WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு
ஜிமீக்ஷீக்ஷீஷீக்ஷீவீsனீ ணீஸீபீ tலீமீ ஷீக்ஷீவீரீவீஸீs ஷீயீ மிsக்ஷீணீமீறீறிணீக்ஷீt 1
பயங்கரவாதமும் இஸ்ரேலின் தோற்றமும் - பகுதி1
By Jean Shaoul
21 June 2000
Use this version to print
|
Send this link by email
| Email the author
கீழ் வருவது இரு பகுதித் தொடரின் முதல் பகுதியாகும்.
முன்னர் பொது ஆவண அலுவலகம் என்று அழைக்கப்பட்ட, தேசிய ஆவணக்காப்பகம் கடந்த
மாதம் M15ன் பாதுகாப்பு பணிக் கோப்புக்களை வெளியிட்டதானது,
சியோனிச பயங்கரவாத அமைப்புக்கள் லண்டனில் குழுக்கள் அமைக்கத் திட்டமிட்டதோடு, போருக்குப் பின் தொழிற்கட்சி
அரசாங்கத்தின் பிரிட்டிஷ் வெளிநாட்டு அமைச்சராக இருந்த எர்னஸ்ட் பெவினைக்
(Ernest Bevin) கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததும்
தெரியவந்துள்ளது.
ஆகஸ்டு 1946ல் ``பாலஸ்தீனத்தில் தற்போதைய போக்குகள்`` என்ற அறிக்கையில்
ஸ்டேர்ன் (Stern) கும்பலின் நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
1944ம் ஆண்டு எகிப்தில் பிரிட்டிஷ் இராணுவ ஆளுநராக இருந்த மோய்ன் பிரபு
(Lord Moyne) வைக் கொன்றது இந்தத் தீவிரவாதக்
குழுதான்.
"அயல்நாட்டிற்கு சென்று, ஓர் முக்கிய பிரிட்டிஷ் குடிமகனைப் படுகொலை செய்வதற்காக
-திரு. பெவினைப் பற்றிய சிறப்புக் குறிப்பு பல இடங்களில் இவ்வாறுதான் கூறப்பட்டுள்ளது- தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு
அவர்கள் (ஸ்டேர்ன் கும்பல்) பயிற்சி அளித்து வந்திருந்தனர் என்று சமீப மாதங்களில் தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது``
என்று அறிக்கை கூறுகின்றது.
இந்த ஸ்டேர்ன் கும்பலின் (பிற்காலத்தில்
Lehi என்று வேறு பெயர் சூட்டிக்கொண்டது) முக்கிய தலைவர்களுள் ஒருவர்தான் யிட்சாக் ஷமிர் (Yitzhak
Shamir) 1983ல் பிரதம மந்திரியாக விளங்கியவர், உயர் பதவியில் இவருடைய பதவிக்காலம் பென் குரியன்
(Ben Gurion) க்கு அடுத்தபடியாக நீண்ட கால அளவு
ஆகும்.
"இங்கிலாந்து, பாலஸ்தீனம் மற்றும் இடங்களில் அச்சுறுத்தும் யூத நடவடிக்கைகள்" என்ற
மற்றொரு அறிக்கை, பிரதமர் கிளமென்ட் அட்லி (Clement
Attlee) க்காகத் தயரிக்கப்பட்டது, இர்குன் (Irgun)
உடைய நடவடிக்கைகளைப் பற்றி சுட்டிக்காட்டியது.
இர்குன், பின்னர் 1977ல் இஸ்ரேலியப் பிரதம மந்திரியான மெனச்செம் பெகினால்
தலைமை தாங்கப்பட்டது, -அவருடைய தலைக்கு 2000 பவுண்டுகள் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது- அவர் " பலஸ்தீனத்தில்
யூத எதிர்ப்புணர்வுக்கு அவர்களது நடவடிக்கைகள் முக்கியமாக பிரயோசனமானது என கருதப்பட்ட பல போலீஸ் இராணுவ
அதிகாரிகளை கடந்த காலத்தில் கொலை செய்துவிட்டதற்குக் காரணமாயிருந்தவர்" என்று அது குறிப்பிட்டது.
