:
பிரான்ஸ்
Socialisation of losses, privatisation of profits
Metaleurop: The ugly face of European
capitalism
நஷ்டங்களைப் பொதுமயமாக்கல், இலாபங்களை தனியார் மயமாக்கல்
மெட்டல்யூரப்: ஐரோப்பிய முதலாளித்துவத்தின் அழுக்கு முகம்
By Françoise Thull and Marianne Arens
28 May 2003
Back
to screen version
மார்ச் 10ம் தேதி மெட்டல் யூரப் நோர்த்தின் (Metaleurop
Nord) தாய் நிறுவனமான (மெட்டல் யூரப்
SA)
Metaleurop SA
என்ற பிரான்சின் உருக்கு தொழிற்சாலையை முன்னறிவிப்பின்றி மூடி 830 தொழிலாளர்களை வேலையில்லாதோர் பட்டியலில்
இணைத்த அதனது தீர்மானத்தை ஏப்ரல் 11 வெள்ளியன்று பெதூன்
(Béthune)
நகர வர்த்தக நீதிமன்றம் நிராகரித்தது.
மெட்டல் யூரப் நோர்த்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இந்த நிறுவனத்தின் கலைப்பிற்கு
மெட்டல் யூரப் நிறுவனத்தின் மற்றைய கிளைகளும் உட்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர் அந்த உத்தியின்படி
தாய் நிறுவனம் தன்னுடைய முழுமையான சட்டப் பொறுப்புக்களான 35 துணை ஒப்பந்தக்காரர்களுக்குக் கொடுக்கப்படவேண்டிய
எஞ்சிய தொகைகளைக் கொடுத்தல், சுற்றுச்சூழல் நிலப்பகுதியினை துப்பரவாக்கல் மற்றும் நீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான
இழப்புத் தொகைக்கு நிதியளித்தல் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
ஜனவரி 17 அன்று ஒரு சில மெட்டல் யூரோப் பங்குதாரர்கள் மெட்டல் யூரப்பின் துணை
நிறுவனத்தை மூட முடிவெடுத்தனர். செய்திப் பத்திரிகைகள் மூலம் முடிவை அறிவித்ததில் அவர்கள் கூறியதாவது: ''மெட்டல்
யூரப்பின் (SA)
இயக்குனர் குழு
Noyelles-Godault (Pas-de-Calais)
உள்ள அதன் துணை நிறுவனமாகிய மெட்டல் யூரப் நோர்த்திற்று எந்தப் புதிய
மானியங்களும் வழங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளது. முழு நிறுவனத்தினதும் நிதி உறுதித்தன்மையைப் பாதுகாக்கும்
பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது...''. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் சமூகதிட்டத்தின் கீழ்
வேலைநீக்கம் செய்யப்படும் தொழிலாளர்களுக்கான நிதி உதவி,
தொழிலாளர்களுக்கு மறு பயிற்சிச் செலவு, நிலப்பகுதியைச் சுத்தப்படுத்துதல் போன்ற செலவினங்களிலிருந்து இந்நிறுவனம்
தப்பிக்கொள்வதற்காக இந்த முறை அறிவிக்கப்பட்டது.
மெட்டல் யூரப் நோர்த்தின் தொழிலாளர்கள் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்களை
நிறுவனத்தின் தலைமையிடமான பாரிசிலும், அப்பகுதியிலிருந்த அரசாங்க அலுவலங்கள் முன்பும் நடத்தியிருந்ததுடன் ஏப்ரல்
4ம் தேதி உருக்கு தொழிற்சாலையிலும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இந்த நடவடிக்கைகள் அனைத்துமே தொழிற்சங்கப்
போராட்ட வரம்பிற்குள் முழுமையாக உள்ளடங்கியிருந்துதுடன் இறுதியில் தொழிற்சங்க அதிகாரிகள், இதுதொடர்பான வெவ்வேறு
அரசாங்க அமைச்சகங்களின் இசைவோடு உருக்கு தொழிற்சாலை மூடுவதை ஏற்றுக்கொண்டனர்.
