World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French public sector workers demonstrate against pension cuts

ஓய்வூதிய வெட்டுகளுக்கு எதிராக பிரெஞ்சு பொதுத்துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

By Antonic Lerougetel
13 February 2003

Back to screen version

நூறுக்கும் மேற்பட்ட பிரெஞ்சு நகரங்களில் ஐந்து லடசத்திற்கும் அதிகமான மக்கள் பிப்ரவரி 1-ம் தேதியன்று ரஃப்ரன் அரசாங்கத்தினால் முன்மொழிந்துள்ள சீர்திருத்தங்களுக்கு எதிராக தங்களது ஓய்வூதிய உரிமைகளை தற்காத்திட, கண்டன ஆர்ப்பாட்டங்களை நடாத்தியுள்ளனர். எரிவாயு மற்றும் மின்சாரத்துறை ஊழியர்கள் தீர்மானமாக திட்டங்களை மறுத்த பின்பு இது நடந்துள்ளது--பெரும்பான்மையான தொழிற்சங்கங்கள், பொதுத்துறை சார்ந்த அலுவலகங்களின் நிர்வாக அமைப்பு மற்றும் அரசாங்கம் என்பவை இதில் பின்னணிவகிக்கின்றன-- ஜனவரி 9ம் திகதி நடந்த ஆய்வு வாக்களிப்பின் பின்னர் இத் தீர்மானங்கள் வெளிவந்திருந்தன. ஓய்வூதியத்திற்கு செலுத்தப்படும் தொகையில் 4-சதவீத உயர்வை உள்ளடக்கியிருந்த இத்திட்டங்கள் எரிவாயு மற்றும் மின்சார துறையினை தனியார்மயமாக்கிட தயார்செய்வதன் ஒரு பகுதியாகவே இருக்கின்றன.

மோசமான வாநிலை நிலைமைகள் இருந்தபோதும், கண்டன ஆர்ப்பாட்டங்களை நடாத்தியவர்களின் எண்ணிக்கை 3,00,000-திற்கும் அதிகமாக இருந்தது. இது 2000-ஆம் ஆண்டு முழுமையான ஓய்வூதிய உரிமையைப் பெற்றிட பணியாற்றவேண்டிய வருடங்களின் எண்ணிக்கையை உயர்த்திட ஜொஸ்பனின் பன்மை இடது அரசாங்கம் கொண்டு வர முனைந்த திட்டங்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடாத்தியோரை விட அதிகமாகும்.

கண்டன ஆர்ப்பாட்டங்களை நடாத்தியவர்களில் பெரும் பான்மையானோர் அரசாங்கத்திடமிருந்து வரும் உடனடி அச்சுறுத்தலுக்கு ஆளாகக் கூடிய ஊழியர்களான ஆசிரியர்கள், சமூக சேவை ஊழியர்கள், மற்றும் பிற பொதுத்துறை சார்ந்த ஊழியர்கள், உள்ளூர் அரசாங்க ஊழியர்கள், பொதுபணித்துறை ஊழியர்கள் மற்றும் தொழிற்துறை ஊழியர்கள் (எரிவாயு, மின்சாரம், அஞ்சல்) ஆகியோர் ஆவர். ஆயினும் தனியார் துறைகளிலிருந்தும் பிரதிநிதிகள் இதற்கு வந்திருந்தனர். அமியான் (Amiens) நகரின் தொழிற் பிரிவு ஊழியர்கள் கொடிகள் தாங்கி அணிவகுத்து நடந்து வந்தனர். தங்களை வாலியோ (Valio) மற்றும் வீர்ல்பூல்(Whirlpool) நிறுவன ஊழியர்களாக தம்மை அடையாளம் காட்டிக் கொண்ட அவர்கள், அண்மையில் கொண்டுவரப்பட்ட ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்டவர்கள்.