இந்த அறிக்கை, இர்குன் அதற்கு முந்தைய மாதம் ஜெருசலத்திலிருந்த
King David Hotel ல் பிரிட்டிஷ் தலைமையகத்தைத்
தகர்த்து 91 பேரை -பிரிட்டன் நாட்டவர், அரேபியர், யூதர் ஆகியோரைக் கொன்றும் பலரைக் காயமுறவும் செய்த
பயங்கரவாதக் குண்டுவெடிப்புக்குப் பின்னர் எழுதப்பட்டிருந்தது.
அது: ``இர்குன், ஸ்டேர்ன் குழுக்கள் 5 'சிறு குழுக்களை` லண்டனுக்கு அனுப்பி
IRA (Irish
Republic Army) வழிகளில் செயல்பட அனுப்ப முடிவு செய்திருக்கின்றன என்று நம்முடைய ஜெருசலம்
பிரதிநிதி தகவல் பெற்றிருக்கிறார். மேலும் அவர்கள் கூறும் முறையில் பயங்கரவாதிகள் ``நாயை அதன் இருப்பிடத்திலேயே
தாக்க`` என்றும் கூறியுள்ளனர். 18 ஸ்டேர்னிஸ்டுகள் தூக்கிலிடப்பட்டால் (King
David குண்டு வீச்சில் அவர்கள் பங்கிற்காக) இர்குன் ஸ்டேர்ன் குழுவோடு ஒத்துழைக்கத் தயாராக உள்ளனது.``
எனக் கூறியது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், குறைந்தபட்சம் இன்னும் 100 பயங்கரவாத பதிலடிகள்
இருக்கும் மற்றும் ``பாலஸ்தீனிய தெருக்களில் பிரிட்டிஷ் அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் மீது கண்மூடித்தனமான
துப்பாக்கிச்சூடுகளை கட்டாயம் எதிர்பார்க்கலாம்`` என்று உளவுத்துறைப் படையினர் நம்பினர். உண்மையில் தண்டனைகள்
ஆயுள் தண்டனைகளாகக் குறைக்கப்பட்டன என்று இக்கோப்புக்கள் காட்டுகின்றன.
M15 ன் தலைவர் பீட்டர்
சிலிட்டோவுக்கும் (Peter Sillitoe)
பிரதம மந்திரிக்கும் இடையே நடக்கவிருக்கும் சந்திப்புக்குத் தேவையான குறிப்பு ஒன்றில் பயங்கரவாதத்திற்கு எதிராகக்
கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகளும் கூட பட்டியலிடப்பட்டுள்ளது. பிரிட்டனிலுள்ள யூதர் குழுக்களைப் போலீஸ்
கண்காணிக்கும் மற்றும் "பாலஸ்தீனத்தில் பயங்கரவாத நடவடிக்கைக்கு பரிவுணர்வு காட்டுவோர், நாட்டிற்குள் வரும்
எந்த பயங்கரவாதிக்கும் தொடர்புப் புள்ளியாக இருப்போர் எனத் தெரியவரும் யூதர்களும் வேவு பார்க்கப்படுவர்.