இதன் விளைவாக, தொழிலாளர்கள்
AGS (Assurance Garantie sur les Salaires)
இனாலும்
MEDEF (Federation of Employers) இனாலும் நிதி உதவி
வழங்கப்பட்ட ஒரு குறைந்த அளவு சமூக திட்டத்தை ஏற்க நேரிட்டது. இதன்மூலம் தொழிலாளர்களால் ஆரம்பத்தில் கேட்கப்பட்ட
50,000 யூரோக்களுக்குப் பதிலாக ஒவ்வொரு தொழிலாளிக்கும் 15,000 யூரோக்கள் நஸ்டஈட்டுத் தொகையாக
வழங்கப்படும்.
இந்த பேரத்தைப் பற்றி பொதுத்துறை அமைச்சரான
Jean-Paul Delevoye
கூறுகையில், ''சில வரம்புகளை அரசாங்கம் மீற முடியாது... மெட்டல் யூரப்பின்
சமூகத்திட்டம் Michelin
நிறுவனத்தினதைவிட சிறப்பாகவே இருக்கிறது. அரசாங்கம் கொடுக்ககூடிய அதிக
அளவுத் தொகையை ஒத்திருக்கிறது'' என்றார்.
மெட்டல் யூரப் நோர்த்தின் உருக்கு தொழிற்சாலை மூடப்படுதல் தற்பொழுது பிரான்சை
சூழ்ந்துள்ள பல நிறுவனங்கள் மூடப்படும் நிலைமையின் ஒரு பகுதியாகும். பாதிக்கப்பட்ட சில நிறுவனங்களான
Air Lib, Péchiney, Daewoo, ACT Manufacturing,
Arcelor, Matra Automobile, Testut, Alcatel, Moulinex, Alstom,
Hewlett-Packard France, ஆயுத உற்பத்தி குழுவான
Giat Industries, Grimaud logistic
அனைத்தும் பெருமளவு தொழிலாளரை நீக்குவதாகவும் மற்றும் ஆலைகளை மூடப்போவதாகவும்
அறிவித்துள்ளன.
ஓராண்டிற்கு முன்பு, வலதுசாரி அணி வெற்றிகரமாக ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய பின்னர்
ரஃப்ரன் அரசாங்கம் பாரியளவு ஆள்குறைப்பு மற்றும் செலவு வெட்டுக்களுக்கு குறுக்கிடமாட்டோம் என நிறுவனங்களுக்குப்
பச்சை விளக்கு காட்டியது.
பிரெஞ்சு தொழிற்சங்க தலைவரான
Baron Seillière
அரசாங்கத்தின் ''மூன்றாம் மனிதனாக'' மாறியதுடன், பழைய அரசாங்கத்தின் பல தொடர் நடவடிக்கைகள் அகற்றப்பட்டன
அல்லது குறைக்கப்பட்டன. வாரத்திற்கு 35 மணி வேலைக்கொள்கை,
குறைந்த ஊதிய நிர்ணயம் (Smic)
குன்றிப்போயின, சமுக நவீனப்படுத்துதல் சட்டத்தின் Loi de
Modernisation Sociale (LMS, or social modernisation bill)
பல அதிகரித்துவிட்டதுடன், வேலைப்பாதுகாப்புக்கான சட்டங்கள் தளர்த்தப்பட்டதுடன், பணக்கார முதலாளிகளுக்கான புதிய
வரிகுறைப்புக்கள் வழங்கப்பட்டன.
முதலாளிகள் முகாமிற்கும் அரசாங்கத்துக்கும் இடையேயான மலர்ந்த, புரிந்துகொண்ட நிலை
ரஃப்ரனும் Seillière
இடையில் டூர்ஸ் நகரில் ஜனவரி 14ம் தேதி முதலாளிகள் சங்க -MEDEF
பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த கைகுலுக்கலில் உறுதிப்படுத்தப்பட்டது. 155
ஆண்டுகளுக்கு முன்னால் கார்ல் மார்க்ஸ் எழுதிய ''கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில்'' ஒரு பகுதி மனக்கண்முன் நிழலாடும்
வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது. அதில் அவர் ''தற்கால அரசாங்கத்தின் நிர்வாகப் பிரிவு முதலாளித்துவத்தின் மொத்த
விவகாரங்களையும் கவனிக்கும் நிர்வாகக்குழு ஆகும்'' என குறிப்பிட்டிருந்தார்''.
