:
வட அமெரிக்கா:
ஐக்கிய அமெரிக்கா
Friedman: We did it "because we could"
New York Times covers up for
lies on Iraq war
ப்ரீட்மன்: "நம்மால் முடிந்தது; எனவே அதைச் செய்தோம்"
நியூயோர்க் டைம்ஸ் ஈராக் போருக்கான பொய்களை மூடி மறைக்கிறது
By Bill Vann
6 June 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் உள்ளன என்று கூறியவை, ஈராக்கின் மீது போர்
தொடுத்து அதை ஆக்கிரமிப்பதற்கு நியாயப்படுத்தும் வகையில் கூறப்பட்ட அமெரிக்க பிரிட்டிஷ் பொய்யுரைகள் சர்வதேச
அளவில் அதிகரித்துவரும் ஏமாற்றுக்களின் முன்னே, நியூயோர்க் டைம்ஸின் வெளிநாட்டு உறவுகள் பற்றிய தலைமை கட்டுரையாளர்
தோமஸ் ப்ரீட்மன் (Thomas Friedman) தங்கள் வாசகரிடையேயான
பிளவில் குதித்து அவர்களுடைய பழைய 'தாராளவாத' பிரதிநிதிகள் உட்பட, புஷ்ஷும் பிளேயரும் பொய்யுரை கூறினாரா
என்பது கவனத்துக்குரியது அல்ல என்று உறுதியளிக்கிறார்.
அவருடைய ஜூன் 4ம் தேதி கட்டுரை அதனுடைய பழைய 'தாராளவாத' பிரதிநிதிகள்
உட்பட செய்தி ஊடகத்தின் அக்கறையற்ற போக்கிற்கு உதாரணமாக விளங்குவதோடு ஜனநாயக கொள்கைகள் தொடர்பான
அவர்களது வழங்கும் மதிப்பின்மைக்கான எடுத்துக்காட்டாக உள்ளது.
அவர் ''ஈராக்கிய பேரழிவு ஆயுதங்களைக் கண்டு பிடிக்காமல் தோல்வியடைந்தது பற்றிய
செய்தியின் உண்மைக் கதைபற்றி நாம் கவலைப்பட தேவையில்லை" எனவும், பேரழிவு ஆயுதங்கள் தொடர்பான கேள்வி
"போருக்கு முன்பு தவறாக எழுப்பப்பட்ட பிரச்சினை, இப்பொழுதும் தவறாக எழுப்பப்படும் பிரச்சனை" என அறிவித்துள்ளார்.
New York Times இன்
கட்டுரையாளர் அமெரிக்க ஐனாதிபதி போரைத் ஆரம்பித்தற்குத் தவறான காரணங்கள் கூறியதைப்பற்றி அதிர்ச்சியடைய
தேவையில்லை எனக் கூறுகிறார். இது ஒரு சிறிய விதிமுறை பற்றியது. ஏனெனில் உண்மையில் இப் போரைத் ஆரம்பிக்க
நான்கு காரணங்கள் இருந்தன: அவையாவன உண்மையான காரணம் (The
real reason), சரியான காரணம் (The
rihgt reason), தார்மீக காரணம் (The
moral reason), கூறப்பட்ட காரணம் (The
stated reason) என்பன எனக் கூறுகின்றார்.
வினோதமான ஒரு அடிக்கடி எழுப்பப்பெற்ற காரணம் ப்ரீட்மனின் பட்டியலிலிருந்து விலக்கப்பட்டுள்ளது.
அது ஈராக்கின் எண்ணெய் வளம் ஆகும். இது ஒரு தெளிவான காரணம். உலகிலேயே இரண்டாவது அதிக அளவான ஈராக்கிய
எண்ணைய் வளந்தான் போருக்குப் போவதற்கு முடிவெடுக்கும் காரணமாக இருந்தது என்பதை போரைத் திட்டமிட்டு
நடத்திய உயரதிகார வட்டங்களிலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட பின்னர் கூட இது கூறப்படாமல் விடுபட்டிருக்கின்றது.
