WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா:
ஐக்கிய அமெரிக்கா
The political economy of American militarism in the 21st century
21ம் நூற்றாண்டில் அமெரிக்க இராணுவவாதத்தின் அரசியல் பொருளாதாரம்
By Nick Beams
1 November 2002
Use this version to print
|
Send this link by email
| Email the author
சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளரும், உலக சோசலிச வலைத் தள
ஆசிரியர் குழு உறுப்பினருமான நிக் பீம்ஸ் கடந்த இரண்டு வாரங்களில் சிட்னியிலும், மெல்போர்னிலும்
பொதுக் கூட்டங்களில் பின்வரும் உரையை வழங்கினார்.
ஈராக்கிற்கு எதிராக போர் தொடுப்பதில் உச்சகட்ட ஆயத்த நடவடிக்கைகளில் புஷ்
நிர்வாகம் தற்போது ஈடுபட்டிருக்கிறது. அடுத்து சில வாரங்களுக்குள் தீவிரமான விமானப்படை குண்டு வீச்சு தாக்குதல்கள்
நடைபெறக்கூடும். அடுத்த ஆண்டு முதல் பகுதியில் துருப்புகள் படையெடுத்துச் செல்லும். அந்த மண்டலத்திற்குள் அதிக
அளவிற்கு படைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. தலைமை மற்றும் கட்டுப்பாடு நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஈராக்கின் மிகக்குறைந்த பாதுகாப்புக்களையும் மற்றும் ராடாரையும் தாக்கி தகர்ப்பதற்காக பிரிட்டன் மற்றும் அமெரிக்க
போர் படை விமான குண்டு வீச்சுக்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஐ.நா.விற்குள் ராஜ்ஜியத்துறையில் ஓரளவிற்கு பரபரப்பு காணப்படுகிறது. ஆனால் இராணுவத்தை
பொறுத்தவரை தாக்குதல் நடைபெற்றே தீரும், அடுத்த ஆண்டு பெப்ரவரி இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்திற்கு
பிந்தாத ஒரு தேதியில் தாக்குதல் நடக்கும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
போருக்கான ஆயத்தங்களின் இறுதி கட்டத்தில், போரை தொடக்குவதற்கான உடனடி
சாக்குபோக்கை அல்லது காரணத்தை ஏற்படுத்துதல் சம்பந்தப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்கா, ஐ.நா.
பாதுகாப்பு சபையில் ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்கிறது. அதன் நோக்கம் ஆயுத ஆய்வாளர்கள் தொடர்ந்து
சோதனைகளை நடத்த அனுமதிப்பது அல்ல. ஆனால், அதற்கு நேர்மாறாக, நடவடிக்கை எடுப்பது. அது
என்னவென்றால் முழு ஏற்பாட்டையும் சீர்குலைத்து அதன் மூலம் இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்துவது.
ஐ.நா.வில் நடைபெற்றுக்கொண்டுள்ள சூழ்ச்சி முயற்சிகள் முழு நடைமுறைகளின்
பாசாங்கை அம்பலப்படுத்துகின்றன. சென்ற வாரம் அமெரிக்கா தனது கடைசி நகல் தீர்மானம் என்று நிலைநாட்டிய
வாசகத்தை பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினர்களுக்கு சுற்றுக்கு விட்டது. அத்துடன், அதிக அவகாசம் இல்லை,
காலம் வெகுவேகமாக நெருங்கிக்கொண்டிருக்கிறது என்ற எச்சரிக்கையையும் தந்தது. ஐ.நா. தீர்மானங்களை ஏற்று
செயல்படுத்தவில்லை என்பதற்காக, ஈராக் மீது தாக்குதல நடாத்தப்படவேண்டும். ஆனால், தனது கோரிக்கைகளுக்கு
ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள தீர்மானத்தை பாதுகாப்பு கவுன்சில் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் எப்படியும் அமெரிக்கா
இராணுவ நடவடிக்கை எடுக்கும் என்று அமெரிக்கா மிக வலியுறுத்திக் கூறியது. மிகுந்த ஏழ்மை நிலையில் உள்ள ஒரு
சிறிய நாட்டிற்கு ஒரு விதி மற்றும் உலகின் மிகப்பெரிய வல்லரசுக்கு மற்றொரு விதி.
இந்த மாத தொடக்கத்தில் ஐ.நா. ஆய்வாளர்களை திரும்ப அனுமதிக்கப்போவதாக
ஈராக் அறிவித்த உடன் அமெரிக்க அரசுத்துறை பேச்சாளர், அந்த உடன்பாட்டை, செயல்படாமல் தடுத்து நிறுத்துவதற்கு
தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யப்போவதாக -"குறுக்கே" நிற்கப்போவதாக வாஷிங்டன் அறிவித்தது. அமெரிக்காவின்
கொள்கை ஆயுத சோதனைகள் அல்ல, அல்லது ஆயுதக் குறைப்பு அல்ல, அல்லது கட்டுப்படுத்துவது அல்ல. "ஆட்சி
மாற்றம்"தான் கொள்கை -- சதாம் ஹூசேனை பதவியிலிருந்து அகற்றவேண்டும். பத்து நாட்களுக்கு முன்னர்,
நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் புஷ் நிர்வாகத்திலிருந்து வெளியான இரகசிய தகவல்களின் அடிப்படையில், திட்டவட்டமான
விபரங்கள் வெளியிடப்பட்டிருந்தன. அந்த நாட்டைக் கைப்பற்றும் நோக்கம் தெளிவாக்கப்பட்டிருந்தது மற்றும் அதன்
பொறுப்பை ஒரு பொம்மை அரசாங்கத்திடம் ஒப்படைக்கு முன்னர், ஜப்பானில் ஜெனரல் மெக்கார்தர் ஆறரை ஆண்டுகள்
ஆட்சி செய்ததைப்போல், ஈராக்கில் இராணுவ பிரதிநிதி ஆட்சியை - நிறுவுவது.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி, சதாம் ஹூசேன் ஆட்சியால் முனவைக்கப்பட்டுள்ள
பெரிய ஆபத்துக்கள் குறித்து தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்துக்கொண்டிருந்தார். அக்டோபர்-5-ந் தேதி அமெரிக்க
ஜனாதிபதி உரையாற்றும்போது, சதாம் ஹூசேன், தனது சொந்த மக்களையே கொன்று குவிக்க விரும்பும் அளவுக்கு,
வெறுப்பு உணர்வுமிக்க மனிதர், "அமெரிக்க மக்களையே கொன்று குவிக்கின்ற அளவிற்கு வெறுப்பு கொண்டவர்" என
குறிப்பட்டார். அக்டோபர்-7-ந்தேதி உரையாற்றும்போது, ஹூசேன் அச்சுறுத்தலாக தோன்றியுள்ளார். "அந்த
அச்சுறுத்தல் அமெரிக்க மக்களுக்கு திடீர் என்று துன்பத்தையும், பயங்கரத்தையும், ஏற்படுத்திவிடக்கூடியது" என்று குறிப்பிட்டார்.
தனிப்பட்ட பயங்கரவாதிகளுக்கோ, அல்லது பயங்கரவாத குழுவிற்கோ இரசாயன அல்லது உயிரியியல் ஆயுதங்களை
எந்த நேரத்திலும் ஈராக் வழங்கக்கூடும்" என்று எச்சரித்தார்.
என்றாலும் CIA-மாறுபட்ட
ஒரு மதிப்பீட்டிற்கு வந்திருப்பதாக தோன்றுகிறது. சிஐஏ- இயக்குநர் ஜோர்ஜ் டெனட் அக்டோபர் 8-ந் தேதி ஒரு
கடிதம் எழுதியிருந்தார். பாக்தாத் சம்பிரதாய ஆயுதங்களைக் கொண்டோ, அல்லது இரசாயன மற்றும் உயிரியியல்
ஆயுதங்களைக் கொண்டோ அமெரிக்காவிற்கு எதிராக, பயங்கரவாத தாக்குதல் நடத்தவதற்கு நெருங்கி
வந்துகொண்டிருக்கிறது. மேலும், "அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது தாக்குதல் நடைபெறுவதை இனி தடுத்து
நிறுத்த முடியாது என்று சதாம் ஹூசேன் முடிவிற்கு வந்துவிடுவாரானால், பயங்கரவாத செயல்களை மேற்கொள்ளவும்
தயங்கமாட்டார். இதில் "மிகத் தீவிரமான நடவடிக்கையிலும் இறங்கக்கூடும். இஸ்லாமிய பயங்கரவாதிகளை, அமெரிக்கா
மீது, WMD (பேரழிவு ஆயுதங்களைக்) கொண்டு தாக்குதல்
நடத்துவதற்கு ஏவிவிட முடிவு செய்யக்கூடும். ஏனென்றால், அமெரிக்காவை பழிக்கு பழி வாங்குகின்ற கடைசி சந்தர்ப்பமாக
ஏராளமான அமெரிக்க மக்களை அவர் தாக்கக்கூடும்" என்று முகவாண்மை கண்டறிந்தது.
இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், புஷ் நிர்வாகத்தின் நடவடிக்கைகளின்
விளைவாக அமெரிக்க மக்களுக்கு மிகப்பெரும் ஆபத்து எழும் என்று சிஐஏ-முடிவு செய்திருக்கிறது. அக்டோபர்-2ந் தேதி
நடைபெற்ற இரகசிய விசாரணையில் சிஐஏ-பிரதிநிதியிடம், திட்டவட்டமாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது. தனக்கு அச்சுறுத்தல்கள்
வரக்கூடும் என சதாம் ஹூசேன் கருதாவிட்டால், பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்தும் நடவடிக்கையை அவர் எடுக்கக்கூடுமா,
என்று அந்த அதிகாரியிடம் கேட்கப்பட்டது. "எதிர்காலத்தில் அவர் அத்தகைய நடவடிக்கையை எடுப்பதற்கான வாய்ப்புக்கள்
இன்றைய, நிலவரத்தைக் கொண்டு பார்க்கும்போது மிகக்குறைவு" என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
இப்படி சிஐஏ-மதிப்பீடு செய்ததை தொடர்ந்து, லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்,
அக்டோபர்-11-ந் தேதி ஒரு செய்தி வெளியிட்டது. சதாம் ஹூசேனுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கான
முகாந்திரங்களை உருவாக்குகின்ற வகையில் சிஐஏ-ஆய்வாளர்கள் செயல்படவேண்டும் என்று, புஷ் நிர்வாக அதிகாரிகள்
அழுத்தம் கொடுத்துவருவதாக, அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டது.
சிட்னி மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் வெளியிட்டிருந்த, "ஈராக் பற்றிய தனது
கருத்துக்களுக்கு ஏற்ப உண்மைகள் பொருத்தப்படவேண்டும் என்று ரம்ஸ்பீல்ட் முயலுகிறார்" என்ற தலைப்பின் கீழான
கட்டுரையில் நிர்வாகம் செயல்படும் முறை கீழ்கண்டவாறு விளக்கப்பட்டிருக்கிறது: "போர் வெறியரான அமெரிக்கப்
பாதுகாப்புத்துறை அமைச்சர் டோனால் ரம்ஸ்பீல்ட் சிஐஏ-வை ஒதுக்கித்தள்ளிவிட்டு, ஈராக்கையும் மற்றும் அல் கொய்தாவையும்
தொடர்புபடுத்துகின்ற புலனாய்வு புள்ளி விபரங்களை தோண்டி, துருவி கண்டுபிடிப்பதற்காக ஒரு நிபுணர் குழுவை தயாரித்திருக்கிறார்.
அத்தகைய சான்று எதுவும் உள்ளதா என்பது குறித்து வெள்ளை மாளிகையுடன், சிஐஏ-தகராறில் இறங்கியிருக்கிறது. ஈராக்
அதிபர் சதாம் ஹூசேன் பயங்கரவாதிகளுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டு பணியாற்றி வருகிறார் மற்றும் ஐக்கிய
அமெரிக்க நாடுகளுக்கு ஒரு ஆபத்தான அச்சுறுத்தலை முன்வைக்கிறார் என்கின்ற தங்களது கருத்துக்கு பொருந்துகின்ற
நிகழ்வுகளை, நிர்பந்தப்படுத்தி தகவல்களை திரட்டுவதற்காக, ரம்ஸ்பீல்டாலும் அவரது துணை அமைச்சரான
உல்போவிச்சாலும் ஆன முயற்சியின் ஒரு பகுதிதான் அந்தக் குழு என்று புலனாய்வு அதிகாரிகள் கூறினர்.
