:
செய்திகள் ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
The fight against war: an open letter to students from the
World Socialist Web Site
போருக்கு எதிரான போராட்டம்: உலக சோசலிச வலைத் தளத் திலிருந்து
மாணவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம்
By the WSWS Editorial Board
4 March 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
பின்வரும் அறிக்கையானது ஐக்கிய அமெரிக்க அரசுகளிலும் சர்வதேச
ரீதியாகவும் மார்ச் 5 அன்று திட்டமிடப்பட்டுள்ள மாணவர் நடத்தும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் விநியோகிக்கப்பட்டுக்
கொண்டிருக்கிறது. தேசிய இளைஞர் மற்றும் மாணவர் அமைதிக் கூட்டணி
(NYSPC) ஈராக்கிற்கு எதிரான புஷ் நிர்வாகத்தின்
போர் உந்தல், கல்வி மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்க்க "வெடி குண்டுகள் அல்ல புத்தகங்கள்"
என்ற முழக்கத்தின் கீழ் எதிர்ப்புக்களை அழைத்திருக்கிறது.
NYSPC என்பது அமெரிக்கா
முழுவதும் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவர் குழுக்களின் கூட்டணி ஆகும். இதன் ஏற்பாட்டாளர்களின்
படி, நியூயோர்க் பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக் கழகம், வடமேற்கு பல்கலைக் கழகம், சிகாகோ
பல்கலைக் கழகம், ஸ்ராண்ட் போர்டு பல்கலைக் கழகம், பெர்க்லி மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்கள் உள்பட,
அமெரிக்காவில் உள்ள பல பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளனர். கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா,
பிரேசில், மெக்சிகோ, பல்கேரியா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் மற்றும் ஏனைய நாடுகளில்
உள்ள மாணவர்களும் கூட இந்நடவடிக்கையில் சேர்ந்துகொள்ள திட்டமிட்டிருப்பதாக
NYSPC அறிவிக்கிறது.
போர் தொடர்பாக உள்ளிருந்து கற்பித்தல், பேரணிகள், யுத்தம் தொடர்பான வாக்கெடுப்புகள்
(mock ballots ) மற்றும் ஏனைய நடவடிக்கைகள் இந்நிகழ்ச்சிகளுள்
உள்ளடங்குவன.
உலக சோசலிச வலைத் தளம் / சோசலிச சமத்துவக் கட்சி அறிக்கையானது
பிடிஎப் வடிவில் இருக்கிறது. எமது
அறிக்கையை
இறக்கம் செய்து தங்களின் பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழக வளாகங்களில் விநியோகிக்குமாறு நாம் மாணவர்களைக்
கேட்டுக் கொள்கிறோம். உலக சோசலிச வலைத் தளமானது மார்ச் 5 நடவடிக்கைகள் பற்றி விரிவான அறிக்கைகளை
வெளியிடும்.
ஈராக்கில் போர் தொடங்க நாட்கள் மட்டுமே இருக்கையில், மார்ச்
5 அன்று பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் போர் எதிர்ப்புப் பேரணிகளில் கலந்து கொள்வர் மற்றும் ஐக்கிய அமெரிக்க
அரசுகளிலும் சர்வதேச ரீதியாகவும் உயர் நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உள்ளிருந்து விளக்குதல்களில் ஈடுபடுவர்.
கடும் தாக்குதல் நெருங்க நெருங்க, போரின் கொள்ளையிடும் இயல்பு
இன்னும் அம்மணமாகியது. மக்களை திகிலடையச்செய்யும் மற்றும் பொது மக்கள் கருத்தை மாற்றும் முயற்சியில் புஷ் இன்
பேச்சாளர்கள் பொய்க்குப் பின் பொய்யை கடைந்தெடுத்து கூறுகின்றனர். அமெரிக்கா போரை இன்னும் தீர்மானிக்கவில்லை
என்பது முதலாவது பொய். அமெரிக்க அதிகாரிகளும் தொலைக்காட்சி செய்தியாளர்களும் "அது போருக்கு
வந்தால்," என்பது போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துவதால், ஈராக்கை ஆக்கிரமிப்பதற்கான முடிவு நீண்டகாலத்திற்கு
முன்னரே செய்யப்பட்டது, மற்றும் கிட்டத்தட்ட பாதுகாப்பற்ற நாடு ஒன்றின் மீது பெரும் சுடுதிறன் கட்டவிழ்த்துவிடுவதற்கு
பரந்து தாக்கும் படை ஆயத்தமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் முழுவதும் நன்கு அறிந்திருந்தனர்.