கடைசியில் பேரழிவு ஆயுதங்கள் கண்டறியப்படாத ஈராக்கின் மீது ஏன் வாஷிங்டன்
போர்தொடுத்தது என்பதை விளக்கும்போதும், வெளிப்படையாக அணுவாயுத உற்பத்தியைப் பற்றிப் பேசி வருகிறது வட
கொரியாவில் இராஜதந்திர முயற்சிகளைக் கைக்கொள்ளும்போதும், அமெரிக்க பாதுகாப்புத் துணை அமைச்சர் பெளல்
வொல்போவிற்ஸ் (Paul Wolfowitz)
சிங்கப்பூரில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற பாதுகாப்பு உச்சி மாநாட்டில்
பேசுகையில்: "வட கொரிய, ஈராக் இவற்றிடையே உள்ள முக்கியமான பெரிய வித்தியாசம் என்னவென்றால்
பொருளாதார அளவில் ஈராக்கைப் பொறுத்தவரையில் எங்களுக்கு வேறு வழி இல்லை; அந்த நாடு எண்ணெய் கடலில்
மிதக்கிறது." என்றார்.
Vanity Fair க்கு முன்னால்
கொடுத்த பேட்டியின்படி, ஈராக்கியரிடம் இரசாயன, உயிரியல் ஆயுதங்கள் இருந்தன என்ற குற்றச்சாட்டு போலிக்
காரணம் என்பதைக் குறிப்பாக ஒத்துக்கொண்டிருக்கிறார். "அமெரிக்க அரசாங்க அதிகாரிகளுடன் உள்ள பல காரணங்களினால்,
எல்லாருக்கும் உடன்பாடாயிருந்த ஒரு காரணத்தை, அதாவது பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கிடம் உள்ளன என்பதை ஏற்றுக்கொண்டோம்"
என்றார் பென்டகனின் இரண்டாம் உயர் அதிகாரி.
ப்ரீட்மனின் இதைப்பற்றிய குறிப்பு நீக்கம் வேடிக்கையானதும் பெரும் கெடுதலை ஏற்படுத்தக்
கூடியதுமாகும். ஏனெனில் அவரே ஜனவரி 5ம் தேதி நியூயோர்க் டைம்ஸில் ஒரு கட்டுரையில் "எண்ணைக்காகப்
போரா" என்ற தலைப்பில் எழுதியிருந்தார். இதில் ஈராக்கிய எண்ணெய் வளத்திற்காகப் போர் தொடுப்பதில் 'எந்த
பிரச்சனையும் இல்லை' என்று அறிவித்திருந்தார்.
இவருடைய சமீபத்திய கட்டுரையில் ப்ரீட்மன் எழுதுகிறார்: "இதுவரை கூறப்படாத
போரின் உண்மையான காரணம் என்னவென்றால் செப்டம்பர் 11 இற்குப் பிறகு அமெரிக்கா அரேபிய முஸ்லிம் உலகத்தில்
யாரையாவது கட்டாயமாகத் தாக்க வேண்டும். ஆப்கானிஸ்தானை நொருக்கியது போதவில்லை. வாஷிங்டன் எந்த அரேபிய
நாட்டையும் தேர்ந்து எடுத்திருக்கலாம். சவுதி அரேபியாவோ, சிரியாவோ தகர்க்கப்பட்டிருந்தால் மிக நன்றாக
இருந்திருக்கும். ஆனால் நாம் சதாம் ஹூசைனைத் தேர்ந்தெடுக்க ஓர் சாதாரண காரணம் இருந்தது: அது நம்மால்
எளிதில் இயலும்..." என எழுதியுள்ளார்.
தன்னுடைய கிராதக நோக்கத்தைப்பற்றி ப்ரீட்மன் சிறிதும் வெட்கப்படவில்லை. ஏன் ஒரு
வயதான கிழவியிடம் கொள்ளையடித்தாய் என்ற கேள்விக்கு ஒரு திருடன் விளக்கம் கொடுப்பது போல் ப்ரீட்மனின்
விடையும் ஒப்ப இருக்கிறது. ஈராக் ஒரு எதிர்க்கமுடியாத இலக்கு. ஏனெனில் 1991 பாரசீக வளைகுடா போரிலிருந்து,
பத்து ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் பொருளாதாரத் தடைக்கு உட்பட்டிருந்தது. பின்னர் 'பறக்கக்கூடாத பகுதிகளில்' (no-fly
zones) அமெரிக்க பிரிட்டிஷ் விமானங்கள் தொடர்ந்து குண்டு
வீச்சை நடத்தின. அதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் ஆயுத ஆய்வாளர்கள் நாட்டை விட்டு அது உண்மையிலேயே எந்தப்
பாதுகாப்புமற்ற நிலையில் விட்டுச்சென்று விட்டனர். கடைசியாக ப்ரீட்மன் விட்டுவிட விருப்பம் உடைய அந்தச் சிறிய
விஷயம்: ஈராக்கிய எண்ணெயாகும்.