Glencore இன்
நிதிகொடுக்கல்வாங்கல்கள் நடைமுறைகள்
மெட்டல் யூரப்பின் மூடுவிழா தனித்தன்மை வாய்ந்த போதிலும்
Glencore International AG
என்ற பங்குதாரர் நிறுவனத்தின் கண்மூடித்தனமான நடவடிக்கைகளில் ஒரு நேரடி
விளைவாகும்.
Noyelles-Godault இல் உள்ள
மெட்டல் யூரப்பின்
தொழிற்சாலை ஈயம், துத்தநாகம் (Lead,Zinc)
ஆகியவற்றை உருக்கும் ஐரோப்பாவில் முன்னணிவகிக்கும் ஆலையாகும் அது
ஆண்டு ஒன்றுக்கு 17,000 தொன்களை உற்பத்தி செய்கிறது. அது 1894ம் ஆண்டு உருவாக்கப்பட்டது (முதல் உலகப்
போரின் பொழுது உற்பத்தி தடைக்குட்பட்டிருந்தது), மீண்டும் 1920ல் ஸ்பானிய நிறுவனம்
Penarroya (Group Imetal)
இதைத் திறந்தது. மெட்டல் யூரப்
SA 1988 இல்
Penarroya
வும் ஜேர்மன் நிறுவனம் ஒன்றின் துணை நிறுவனமான Preussagவும்
இணைந்து ஏற்படுத்தியது ஆகும். ஐரோப்பா முழுவதும் 17 உருக்கு சாலைகளைக் கொண்ட இந்நிறுவனத்திற்கு பிரான்சில்
மட்டும் 7 நிறுவனங்கள் உள்ளன.
1996ம் ஆண்டு German TUI
(முன்னாளைய
Preussag) உடைய மெட்டல் யூரப்பில் கொண்டிருந்த மூலதனப் பங்கு
மாற்றப்பட்டதை அடுத்து, சுவிஸ் குழுவான Glencore
மூலதனத்தில் 33 சதவிகிதப் பங்குபெற்றதையடுத்து குழுவின்
பெரும்பான்மையைக் கட்டுப்படுத்தும் நிறுவனமாக இருந்தது.
Zug
என்னும் சுவிஸ் நாட்டு மாநிலப் பகுதியைத் தளமாகக் கொண்ட கிளென்கோர் (Zug-
சுவிஸ்ஸின் வரிச்சலுகைகள் மிகுந்த சொர்க்க பூமியாகும்) ஆண்டு ஒன்றுக்கு
70 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் வரவு செலவு செய்யும் அமைப்பு ஆகும். இந்த உலகளாவிய வர்த்தககுழு வெவ்வேறு பெயர்களில்,
ஈயம், துத்தநாகம், காட்மியம் உலோகப் பொருட்களை உருவாக்கும் உருக்குச்சாலைகளை உலகின் பல பகுதிகளிலும், ஜப்பான்,
ருமேனியா, இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா, காஸஸ்தான் ஆகியவற்றில் கொண்டுள்ளது.
இந்த நிறுவனக் குழுவில் அது சேர்ந்த உடனேயே தற்போதோ அல்லது பின்னரோ தன்னுடைய
துணை நிறுவனமான மெட்டல் யூரோ நார்டைக் கொள்ளையடிக்க வசதியாக இருக்கும் பொருட்டு ஒரு நிதிய அடிப்படைக்
கட்டுமானத்தை ஏற்படுத்திக்கொண்டது. பிந்தையத்தின் பணப்புழக்கம், மூலப்பொருட்களின் இருப்பு, வாடிக்கையாளர்கள்
என ஒன்றன்பின் ஒன்றாக அனைத்தும் Glencore
இனால் உறிஞ்சப்பட்டுவிட்டன. உலோகச்சீர்மை சீனாவிற்கு மாற்றப்பட்டது. 2002
ஜூலை 31ம் தேதி ''ஒரு நிகழ்ச்சியை'' ஒட்டி (விசாரணை இன்னும் நடைபெறுகிறது) 8 தொன் தங்கமும் வெள்ளியும்
மாயமாய் மறைந்துவிட்டன.