பாரிஸில் நடந்த அணிவகுப்பில் பங்கேற்ற 35,000-க்கும் மேற்பட்டோரில் EDF (எரிவாயு) RATP(பாரிஸ் பேருந்து மற்றும் நிலத்தடி போக்கு வரத்து) நிறுவனம் சார்ந்த ஊழியர்கள் மற்றும் சிறிய அளவில் வந்திருந்த தனியார் துறை பிரதிநிதிகளும் இதில் அடங்குவர்.

கண்டன ஆர்ப்படாட்டக்காரர்கள் 60, 75, 37.5 என்ற எண்களில் சுருக்கமாக தமது முக்கியமான கோரிக்கைகளை வைத்திருந்தனர்; ஓய்வு பெற்றிடும் வயதினை 60-எனவும், ஓய்வு பெறுவதற்கு முன் பெற்ற ஊதியத்தின் 75-சதவிகிதமாக ஓய்வூதியம் இருக்கவேண்டும் எனவும், முழு ஓய்வூதியம் பெற்றிட வேலைசெய்யவேண்டிய காலம் 37.5 வருடங்கள் என்பதாக அமையவேண்டும் எனவும், இவை தனியார் மற்றும் பொதுத்துறை சார்ந்த ஊழியர் அனைவருக்கும் பொதுவானவையாக அமையவேண்டும் எனவும் பொருள் கொள்ளவேண்டும். கண்டன ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்த முக்கியமான ஏழு தொழிற்சங்கங்களினால் வெளிவிடப்பட்ட --37.5-வருடங்கள் பற்றிய கோரிக்கையை விலக்கிவிட்டு 40-வருடங்கள் பற்றியே பேசியுள்ள மற்றும் ஓய்வூதிய நிலைகள் பற்றி தெளிவில்லாமல் இருந்த-- அறிக்கையினால் ஏற்பட்ட குளப்பத்திற்கு எதிரான செயற்பாடகவே இருந்தது.

கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது ''யூப்பே (Juppe) போன்று எல்லோருக்கும் 57-ல் ஓய்வூதியம்'' (தற்போது அரசாங்கம் அமைத்துள்ள UMP கட்சியின் தலைவரான அலன் யூப்பே (Alain Juppé) அண்மையில் தன்னுடைய பொதுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார்) ''தனியாரோ, அரசோ, முப்பத்தேழரை வருடங்கள் மட்டுமே ஒரு நாள் கூட அதிகமாகக்கூடாது'' ஓய்வூதியத்திற்கு பணம் போருக்காக அல்ல'' போன்ற வாசகங்களை கேட்க்கக்கூடியதாக இருந்தது.

அமியன் நகரில் Bruno Delvas செயலாளர் ''Group des 10-Solidaires"என்ற தொழிற் சங்க அமைப்பின் Somme பிரிவு கருத்துரைத்துள்ளார். ''நாற்பது வருடம் வேலைசெய்வதனை அவர்கள் வலியுறுத்துவதால் நாங்கள் கூட்டு ஆவணத்தில் கையெழுத்திடவில்லை. நாங்கள் என்றுமே எல்லோருக்குமே-- பொதுத்துறையோ, தனியார் துறையோ-- 37.5 வருடங்கள் என்றே கொள்ளுவோம்.''

Credit Lyonnai-வங்கியைச் சேர்ந்த பாரிஸ் நகர ஊழியர் கூறினார். ''ஏற்கெனவே 1993-ம் ஆண்டு நாங்கள் இழப்பினை அனுபவித்துள்ளோம். Balladur- சீர்திருத்தத்தினால் நான் 30-முதல் 40-சதவிகிதம் வரை என்னுடைய ஓய்வூதியத்தை இழந்துள்ளேன். அவர்கள் வேறு யாரையாவது தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்''

