின்றார். அவருடைய அறிக்கைகள் முழு பொய்யானவை மட்டுமல்ல, 12 மணித்தியாலங்களுக்கு பின்னர் முன்வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பரிசோதனை திட்டத்தின் தலைவர்களான ஹன்ஸ் பிளிக்ஸ் (Dr. Hans Blix), மொகமட் எல்பரடாயினதும் (Dr. Mohamed ElBaradei) அறிக்கைகளுக்கு தெளிவாகவும், நேரடியாகவும் முரண்பாடானதாகும்.

புஷ் தனது ஆரம்ப அறிக்கையில், ''பரிசோதனையாளர்கள் கண்டுபிடிக்காதிருப்பதற்காக ஈராக் தொடர்ந்தும் இரசாயன, உயிரியல் ஆயுதங்களை மறைத்து வருகின்றது. சில சந்தர்ப்பங்களில், ஒவ்வொரு 12 தொடக்கம் 24 மணித்தியாலங்களுக்கு இப்பொருட்கள் வித்தியாசமான இடங்களுக்கு நகர்த்தப்படுகின்றன அல்லது வாகனங்களில் ஏற்றப்பட்டு மக்கள் வாழும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளன'' என குறிப்பிட்டார்.

கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் பாதுகாப்பு அமைச்சரான கொலின் பெளலால் கேலிக்கிடமான முறையில் முன்வைக்கப்பட்டு சாதாரணமாக மீண்டும் கூறப்படும் இக்கருத்தானது, பாதுகாப்பு சபையில் வெள்ளிக்கிழமை பிளிக்கஸ் ஆல் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

''நான் பெப்பிரவரி 14ம் திகதி குறிப்பிட்டபடி, உளவுத்துறை அதிகாரிகள் பேரழிவுகரமான ஆயுதங்கள் ஈராக் முழுவதும் கொண்டுசெல்லப்படுவதாக, குறிப்பாக உயிரியல் ஆயுதங்களை தயாரிப்பதற்கான நடமாடும் உற்பத்தி நிலையங்கள் இருப்பதாக கூறினர். ஈராக்கியர்கள் அவ்வாறான நடவடிக்கைகள் இல்லை என கூறுகின்றனர். எமக்கு தெரிவிக்கப்பட்ட மற்றும் தெரிவிக்கப்படாத பகுதிகளில் பல பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. உணவு மற்றும் நடமாடும் ஆய்வுகூடங்களும், பல பாரிய விதை தானியங்கள் தயாரிக்கும் பல பாரிய கொள்கலன்களும் காணப்பட்டன. தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளுக்கான எவ்விதமான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை''. (அழுத்தம் இணைக்கப்பட்டது) என பிளிக்ஸ் தெரிவித்தார்.

புஷ் தொடர்ந்தும் ''ஈராக்கின் ஆயுத ஆராச்சி விஞ்ஞானிகள் ஐக்கிய நாடுகள் பரிசோதகர்களுடன் இணைந்து இயங்கினால், அவர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுகின்றார் என எமக்கு பல உளவுத்துறை தகவல்களின்படி தெரியும்'' என குறிப்பிட்டார். இதுவும் அடுத்தநாள் பிளிக்ஸால் நிராகரிக்கப்பட்டது. ''கடந்த மாதம் முக்கிய தகவல்களுக்கு தேவையானதாக இருக்கக்கூடிய பலரின் பெயர்கள் ஈராக் எமக்கு தந்துள்ளது. குறிப்பாக, உயிரியல், இரசாயன மற்றும் 1991ல் தடை செய்யப்பட்ட ஏவுகளைகளை ஒருதலைபட்சமாக அழிப்பதில் பல கட்டங்களில் தொடர்புபட்டிருந்தவர்களின் பெயர்களை தந்துள்ளது'' என பிளிக்ஸ் கூறினார்.

அவர்களை விசாரிப்பதில் சிக்கல்கள் இருந்தது என்பதை ஒத்துக்கொண்ட பிளிக்ஸ், ஈராக்கின் உத்தியோகத்தர்கள், அதாவது விசாரணைகளை பதிவுசெய்பவர்கள் உள்ள நேரத்தில் விசாரிக்க வேண்டாம் என ஈராக்கின் பக்கத்திலிருந்து உற்சாகப்படுத்தப்பட்டுள்ளதாக பிளிக்ஸ் குறிப்பிட்டதுடன், சில விசாரணைகளை ஈராக்கிற்கு வெளியேயும் மேற்கொள்ள விருப்பதாக குறிப்பிட்டார்.

