WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
தென்
அமெரிக்கா
Tens of thousands march in Lima
Peruvian workers defy state of emergency
லிமாவில் பல்லாயிரக்கணக்கானோர் அணிவகுப்பு
பெரு நாட்டின் தொழிலாளர்கள் நெருக்கடி நிலையையும் மீறி ஆர்ப்பாட்டம்
ஙிஹ் சிமீsஊக்ஷீ ஹிநீஷீ
5 June 2003
Use
this version to print | Send
this link by email | Email the author
செவ்வாயன்று லிமா நகரப் பகுதிகளில், ஜனாதிபதி அலிஜான்ரோ டோலிடோ (Alejandro
Toledo) வின் அரசாங்கம் அறிவித்துள்ள நெருக்கடி நிலைப் பிரகடனத்தையும் மீறி பல்லாயிரக்கணக்கான
தொழிலாளர்கள் பேரணியை நிகழ்த்தினர்.
பெருவியத் தொழிலாளர்களின் பொதுக் கூட்டமைப்பு (ஸ்பானிய மொழியில்
CGTP) ஏற்பாடு செய்திருந்த இந்த பேரணி, வேலை
நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தலைமையில் நடந்தது. அரசாங்கத் தொழிலாளர்கள், பொது சுகாதார
ஊழியர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானப் பணித் தொழிலாளர்கள் - இத்தனை பிரிவினருமே
மோதல்கள், வேலை நிறுத்தங்கள், மெதுவாகப் பணி செய்தல், சாலை மறியல் இவற்றில் தற்போது ஈடுபட்டிருப்பவர்கள்
- அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்த்து பேரணியில் கலந்துகொண்டனர்.
``அவர் வீழ்ச்சியடையப் போகிறார்; அந்தப் புளுகர் வீழ்ச்சி அடையப் போகிறார்``
என்ற கோஷங்களை டோலிடோவைக் குறித்த அளவில் முழங்கிக்கொண்டு அணியினர் சென்றனர்.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பல முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாள வர்க்கத்தின்
போராட்டங்களைக் கண்ட அரசியல் அணிகளைச் சந்தித்திருக்கும் வரலாற்றுப் புகழ் வாய்ந்த
Plaza Dosde Mayo வில் காலை நடுவிலிருந்தே
தொழிலாளர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அங்கிருந்து புறப்பட்டு பாராளுமன்றத்திற்குச் சென்ற அணியினர்,
CGTP யின் சார்பிலும், ஆசிரியர் அணி
SUTEP சார்பிலும் ஒரு தூதுக்குழு மூலம் அமைச்சர் குழு
விலகவேண்டும் என்றும், நெருக்கடி நிலை நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரும், மற்றும் தொழிலாளர்களின்
கோரிக்கைத் தீர்மானங்களைக் கொண்டதுமாகிய மனு ஒன்றை அளித்தனர்.
தலைநகரைக் கடந்த சில வாரங்களாக நெருக்கடி நிலையின் கீழ் இராணுவக் கைப்பற்றுதலுக்குட்பட்டது
போல் வைத்திருந்த டோலிடோ அரசாங்கம், அன்று லிமாத் தெருக்களில் போலீசையோ இராணுவத்தையோ கொண்டுவராமல்,
பேரணி எந்த எதிர்ப்பையும் சந்திக்கவிடாமல் செய்துவிட்டது.
கடந்த ஒருவாரத்துக்கும் மேலான இராணுவ ஒடுக்குமுறை ஒரு மாணவர் இறக்கவும் டசின்
கணக்கானோர் காயமுறவும் இட்டுச்சென்றதை எதிர்த்து, நாடு முழுவதும் மாணவர்கள் தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயே
நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஜூலை நான்காம் தேதி பெருவிய மாணவர்கள் கூட்டமைப்பு ஒரு இளைஞர் பேரணி
நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
புனோ (Puno), அரிக்யுபா
(Arequipa), ட்ருஜிலிலோ
(Trujillo) ஆகிய நகரங்களில் பேரணிகளும் பிராந்திய
வேலை நிறுத்தங்களும் நடைபெற்றன. சமீப காலத்தில் இவ்விடங்கள் அனைத்திலும் இராணுவத்தினருக்கும்
தொழிலாளருக்கும் இடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டிருந்தன. அமேசான் நதிக் கரையிலுள்ள இக்விடோஸ்
(Iquitos) என்ற நகரத்தில், மோதல் ஏற்பட்டால் தயார்
நிலையில் என்ற அளவில் கட்டுமானத் தொழிலாளர் தலைமையில், தொழிலாளர்கள் நிறைய கனம் மிகுந்திருந்த கருவிகளையேந்தி
அணிவகுத்துச் சென்றனர்.