இரண்டாவது பொய், போர் அல்லது அமைதிக்கான முடிவு "சதாம்
ஹூசேனைப் பொறுத்தது" என்ற கூற்று. ஈராக் அதன் சமெளத் II (Samoud
II) ஏவுகணைகளை அழிப்பதில் தடையின்றி உடன்படலுக்கு, போரைத் தவிர்க்க ஈராக் மீது ஆயுதத்தடை
என்பது இனியும் போதாது என்று அறிவித்ததன் மூலம் வாஷிங்டன் பதிலிறுத்தது. வெள்ளை மாளிகையானது ஈராக் மீதான
ஐக்கிய நாடுகள் அவை தீர்மானம் எதனது ஆதரவையும் பெற்றிராத, "ஆட்சி மாற்றலுக்கான" அதன் அழைப்பை புதுப்பித்தது.
அமெரிக்கா ஆக்கிரமிப்பதிலிருந்து அதனைத் தடுப்பதற்கு சதாம் ஹூசேனால்
ஒன்றும் முடியாது. பேரழிவு ஆயுதங்கள், ஐ.நா தீர்மானங்கள், ஈராக்கிய மக்களை "விடுவித்தல்" ஆகியன,
பொதுமக்கள் கருத்தை ஏமாற்ற மற்றும் சூழ்ச்சியுடன் கையாளுவதை நோக்கமாகக் கொண்ட பிரச்சாரத்தைத் தவிர
வேறொன்றுமில்லை.
போரின் ஏகாதிபத்திய மற்றும் காலனித்துவ தன்மையானது, ஈராக் மீதான
அதன் தாக்குதலை அதன் "கூட்டாளிகள்" மற்றும் ஐ.நா ஒட்டுமொத்தமாக அனுமதிப்பதற்கு அவற்றை கட்டாயப்படுத்த
வாஷிங்டனால் பயன்படுத்தப்படும் படுமோசமான வழிமுறைகளில் எதிரொலிக்கிறது. அதன் விருப்பத்தை உலகின் மீது திணிக்க
புஷ் நிர்வாகம் அச்சுறுத்தல்கள், இறுதி எச்சரிக்கைகள் மற்றும் லஞ்சங்கள் கொண்ட சேர்க்கையைப் பயன்படுத்துகிறது.
வாஷிங்டனின் குண்டர்கள் வழிமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதமாக,
பிரிட்டிஷ் செய்தித்தாள் கார்டியன், "பேச்சுவார்த்தை" நிகழ்ச்சிப் போக்கை வாய்ப்பு வசதி உள்ளதாக ஆக்க, அமெரிக்க
தேசிய பாதுகாப்பு முகவாண்மையானது, ஐ.நா பேராளர் குழுவை உளவு மற்றும் தொலைபேசிகளை
ஒட்டுக்கேட்டலுக்கு உள்ளாக்கியது என்று வெளிப்படுத்தியது.
பொய்களும் காடைத்தனமும்தான் புஷ் நிர்வாகத்தின் செயல்முறைகளாகும்.
திருடப்பட்ட தேர்தலின் அடிப்படையில் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், அமெரிக்க ஆளும் மேல்தட்டின் மிகவும் சூறையாடும்
மற்றும் குற்றத்தனமான தட்டினரின், துல்லியமாக கார்ப்பொரேட் மோசடி மற்றும் ஏமாற்று வழிகளால் பெரும் செல்வத்தை
பெருந்திரளாகக் குவித்த சக்திகளின், அரசியல் பண்புருவாய் இருக்கிறது. உள்நாட்டில் புஷ் -இன் குண்டர்கள் வழிமுறைகள்
இப்பொழுது பூகோள அளவில் பயன்படுத்தப்படுகின்றது.
ஈராக் மீதான, வருகின்ற தாக்குதல், மனிதகுலம் அனைத்தையும் பேரழிவுடன்
அச்சுறுத்துகின்ற, அமெரிக்க இராணுவ வாதத்தின் உலகரீதியான வெடிப்பில் முதலாவது சுடுதல் மட்டுமே ஆகும்.