La Voix du Nord என்னும்
நாளிதழ், ஒரு வர்த்தக வழக்கறிஞரான Maître Letarteஐ
மேற்கோள்காட்டி Glencore
இன் வழிவகையை விளக்குகிறது: ''அந்தக் காலத்தில் ஓர் அமைப்பை உருவாக்கி
அதன் இறுதியில் 'நோர்த்' என்ற சொல்லையும் நிறுவனத்திற்கு (மெட்டல் யூரப்) சேர்த்தனர். சமூக ஆபத்தான- 830
தொழிலாளர்கள் கிட்டத்தட்ட அதனது மொத்த தொழிலாளர்களை உள்ளடக்குகின்றனர்;
தொழில்முறை ஆபத்தான- ஆலை பழையது, சுற்றுப்புற ஆபத்தான- நன்கு அறியப்பட்டவை ஆகிய எல்லா விளைவுகளையும்
மத்தியப்படுத்தினர். இவற்றின் விளைவாக Noyelles
ஒரு உற்பத்திச் சாலையாக மட்டும் தனித்து இயங்கும் உரிமை ஏதும்
இல்லாமல் போய்விட்டது. ஓர் உதாரணம்: (15.244 யுரோக்கள்) 100,000 பிராங்கிற்கு மேற்பட்ட செலவிற்குத்
தலைமையகம் அனுமதி வேண்டும். இது ஆலையில் அளவைக் கொண்டால், அற்பச் செலவினம். அனைத்து ஆபத்துக்களையும் குவித்து
ஓரிடத்தில் கொள்ள வேண்டும் என்பதைத் தவிர மெட்டல் யூரப் தோற்றுவிக்கப்பட வேறு எந்தக் காரணமும் கிடையாது''.
Noyelles-Godault இல் உருக்கும்
பணிகள் திடீரென நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, குழுவின் தலைமை எந்த ஆபத்தும் இல்லாமல், கடந்த ஆண்டு
கொள்ளப்பட்ட பாக்கிகளை நிறுத்திவைக்க முடியும் (சமூகத்திட்டத்திற்கு நிதியுதவி, ஆலையை நவீனப்படுத்தும் முயற்சிக்கு
மூலதனம் கொடுத்தல், 2002ல் கையெழுத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் - அரசாங்கத்திற்கும் நிர்வாகத்திற்குமிடையே நிலப்பகுதியை
நிர்வாகம் தூய்மைப்படுத்துதலைப் பற்றியது).
கடந்த அக்டோபர் Béthune
நீதிமன்றத்தில் அருகிலுள்ள
Evin-Malmaison
பகுதியினர் ''நச்சுக் கலந்தும், ஆபத்திற்குட்பட்ட நபர்களுக்கு உதவியளிக்காததற்கும்'' தொடர்பான வழக்கிலிருந்து
தவிர்த்துக்கொள்ள இம்மூடுதலானது நிர்வாகிகளுக்கு துணை நிற்பதுடன், மேலும் தங்கள் வேலைத்தளத்தின் நிலைமையைச்
செம்மைப்படுத்திக்கொள்ள தொடர்ந்து போராடும் உழைப்பாளிகள் நிலையை அகற்றுவதும் எளிதாகிவிடும்.
எண்ணெய் கப்பல்
ஒரு பொறுப்பற்ற பங்குதாரரால் தூண்டப்பட்ட திடீர் வங்குரோத்தான நிலைமையின் அச்சத்தினாலும்
கொடூரத்தினாலும் பலதரப்பட்ட அரசியல்வாதிகளிடையேகூட வியப்புணர்வை ஏற்படுத்தியதோடு, முதலாளிகள் சங்கமான
MEDEF உம்
வியந்தது. பிரதமர் ரஃப்ரன், இக்குழுவினரை, ''பொருளாதாரக் கடற்கொள்ளையர்'' என்று இடித்துரைத்துப் பேசிய
அளவில், ஜனாதிபதி ஜாக் சிராக் ''போக்கிரித்தனமான முதலாளிகள்'' என்று கண்டனம் தெரிவித்தார். உண்மையில்
இந்த ஒட்டுண்ணி பயங்கரக் கூட்டத்தின் திமிர்த்தனமான செயல் அழுகிப்போன முதலாளித்துவ முறையின் உள் உறவுகள் எத்தன்மை
வாய்ந்தவை என்ற உண்மைகள் நிலைக்குச் சிகரமாக விளங்குகிறது.