30 நாள் நெருக்கடிக்காலம் என்ற டோலிடோ அரசாங்கத்தின் அறிவிப்பு, நாடெங்கிலும்
நிகழ்ந்திருந்த சமுகப் போராட்டங்களின் வெடிப்பினால் மேற்கொள்ளப்பட்டது ஆகும்.
மே 12ம் தேதி 300,000 ஆசிரியர்கள், தங்கள் வேலை நிலைமை
மேம்பாட்டிற்காகவும் மாதமொன்றுக்கு 60 டாலர்கள் ஊதிய உயர்வு கேட்டும் வேலை நிறுத்தம் செய்தனர். கல்வி
அமைச்சகம் அந்தத் தொகையில் பாதிதான் தர இயலும் எனக் கூறிவிட்டது. அதையொட்டி ஒவ்வொரு நாளும் லிமாவில்
அணிவகுப்புக்களை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர்; பெருவின் மற்றைய நகரங்களிலும் அதே நிலைதான். இந்த வேலை
நிறுத்தத்தால் நாடெங்கிலும் உள்ள 52,000 கல்வி மையங்கள் செயலிழந்து போயுள்ளன.
ஆசிரியர்கள், பெற்றோர் குழுவிடமிருந்து ஆதரவு பெறுகின்றனர்; லிமாவிலும் கடலோரத்
துறைமுக நகரமான Callao விலும் அத்தகைய 800 குழுக்கள்
இருக்கின்றன. ஆசிரிய சங்கங்களின் தலைவரான நில்வர் லோபெஸ் (ழிவீறீஸ்மீக்ஷீ
லிரஜீமீக்ஷ்), நாட்டின் பொருளாதாரம் ``வெளிநாட்டுக் கடனைத் தீர்ப்பதற்கும் நாடுகடந்த நிறுவனங்களின்
செயல்பாடுகளுக்குமே தொகைகளை வழங்கும் அளவில் எஞ்சியுள்ள மக்கட்தொகை வறுமையில் வாடும் நிலைதான் உள்ளது'`
என்று கூறியுள்ளார்.
மே மாதக் கடைசி வாரத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஆங்காங்கே
கற்கள், உழவுத் தொழில் கருவிகள், டிரக் டயர்கள் இவற்றைக் கொண்டு சாலைகளை மறித்து லிமாவிற்கும் மற்றைய
நகரங்களும் செல்லும் சாலையைத் தடுத்துள்ளனர். தங்களுடைய உயிர்வாழ்வுக்குத் தேவையான இன்றியமையாத பாசன
வசதியை டோலிடோ தனியார் மயமாக்கும் திட்டத்தைக் கண்டித்து இந்த எதிர்ப்பு நடைபெறுகிறது. சாலை அடைப்புக்களால்,
தலைநகருக்கு வரவேண்டிய உணவுப் பொருட்கள் 50 சதவீதம் குறைந்துவிட்டது. இதையொட்டி விலையுயர்வுகள்
தோன்றியுள்ளன. தடைகள் தொடர்ந்தால் இன்னும் ஒரு வாரத்திற்குள் லிமா உணவு இருப்பில்லாமல் நிற்கும் என்று கூறப்படுகிறது.
அரசாங்க மருத்துவ ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்; ஆனால் அரசாங்கம்
நெருக்கடி நிலைமையைப் பிரகடனப்படுத்தி எல்லா அரசியலமைப்பு உத்தரவாதங்களையும் அகற்றியவுடன் மீண்டும்
வேலைக்குத் திரும்பிவிட்டனர்.
14,000 நீதிமன்ற ஊழியர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் உள்ளனர்; புதிய
ஒப்பந்தம், போனஸ் தொகை, கூடுதல் நேர வேலைக்கு ஊதியம் போன்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
இதையொட்டி, சிவில், கிரிமினல் வழக்குகள் அனைத்தும் முடங்கி, பெருங்குழப்பமும், விரக்தியும் ஏற்கனவே நெரிசலில்
உள்ள நீதித்துறை அதிகாரத்துவத்தை முடக்கிவிட்டு, பொருளாதாரச் செயல்களையும் மெள்ள ஊர்ந்து செல்லும்
நிலைக்குத் தள்ளிவிட்டது. நீதி அரண்மனை நுழைவாயிலில் இருந்து வேலை நிறுத்தம் செய்பவர்களை போலீசார் அப்புறப்படுத்த
முயலுகையில், கடும் இரத்தம் தோய்ந்த மோதல்கள் ஏற்பட்டன.
பெருவின் மிகக்குறைவான ஊதியம் பெறும் போலீஸ்காரர்களே ஜூன் 11 மற்றும் 12ம்
தேதி வேலை நிறுத்தம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக வதந்திகள் உலாவுகின்றன.