இந்த நெருக்கடியின் முழு பாரத்தையும் இளைஞர்கள் ஏற்கின்றனர். உலக
மேலாதிக்கத்திற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உந்தலுக்கு முழு தலைமுறையும் தியாகம் செய்யப்பட இருக்கிறது.
முதலாவதாக, இந்தப் போருக்காக மற்றும் எதிர்காலத்திற்காக திட்டமிடப்பட்டுக் கொண்டிருக்கும் எண்ணற்ற
போருக்காக பீரங்கிக்கு இரையாக பலர் பயன்படுத்தப்படுவார்கள். இரண்டாவதாக, பல பத்துலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு
தரமான கல்வி, பாதுகாப்பான வேலை அல்லது பிழைப்புக்கான எந்த வாய்ப்பும் மறுக்கப்படும்.
இளைஞர்களும் மாணவர்களும், எதிர்ப்பதும் தடுப்பதும் சரியானதும்
அவசியமானதுமாகும். அவர்கள் எப்பொழுதும் முற்போக்கான மற்றும் புரட்சிகர சமூக இயக்கங்களில் முக்கிய பாத்திரத்தை
ஆற்றி இருக்கிறார்கள், மற்றும் மீண்டும் அப்படி ஆற்றுவார்கள். ஆனால் எதிர்ப்பு தனிநிலையில் அதுதாமே
போதுமானாதாகாது. மிகவும் தீர்க்கமான பிரச்சினை அரசியல் தெளிவு ஆகும். போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை
முதலாளித்துவம் தமக்கு எதிராகவே, தொழிலாள வர்க்கத்தின் அடிப்படையில் ஒரு வெகுஜன இயக்கமாக உருமாற்றுதற்கு
ஒரு வேலைத் திட்டத்தையும் மூலோபாயத்தையும் வளர்த்தெடுப்பது அவசியமாகும்.
அமெரிக்க அரசாங்கமானது அமெரிக்க மக்களுக்காகப் பேசவில்லை,
மாறாக நிதி ஆதிக்க ஒரு சிலவர் ஆட்சிக்காகவே பேசுகிறது. போருக்கான உந்தல் மற்றும் கல்வி, வேலைகள்
மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் ஒரே அரசியல் நிகழ்ச்சிப் போக்கின் இரு பக்கங்கள் ஆகும்.
அவை ஒரே ஆளும் மேல்தட்டின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிநிரல்கள் ஆகும்.
இந்த ஒருசிலவர் ஆட்சியின் மேலாதிக்கம் இலாபமைப்பு முறைதன்னிலே
அதனுள்ளே உள்ள ஆழமான முரண்பாடுகளின் உற்பத்திப் பொருளாகும். முதலும் முக்கியமானதுமானது சமூக சமத்துவமின்மையின்
பெரும் வளர்ச்சி ஆகும் -- அப்பிளவு சமூக செல்வத்தினை ஏகபோகமாகக் கொண்டிருக்கும் மற்றும் இரு அரசியற்கட்சிகளையும்
கட்டுப்படுத்தும் நபர்களிடமிருந்து பரந்த பெரும்பான்மை மக்களைப் பிரிக்கிறது. அதுதான் அமெரிக்க முதலாளித்துவத்தின்
கடுமையான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி ஆகும். அது ஆளும் மேல்தட்டிற்குள்ளே போருக்கான வெறியை
உருவாக்கி இருக்கிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள், தங்களிடம் தீர்வு இல்லாத பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும்
எதிர்கொள்கையில் போரானது ஒருவாறு வெளியே வருவதற்கான ஒரு வழியை வழங்கும் என்று நம்புகிறார்கள்.
போருக்கான செயல்நோக்கங்கள் யாவை? அமெரிக்க ஆளும்
மேல்தட்டானது உலக மேலாதிக்கத்திற்கான அதன் பரந்த நிகழ்ச்சிநிரலில் முதலாவது அடிஎடுப்பாக ஈராக்கின் பரந்த
எண்ணெய் அளிப்புக்களை கட்டுப்படுத்தலைக் கைப்பற்றுவதற்கு நோக்கம் கொள்கிறது. அதேநேரத்தில், உள்நாட்டில்
ஜனநாயக உரிமைகளைத் தாக்கிக்கொண்டும் ஆதிக்கக் கொள்கையுடைய ஆட்சி வடிவங்களுக்கான அடிப்படையை
அமைக்கின்ற அதேவேளை, அது அமெரிக்க மக்களை உள்நாட்டில் சமூக நெருக்கடியிலிருந்து திசைதிருப்ப முயற்சிக்கிறது.
