World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:ஆசியா
:
ஜப்பான் Japanese bank bailout reveals deepening economic crisis ஜப்பானிய வங்கி பிணையெடுத்து விடுவிக்கப்பட்டதானது ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை வெளிப்படுத்துகின்றது By Joe Lopez கடந்த வாரம் கொய்ஸுமி அரசாங்கம் 2 டிரில்லியன் யென்களை ($17 பில்லியன்) ஏற்பாடு செய்து நலிந்த ரெசோனா வங்கியை இடர்பாடுகளிலிருந்து காப்பாற்றியது பற்றிய முடிவானது வங்கி சரிந்துபோனால் பரந்த அளவிலான பணப் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தின் உந்துதலினாலேயாகும். ஜப்பானிய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு அரசாங்கம் ரெஸோனா வங்கியைத் தேசியமயமாக்கியதுபோல் ஆகும்; ஏனெனில் அதனுடைய அரை பங்குக்கும் கூடியதை அது உடைமையாகக் கொண்டிருக்கிறது. ஜப்பானின் 5வதும், உலகத்தின் 31வது பெரிய வங்கியான ரெசோனாவின் இறப்பு - தொடர்ந்து பொதுப் பணம் அதற்குள் செலுத்தப்பட்ட போதிலும், ஜப்பானிய வங்கி நெருக்கடி தொடர்ந்து மோசமடைந்து செல்கிறது என்பதற்கு உதாரணமாக உள்ளது. ஒசாகாவைத் தளமாகக்கொண்ட ரெசோனா இந்த மார்ச் மாதம்தான் Ashai, Daiwa என்ற 2 வங்கிகளை இணைத்து உருவாக்கப்பட்டது. அந்த இரு வங்கிகளும் இதற்குமுன் 1 டிரில்லியன் யென் பொதுப்பண உதவி பெற்றதாகக் கருதப்படுகிறது. ரெசோனாவில் சிக்கல்கள் தன்னுடைய மூலதனத் தேவை விகிதம் (Capital Adequacy Ratio) 2.07 சதவிகிதத்திற்குக் குறைந்துவிட்டது என்று அறிவித்த அளவிலேயே வெளிப்பட்டுவிட்டன; பொதுவாக உள்நாட்டு வங்கி செயல்பாட்டிற்கு தேவையான 4 சதவிகித விகிதத்தில் பாதியும், பன்னாட்டு அளவில் செயல்பாட்டிற்கு தேவையான 8 சதவிகித விகிதத்தில் கால் பகுதியும் வந்த அளவிலேயே இந்தப் பிரச்சினைகள் மேலே வந்தன. இந்த அறிவிப்புக்குச் சில வாரங்கள் முன்புதான் ரெசோனா மூலதனத்தேவை விகிதம் 6 சதவிகிதமாக இருந்தது எனத்தெரிவித்தது. ஆனால் அப்படிக் கூறப்பட்ட விகிதம் ஆட்டம் கொண்ட அஸ்திவாரத்தைக் கொண்டிருந்தது. தங்களுடைய நிதிநிலை மேம்பாட்டை உயர்த்திக் காட்டுவதற்காக, ஜப்பானிய வங்கிகள் Deferred tax assets (ஒத்திவைக்கப்பட்ட வரி உடைமைகள்) (DTAக்கள்) என்பதை மூலதனமகக் காட்டி வந்தன. இவை வங்கிக்கு வரவேண்டிய பாக்கிகள்; மோசமான கடன்களால் ஏற்படும் இழப்புக்களை ஈடுசெய்ய அமைந்துள்ள விதிமுறைகள் ஆகும். ரெசோனா வங்கி கிட்டத்தட்ட 700 பில்லியன் யென்னை DTAக்கள் ஆகப் பெற விரும்பியது. ஆனால் புதிய நிதி விதிமுறைகளின்படி, தனிப்பட்ட தணிக்கையாளர்கள் (Independent Auditors) 435 பில்லியன் யென்களை கூறிக்கொள்ளலாம் என்று அனுமதித்ததன்படி, வங்கியின் மூலதனத்தேவை விகிதம் திடீரென கணிசமாகக் குறைந்து விட்டது. மேலும், ரெசோனா 2002 - 2003 நிதி ஆண்டில் 838 மில்லியன் யென் நஷ்டம் என்ற பெரிய தொகையைக் காட்டப்போவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தது. இந்த நஷ்டத்தொகை அனைத்து வங்கி மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களை பரந்த அளவில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் குறிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் பங்குச்சந்தை புள்ளி அதன் மிகக் கீழான நிலைக்கு சரிந்த அளவில், திரும்பிவராத கடன்களை எவ்வளவு வேகமாகமாக எடுத்துவிடும் அளவுக்கு, மோசமான கடன்கள் அதே அளவு வளர்ந்துகொண்டிருக்கின்றன, இது ரெஸோனாதான் கடைசியாகச் சரிந்த வங்கி என்ற நிலையை ஏற்படுத்தாது என்ற அக்கறைகளை தோற்றுவித்திருக்கிறது. மொத்தத்தில் மோசமான கடன்களின் மதிப்பு 50 டிரில்லியன் யென் ஆக இருக்கலாமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. Asahi Shimbun ல் வந்த சமீபத்தியக் கட்டுரையில், "ரெசோனாவின் இக்கட்டான நிலை அமிழ்ந்த பனிக்கட்டியின் உச்சி போல இருக்கக்கூடும்; ஏனைய வங்கிகளும், நிதிமுறையில் அதன் நலனுக்குக் கொள்ளப்படும் ஒரு அளவு கோலான, அவற்றின் மொத்த சொத்துக்களின் விகிதத்தில் குறைந்த அளவு மூலதனத்தேவை விகிதத்தை ஒட்டிய நிலையில் இக்கட்டான நிலையில் ஓடிக்கொண்டிருக்கிறது, என கூறியுள்ளது.அதே கட்டுரை, பல வங்கிகளும் தாங்கள் அறிவித்த மூலதன இருப்பை முன்னிறுத்திக் காட்டுவதற்கு, ஒத்திவைக்கப்பட்ட வரி உடைமைகளையோ, வருங்கால கடன் இழப்புகளுக்கான ஈட்டு வருமானத்தையோ பெரிதும் நம்பி இருக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. "ரெசோனா அதிர்ச்சி என அழைக்கப்படுவது, வங்கிப்பங்குகளில் சரிவை ஏற்படுத்தி முழு பங்குமுதல் சந்தையையும் கீழே கொண்டு வருமானால், வங்கிகள் வைத்துள்ள பங்குகளின் மதிப்பும் மதிப்பில் பெரும் தாழ்வுற்று, ஒரு நச்சு வட்டத்தில் வங்கிகளின் அடிப்படை மூலதனமே பாதிக்கப்படலாம்" என்று அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது. வங்கித்துறையில் ஏற்பட்டுள்ள ஆழமாகிவரும் சிக்கல்கள் அனைத்தும் ஜப்பானியப் பொருளாதாரம் முழுவதிலும் ஊடுருவியுள்ள கெடுதலின் அடையாளமேயாகும்; அது கடந்த 12 ஆண்டுகளாக பொருளாதார தேக்க நிலையில் இருப்பதுடன் பொருளாதார பின்னடைவையோ அல்லது அதை ஒட்டிய நிலையையோ காட்டியவாறுதான் உள்ளது. Keio பல்கலைக்கழகத்தில் பொருளாதார நிபுணராக இருக்கும் மிட்சுஹிரோ புகாவ் (Mitsuhiro Fukao), அரசாங்கம் பொதுப் பணத்தில் வங்கியைக் காப்பாற்றும் முயற்சியைப் பற்றிக் கருத்துக் கூறுகையில் "ஒவ்வொருவருக்கும்" இதுபோல் எந்த வங்கிக் குழுக்களுக்கும் நேரிடலாம் என்பது தெரியும்: "ஆனால் அரசாங்கம் செய்தது சரியே: வங்கிகளை அது நிலைப்படுத்த முடிந்துவிட்டால் எந்த நெருக்கடியும் வராது; அதாவது எல்லாரும் பணத்தை திரும்பப்பெற வங்கிகளுக்கு ஓடிச் செல்ல மாட்டார்கள்" என்றார்.