WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
உலக சோசலிச
வலைத் தள சர்வதேச மாநாடு
Greetings to the WSWS/SEP conference by Chris Marsden of the British
Socialist Equality Party
"The war heralds a crisis of rule for British
imperialism"
உலக சோசலிச வலைத் தளம் / சோசலிச சமத்துவக் கட்சி மாநாட்டிற்கு இங்கிலாந்தின்
சோசலிச சமத்துவக் கட்சியின்
கிறிஸ் மார்ஸ்டனின் வாழ்த்துக்கள்
"பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு போர் ஒரு புதிய நெருக்கடியைக் கட்டியம் கூறுகிறது"
26 April 2003
Use this version to print |
Send this link by email
| Email the author
உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி ஆகியவற்றால்,
``சோசலிசமும் ஏகாதிபத்தியம், போர் இவற்றிற்கெதிரான போராட்டமும்: ஒரு புதிய சர்வதேச தொழிலாள வர்க்க
இயக்கத்தின் வேலைத் திட்டமும் மூலோபாயமும்`` என்ற தலைப்பில், அன் ஆர்பர், மிச்சிகனில் மார்ச் 29-30,
2003 நடத்தப்பட்ட மாநாட்டிற்கு கிறிஸ் மார்ஸ்டன் கொண்டுவந்த வாழ்த்துக்களை கீழே நாம் பிரசுரிக்கிறோம்.
ஏப்ரல் முதல் தேதியன்று உலக சோசலிச வலைத் தளமானது மாநாட்டைப் பற்றிய சிறு
தொகுப்பு ஒன்றினைப் பிரசுரம் செய்தது. ("சோசலிசமும்
போருக்கு எதிரான போராட்டமும் தொடர்பாக உலக சோசலிச வலைத் தளம் நடாத்திய சர்வதேச மாநாடு").
இதைத் தவிர உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக்
கட்சியின் தேசியச் செயலாளருமான டேவிட் நோர்த் ஆரம்ப உரையை ("கட்டுக்கடங்கா
குழப்பத்தினுள்: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியும் ஈராக்கிற்கு எதிரான போரும்") வழங்கினார்.
மாநாட்டில் ஒருமனதாக ஏற்கப்பட்ட ஆறு தீர்மானங்களின் வாசகங்களும் ஏப்ரல்
2லிருந்து ஏப்ரல் 4 வரை வெளியிடப்பட்டன. (ஈராக்கில்
நிகழ்த்தப்பெறும் போரை வன்மையாகக் கண்டிக்கும்; தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமைக்கு அறைகூவி
அழைக்கும் தீர்மானங்கள்", "தொழிலாள
வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்திற்காக அழைக்கும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்க்கும்
தீர்மானங்கள்", "போர்
மற்றும் அமெரிக்கச் சமுதாய நெருக்கடி மீதான தீர்மானம், உலக சோசலிச வலைத் தளத்தின் வளர்ச்சி பற்றிய
தீர்மானம்")
நாம் அண்மையில் ஏற்கனவே மாநாட்டில் தீர்மானங்களை அறிமுகப்படுத்திய பேராளர்களின்
குறிப்புக்களையும் உலக சோசலிச வலைத் தள ஆசிரியர்குழு மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னணி
சர்வதேச உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்ட வாழ்த்துக்களையும் கூட பிரசுரம் செய்துள்ளோம்.
நான் முதலில் பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பாக எங்கள்
நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இத்தகைய மாநாட்டில் பேசுவது என்பது அரியதொரு
வாய்ப்பு ஆகும். இங்கு வெளிப்படும் சர்வதேச அரசியல் ஐக்கியம், மனித சமுதாயத்தின்பால் காண்பிக்கப்படும்
இணைந்த அக்கறையில் வேரூன்றி இருப்பதால், சிறப்பு உறவு என்று கூறப்படுபவையின் கீழ் பிரிட்டிஷ் பிரதமர் பிளேயர்
வளைகுடாவில் புஷ்ஷின் குற்றஞ்சார்ந்த செயலை ஆதரிப்பதைவிடக் கூடுதலான அளவில், வரலாற்றில் மாபெரும் பலத்தைக்
கொடுக்கக்கூடியதாக அமையும்.