ப்ரீட்மன் ஒரு மூர்க்கத்தனத்தையும், பலத்தை பிரயோகித்தல் போன்றவற்றில் விருப்பமுடையவர்.
20 ஆண்டுகளுக்கு முன்பு லெபனான் உள்நாட்டுப் போரில் அதைப்பற்றி எழுதுவதற்காக ஆரியல் ஷரோனின் இரத்த ஆறு
நிரம்பிய மூர்க்கத்தையும் பாசிச கொடூர அமைப்பையும் கண்டபோதுதான் அவர் இந்தத் தன்மையை வளர்த்துக்கொண்டார்.
செப்டம்பர் 11ல் இறந்தவர்களின் எண்ணிக்கையை அடைவதற்கு ஆப்கானிய மக்களின் உயிர்ப்பலி போதவில்லை என்றால்,
பல்லாயிரக்கணக்கானவர்களை ஏன் ஈராக்கில் படுகொலை செய்யக்கூடாது?
முழு அரேபிய இஸ்லாமிய நாடுகளையும் அச்சுறுத்த வேண்டும் என்று அவர் தெரிவிப்பதுடன்
அவற்றை வாஷிங்டன், இஸ்ரேல் இவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்
என்றும் கூறிகிறார்.
'உண்மையான காரணம்' பற்றி விளக்கிய பின்னர், அடுத்து 'சரியான' மற்றும் 'தார்மீகப்
பொறுப்பான' வற்றை விளக்குகிறார். அவருடைய கூற்றின்படி, 'சரியான காரணம்' என்னவென்றால், ''ஈராக்கியரோடு
பங்கு கொண்டு சதாம் ஹூசைனுக்குப்பின் ஒரு முற்போக்கான அரேபிய ஆட்சியை நிறுவுதல்'' ஆகும். ப்ரிட்மனுடைய
கருத்தின்படி அப்படிப்பட்ட ஆட்சி தீவிரவாதிகளால் அச்சுறுத்தப்படுபவர்களுக்கு ஒரு தடுப்பாக செயல்பட்டு, "தோல்வியடைந்த
மற்றும் தோல்வியடைந்துகொண்டிருக்கும் அரேபிய நாடுகள் உருவாக்கும் கோபமுற்ற, அவமரியாதைக்குடபடுத்தப்படும்
இளம் அரேபியருக்கும் முஸ்லிம்களுக்கும்" ஒரு முன்மாதிரியாக அமையும்.
''பங்குகொள்ளுதல்'' (Partnering)
என்ற சொல் இரண்டு நிறுவனங்கள் கூட்டாக இணைந்து ஒரு கூட்டு
நிறுவனத்தை உருவாக்குவதை குறிப்பது. இந்த இடத்தில் இது வினோதமாகப் பயன்படுத்தப்படும் சொல்லாகும். சரியாக
பயன்படுத்தப்பட வேண்டிய சொல் கொள்ளையடித்தல் (Plunder)
ஆகும். ஹிட்லரின் ஜேர்மனி போலந்து மக்களுடன் 'பங்கு போட்டுக்கொண்டு' கிழக்கு ஐரோப்பாவில் தனது உயிர்வாழ்விடத்தை
(Lebensraum)
ஏற்படுத்தியது என்று சொல்வது எப்படி எளிதோ, அப்படித்தான் இருக்கிறது ஈராக்கோடு
'பங்குபோடல்' என்று சொல்வதும்.