பலகோடி டொலர்கள் சூறையாடல் மற்றும் மோசடிகளில் சம்மந்தப்பட்டுள்ள என்றோன்
(Enron) மற்றும் இதர கார்ப்பொரேஷன்களோடு புஷ்ஷிற்கும்
அவரது நிர்வாக உறுப்பினர்களுக்கும் இடையே நெருக்கமான உறவு நிலவுகின்ற நிலையை கருத்தில் கொண்டு பார்க்கையில்,
"என்றோன் வழிமுறைகளை" வர்த்தக செயற்களத்திலிருந்து அரசியலில் புகுத்துவதற்கு முயல்கிறார்கள் என்பதற்கு வியப்படைவதற்கு
எதுவும் இல்லை. என்றோன் மற்றும் இதர கம்பெனிகளை சூறையாடியவர்கள் பயன்படுத்திய கணக்கு வைக்கும் முறையை
"பாக்கிங் இன்" என்று சொல்லுகிறார்கள். கம்பெனியின் நிகர இருப்பு நிலை கணக்கில் புறநிலை உண்மைகளை ஒன்று
திரட்டிக் கொண்டுவந்து அறிவிப்பதற்குப் பதிலாக, சில புள்ளி விபரங்களை அவர்கள் தயாரித்து, அந்தப் புள்ளி விபரங்கள்
அடிப்படையில் என்ன முடிவுகள் ஏற்படவேண்டும் என்று கருதுகிறார்களோ, அந்த அடிப்படையில் கணக்குகளில் அவர்களே
சில "உண்மைகளை" கணக்கிட்டு, இருப்பு நிலை கணக்கை தாக்கல் செய்தார்கள். இது அப்பட்டமான பொய்
சொல்லும் முறை, இதே முறையை ஈராக்கிற்கு எதிரான போருக்கு ஆயத்தம் செய்வதற்காக தினசரி கடைப்பிடித்து
வருகிறார்கள்.
அக்டோபர்-7-ந் தேதி புஷ் உரையாற்றும்போது, ஈராக் அமெரிக்காவை தாக்குவதற்கு
வல்லமை படைத்த ஆளில்லா தானியங்கி விமானம் ஒன்றை தயாரித்திருப்பதாக குறிப்பிட்டார். சிஐஏ-கொடுத்துள்ள
தகவலின்படி அந்த மண்டலத்தில் இலக்குகளைச் சென்று தாக்கக்கூடிய ஒரு விமானத்தை ஈராக் "சோதனைகள்" செய்து
வருவதாகவும், ஆனால் அந்த விமானம் அட்லாண்டிக்கை தாண்டி அந்தப் பிராந்தியத்தின் இலக்குகளை அடையக் கூடிய
வல்லமை படைத்தது அல்ல என்றும் தெரிவித்தது.
சர்வதேச அணு சக்தி ஏஜென்சி
(International Atomic Energy Agency -IAEA) இன்னும் ஆறு மாதங்களில் ஈராக் அணு
ஆயுதத்தை தயாரிக்கும் நிலைக்கு வந்திருப்பதாக முடிவு செய்திருக்கிறது என்று புஷ் குறிப்பிட்டார். ஆனால்
IAEA-அத்தகைய அறிக்கை எதையும் வெளியிடவில்லை. உண்மையிலேயே
அந்த ஏஜென்சி 1998-ம் ஆண்டு வெளியிட்ட தனது கடைசி அறிக்கையில், ஈராக் அணு ஆயுதங்கள் எதையும் தயாரிக்கும்
வலிமை பெற்றிருப்பதாக கோடிட்டுக் காட்டவில்லை.
எண்ணெய் வளங்களுக்காக அமெரிக்காவின் முயற்சி
புஷ் ஆட்சியும், அதன் சர்வதேச ஆதரவாளர்களான பிளேயர் மற்றும் ஹோவர்ட் அரசாங்கங்களும்,
உருவாக்கியுள்ள பொய்கள் என்கின்ற பனிமூட்டத்தை ஊடுருவி வரலாற்று அடிப்படைகளை ஆராய்ந்தால், அமெரிக்காவின்
கொள்கை நலன்களோடு மோதுகின்ற வகையில் ஈராக் ஆட்சி செயல்படத் தொடங்கியதும் தான் அந்த ஆட்சி "உலக
சமாதானத்திற்கு" ஆபத்தானதாக ஆகிவிட்டது என்பது தெளிவாகத் தெரியும்.
1980-களில் சதாம் ஹூசேன் ஈரான்-ஈராக் போரில் குர்துகளுக்கும், மற்றும் ஈரானிய
போர் வீரர்களுக்கும் எதிராக பயன்படுத்தி வந்த இரசாயன மற்றும் உயிரியியல் ஆயுதங்கள் ஒரு பகுதி அமெரிக்காவினால்
வழங்கப்பட்டது மற்றும் அமெரிக்காவின் ஆதரவோடு பயன்படுத்தப்பட்டது. தற்போது நடைபெறவிருக்கின்ற ஈராக்
போரின் உண்மையான காரணம், சதாம் ஹூசேனால், அமெரிக்காவிற்கு அல்லது உலக பாதுகாப்பிற்கு ஏற்படுகின்ற
ஆபத்து அல்ல. எண்ணெய் வளம்தான் இந்தப் போருக்கான அடிப்படைக் காரணம். உலகிலேயே இரண்டாவது மிகப்பெரும்
எண்ணெய் வளம் ஈராக்கில் உள்ளது. அது உலகின் மொத்த எண்ணெய் சப்ளையில் 11 சதவீதம் ஆகும். இதை தனது
கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும் என்ற அடிப்படையில் தான் அமெரிக்கா இந்தப் போரில் இறங்கியிருக்கிறது.
உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு ஐந்து
மாதங்களுக்கு முன்னர் ஏப்ரல்-2001-ல், 21ம் நூற்றாண்டிற்கான கேந்திர எரிபொருள் கொள்கை சவால்கள்
என்ற தலைப்பிலான அறிக்கை வெளியிடப்பட்டது. அமெரிக்க எரிபொருள் சக்தித் துறை "நெருக்கடியான கட்டத்தில்"
இருப்பதாகவும், நெருக்கடி "எந்த நேரத்திலும் வெடிக்கலாம்" என்றும், இந்த நெருக்கடி, "அமெரிக்கா மற்றும்
உலகப் பொருளாதாரத்தில் மிக பிரம்மாண்டமான தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது" என்றும், "அமெரிக்காவின்
தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை, பல்வேறு அதிரடி வழிகளில் பாதிக்கப்படலாம்" என்றும் அந்த
அறிக்கை எச்சரிக்கை செய்திருந்தது. (Strategic Energy
Policy Challenges for the 21st Century, p. 4). ஈராக் தொடர்பாக இராணுவ,
எரிபொருள், பொருளாதார, மற்றும் அரசியல்/ராஜ்ஜியத்துறை மதிப்பீடுகள் மறு பரிசீலனை செய்யப்படவேண்டும்
என்று அந்த அறிக்கை கேட்டுக்கொண்டது.
முதலாவது புஷ் நிர்வாகத்தில் இடம்பெற்றிருந்த முன்னாள் அரசுத்துறை செயலாளரும்
2000-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜோர்ஜ். டபிள்யு.புஷ் அதிகாரத்தை எடுத்துக்கொள்வதில் பங்குவகித்த முக்கிய
தலைவர்களில் ஒருவருமான ஜேம்ஸ் ஏ.பேக்கர் இந்த அறிக்கைக்கு ஏற்பாடு செய்திருந்தார். கடந்த காலத்தில் அமெரிக்கா
"சில முக்கியமான மத்திய கிழக்கு எண்ணெய் ஏற்றுமதியாளர்களுடன் சிறப்பு உறவை ஏற்படுத்தியிருந்தது." அதன்படி
அந்த ஏற்றுமதியாளர்கள் எண்ணெய் அளிப்பையும், அவற்றின் விலைவாசி போக்கையும், "பூகோள பொருளாதார
வளர்ச்சியை குன்றச் செய்யாத அல்லது பணவீக்கத்தை தூண்டிவிடாத மட்டத்திற்கு", செயல்பட்டு வந்தார்கள். "இதை
வேறு வகையில் சொல்வதென்றால் மத்திய கிழக்கு எண்ணெய் உற்பத்தியாளர்கள் அமெரிக்காவின் கோரிக்கைக்கு ஏற்ப
தங்களது செயல்பாடுகளை அமைத்துக்கொண்டார்கள்." இவ்வாறு அந்த அறிக்கையில் விளக்கப்பட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில் தொடர்ந்து கூறப்பட்டிருப்பதாவது: "ஆனால், அண்மையில் நிலவரம்
மாறிவிட்டது, வளைகுடா நட்பு நாடுகளின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கை நலன்கள் அதிக அளவில் அமெரிக்காவின்
மூலோபாய கருதிப்பார்த்தல்களுக்கு மாறுபட்டவையாக காணப்படுகின்றன. குறிப்பாக, அரபு-இஸ்ரேல் கொந்தளிப்பை
குறிப்பிடலாம். பாதுகாப்பான சந்தை வேண்டும் என்பதற்காக, அரபு நாடுகள் தங்களது எண்ணெய் விலையை குறைத்துக்கொள்ள
விரும்பவில்லை. பெருகிவரும் சர்வதேச தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தித் திறனை பெருக்குகின்ற முறையில் உரிய காலத்தில்,
முதலீடுகள் செய்யப்படுவதில்லை என்பதற்கு சான்றுகள் கிடைத்திருக்கின்றன. அமெரிக்காவிற்கு எதிரான போக்கு
உருவாகிக்கொண்டிருப்பதால் வளைகுடா பிராந்திய தலைவர்கள் அமெரிக்காவுடன் எரிபொருள் துறையில் ஒத்துழைப்பதற்கான
வல்லமை பாதிக்கப்படும். இதன் விளைவாக எண்ணெய் சந்தையில் கடுமையான போக்கு அதிகரித்துவருகிறது. அமெரிக்காவில்
நெகிழ்ச்சி இல்லா சந்தை அதிகரிப்பு, மற்றும் பூகோள அளவில், திடீர் என்று எண்ணெய் சப்ளையில் சீர்குலைவு உருவாகலாம்;
இந்த வகையில் எதிரி நாடுகளுக்கு எண்ணெய் விலையை நிர்ணயிப்பதில் தகுதிக்கு மிஞ்சிய செல்வாக்கு உருவாக்கக்கூடும்.
இதில் ஈராக் நிலையற்ற கூடிக் குறைகின்ற எண்ணெய் உற்பத்தியாளராக ஆகி உள்ளது, அமெரிக்க அரசாங்கத்திற்கு
சங்கடமான நிலையை முன்வைக்கும்." (அதே அறிக்கை, பக்கம்8)
இதில் சங்கடம் இதுதான்: எண்ணெய் அளிப்பு பற்றாக்குறையை தீர்த்துவைப்பதற்கு தெளிவான
ஒரு தீர்வு என்னவென்றால், ஈராக் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை நீக்குவது. அதன் மூலம் உலக
எண்ணெய்ச் சந்தைக்கு எண்ணெய் வரத்தை அதிகரிப்பது. இது சதாம் ஹூசேனின் ஆட்சியை வலுப்படுத்தும். இந்த
இருதலைக்கொள்ளி நிலைக்கு ஒரு தீர்வு என்னவென்றால், ஈராக்கில் ஆட்சி மாற்றம் செய்வது, அப்படி ஈராக்கில்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டால், அமெரிக்காவிற்கு எதிரான, பகையான ஆட்சியின் பொருளாதார சக்தி அதிகரிக்காமல்
எண்ணெய் அளிப்பு அதிகரிக்கும்.
அமெரிக்க பேராசிரியர் மைக்கேல் கிளேர் அண்மையில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில்,
இறக்குமதி செய்யப்படுகின்ற எண்ணெயை அமெரிக்கா சார்ந்திருக்கும் போக்கு, அதிகரித்து வருவதாக குறிப்பிட்டிருக்கிறார்.
2001-மே-மாதம், வெளியிடப்பட்ட தேசிய எரிபொருள்(சக்தி) கொள்கை அறிக்கையில் இந்த அம்சம்
வலியுறுத்தி கூறப்பட்டிருக்கிறது. துணை ஜனாதிபதி டிக்செனி கட்டளைப்படி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.
2000-ம் ஆண்டில் அமெரிக்கா பயன்படுத்திய எண்ணெயில் பாதி இறக்குமதி செய்யப்பட்டது. 2020-ம் ஆண்டில் இப்படி
இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் அளவு, மூன்றில் இரண்டு பங்காக அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
ஈராக்கிலும் இரண்டு கவர்ச்சிகரமான அம்சங்கள் இருப்பதாக கிளேர் வாதாடுகிறார்; சவுதி அரேபியாவிற்கு உதவுகின்ற
வகையில், ஈராக்கிடம்தான் போதுமான எண்ணெய் வளம் உள்ளது. மற்றொன்று பெரும்பாலான, சவுதி எண்ணெய்க்
கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றில் கிடைக்கும் எண்ணெய் வளம் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், "ஈராக்கிடம்
இன்னும் துரப்பண பணிகள் மேற்க்கொள்ளப்படாத ஏராளமான எண்ணெய்க் கிணறுகள் ஐட்ரோகார்பன்
(hydrocarbon) வளங்கள் உள்ளன. இவை உலகில் வேறு
எந்தப் பகுதியிலும் கிடைக்காத அளவிற்கு மிகப்பெரும் அளவில், அலாஸ்காவில், ஆபிரிக்காவில், மற்றும் காஸ்பியன் பகுதிகளில்
கிடைப்பதாக உத்தேசிக்கப்பட்டிருப்பதைவிட, அதிக அளவிற்கு உலகிலேயே மிகப்பெரும் எண்ணெய் வளம் கொண்ட
நாடாக இருக்கக்கூடும்." ((Michael Klare, "Oiling the
Wheels of War", The Nation, October 7, 2002).