அதே உணர்வோடு இந்த வாய்ப்பை, இப்பொழுதுதான் தோழர் றிப்பேர்ட் சர்வதேச
தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமை பற்றி கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஆதரித்து பேச, பயன்படுத்திக்கொள்கிறேன்.
அது கூறுவது:
"ஏகாதிபத்தியத்திற்கும் போருக்கும் எதிரான போராட்டத்திற்கான உண்மையான ஒரே
வெகுஜன அடித்தளம் அமெரிக்க மற்றும் சர்வதேசத் தொழிலாள வர்க்கமாகும். இந்தப் போராட்டத்திற்கு நனவுபூர்வமான
சர்வதேச நோக்குநிலையும் முன்னோக்கும் தேவை. அது மேலிருந்து ஏதாவதொரு ஏகாதிபத்திய அரசுகள், தேசிய
அரசாங்கங்கள் அல்லது ஐக்கிய நாடுகள் சபை போன்ற நிறுவனங்களின் ஆதரவினூடாக அபிவிருத்தி செய்யப்பட
முடியாது. பிரான்சும் ஜேர்மனியும் பிரிட்டன் மற்றும் ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு குறைவில்லாத வகையில், அவர்களின்
சொந்த ஏகாதிபத்திய நலன்களாலும் வெளியுறவுக் கொள்கை தேவைகளாலும் செயல்நோக்கம் கொண்டனவாகும். ஒரு
முதலாளித்துவ அரசாங்கம் கூட அமைதிக்கான சாதாரண மக்களின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அதன்காரணமாகத்தான்,
எதிர்ப்பானது, அது எவ்வளவுதான் பரந்துபட்ட தன்மையையும் போர்க்குணத்தையும் அடித்தளமாகக் கொண்டிருப்பினும்
மிக்கதாகவும் இருப்பினும், இருக்கின்ற அரசுகளுக்கு அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்ட அந்த எதிர்ப்பால்,
போருக்கான உந்தலைத் தடுத்து நிறுத்த முடியாது."
"கீழிருந்து- உழைக்கும் பரந்த மக்களின் மத்தியில் இருந்து ஒரு இயக்கத்தைக் கட்டி
எழுப்புவதன் மூலம் மட்டுமே மற்றும் சமுதாயத்தை முற்றிலும் மாற்றி அமைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு சோசலிச
மூலோபாயத்துடன் அது உள்நின்று இயக்குவிப்பதன் மூலம் மட்டுமே போருக்கு எதிரான போராட்டம் முன்னேற்றகரமாக
செல்ல முடியும்."
நம்முடைய இயக்கத்தின் அடிப்படை நோக்கு பற்றி வெளிப்படுத்தும், அழுத்தமான, அழகாக
எழுதப்பட்ட பகுதி இது என்று நான் நம்புகிறேன். இதையொட்டியும் பிரிட்டனில் நிலவும் உண்மையான நிலையைப்
பற்றியும், (அமெரிக்காவிற்கு நெருங்கிய துணை என்று செய்தி ஊடகங்கள் வருணனை செய்யும் பிரிட்டனைப் பற்றி, உள்ளவாறே
குற்றத்தில் அதன் பங்காளி ஆன பிரிட்டனைப் பற்றி) சிலவற்றைக் கூற உள்ளேன்
உண்மையில் பிரிட்டனிலுள்ள நிலைமை வேறுவிதமாக இருக்க முடியாது. பிரிட்டனில்
போருக்கெதிராக நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்கள் உலகின் பெரியனவற்றுள் அடங்கும் என்பது உண்மை. பெருமளவிலான
போரை ஆதரிக்கும் போக்கிற்கு கடுமையான பிரச்சாரம் மற்றும் அழுத்தம் இருந்த போதிலும், லட்சக்கணக்கானவர்கள்
அதை எதிர்த்து தெருக்களுக்குவந்து எதிர்ப்பு முழக்கமிட்டனர். இந்த இயக்கம் சமுதாயத்தின் அனைத்து தட்டுகளையும்
பாதித்தது; அனைத்து வயதினரிடமும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த ஆர்ப்பாட்டங்களில் இளைஞர்கள் பெருமளவில் குவிந்ததையும், அரசியல் சம்பந்தம்
தங்களுக்கில்லை என்று கருதிக்கொண்ட இளைஞரும், ஓர் உண்மையான அக்கறையினால் உந்தப்பெற்றிருந்ததை, ஒவ்வொருவரும்
வர்ணித்திருக்கிறார்கள். பலமுறை மக்களிடத்திலே நாங்கள் பேசியபொழுது அவர்கள், ``சதாம் ஹூசேன், அவர்
கெட்டவரெனினும், உலக அமைதிக்கு உண்மையான அச்சுறுத்தல் என்று நான் நம்பவில்லை. அது (அச்சுறுத்தல்) அமெரிக்காதான்.