அரேபிய 'தோல்வியுற்ற நாடுகளுக்கு' 'முன்மாதிரியாக' விளங்கவுள்ள ப்ரீட்மனின்
'முன்னேற்றமான அரேபிய ஆட்சி' யின் சித்திரவளைவுகள் இப்பொழுதே தோன்ற ஆரம்பித்துவிட்டன. இதன் முக்கிய அடித்தளம்
எண்ணெய் கிணறுகளில் தொடங்கி ஈராக்கிய பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்கும் பெருந்திட்டம்தான். இந்தத் திட்டங்கள்
பாக்தாதில் அமெரிக்க ஆளுனராக செயல்படும் L. Paul
Bremer இனால்,
ஈராக்கிப் பொதுத்துறையிலிருந்த 5 இலட்சம் தொழிலாளர்களுக்கு மேல் வேலைநீக்கம் என்ற அறிவிப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் 'சுதந்திர சந்தை' பொருளாதார மாதிரி அமைப்பு சுமத்தப்படும் என்பதை
வாஷிங்டன் தெளிவுபடுத்தி விட்டது. இந்த 'மாதிரி அமைப்பு' அந்நாட்டு மக்களின் விருப்பத்தை கவனத்திற்கொள்ளாது
இலத்தீன் அமெரிக்காவிலிருந்து ஆபிரிக்கா வரையிலான ''தோல்வியடைந்த'' ஒருதொடர் நாடுகளை
உருவாக்கியுள்ளது. இந்த மாதிரி அமைப்பு அங்கு பெருமளவு வேலையின்மையையும், நம்பிக்கையற்ற வறுமை நிலையையும்
நிரந்தரமாக இருக்கும் என்று உத்தரவாதம் அளிக்கும். அரசியல்ரீதியாக புதிய ஆட்சி அமெரிக்க இராணுவயமாக்கப்பட்ட
கைப்பாவையாக விளங்கும்.
இப்படிப்பட்ட நாடுதான் நம்பிக்கையை, 'கோபமுற்ற, அவமரியாதைக்குட்படுத்தப்படும்
இளம் அரேபியருக்கு' நம்பிக்கையை ஊட்டும் என்ற எண்ணம், ப்ரீட்மனுடைய திமிர்த்தன, இரத்தவெறிப் போக்கிலிருந்து
உருவாகும் வியத்தகு அறியாமைக்கான ஒரு அளவீடாகும்.
இறுதியாக போருக்கான 'தார்மீகக் காரணம்', ஈராக்கிய சதாம் ஹூசைனின் ஆட்சி
தன் மக்களையே நசுக்கியது என்ற காரணமாகும். பாதிஸ்டுகள் (Baathists)
அதிகாரத்திற்கு வருவதில் CIA
உதவி செய்தது என்பதையும் அவர்களின் முதல் பலியான சோஷலிஸ்டுகளினதும், தேசியவாதிகளினதும் பட்டியல்
CIA ஆல் கொடுக்கப்பட்டதும்
மறக்கப்பட்ட விஷயங்கள் போலும்.
டைம்ஸின் கட்டுரையாளர், "போர் முடிந்து பெரும் கல்லறைகளையும், சதாம் ஹூசைனின்
இனப்படுகொலையின் அளவையும் பார்த்த பின்னர் புஷ்ஷிற்கு போரைத் ஆரம்பிக்க பேரழிவு ஆயுதங்கள் காரணம் தேவையில்லை
என்பதே என் கருத்து" என்று கூறுகிறார்.
ஈராக்கில் கண்டுபிடிக்கப்பட்ட பெருமளவு மனிதச் சடலங்களின் எஞ்சிய பகுதிகளே போரைத்
ஆரம்பிக்க தார்மீகமான காரணமாக எவர் கேட்டாலும் தக்க விடையாக வழங்க போதும் என்கிறார் ப்ரிட்மன்.
இவற்றில் கண்டெடுக்கப்பட்ட பெரும்பாலான சடலங்கள் அமெரிக்க அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன் கொன்றுகுவிக்கப்பட்ட
முதல் பாரசீக வளைகுடாப் போரின் போது எதிர்த்த ஷியிட்டுக்களுடையவை (Shiites)
என்பது ப்ரீட்மன் உடைய தார்மீகக் கணக்குகளில் அகப்படவில்லை.
மேலும் கொன்டுராஸ், குவாதமாலா, எல்சல்வடோர், சிலி, ஆர்ஜென்டினா போன்ற
நாடுகளில் CIA
யாலும் பென்டகனாலும் உருவாக்கப்பட்ட சர்வாதிகார நாடுகள் என்பது ப்ரீட்மனின் கவனத்திற்கு வரவில்லை போலும்.
அங்கு அவர் மண்டையோடுகளையும் எலும்புக்கூடுகளையும் பார்த்திருந்தால் அது அமெரிக்க ஏகாதிபத்திய தலையீடுகளினால்
ஏற்பட்ட தார்மீகமற்ற தன்மையும் அறநெறி பிறழ்ந்த நிலையையும் அவருக்கு எடுத்து உரைத்திருக்குமோ?
