:
செய்திகள் ஆய்வுகள்
:ஆசியா
:
கொரியா
Washington prepares to tighten the economic noose around North Korea
வடகொரியாவை சுற்றி பொருளாதார முற்றுகைக்கு வாஷிங்டன் முன்னேற்பாடு செய்கிறது
By Peter Symonds
18 February 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
ஈராக்கிற்கு எதிராகப் போர் தொடங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிற
புஷ் நிர்வாகம், கொரியா தீபகற்பத்தில் கொந்தளிப்பை அதிகரிக்கின்ற வகையில் புதிய ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை
மேற்கொள்ளுவதற்கு திட்டமிட்டு வருகிறது.
வடகொரியாவின் அணுத்திட்டம் தொடர்பாக பென்டகனும், அமெரிக்காவின் வெளியுறவுத்
துறையும் இந்த நாட்டின் மீது பொருளாதார முற்றுகையிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள விரிவான திட்டங்களை
தயாரித்து கொண்டிருப்பதாக நேற்று நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆயுதங்கள்
விற்பனையை தடுத்து நிறுத்தவும், ஜப்பானில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற கொரியாவின் மக்கள் பணம் அனுப்புவதை தடுத்து
நிறுத்தவும் அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது. அமெரிக்கா, வடகொரியா மீது எடுக்க உத்தேசித்துள்ள நடவடிக்கைகளில்
மேற்கண்ட இரண்டு தடைகளும் அடங்குவதால், வடகொரியாவின் முக்கிய அன்னிய செலாவணி வருவாய் வாய்ப்புக்கள் இதன்
மூலம் தடுத்து நிறுத்தப்படும்.
''வடகொரியாவிலிருந்து புறப்பட்டு வரும் கப்பல்கள், விமானங்களில் ராக்கெட்டுகள்
அல்லது அணு ஆயுதப் பொருட்கள் அடங்கியிருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், அவற்றை திருப்பி அனுப்பவும் அல்லது விரட்டிப்
பிடிக்கவும் தமது படைகளைப் பயன்படுத்துவது'' குறித்து பென்டகனில் திட்டமிடுபவர்கள் ஆராய்ந்து கொண்டிருப்பதாக
மூத்த நிர்வாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி இப்பத்திரிகை தகவல் தந்திருக்கிறது. இதற்கு முன்னர் வடகொரியா
ராக்கெட்டுகளை பல நாடுகளுக்கு விற்பனை செய்திருக்கிறது. ஆனால் ''அணு ஆயுதப் பொருட்களை'' எந்த
நாட்டிற்கும் எப்போதும் வடகொரியா விற்றதற்கான எந்த சான்றுகளும் இல்லை.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட், சென்ற வாரம் இந்தப் பிரச்சனையை
குழப்பித்தள்ளியதோடு வடகொரியா ''உலகின் மிகப்பெரிய ராக்கெட் தொழில்நுட்பத்தை பரப்புகின்ற நாடு'' என்ற
முத்திரையையும் குத்திவிட்டார். அதே மூச்சில் ''வடகொரியா மிகப்பெரிய அணு பரவல் மிரட்டலுக்கு காரணமாக செயல்படுகிறது
என்றும் கொரியா தீபகற்பத்தைவிட இந்த நாடு உலகிற்கு மிரட்டலாக உள்ளது'' என்று மேலும் கூறினார். இப்படி
அவர் அமெரிக்க செனட் சபையில் விமர்சனம் செய்வதற்கு முன்னர் வடகொரியாவை ''பயங்கரவாத ஆட்சி'' என்றும்
வர்ணித்தார்.
''இராஜங்கத்துறை தீர்விற்காக'' வாஷிங்டன் முயன்று வருகிறது என்று வலியுறுத்தி கூறிக்கொண்டே
மறைமுகமாக வடகொரியா மீது இராணுவ நடவடிக்கைக்கான மிரட்டலை அது விடுத்துக்கொண்டிருக்கிறது. அத்துடன்
யாங்பயான் (Yongbyon) அணு நிலையத்தில் தாக்குதல்
நடத்தக்கூடும் என்றும் மறைமுகமாக அமெரிக்கா கூறிவருகிறது. ஒரு வாரத்திற்கு முன்னர் எல்லா யோசனைகளும்
''என்னுடைய முடிவிற்காக காத்திருக்கின்றன'' என்று ஜனாதிபதி புஷ் அறிவித்தார். பாதுகாப்பு அமைச்சர் ரம்ஸ்பீல்ட்
இரண்டு டசின் நீண்ட தூரம் சென்று தாக்கும் B-1 மற்றும்
B-52 குண்டு வீச்சு போர் விமானங்களை கூவாங் (Guam)
என்ற பசுபிக் தீவிற்கு அனுப்பியுள்ளார். இந்த விமானங்கள் வடகொரியாவை தாக்கும் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளன.