நான் அமெரிக்க அயல்நாட்டுக் கொள்கையைப் பற்றி கவலை கொண்டுள்ளேன். நாம் ஏன் இந்தப் போருக்கு ஒப்புதலளிக்கவேண்டும்
என புரியவில்லை. நாம் ஒப்புதல் கொடுக்கவேண்டும் என நான் நினைக்கவில்லை.`` என சில கருத்துக்களைக் கூறினர்.
எந்த எதிர்ப்பிற்கு பிளேயர் உட்பட்டார் என்பது பற்றிய தெளிவான உணர்வு
வேண்டுமென்றால், பிரிட்டனின் தொலைக்காட்சி செய்தியைப் பார்த்தால் போதும். ஒருமுறை தயார் செய்யப்பட்ட
அமைப்பொன்றின் பொறுக்கி எடுக்கப்பட்ட 35 பேர்கள் கொண்ட சிறிய கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்படியும்கூட
பார்வையாளரில் ஒருவர் கூட அவரை ஆதரிக்கவில்லை. முழுமையான களையிழந்த முகத்தோடுதான் கூட்டத்தை
முடித்துக்கொண்டார். ஒருவர், ``புஷ் ஒரு போர்க் குற்றவாளி; ஒரு கொலைகாரர் என நான் நினைக்கிறேன்``
எனக் குறிப்பிட்டார். அதற்கு பிளேயர், ``இக்கருத்து சற்று மிகைப்படுத்தல் என நான் நினைக்கிறேன்.`` என பதிலளித்தார்.
என்ன பதில் சொல்வதென்றே அவருக்குப் புரியவில்லை அதன்பின் சானல் 4ல் நடந்த விவாதத்திற்கு அவர்
சென்றிருந்தார்; அக்கூட்டத்திற்கு செப்டம்பர் 11ல் உறவினர்களைப் பறிகொடுத்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர்;
அவர்கள்தாம் மிகக் குறைந்த கைதட்டுதலில் ஈடுபட்டனர்.
இந்த உணர்வு எங்கும் போய்விடவில்லை. பிளேயர் போருக்குச் செல்வதில் புலப்பட்ட
ஒரே செய்தி என்னவென்றால் மக்களுடைய விருப்பத்தைச் சிறிதும் பொருட்படுத்தாமல் அரசாங்கம் இருப்பதுதான். இது
ஒரு புதிய அரசாங்கக் கோட்பாடு போலும். ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் மற்றும் பல்லாயிரக்கணக்கான, ஏன்
இலட்சக்கணக்கான ஈராக்கிய மக்களின் தலைவிதி ரொனி பிளேயரின் அற உணர்வையொட்டித் தீர்மானிக்கப்படுகிறது.