தற்போது, இத்தகைய எண்ணெய் வளம் கிடைக்கக்கூடும் என்று கருதப்படும் எண்ணெய்
கிணறுகளை கண்டுபிடிக்கும் துரப்பண ஒப்பந்தங்கள் ஐரோப்பிய, ரஷ்ய மற்றும் சீன நிறுவனங்களுக்கு தரப்பட்டுள்ளன.
இதில் சம்பந்தப்பட்டிருக்கும் தொகை மிகச் சிறியது அல்ல, சர்வதேச எரிபொருள் சக்தி ஏஜென்சி 2001-ம்
ஆண்டிற்கான மதிப்பீடுகளை வெளியிட்டிருக்கிறது. சதாம் ஹூசேன், வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள
ஒப்பந்தங்களின் அளவு, 1.1-டிரில்லியன் டாலர்களாக இருக்கக்கூடும் (பார்க்க ஒப்சேர்வர்-அக்டோபர்-6-2002).
தற்போது, ஐ.நா. பாதுகாப்பு சபையில், அமெரிக்கா ரஷ்யா மற்றும் பிரான்ஸ்
ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்றுவருகின்ற பேச்சுவார்த்தைகள் சதாம் ஹூசேனுக்கு பிந்தைய ஈராக்கில், எண்ணெய்
ஒப்பந்தங்களை பிரித்துக்கொள்வது சம்மந்தப்பட்டது. சிஐஏ- முன்னாள் டைரக்டர் ஜேம்ஸ் உல்சி சதாம் ஹூசேனை பதவி
நீக்கம் செய்வதை ஆதரிக்கும் முன்னணி பிரமுகர்களில் ஒருவர், அமெரிக்க நடத்துகின்ற போருக்கு ஆதரவு தெரிவிக்க
மறுப்பவர்கள், போர் முடிந்ததும், ஈராக் கொள்ளைப்பொருளைப் பகிர்ந்துகொள்வதில் சேர்த்துக்கொள்ளப் படமாட்டார்கள்
என்று குறிப்பிட்டார்.
செப்டம்பர்-16-அன்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில், அவரது கருத்து
அப்படியே வெளியிடப்பட்டிருக்கிறது. அது வருமாறு; இது நேருக்கு நேரான, உண்மையை, அப்படியே சொல்லுவதாக
ஆகும். பிரான்சிற்கும், ரஷ்யாவிற்கும், எண்ணெய் நிறுவனங்கள் உள்ளன, அவற்றின் நலன்கள் ஈராக்கில் உண்டு. ஈராக்,
கண்ணியமான ஆட்சியை அமைக்கும் முயற்சியில், அந்த நாடுகள் உதவுமானால் அந்தச் சூழ்நிலையில் புதிய ஈராக்
ஆட்சியும், மற்றும் அமெரிக்க கம்பெனிகளும் அவர்களோடு, நெருக்கமாக பணியாற்றுவார்கள் என்பதை தெளிவுபடுத்திவிடவேண்டும்.
சதாம் ஹூசேனோடு அந்த நாடுகள் இணைந்து பணியாற்றுவார்களானால் புதிய ஈராக் ஆட்சியை அந்த நாடுகளின்
நிறுவனங்களோடு இணைந்து பணியாற்ற செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத காரியமாக ஆகிவிடும்.
ஒரே கருத்தை திரும்ப சொல்லவேண்டிய, அவசியம் ஏற்பட்டாலும், இதே பிரச்சனையைப்
பற்றி குறிப்பிடுகின்ற மற்றொரு வெளியீட்டை மேற்கோள்காட்ட விரும்புகிறேன். மத்திய கிழக்கு, பிராந்தியத்தில், இராணுவ
நடவடிக்கைகளுக்கு பொறுப்பு ஏற்றுள்ள அமெரிக்காவின் மத்திய தலைமை 1995-ம் ஆண்டு கீழ்கண்ட பணிகள் தொடர்பாக,
மதிப்பீடு செய்திருந்தது. அந்த மதிப்பீட்டில், "(தேசிய பாதுகாப்பு மூலோபாயம்)
NSS-ல் உடன்பட்டவாறு, அமெரிக்க ஈடுபாட்டின் நோக்கம், இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின்
அத்தியாவசிய நலன்களை காப்பது ஆகும். இடையீடு எதுவும் இல்லாமல் பாதுகாப்பான முறையில் அமெரிக்காவிற்கும்,
அதன் நட்பு நாடுகளுக்கும், வளைகுடா எண்ணெய் வளம் கிடைக்கவேண்டும் என்பதுதான் அது."
பூகோள மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் உந்தல்
ஈராக்கை, முறியடித்து அதை தனது காலனியாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என்ற அமெரிக்காவின்
திட்டங்களில் எண்ணெய் வளம் திட்டவட்டமான பங்குவகிக்கிறது என்றாலும், அது ஒன்றுமட்டுமே, நோக்கம் என்று கூறுவது
தவறாகும். உலகம் முழுவதிலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தை நிலைநாட்ட வேண்டுமென்ற முயற்சி,
மிக விரிவான செயல்திட்டத்தைக் கொண்டது. இதன் ஒரு பகுதிதான் ஈராக் மீதான போர் ஆகும்.
அந்தத் திட்டம் அண்மையில் தோன்றியதும் அல்ல. அமெரிக்கா பூகோள அளவில் மேலாதிக்கம்
செலுத்துவதற்கான திட்டம், கடந்த 10-ஆண்டுகளாகவே உருவாக்கப்பட்டு வருகிறது. சோவியத் யூனியன் சிதைந்ததற்குப்
பின்னர், அமெரிக்கா சவால் செய்யமுடியாத பூகோள அளவில் இராணுவ வல்லரசாக உருவாகி வருகிறது.
1992-ம் ஆண்டு பென்டகன் அடுத்த பத்தாண்டுகளில், மீதி ஆண்டுகளுக்கு நகல் திட்டம்
ஒன்றை வகுத்தது. எதிர்காலத்தில், அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு திட்டவட்டமான, இடைவிடாத
முயற்சி தேவை என்பதை பென்டகன் நகல் திட்டம் வலியுறுத்தியது. "முன்னாள், சோவியத் ஒன்றியத்தின் எல்லையிலோ
அல்லது வேறு எங்குமோ, முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் அளவிற்கு, அச்சுறுத்தலாக தோன்றுகிற எந்த எதிரியும்,
மீண்டும் தலை எடுக்கவிடாமல், தடுப்பது நமது முதல் குறிக்கோள்" என்று பென்டகன் நகல் திட்டம் வலியுறுத்தி கூறியது.
முதலில், இந்த திட்டம் பற்றிய செய்தி வெளிவந்ததும், மிகுந்த பரபரப்பு உருவாயிற்று,
அந்த பரபரப்பில் கிளிண்டன் நிர்வாகம் முதல் ஆண்டுகளில், பின்னணிக்கு தள்ளப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தை
உருவாக்குவதற்கு பின்னணியாக இருந்தவர்கள் பின்வாங்கிக்கொள்ளவில்லை. இந்த மேலாதிக்க திட்டத்தை உருவாக்கியவர்களில்
முக்கியமானவர்கள் இன்றைய பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் போல் வொல்போவிச் மற்றும் இன்றைய துணை ஜனாதிபதி
டிக் செனி ஆகியோர், பின்வாங்கிக் கொள்ளாதது மட்டுமல்ல, அமெரிக்காவின் ஆளும் அரசியல் வட்டாரங்களுக்குள்ளேயே,
அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
1997-ம் ஆண்டு, அவர்கள் இணைந்து, புதிய அமெரிக்க நூற்றாண்டிற்கான திட்டத்தை
உருவாக்கினார். அந்த திட்டத்தில் "இராணுவ வலிமை மற்றும் தார்மீக தெளிவு ஆகியவற்றின் அடிப்படையில் "அமெரிக்காவின்
பூகோள தலைமை" ஏற்பாட்டிற்கு ஆதரவு திரட்ட அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு வழிகாட்டும் தத்துவங்கள்"
உருவாக்கப்பட்டன.
2000-ம் செப்டம்பரில் இந்த அமைப்பு தனது முன்நோக்கை பின்வருமாறு திட்டமாக
அறிவித்தது: "குளிர்யுத்த காலத்திற்கு பிந்தைய பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட எல்லாமே மாறி இருக்கிறது. 21-வது
நூற்றாண்டு உலகம், குறைந்தபட்சம், இன்றைய நிலவரப்படி திட்டவட்டமாக ஒரே நாடு, ஒரே தரப்பு என்ற
நிலைக்கு வந்திருக்கின்றது. அமெரிக்கா உலகின் ஒரே 'மேலாதிக்க வல்லரசாக' உருவாகிவிட்டது. சோவியத் ஒன்றியத்தை
அதன் செல்வாக்கை விரிவாகாமல் கட்டுப்படுத்துவதுதான், அமெரிக்காவின் மூலோபாய குறிக்கோளாகயிருந்தது; இன்றைய
தினம் சர்வதேச பாதுகாப்பு சூழலை அமெரிக்காவின் நலன்களுக்கும் மற்றும் கொள்கைகளுக்கும் ஏற்புடைய வகையில்,
பேணிக்காக்கும் பணியை மேற்கொள்ளவேண்டியிருக்கிறது (அமெரிக்காவின் பாதுகாப்புக்கள் மீளக் கட்டி அமைப்பு-பக்கம்-2).
சோவியத் ஒன்றியம் சிதைந்ததும், "அமெரிக்க பாதுகாப்பு வளையத்திற்கான சுற்றுவட்ட
அளவு" கணிசமான அளவிற்கு விரிவடைந்ததாக, அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பால்கன்கள் பிராந்தியம்
நேட்டோ காப்பு மண்டலமாக ஆகிவிட்டது. வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க துருப்புக்களும், அவற்றுடன் பிரிட்டன்
மற்றும் பிரான்ஸ் யூனிட்டுகளும் நிரந்தரமாகிவிட்டன. பின்னர் அவை பின்வரும் முக்கிய புள்ளியைச் செய்தது: "இந்த படைகளின்
உடனடி நடவடிக்கை என்னவென்றால் ஈராக்கின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் போர் விமானங்கள் பறக்காத
பகுதிகளை உருவாக்கி, அவற்றை கண்டிப்பாக செயல்படுத்துவது. இந்த நடவடிக்கையை அமெரிக்கா மற்றும் அதன்
பிரதான நட்பு நாடுகளுக்கு இந்த மண்டலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நீண்டகால அர்ப்பணிப்பை அவை
பிரதிநிதித்துவம் செய்தன."
இப்படி போர் விமானங்கள் பறக்காத மண்டலங்களுக்கு அமெரிக்கா கொடுத்துள்ள
காரணம் ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள குர்து இன மக்களை பாதுகாப்பதும் மற்றும் சியா மக்களை தென்பகுதியில்
பாதுகாப்பதும் ஆகும். இத்தகைய நடவடிக்கைக்கு ஐ.நா. எந்தவிதமான அங்கீகாரமும் தரவில்லை. உண்மையான
காரணம் அந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டிருக்கிறது.
அது தொடர்கிறது: "உண்மையில், வளைகுடா மண்டல பாதுகாப்பில் அமெரிக்கா நிரந்தர
பங்குவகிக்க பல தலைமுறைகளாக உண்மையிலேயே முயன்று வருகிறது. தீர்வு காணப்படாத ஈராக்குடனான தகராறு
அமெரிக்கா தலையிடுவதற்கு உடனடியாக, நியாயம் கற்பிக்கிறது என்றாலும், வளைகுடா மண்டலத்தில் கணிசமான
அளவிற்கு அமெரிக்கப் படைகள் நிலைப்பெற்றிருக்கவேண்டும் என்ற பிரச்சினை சதாம் ஹூசேன் ஆட்சிக்கும், அப்பாற்பட்ட
நோக்கங்களைக் கொண்டது (அதே அறிக்கை-பக்கம்-14).
அமெரிக்காவில் ஆளும் வர்க்கம் தங்களது பூகோள நிலைப்பாட்டை உயர்த்திக்கொள்வதற்கு
திட்டவட்டமான செயல் திட்டங்களை உருவாக்குவது ஒன்று, ஆனால் அவற்றை செயல்படுத்துவது மற்றொரு அம்சமாகும்.
19ம் நூற்றாண்டு முடிவிலிருந்து பொதுமக்கள் பெருமளவில், பங்குபெறுகின்ற அரசியல் உருவாகிவிட்டது. மற்றும்
தொழிலாள வர்க்கம் வித்தியாசமான சமூக சக்தியாக உருவாகிவிட்டதால், ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கத்தைச்
சேர்ந்தவர்கள் தங்களது போர் நடவடிக்கைகளுக்கு ஏதாவதொரு வகையில், நியாயம் கற்பித்தாகவேண்டும். எனவே,
போருக்கான முன்னேற்பாடுகளை செய்வதில் ஒரு முக்கியமான பங்கு பிரசாரத்திற்கு உண்டு. அந்த பிரச்சாரம், "ஜனநாயகத்தை"
காப்பது அல்லது உலகில் "கொடுங்கோன்மையை" ஒழித்துக்கட்டுவது, அல்லது "நம்முடைய வாழ்க்கை முறையை"
பேணிக்காப்பது என்ற வகையில் பரந்துபட்ட மக்களை நம்பச்செய்வதாக அமைந்திருக்கும்.