மத்திய கிழக்கில் பிரிட்டனுக்கான விசா கோருவோர் விண்ணப்பங்கள் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளால் சோதனைக்கு
உட்படுத்தப்படுகின்றன. மத்திய கிழக்கிலிருந்து வரும் கப்பல்பணியாட்கள் உட்பட, வருகின்ற எல்லா யூதர்களைப்
பற்றியும் இங்கிலாந்தின் துறைமுகங்களில் உள்ள குடியேற்ற அலுவலர்கள், மத்திய உள்துறை அமைச்சகம், சிறப்புப் பிரிவு
மற்றும் M15
இவற்றிற்கு தகவல்களை அனுப்பவேண்டும்.``
M15 "தன்னுடைய ஆதாரங்கள் மூலம்"
இங்கிலாந்தின் சியோனிச குழு மீதும் அத்துடன் பயங்கரவாதிகளுக்குப் பரிவுணர்வைக் காட்டுவோர் மீதும் உன்னிப்பான
கவனம் செலுத்தி வருவதாகக் கூறியது -அவர்களுடைய ஒற்றர்களே உள்ளிருந்து அவர்களுக்காக வேலை செய்திருக்கவேண்டுமெனப்
புலப்படுத்துகிறது. அத்தகைய குழுக்களை தனது சொந்த பிரித்தாளும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் பிரிட்டிஷ்
அரசாங்கத்தின் மனப்பாங்கை எடுத்துக் கொள்கையில், அதற்குள்ளே வேலைசெய்த உள் உளவாளிகளை
M15 கொண்டிருந்தது
என்கின்ற சாத்தியத்தின் எல்லைக்கு அப்பால் இல்லை.
இந்த சியோனிச குழுக்கள் கொலை முயற்சிகளுக்குத் திட்டமிட்டன அல்லது அவற்றை மேற்கொண்டன
என்பது வெகு காலமாகத் தெரிந்துள்ள போதிலும், பிரிட்டிஷாருக்கு எதிராகக் குண்டுவீச்சு, நாசவேலைகள் ஆகியவற்றைச்
செய்தவர்கள் என்று தெரிந்திருந்தபோதிலும், இயல்பான 30 ஆண்டுகால விதிமுறைக்குப்பின் வெளியிடப்படும் இந்த அறிக்கைகள்,
காலந்தாழ்த்தி வெளியிடப்பட்டுள்ளது பல காரணங்களினால் முக்கியத்துவம் கொண்டுள்ளது.
முதன் முதலாக எத்தன்மையான அரசியல் வண்ணம் கொண்டிருந்தாலும் சியோனிஸ்டுகள்
தனிநாடு அமைப்பதற்கு பயங்கரவாத வழிமுறைகளைப் பயன்படுத்தினர் என்பதைத் தக்க சமயத்தில் ஞாபகப்படுத்துகின்ற
இந்த அறிக்கை; தற்கால சியோனிஸ்டுகள் பாலஸ்தீனியர்களை "பயங்கரவாதிகள்" என்று குறிப்பிட்டு அவர்களுடன்
பேச்சுவார்த்தைகளில் ஈடுபட மறுக்கும்போதும், எப்பொழுதும் தம்மை மறந்துவிட்டதாகத் தோன்றுகிறது.
ஏரியல் ஷரோனும் அவருடைய நண்பர்களும் கடந்த காலத்தைப் பற்றிய அரசியல் ஞாபக
மறதிக்காரர்களோ அல்லது உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களோ மட்டும் அல்லர். அதைவிட முக்கியமாக,
மெனாச்சிம் பெகினின் தலைமையிலான இர்குன், ஸ்டேர்ன் குழு, அதனுடைய பின்தோற்றம் லேகி, இவை இணைந்துதான்
லிக்குட் கட்சியின் முன்னோடியான ஹெருட் (Herut)
கட்சியை அமைத்தன, ஷெரோன் அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளுள்
முக்கியமானதான தீவிர வலதுசாரி அணியான மோலெடெட் (Moledet)
கட்சியை அமைத்தன. பழைய ஜெனரல்கள், தீவிரத் தேசியவாதிகள், சமயவெறியாளர்கள் இவையடங்கிய குழு இன்று
இஸ்ரேலை ஆளுகின்றது -பயங்கரவாதிகளின் வாரிசுகளான இவர்கள், பாசிஸ்டுகளுடனும் கூடுதலான தொடர்புகளைக்
கொண்டிருந்தனர். இந்த முறையில், அவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள ஜேர்மனியுடன்
கூட்டுசேர்ந்த பாலஸ்தீனம், எகிப்து, ஈராக் நாடுகளிலிருந்த சில அரபு தேசியவாதக்குழுக்களை பிரதிபலிக்கின்றனர்.