நிதி ஆதிக்கச் சிறு குழு, அவருக்கு என்ன செய்ய வேண்டுமெனக் கூறுகிறார்களோ,
ருப்பேர்ட் முர்டோக் (Rupert Murdoch) கும்
அவருடைய துணை ஆசிரியர் கூட்டமும் அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார்களோ, புஷ் அவருக்கு
என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறாரோ அவைதான் பிளேயரை செயலாற்ற வைக்கின்றன. எந்தப் பொய்யையும்
விழுங்கிடவோ, எதை வேண்டுமானாலும் பேசவோ, எப்படிப்பட்டதும் உரைக்காமற்போவதோ இப்பொழுது அவரால்
முடியும்.
மிகப் புதிய அவலத்தைச் சிந்தியுங்கள்: இரண்டு இராணுவத்தினர் ஈராக்கியரால் மரண
தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று அவர் கூறினார். உடனே இரு குடும்பங்களில் ஒன்றின் உறுப்பினர், இது ஒரு
பொய், இழிவான பொய், என்று கூறினார். பிளேயர் பட்டியலின் அடுத்த தலைப்பிற்குச் சென்றுவிட்டார்.
இவையனைத்துமே சமுதாய, அரசியல் கருத்துக்களை உள்ளடக்கியவை. அரசியலில் மிகப்பெரிய
தாக்கத்தை இவை ஏற்படுத்தும். இதைப் பற்றி நான் தெளிவாகக்கூற விரும்புகிறேன். இப்போர் பிளேயர் அரசாங்கத்திற்கு
எதிரான பிரிட்டிஷ் மக்களின் பரந்த தட்டுக்களின் விரோத உணர்வைச் சுட்டிக்காட்டியுள்ளது. ஏற்கனவே உள்ள அதிகமான
வளர்ச்சியடைந்த தெளிவாகத் தெரியும் காட்சி கூடுதலாகப் புலனாகும்: பரந்த உழைக்கும் மக்களுக்கும் பிரிட்டனின்
அரசாங்கத்திற்கும் உள்ள உறவின் துண்டிப்பு. இதே நிலைதான் உலகம் முழுவதிலும் பல நாடுகளிலும் காணப்படுகிறது.
இந்த விரிசல் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக பிரிட்டனில் பக்குவப்பட்டு வந்திருக்கிறது.
மார்க்கரெட் தாட்சர் காலத்தில் தொடங்கிய விரிவடையும் சமூக இடைவெளியின் அரசியல் வெளிப்பாடாகும் இது. இதன்
விளைவாக செல்வந்தரின் சிறு குழு ஆட்சி மேலோங்கி நிற்பதுடன், அரசியல் கட்டுப்பாடுகளுக்கே அப்பால் தாம்
இருப்பதாக உணர்கிறது; ஒரு காலத்தில் ஆளும் மேல்தட்டின் அடாச்செயல்களைத் தடுத்து நிறுத்தும் சக்தி அதற்கு
இருந்தது.
டோரிகள் ஆட்சியைவிட்டுத் துரத்தப்பட்ட அளவில், தொழிலாளர்களுடைய
வாழ்க்கையையே டோரிகள் அழித்துவிட்டிருந்த நிலையில், அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் பெரும்பான்மையினரால்
மட்டும் வெறுக்கப்படவில்லை; நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளும் வெறுத்தன -தாட்சரின் "பொது மக்களுக்கான முதலாளித்துவம்"
என்ற அடிப்படைகள் அவர்களைப் பொறுத்தவரை புழுதியடைந்தவாறு மாறிவிட்டது.
1997ல் பிளேயரின் தேர்வுகூட பெரு முதலாளிகளின் விருப்பமே; டோரிக்கள் தேர்தலில்
வெற்றிபெற முடியாது என்ற அளவில், பிளேயர் அவர்களுடைய விருப்பத்திற்குரிய வேட்பாளரானார். தொழிற் கட்சி
தன்னுடைய பழைய சமுக சீர்திருத்தங்களைக் கைவிட்ட, வெளிப்படையாக சந்தையை ஆதரிக்கும், புதிய பிறவியாகக்
காட்டிக்கொள்வதற்கு அவர் கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கும் உயர்த்தப்பட்டார்.