எனவே Glencore
மெட்டல் யூரப் இன் ஒரே பெரிய அளவு பங்குதாரர் மட்டுமல்ல, ஸ்பானிய -
ஹலீஷிய கடற்கரைப் பகுதியின் கடந்த நவம்பரில் அட்லான்டிக்கில் கடலில் மூழ்கி சுற்றுப்புறத் தூய்மையைக் கெடுத்த மற்றும்
இன்றும் தொன் கணக்கில் எரிபொருள் எண்ணையைச் சிதறக் கொண்டிருக்கும்
Prestige
என்ற எண்ணெய்க் கப்பலின் அபாண்டச் செயலிலும் தொடர்பு கொண்டுள்ளது என்பதை அறியும்போது வியப்பதற்கில்லை.
உண்மையில் சுவிஸ் நிறுவனமான
Glencore இனை உருவாக்கியவர்
Marc Rich ஆவார்.
இவர் சர்வதேச அளவில் எண்ணெய் வர்த்தகத்தில் பிரபல்யமானவருடன்,
Crown Resource
என்ற இகழ்விற்குறிய நிறுவனத்தின் சொந்தக்காரராவர்.
Crown Resource நிறுவனத்துற்கு சொந்தமானதே
Prestige
கப்பல். 1983ம் ஆண்டு அமெரிக்காவை விட்டு வரி ஏமாற்றுவழக்கில் மாட்டிக்கொண்டதாலும், பல தீய நடவடிக்கைக்
குழுக்களை கைக்குள் வைத்திருந்ததாலும், மோசடிக் குற்றங்களுக்காகவும் 300 ஆண்டுகள் சிறை தண்டனை பெறக்கூடும்
என்ற அளவில், ஓடிவந்து சுவிட்சர்லாந்தை அடைந்தார். பில் கிளின்டன் தன்னுடைய ஆட்சியின் இறுதிக் காலத்தில் அவருக்கு
மன்னிப்பளித்தார். Marc Rich
இன் மனைவி ஜனநாயகக் கட்சிக்கு ஒரு மில்லியன் டொலர் நன்கொடை அளித்தார்.
பிரான்சின் Ecology and
Sustainable Development இன் அமைச்சரகம்,
Glencore நிறுவனத்தின்
கணக்குவழக்குகள், மெட்டல் யூரப் நோர்த்திலிருந்து அளிக்கப்பட்ட நிதியங்களைத் திருப்பிப் பெற்றது பற்றி ஆராய ஒரு
வல்லுநர் நியமிக்கப்படவேண்டும் என்று தொடுத்த வழக்கு பாரிஸ் மாவட்ட நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
Noyelles
அண்மைப் பகுதிகளைத் தூய்மைப்படுத்துவதற்கு 300 மில்லியன் யூரோக்கள் தேவை என்று கணக்கிடப்பட்டுள்ளது;
இதைத் தவிர கூடுதலாக 43 மில்லியன் யூரோக்கள் சமூகத்திட்டத்திற்கு கொடுக்கப்பட வேண்டும். இப்பொழுது அரசாங்கம்
(வரிப்பணம் கொடுப்போரிடமிருந்து) இந்தச் செலவை ஏற்க நேரிட்டுள்ளது.
இந்த நீதித்துறையளவு பின்னடைவிற்குப்பின், அரசாங்கம் இப்பொழுது சுவிஸ் பங்குதாரர்களோடு
பணத்தைத் திரும்பப்பெறும் முயற்சியில் ஓர் உடன்பாட்டிற்கு வரவிருக்கிறது (நிறுவனத்திற்கு எதிராக உள்ள வழக்குகளைக் கைவிட்டால்
பண பங்கு வழங்குவதாக என்று பேரம் பேசப்பட்டுள்ளது).