சென்ற வாரம் அமெரிக்க செனட் சபையில் உரையாற்றிய ரம்ஸ்பீல்ட் தென்கொரியாவில்
இருக்கும் அமெரிக்கப் படைகளை ''சீரமைப்பது'' குறித்து தாம் ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார். தற்போது
தென்கொரியாவின் சியோலிலுள்ள 37.000 அமெரிக்க துருப்புக்கள் அங்கிருந்து வடகொரியாவை ஒட்டியுள்ள இராணுவம்
நடமாடாத பிராந்தியத்திற்கு (Demilitarised Zone-DMZ)
அனுப்பி வைக்க அமெரிக்கா ஆலோசனை செய்து வருகிறது. தற்போது வடகொரியாவுடன் நடந்துவரும் மோதலுக்கும்
இந்த யோசனைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். இத்தகைய முயற்சி மூலம் வடகொரியாவின்
அணு வசதிகள் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தும்போது, வடகொரியா தனது ராக்கெட்டுக்கள் மற்றும்
பீரங்கிகள் கொண்டு எதிர் தாக்குதலை செய்ய முடியாத அளவிற்கு நெருக்கடியை உண்டாக்குவதற்கான திட்டமாக இது
இருக்கிறது.
மார்ச் 4 முதல் ஏப்ரல் 2 ந் தேதி வரை தென்கொரிய இராணுவத்துடன் கூட்டாக
இணைந்து போர் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்த பென்டகன் ஏற்பாடு செய்து வருகிறது.
வாஷிங்டனது இராஜங்கத்துறை நடவடிக்கைகள் அதன் இராணுவ நிலையைப்போன்று மிகுந்த
ஆக்கிரமிப்பு மனப்பான்மை கொண்டதாக அமைந்திருக்கிறது. இரண்டு தரப்பும் தாக்குதல் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து
கொண்டால் வடகொரியா தனது அணுத் திட்டம் தொடர்பான உறுதிமொழிகளை வழங்க முன்வந்திருக்கிறது. ஆனால் வெள்ளை
மாளிகை அதிகாரிகள் வடகொரியாவுடன் நேரடியான பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு தொடர்ந்து மறுத்து
வருவதுடன், அதற்குப் பதிலாக ஜப்பான், தென்கொரியா, ரஷ்யா மற்றும் சீனா அடங்கிய பன்னாட்டு பேச்சுவார்த்தைகள்
நடத்தவேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர்.
இப்படி பன்னாட்டு அணுகுமுறையை மேற்கொள்வதன் நோக்கம், பிரதான பிராந்திய
நாடுகளுக்கு நிபந்தனைகளை விதித்து வடகொரியாவை பொருளாதார அடிப்படையிலும், இராஜங்கத்துறை அளவிலும் தனிமைப்படுத்த
வேண்டும் என்பதேயாகும். சென்ற வாரம் அமெரிக்காவின் ஆதரவோடு சர்வதேச அணு சக்தி
(IAEA) ஏஜென்சியானது, வடகொரியா அணு ஆயுத பரவல்
தடுப்பு ஒப்பந்தத்தை மீறிவிட்டது என்று பிரகடனப்படுத்தி, இந்த விவகாரத்தை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் முடிவிற்காக
அனுப்பியிருக்கிறது.