சில குறைபாடுகள் இருந்தபோதிலும், விசாரணைகளின் முழுபோக்கு குறித்து பிளிக்ஸ் ஒரு சாதகமான மதிப்பிட்டை வழங்கியுள்ளார். அவர் அவ்விசாரணைகளை ''பிரயோசனமானது'' என மதிப்பிட்டுள்ளதுடன், ''நாங்கள் விசாரணையை ஆரம்பித்ததில் இருந்து 38 பேர் தனியாக பேட்டிகாணப்பட்டதாகவும், அவற்றுள் 10 தமது விதிமுறைகளின் கீழ் நடைபெற்றதாகவும், இவற்றில் 7 கடந்த வாரம் இடம்பெற்றதாகவும்'' தெரிவித்தார்.

தனது செய்தியாளர் மாநாட்டில் புஷ் மீண்டும், மீண்டும் ஈராக் தன்னை நிராயுதபாணியாக்கவில்லை என குறிப்பிட்டார். ஈராக் பகிரங்கமாக அல்-சமூட் ஏவுகணைகளை அழிப்பதின் மத்தியில், ''ஈராக் தன்னுடைய ஆயுதங்களை அழிப்பதானால், அது எங்களுக்கு தெரிய வேண்டும், ஏனெனில் நாங்கள் அதனை பார்க்க வேண்டும்.

ஈராக்கின் ஆயுதங்கள் பரிசோதகர்களிடம் கையளிக்கப்படவேண்டும், அவை அழிக்கப்படுவதை உலகம் பார்க்கவேண்டும்'' என கூறினார். ஆனால் புஷ் பின்வருமாறு கூறியிருக்கலாம், ''நீங்கள் கண்ணால் காண்பதை நம்பாதீர்கள். ஏனெனில், நீங்கள் அதை பார்க்கவில்லை என நான் கூறுகின்றேன்''.

வழமையாக குழப்பமுறாத பிளிக்ஸ் இற்கு புஷ்ஷின் இக்கூற்று சற்று அதிகமானதாகும். அவர் தனது வழமையான கவனமான இராஜதந்திர வார்த்தைகளில் இருந்து விலகி புஷ் இன் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்திற்கு ஏளனம்மிக்க பதிலடி ஒன்று கொடுத்தார். ''1990 களின் நடுப்பகுதியில் செய்யப்பட்டதற்கு பின்னர், இவ் அழிப்புகள் (அல்-சமூட் ஏவுகணை) மேற்கொள்ளப்பட்டதானது ஆயுதங்களை களைவதில் ஒரு உறுதியான நடவடிக்கையை கொண்டுள்ளது. நாங்கள் பல் குத்தும் குச்சிகளை உடைப்பதை பார்த்துக்கொண்டிருக்கவில்லை. இங்கு உயிர்கொல்லும் ஆயுதங்கள் அழிக்கப்படுகின்றன'' என குறிப்பிட்டார்.

செய்தியாளர் மாநாட்டில் புஷ்ஷின் குறிப்புகளை பிளிக்ஸினதும், எல்பரடாயினதும் அறிக்கையுடன் ஒப்பிடுவதானது படிப்பினையுள்ளதாக இருந்த போதிலும் ஒருவகையில் சோர்வூட்டுவதாக உள்ளது. ஜனாதிபதியின் அறிக்கையில் ஒரு மிக குறைந்தளவிற்கான விவாதம் எனக்கூட குறிப்பிட முடியாது. மேலும், அதில் ஒரு தொடர் வலியுறுத்தல்களை கொண்ட வசனத்தில் பொதுவாக 5-10 சொற்களே உள்ளதுடன், ஆதாரமான சாட்சியங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. புஷ்ஷின் வழிமுறையில் உள்ள மூன்று தொடர்ச்சியான வசனங்கள், 'சதாம் ஹூசேன் நிராயுதபாணியாகவில்லை. இது ஒரு உண்மை. இது மறுக்க முடியாதது' என்பனதான்.