ஒரு புள்ளியில் போராட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராகப் பங்கு கொண்டோர் 2 மில்லியன்
எண்ணிக்கையைக் கடந்துவிட்டதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
தொடர்ச்சியான நடவடிக்கைகள் டோலிடோ நிர்வாகத்தை மக்கள் மறுதலிப்பதை தெளிவுபடுத்துகின்றன.
தனக்கு முன்பு ஜனாதிபதியாக இருந்த ஆல்பேர்ட்டோ ப்யூஜிமோரி
(Alberto Fujimori), அவருடைய அரசியல் ஆலோசகர் வினாடி மிரீரா மோன்டிசினோசின்
(Vladimiro Montesinos) போலீஸ் -அரசு கடுமைச்
செயல்முறைகளையும் ஊழல்களையும் எதிர்த்து போராடும் காப்பாளர் தான் என்று அறிவித்து, இரு ஆண்டுகளுக்கு முன்பு
ஆட்சியைப் பிடித்தவர் டோலிடோ ஆவார். அந்தத் தேர்தலில் அவருடைய முக்கிய எதிர் போட்டியாளர், பாப்புலிஸ்ட்
APRA கட்சியின் முன்னாள் ஜனாதிபதி
Alan Garcia ஆவார்.
டோலிடோ புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதாகவும், ஊதியங்களை அதிகரிப்பதாகவும்
வாக்குறுதி கொடுத்திருந்தார். 1990களில் ப்யூஜிமோரி செயல்படுத்திய பொருளாதாரத்திட்டக் கூறுபாடுகளைத்தான்
அடிப்படையாகக் கொண்டிருந்தார் இவர். தேர்தல் பிரச்சாரத்தின் போது தன்னை கார்சியாவிற்கு எதிரான வாஷிங்டனின்
வேட்பாளர் எனக் கூறிக்கொண்டார். 1980களில் அவரது நெருக்கடி பீடித்த நிர்வாகத்தின்பொழுது பெருவின் அயல்நாட்டுக்
கடனைத் திருப்பிக் கொடுக்க மறுத்ததின் விளைவாக கார்சியா வாஷிங்டனின் விரோதத்தைச் சம்பாதித்துக்கொண்டார்.
IMF ன் ஆணைகளை சிரமேற்கொள்ளுதலும்
அயல்நாட்டு மூலதனத்திற்கு அடிபணிந்து நிற்பதும் டோலிடோவின் கொள்கையாகும். தனியார்மயமாக்கும் திட்டங்களை
தொடர்ந்து நடத்திய கொள்கையையும், அரசாங்கத்திடமிருந்து தனியார்மயத்திற்குச் சொத்துக்களை மாற்றி, வெளிநாட்டு
முதலீட்டிற்கு நல்ல ஆதரவு நிறைந்த சூழ்நிலையை அமைத்துக் கொடுத்தார். மேலும் இறக்குமதி வரிகளைக் குறைத்து,
பெருவியச் சந்தையை தடையற்று அடையும் வழிக்கும் உத்தரவாதம் அளித்தார்.
இன்று டோலிடோவின் ஏற்புக் குறியீடு எப்பொழுதுமில்லாத குறைந்த அளவான 16
சதவீதத்திற்கும் குறைவான அளவைக் காட்டுகிறது. இவருடைய வேலை அளிப்பு மற்றும் ஊதிய உயர்வு வாய்ச்சவடால்கள்
ஒருபோதும் நிகழவே இல்லை.
பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க முடியாமல் திணறும் அரசாங்கம், மற்ற முதலாளித்துவ
கட்சிகளோடு, குறிப்பாக APRA-தலைவர்
கார்சியா-ஒத்துப்போக முடியவில்லை. 2006 ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட கார்சியா காத்திருக்கிறார்.
பொருளாதாரச் சரிவு அரசியல் தேக்கத்தோடு இணைந்து நிறுவன அளவிலான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது; அரசாங்கத்தின்
ராஜிநாமாவை இது கோருகிறது.
கூடுவதற்கான சுதந்திரம் மற்றும் எதிர்ப்பதற்கான சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளை
நசுக்கும் டோலிடோவின் நெருக்கடி நிலைமை பற்றிய பிரகடனம் தன்னுடைய ஆட்சியைச் சீரழிவிலிருந்தும் அழிவதிலிருந்தும்
காப்பாற்றக் கருதும் தளர்ந்த வழிவகையாகும். பெரும்பாலான முதலாளித்துவ கட்சிகள், நாட்டின் வணிக அமைப்புக்கள்
முதலியவை போராட்டம் நசுக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்துகின்றன. அரசாங்கம் எதிர்ப்பாளர்களுடன் உடன்பாடு
கொள்ள முடியாவிட்டால், ``கடுமையான நடவடிக்கைகள் மூலம் சட்டத்தின் ஆட்சியைக் காப்பாற்றி, பொருளாதாரத்தில்
உறுதியற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்`` என அவை கோருகின்றன.
Top of page
|