டோரிக்களைவிட வித்தியாசமானவர் தான் என்று காட்டிக்கொள்ளவும் அவர் முற்பட்டார்
-கூடுதலான ஜனநாயகபூர்வம், குறைந்த அளவு மட்டுமே கோட்பாட்டில் நிற்றல் போன்றவை. ஆனால் - தொழிலாள
வர்க்கம் அவருடைய ``மூன்றாவது பாதை`` என்றழைக்கப்பட்ட கோஷத்தின் பாதிப்பினால் ஊக்கமடைந்ததையும் விட-
18 ஆண்டுகால கன்சர்வேட்டிவ் கட்சிக்கான எதிர் வாக்குகள் தாம் பெரும் வெற்றிக்குக் காரணமாகும். ஒரு
நம்பிக்கை, -சிறிய இழையில் ஊசலாடிய நம்பிக்கை, -புதிய அரசாங்கம் பிரிட்டனில் அபிவிருத்தி அடைந்த மற்றும்
நாட்டின் சமூக கட்டுமானத்தை அச்சுறுத்திக் கொண்டிருந்த கொடுமையான சமுதாயப் பிளவை அகற்றிட ஏதேனும் செய்யும்
என்று பலராலும் கருதப்பட்டது.
பிரிட்டன் மிக அதிக அளவிலான செல்வக்கொழிப்பும் மிக மோசமான ஏழ்மையையும்
கொண்டதாய் பண்பிடப்படும் நாடு. அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கு என்ன சமுதாய நிலைமைகள் உள்ளனவோ
அவற்றிற்கு நெருக்கமான நிலையை அது கொண்டுள்ளது. தாட்சரும், றேகனும் இரட்டையர் போலிருந்து செயல்படுத்திய
கொள்கைகள் இரு நாடுகளிலும் அதேபோன்ற விளைவுகளைத்தான் ஏற்படுத்தின.
பிளேயர் இவற்றில் எதற்கும் பதிலளித்துவிடவில்லை. முற்றிலும் எதிராகவே செயல்பட்டார்.
கூடுதலான ஏற்றத்தாழ்வு, ஏழ்மை இவற்றின் வளர்ச்சிக்கும், மக்கட்தொகையில் கால் பகுதியும், அனைத்துக் குழந்தைகளின்
எண்ணிக்கையில் மூன்றிலொரு பகுதியும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வறுமைக்கோட்டு அளவிற்கு கீழே வாழும் நிலை இவருடைய
தலைமையில்தான் ஏற்பட்டது.
தொழிற்கட்சி பொதுச் செலவினத்தில் வெட்டு கொண்டுவந்தது; பொதுத்துறை
நிறுவனங்கள் பலவற்றை - கல்வி மற்றும் சுகாதாரம் உட்பட - தனியார் மயமாக்கியது, நிறுவனங்கள் மீதான வரியைக்
குறைத்தது, மார்க்கரட் தாட்சர் கனவு மட்டுமே காணக்கூடிய அளவிற்கு ஜனநாயக உரிமைகளைப் பெரிதும் குறைத்தது.
இந்த வழிவகையில் எந்த நல்லாசிகள் பிளேயர் தேர்தலை வாழ்த்தியதோ அவை எப்பொழுதோ கரைந்துவிட்டன.
வரலாற்றில் எந்த ஆட்சிக்கும் இல்லாத அளவு குறைந்த மக்கள் ஆதரவையே இப்பொழுது
அது பெறுகிறது. 2001ம் தேர்தல்களில் வாக்குப்போட வந்தோரின் சதவிகிதம் 59.4 ஆகும். 1997ம் ஆண்டிலிருந்து
அது 15 சதவீதக் குறைவு ஆகும். ஓட்டுப்போடாதோரின் எண்ணிக்கை தொழிற்கட்சி ஆதரவாளரைவிட மூச்சுத்திணறும்
15 சதவீதம் கூடுதலாயிற்று. தொழிற்கட்சி மற்றும் வாக்களித்தல் இரண்டிலிருந்துமே விலகி நிற்பது என்ற நிலை
உள்நகரங்களில் கூடுதலாகக் காணப்பட்டு வாக்காளர் பதிவே 30 சதவிகிதத்துக்கும் குறைவாகப் போயிற்று.