இந்தக் கூட்டுக்கள்தான் இரண்டாம் உலகப்போரின்போது சியோனிச இயக்கத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையில் உள்நாட்டுப்போர்
போன்றவற்றுக்கு வழிவகுத்தன.
சியோனிச பயங்கரவாத குழுக்களின் அரசியல் தோற்றம்
தீவிர வலதுசாரி சியோனிச திருத்தல்வாத பிரிவான, ஒரு அதி தேசிய சியோனிச
குழுவிலிருந்து பல சியோனிச குழுக்கள் வெளிப்பட்டன. அனைத்து சியோனிச குழுக்களும், தேசிய ஒற்றுமையின் பெயரால்
பாலஸ்தீனத்தில் வர்க்கப் போராட்டத்தை நசுக்க முயன்ற அதேவேளை, திரிபுவாதிகள் மட்டும் பாலஸ்தீனிய --
சியோனிச மோதலின் தொடக்கத்திலேயே, பெரும்பான்மையான சியோனிச அரசியல் இயக்கத்திற்கெதிராக,
வன்முறையைப் பயன்படுத்தாமலும் ஆதிக்குடிமக்களைக் கட்டாயமாக வெளியேற்றாமலும் பாலஸ்தீனத்தில் சியோனிச அரசை
அமைத்திட முடியாது என வெளிப்படையாக அறிவித்தது. "இரத்தமும் நெருப்பும்" வெளிப்பட்டுத்தான் சியோனிச அரசு
அமைக்கப்பட முடியும் என்று கூறியது. 1922ல் பாலஸ்தீனம் பிரிக்கப்பட்டதை அவர்கள் எதிர்த்துள்ளனர்; அதையொட்டி
பிரிட்டன் இப்பொழுது ஜோர்டான் என்று அழைக்கப்படும் பகுதியை, முதல் உலகப்போரில் தமக்கு ஆதரவு கொடுத்ததற்காக
அவருடைய வாடிக்கையாளர் ஹெஷ்மைட் எமிர் அப்துல்லாவிற்கு (Hashemite
emir Abdullah) அளித்தது. தொழிற்கட்சி சியோனிஸ்டுகள் மேலை ஜனநாயக முறைகளை
விரும்பியபோது, திரிபுவாத அரசியல் சித்தாந்தம் ஐரோப்பிய பாசிச சர்வாதிகாரிகளை தங்கள் மாதிரிகளாகக்
கொண்டிருந்தனர்.
1930களின் கடைசியில், பாலஸ்தீனத்தை நாடுகளின் கழகத்தின்
(League of Nations) கட்டளை முறையில் ஆண்டு
வந்த பிரிட்டிஷார், தங்களுடைய முந்தைய, தெளிவற்ற ஆதரவான "பாலஸ்தீனத்தில் யூதருக்கான தாயகத்திற்கு" ஆதரவு
தந்திருந்த நிலையை மாற்றிக்கொண்டனர். மெனாச்செம் பெகின், ஒரு தீவிர வலதுசாரிக் குழுவான பெடர் (Betar)
இன் முன்னணி உறுப்பினர், பாலஸ்தீனத்திலும் ஜோர்டானின் கிழக்குக் கரையிலும் ஒரு யூத அரசை உத்திரவாதப்படுத்த,
பிரிட்டிஷாருக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தேவை மற்றும் அது தவிர்க்க முடியாது என்று கருதினார்.
கிழக்கு ஐரோப்பாவில் யூதர்களுடைய நிலைமை மோசமாகப் போகத் தொடங்கியதை
அடுத்து, ஜேர்மனியருக்கு எதிராக வரவிருக்கும் போரில் அராபியரின் ஆதரவு பெறுவதற்காக பாலஸ்தீனத்தில் யூதர்கள்
குடியேறுதலைக் குறைக்க பிரிட்டன் முயற்சியெடுத்த அளவில், பெடர் இர்குனோடு இணைந்து -National
Military Organization என்ற திருத்தல்வாதிகளுடைய இராணுவப் பிரிவில் இணைந்தது. யூத நாடு
ஏற்படும் சாத்தியக்கூறு இல்லையென்று தெரிந்த அளவில் பிரிட்டனுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராட்டம் நடத்துவதுதான்
ஒரே வழியென்று அவர்கள் வாதிடத் தொடங்கினர்.