Saturnism ( ஈய
நச்சாக்கல்)
மெட்டல் யூரப் நோர்த்தின் அதிக இடர் செயல்பாடு இடர்பாடு பகுப்பில்
(Risk-Classification
Seveso II ன்ற நிலையைக் கொடுத்துள்ளது - அதாவது பிரான்ஸ்
முழுவதிலும் அதிக அளவு சுற்றுப்புற பாதிப்பு உள்ள பகுதி இதுவேயாகும்.
45 சதுர கிலோ மீட்டர் பரப்புடைய இடங்களில் 60,000 பேருக்கும் மேலான மக்கள்
வாழ்கின்றனர்: இந்த இடம் மிகப்பெரிய அளவில் அசுத்தப்படுத்தப்பட்டுவிட்டது. பல ஆண்டுகளாக மெட்டல் யூரப் நோர்த்
ஈயம், காட்மியம் துகள்களை சுற்றுப்புறத்தில் வெளியிட்டு வருகிறது. ஆலை மூடப்பட்டபோது ஆலை 50 கிலோ ஈயத்தை
அன்றாடம் கக்கி வந்தது. ஈயப் புழுதிப் பூச்சு சாலைகள், வீடுகள், தோட்டங்கள் முழுவதும் எத்தனையோ ஆண்டுகள் தடையற்ற
ஆலைச் செயல்பாட்டினால் நிறைந்துள்ளன. இருபது ஆண்டுகளுக்குமுன் அன்றாட துகள் வெளிப்யேறல் 400 கிலோவிலிருந்து 1
தொன் வரையிலான அதிர்ச்சி தரும் அளவு இருந்தது!
Evin-Malmaison பள்ளியின் முற்றப்
பகுதியில் சாதாரணமாக இருக்கவேண்டிய அளவைவிட 40 மடங்கு கூடுதலான ஈயத் துகள்கள் அளவு பதிவாயிற்று
DRIRE (Direction Régionale de l'Industrie, de
la Recherche et de l'Environnement, அதாவது பிராந்திய
தொழிற்துறை, ஆராய்ச்சி, சுற்றுசூழல் திணைக்களம்) இந்த பாதிக்கப்பட்ட பகுதிகளை முற்றிலும் தூய்மைப்படுத்த 5,000
இருந்து 10,000 ஆண்டுகள் பிடிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
அதிகாரபூர்வமான புள்ளி விவரங்கள் ஊருக்குப் பகுதிக்கு அருகிலுள்ள மழலையர் பள்ளிக்
குழந்தைகளில் 10%, ஈய நச்சுத் தாக்குதலுக்கு (Saturnism)
உள்ளாகியுள்ளனர் எனக் கூறுகின்றன. தொழிற்சாலையின் கீழ்க்காற்றுப்
பகுதியில் உள்ள Evin-Malmaison
என்னும் இடத்தில் 27% இற்கு அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தோட்டங்களில் இருந்தும் வயல்களில் இருந்தும் உற்பத்தியாகும் எந்தக் கனி, காய், தானிய வகையையும் உபயோகிக்கத்
தடை உள்ளது;
தண்ணீர் குடிப்பதற்கு இலாயக்கு அற்றது. ஐரோப்பிய தரங்களின்படி இப்பகுதியில் கால்நடை வளர்ப்பும் தடை செய்யப்படவேண்டும்.
