: மத்திய
கிழக்கு :
ஈராக்
The UN vote on Iraq: the political issues
ஐ.நா-வில் ஈராக்கின் மீதான வாக்கெடுப்பு: அரசியல் பிரச்சனைகள்
By Peter Symonds
26 May 2003
Use this version to print
|
Send this link by email
| Email the author
கடந்த வாரம் 14-0 என்ற கணக்கில் ஐ.நா பாதுகாப்புக் குழுவில் ஈராக்கில்
பொருளாதார தடைகளை அகற்றும், வாக்கெடுப்பு ஐ.நா மற்றும் பிரான்ஸ் ஜேர்மனி, ரஷ்யா முதலியவற்றில் வளர்த்த
கற்பனைகளின் --அதாவது அமெரிக்க தலைமையிலான படையெடுப்பும் ஆக்கிரமிப்பும் ஒரு சிறிய வறுமையில் தோய்ந்த
பாதுகாப்பற்ற நாட்டின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ஐ.நா-வில் தடுக்கப்பட்டிருக்கலாம் என்ற எண்ணங்கள்-- பயனற்ற
தன்மையை நயமுடன் அப்பட்டமாக்கியது.
தற்போதைய அமெரிக்க பிரிட்டிஷ் அரசாங்கங்கள் கொண்டு வந்துள்ள தீர்மானம் ஆக்கிரமிப்புப்
போருக்குச் சற்று முன்னர் பிரெஞ்சு, ஜேர்மன், ரஷ்ய செய்தித் தொடர்பாளர்கள் சட்டத்திற்கு புறம்பானது
பன்னாட்டுச் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறியதை சட்ட ரீதியானதாக்கிவிட்டது. கடந்த வாரம் இந்த தீர்மானத்திற்குக்
கொடுக்கப்பட்ட வண்ணமுகப்பூச்சுக்கள் மூன்று ஐரோப்பிய நாடுகளும் ஈராக்கில் காலவரையற்ற அமெரிக்காவின் புதிய
குடியேற்றப் பேராதிக்கத்தை ஏற்படுத்தி அதன் எண்ணெய் வளங்களையும் சூறையாடும் உரிமையையும், அளித்துள்ளன.
என்னும் உண்மையை பூசி மெழுகிவிட முடியாது.
அமெரிக்காவும் அதனுடைய கூட்டணி நாடுகளும் ஈராக்கில் தற்போது முழுமையான அரசியல்
கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன. எண்ணெய் விற்பனையில் கிடைக்கும் வருவாய் ஈராக்கிய அயல்நாட்டுச் சொத்துக்களிலிருந்து
கிடைக்கும் வருவாய் ஐ.நாவின் "எண்ணெய்காக உணவு" நிதியிலிருந்து ஒரு பகுதி இவை அனைத்துமே ஈராக்கிய மத்திய
வங்கியில் சிறப்பு நிதியாகச் சேர்க்கப்பட்டு ஆக்கிரமிப்பு வல்லரசுகளின் விருப்புரிமையின்படி செலவழிக்கப்படலாம். பலவிதமான
வழிவகை அமைப்புக்கள் ஓர் இடைக்கால ஈராக்கிய அதிகாரக்குழு, ஐ.நா-வின் சிறப்பு பிரதிநிதி ஆலோசனை
நல்குதல் இணைந்து செயல்படுதல், கூட்டுப்பேச்சு நடத்துதல் மேற்பார்வையிடல் போன்றவற்றை செய்வர்- ஆனால்
இறுதி முடிவுகளை எடுப்பவர் என்பது எந்தத் தெளிவின்மையும் கிடையாது.