சென்ற அக்டோபரில் தனது சர்வதேச கடமைகளை மீறி வடகொரியா இரகசியமாக
யூரேனியம் செறிவூட்டும் திட்டத்தை மேற்கொண்டிருப்பதாக வாஷிங்டன் குற்றம் சாட்டி தற்போது நடைபெற்று வரும்
நெருக்கடியை தூண்டிவிட்டது. வடகொரியா அத்தகைய திட்டத்தை மேற்கொண்டிருப்பதாக ஒப்புக்கொண்டுவிட்டது என்று
கூறி புஷ் நிர்வாகம், அதற்கு எண்ணெய் வழங்குவதை நிறுத்திவிட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் 1994 ஆம் ஆண்டு
உருவான ஒப்பந்தப்படி யொங்யாங் (Pyongyang) எண்ணெய்க்கு
பதிலாக அணு செறிவூட்டத் திட்டத்தை முடக்கவும், இரு தரப்பு உறவுகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவரவும் இணங்கியது.
வடகொரியா அமெரிக்காவிற்கு பதிலளிக்கும் வகையில், அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்திலிருந்து
விலகிக்கொண்டு சர்வதேச ஆய்வாளர்களைத் தனது நாட்டிலிருந்து வெளியேற்றி, யொங்பயானில் சிறிய 5 மெகாவாட்
சோதனை அணு உலையை அமைத்தது. லண்டனிலிருந்து வெளிவரும் டெலிகிராப் பத்திரிகை வெளியிட்டுள்ள
தகவலின்படி வடகொரியா 200 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட 4 புதிய அணு மின்சாரத் திட்டங்களை மேற்கொண்டிருக்கிறது.
''எமது நாட்டிற்கு மின்சாரத் தேவை மிக அவசியமாக இருப்பதால், இப்படிப்பட்ட மிகவும் கடுமையான நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டி இருக்கிறது'' என்று வடகொரியா எரிசக்தி இயக்குநர் கிம் ஜோராக் குறிப்பிட்டார்.
வடகொரியா அணு ஆயுதங்களைத் தயாரிக்கிறது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை
அது மறுத்துள்ளது. 1994 ஒப்பந்தத்திற்கு முன்னர் வடகொரியா வசமிருந்த புளுட்டோனியம் மூலம் ஒன்றிரண்டு
அணுகுண்டுகளைத் தயாரித்திருக்கலாம் என்று CIA கூறியுள்ள
குற்றச்சாட்டிற்கு எந்தவிதமான ஆதாரத்தையும் அமெரிக்கா தரவில்லை. இரண்டு மூன்று மாதங்களில் 6 முதல் 8
அணுகுண்டுகள் வரை வடகொரியா தயாரிப்பதற்கான போதுமான அணுப் பொருட்கள் அதன் கைவசம் இருப்பதாக அமெரிக்கா
எச்சரிக்கை செய்திருக்கிறது. இந்த மதிப்பீடானது கடந்த எட்டு ஆண்டுகளாக சர்வதேச அணு சக்தி ஏஜென்சி மேற்பார்வையில்
சேமித்து வைக்கப்பட்டுள்ள 8.000 சக்தியிழந்த செறிகூட்ட தகடுகளை கணக்கிட்டு கூறப்பட்ட புள்ளி விபரங்களாகும்.
வடகொரியா, அமெரிக்காவின் மிரட்டலுக்கும் நெருக்குதலுக்கும் பதிலடியாக எதிர்ப்பு
அறிக்கைகளை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தன் மீது பொருளாதார முற்றுகை நடவடிக்கை எடுக்கப்பட்டால்
அது போர் பிரகடனத்திற்கு சமமாகும் என்றும், அப்படியான பொருளாதார முற்றுகை நடவடிக்கைக்குப் பதிலாக
தான் ''முன்னதாக தாக்குதல்'' நடத்தக்கூடும் என்றும் வடகொரியா எச்சரித்தது. யொங்யாங்கின் இந்த எச்சரிக்கையானது
வெறும் தற்புகழ்ச்சியாகும். அமெரிக்காவை வடகொரியா குறிவைத்து அணு ஆயுத தாக்குதல் நடத்த முடியாது. இப்படி
வடகொரியா பெருமையடித்துக் கொண்டதை அமெரிக்காவின் பெரும்பாலான வலதுசாரி அரசியல்வாதிகள் வடகொரியாவிற்கு
எதிரான பிரச்சாரத்திற்கு இதனை பயன்படுத்திக்கொண்டனர்.