பிளேயரையே சந்தேகக் கண்ணோடும், நம்பிக்கை செலுத்தாமலும், பலமுறை வெறுப்போடும் வளைகுடா போர் தொடங்குவதற்கு
வெகுமுன்னரே கருதத் தலைப்பட்டனர்.
இந்த உணர்வுகள் மனிதகுலத்திற்தெதிரான குற்றத்திற்கு உடந்தையானவுடன் பன்மடங்கு
பெருகின. அதேநேரம் போர் எதிர்ப்பு இயக்கம் பரந்த அரசியல் எதிர்ப்புகட்கு, வேறெந்த வடிகாலும் இல்லாத
நிலையில், ஒரு குவிமையமாக அமைந்தது. இந்தப் போரைத் தொடரும் அளவில் பிளேயர் பெரும் எதிர்ப்பு சக்தியை,
மில்லியன் கணக்கான மக்களை முதல் முதலாக போராட்ட அரசியல் வாழ்விற்கு இழுத்த நிலையை ஏற்படுத்தியது; ஆட்சி
முறையின் முழு மூலோபாயமும் நிலைகுலையும் அச்சம் தோன்றியுள்ள நிலையின் கீழ் அது ஏற்பட்டுள்ளது.
அரசியல், இராணுவ நடவடிக்கையின் கஷ்டங்கள் எவ்வாறு கூட்டுப் படையினருக்குத் தெளிவாகப்
புரிகிறது என்பது பற்றி தோழர்கள் பேசினார்கள். உள்நாட்டு சமுக உறவுகள் மீதான பாதிப்புடன் இதனை தொடர்புபடுத்திப்
பார்த்தால், பெரும் அரசியல் கஷ்டங்கள் திறக்கப்படுவதைப் பார்க்க முடியும். இது வெறுமனே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும்
பிளேயர் அரசாங்கம் தப்புமா என்ற பிரச்சனை அல்ல. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆட்சிக்கான அடிப்படை
நெருக்கடியைக் கட்டியம் கூறுகிறது. தொழிலாள வர்க்கம் வாய்ப்பைப் பயன்படுத்தி காட்டுமிராண்டித்தனத்திற்கு
இறங்கிவிடாமல் தடுத்திட வேண்டும்.
சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமையின் தன்மையை இந்த உணர்வில்தான் நாம்
அறிந்துகொள்ளவேண்டும். எந்த சமூக சக்தி ஏகாதிபத்தியத்திற்கு சவால் விட முடியும்? எந்த சமூக சக்தி ஏகாதிபத்தியத்திற்குச்
சவால்விடுவதில் ஆர்வம் காட்டுகிறது? எந்தச் சமூக சக்தி தேவையின் அடிப்படையில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக
முழுமையாகச் செல்ல கட்டாயப்படுத்தப்படும்?
ஓகியோவிலிருந்து வந்த பிரதிநிதி கேட்டார்: அனைவருக்கும் சமத்துவம் நிறைந்த சமுதாயத்தை
உருவாக்குவதில் தொழிலாள வர்க்கம் பாடுபடும் என்று எந்த அடிப்படையில் நாம் ஏற்றுக்கொள்வது? சரி, யாருடைய
நலனுக்காக சமத்துவம் நிறைந்த சமுதாயம்? சமத்துவத்திலிருந்து பயன்அடைபவர் யார்? நிச்சயமாகப் பணக்காரர்
அல்லர். சோசலிசம் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்படும் கருத்து அல்ல; அது தொழிலாள வர்க்கத்தின் நலன்களைத்
தெளிவாக எடுத்துரைக்கிறது.