இது ஒரு குறுகிய கால நம்பிக்கையையூட்டுகின்ற அதேவேளை, நீண்ட கால கவலைகளைப் கொண்டுவருகிறது. புகாவ் தெரிவிப்பது போல், " நிதித்துறையில் அரசாங்கத்தின் பணயப்பொருள் ஊதிப்பெருகுவது அச்சத்திற்குக் காரணமாக இருக்கிறது. பண முறையில் ஒவ்வொரு நாளும் பொறிவை நோக்கி ஊர்ந்து கொண்டிருக்கிறோம்; மூலதனம் பெருமளவில் மறைந்து விடக்கூடிய நாளையும் நெருங்கிக் கொண்டு இருக்கிறோம். ஏதேனும் ஒரு நாள் சேமிப்பாளர்கள் கண்மூடித்தனமாக தங்கள் பணத்தை யென்னில் போடுவதை நிறுத்தி, அதை ஏன் அரசாங்கம் ஆதரிக்கிறது என்று கவலைப்பட ஆரம்பித்து விடுவார்கள்." புகாவின் படி, 10 பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் கிட்டத்தட்ட 8 டிரில்லியன் யென் அளவு வங்கிப்பங்குகளில் வைத்துள்ள அளவில், அவற்றின் மதிப்பு கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. சொத்துக்களைப் பொறுத்தவரையில் உலகிலேயே மிகப் பெரிய வங்கியான Mizuho Financial Group ஜப்பானிய நிதி நிறுவனம் நஷ்டத்திலேயே மிக அதிகத் தொகையான 2.38 டிரில்லியன் யென்னை (19.8 பில்லியன் டாலர்கள்) மார்ச்சில் முடிந்த நிதி ஆண்டுக்கணக்கில் காட்டியுள்ளது; இது இதனுடைய பங்குப் பிரிவில் பொதுவாக ஏற்பட்டுள்ள மதிப்புக் குறைவினால் வந்த நிலைமையாகும். இறுதி நஷ்டம் தொடக்கத்தில் ஜனவரி மாதம் மதிப்பீடு செய்யப்பட்டு இருந்த 1.95 டிரில்லியன் யென்னை விட 22 சதவீதம் மோசமானதாகும். பொருளாதாரச் சரிவு பொதுவாக, டோக்கியோவின் Nikkei குறியீடு, மார்ச் இறுதி வரையிலான நிதியாண்டில், 225 ஆக இருந்து 30 சதவிகித மதிப்புக்குறைவைக் காட்டியுள்ளது; மற்றைய குறிகாட்டிகளும் பொருளாதாரத்தில் கூடுதலான வீழ்ச்சியைச் சுட்டிக்காட்டும் அளவில், பொருளாதாரம் குறுகிய காலம் மட்டுமே ஏற்றுமதி-வழியிலான மீட்சியைத் தள்ளிவிட்டு, பொருளாதார பின்னடைவின் விளிம்பில் மீண்டும் நிற்கும் தன்மை ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் வங்கிகள் கொடுத்த கடனளவு 4.6 சதவீதம் கடந்த ஆண்டை விடக் குறைந்து, தொடர்ந்து 64வது மாதச் சரிவைக் காண்பித்துள்ளது. Teikoku Data Bank என்ற ஆராய்ச்சி நிறுவனம் அளித்துள்ள சமீபத்திய புள்ளி விவரப்படி 2002 - 03 வர்த்தக ஆண்டில் 18,928 நிறுவனங்கள் கடனில் மூழ்கிவிட்டன. கடந்த ஆண்டைக்காட்டிலும் 5.6 சதவிகிதம் இது குறைவே என்றாலும், உலகப் போருக்குப்பின் நான்காவது அதிக எண்ணிக்கையாகவும், 18000க்கும் மேல் ஆன, மூன்றாவது தொடர்ச்சியான ஆண்டாகவும் அமைந்துள்ளது.பங்குச் சந்தையில் பதிவு பெற்ற 22 நிறுவனங்கள் திவாலாயின, கடந்த நிதியாண்டைவிட ஒன்று கூடுதலாக. இத்தகைய நிறுவனங்களில் Dai Nippon Construction and Kokune Corp என்னும் கட்டுமான நிறுவனம், Nippon Kakoh Seishi Co. என்னும் காகித உற்பத்தி நிறுவனம், மற்றும் Hitach Seiki Co. என்னும் இயந்திரக் கருவி உற்பத்தி நிறுவனம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். தொழில் உற்பத்தி 0.2 சதவிகிதம் முந்தைய மாதத்தைவிட மார்ச்சில் குறைந்தது; இதற்குக் காரணம் Auto தொழில்துறையில் ஏற்பட்ட ஏற்றுமதிக் குறைவு ஆகும். கடந்த ஓராண்டைவிட மாத ஊதியங்கள் மார்ச் மாதத்தில் 1.1 சதவிகிதம் குறைந்தது; இது தொழிலாளர் அமைச்சகத்தின்படி 23வது தொடர்ச்சியான