ஜனாதிபதி கார்ட்டரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்த ஜ்பிக்னிவ்
பிரிஜேஜின்ஸ்கி (Zbigniew Brzezinski) குறிப்பிட்டவாறு:
தங்களது உள்நாட்டு நல்வாழ்விற்கு அச்சுறுத்தல் அல்லது சவால் தோன்றிவிட்டது என்ற சூழ்நிலையில் தவிர, அதிகாரத்தை
மேற்கொள்வது மக்கள் உணர்வை ஆணையிடும் இலக்கு ஆகாது." (The
Grand Chessboard, p. 36).
செப்டம்பர்-11 அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் புஷ் நிர்வாகத்திற்கு
வரப்பிரசாதமாகவே அமைந்துவிட்டது. "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற குறிக்கோளை முன்நிறுத்தி அமெரிக்கப்
படைகள் இனி, தங்களது பூகோள ஆதிக்க குறிக்கோளை நோக்கி, முன்னேறிச் செல்ல முடியும். ஓராண்டிற்குள் ஆப்கானிஸ்தான்
வென்றுகைப்பற்றப்பட்டதையும், அங்கு ஒரு பொம்மை ஆட்சி திணிக்கப்பட்டதையும், முன்னாள் சோவியத் ஒன்றியத்தின்
மத்திய ஆசிய குடியரசுகளில், அமெரிக்கப் படைகள் நிறுத்தப்பட்டதையும் நாம் பார்த்தோம். இதற்கு அடுத்த
கட்டம், ஈராக்கிற்கு எதிரான போர், மற்றும் அந்த நாட்டில் அமெரிக்க காப்பு ஆட்சியை உருவாக்குவது.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர், தொடர்ந்து பல்லவி பாடிக்
கொண்டிருக்கிறார்கள்: "செப்டம்பர்-11-க்குப் பின்னர் எல்லாமே மாறிவிட்டது" என்று. நிச்சயமாக பெரிய அளவு
மாற்றம் நிகழ்ந்திருக்கிறது ஆனால், செப்டம்பர் 11க்குப் பின்னர் வெளிப்பட்டது, ஏற்கனவே கட்டி அமைக்கப்பட்டுக்
கொண்டு வருகின்ற நிகழ்ச்சிப் போக்கின் தொடர்ச்சியான, ஆழமாகிவரும் மற்றும் மேலதிக வளர்ச்சி ஆகும் என்பதைப்
புரிந்து கொள்ளுதல் மிக அவசியமானதாகும். எல்லாவற்றுக்கும் மேலாக என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றால்,
பயங்கரவாதத் தாக்குதல்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தற்போது ஒரு வாய்ப்பை
அளித்திருக்கிறது. உலக வர்த்தக மைய கட்டிடத்தில், இரண்டு விமானங்கள் புகுந்த காலை நேரத்தில், ஏற்கனவே, புஷ்ஷின்
மேசையில் ஆப்கானிஸ்தான் மீது படையெடுப்பதற்கான திட்டம் தயாராகயிருந்தது. உடனடியாக, ரம்ஸ்பீல்டும்
மற்றவர்களும் ஈராக் ஆட்சியை கவிழ்க்கவேண்டிய அவசியம் குறித்து பேசத்தொடங்கினர்.
ஓராண்டிற்குப் பின்னர், பாலித் தீவில் குண்டு வெடித்த சம்பவத்திற்குப் பின்னர் இதே
நடைமுறைதான், பின்பற்றப்பட்டது. இந்த குற்றத்தை செய்தவர்கள் யார் என்பதற்கான சான்று எதையும் தாக்கல் செய்யவில்லை.
ஆனால், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்கள், இந்தோனேசிய இராணுவத்துடன் நெருக்கமான உறவிற்கு
அழைப்புவிடுத்தன. இந்த திட்டம் அவர்களிடம் ஏற்கனவே இருந்தது. சிறிது காலமாக சில அரசியல் சங்கடங்களால்
அவை செயல்படுத்த முடியாமல் இருந்தன, குறிப்பாக இந்தோனேஷிய இராணுவப் படைகளின், கொலை வெறிப்போக்கு
தீவுக் கூட்டம் முழுவதும் தெளிவாகத் தெரிந்த நிலையில். ஆனால், பாலி படுகொலைகள் நடந்து சில நாட்களுக்குள்,
இந்த படுகொலைகளில் இந்தோனேஷிய இராணுவத்தின் சில பிரிவுகள் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ
சம்மந்தப்பட்டிருக்கக்கூடும். ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட்ஹில் மற்றும் வெளியுறவு செயலாளர் டெளனர்
இருவரும் உடனடியாக, இந்தோனேஷிய ஆட்சியுடன் கொடூரமான சிறப்பு பாதுகாப்பு படையான கோப்பாசசிற்கு (Kopassus)
மீண்டு பயிற்சியளிப்பது தொடர்பாகவும் ஒத்துழைப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கினர். கடந்த
காலத்தில் வாஷிங்டனில் ஒரு அச்சம் நிலவியது. இந்தோனேசிய மக்களது இயக்கத்தை சமாளிக்கிற அளவிற்கு மேகவதியின்
ஆட்சி வலுவானது அல்ல என்பதுதான் அந்த அச்சம். பாலி படுகொலை, ஒரு வாய்ப்பைக் கொடுத்தது. "பயங்கரவாதத்திற்கு
எதிரான போர்" என்ற பதாகையின் கீழ் இந்தோனேஷிய இராணுவம் மீண்டும் கொண்டுவரப்பட்டது.
செப்டம்பர்-17-ந்தேதி, ஜனாதிபதி அறிவித்த தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தில்
புஷ் நிர்வாகத்தின் செயல் திட்டம் வைக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்கா தனது இராணுவப் படைகளை அமெரிக்க நலன்களுக்கு
அச்சுறுத்தலாக தோன்றியுள்ளன என்று, அமெரிக்கா நம்புகின்ற, அல்லது எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக
உருவாகக்கூடும் என்று நம்புகின்ற எந்த நாட்டின் மீதும், எந்த நேரத்திலும், உலகின் எந்த பகுதியிலும், தனது படைகளை
பயன்படுத்தும் உரிமை படைத்திருக்கிறது என்பதை ஒரு மைய கொள்கையாக அந்த அறிக்கை வலியுறுத்துகின்றது.
உலக சோசலிச வலைத் தளத்தின் தலைவர் டேவிட் நோர்த், அக்டோபர் முதல் தேதி
மிச்சிகன் அன் ஆர்பர் உரையில், குறிப்பிட்டிருப்பதைப்போல், "நவீன கால வரலாற்றில் எந்த ஒரு நாடும், ஹிட்லரது
பைத்தியம் (விசர்) உச்சக் கட்டத்தை அடைந்துவிட்ட நாஜி ஜேர்மனிகூட, பூகோள மேலாதிக்கத்திற்கு இத்தகைய மிகப்பரவலான
ஒட்டுமொத்த அதிகாரத்தை வலியுறுத்தவில்லை. அல்லது இதை சற்று அப்பட்டமாக விளக்குவது என்றால், உலக மேலாதிக்கத்தை,
தற்போது அமெரிக்கா கோரி வருவதை போன்று எந்த நாடும் வரலாற்றில் கோரியது இல்லை."
புஷ்ஷின் தேசியப் பாதுகாப்பு மூலோபாய பத்திரம் ஒன்றை தெளிவுபடுத்துகின்றது, "பயங்கரவாதத்திற்கு
எதிரான போர்" என்ற பதாகையின் கீழ், பூகோள மேலாதிக்கத்திற்கான முயற்சியை அமெரிக்கா மேற்கொண்டிருக்கிறது.
இது "திட்டவட்டமான காலக்கெடு எதையும் குறிப்பிட முடியாத பூகோள முயற்சி" என்பதை அந்த பத்திரம் தெளிவுபடுத்துகிறது.
"உருவாகி வருகின்ற அச்சுறுத்தல்கள், முழு உருக்கொள்ளும் முன்னரே, தற்காப்பிற்காக அமெரிக்கா நடவடிக்கையில்
இறங்கும் என்பது சராசரி பொது அறிவின் அடிப்படையாகும்" என்று அது விளக்குகிறது. இந்த புதிய உலகத்தில்,
"பாதுகாப்பிற்கான ஒரே நடவடிக்கையில் இறங்கும் பாதைதான்", என்பதை அந்த பத்திரம் தெளிவுபடுத்துகிறது.
முன்னாள் சோவியத் ஒன்றியம் சிதைந்து போனது, "அமெரிக்காவிற்கு வாய்ப்பான ஒரு
நேரத்தை" வழங்கி இருப்பதாக, அந்தப் பத்திரம் பிரகடனப்படுத்துகிறது. "அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு
மூலோபாயம் என்பது, தேசிய நலன்கள் மற்றும் நமது மதிப்பீடுகளின் ஐக்கியத்தை பிரதிபலிக்கும் வேறுபட்ட அமெரிக்க
சர்வதேசமயத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதாக அமையவேண்டும்" என்றும் அந்த பத்திரம் விளக்குகிறது. இது
நிச்சயமாக மிகவும் தனித்தன்மை வாய்ந்த சர்வதேசியமயம்தான். இந்த சர்வதேசியம், அமெரிக்காவின் நலன்கள்
இதர எல்லா "வல்லரசுகளை" யும் விட உயர்ந்தது என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த அறிக்கை (Document)
முழுவதையும் நான் ஆராய விரும்பவில்லை. டேவிட் நோர்த் ஏற்கனவே, தனது உரையில் இதுபற்றி விளக்கியிருக்கிறார்.
"ஈராக்கிற்கு எதிரான போர் மற்றும் பூகோள மேலாதிக்கத்திற்கு அமெரிக்காவின் உந்தல்" என்ற டேவிட் நோர்த்தின்
உரையைக் காண்க, [see, http://www.wsws.org/articles/2002/oct2002/iraq-o04.shtml].
அதில் நான் ஒரு கருத்தை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். இது அமெரிக்கா பூகோள மேலாதிக்கத்திற்கு திட்டமிட்டிருக்கும்
ஒரு வேலைத்திட்டம் என்ற எங்களது மதிப்பீடு, சில வெறிகொண்ட இடதுசாரிகளின் கற்பனையல்ல. அரசியல் ரீதியில்
விழிப்புணர்வு கொண்ட எவரும் அமெரிக்காவின் நோக்கங்களை எதிர்ப்பதாகயிருந்தாலும், ஆதரிப்பதாகயிருந்தாலும்,
அத்தகைய முடிவுக்குத்தான் வருவார்.
பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையின், நிலைப்பாட்டை உதாரணமாக, எடுத்துக்கொள்ளலாம்.
தேசிய பாதுகாப்பு மூலோபாயம் வெளியிடப்பட்டு, ஐந்து நாட்களுக்குப் பின்னர், பைனான்சியல் டைம்ஸ், புஷ்ஷின் தேசிய
பந்தோபஸ்து ஆலோசகர் ஹோண்டாலிசா ரைஸ்சுடன் நீண்ட பேட்டியை நடத்தியது, அந்த பேட்டியில் ஜனாதிபதியின் புதிய
மூலோபாயத்தால் வருகின்ற விளைவுகள் குறித்து, கேள்விகள் கேட்கப்பட்டன. சீனா தனது இராணுவ வலிமையை
பெருக்கிக்கொள்ள முயலுமானால், என்ன நடக்கும் என்று, அறிந்துகொள்ள பேட்டி கண்டவர் விரும்பினார். அதற்கு, ரைஸ்
பதிலளித்தார், சீனா தொழில் முகவர்களை வர்த்தகத்தை, தொழிலை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்குமானால், அந்த
முயற்சியில் அமெரிக்காவில் "அவர்கள்" நல்ல பங்காளரைக் கண்டு கொள்வர் என்று பதிலளித்தார். இதனுடைய உள்ளார்ந்த
பொருள் என்னவென்றால் சீனா - அப்படிச் செய்யவில்லை என்றால், வேறு சில விளைவுகள் ஏற்படும் என்பதாகும்.
இதற்கு, பைனான்சியல் டைம்ஸ் சார்பில் பேட்டி கண்டவர், கீழ்கண்டவாறு:
"ஆக, நாம் ஒரு ஏகாதிபத்திய யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தத்துவத்தை அதிகம் கலந்து கருத்தைச்
சொல்ல நாம் விரும்பாவிட்டாலும், நீங்கள் சொல்வது இது ஒன்றுதான். உலகிலேயே ஒரே ஒரு சூப்பர் வல்லரசுதான்
இருக்கும், அது அமெரிக்காவாகயிருக்கும். அது நலம் செய்கிற அரசாகயிருக்கும். இதில் முக்கியமானது அந்த நிலையை
நிலைநாட்டவேண்டும்? என்பதுதானே என பதிலளித்தார்.