கடந்த 15 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஈய நச்சுத்தன்மை பற்றிய ஆராய்சி, 200
குழந்தைகள் பதிவாகியுள்ளதைக் காட்டுகிறது. 1996-2001 இடைப்பட்ட காலத்தில் 36 நச்சு நோய்வாய்ப்பட்டவை பதிவாயின
- அப்பொழுது வார்ப்பகத்தில் 3836 தொழிலாளர் இருந்தனர். தொழிலின் தன்மையை ஒட்டி விளையும் வியாதி என்று
ஏற்கப்பட்டிருந்தாலும், ஈய நச்சு முடக்கும் தன்மைபெற்ற வியாதி ஆகும். இதைத் தவிர அதிக அளவில் நச்சுத்தன்மை
கொண்டதால் இன்னும் 172 தொழிலாளர்கள் தற்காலிகமாக வேலைக்குச் செல்ல தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
1894லிருந்து இந்த ஆலை உற்பத்தியில் ஈடுபட்டிருந்தாலும் மற்றொரு ''மெட்டல் யூரப்''
தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காக தொழில்நுட்பம் இயற்கை இடர்கள் சட்டத்தின்படி கடந்த ஆண்டுதான் அரசாங்கம் கடுமையான
நடவடிக்கைகளை எடுக்கத் தலைப்பட்டு, தண்டனை நடவடிக்கைகளையும், சட்ட வரம்பிற்குட்பட்டு செயல்படத்
ஆரம்பித்துள்ளது. இந்த முடிவு ஒரு கண்துடைப்பாகும். ரசாங்கத்தின் குற்றஞ்சார்ந்த பொறுப்பற்ற போக்கு,
Glencore பங்குதாரர்
போல முதலாளிகளோடு இணைந்து லாபத்தில் பங்குபெறுவதற்காக அவர்களின் விருப்பப்படி இயங்கவிட்டுள்ளது.
தொழிலாளர்களும் அண்மைப் பகுதியில் வாழ்வோரும் வியாதியுடன், வேலையின்மையுடன், எந்த இழப்பீடும் இல்லாமலும்
வருங்காலத்தைப் பற்றிய மோசமான நிலையை எதிர்நோக்கும் அளவிலும் வாழவேண்டி உள்ளது.
கடைசி நேரத்தில்தான் அரசாங்கம்
Noyelles-Godault
பகுதியில் வேலையின்மை பிரச்சனையை அப்பகுதியில் சற்றுக் குறைக்கும் நோக்கத்தில்
Free Urban Zone-41 (ZFU, or Zone Franche
Urbaine) என்பதை ஏற்படுத்த முன்வந்துள்ளது.
Nord/Pas-de-Calais பகுதியில்
25% சராசரி வேலையின்மை இருக்கிறது. சில சமயம் 46% நீண்டகால வேலையின்மை உள்ள சில தொகுதிகளில் உண்டு.
இங்கு அரசாங்கம் பெரிய அளவு மறு தொழில்துறை வளர்ச்சித் திட்டத்தை வகுக்கவில்லை. மாறாக கடைகள், கை வேலைகள்,
பட்டறைகள், சிறிய கடைகள் போன்ற போலியான சிறிய அளவு நிறுவனங்களை தோற்றுவிக்க திட்டமிட்டுள்ளது.
இப்பகுதியைப் பற்றிய அரசாங்கத்தின் பார்வைக்கு அடையாளக் குறியீடாக
Noyelles-Godault
பகுதி மக்களின் வருங்கால முன்னேற்றத்திற்காகவும் முன்வைக்கப்பட்டுள்ள
அண்மைக்கால திட்டமான Lens
நகரத்திற்கு அண்மையில்
Vendin-le-Viel இனை புதிய உயர்ந்த அளவு பாதுகாப்புடைய
150 கைதிகளுக்கான சிறைச்சாலை கட்டுதல் உள்ளது.
மார்ச் 28 அன்று, நீதித்துறை அமைச்சராக உடைமைகள் திட்டத்தின் அமைச்சரின் செயலர்
Pierre Bédier
மெட்டல் யூரப் நோர்த் நிறுவனத்தின் முன்னைய தொழிலாளர்கள் ஒரு பயிற்சி திட்டத்தின்
கீழ் பயனடைவர் எனக் கூறினார். அதாவது அவர்கள் சிறைச்சாலை பாதுகாப்பு வீரர்களாக பணிபுரியப் பயிற்சியளிக்கப்படுவர்.
நீதித்துறை அமைச்சர் Dominique Perben
இம்முயற்சிக்குத் தன் நல்லாசிகளை வழங்கியுள்ளார். இந்த சிறையில் 2007 இல்
இருந்து கைதிகள்அடைக்கப்படுவர். |