ஸ்டேர்ன் குழுவினர்
1939ல் பிரிட்டனுக்கும் ஜேர்மனிக்கும் இடையே போர் மூண்டபோது, முசோலினியின்
பால் பெருமதிப்புக் கொண்டிருந்த இத்தாலியில் கல்வி பயின்ற ஆவ்ரஹாம் ஸ்டேர்ன்
(Avraham Stern) என்ற இர்குன் தலைவர்களில் ஜேர்மனிக்கு
எதிராகப் போரிலுள்ள பிரிட்டிஷாருக்கு எந்த ஆதரவும் கொடுக்கக்கூடாது எனத் தெரிவித்துவிட்டார்.
பிரிட்டிஷ்காரர்கள்தான் முக்கிய விரோதிகள் என அவர் கருதினார். நாசிச - பாசிச அரசுகளுக்கும்,
மேலை ஜனநாயக நாடுகளுக்குமிடையே அதிக வேறுபாடு கிடையாதென்றும், கம்யூனிஸ்டுகளுக்கும் சமூக ஜனநாயகவாதிகளுக்குமிடையே
அதிக வேறுபாடு கிடையாது என்றும், ஹிட்லர், சேம்பர்லின் இடையேயும் அதிக வேறுபாடு கிடையாது என்றும், அல்லது
டாஹோ (Dachau) புஷன்வால்ட்
(Buchenwald) க்கும் இடையே வேறுபாடு கிடையாது
என்றும் கூறி, யூதர்களுக்கு பாலஸ்தீனத்தை மூடுவதில் அனைவரும் ஒன்றுதான் என்றார். பெரும்பாலான இர்குன்களை
தன்பால் ஈர்க்கத் தோல்வியடைந்த அளவில், திருத்தல்வாத இயக்கத்தோடு தன் உறவை முறித்துக்கொண்டு தன்னுடைய
பிரிவை ஸ்டேர்ன் குழு என்று அழைக்கலானார்.
பிரதான நீரோட்ட சியோனிஸ்டுகளும், திருத்தல்வாதிகளும் ஜேர்மனிக்கு எதிராக பிரிட்டிஷாரை
ஆதரித்த அளவில் மற்றும் பிரிட்டிஷ் இராணுவத்தில் சேர்ந்த அளவில், ஸ்டேர்ன் குழு யூதர்கள் மத்தியிலான கட்டாய இராணுவ
ஆளெடுப்பு முறையை எதிர்த்து, ஆயுதமேந்திய கொள்ளையடித்தல், கொலைகள், பயங்கரவாதத் தாக்குதல்கள் ஆகியவற்றை
பிரிட்டிஷார், அரேபியர் இருவர் மீதும் நடாத்த தலைப்பட்டனர். அது ஜோர்டானின் அக்கரைப் பகுதிகள் உட்பட
விவிலிய பாலஸ்தீனம் முழுவதும் அடங்கிய யூத நிலப்பகுதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பிரிட்டிஷாரை அச்சுறுத்தும் வகையில்
பயங்கரவாதத்தைக் கையாண்டது. பாலஸ்தீனத்தில் யூதர்கள் சிறுபான்மையினராக இருந்ததால் அத்தகைய முறையில் ஏற்படுத்தப்படும்
நாட்டில், யூதத் தன்மை உறுதிப்படுத்துவதற்கு அரபு மக்கட்தொகையைக் கட்டாயமாக வெளியேற்றுதல் அவசியமானதாகக்
கருதப்பட்டது.
பிரிட்டிஷாரின் எதிரிக்கு ஆதரவு கொடுக்கும் முயற்சியில், நாஜிக்களுடைய யூத எதிர்ப்பை
ஸ்டேர்ன் பொருட்படுத்தவில்லை. ஸ்டேர்ன் குழுவின் கொள்கைகளும் நடவடிக்கைகளும் பெரும்பாலான பாலஸ்தீனம் வாழ்
யூதர்களால் எதிர்க்கப்பட்டன மற்றும் கண்டனத்திற்குள்ளாயின.