நான் ஏற்கனவே கூறியபடி, அமெரிக்கா பூகோள மேலாதிக்கம் செலுத்தவேண்டும் என்ற
பிரச்சனை, செப்டம்பர்-11-நிகழ்ச்சிக்கு பதில்வினையாய் உருவானது அல்ல. இந்தக் கொள்கை முந்தைய பத்து ஆண்டுகளில்,
அமெரிக்க வெளியுறவு கொள்கை வட்டாரங்களுக்குள் விவாதிக்கப்பட்டு வந்தது. 2000-ம் ஆண்டு, நவம்பர்-11-ந்தேதி,
தற்போது அமெரிக்க வெளியுறவுத்துறை திட்டமிடல் கொள்கை இயக்குநராக பணியாற்றி வருகின்ற ரிச்சர்ட் ஹாஸ்,
"இம்பீரியல் அமெரிக்கா" என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அவர் வொல்போவிச் மற்றும்
டிரம்ஸ்பீல்டுடன் ஒப்பிடும்போது, "மிதவாதி" என்று கருதப்படுபவர்.
சர்வதேச நிலவரத்தைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது அவர் கூறியிருப்பதாவது:
இன்றைய உலகம், எதிர்காலத்திலும், திட்டவட்டமாக, அமெரிக்காவின் மேலாதிக்க நிலையை கொண்டதாகவே
இருக்கும். எந்த ஒரு நாடும், அல்லது நாடுகள் குழுவும், எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கு இணையான,
பொருளாதார இராணுவ மற்றும் கலாச்சார வலிமையுள்ளதாக, இணையானதாகயிருக்க முடியாது. இது ஒரு
விளக்கம்தான், நோக்கமல்ல. குளிர்யுத்த காலத்திற்கு பிந்திய உலகில் கட்டுப்படுத்தும் வெளிநாட்டுக் கொள்கை அமெரிக்காவில்
உருவாக்கப்படவில்லை. அமெரிக்க வெளியுறவுக் கொள்கை எதிர்நோக்கியுள்ள அடிப்படை பிரச்சனை, உபரியாக
கிடைக்கும் வலிமையை என்ன செய்வது மற்றும் அப்படி உபரியாக கிடைக்கும் வலிமையில் அமெரிக்காவிற்கு பல கணிசமான
அனுகூலங்கள் கிடைக்கின்றன. ("Imperial America", p. 1).
இம்பீரியல் வெளிநாட்டுக் கொள்கை என்பதை, "ஏகாதிபத்தியம்" என ஹார்ஸ்
குறிப்பிடும் சொல்லோடும், சேர்த்து குழப்பிக்கொள்ளக்கூடாது என்று அவர் கூறுகிறார். குடியேற்றநாடுகளை ஏற்படுத்துவது
இனி இயலாத காரியம், ரோஜா மலரை என்ன பெயர் சொல்லி அழைத்தால் என்ன, ரோஜா - ரோஜாதானே;
எனவே, ஹார்ஸ் எடுத்துக் கூறுகின்ற பிரச்சனை திட்டவட்டமாக ஒருவகை சாம்ராஜ்ஜியத்தைத்தான்.
"பேரரசு சார்ந்த வெளிநாட்டுக் கொள்கை என்பது, அரசுகளுக்கும் அவற்றினுள்ளேயான
நிலைமைகளுக்கும் இடையிலான உறவுகளை பாதிக்கும் சில குறிப்பிட்ட கோட்பாடுகள் வழியாக உலகை ஒழுங்கு செய்ய
முயலும் ஒரு வெளிவிவகாரக் கொள்கைக்காக அழைப்பு விடுப்பதாகும். இதில் அமெரிக்காவின் பங்கு 19-வது நூற்றாண்டு
கிரேட் பிரிட்டனைப் போன்றது. நிர்பந்தமும், படை பலத்தை பயன்படுத்துவதும் கடைசி நடவடிக்கையாகத்தான்
இருக்கும். இந்த ஏகாதிபத்தியக் கொள்கையை பிரிட்டனில், 150-ஆண்டுகளுக்கு முன்னர் ரோனால்ட் ரொபின்சனும்,
ஜோன் கல்லகரும் எழுதினர். 'சாத்தியமானால் ஒழுங்குமுறை சாராத கட்டுப்பாட்டை நீட்டித்தல் மற்றும் தேவைப்பட்டால்
முறையான வகையில் கட்டுப்படுத்தலையும் நீட்டித்தல்' கோட்பாடுகளை பிரிட்டிஷ் கொள்கை பின்பற்றியது, அந்தக்
கொள்கை புதிய நூற்றாண்டுத் தொடக்கத்தில், அமெரிக்காவிற்கு பொருந்த முடியும்." (அதே அறிக்கை, பக்கம் 4)
இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சர்வதேச நிதி சந்தைகள், உலக வர்த்தக
அமைப்பு, சர்வதேச நிதி நிறுவனம் போன்ற பூகோள இயங்குமுறைகள், அமெரிக்காவின் நலன்கள் மேலாதிக்கம்
செலுத்துவதற்கு உத்திரவாதம் செய்து தரும் வகையில் செயல்படும். தேவைப்படும் இடங்களில் கட்டுப்பாட்டை உத்திரவாதம்
செய்து தருவதற்காக சுதந்திர சந்தை என்கின்ற கட்டுக்கோப்பிற்குள் இராணுவம் மறைவான முஷ்டியாக செயல்படும்.
முதல் உலகப்போரின் தொடக்கம்
இது மிக முக்கியமான கேள்விக்கு நம்மைக் கொண்டு வருகிறது: அமெரிக்கா பூகோள
அளவில் மேலாதிக்கம் செலுத்தவேண்டும் என்ற முயற்சியின் விளைவுகள் என்னவாக இருக்கும்? 21ம் நூற்றாண்டு தொடக்கத்தில்
புதிய ஏகாதிபத்திய யுகம் பிறப்பதால், ஏற்படுகின்ற விளைவுகள் என்ன? இந்த கேள்விகளுக்கு, விடை காண்பதற்கு
20ம் நூற்றாண்டின் வரலாற்று அனுபவங்களை ஆராயவேண்டும். வேறுவார்த்தைகளில் கூறுவதானால், எதிர்காலம் எப்படி
அமையும் என்பதை அறிந்துகொள்வதற்கு, கடந்த காலத்தை ஆழமாக ஆராயவேண்டும்.
கடந்த நூற்றாண்டுடனான இந்த வரலாற்றுத் தொடர்பை
NSS-பத்திரம் விளக்குகிறது. புஷ் அல்லது அவருக்காக அந்த
அறிக்கையை எழுதியவர்கள், அமெரிக்கா "சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு உருவாகியுள்ள வரலாற்று அடிப்படையிலான,
ஒரு வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள" விரும்புவதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். "இன்றைய தினம், சர்வதேச
சமுதாயம், உலக சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு சிறந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறது." 17ம் நூற்றாண்டில் தேசிய
அரசு தோன்றியதிலிருந்து, போருக்கு தொடர்ச்சியாக தயார் செய்வதற்குப் பதிலாக அமைதியாய் போட்டி போடும்
வல்லரசுகள் கொண்ட உலகைக் கட்டுவதற்கு இன்று, சர்வதேச சமுதாயத்திற்கு சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இன்றைய தினம் உலகின் ஒவ்வொரு வல்லரசும், பொது ஆபத்தான பயங்கரவாத வன்முறை மற்றும் குழப்பத்திற்கு எதிராக
ஓரணியில் திரண்டு நிற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. (op.cit.,
p. 2)
"வல்லரசுகள்" என்ற சொல்லே முதலாம் உலகப்போருக்கு முந்திய காலத்திற்கு நம்மை
அழைத்துச் செல்கிறது. அப்போது சர்வதேச அரங்கில் வல்லரசுகள் உருவாகத் தொடங்கின. 19-ம் நூற்றாண்டின்
முதல் பாதியில் பிரிட்டனின் மேலாதிக்கத்தின் கீழ் உலக முதலாளித்துவ பொருளாதாரம் வளர்ந்தது. ஆனால் அந்த
நூற்றாண்டின் கடைசி 25-ஆண்டுகளில், மிகப்பெரிய மாற்றம் உருவாகிக்கொண்டு வந்தது. 1870-க்கு பின்னர்
ஒன்றுபட்ட ஜேர்மனி உருவானது பரவலான பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முன்னோடி, மற்றும் ஒரு முன் நிபந்தனை
ஆக இருந்தது. ஐரோப்பாவில் பழைய வல்லரசு சமநிலை கீழறுக்கப்பட்டிருந்தது. மேலை நாடுகளில், ஐக்கிய அமெரிக்க
அரசுகள் ஒரு புதிய வல்லரசாக, எழுந்தது. அமெரிக்காவில் உள்நாட்டு போருக்குப் பின்னர், மகத்தான
பொருளாதார மாற்றங்கள் உருவாயின.
20ம் நூற்றாண்டு முடிவில், அன்றைய மிகப்பெரிய அரசியல் பிரச்சனை என்னவென்றால்
இந்த வல்லரசுகளுக்கிடையே நிலவுகின்ற உறவுகள் சம்பந்தப்பட்டது. இந்த உறவுகளின் விளைவாக, சமாதானமான,
ஒருங்கிசைவான வளர்ச்சிப் போக்குகள் உருவாகுமா அல்லது இப்படி போட்டி வல்லரசுகள் உருவாவதால் மிக விரைவிலோ
அல்லது சற்று தாமதமாகவோ, அந்த வல்லரசுகளுக்கிடையில் போர் வெடிக்குமா? என்பதுதான்.
சமாதான முறையில் போட்டி என்று கூறப்படுவது குறித்து-- சந்தைகளுக்கு, லாபம் பெறுவதற்கு,
மூலப்பொருட்களை பெறுவதற்கு, முதலீடுகளுக்கான மூலதனம் இவற்றுக்கான போராட்டம், சமாதான முறையில்
அமைந்த போட்டி என்று கூறப்படுவது தவிர்க்க முடியாத அளவிற்கு இராணுவ மோதலாக, உருவாகும் என்று, மார்க்சிச
இயக்கம் விளக்கியது. மொத்தத்தில், மார்க்ஸ் சுட்டிக்காட்டியவாறு, போட்டியின் தர்க்கம் என்னவென்றால் போட்டியைத்
தொடர்வதில்லை, அது ஏகபோகத்தை அபிவிருத்து செய்யும். ஒவ்வொரு முதலாளித்துவ வல்லரசுகளும், தமது நிலைப்பாட்டை
முன்நோக்கி கொண்டு செல்லும்போது, அவைகள் ஒன்றோடொன்று மோதுகின்ற நிலைதான் உருவாகும்.
இதற்கு எதிரான கருத்து என்னவென்றால், பெரிய பொருளாதார வல்லரசுகள்
ஒன்றுக்கொன்று ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன. நாடுகளுக்கிடையில் முதலீடுகள் செய்கின்றன. சந்தைகளைப்
பிடிப்பதிலும் மூலப்பொருட்களை தேடுவதிலும், ஒன்றையொன்று சார்ந்து செயல்படவேண்டியிருப்பதால் அவற்றிற்கிடையே
மோதல் ஏற்பட்டால் போர் மூண்டால் சேதங்கள் தாங்க முடியாத அளவிற்கு அதிகமாகும்-- அவைகளுக்கிடையிலான
உட்தொடர்புகள் அத்தகையன.
இந்த கேள்விக்கு விடை 1914-ஜூலை-ஆகஸ்டில் உருவாயிற்று, முந்தைய 10 ஆண்டுகளில்
சர்வதேச அளவில் பல்வேறு நெருக்கடிகள் உருவாகி, இறுதியாக போராக வெடித்தது.
போரின், வரலாற்று முக்கியத்துவத்தை மற்றும் அதனால் உருவான விவரிக்க முடியாத
அழிவை மார்க்சிச இயக்கம் விளக்கியது. முதலாளித்துவம் ஒரு சமூக உற்பத்திமுறை என்ற வகையில், அது ஒரு மனித
சமூக அமைப்பின் வடிவம் என்ற வகையில், தனது முற்போக்கான வளர்ச்சியுகத்தின் இறுதிக் கட்டத்திற்கு வந்திருக்கிறது.
கடந்த காலத்தில் மனித நாகரீகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அந்த அமைப்பு தற்போது மனித இனத்தையே பயங்கரமான
காட்டுமிராண்டித்தன வடிவங்களில் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. போரின் பூர்வீகத்தை கண்டுபிடிக்கும் மகத்தான கேள்விக்கு
"யார் முதலில் தாக்குதலை தொடுத்தது" என்று கண்டுபிடிப்பதில் அல்லது எந்த நாடு "குற்றம் செய்த தரப்பு"
என்பதை கண்டுடிபிடிப்பதில் அடங்கியிருக்கவில்லை, அந்த போர் உருவாவதற்கான அடிப்படை சமுதாய மற்றும்
பொருளாதார நிகழ்ச்சிப் போக்குகளை ஆழமாக ஆய்வு செய்து கண்டுபிடிப்பதில்தான் அடங்கியிருக்கிறது.