இந்த அமெரிக்க தீர்மானத்தை தழுவியதில் பிரான்ஸ், ஜேர்மனி ரஷ்யா ஆகிய முதலாளித்துவமுறை
நாடுகளின் அரசியல் பிரதிநிகள் தங்கள் மனம் எப்படி மாறியது என்பதைப் பற்றிக்கூற முயற்சிக்கக்கூட இல்லை; பிரான்சின்
அயலுறவு அமைச்சர் டொமினிக் வில்ப்பன் ''பிரான்சின் முழுமையான முன்னுரிமை இப்பொழுது வருங்காலத்தை கவனித்தால்தான்''
என்று கூறிய அளவில் தங்கள் அரசாங்கம் போருக்கு எதிராகக் கொண்டிருந்த எதிர்ப்புக்களை கைவிட்டுவிட்டதாகக்
கூறினார். ஜேர்மனியின் ஐ.நா-விற்கான தூதர் குந்தர் ப்ளுகர் (Gunter
Pleuger) அவருடைய கருத்தை எதிரொலிப்பது போல் ''வரலாற்றில் முடிந்துவிட்ட செயல்களை இப்பொழுது
நாம் மாற்றுவதற்கில்லை'' என்று தடுமாற்றத்துடன் கூறிமுடித்தார்.
இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பிரான்ஸ், ஜேர்மனி ரஷ்யா ஆகியவற்றின் தலைவர்கள்
அமெரிக்காவின் போர் முனைப்பிற்கு எதிராக தெரிவித்த கண்டனங்களின் மொழித்தன்மை முற்றிலும் மாறுபட்டிருந்தது.
மார்ச் 10- அன்று பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக் தன் நாட்டுத் தேசியத் தொலைக்காட்சியில் தோன்றி ''எந்த
சூழ்நிலையிலும்'' பிரான்ஸ், ஈராக்கின் மீதான அமெரிக்கப் போருக்கு ஐ.நா ஆதரவு தருமேயானால் அதை தடுப்பதிகாரத்தைக்
கொண்டு நிறுத்திவிடுவோம் என கூறியிருந்தார். ''இப்பொழுது போருக்குக் காரணம் ஏதுமில்லை'' என்று கூறிய அவர்
ஐ.நா ஒப்புதலுடன் ஈராக் மீது போர் தொடக்கப்பெற்றால் அது ஓர் ஆபத்தான முன்னோடியாக அமைந்து விடும்
என்றும் அறிவித்தார். அதேநாள் மாஸ்கோவில் ரஷ்ய அயல் உறவு அமைச்சர் ஜகர் ஜவனோவ் ரஷ்யா தனது தடுப்பதிகாரத்தைப்
பயன்படுத்தும் என்றும் அறிவித்தார்.
வாஷிங்டனும் லண்டனும் ஐ.நா ஒப்புதல் பெறும் முயற்சியைவிட்ட அளவில் சில நாட்களிலேயே
பிரெஞ்சு அயலுறவு அமைச்சர் வில்ப்பன் அம்முடிவைப்பற்றி வருத்தம் அடைந்து ''போரை நியாயப்படுத்தும் காரணம்
ஏதுமில்லை; இதன் விளைவு அந்தப் பகுதியையும் உலகத்தையுமே பலகாலம் பெருமளவில் பாதிக்கும்'' என்று கூறினார்.
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ''முடிவு ஒரு தவறு என்றும், ''மிகப்பெரிய அளவிலான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும்
பறைசாற்றினார். அவருடைய அயல் உறவு அமைச்சர் ஐவனோவ் படையெடுப்பைச் சட்ட விரோதமானது என்று முத்திரை
குத்தியதோடு ''ஈராக்கிற்கு எதிரான போர் பழைய ஐ.நா-தீர்மானங்களைக் கருத்திற்கொண்டு பார்க்கும் பொழுது
சட்ட வழிவகைகளுக்கு உட்பட்டிருக்கவில்லை'' என்றார்.
தொடக்கத்திலிருந்து ஈராக்கிய மக்கள் மீதான அக்கறையினாலோ, கொள்கையடிப்படையிலோ
இந்த எதிர்ப்பு வெளிப்படவில்லை; அப்பட்டமான சுயநலத்தில்தான் இது எழுந்தது. பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா
முன்றுமே அமெரிக்காவின் போருக்கான பெயரளவுக் காரணத்தை ஏற்றிருந்தன. ''ஈராக்கிடம் உள்ள பேரழிவு ஆயுதங்களை
உலகத்திற்கு அச்சத்தை ஏற்படுத்திவிடும்'' என்று நவம்பர் மாதம் மற்றைய பாதுகாப்புக் குழு உறுப்பினருடன் தீர்மானம்
எண் 1441-ஐ ஆயுத ஆய்வுக்குட்பட வேண்டும் ஈராக் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈராக்கின் மீதான
போரைத் தடைசெய்யவில்லை; ஆனால் ஐ.நா-ஆயுத ஆய்வாளர்களுக்குத் தங்கள் வேலையைச் செய்யக் கூடுதல் கால
அவகாசம் கேட்டனர்.