குறைவு ஆகும். பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 0.7 சதவிகிதம் இந்த ஆண்டு குறைந்துள்ளது, அமைச்சர்குழு அலுவலகக் குறிப்பின்படி தொடர்ந்த இரண்டாம் ஆண்டு எதிர்மறை வளர்ச்சியாகும். GDP யின் வளர்ச்சிப் போக்கு சற்று கடுமையாக உள்ளது, குறிப்பாக ஆசியப் பொருளாதாரத்தில் SARS வைரஸ் பாதிப்புத் தாக்கத்தால்; அது ஜப்பானிய ஏற்றுமதியின் பல துறைகளை உள்ளடக்குகிறது மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பை தொடர்ந்து பலவீமடையச்செய்வதுடன், ஜப்பானிய ஏற்றுமதியை குறைந்த போட்டித்திறன் உள்ளதாகவும் அவற்றை பூகோள சந்தைகளில் இருந்து அகற்றி விடக்கூடிய நிலையையும் ஏற்படுத்தி உள்ளது.GDP deflator , மொத்த விலைக் குறையீடு சென்ற ஆண்டைவிட 3.5 சதவீதம் வீழ்ச்சியுற்றது; இதுகாறும் இருந்ததைவிட மிகக்குறைந்தது, ஜப்பானியப் பொருளாதாரத்தில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தும் பணச்சுருக்க சிக்கல்களை இது அதிகப்படுத்தும்.வேலையின்மை அளவு போருக்குப் பிந்தைய வீதத்தில் தொடர்ந்து அதிகபட்சமாக இருந்துவருவதுடன், இளைஞரிடையே கூடுதலான வேலையின்மையும் ஏற்பட்டிருக்கிறது. பொதுவான வேலையின்மை 5.4 சதவிகிதத்துடன் ஒப்பிடுகையில், 15-24 வயதிற்குள்ள இளைஞரில் 13.2 சதவீதம் அதிகாரபூர்வமாக வேலையின்றி உள்ளனர். 1970களில் செழுமைக் காலகட்டத்தில் 'வாழ்வு முழுவதும் வேலை' என்று புகழ்பெற்ற கோஷம் கொண்டிருந்த ஜப்பானில், பெரிய ஓலக் கூச்சலுக்கு அப்பால், இந்த எண்ணிக்கை இளைய ஆண்களுக்கு மிக மோசமானது ஆகும். இதுவரையில்லாத அளவு 15-24 வயதுடைய வேலையற்றோரில் 14.6 ஆகும். Business Week இதழில், "பணச்சுருக்க நாடு" என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரை நடப்பு நிலையை அடையாளம் காட்டும் வகையில், முந்தைய நெருக்கடியில் ஏற்பட்ட விளைவுகளை நினைவூட்டி, ஜப்பானியப் பொருளாதாரத்தின் தன்மையைக் கூறி பூகோள அளவில் அதன் பாதிப்பைப் பற்றியும் பேசுகிறது."ஜப்பானுடைய பணச்சுருக்க திருகுப்புரிசுற்று அதிகரிக்கிறதேயொழிய உண்மையில் பின்னோக்கி செல்லவில்லை. ஒரு கட்டத்தில் ஜப்பானிய அரசாங்கம் சரிவைச் சமாளிக்க இயலாமற் போகும். பெருமளவு கடன் மூழ்குதல்கள் தோன்றும், முதலீடுகள் காற்றில் கரைந்துவிடும், சாதாரண மக்களுடைய சேமிப்புகள் அழிந்துவிடும். நாம் பெரும் பொருளாதார மந்தநிலை காலகட்டத்திற்கு ஒப்பான நிலைக்குத்தான் செல்லமுடியும். பணச்சுருக்கம் அந்த நெருக்கடியிலும் பெரிய காரணக் கூறுபாடாக இருந்தது. உலகனைத்திலும் தொழிற்துறை உற்பத்தியை முடக்கியிருந்தது மற்றும் வேலையின்மையை வானம் வரை படரச் செய்தது. 1930களில் ஆண்டிற்கு 10 சதவிகிதம் வீதம் அன்றாடப் பொருட்களின் விலைச்சரிவு அமெரிக்காவிலும் ஜப்பானிலும் ஏற்பட்ட அளவில், பெரு நிறுவன வருவாய் தகர்க்கப்பட்டு, நிதி அமைப்பை கீழறுக்கிறது. பூமிக்கிரகமே பொருளாதாரப் புதைகுழியில் சிக்கிய அளவில் அதை உடைத்து வெளியே வர ஒர் உலகப்போர் தேவைப்பட்டது." |