பிளிக்ஸையும், எல்பரடேயையும் அதியுயர் புத்திசாலித்தனமானவர்கள் மற்றும் தகமையுடையவர்கள் என்பதை ஏற்றுக்கொள்வதற்கு ஒருவர் அவர்களினது அரசியலையோ அல்லது நோக்கத்தையோ ஆதரிப்பவராக இருக்கத்தேலையில்லை. அவர்கள் பாரிய சிக்கலான சாட்சியங்களை உட்புகுத்தவும், உருவாக்கவும் உள்ள தகமையை கொண்டுள்ளார்கள். அவர்களது சொந்தமான வழியில், அவர்களது தொழிலுக்கு தேவையான நுண்ணிய விபரங்களுடன், தமது விவாதத்தின் ஊடாக உலக மக்களின் கருத்தின் மீது ஆதிக்கம் செலுத்த உண்மையாகவே முயலுகின்றனர். ஒவ்வொரு முடிவுகளும் வித்தியாசமான சாட்சியங்களுடன் பொருத்தமாக விபரிக்கப்பட்டுள்ளது.

எல்பரடேயினது அறிக்கையானது விஷேடமாக உறுதிப்படுத்துவதாகவும், புஷ் நிர்வாகத்தின் பொய்களை பிளிக்ஸ் அம்பலப்படுத்தியதைவிட மிகவும் தீவிரமாக நிராகரிக்கின்றது. அவரது அறிக்கையை ஈராக்கின் கைத்தொழில் கட்டுமானத்தின் புறநிலையானது ஒரு முக்கிய அணுஆயுத திட்டத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதுடன் ஆரம்பிக்கின்றது.

அவர் ''ஆரம்பத்தில் ஒரு ஒரு பொதுவான அவதானத்தை குறிப்பிட விரும்புகின்றேன். அதாவது கடந்த 4 வருடங்களாக ஈராக்கின் பெரும்பான்மையான தொழிற்துறை தகமையானது, 1980களின் இறுதிவரை கிடைத்துவந்த வெளிநாட்டு உதவி இல்லாதுபோனதாலும், கடந்த 10 வருடங்களில் தகமைமிக்க ஈராக்கிய தொழிலாளர்களினது பாரிய வெளியேற்றத்தாலும், அபிவிருத்தியடைந்த இயந்திரங்களினால் ஈராக் தொடர்ச்சியாக பராமரிக்காமையாலும் குறிப்பிடத்தக்களவு சீரழிந்துள்ளது. பரிசோதிக்கப்பட்ட சில தொழித்துறைகளே தொழிற்துறை ஆராய்ச்சி, அபிவிருத்தி, உற்பத்தி வசதிகள் முன்னேற்றமடைந்துள்ளதுடன், புதிய வேலையாட்களும் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தொழிற்துறை தகைமையின் முழுதான சீரழிவானது, ஒரு அணுஆயுத திட்டத்தை மீண்டும் முன்னெடுப்பதற்கான ஈராக்கின் தகைமையுடன் நேரடியாக முக்கியத்துவமானது'' என கூறினார்.

எல்பரடேயின் அறிக்கையானது, ஈராக்கில் விஷேட அளவிலான பரிசோதனைகள் நடத்தப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகின்றது. இது புத்திசாதுரியமற்ற பரிசோதனையாளர்களாலும், ஈராக்கியரால் மறைக்கப்பட்ட பேரழிவிற்கான ஆயுதங்களுக்கான சாட்சியங்களை இருட்டில் அல்லது பாலைவனத்தில் கண்தெரியாது தடவித்திரிந்தது கண்டுபிடிக்க முடியாது போனது போன்ற போலியான கற்பனைகளுக்கு நேரடியான முரண்பாடாக உள்ளது.

சர்வதேச அணுச்சக்தி அமைப்பு (IAEA -International Atomic Energy Agency) இதுவரை 141 இடங்களில் 218 பரிசோதனைகளை நடாத்தியுள்ளது. இதில் 21 இடங்கள் முன்னர் பரிசோதிக்கப்படாதவையாகும். மேலும், இவ்வமைப்பின் நிபுணர்கள் UNMOVIC-IAEA இனது இணைந்த பரிசோதனைகளிலும் பங்குகொண்டுள்ளார்கள்.

''அணு தொடர்பான பரிசோதனைக்கான தொழில்நுட்ப உதவிகள் விரிவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஈராக்கின் முக்கிய இடங்களில் இருந்து 3 வளிமண்டல மாதிரிகள் (air samplers) எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாரமும் பகுதி வளிமண்டல மாதிரிகள் ஆய்வுக்கூடங்களுக்கு ஆய்வுக்காக அனுப்பப்படுகின்றன. தண்ணீர், படிவுகள், தாவர மற்றும் உலோக மாதிரிகளின் ஆய்வுகள் அவை தொடர்பான ஆய்வுக்கூடங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன.