பாக்தாத்திற்கு புஷ்ஷின் இறுதி எச்சரிக்கை விடுத்த பின்னர் ஜேர்மன் அதிபர் ஹெகார்ட்
ஷுரோடர், ''ஐ.நா- ஆயுத ஆய்வாளர்களின் அறிக்கை இப்பொழுதுதான் வந்துள்ள நிலையில் ஆயுத்த் தலையீட்டிற்கு
நியாயமில்லை. முன்பும் இப்பொழுதும் என்னுடைய கேள்வி இதுதான்: ஈராக்கின் வல்லாட்சியாளர் ஒருவரின் அச்சறுத்தல்
தன்மையின் அளவு நிச்சயமாகப் பல்லாயிரக்கணக்கான குற்றமற்ற ஆண், பெண், குழந்தை ஆகியோர் உயிரைக் குடிக்கும்
போரை ஏற்படுத்தும் அளவிற்கு நியாயமானதா? என்னுடைய விடை அப்பொழுதும் இப்பொழுதும் 'இல்லை'' என சில
நாட்கள் முன்புதான் கூறினார்.
இப்படிப்பட்ட அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் நேரத்திலும் மூன்று வல்லரசுகளும்
வாஷிங்டனிடம் போர் முயற்சியைத் தடைசெய்யும் வகையில் தாங்கள் ஏதும் செய்ய மாட்டோம் என உறுதியளிக்கும்
நடவடிக்கைகளையும் செய்து வந்தனர். ஜேர்மனியிலிருந்த தன் தளங்களை அமெரிக்கா பயன்படுத்த முடிந்தது. சட்டவிரோதமான
போருக்கு எதிரான கண்டனம் ஐ.நா பாதுகாப்புக் குழுவில் தீர்மானிக்கப்படலாம் அதற்கு எதிரான நடவடிக்கை என்ற
பேச்சே இல்லை என்பதற்கான அறிகுறிகள் கூடக்கிடையாது.
ஜேர்மனி, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளின் தற்போதைய பயனற்ற தலைகீழ்
மாற்றம் கடந்த இரண்டுமாத கால நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது வாஷிங்டனின் திமிர்த்தனமான பொய்களின் மூலம்
போரை நியாயப்படுத்த முற்பட்ட போக்கின் முயற்சியையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பேரழிவு ஆயுதங்கள் எனக்
கூறப்பட்டவையோ, அவற்றிற்கு முன்னோடி போன்ற ஆயுதங்களோ, ஈராக்கில் கண்டுபிடிக்கப்படவில்லை. மிக எளிய
விளக்கம் அப்படிப்பட்டவை அங்கே இருக்கவில்லை இதுவும் நாம் இதில் தொடர்புடையவர் அனைவரும் அறிந்ததேயாகும்.
ஈராக்கின் பாதுகாப்புப் படைகளோடும் மலைக்குவியல் போன்ற ஆவணங்களோடும் அமெரிக்கர்களுக்கு
தொடர்பு ஏற்பட்ட பின்னரும் கூட மதச்சார்பற்ற ஹுசைனின் ஆட்சிக்கும் இஸ்லாமியத்தீவிர இயக்கமான அல் கொய்தாவிற்குமிடையே
எந்தத் தொடர்பையும் காட்டும் அளவிற்கு வாஷிங்டனால் ஆதாரம் அளிக்க முடியவில்லை.