பாலஸ்தீனத்திலிருந்து பிரிட்டிஷாரை விரட்ட முதலில் இத்தாலியரிடமும் பின்னர் ஜேர்மனியரிடமும்
உதவி கேட்ட ஸ்டேர்ன், புதிய யூத நாடு ஜேர்மனிய சார்பு நாடாக இருக்கும் என்றும் ஜெருசலம், ஒரு சில யூதப்
புனித இடங்களைத் தவிர, வாடிகானின் மாநிலமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். வேறுவிதமாகக் கூறினால் யூதர்
நாடு ஏற்படுத்தப்படுதலில் ஐரோப்பிய யூதர் நலன் முன்னுரிமை பெற்றது. இவருடைய குழு நாஜி ஆட்சிப் பிரதிநிதிகளுடன்
பேச்சுவார்த்தை நடத்தியது; ஆக்கிரமிப்பிற்குட்பட்ட ஐரோப்பாவிலிருந்து 40,000 யூதர்களைத் திரட்டிப் பாலஸ்தீனத்தின்
மீது போர் தொடுத்துப் பிரிட்டிஷாரைத் தோற்கடிக்கலாம் என்ற திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் ஜேர்மனியரோ அரேபியரைப்
பகைத்துக்கொள்ள விரும்பாததுடன், பகுதியின் எண்ணெய் வளத்தினைப் பெறுவதில் பிரிட்டனைவிட வாய்ப்புக்
கொண்டிருந்ததை இழக்க விரும்பவில்லை, அக்கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.
பிரிட்டிஷார்- பெப்ரவரி 1942ல் ஸ்டேர்னைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று,
வருங்காலப் பிரதமர் யிட்சாக் ஷெமிர் உள்பட அவருடைய உடனடி உதவியாளர் குழுவை சிறையில் தள்ளியது.
லெஹி
போர் முடிவை நெருங்கிய அளவில், ஸ்டேர்னின் தொண்டர்கள், சிறையிலிருந்து வெளியே
வந்த ஷெமிர் உட்பட, லேகி என்ற பெயரில், "18 தேசியக் கொள்கைகள் நாட்டின் புத்துயிர்ப்பிற்காக" என்பது
உட்பட, அதே நோக்கங்களுக்காக மீளவும் குழுச்சேர்ந்தனர். அது நைலிலிருந்து யூப்ரடிஸ் வரையிலான யூத நாடு
தேவை என்றும் பிரகடனப்படுத்தியது. பிரிட்டிஷாருக்கு எதிராக IRA-ன்
போராட்டத்தில் அது பின்பற்றிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாயினர். ஷெமிர் தன்னுடைய பெயரைக்கூட மைக்கல்
கொலின்ஸ் (Michael Collins) என்ற யுத்தப் பெயர்
வேண்டும் என்பதற்காக மைக்கேல் என்று அழைத்துக்கொண்டார். பிரிட்டனின் அப்போதைய விரோதியான சோவியத்
யூனியனின் ஆதரவிற்காக, நாசிச - பாசிசக் கூட்டணியின் தொடர்பு அப்பொழுது சங்கடம் மிகுந்ததாக இருந்ததால் கைவிடப்பட்டது;
சிலர் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய கைப்பாவை அரசுகளை எதிர்க்கும் அரபு தேசிய இயக்கங்களுடன் தொடர்புகொள்வது
உகந்தது என்றும் வாதிட்டனர்.