கண்டனக்கூட்டம் நடந்த மறுநாள் பிரதம மந்திரி ரஃப்ரன் ஓய்வூதியம் குறித்து சீர்திருத்தங்களை ஆரம்பித்திடுவதற்கான பிரச்சாரத்தை துவக்கியுள்ளார். மேலும் இச்சீர்திருத்தத்தினை இந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் நடைமுறைக்கு கொணர்ந்திட முடிவு செய்துள்ளனர். மேலும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அவருடைய முதல் நோக்கம் தனியார் துறை ஊழியர்களுக்கு சமமாக பொதுப்பணித்துறை ஊழியர்களின் வேலைக்காலத்தினை நீடிக்கச் செய்வதென்பதே. பொதுப்பணித்துறையின் குறிப்பிட்டுக் கூற வல்ல சிறப்புத்தன்மையினை அடையாளம் காண்பது சமத்துவமாக தேவைகளை அறிந்து கொள்வதற்கு தடையாக இருக்கக்கூடாது. இதிலிருந்து வலியுறுத்தப்படுவது என்னவென்றால் ஒப்பிட்டுக் கூறிடும் நிலைகளில் உள்ள மக்களின் தேவைகளும் இசைவாக்கப்பட வேண்டும்"

Baron Scilliere தலைவர், வேலை தருவோர் கூட்டமைப்பு பிப்ரவரி 3-ஆம் தேதி Fr3 TV- என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெளிவாகக் கூறியுள்ளார். ''இன்னும் சில வருடங்களுக்கு அரசு நடுநிலைமை வகித்தால் சில அடிப்படை சார்ந்த செயல்களை நிறைவேற்றியிருக்கும். அது வரி செலுத்துவோரின் செலவுத் தொகையைக் குறைத்து தனியார் துறை ஊழியரை அடிக்கடி சிரமத்துள்ளாக்காமலிருக்கும்.

மேலும் அவர் ''தனியார்துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் ஓய்வூதியத்தினை சீர்திருத்தி அமைக்க வேண்டியதன் தேவையை'' வலியுறுத்தினார்.

ரஃப்ரன் மற்றும் Seilliere ஆகிய இருவரும் ஒத்திசைந்து போகிற பத்திரிக்கைத் துறை மற்றும் தொழிற்சங்க தலைமை மற்றும் வயதான பன்மை இடது கட்சியின் மெளனம் ஆகியவற்றின் துணையுடன் மக்களை நெருக்கியடித்து ஓய்வூதிய உரிமைகளின் தீவிர குறைப்பினை ஒத்துக்கொள்ள வைக்க முயலுகின்றனர். அத்தகைய நடவடிக்கைகள் இல்லாவிடில் ஓய்வூதிய பண நிலை ஆதாரத்தையே அழித்திடும். நிலை உருவாகக் கூடும் என்கின்றனர். வேலை தருவோர் தவிர்க்க நினைப்பது மிகப்பெரிய வரிச்சலுகையினால் உயர்ந்திருக்கும் அவர்களுடைய லாப சதவிகிதம் அவர்களது ஊழியர்களின் ஓய்வூதியத்தை பராமரிக்கச் செலவிடப்படக் கூடாது என்பதே.

ரஃப்ரனது நீதி மற்றும் சமத்துவம் குறித்து சொல்லும் காழ்ப்புணர்ச்சிமிக்க வெறுப்பூட்டும் அறிவுரை மற்றும் (அவரது) சகாக்கள் மீது கொண்டுள்ள அக்கறை ஆகியவை TF-1 தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு பிப்ரவரி, 4-ஆம் தேதியன்று தெளிவாகத்தெரிய வந்தது. அந்த வருடம் ஓய்வு பெறும் ஊழியர்களின் பதட்டத்தினைத் தவிர்ப்பதாக எண்ணிக்கொண்டு கவனக்குறைவாக அவர்களது நோக்கம் ஓய்வூதியம் பெறுபவர்களைத் தண்டிப்பதே என்று ஒத்துக்கொண்டார். ''இந்த வருடம் ஓய்வு பெறுபவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள்'' என்று உறுதி கூறினார். ஆனால் அடுத்த வருடம்?