கதிரியக்கத்தை ஆய்வு செய்யும் நடமாடும் வாகன குழுவானது கடந்த 3 வாரங்களில் 2000 கிலோ மீற்றர் இடத்தை ஆராய்ந்துள்ளது. இவ் ஆய்வுகள் இராணுவ காவல் நிலையங்கள், முகாம்கள். ஆயுத தொழிற்சாலைகள், பாரிய வாகனத்தரிப்பிடங்கள், உற்பத்தி நிறுவனங்கள், குடியிருப்பு பிரதேசங்கள் உள்ளடங்கலான 75 இடங்களில் நடத்தப்பட்டுள்ளன'' என எல்பரடேய் குறிப்பிட்டார்.

எல்பரடேயின் அறிக்கையின் முக்கியமான பகுதிகளாக இருப்பது, செய்திதுறையால் ஒத்து ஊதப்படும் அமெரிக்காவினதும் பிரித்தானியாவினதும் குற்றச்சாட்டுகளான ஈராக் தனது அணுஆயுத திட்டத்தை தொடருவதற்கு சட்டவிரோதமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என்பதற்கான பதிலானதாக இருக்கலாம்.

இரகசியமாக அணுஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கு தேவையான வித்தியாசமான பொருட்களை பிரித்தெடுக்கும் இயந்திரத்தை (Centrifuges) தயாரிப்பதற்கான அலுமேனிய குழாய்களை ஈராக் இறக்குமதி செய்ய முயற்சித்ததாக 2002ன் இறுதியில் பாரிய முழக்கங்களுடன் அமெரிக்காவும், பிரித்தானியாவும் குற்றம்சாட்டின. இது அமெரிக்க, பிரித்தானிய அரசாங்கங்களால் முக்கிய கவனத்திற்குரிய விடயம் என கடந்த டிசம்பரில் கூறப்பட்டது. இக்குற்றச்சாட்டு தொடர்பான ஈராக்கின் மறுப்பானது இவ் அரசாங்கங்களால் கவனத்திற்கு எடுக்கப்படவில்லை.

அலுமேனியம் தொடர்பான விடயமானது, சர்வதேச அணுசக்தி அமைப்பால் (IAEA) கவனமாக ஆராயப்பட்டது என எல்பரடேயின் தனது அறிக்கையில் குறிப்பிட்டார். ''ஆழமாக பலதுறைகளின் ஆய்வுகளினாலும், ஆவணங்களை ஆராய்ந்ததாலும் (ஈராக்கால் முன்னர் விளங்கப்படுத்தியபடி) ஏவுகணைகளின் பிற்பக்கத்தை அமைப்பதற்கு தவிர வேறு ஏதாவதற்கு இந்த 81 மில்லிமீற்றர் குழாய்கள் பயன்படுத்தப்பட்டதா என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

''கிடைத்த சாட்சியங்களை அடித்தளமாக கொண்டு, இந்த அலுமேனிய குழாய்களை இறக்குமதி செய்வதற்கான முயற்சியானது, வித்தியாசமான பொருட்களை பிரித்தெடுக்கும் இயந்திரத்தை உற்பத்தி செய்வதற்கு தொடர்புடையதாக இல்லை என்ற முடிவிற்கு சர்வதேச அணுச்சக்தி அமைப்பு வந்ததுடன், மேலும் இவை இதுபோன்ற ஒரு புதிய முயற்சிக்கு பயன்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க புதிய வடிவமைப்பை ஈராக் பெற்றுக்கொள்வது பெரிதும் சாத்தியமற்றது'' என்ற முடிவிற்கு சர்வதேச அணுச்சக்தி அமைப்பு வந்தது.

ஆங்கிலோ-அமெரிக்க பிரச்சாரத்திற்கு கிடைத்த தாக்கம் என்னவெனில், ஈராக் யுரேனியத்தை நீகர் நாட்டில் இருந்து பெற்றுக்கொள்ள முயன்றது என்பதை வெளிப்படுத்தியதாகும். ஈராக்கிய அதிகாரிகள் 1999ல் நீகருக்கு விஜயம் செய்தபோது அங்கிருந்து யுரேனியத்தை கொள்வனவு செய்ய முயன்றதற்கான ஆவணங்களை கண்டுபிடித்துள்ளதாக, 2002 டிசம்பர் மாதம் பிரித்தானிய உளவுத்துறையினர் கூறினர். 19 டிசம்பர் 2002 திகதியிடப்பட்ட பத்திரம் ஒன்றில், ஈராக்கால் ஐக்கிய நாடுகளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட 12,000 பக்கங்கள் கொண்ட ஆவணத்தில் ஏன் யுரேனியத்தை நீகரில் இருந்து வாங்குவதற்கான முயற்சி தொடர்பாக ஈராக் குறிப்பிடவில்லை என அமெரிக்க வெளிநாட்டு அமைச்சகம் கேட்டிருந்தது. ஈராக் அவர்களது யுரேனியம் வாங்கியதை ஏன் மறைத்தது? எனவும் அதில் கேட்கப்பட்டிருந்தது.