தொழிற்கட்சி சியோனிஸ்டுகளையும் முக்கிய திருத்தல்வாத இயக்கத்தையையும் அது பிரிட்டிஷ்
தயவைப் பேச்சுவார்த்தைகள் மூலம் நாடுகிறது என்பதற்காக லெஹி கண்டித்தது. லெகிகளைப் பொறுத்தவரையில், பிரிட்டிஷார்
கெஸ்டோபோக்கள் (நாஜி ஜேர்மனின் இரகசிய பொலிஸ் Gestapo)
மற்றும் தொழிற்கட்சி சியோனிஸ்டுகள் ஐரோப்பாவின் விச்சி (Vichy)
போன்றவர்கள் என்றும், லெகிதான் எதிர்ப்பாளர்கள் என்ற கருத்தும் நிலவியது. பயங்கரவாதத்தின் மூலம் தேசிய விடுதலை
அடையப்பட முடியுமா என்ற கேள்விக்கு லெகியின் பதில்: ``விடை முடியாது என்பதே." கேள்வி பயங்கரவாத நடவடிக்கைகள்
புரட்சிக்கும் விடுதலைக்கும் பயன் தருமா என்றிருந்தால் விடை ஆமாம் என்பதாகும்.``
லெகியின் மிக இழிவான நடவடிக்கை 1944-ல் எகிப்தில் பிரிட்டிஷ் தளபதியாக இருந்த
மோய்னே பிரபுவைக் கொன்றது ஆகும்.
ஷிண்ட்லர் (Shindler),
லண்டன் பல்கலைக்கழகத்தில் Oriental and African
Studies ல் ஆராய்ச்சியாளராக உள்ளவர், "The
Land Beyond Promise: Israel, Likud and the Zionist Dream" என்ற நூலாசிரியர்,
லெகி, IRA உடைய வழிவகைகளை அப்படியே பின்பற்றியது
எனக் கூறுகிறார். செப்டம்பர் 1942லிருந்து ஜூலை 1946க்குள் ஷெமிர் கைது செய்யப்பட்டு எரித்ரியாவிற்கு வெளியேற்றப்பட்ட
வரை, பாலஸ்தீனத்தில் பிரிட்டிஷ் உயர் ஆணையாளர் மீது ஏழு கொலை முயற்சிகள் நடைபெற்றதாகவும், பிரிட்டிஷ் வெளியுறவு
செயலர் ஏர்நெஸ்ட் பெவின், பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரிகள் உட்பட, மேலும் பலவற்றிற்கு திட்டங்கள் இருந்ததாகவும்
தெரியவந்துள்ளது. ஷெமிர்தான் மோய்ன் பிரபுவின் படுகொலையைத் திட்டமிட்டது. லெகி, பிரிட்டிஷ் உளவுத்துறையைச்
சார்ந்த, அல்லது சார்ந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட 14 யூதர்கள் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டது. தேவைப்பட்டால்
தன்னுடைய இனத்தைச் சார்ந்தவர்களையும் கொல்வதற்கு இது தயங்கியதில்லை.
சியோனிச தீவிரவாத அமைப்புக்களிலேயே லெஹிதான் மிகச் சிறியது என்பதைப்
பார்க்கும்போதும், ஸ்டேர்ன்/லெஹி குழு 1940-48 க்கிடையே நிகழ்ந்த அரசியல் கொலைகளில் 71 சதவிகிதத்திற்கும்
மேலானவற்றை நடத்தியுள்ளது என்பது உண்மை. இந்தக் கொலைகளில் கிட்டத்தட்ட பாதிக்குமேல் சக யூதர்கள் ஆவர்.
சியோனிச அரசு வந்த பின்னரும் தன்னுடைய கொலைகாரச் செயல்களை லெஹி தொடர்ந்தது.
Hazit Ha' Moledet, தந்தை நாட்டு முன்னணி என்ற
ஒரு லேகிப் பிளவுப் பிரிவு பின்னால் மொலெடெட் கட்சியென அமைக்கப்பட்டது,
Count Folke Bernadotte என்ற ஐ.நா. தூதர்
ஒருவரை இஸ்ரேலியருக்கும் பாலஸ்தீனியருக்கும் இடையில் அமைதி உடன்படிக்கை செய்துகொள்ள முயற்சித்ததற்காக
படுகொலை செய்தது.
தொடரும்.........
See Also :
தீவிரவாதமும் இஸ்ரேலின் தோற்றமும் - பகுதி 2
Top of page
|