வாஷிங்டனுடன் கூரிய கருத்து வேறுபாடு
சென்ற வாரம் சர்வதேச அணுசக்தி ஏஜென்சி முடிவு செய்த பின்னர், அமெரிக்கா உடனடியாக
வடகொரியா மீது பொருளாதாரத் தடை நடவடிக்கைளை எடுக்குமாறு ஐ.நா. பாதுகாப்பு சபையிடம் கோரப்போவதில்லை
என்று கோடிட்டு காட்டியது. ஈராக் மீது ஆக்கிரமிக்கும் தனது திட்டத்திற்கு ஐ.நா. மீது நிர்ப்பந்தங்களை தொடர்ந்து
நீடிப்பதற்காகத்தான் இந்தப் பிரச்சனையை அமெரிக்காக இப்படி ஆறப்போடுகின்றது. அதேநேரத்தில் பிற நாடுகளின்
ஆதரவை இழந்துள்ள அமெரிக்கா இப்பிரச்சனையில் ''பன்னாட்டு அணுகுமுறையை'' கடைப்பிடிக்க முடியவில்லை.
ஜப்பான் மட்டுமே அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. வாஷிங்டனைப்
போல் டோக்கியோவும், வடகொரியாவிற்கு சுற்றுலா, வர்த்தகம் மற்றும் வடகொரியாவிற்கு அனுப்பப்படும் பணத்தை
கட்டுப்படுத்த திட்டமிட்டு வருகிறது. 2001 ம் ஆண்டில் ஜப்பானுடன் வடகொரியா நடத்திய வர்த்தகம் 470 மில்லியன்
டொலர்களாகும். சீனாவிற்கு அடுத்து ஜப்பானுடன் வர்த்தகம் செய்யும் இரண்டாவது பெரிய வர்த்தக நாடு வடகொரியாவாகும்.
ஜப்பானில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற கொரியா மக்கள் மூலம் 150 மில்லியன் டொலர்களை இந்தநாடு வருமானமாகப்
பெறுகிறது.
ஜப்பான் அரசாங்கம் மிகத் தீவிரமான இராணுவ நிலையையும் எடுத்திருக்கிறது. ஜப்பானுக்கு
வடகொரியாவிலிருந்து ஏதாவது இராணுவ மிரட்டல் வருமானால் வடகொரியா மீது திடீர் இராணுவத் தாக்குதல் நடத்தப்படும்
என்று ஜப்பான் மிரட்டியுள்ளது. ''ராக்கெட் ஜப்பான் மீது செலுத்தப்படுமானால் ஜப்பான் தற்காப்பிற்காக வடகொரியா
மீது இராணுவ நடவடிக்கை எடுக்கவேண்டி வரும்'' என்று ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் சிகெரு இஷிபா சென்ற
வாரம் இது சம்பந்தமாக கருத்து தெரிவித்துள்ளார்.
எப்படி இருந்தபோதிலும், தென்கொரியாவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
ரோ மூஹெய்யூன் (RohMoo-hyun) பொருளாதாரத்தடை
நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, வடகொரியாவிற்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் இராணுவ நடவடிக்கையை
எந்த வகையிலும் ஆதரிக்க முடியாது என்று அறிவித்தார். பிப்ரவரி 25 ந்தேதி பதவியேற்றுக்கொள்ளும் ரோ, தனது
கட்சியிலுள்ள மூத்த அதிகாரியுடன் பேசும்போது ''வடகொரியாவை தாக்குவதற்கு நான் ஒப்புக்கொள்ள முடியாது.
அமெரிக்காவோடு முழுமையாக ஒத்துழைப்போம். ஆனால் இந்த பிரச்சனையில் அல்ல'' என்று கூறினார்.
சென்ற ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரோ வெற்றி பெற்றார். தென்கொரியாவில்
அமெரிக்க இராணுவம் நிலைபெற்றிருப்பதற்கும், வடகொரியா மீது புஷ் நிர்வாகம் மோதல் போக்கில் செயல்படுவது
குறித்தும் தென்கொரிய மக்களிடையே வளர்ந்துவரும் வெறுப்புணர்வை பயன்படுத்தியே ரோ இந்த வெற்றியைப் பெற்றார்.