பேரழிவிற்குரிய ஆயுதங்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் அவருக்கு அது ஒரு
பொருட்டல்ல என்று ப்ரீட்மன் பெருமையாக அறிவித்துக்கொள்கிறார், யுத்தத்தின் பின்னர் பாரிய புதைகுழிகளில்
கண்டுபிடிக்கப்பட்ட 'இனப்படுகொலைப்பேய்' அவரைப் பொறுத்தவரையில் போரை நியாயப்படுத்தப் போதுமானவையாகும்.
"ஆனால் நான் என்னுடைய சொந்தப் போரையே ஈராக்கில் கொண்டிருக்கிறேன் என்பதைக் கூறித்தான் ஆக வேண்டும்"
என்றும் "திரு. புஷ் இந்நாட்டைத் தனது போருக்கு இட்டுச் சென்றார்" என்றும் தன்னுடைய வாசகர்களுக்குத்
தெரிவிக்கிறார்.
ப்ரீட்மன் 'தன்னுடைய போரை' ஈராக்கின் மீது மட்டுமல்ல தன்னுடைய தலைக்குள்ளும்
அவருடைய வேலை போரிடுவதில்லை, பொய் சொல்வது ஆகும். பென்டகனின் போர்த்திட்டக்காரர்களுடன் பகலுணவும்
பேச்சுக்களும் நடத்திய பிறகு ஒரு சட்டவிரோதப்போரை நியாயப்படுத்தும் எழுத்துவன்மைப் புளுகுகளின் தொகுப்பை
அவர் செதுக்கியுள்ளார். இவருடைய சிறப்புத்தன்மை ஒரு இழிவான கொள்ளைக்கார நிகழ்ச்சியை 'முன்னேற்றமானது'
'தார்மீகமானது' என்று மூடிமறைத்தலாகும்.
தன்னுடைய வாசகர்களுக்கு ப்ரீட்மன்: "புஷ் குழு பொது தொடர்பு காரணங்களுக்காகவே
தவிர 'உண்மைக்காரணத்தை' கண்டுபிடிக்கவல்ல எனவும் மற்றும் அதன் கருத்தில் 'சரியான காரணம்' 'தார்மீக
உந்துதல்கள்' எனப்படும் காரணங்கள் பற்றி குறிப்பிடத்தேவையில்லை'' எனவும் கூறுகின்றார்.
மத்திய கிழக்கு நாட்டைத் தாக்குவதற்கு பொதுமக்கள் ஆதரவு இல்லை என்பதை போர்
ஆரம்பமாகுமுன் நிகழ்ந்த முஸ்தீபுகளின் போது ப்ரீட்மன் ஒத்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடப்பட வேண்டும்.
பெப்பிரவரி 5ம் தேதி வெளிவந்த கட்டுரை ஒன்றில், ''புஷ் நிர்வாகம் கூறும் என்னுள் ஒரு தாக்கத்தை உருவாக்கிய
ஈராக்கில் அமெரிக்க செய்ய உள்ள அடாவடிக்காரணங்களுக்கும், இந்த திமிர்த்திட்டத்திற்கு நம்பமுடியாத அளவு மிகக்
குறைந்த மக்கள் ஆதரவுதான் இன்றைய அமெரிக்காவில் உள்ளது என்பதைக் காணும்போது இதற்கிடையிலுள்ள
நம்பமுடியாத அளவிலான முரண்பாடுகளால் நான் தாக்கப்பட்டேன்" என குறிப்பிட்டுள்ளார்.
போர் தேவையென்ற கொள்கையையுடைய இவர் நாடு முழுவதும் உள்ள
பொதுக்கருத்தை, அதாவது "அமெரிக்காவில் பெரும்பான்மையானவர் ஈராக்கில் போர் வேண்டும் என்ற கருத்துடையதாக
தான் சந்தித்து பேசிய ஒருவராவது உணரவில்லை'' என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
இதே போன்ற சங்கட நிலையைச் சந்தித்த நிர்வாகம் தான் பொதுமக்களிடையே போலியான
பிரச்சாரமான 'பேரழிவு ஆயுதங்கள்' என்பதைக் குண்டுவீச்சு போல் நடத்தியது. அமெரிக்க மக்களைப் அச்சுறுத்தி
போரை ஆதரிக்க செய்யும் முயற்சியில் சதாம் ஹூசேனுடைய ஆட்சியில் மிகப்பெரிய அளவு இரசாயன, உயிரியல்,
நரம்பு விஷ ஆயுதங்களும் அணுகுண்டுகளும் கூட உள்ளன என்று பலமுறை வற்புறுத்தப்பட்டதுடன், ஈராக் இவற்றையெல்லாம்
உலக வர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நடத்திய அதே தீவிரவாதிகளிடம் கொடுக்கப்போகிறது என்றும் கூறப்பட்டது.