சர்வதேசியம் ஒரு அடிப்படைத் தேவை. உலகளாவிய சக்தி படைத்த வல்லரசுகளை --
குறைகளிருந்தாலும் இயங்கும் சர்வதேச மூலோபாயம் மிகப்பெரிய இராணுவ எந்திரம் இவற்றை- உலகத் தொழிலாள
வர்க்கத்தை ஒன்று திரட்டினால் ஒழிய, எதிர்த்து நிற்பது முடியாது. அதைச் செய்துவிட்டால் ஒரு மாபெரும் சக்தியை
எதனாலும் தடுத்து நிறுத்த முடியாத சக்தியை செயல்படுத்த முடியும். ஆனால் இதற்கு நனவுபூர்வமாக போராட
வேண்டும்.
பிரிட்டனின் தொழிற்சங்க காங்கிரசின் பொதுச் செயலாளர் போருக்கெதிரான எதிர்ப்பை
ஆதரிக்க மறுத்துவிட்டார் என்று சமீபத்தில் பார்த்தோம் -அதுவரை
TUC ஆதரவு தருவதாக சத்தம் போட்டுக்கொண்டிருந்தது- ஏனெனில் இவ்வியக்கம் பிரதம மந்திரியை
வீழ்த்தும் இயக்கமாகிவிட்டது என்பதற்காக அப்பிரிவின் அனைத்து அதிகாரபூர்வமான தலைமைகளும் அப்படிப்பட்ட
விருப்பத்தை மறுத்துள்ளார்கள்; அவர்களின் சொந்த அரசியலைப் பற்றி இது மிகுந்த அளவு எடுத்துக்கூறுகின்றது.
ஆனால் பிரென்டன் பார்பர் (Brendan
Barber), பிரிட்டன் ஆட்சியாளர்களின் ஏவலாளி என்னும் முறையில் -தன்னுடைய போரெதிர்ப்பு இயக்கம்
செல்லும் திசையைக் கணித்துக் கூறியது, அவர் இயக்கத்திற்கு விரோதப் போக்கைக் காட்டி அஞ்சுவது சரியே எனத்
தோன்றும்- ஏனெனில் போரெதிர்ப்பு இயக்கம் தன்னுடைய இலக்குகளை அடைய எதிர்ப்புச் செயல்களுக்கும் அப்பால்
செல்லவேண்டும். ஏனெனில் அவ்வாறு செய்வது, பிரிட்டனில், அமெரிக்காவில், ஜேர்மனியில், பிரான்சில் மற்றும் அவை
எங்கிருந்தாலும் அங்கு உள்ள பெரு முதலாளிகளது ஆளும் கட்சிகளுக்கு எதிரான ஒரு போராட்டத்தை எடுப்பதை அர்த்தப்படுத்தும்
- அவற்றை உழைக்கும் மக்களால் ஆன உழைக்கும் மக்களின் அரசாங்கத்தால் பதிலீடு செய்யும்.
சர்வதேசியத்திற்கான போராட்டம் ஒரு உறுதியான உள்ளடக்கத்தைக் கொண்டது. அது
தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேசக் கட்சியின் ஒரு போராட்டமாக இருக்க வேண்டும். உலகெங்கிலும் உள்ள
தொழிலாளர்களின் கூட்டுப் பலத்தைத் திரட்டும் பணியில் சேர்க்கும் திறமை மற்றும் சர்வதேச மூலோபாயத்தைக்
கொண்டிருக்கும் தங்களின் சொந்தக் கட்சி தொழிலாளர்களுக்கு தேவை. அத்தகைய கட்சியைக் கட்டி எழுப்புவதுதான்
இந்த மாநாட்டின் நோக்கம். அந்த உணர்வில் நாம் நம்முடைய ஒருமித்த ஆதரவை இன்று கொண்டுவரப்பட்ட இரண்டு
தீர்மானங்களுக்கும் நாளை கொண்டுவரப்படும் தீர்மானங்களுக்கும் அளிக்கவேண்டும்.
நன்றி தோழர்களே.
Top of page
|