எல்பரடே ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு பின்வருமாறு அறிவித்திருந்தார்: ''யுரேனியம் வாங்குவது தொடர்பாக, கடந்த காலங்களில் நீகரில் இருந்து ஈராக் யுரேனியம் வாங்க முயற்சித்தது தொடர்பான அறிக்கைகளில் விசாரணை செய்வதில் சர்வதேச அணுச்சக்தி அமைப்பு முன்னேற்றம் கண்டுள்ளது. இவ்விசாரணைகள் 1999 இற்கும் 2001 இற்கும் இடையில் யுரேனிய விற்பனை தொடர்பாக நீகருக்கும் ஈராக்கிற்கும் இடையில் செய்யப்பட்ட உடன்படிக்கையை சுட்டிக்காட்டும் பல நாடுகளால் வழங்கப்பட்ட ஆவணங்களை மத்தியப்படுத்தி இருந்தன.

''சர்வதேச அணுச்சக்தி அமைப்பு இந்த அறிக்கைகளை ஈராக்கினதும், நீகரினதும் அரசாங்கங்களுடன் கலந்துரையாடியது. இரு நாடுகளும் அவ்வாறான ஒரு நடவடிக்கை இடம்பெற்றதை நிராகரித்தனர். ஈராக் தனது பங்கிற்கு, 1999 பெப்பிரவரி மாதம் நீகர் உட்பட பல ஆபிரிக்க நாடுகளுக்கான ஈராக்கிய அதிகாரிகளின் விஜயம் உள்ளடங்கலான, நீகருடன் உள்ள தொடர்புகளை சர்வதேச அணுச்சக்தி அமைப்பிற்கு விபரமாக வழங்கியிருந்தது. நீகர் அரசாங்கத்தின் வேறுபட்ட அமைப்புகளில் இருந்து கிடைக்கும் தொடர்புகளில் இருந்து, அதன் வடிவம், அமைப்பு, உள்ளடக்கம் கையெழுத்து போன்றவற்றை, விற்பனை தொடர்பான ஆவணங்களுடன் சர்வதேச அணுச்சக்தி அமைப்பால் ஒப்பிட்டு பார்க்ககூடியதாக இருந்தது.

''வெளியேயுள்ள நிபுணர்களின் உதவியுடனான ஆழமான ஆய்வுகளின் அடித்தளத்தில், அண்மைக்காலத்தில் நீகருக்கும், ஈராக்கிற்கும் இடையிலான யுரேனிய பரிமாற்றம் தொடர்பான இந்த ஆவணங்களில் உள்ள தகவல்கள் உண்மையானவையல்ல என்று சர்வதேச அணுச்சக்தி அமைப்பு முடிவிற்கு வந்தது''.( அழுத்தம் எம்முடையது)

இந்த கண்டுபிடிப்புகளை மிக சாதாரண வார்த்தைகளில் குறிப்பிட நாங்கள் அனுமதிக்கப்பட்டால், லண்டனில் உள்ள பிளேயரின் அரசாங்கமானது தனது உளவுத்துறையால் திரிபுபடுத்தப்பட்ட ஆவணங்களை யுத்தத்திற்கான விடயமாக இட்டுக்கட்டியுள்ளது.

இந்த ஆவணங்களின் இருப்பு, பொய்யானது என்று தெரிந்திருந்தும், அதே நோக்கத்திற்காக பயன்படுத்த புஷ் நிர்வாகத்தால் இவை ஆவலுடன் கைப்பற்றப்பட்டன. இந்த புனைகதையில் உள்ளடங்கியுள்ள விளைவுகள், ஈராக் மீதான ஆக்கிரமிப்பும், நூறு ஆயிரக்கணகாகன அதன் மக்களை கொல்வதும் காயப்படுத்துவதுமாகும். உண்மையானதும், முக்கியமானதுமான வார்த்தைகளின் உள்ளடக்கத்தில் இவ் ஆத்திரமூட்டலை பயன்படுத்தி இந்த ஆக்கிரமிப்பை திட்டமிட்டவர்களும், நடைமுறைப்படுத்துபவர்களும் குற்றவாளிகள் என்றே கூறமுடியும்.