நியூயோர்க் டைம்ஸின் முக்கிய வெளிநாட்டு உறவு பற்றி எழுதும் கட்டுரையாளருக்குக் கூட
இது ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை என்பது செய்தி ஊடகத்தின் சீரழிந்த நிலைக்குச் சான்றாகவும், ஆளும்
தட்டினரிடையே ஜனநாயக உரிமைகளைப் பற்றிய அடித்தள ஆதரவு மறைந்து விட்ட நிலையையும், அதனுடைய
தாராளவாதப் பிரிவு எனக் கூறுவோரிடம் கூட அது இல்லை என்பது புலனாகிறது.
Times, Washington Post மற்றைய
ஏடுகள் ரிச்சார்ட் நிக்சனின் இரகசியமாக கம்போடியாவின் மீதான தாக்குதல் போது எழுப்பிய கூக்குரல்களையும்,
ஆரவாரத்தையும் மற்றும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வாட்டர் கேட் ஊழல்களை அவருடைய ஆட்சி 'இரண்டாந்தர
திருட்டு' என்று வர்ணித்தபோது கூறிய பொய்களைப் பற்றிய கூச்சல்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
இப்பொழுது ஓர் அமெரிக்க நிர்வாகம் காரணமின்றி அமெரிக்கர்களுக்கு ஆபத்து
விளைவிக்காத நாட்டின் மீது பொய்களையும் கற்பனைகளையும் கட்டிய காரணங்களைக் காட்டி போர் தொடுத்தது
பற்றி - அடொல்ப் ஹிட்லர் காலத்தில் கூட இப்படிப்பட்டவை நடந்தில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்தவுடனே நிர்வாகம்
'தார்மீக' பொய்சாட்டுகளை காரணம் காட்டுகிறது.
இந்த அனைத்தையும் மூடிமறைத்து விடலாம் என்ற கண்மூடித்தனமான எண்ணம், அமெரிக்க
மக்களுக்கு அரசாங்கம் எதற்காக தம் படையினரை இன்னொரு நாட்டிற்குள் கொல்லவும் இறக்கவும் அனுப்புகிறது எனத்தெரிந்து
கொள்ளும் உரிமை இல்லை என்றும், போருக்குப் போகலாமா வேண்டாமா என்ற முடிவைப்பற்றி தீர்மானத்தில் தமது
ஆளுமையை செலுத்தவும் எந்த உரிமையும் இல்லையென்பதையும் உள்ளடக்கி நிற்கும் கருத்தைக் கொண்டுள்ளது.
இது ஒரு பதிய சிந்தனை அல்ல. ஹிட்லரின் மூன்றாவது குடியரசில் இரண்டாம் தர தலைவரான
ஹெர்மன் கோரிங் (Herman Goering)
இதே கருத்தை நூரென்பேர்க் சிறையில் தனது அறையில் ஒரு பேட்டியில் அழகுறக்
கூறினார்: "ரஷ்யாவிலோ, இங்கிலாந்திலோ அல்லது பார்க்கப் போனால் ஜேர்மனியிலோ கூட, ஆம், இயற்கையாகவே
சாதாரண மக்களுக்குப் போரில் விருப்பம் கிடையாது. அது எல்லோரும் புரிந்து கொண்டது தான். ஆனால் எப்படியும்
நாட்டின் கொள்கையை வகுக்கும் தலைவர்கள்தான் மக்களைக் கட்டியிழுத்துத் தங்களோடு கொண்டு செல்கின்றனர். இது
ஜனநாயகமாயினும் சரி, பாசிச சர்வாதிகாரமானாலும் சரி.... நீங்கள் செய்யவேண்டியது என்னவெனில் அவர்கள்
தாக்கப்பட உள்ளனர் என்றும், அமைதியை விரும்புபவர்கள் தேசப்பற்று குறைந்தவர்கள் மற்றும் நாட்டை
ஆபத்துக்குட்படுத்துபவர்கள் என்று அவர்களிடத்தில் கூற வேண்டும். எல்லா நாட்டிலும் இதே வழிவகைதான் கையாளப்படுகிறது''.
Top of page
|