அமெரிக்க மக்களைப் பொறுத்தவரையில் போரானது பெரும்
விளைவுகளைக் கொண்டிருக்கும். அது 100 பில்லியன் டாலர்கள் செலவைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது--
மத்திய அரசாங்கம் கலவிக்காக செலவிடுவதைப் போன்று நான்கு மடங்காகும். மேலும் இது முதலாவது தவணைத்
தொகைதான். இராணுவ முகாம் போன்று செய்யப்படும் அரசை (Garrison
state) நிர்மாணிப்பதை நோக்கி மேலும் மேலும் அதிக பணத்தை அரசாங்கம் செலவழிக்கையில், அங்கு
கல்விமுறை மீது மற்றும் தொழிலாள வர்க்கத்தால் ஈட்டப்பட்ட முந்தைய சமூக வெற்றிகள் மீது மேலும் அதிகமான
எல்லை கடந்த அத்துமீறல்கள் கூட இருக்கும்.
பொது கல்விமுறை அலங்கோலமாகக் கிடக்கிறது, மற்றும் தரமான
தொடக்கநிலை மற்றும் இரண்டாம்நிலை கல்வி வரவர செல்வந்தர்களின் மகன்கள் மற்றும் மகள்களுக்கு பேணப்படுவதாக
இருக்கும். புஷ் நிர்வாகமானது நிதி ரீதியாய் கடன் தீர்க்கமுடியாத மாநில அரசாங்கங்களுக்கு எந்த உதவியையும் வழங்குவதை
நிராகரித்திருக்கிறது. அதன் அர்த்தம் அதிகமான தனிப்பயற்சி அதிகரித்திருக்கிறது மற்றும் கல்வி வரவு-செலவு திட்டத்தில்
மேலும் வெட்டுக்கள் செய்யப்பட்டிருக்கிறது.
பல்கலைக் கழக மாணவர்களுக்கான தனிப்பயிற்சி (Tuition)
கடந்த பத்தாண்டில் 100 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்திருக்கிறது, அதேவேள தொழிலாள வர்க்க மாணவர்களுக்கான
நிதி உதவி வறண்டுபோய்விட்டது. இது கல்லூரிக்கு செல்லக் கூடிய இளைஞர்களுக்கான கடன் சுமையாய் மாற்றி இருக்கிறது.
1999-2000-ல் நான்காண்டு திட்டத்தில் பட்டம்பெற்றுவரும் முழுநேர சராசரி மாணவர்கள் தனியார் கடன்கள்
மற்றும் கடன் வழங்குஅட்டை கடன் (credit card debt)
இவற்றுடன் கூட, மத்திய கடன்களில் இருந்து மட்டுமே 16,000 டாலர்கள் கடன் சுமையைக் கொண்டிருந்தனர்.
சமுதாயம் ஒடுக்குமுறைக்குள் ஒழுங்கமைக்கப்படுவதும் மற்றும் இராணுவமயமாதலும்
இளைஞர்கள் மீது கடும் சுமையாக வீழ்கின்றது. கல்விமுறையானது, அறிவுஜீவித வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதைக்
காட்டிலும், அரசியல் ஒத்துப்போதலைக் கோருகிறது. போர் எதிர்ப்பு பிரசுரங்களை விநியோகிப்பதற்காக மாணவர்களை
நீக்குதல் உள்பட, பள்ளிகளில் வெளிப்படுத்துதற்கான சுதந்திரம் மீது அதிகரித்த எண்ணிக்கையில் தாக்குதல் நடந்து வருகிறது.
இந்த வாரம் எதிர்ப்புத் தெரிவிக்க முன்வரும் மாணவர்கள் நிகழ்கால
சமுதாயத்தை கவனமாகப் பாருங்கள் மற்றும் தேவையான முடிவுக்கு வாருங்கள். கடந்த நூற்றாண்டின் துயரங்களில்
இருந்து ஏதாவது கற்றுக்கொள்வதெனில், அது அநீதியை எதிர்ப்பது போதுமானது அல்ல என்பதுதான். ஆழமாகச்
செல்லும் ஒரு மூலோபாயம் தேவைப்படுகிறது.
உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் ஏகாதிபத்தியம்
மற்றும் போருக்கு எதிரான இயக்கத்திற்கான ஒரு அடிப்படையாக பின்வரும் கோட்பாடுகளை முன்வைக்கின்றன:
1.
ஏகாதிபத்தியத்திற்கும் போருக்கும் எதிரான போராட்டத்திற்கான உண்மையான
வெகுஜன அடித்தளம் அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் ஆகும்.
2. தொழிலாள
வர்க்கத்தின் மாபெரும் அரசியல் பலம் பெரு முதலாளிகளது கட்சிகளுக்கு எதிர்ப்பில் சுதந்திரமாய் அது அணிதிரட்டப்பட்டால்
மட்டுமே அடையப்பட முடியும். தொழிலாள வர்க்கமானது அதன் சொந்த அரசியல் கட்சியைக் கட்டியாக வேண்டும்
மற்றும் ஆட்சி அதிகாரத்திற்காகப் போராடி ஆக வேண்டும்.
இதன் அர்த்தம், ஐக்கிய அமெரிக்க அரசுகளில், ஒரே முதலாளித்துவ
ஆட்சியின் இன்னொரு பிரிவாக மட்டுமே பிரதிநித்துவப்படுத்தும் ஜனநாயகக் கட்சிக்கு உழைக்கும் மக்களை அரசியல்
ரீதியாய் கீழ்ப்படுத்தலை முடிவுக்குக் கொணரும். ஜனநாயகக் கட்சியின் ஆதரவு இல்லாமல் புஷ் நிர்வாகமானது
போரை முன்னெடுத்துச்செல்ல இயலாது அல்லது ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்குள்ளே ஜனநாயக உரிமைகள் மற்றும்
சமூக வேலைத்திட்டங்கள் மீது அதன் நேரடிமுன்னணித் தாக்குதலை முன்னெடுத்துச்செல்ல இயலாது. ஜனநாயகக் கட்சியானது
நிறைவேற்றப்படவுள்ள இப்பெரும் குற்றத்திற்கான முழுப் பொறுப்பினையும் ஏற்கிறது.
3. போருக்கு
எதிரான போராட்டம், அது போரை உருவாக்கும் சமுகப் பொருளாதார அமைப்புக்கு எதிராக --அதாவது முதலாளித்துவத்திற்கு
எதிராக மற்றும் சோசலிசத்திற்கானதாக, அது வழிநடத்தப்படும் அளவிற்கு மட்டுமே முறையானதாகவும் செயல்விளைவுடையதாகவும்
தொடுக்கப்பட முடியும்.
4.
போருக்கு எதிரான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச
ஐக்கியம் தேவைப்படுகிறது. தொழிலாள வர்க்கமானது சர்வதேச வர்க்கம் ஆகும், அதன் நலன்கள் பிராந்திய, இனக்குழு,
இன, மொழி அல்லது வேறு எந்த எல்லைகளையும் அளாவி இணைத்து செல்கிறது. ஐக்கிய அமெரிக்க அரசுகளுடன் தற்காலிகமாக
மோதலுக்கு வரும், இந்த அல்லது அந்த முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு இந்த இயக்கத்தைக் கீழ்ப்படுத்துவதன்
மூலம், அல்லது ஏகாதிபத்திய அரசுகளின் ஒரு கருவியாக தாமே இருக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கு கீழ்ப்படுத்துவதன்
மூலம், ஏகாதிபத்தியத்திற்கும் போருக்கும் எதிரான ஒரு சர்வதேசப் போராட்டத்தை நடத்தவது சாத்தியமில்லை.
உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் இந்தக்
கோட்பாடுகளின் அடிப்படையில் மார்ச் 29-30 ல் ஒரு மாநாட்டை ஒழுங்கு செய்கின்றன. "போருக்கு
எதிரான போராட்டமும் சோசலிசமும்: ஒரு புதிய சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தின் மூலோபாயமும்
வேலைத்திட்டமும்" என்று தலைப்பிடப்பட்ட அந்த மாநாடு, அன் ஆர்பரில், மிச்சிகன் பல்கலைக் கழகத்தில்
நடைபெற இருக்கிறது. போருக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான ஒரு பரந்த இயக்கத்தை கட்ட விரும்பும் மாணவர்கள்
மற்றும் இளைஞர்கள் அனைவரையும் இந்த மாநாட்டிற்காகப் பதிவு செய்யுமாறு நாம் ஊக்கப்படுத்துகின்றோம்.
Top of page
|