எளிதில் ரஃப்ரனின் பதட்டமும் விருப்பமும், எல்லா கருத்துரையாளர்களும் நினைவுறுத்தியதுபோல், பொது நல அரசுகளை சின்னா பின்னமாக்கும் அலன் யூப்பேயின் முயற்சிகளை தோல்வியுறச் செய்த 1995-ஆம் ஆண்டின் மிகப்பெரிய இயக்கத்தினை போன்ற ஒன்றினை தவிர்ப்பதன் நோக்கிலாகும். ''Liberation" என்ற நாளிதழ் ரஃப்ரனின் நண்பர் ஒருவர் கூறிய வார்த்தைகளை மேற்கோள் காட்டியது; ஓய்வூதிய திட்டத்தினை காப்பாற்றியவர் தான் என்னும் நிலையில் அவர் இருப்பாராயின் "அது அரசியல் வாழ்க்கையில் அவருக்கு ஒரு மிகப்பெரும் உயர்வை தரும்". ஆனால் இதில் தோல்வியுற்றால் "அவர் தன்னுடைய மற்ற லட்சியங்களுக்கும் வழியனுப்புதல் செய்ய வேண்டியிருக்கும்'' என்று கருத்துரைத்துள்ளார்.

ஓய்வூதிய உரிமைகளை காத்திடுவதிலிருந்து எல்லாவித்த்திலும் தொழிற்சங்கங்கள் தொலைவிலேயே உள்ளன அவற்றின் உண்மையான அக்கறை சீர்திருத்தங்களை வடிவமைப்பதில் தாங்களும் ஒரு பங்கேற்று அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள அவர்களது பங்கு கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதிலேயே உள்ளது. CFDT தொழிற்சங்கத்தின் Francois Chereque, எல்லா தொழிற்சங்கங்களுக்காகவும் பேசும் இவரிடம்; ''நீங்களாகவே ஒரு சீர்திருத்தத்தினை செயல்படுத்த நீங்கள் விரும்புகின்றீர்களா இல்லை ஏனைய எல்லா தொழிற்சங்கங்களுடன் இணைந்து ஒரு சீர்திருத்தத்தினை செயல்படுத்திடுவீர்களா?'' என கேட்க்கப்பட்டது.

CGT தொழிற்சங்கத்தின் Birnard Thibault, கூறினார் ''நாங்கள் பார்வையாளர்கள் என்ற நிலையில் எல்லையோரமாக ஒதுக்கப்பட விரும்பவில்லை''

Marc Blondel உடைய நேசக்கூட்டமைவு Force Ouvriere ஓய்வூதிய உரிமைகளுக்கு எதிராகயிருந்தாலும் ஏழு தொழிற்சங்கங்கள் இணைந்த கூட்டு அமைப்பில் கையெழுத்திட்டுள்ளது. ''Liberation நாளிதழ் Blondel பற்றி எழுதியது: ''காலத்தின் அறிகுறி: காலமறிந்து செயலாற்றுகின்ற விதமாக Mare Blondel வெள்ளிக்கிழமையன்று Francois Chereque-உடன் சமாதானம் செய்து கொண்டார். அவர்கள் ஒருவரை ஒருவர் அனாவசியமாக சாடாமலிருக்க ஒப்புக்கொண்டானர்.''(பிப்ரவரி-3)

1995-ஆம் ஆண்டில் அலன் யூப்பேயின் திட்டங்களுக்கு எதிரான இயக்கத்தினை தடுத்து நிறுத்தியதும் பிளவுறச்செய்ததும், எல்லாவற்றிற்கும் மேலாக எந்தவொரு போராட்டத்தினையும் அரசியல் ஆகாமல் தடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டிருந்த தொழிற்சங்கங்கள் இன்று மேலும் அபிவிருத்தியடைந்து வலது சாரி அரசாங்கத்துடன் மிகவும் பிற்போக்கான வேலைத்திட்டங்களில் வெளிப்படையாகவே கூட்டுச்சேர்ந்துள்ளன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved