World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

War crimes case against General Franks: Interview with Belgian lawyer Jan Fermon

ஜெனரல் பிராங்ஸ்க்கு எதிராகப் போர்க்குற்றங்கள் வழக்கு: பெல்ஜிய வழக்கறிஞர் ஜான் பெர்மன் உடன் ஒரு பேட்டி

20 May 2003

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த வாரம் அமெரிக்க ஜெனரல் ரொமி பிராங்ஸ் (Tommy Franks) இற்கு எதிராகப் போர்க்குற்றங்கள் வழக்குத் தொடுத்துள்ள பெல்ஜிய வழக்கறிஞர் ஜான் பெர்மன் (Jan Ferman) உடன், ரிச்சார்ட் ரெய்லர் (Richard Tyler) உரையாடினார்:

இந்த வழக்கிற்கான அடிப்படை என்ன?

ஒருபுறத்தில் சட்ட அடிப்படை நான்கு ஜெனீவா உடன்பாடுகளாகும், மறுபுறத்தில் 1993ம் ஆண்டின் உலகளாவிய அதிகார வரம்பு என்னும் பெல்ஜியச் சட்டமாகும். இதையொட்டி, அவர் அல்லது அவள் போர்க்குற்றங்களின் பாதிப்புக்கு உட்பட்டிருந்தாலோ, இனவெறிக் கொலைக் குற்றங்களின் பாதிப்புக்கு உட்பட்டிருந்தாலோ, மனித குலத்திற்கெதிரான குற்றங்களால் பாதிக்கப்பட்டிருந்தாலோ பெல்ஜிய நீதி முறையை எவருமே நாட முடியும். இவற்றின் இரு வடிவங்கள்தாம் இந்த வழக்கின் அடிப்படை.

எத்தனை குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் உள்ளன, அவற்றுள் முக்கியமானவற்றைக் கூற இயலுமா?

குற்றச்சாட்டுத் தொகுப்புக்களில் ஒன்று, அமெரிக்கப் படைகள் துப்பாக்கிச்சூட்டையும், குண்டுவீசுதலையும் சாதாரண குடி மக்கள் இலக்குகள் மீது நடத்தினர். நாம் இங்கே பேசுவது பொதுவாகக் கூறப்படும் "உடனிகழ்வான பாதிப்பு" பற்றியது அல்ல. இது பொதுவாக இராணுவ இலக்கிற்கு வெகு அருகில் இருந்தவர்களைப்பற்றியது அல்ல. இது வேண்டுமென்றே மக்கள் மீது நடத்தப்பெறும் தாக்குதல்கள் பற்றியது, பொதுவாகக் கூறப்படும் "உடனிகழ்வான பாதிப்பு" எனும் கருத்திலிருந்து வேறுபட்டது.

மற்றொரு குற்றச்சாட்டு அமெரிக்கப் படைகள் செய்தி ஊடகத்தைத்தாக்கின என்பதாகும், குறிப்பாக அல் ஜஸீரா (Al Jazeera) அலுவலகங்களைத் தாக்கியது. இத் தாக்குதல் தெளிவாக திட்டமிடப்பட்டிருந்தது என்பதை இந்த வழக்கு காட்டுகிறது. சில தாக்குதல்கள் செய்தி ஊடக அலுவலகங்கள் மீதும், பத்திரிகையாளர்கள் தங்கியிருந்த பாலஸ்தீன விடுதிகள் மீதும் நடத்தப்பட்டன. இது பத்திரிகை மீது நடத்தப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல் ஆகும். அல் ஜஸீரா அலுவலகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் விமானத்தால் (Tank Buster) செய்யப்பட்டவை; அது திட்டமிடப்பட்டு குறிப்பாக அல் ஜஸீரா அலுவலகங்கள் மீது நடத்தப்பெற்றவை.

அரசாங்கம் இதில் தலையிட்டு வழக்குகளைச் செயலற்றவையாக்குவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அவ்வாறு செய்வது சட்டத்திற்கு புறம்பானது ஆகும். சட்டம் இப்பொழுது உள்ளபடி, பெல்ஜிய அரசாங்கம் ஒரு வழக்கை எந்த நாட்டில் குற்றம் தோன்றியதோ, (அதாவது அமெரிக்கா) அந்த நாட்டிற்குத் தான் அனுப்ப முடியும்; அதுவும் அந்த நாடு வழக்கில் கூறப்பட்டுள்ள குற்ற இலக்கை உணர்ந்துகொண்டால். ஒரு சிக்கல் என்னவென்றால் இந்த வழக்கு ஜெனீவா உடன்பாடுகளின் கூடுதல் நெறிகளை அடிப்படையாகக் கொண்டது, அவை அமெரிக்காவால் ஏற்கப்படவில்லை. அப்படியென்றால் எந்த அடிப்படையில் நாங்கள் வழக்கை தொடுத்துள்ளோமோ, அந்தச்சட்ட அடிப்படை அமெரிக்காவில் இல்லை. எனவே அந்தச் சூழ்நிலையில் அவ்வழக்கை அமெரிக்க நீதிமன்றங்களுக்கு அனுப்புவது சட்ட விரோதமாகும்.

இரண்டாவதாக உலக அதிகாரவரம்புச் சட்டத்தின்படி, பாதிக்கப்பட்டவர்கள், குற்றமிழைத்தவர்கள், இரு தரப்பினருமே எந்த நாட்டிற்கு வழக்கு அனுப்பப்படுகிறதோ அங்கு நியாயமான விசாரணைக்கு உட்பட வேண்டும் என்பது ஒரு இன்றியமையாத விதி. இதுவும் அமெரிக்க நீதிமன்றங்களில் சில காரணங்களுக்காக பெரிய சிக்கலைத் தோற்றுவிக்கும். அது இராணுவ நீதிமன்றமாக இருக்கும். மேலும், பெல்ஜிய அரசாங்கத்தின் மீது அமெரிக்கா கொடுக்கும் அழுத்தத்தைப் பார்த்தால், அமெரிக்க நிர்வாகம் பெல்ஜிய அரசாங்கத்தின் மூலம் பெல்ஜிய நீதிமன்றங்கள் மீது செல்வாக்கைக் காட்ட முற்படும் என்பது தெளிவு. ஓர் அமெரிக்க நீதிமன்றத்தையும், நீதிபதியையும் பார்த்தாலும் இதே போன்ற அழுத்தம் உபயோகிக்கப்படும் என்பதும் தெளிவாகும்.

அமெரிக்க இராணுவத்தைப்பற்றி புகார் செய்ய விரும்பும் ஈராக்கிய சாதாரண குடிமக்கள் பாதிக்கப்பட்டவர்கள், அதிலும் குறிப்பாக ஒரு இராணுவத்தலைமை இராணுவ நடவடிக்கை எடுத்ததைப் பற்றிப் புகார் செய்வோர், அமெரிக்க நீதிமன்றத்தில் இப்பொழுது நியாயமான விசாரணையைப் பெறமாட்டார்கள் என்பது புலனாகும்.

உலக அதிகாரவரம்புச் சட்டம், பெல்ஜியத்தை இவ்வழக்கு ஒரு பன்னாட்டு நீதிமன்றத்தால், உதாரணமாக ஹேக்கில் உள்ள International Criminal Tribunal - ஆல் விசாரணை செய்யப்பட அனுப்புதற்கு அனுமதிக்குமா?

ஆம், ஆனால் சம்பந்தப்பட்ட நாடுகள், குறிப்பாகக் குற்றம் இழைத்த நாடு, இந்த வழக்கில் அமெரிக்கா International Criminal Courtன் அடிப்படைச் சட்டங்களை ஏற்று இருந்தால் மட்டுமே அது முடியும். அமெரிக்காவைப் பொறுத்தவரை, அது இந்த அடிப்படைகளை ஏற்கவில்லை.

அப்படியானால் அடுத்து என்ன நிகழும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பெல்ஜிய அரசாங்கம் அமெரிக்க நீதிமன்றங்களுக்கு இவ்வழக்கை அனுப்பக்கூடும் என்று நினைக்கிறேன்; ஏனெனில் அமெரிக்க அழுத்தத்திற்கு அரசாங்கம் உட்பட்டுவிடும் என்று தெரியவருகிறது. எல்லாச் சட்ட முறைகளையும், வழிவகைகளையும் கொண்டு இதைப் பெல்ஜிய நீதிமன்றத்தில் வாதாடுவோம்.

இந்த வழக்கை உலக அதிகார வரம்புச்சட்டத்தை அரசியல் முறைகேடாகப் பயன்படுத்தல் என்ற குற்றச் சாட்டிற்கு எவ்வாறு நீங்கள் விடையிறுப்பீர்கள்? அல்லது நீங்கள் இந்த வழக்கை அரசியல் காரணங்களுக்காகத் தொடுத்தீர்களா?

இப்படிப்பட்ட குற்றச்சாட்டு கூறுபவர்கள் வழக்கு àரையைப் படிக்கவில்லை. பொதுவான விமர்சனத்தை, வழக்கில் எந்தக் குறிப்பிட்ட குற்றங்கள் விவரிக்கப்பட்டுள்ளன என்று தெரியாமல் பேசுபவர்தாம் அப்படிக் கூறுவர். இந்த சிக்கலைக் கையாள அது ஒரு வேடிக்கையான வழிவகையாகும்.

நாம் போரின் பொழுது நிகழ்ந்த சில குற்றங்களைப்பற்றிப் பேசுகிறோம்; போர் எப்பொழுதுமே ஒரு அரசியலளவில் உணர்ச்சிமிக்க விஷயமாகும். எனவே இது தொடர்பாக, ஆம், இது ஒரு அரசியல் வழக்கு என்று நீங்கள் கூறமுடியும். ஆனால் நீதிமன்றத்திலுள்ள சர்வதேச நிகழ்ச்சிகளான போர் அல்லது சர்வதேச பயங்கரவாதம் ஆகிய வழக்குகளும் அந்த வழியில் அரசியல் சார்ந்தவையே ஆகும். இதில் செய்ய வேண்டியது என்னவென்றால் ஏதாவது ஒரு வழிமுறையைக் கையாண்டு குற்றமிழைத்தோர் பொறுப்புக் கூறவும், பாதிக்கப்பட்டவர் நீதியைப் பெறுதலும் வேண்டும்; அதுதான் வழக்கின் முக்கிய நோக்கமாகும்.

See Also :

பெல்ஜியம்: அமெரிக்க ஜெனரல் ரொமி பிராங்ஸ் இற்கு எதிரான போர்க் குற்ற வழக்கை தடுத்துவிட அரசாங்கத்தின் முயற்சி

Top of page