எல்பரடாய் தனது முடிவுரையில், ஈராக்கில் சர்வதேச அணுச்சக்தி அமைப்பின் வேலைகளின் விளைவுகளை பின்வருமாறு தொகுத்து கூறினார். ''மூன்றுமாத அனுமதியற்ற பரிசோதனைகளின் பின்னர், இதுவரையில் நாங்கள் ஈராக்கிடம் அணுஆயுத திட்டம் இருப்பதற்கான ஆதாரங்களையோ அல்லது நம்பக்கூடிய அடையாளங்களையோ கண்டுபிடிக்கவில்லை''.

பிளிக்ஸினதும், எல்பரடேயினதும் அறிக்கைகளும், கண்டுபிடிப்புகளும் அமெரிக்க ஜனாதிபதியால் முதல்நாள் இரவு முன்வைக்கப்பட்ட அறிக்கையை உடைத்துநொருக்கும் மறுப்பை கொண்டுள்ளது. ஆனால், உறுதியாக அவர்களது நோக்கம் புஷ்ஷிற்கு பதிலளிப்பதாக மட்டும் இருந்திருந்தால், அந்த மட்டுப்படுத்தப்பட்ட பணியை செய்வதற்கு உண்மையாக தேவையானதைவிட மிக அதிகமானதை அவர்கள் வழங்கியுள்ளார்கள்.

புஷ் நெளிவுசுழிவாக ஒரு நோக்கமில்லாது ஒரு முட்டாள்த்தனத்திலிருந்து இன்னொரு முட்டாள்த்தனத்திற்கு செல்வதை அவதானிப்பதற்கு, ஒருவர் தனது மதிப்பீட்டை நிறுத்துவது மட்டுமல்லாது, தனது முழு அறிவாற்றலுடைய நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்தவேண்டும். உதாரணத்திற்கு, 300,000 படைகளால் ஈராக்கை சுற்றிவளைத்தபடி ''ஈராக்கிய மக்களே அவர்களின் அரசாங்கத்தின் அமைப்பு மற்றும் தலைமை பற்றி தேர்ந்தெடுப்பார்கள்'' என புஷ் கூறிய 5 நிமிடங்களின் பின்னர் ''ஈராக்கிய மக்களின் நன்மைக்காக ஈராக்கின் அரசாங்கத்தை மாற்றுவோம்'' என தெரிவித்தார்.

அந்த செய்தியாளர் மாநாடு முழுவதுமே இப்படியான முட்டாள்தனமானதும், சிந்தனையற்றதுமான முரண்பாடுகளால் நிறைந்திருந்தது.

இன்னும், எங்களில் தொழிலின் பொறுப்பின் ஆற்றிலின் காரணமாக ஜனாதிபதி என்ன கூறிகின்றார் என்பதை அவதானிக்கவும், வாசிக்கவும் கடமைப்பட்டுள்ளவர்கள், தமது அனுபவத்தின் காரணமாக எவ்வகையிலோ அவமதிக்கப்பட்டுள்ளதாக உணருவதை தவிர வேறொன்றும் செய்யமுடியாது. பேச்சுவழக்கில் உள்ள ஆறாம்தரமான வித்தியாசத்திற்கும் மத்தியில் வெள்ளைமாளிகையில் இருந்து ஒளிபரப்பப்பட்ட இவ்வாறான கண்காணக்கூடிய அறியாமையும், வெறுப்பையும், கொடுமையையும் பற்றி ஒருவர் வெட்கப்படவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒருகாலத்தில் ஆபிரகாம் லிங்கன் இக்கட்டிடத்தில்தான் வாழ்ந்திருக்கின்றார்.

See Also :

போரை ''இறுதி கட்டமாக'' ஈராக்கிற்கு எதிராக பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் உடன்பாடு

போர் எதிர்ப்பு இயக்கம் எதிர்கொள்ளும் பணிகள்

பூகோள போர் எதிர்ப்பு கண்டனம்

ஈராக்கிற்கு எதிரான போரை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச மூலோபாயம்

ஈராக்கிற்கு எதிரான போரும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முன்னெடுப்பும்

Top of page