பல தென்கொரிய மக்கள் வடகொரிய ஜனாதிபதி மேற்கொள்ளும் வெளிநாட்டுக் கொள்கை மூலம் பல தசாப்தங்களாக
பிரிந்திருந்த வடகொரியாவும் தென்கொரியாவும் இணையும் என்று நம்பினார்கள். ஆனால் புஷ், பதவிக்கு வந்த பின்பு
2001 ம் ஆண்டில் வடகொரியாவுடன் அமெரிக்கா நடத்தி வந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நிறுத்திவிட்டார்.
ரோவை தன்னுடைய கருத்திற்கு இசைந்து வரச்செய்வதற்காக புஷ் நிர்வாகம் பதினைந்து
நாட்களுக்கு முன்னர் அவரது பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்காக வாஷிங்டனுக்கு அழைத்தது. இருந்தபோதிலும்,
இந்தக் கலந்துரையாடல்களில் வடகொரியா மீதான எந்தவிதமான பொருளாதார முற்றுகைக்கும் ரோவின் எதிர்ப்பைக்
கோடிட்டுக் காட்டியிருந்தன.
புஷ் நிர்வாகம் சீனாவையும், ரஷ்யாவையும் வடகொரியாவிற்கு நிர்ப்பந்தம்
கொடுக்குமாறு வலியுறுத்தி வருகிறது. பெய்ஜிங், வடகொரியாவிற்கு பொருளாதார மற்றும் வர்த்தக உதவிகளை
வழங்கி வருவதை பயன்படுத்தி இந்த நாட்டை மிரட்டி பணியவைக்க வேண்டுமென்று வெள்ளை மாளிகை விரும்புகிறது. ஆனால்
இன்று வரை சீனா பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது. கடந்த வாரம் சீன வெளியுறவு
அதிகாரி சாங் குயே ''சீனா தனது சொந்த முறையில் பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது''. அமெரிக்காவும்,
வடகொரியாவும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டுமென தொடர்ந்தும் தாம் வேண்டுகோள் விடுத்துவருவதாக
கருத்துத் தெரிவித்தார்.
இதேபோன்று மொஸ்கோ, அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு உடன்படவில்லை. வடகொரியா
தொடர்பாக சர்வதேச அணுசக்தி ஏஜென்சியான IAEA யில்
வாக்கெடுப்பு நடைபெற்றபோது ரஸ்யாவும், கியூபாவும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. ''இந்தப் பிரச்சனையை
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்புவது என்பது இன்னும் பக்குவப்படாத எதிர் விளைவுகளை உருவாக்கும் நடவடிக்கை''
என்று ரஸ்யாவின் பிரதிநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ரஸ்யா வெளியுறவு அமைச்சர் இகோர் இவனோவ்
''கொரிய தீபகற்ப நிலையை அரசியல் பாதைக்குத் திருப்பிவிட'' நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக்
கேட்டுக்கொண்டார்.
மொஸ்கோ மற்றும் பெய்ஜிங்கிற்கு ஒன்று தெளிவாகத் தெரியும். அதாவது, வடகொரியாவின்
அணுத் திட்டத்தை உடனடி சாக்குப்போக்காகப் பயன்படுத்தி வாஷிங்டன் வடகிழக்கு ஆசியாவில் அதிக இராஜங்கத்துறை
மற்றும் இராணுவ கெடுபிடிகளைக் கடைப்பிடிக்க விரும்புகிறது என்பதாகும். வடகொரியாவை ''தீய அச்சாணியின் ஒரு
பகுதி'' என்று ஓரம் கட்டியதன் மூலம், யொங்யாங்குடன் புதிய உடன்பாடல்ல மாறாக வடகொரியா ஆட்சிக் கவிழ்ப்புத்தான்
குறிக்கோள் என்று புஷ் நிர்வாகம் ஒன்றைத் தெளிவாக அறிவித்துவிட்டது. ஈராக்கைப் போன்று இங்கும் வாஷிங்டன்
''ஆட்சி மாற்றத்தை விரும்புகிறது.'' அது இந்தப் பிராந்தியத்தில் குறிப்பாக சீனா மீது தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதையே
குறிக்கோளாக கொண்டிருக்கின்றது. ஏற்கெனவே அமெரிக்காவின் ''கேந்திர போட்டியாளர்'' சீனா என்று புஷ்
பிரகடனப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Top of page
|