இந்த நிலைப்பாட்டிலிருந்து, லியோன் ட்ரொட்ஸ்கி, மிக அடிப்படை மட்டத்தில், அளித்துள்ள
விளக்கம் குறிப்பிடத்தக்கது. முதலாளித்துவம் உருவாக்கியுள்ள உற்பத்தி சக்திகள், தேசிய அரசு என்கிற அரசியல், வடிவத்திற்கு
எதிராக நடத்துகின்ற புரட்சிதான் போர் என்று ட்ரொட்ஸ்கி விளக்கினார். முதலாளித்துவத்தில் உருவாகியுள்ள மிகப்பெரும்
தொழில்கள், அவை பேணி இருந்த பொருளாதார நிகழ்ச்சிப் போக்குகள், உலகம் தேசிய எல்லைகளாய் பிரிக்கப்பட்டிருக்கிறவற்றுக்கு
அப்பால் பரந்து விரிந்து வளர்ந்திருக்கின்றன. நூற்றாண்டுகளுக்கு முன்னால், முதலாளித்துவத்தின் உதயம் நிலப்பிரபுத்துவத்தின்
வீழ்ச்சியை, அதன் முடியாட்சிகள், சிற்றரசுகள் மற்றும் இளவரசு ஆட்சியின் ஒட்டுக்களின் வீழ்ச்சியைக் கட்டியம் கூறியதைப்போல,
மேலும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தேசிய அரசை ஒரு அரசியல் வடிவம் என்ற வகையில் முற்றிலும் காலத்திற்கு
ஒவ்வாததாக முன்னிலைப்படுத்தி இருக்கிறது.
முதலாளித்துவத்தால் உருவான இந்த பெரிய பிரச்சனையை அது உருவாக்கிய தேசிய அரசு
தீர்த்துவைக்க முடியாது. பொருளாதாரத்தின் வளர்ச்சி --எல்லைகளைக் கடந்து, கண்டங்களைக் கடந்து உற்பத்தி நிகழ்ச்சிப்
போக்குகள் பரந்து விரிந்திருக்கிறது என்ற உண்மை, பூகோளப் பொருளாதாரமாக ஆகி இருப்பதை இயக்குதலில்,
உலகின் அனைத்து உற்பத்தியாளர்களின் நனவு பூர்வமான ஒத்துழைப்பிற்கான தேவையை முன்வைக்கிறது. ஆயினும், சந்தைகளுக்கான,
வளங்களுக்கான மற்றும் இலாபத்திற்கான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவத்தால் இதை செய்ய
முடியாது. ஒவ்வொரு முதலாளித்துவ வல்லரசும் தனது நிலையை மேம்படுத்தும் பொருட்டு, அதன் போட்டியாளர்களை
பின்னுக்குத் தள்ள வேண்டி இருக்கிறது-- தன்னை பெரும் வல்லரசு என்ற நிலையிலிருந்து உலக வல்லரசு என்ற நிலைக்கு
மாற்றிக்கொள்ள வேண்டி இருக்கிறது. இது அனைத்தையும் --பிரிட்டன், ஜேர்மனி, ஆஸ்திரியா, பிரான்ஸ், ஜப்பான்,
அதன் சார்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகள், மற்றும் இறுதியாக மேற்கில் பெரும் வல்லரசாக உதயமாகிக்
கொண்டிருக்கும் அமெரிக்கா பகிரங்கமாக ஒன்றோடொன்று மோதிக்கொள்ளுகின்ற நிலைக்கு கொண்டு வந்துவிட்டது.
ட்ரொட்ஸ்கியின் இந்த விளக்கத்தால் ஏற்படுகின்ற முடிவு என்ன? "முதலாளித்துத்தின் ஏகாதிபத்திய
சிக்கல்நிலையை உலகப் பொருளாதாரத்தை சோசலிச ரீதியில் ஒழுங்கு செய்யும் ஒரு நாளாந்த செயல்முறை வேலைத்திட்டத்தால்
சந்திக்க முடியும். முதலாளித்துவம் அதன் அபிவிருத்தியின் உச்சக்கட்டத்தில், அதன் தீர்க முடியாத முரண்பாடுகளை தீர்ப்பதற்கு
முயலும் வழிமுறையே போர் ஆகும். இந்த வழிமுறையை பாட்டாளி வர்க்கம் அதன் சொந்த வழிமுறையால் , சோசலிசப்
புரட்சி வழிமுறையால் எதிர்த்தாக வேண்டும்."
இதே குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டுதான், லெனினது கிளர்ச்சிகள் நடத்தப்பட்டன.
போரின் விளைவுகள் எதுவாகயிருந்தாலும் ஒரு புதிய சமாதான காலம் உருவாக்கப்பட்டாலும் அது தற்காலிகமான இயல்நிகழ்ச்சியாக
இருக்கும். முதலாளித்துவ வல்லரசுகள் உலகை இடைவிடாது பங்கீடு செய்வது மறுபங்கீடு செய்வது என்ற போட்டியில்
சிக்கியுள்ளன-- முதலாளித்துவ பாணி உற்பத்தியின் பொருளாதார அடித்தளங்களில் அடிப்படையான மாற்றம் ஆகும்.
19ம் நூற்றாண்டில் சந்தைகளுக்காகவும் இலாபங்களுக்காகவும் சிறிய கம்பெனிகளுக்கு இடையில் நிலவிய போட்டிகள் தற்போது
மிகப்பெரிய ஏகபோக கார்ப்பரேஷன்களுக்கு இடையிலான போட்டியாக வளர்ந்திருக்கிறது.
சிறிய உரிமையாளர்கள் உழைப்பை அடிப்படையாகக் கொண்ட தனிச்சொத்துடைமை,
சுதந்திரமான போட்டி, ஜனநாயகம் என்பது எல்லாம், முதலாளித்துவவாதிகளும் அவர்களது பத்திரிகைகளும்,
தொழிலாளர்களையும் விவசாயிகளையும் ஏமாற்றுகின்ற கவர்ச்சி சொற்களாகும். அவை அந்தக் காலம் மலையேறிவிட்டது"
என அவர் எழுதினார். "முதலாளித்துவம் காலனி ஆதிக்க ஒடுக்குமுறையின் உலக அமைப்பாக வளர்ந்திருக்கிறது மற்றும்
ஒரு சில 'முன்னேறிய' நாடுகளால், உலகின் மிகப்பெரும்பான்மையான மக்களை தங்களது, நிதி வசதி
கிடுக்கிபிடிக்குள், கொண்டு வந்திருப்பதாக லெனின், எழுதியிருந்தார். (Lenin,
Collected Works, Volume 22, p. 191).
லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் மாபெரும் பெரிய மார்க்சிய சிந்தனையாளர்கள்
சோசலிசம் என்பதை விரும்பத்தக்க ஓர் கொள்கை என்பதால், அதை அவர்கள் வலியுறுத்தவில்லை மாறாக அவசியம்
என்பதை வலியுறுத்தினார்கள். இல்லையென்றால், முதல் உலகப்போரைத் தொடர்ந்து ஏற்பட்டதுபோன்ற வார்த்தைகளின்
விவரிக்க முடியாத காட்டுமிராண்டித்தனத்தில் மனித இனம் மூழ்கிவிடும். முதல் உலகப்போர் ஏற்பட்டதே முதலாளித்துவ
உற்பத்தி முறைகளால் உருவான முரண்பாடுகளால்தான்.
உட்ரோ வில்சனின் 14-அம்சத் திட்டம்
இந்த வரலாற்று முன்நோக்கு அடிப்படையில், போல்ஷேவிக்குகள் ரஷ்ய புரட்சியை
ஒழுங்கமைத்து தலைமை ஏற்று நடத்தினர். ஒரு பின்தங்கிய நாட்டில் சோசலிசத்தை உருவாக்குவது, அந்த புரட்சியின்
நோக்கமல்ல, உலக புரட்சிக்கு அடியெடுத்து கொடுக்கும் முதல் முயற்சிதான் அது. வரலாறு முரண்பாடான முறையில்
சென்றது: தொழிலாள வர்க்கம், அரசியல் அதிகாரத்தை தனது கையில் எடுத்துக்கொள்வதற்கு முதலில் ஒரு வாய்ப்பு
கிடைத்தது ஒப்பீட்டளவில் முன்னேறிய நாட்டில் அல்ல, மிகவும் பின்தங்கிய நாட்டில் ஆகும். அந்த வாய்ப்பை, இறுக்கமாக
பிடித்துக்கொண்டு, உலகம் முழுவதிலும், தொழிலாள வர்க்கத்தை மற்றும் பொதுமக்களை, முன்னேற்றப் பாதைக்கு
இட்டுச் செல்வதற்கு அந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்.
இந்த முன்நோக்குத் திட்டத்திற்கு எதிராக, முன்னணி ஏகாதிபத்திய அரசாக போருக்குப்
பின்னர் உருவாகவிருந்த அமெரிக்காவின் தலைவர் ஜனாதிபதி உட்ரோ வில்சன் மற்றொரு திட்டத்தை தாக்கல் செய்தார்.
1919-ம் ஆண்டு, வெர்சைல்ஸ் சமாதான மாநாட்டிற்கு, வில்சன் 14-அம்சத் திட்டத்தோடு, வந்திருந்தார். பகிரங்க
ராஜ்ஜியத்துறை உறவுகள், சுதந்திர வர்த்தகம், ஜனநாயகம், பல்வேறு நாடுகளில் சுயநிர்ணய உரிமை, இனி உலகப்போர்
தோன்றாத அளவிற்கு, நெறிமுறைப்படுத்துவதற்கு நாடுகளின் கழகம் (லீக் ஆப் நேஷன்ஸ்) எனும் அமைப்பை
உருவாக்குவது என்பது போன்ற 14- அம்சத்திட்டங்களை உட்ரோ வில்சன் தாக்கல் செய்தார்.
வில்சனின் திட்டங்களின் உயர்ந்த ஜனநாயக தத்துவங்கள் சர்வதேச கண்ணோட்டம் ஆகியவற்றோடு,
அமெரிக்கா என்கிற "பெரிய வல்லரசின்" நலனை காப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு அமைந்திருந்தது.
முதல் உலகப்போரின் விளைவாக உலக வல்லரசாக அமெரிக்கா மாறிவிட்டது. சோவியத் ஒன்றியத்தின் முதலாவது
தொழிலாளர் அரசு உருவானது, முதலாளித்துவ முறைக்கே அச்சுறுத்தலாக அமைந்திருப்பதால் அதற்கு எதிராக இந்த
14-அம்ச திட்டங்கள் தாக்கல் செய்யப்பட்டன. எனவேதான், வெர்செயில்ஸ் சமாதான மாநாடு நடந்துகொண்டிருக்கும்போது,
எல்லாப் பெரிய வல்லரசுகளின் இராணுவங்களும், சோவியத் அரசை வீழ்த்த முயன்றன. சுயநிர்ணய உரிமை, ஜனநாயகம்
மற்றும் சுதந்திரம் பற்றிய கோட்பாடுகள், 14-அம்சங்களுக்கு அடிப்படையாக அமைந்தன. ஆனால், அந்த கொள்கைகளை
சோவியத் ஒன்றியத்துக்கோ, அல்லது உண்மையில் இந்திய மக்களுக்கோ, அல்லது, வெற்றிபெற்ற ஏகாதிபத்திய அரசுகளின்
கட்டுப்பாட்டில் உள்ள காலனிகளின் மக்களுக்கோ பிரயோகிக்கவில்லை.
1919 வெர்செயில்ஸ் உடன்படிக்கையால் ஒருங்கிசைந்த வளர்ச்சி போக்குகள் உருவாவதற்கு
பதிலாக, புதிய பேரழிவு நிலைகளுக்கு வித்திடப்பட்டது -- 1929-32ம் ஆண்டுகளில் உருவான பாரிய பொருளாதார
மந்தம், ஜேர்மனியில் பாசிசம் உருவானமை, இரண்டாவது உலகப்போர் மூண்டமை -- ஆகிய நிகழ்ச்சிகள் வெர்செயில்ஸ்
உடன்படிக்கை கையெழுத்தாகி 20 ஆண்டுகளில் உருவான பேரழிவுகள் ஆகும்.
திருப்பி சுருட்டிக் கொண்டு போகவைப்பது (எதிர்) கட்டுப்படுத்துவது
2ம் உலகப்போரிலிருந்து அமெரிக்கா, 1ம் உலகப்போர் முடிந்த காலத்தைவிட மிகவும்
வலிமையான நிலைக்கு வளர்ந்தது. அப்படியிருந்தும் தனது கட்டளைப்படி உலகை மறு ஒழுங்கு செய்ய இயலாத நிலையில்
இருந்தது. அமெரிக்காவின் சர்வதேச அபிலாசைகளுக்கு, சோவியத் ஒன்றியம் தொடர்ந்து ஒரு தடைக் கல்லாகவே
நீடித்தது.
அமெரிக்க ஆளும் வர்க்கத்திலும் இராணுவத்திலும் சில பிரிவுகள் சோவியத் ஒன்றியத்தில் குழப்பத்தை
ஏற்படுத்த விரும்பினார்கள். அவர்கள் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இரண்டு காரணிகள் காணப்பட்டன: சர்வதேச
அளவில் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பையும் சோவியத் ஒன்றியத்தின் எதிர்ப்பையும் தூண்டிவிடக்கூடும். ஜப்பானில்
1945-ம் ஆண்டு, இரண்டு அணு குண்டுகளை அமெரிக்கா வீசியதைத் தொடர்ந்து, உலகிற்கே கட்டளையிடுகின்ற நிலையில்
தான் இருப்பதாக அமெரிக்கா நம்பியது. ஆனால், அந்த நம்பிக்கைக்கு கடுமையான அடி விழுவதைப்போல் சோவியத்
ஒன்றியம் அணு ஆயுதங்களை தயாரித்தது, 1949-ம் ஆண்டு சீனாவில் சியாங்கே ஷேக் ஆட்சி மாற்றப்பட்டது.
அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் அமெரிக்கா கடைபிடிக்கவேண்டிய மூலோபாயங்கள்
தொடர்பாக மோதல் எழுந்தது. ஒரு பகுதியினர், விளைவு எதுவாக இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல்,
"திருப்பிச் சுருட்டிக் கொண்டு போதலுக்கு" ஆதரவாக, சோவியத் ஒன்றியத்திலும், மற்றும் சீனாவின் மாவோ
ஆட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். மற்றொரு பிரிவினர் சோவியத் ஒன்றியத்தையும்
சீனாவையும் அவற்றின் ஆதிக்கம் பரவாமல் "கட்டுப்படுத்தவேண்டும்" என்று வலியுறுத்திவந்தனர். இந்த இரண்டு மோதல்
போக்குகளும், அடுத்த கட்டத்தில் குறிப்பிடத்தக்க புள்ளிகளில் வெடித்து சிதறின. கொரியப் போரின்போது, ட்ருமன்
நிர்வாகம் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு நெருங்கிவந்துவிட்டது. கொரியா -- மஞ்சூரியா எல்லையில்
30-முதல், 50-வரை அணு குண்டுகளை பயன்படுத்தலாம் என்று மெக்கார்தர் ஆலோசனை கூறினார். 1962-ம்
ஆண்டு, கியூபா ஏவுகணை நெருக்கடியின்போது, இராணுவத்தின் ஒரு பிரிவினர் சோவியத் ஒன்றியத்துடன் ஒட்டுமொத்தமாக
அணு ஆயுத போர் புரியலாம் என்று வலியுறுத்தினர். மீண்டும், வியட்நாம் போரில், இராணுவத்தில் ஒரு பிரிவினர் அணு
ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று ஆலோசனை கூறினர்.
இப்படி "கட்டுப்படுத்தல்"-முறைக்கு ஆதரவான பிரிவு (கன்னை) மேலாதிக்கம் செலுத்தியது.
அது எப்படியிருந்தாலும், டேவிட் நோர்த் தனது உரையில் சுட்டிகாட்டியிருப்பதுபோல், குளிர்யுத்த கால வரலாற்றை
ஆராய்ந்தால், "கட்டுப்படுத்துவது" மற்றும் "தடுத்து நிறுத்துவது" என்பதற்கு உண்மையான பொருள் விளங்கும். பிரச்சாரத்தில்
கூறப்படுவதுபோல், விரிவாதிக்க சோவியத் ஒன்றியம் அமெரிக்காவால் தடுத்து நிறுத்தப்பட்டது மற்றும் கட்டுப்படுத்தப்பட்டது
என்று அல்ல, மாறாக, தலைகீழாகவே ஆகும். அமெரிக்காவின் ஒட்டுமொத்த மேலாதிக்க கொள்கை கடைபிடிக்கப்படாமல்
தடுத்து நிறுத்தப்பட்டது, சோவியத் ஒன்றியம் எதிர் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற சாத்தியத்தினால்தான் என்பதை டேவிட்
நார்த் தனது உரையில் விளக்கியிருக்கிறார்.
அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை உருவாக்கும் உந்து சக்திகள் எவை?
பொதுவாக, கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அதேவேளை இரண்டாம் உலகப்போர்
முடிவில் ஏற்படுத்தப்பட்ட, பிரதான முதலாளித்துவ வல்லரசுகளின் பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்கு பிரதான முதலாளித்துவ
வல்லரசுகள் விரிவடைவதற்கான சூழ்நிலைகளை வழங்கியது என்று ஒருவர் கூற முடியும்.
1945-முதல் 1973-வரையிலான காலத்தை வரலாற்றில் இரண்டாம் உலகப்போருக்கு
பிந்தைய பொருளாதார பூரிப்பு காலம் என்று வர்ணிக்கிறார்கள். இந்த காலத்தில், முதலாளித்துவ வரலாற்றில் எப்போதும்
காணாத, மகத்தான பொருளாதார வளர்ச்சி உருவாயிற்று. கருத்து குருடர்கள் ஏகாதிபத்தியம் பற்றிய லெனின்
எழுத்துக்களை ஒட்டி, சோசலிச மாற்றத்திற்கான வரலாற்றுத் தேவை பற்றிய லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின்
கருத்துக்கள், கடந்தகாலத்திற்கு உரியதாக கருதும் அளவிற்கு பொருளாதார வலிமை தோன்றியது.
ஆனால், போருக்குப் பிந்திய இந்த சமநிலை நிலைமுறிவுக்கு விடப்பட்டது. 1970-களின்
மத்தியிலிருந்து, உலக முதலாளித்துவம் சமநிலை இன்மையின் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்து விட்டிருந்தது. அந்த நிலையிலிருந்து
இன்னும் உலக முதலாளித்துவம் விடுபடவில்லை.
பொருளாதார நிலவரம் மாறியதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் வெளியுறவுக்
கொள்கை, கட்டுப்படுத்துவது என்பதிலிருந்து சுருட்டிக் கொள்வது என்ற அளவிற்கு மாற்றப்பட்டது. சோவியத் யூனியனின்
மத்திய ஆசிய குடியரசுகளில் இஸ்லாமிய தீவிரவாத அடிப்படைவாதத்தை உசுப்பிவிடுகின்ற கொள்கையை கார்ட்டர் நிர்வாகம்
உருவாக்கியது. அப்போதுதான், ஒசாமா பின் லேடனின் இதர கம்யூனிசத்திற்கு எதிரான இஸ்லாமிய அடிப்படைவாதக்
குழுக்கள் தங்களது நடவடிக்கைகளில் தலைதூக்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு சவுதி அரேபியா நிதி உதவி செய்தது.
அமெரிக்காவின் நோக்கம் மற்றும் குறிக்கோள்களுக்கு ஏற்ப சவுதி அரேபியா செயல்பட்டது.
1980-களில், றேகன் நிர்வாகம் சோவியத் ஒன்றியத்தில் குழப்பம் ஏற்படுத்துவதற்கு
மிகப்பெரும் அளவில் இராணுவ வலிமையை திரட்டி சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக திருப்பிவிட்டது. அமெரிக்காவிற்கு
உள்ளேயே, 1930-களில், நியூ டீல் (புதிய பொருளாதார ஒப்பந்தங்கள்) திட்டங்கள், இரண்டாவது உலகப்போருக்குப்
பின்னர் உருவான பொருளாதார வளர்ச்சி இவற்றை அடுத்து, தொழிலாள வர்க்கம் போராடி வென்றெடுத்த சீர்திருத்தங்களை
ஒழித்துக்கட்டுவதற்கு, இணையான பொருளாதார மற்றும் சமூகத்திட்டங்களை அது நடைமுறைப்படுத்தியது.
1991-ம் ஆண்டு, சோவியத் ஒன்றியத்தை கலைத்துவிட ஸ்ராலினிச அதிகாரத்துவம் முடிவு
செய்தது. இதனால் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு வரலாறு காணாத ஒரு நிலையை உருவாக்கிற்று. அந்த வாய்ப்பை,
தற்போது பயன்படுத்தி வெளியிலிருந்து எந்தவிதமான கட்டுப்படுத்தலும் வராமல் தனது வெளியுறவுக் கொள்கைகளை கடைபிடிக்க
வாய்ப்பு உருவாயிற்று. இப்படி மாற்றப்பட்ட ஒரு நிலவரம் மத்திய கிழக்கில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக
அமைந்திருந்தது.
ஏற்கனவே, 1973-74-ல், OPEC
நாடுகள் ஏற்பாடு செய்த எண்ணெய் விலை உயர்வின் காரணமாக, அமெரிக்கா பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது,
1975-ம் ஆண்டு, இராணுவ தலையீட்டிற்கான வாய்ப்புகள் குறித்து ஆளும் வட்டாரங்களுக்குள் விவாதம் நடைபெற்றது.
1979-ம் ஆண்டு, ஈரானில் மன்னர் ஷா பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன் மற்றொரு பேரிடி உருவாயிற்று. அவர் கால்நூற்றாண்டுகளுக்கு
முன்னர், சிஐஏ-ஆதரவு ஆட்சி கவிழ்ப்பு மூலம், ஈரானில் பதவியில் அமர்த்தப்பட்டவர். ஈரானின் தேசியவாத
மொசாதிக் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ஷா மன்னர் பதவியில் அமர்த்தப்பட்டார்.
1980-களில் ஈரானை பலவீனப்படுத்துவதற்காக, ஈராக்கில் சதாம் ஹூசேன் ஆட்சிக்கு
அமெரிக்கா அதிக அளவில் ஆதரவு காட்டியது. சதாம் ஹூசேன் ஈரானுக்கு எதிராக நடத்திய பிற்போக்கு போருக்கு
ஆதரவு தந்தது. ஈராக் ஆட்சிக்கு அமெரிக்கா படை நடைமாட்டம் பற்றிய செயற்கைகைக்கோள் புகைப்படங்களை
சதாம் ஹூசேனுக்கு வழங்கியதுடன், இரசாயன மற்றும் உயிரியியல் "பேரழிவுகர ஆயுதங்களை" வழங்கியது மற்றும் உற்பத்திசெய்ய
உதவியது.
அந்தப் போர் முடிவில் ஈராக் ஆட்சி பலவீனப்பட்டதுடன் நின்றது, தனது பொருளாதாரத்தை,
சீர்படுத்தவும் இராணுவத்தை நிலைநாட்டவும், ஈராக்கிற்கு எண்ணெய் வருவாய் அதிகம் அவசரமாக தேவைப்பட்டது.
குவைத் ஆட்சியின் செயல்பாடுகளால் ஈராக்கின் வருவாய் குறைந்தது. அது ஈராக், எண்ணெய்க் கிணறுகளிலிருந்து குவைத்
எண்ணெய் எடுத்து மற்றும் எண்ணெய் அளிப்பை அதிகரித்து எண்ணெய்விலையைக் குறைக்கும்படி செய்தது. குவைத்திற்கு ஒரு
படிப்பினையை தருவதற்காக ஈராக் ஆட்சி முயன்றது. அமெரிக்காவுடன் கருத்தை அறிந்து கொண்டு -- அமெரிக்க
தூதர் ஏப்ரல் கிளாஸ்பி அரபு நாடுகளுக்கிடையில் நடைபெறுகின்ற தகராறுகளில் தலையிட விரும்பாத நிலையை
சுட்டிக்காட்டியது, அதைக் கருத்தில் கொண்டு ஈராக் ஆட்சி குவைத் மீது படையெடுத்தது. இதர அமெரிக்க
சொத்துக்களை எப்படி அமெரிக்கா தனது கொள்கை மாற்றத்தால், தூக்கி எறிகிறதோ அதேபோன்று தன்னையும் அமெரிக்கா
தனது கொள்கை மாற்றத்தால் தூக்கியெறிந்துவிடக்கூடும் என்பதை சதாம் ஹூசேன் மிக விரைவாக புரிந்துகொண்டார்.
ஈராக் வழியாக ஈரானுக்கு நிர்பந்தம் கொடுக்க அமெரிக்கா விரும்பியது. தற்போது,
உலக நிலவரம் மாறிக்கொண்டிருப்பதால் அமெரிக்கா தானே வலுவான நிலைக்கு வந்துவிட்டது. குவைத் மீதான ஈராக்
ஆக்கிரமிப்பில், ஈரானுக்கு எதிராக எட்டாண்டுகள் தன்னை ஆதரித்த அமெரிக்காவின் ஆதரவை சதாம் ஹூசேன் யதார்த்தமாக
எதிர்பார்த்திருக்கக் கூடும் --அதுவே 1990-91 அமெரிக்கா தொடுத்த போருக்கான சாக்காக ஆனது.
1991-ஆரம்பத்தில், நிலவரம் ஓரளவிற்கு குழப்பமாகத்தான் இருந்தது. ஐ.நா. தீர்மானங்கள்
என்ற கட்டுக்கோப்பிற்கு வெளியில் சென்றது, முழு அளவிற்கு ஈராக் மீது படையெடுக்க முடியுமா என்பதில் நிச்சயமற்ற
நிலையில்தான் அமெரிக்கா இருந்தது. மேலும் இராணுவத் தோல்வியால் சதாம் ஹூசேன் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று
நம்பியது.
அக்டோபர் 14-ந்தேதி, சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் பத்தியில், தற்போது
அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்தது எண்ணெய் வளத்தை கைப்பற்றுவதற்காகத்தான் என்று வாதிடுபவர்களுக்கு
எதிராக தனது கருத்தை ஆணித்தரமாக நிலைநாட்டிவிட்டதாக, ஜெனரல் ஹென்டர்சன் கருதுகிறார். "நிர்வாகத்தின்
பிரதான நோக்கம் எண்ணெய் வளமாகயிருந்து இருக்குமானால், முதலாவது வளைகுடா போரின்போது பாக்தாத் மீது
படையெடுக்கவில்லையே ஏன் அப்போது ஈராக்கில் ஆட்சி மாற்றத்தை செய்திருக்க முடியும், அமெரிக்கா ஈராக்கின்
எண்ணெய் அளிப்புக்களைக் கைப்பற்றியிருக்க முடியும்" என்று ஹென்டர்சன் எழுதினார்.
ஹென்டர்சனின் வாய்ச்சவடால் கேள்விக்கு எளிதாக பதிலளித்துவிடமுடியும். அந்த நேரத்தில்
ஐ.நா. கட்டளைக்கு அப்பால் செல்வது அதிக ஆபத்தானது என்று கருதப்பட்டது. அப்போது ஈராக் மீது படையெடுப்பது
நிறுத்திவைக்கப்பட்டதை ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த சில பிரிவுகள் ஆவேசமாக எதிர்த்துவந்தன. அவர்கள் அடுத்த
வாய்ப்பை நழுவவிடாது பிடித்துக்கொள்வதில் உறுதியாக இருந்தனர்.
அடுத்த பத்து ஆண்டுகளில், அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையிலும், அதன் இராணுவ
தலையீட்டு நடவடிக்கைகளிலும், மிகப்பெரும் அளவிற்கு தன்னிச்சையான போக்கை அமெரிக்கா வளர்த்துக்கொண்டதை
ஒருவர் கண்டறியலாம். 1990-91 வளைகுடாப்போர், ஐ.நா. கட்டமைப்பிற்குள் நடத்தப்பட்டது. 1999-ம்
ஆண்டு, நடாத்தப்பட்ட யூகோஸ்லேவியாவிற்கு எதிரான போர், ஐ.நா. கட்டமைப்பிற்கு வெளியில் நேட்டோ ஆதரவில்
நடத்தப்பட்டது. 2001-2002ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போர் ஐ.நா. மற்றும் நேட்டோ, இரண்டின்
கட்டமைப்பிற்கு வெளியில் தன்னிச்சையாக அமெரிக்கா நடத்தியது. தற்போது, ஈராக் மீது படையெடுப்பதற்கு திட்டமிட்டு
வருகிறது. தனது நேட்டோ கூட்டணிநாடுகள் சிலவற்றின் பகிரங்கமான எதிர்ப்பையும் மீறி பொம்மை ஆட்சியை ஈராக்கில்
உருவாக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
நாம் சுட்டிக்காட்டியுள்ளதைப்போல், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் வலியத்தாக்கும்
தன்மை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்துவது முதல் திரும்ப சுருட்டிக்கொண்டு செல்லவைப்பது வரை மற்றும் தற்போது
புது வகையான காலனி ஆதிக்கத்தை ஏற்படுத்துவது என்ற அளவிற்கு வளர்ந்துகொண்டு போகின்றது. இரண்டாம் உலகப்போருக்குப்
பின்னர் உருவான மகத்தான பொருளாதார வளர்ச்சி சிதைந்துவிட்ட பின்னர் 1970-களில் தொடங்கி 30 ஆண்டுகள்
உலக முதலாளித்துவத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களோடு அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையின் வலியத்தாக்கும்
தன்மை பின்னிப் பிணைந்திருக்கின்றது.
சமுதாய ஏற்றத்தாழ்வுகள் வளர்ச்சி
இந்த மாற்றங்களின் சமுதாய விளைவுகளை கீழ்கண்ட வகையில் சுருக்கமாக சொல்லலாம்.
நாடுகளுக்கிடையிலும், மற்றும் நாடுகளுக்கு உள்ளேயும், சமுதாய ஏற்றத்தாழ்வுகள் வளர்ந்துகொண்டிருக்கின்றன. புஷ் தேசிய
பாதுகாப்பு மூலோபாயத்தில், "தனிச்சொத்துடைமைக்கு மரியாதை", "சந்தையின் சுதந்திரம்", "சந்தை
ஊக்குவிப்புக்கள்" போன்ற சொற்றொடர்களை தெவிட்டுமளவு கூறுகின்றது --உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான
மக்களது வாழ்க்கைத் தரத்தில் சீரழிவு நிலையை உருவாக்கியிருப்பது இதுபோன்ற திட்டங்கள்தான்.
மனித இனத்தில் பாதிக்கு மேற்பட்டவர்கள், ஒரு நாளைக்கு இரண்டு டாலருக்கும்
குறைந்த வருவாயில் வாழவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று நான் ஏதோ ஒரு பத்திரிகையில், ஐரோப்பிய
ஒன்றிய விவசாய கொள்கையில், பசுமாடுகளுக்கு இரண்டு டாலருக்கும் மேற்பட்ட மானியம் வழங்கப்பட்டு வருகிறது என
படித்தேன்.
எல்லா பிரதான முதலாளித்துவ நாடுகளுக்கு உள்ளேயும் கடந்த 20 ஆண்டுகளில்,
சமுதாய ஏற்றத்தாழ்வுகள் வளர்ந்துகொண்டு வருகின்றன, மற்றும் செல்வ மறு பகிர்வு செய்தலின் வருமான ஏற்றத்தாழ்வுகளும்
அதிகரித்துகொண்டு வருகின்றன. வேறு எந்த நாட்டையும்விட அமெரிக்காவில்தான் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகும்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் பொருளாதார
நிபுணர், போல் க்ரூக்மென் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். வருமானம் மற்றும் செல்வ உடைமைகள் தொடர்பாக
மிகப்பெரிய "யுகப்பிரளயமே" ("tectonic shifts")
நடந்திருக்கிறது என அவர் விளக்கியுள்ளார். அமெரிக்காவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை
புரிந்துகொள்ளாமல், இத்தகைய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மதிப்பீடு செய்ய முடியாது என்று அவர் வலியுறுத்தி
கூறியுள்ளார். "கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இத்தகைய பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துகொண்டு
வருகின்றன. ஒரு சிலர் கையில் வருமானமும், செல்வமும் வியப்பளிக்கும் வகையில் குவிந்துகொண்டிருக்கிறது என அவர்
விளக்கம் அளித்துள்ளார்." அண்மையில் நடைபெற்ற ஓர் ஆய்வை அவர் மேற்கோள் காட்டி, 1998-ம் ஆண்டு, அமெரிக்க
மக்களில் உச்சாணி கொம்பில் இருக்கும், மேல்தட்டு மக்கள், 0.01-சதவிகிதம்பேர் 3-சதவிகிதத்திற்கு மேற்பட்ட
அனைத்து வருவாயையும் பெறுகின்றனர். அப்படி என்றால், அமெரிக்காவில் உள்ள 13,000 மிகப்பெரும் பணக்காரக்
குடும்பங்கள் 20-மில்லியன் மிகஏழ்மையான குடும்பங்களின் வருமானத்தை பெறுகின்றனர். சராசரி குடும்பங்களின்
வருவாயைவிட, இந்த 13,000-குடும்பங்களின் வருமானம் 300-மடங்கு அதிகமாகும்.
இப்படி பணக்காரர்கள் மிகப்பெரும் அளவில் வளர்ந்துகொண்டு வருவது, கடந்த
20-ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுக்கொண்டிருக்கிற நிதி ஒட்டுண்ணித்னத்துடனும் நிதி மற்றும் பொருளாதார
வளங்களைக் கொள்ளையிடலுடனும் கட்டுண்டிருக்கிறது. கம்பெனி ஊழல்களைப் படித்தால், நாம் எளிதாக குழப்பம்
அடைந்துவிடலாம், அந்த அளவிற்கு உள் ஆட்கள் கடன் என்றும், பங்குகள் தரும் வாய்ப்பு என்றும் பல்வேறு வகைகளில்
சூறையாடல்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதில் உள்ள பிரச்சனை உண்மையிலேயே மிகச்சாதாரணமானது.
இதுபோன்ற சிக்கலான நடைமுறைகள் நவநாகரீக கார்ப்பொரேட் மூலோபாயங்கள் என்றவகையில் சூறையாடல் குற்றவியல்
நடவடிக்கைகளின் வழிமுறைகள் ஆகும்.
இத்தகைய, மோசடி கும்பலை ஒரு கூடையில் சில சொத்தை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது.
அது இறுதி ஆய்வில், முதலாளித்துவ பொருளாதாரம் செயல்படும் முறையிலேயே ஆழமாக புரையோடிவிட்ட
நெருக்கடியின் வெளிப்பாடுதான். அரசியல் ரீதியில் இந்த வெளிப்பாடு, புஷ் நிர்வாகம் என்ற வடிவத்தில் உருவாகி உள்ளது.
இந்த சூறையாடல் கும்பலின் இரத்தத்தின் இரத்தமாகவும், சதையின் சதையாகவும் சேர்ந்திருப்பதுதான் புஷ் நிர்வாகம்.
உள்நாட்டுக் கொள்கையின் தொடர் நடவடிக்கைதான் வெளிநாட்டுக் கொள்கை
என்பதால் அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையின் கரு, ஈராக் எண்ணெயை சூறையாடுவது என்பதில், சந்தேகத்திற்கு
இடமில்லை. அல்லது அமெரிக்க வர்த்தக தொலைக்காட்சி அலைவரிசை
CNBC-விமர்சகரும், நான்கு அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு மூத்த பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவருமான
வில்லியம் சீட்மேன் (William Seidman) அண்மையில் குறிப்பிட்டதைப்போல்,
ஈராக்கிற்கு எதிரான போரை பங்கு சந்தை வார்த்தைகளில் சொல்வது என்றால், "நாம் நினைத்துபார்க்கும் மிகப்பெரிய
காளைகளின் செயல்பாட்டு நடவடிக்கையாகும்" என்று விமர்சித்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சிப்போக்குகள் அமெரிக்காவிற்குள் எல்லைப்படுத்தப்பட்டுள்ள பிரச்சனைகள்
என்றும் அடங்காத்துடிப்புள்ள அமெரிக்க முதலாளித்துவத்திற்கு ஒருவகை அன்பான, மேன்மை மிக்க ஐரோப்பிய, ஆசிய
அல்லது ஆஸ்திரேலிய முதலாளித்துவத்தை எதிராய் நிறுத்துவது சாத்தியம் என்றும் கருதுவது மிகப்பெரிய தவறாகும்.
குறிப்பாக அமெரிக்காவில் உள்ள பொருளாதார மற்றும் சமூக நிகழ்ச்சிப்போக்குகள் பூகோள முதலாளித்துவ ஒழுங்கின்
உள்ளே அபிவிருத்தி அடையும் போக்குகளின் கூர்மையான வெளிப்பாடாகும்.
ஏகாதிபத்தியத்திற்கும் போருக்கும் எதிரான போராட்டத்தை அபிவிருத்தி செய்வதில்
இந்த கோளாறுகளை அறிந்துகொள்வது மிகவும் அவசியமாகும். அத்தகைய போராட்டங்கள் வெறும் எதிர்ப்பாக
மட்டும் இல்லாமல் இடைவிடாது நடைபெறவில்லையென்றால், ஆளும் வர்க்கங்கள் புயல் ஓய்ந்துவிடும் என்று செயல்பட்டுவிடுவார்கள்,
எனவே, ஏகாதிபத்தியத்தையும் போரையும் உருவாக்கிய அதே சமூகப் பொருளாதார ஒழுங்கிற்கு எதிராக
--பூகோள முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக -- இந்தப் போராட்டம் நடத்தப்பட்டாகவேண்டும்.
மேலும், ஏகாதிபத்தியத்திற்கும் போருக்கும் எதிரான போராட்டம் இந்த காலாவதியாகிப்போன
மற்றும் பிற்போக்கு சமூக அமைப்பை மற்றும் அதன் சமூக இருப்பிலேயே, மனிதகுல நாகரிகத்தை புதுப்பிக்கும் திறனுள்ள,
உயர்ந்த மற்றும் புதிய சமூக அமைப்பை கட்டி அமைக்கும் சடரீதியான சாத்தியத்தைப் பொதிந்து வைத்திருக்கும் அந்த
சமூக அமைப்பினை எதிர்க்க முடியும் ஒரே தனித்த சமூக சக்தி மீது அடிப்படையாகக் கொண்டிருந்தாக வேண்டும்.
அதனால்தான் உலகத் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, சோசலிசப் புரட்சியின்
உலகக் கட்சியை கட்டி எழுப்புவதை, அதன் இதயமாய் கொண்டிருப்பதில் ஈடுபட்டுள்ளது. இதுதான் நான்காம் அகிலத்தின்
அனைத்துலகக் குழுவின் ஆஸ்திரேலியப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்காகும். இந்த சர்வதேசக்
கட்சியில் இணைவது குறித்து அனைவரும் அவசர கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Top of page
|