''ஈராக்கை சுதந்திரப் படுத்துகிறோம்'' என்ற புஷ் நிர்வாகத்தின் பிதற்றலான உரிமைப்பேச்சு
ஐ.நா-வின் சமீபத்திய தீர்மானத்தால் முழுமையாக அப்பலப்படுத்தப்பட்டுள்ளது. வாஷிங்டன் ''பன்னாட்டு அளவில்
அங்கீகரிக்கக்கூடிய பிரதிநிதித்துவ அரசாங்கத்தை ஏற்படுத்தும் வரையில்'' அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பையும்
ஆட்சியையும் சட்ட நெறிக்குட்படுத்தியுள்ளது. அதாவது கடந்த பத்து ஆண்டுகால அமெரிக்கரின் சம்பளப் பட்டியலில்
இடம்பெற்றுள்ள பல புலம்பெயர்ந்தோர் அமைப்புகளின் சார்பாக அமெரிக்காவிற்கு வளைந்துகொடுக்கக்கூடிய அரசாங்கம்
ஏற்படுத்தும் வரையில் பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகள் தங்கள் பழைய எதிர்ப்புக்களைத் தள்ளிவிட்டு கடந்தவார
ஐ.நா- தீர்மானத்தை ஆதரிப்பதில் விருப்பம் தெரிவித்திருப்பது எந்த ஆட்சியை அமெரிக்கா ஈராக்கில் இருத்தினாலும்
அதற்கு முத்திரையிடத்தயாராக இருப்பதையே குறிக்கிறது.
ஏகாதிபத்திய முறைக்கு வழிநடத்தும் அமைப்பு
கடந்த சில மாதங்களின் நிகழ்வுகளை வருந்தத்தக்க சம்பவம் என்றோ தனிப்பட்டோரின்
பலவீனங்களால் விளைந்தவை என்றோ தள்ளிவிடுவது பெரும் தவறாகப்போய்விடும். எந்தப் பெரிய அரசியல்
நெருக்கடியையும் போலவே ஈராக்கின் மீதான போரும், தேவையற்றதும், தற்காலிகமுமானதை தவிர்த்து, பன்னாட்டு
அரங்குச் செயல்களின் உண்மை உருவத்தைப் புலப்படுத்தியுள்ளது. ஐ.நா பாதுகாப்புக்குழுவின் கடந்த வார வாக்கெடுப்பு
அந்த அமைப்பு முழுமையாக எத்தன்மையுடையது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது: மிகவும் விஞ்ஞானபூர்வமான அடிப்படையில்
அந்தச் சொல்லிற்கு என்ன பொருளோ அந்தத் தன்மையில் அது ஓர் ஏகாதிபத்திய அமைப்பாகும்.
எத்தனையோ ஆண்டுகளாக ஐ.நா ஒரு வருங்காலத்தைப் பற்றி நம்பிக்கையொளி தரும்
நிறுவனம் என்று கூறப்பட்டு வந்தது; அமைதியைக்காக்க பன்னாட்டளவில் பயன்படுத்தப்படும் ஒரு நெம்பு கோல் சமுக
சமத்துவத்தை நிலைநாட்டவும் உலகம் முழுவதும் மனிதகுலத்தில் மேம்பாடு தழைக்கப் பாடுபடும் அமைப்பு என பறைசாற்றப்பட்டிருந்தது.
கடந்த வாரம் உலக வல்லரசுகளின் நோக்கங்களைச் செயல்படுத்தவும் தம்முடைய சுயநலன்களைப் பெருக்கிக்
காத்துக்கொள்ள துனைநிற்கும் அமைப்பாக அது உள்ளது என்பது வெளிப்படையாகிவிட்டது. ஐ.நா- இகழ்வுடன் நடத்தி
ஈராக்கின் மீது போர் தொடுத்துப் பாக்தாதில் தன்னுடைய இராணுவ ஆட்சியை நிறுவியதின் மூலம் புஷ் நிர்வாகம் அமெரிக்க
நடவடிக்கைகளுக்கு எந்த நிபந்தனைகளுமற்ற முழுமையான சரணாகதியை ஐ.நா கேட்கவில்லையென்றால் கடுமையான
பொருளாதார அரசியல் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதை அழுத்தந்திருத்தமாக தெரிவித்துவிட்டது. இந்த மிரட்டல்களுக்கு
நடுங்கி பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளும் கொள்கையில் சிறுபங்கிற்காக காட்டுச் சட்டமான பலம்தான்
சரி என்ற வாதத்தைத் தலைமேற்கொண்டு அடிபணிந்து நின்று அதை சட்டபூர்வமாகவும் செய்துவிட்டன.
பாதுகாப்புக் குழுவிலுள்ள அங்கோலா, சிலி பாகிஸ்தான் போன்ற சிறிய நாடுகள்
தங்கள் ஆதரவைத் தீர்மானத்திற்கு அளித்ததன் மூலம் தங்களுடைய கையாலாகாத தன்மையையும் கோழைத்தனத்தையும்
தம்நாட்டு காசுகள் உலக வல்லரசுகளுக்கெதிரான எவ்வாறு தாழ்ந்து செயல்படும் என்பதையும் உலகறியப் புலப்படுத்தியுள்ளன.
அரேபிய முதலாளித்துவ முறை அரசாங்கங்களின் வெற்றுத்தன்மையை சிரியாவின் செயல்கள் சுருங்கக் கூறி விளங்கவைத்தன.
ஐ.நா-வில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது மட்டுமின்றி தீர்மானத்தைப் பற்றிய ஆதரவுகாட்டி இகழ்வுக்குரிய அறிக்கை
ஒன்றையும் டமஸ்கஸ் வெளியிட்டது: ''ஈராக்கியர் தங்களுடைய எஜர்மானர்களாகவும் தங்கள் வளங்களைத் தாங்களே
உய்த்து வளர்க்க முடியாதநிலை ஏற்பட்டுள்ள போதிலும் இந்த ஈராக்கியச் சகோதரர்களின் வாழ்க்கைத் தரம் சீரடையும்
அக்கறையில் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு நல்குவதாக அது குறிப்பிட்டிருக்கிறது.
எந்த ஆழ்ந்த விவாதமும் இல்லாமல் ஈராக்கின் மீதான பொருளாதாரத் தடைகளை
ஐ.நா- பாதுகாப்புக் குழு நீக்கியது தொடக்கத்தில் அது சுமத்தப்பட்டதிலிருந்தே ஒரு அவக்கேடு என்பதைத் தெளிவாக்குகிறது.
1990-91-ல் வளைகுடா போருக்குப் பின்னர் ஈராக் தன் ஆயுத குறைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய
ஐ.நா தற்பொழுது அமெரிக்காவிற்கு அங்கு இராணுவ பலத்தைப் பற்றிக்கொண்டு ஈராக்கை வெவ்வேறு பதங்களிலும்
தூண்டிவிடும் ஆற்றலை அளித்துள்ளதையே காண்கிறோம். பேரழிவு ஆயுதங்கள் பற்றி எந்தச் சான்றுகளும் கிடைக்காத
அளவில் அமெரிக்காவின் குற்றச்செயல்கள் அப்பட்டமாகப் புலப்படுத்தப்பட்ட போதிலும் ஐ.நா- முழுமையாக மகத்தான
ஏமாற்று வித்தையை நிலைநாட்டுவதில் உறுதிகாட்டுகிறது. என்ற உண்மை அடிக்கோடிடப்பெறுகிறது.
கடந்த 12-ஆண்டுகளில் ஐ.நா-வின் பொருளாதார தடைகளினாலும் அமெரிக்க, பிரிட்டிஷ்
போர் விமானத் தாக்குதல்களினாலும் 'பறக்க கூடாத பகுதி' களில் பறந்து தாக்கிய அளவிலும் பெரும்பாலான
குழந்தைகள் உட்பட 5-லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆயினும்கூட கடந்தவார ஐ.நா-பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில்
பொருளாதார முற்றுகை நாட்டைக் கடுமையாக முடக்கியது, ஏன் சுமத்தப்பட்டது என்பதற்கே உரிய காரணங்கள்
பற்றி சிறிதளவேனும் விவாதிக்கப்படவில்லை. மேலும் ஈராக்கில் அமெரிக்காவின் ஐ.நா ஆயுத ஆய்வாளர்களை அனுமதிக்க
வேண்டும் என்று வற்புறுத்தப்படவும் இல்லை; ஏனெனில் அனைத்து வல்லரசுகளுக்குமே ஈராக் தன்னுடைய குறைந்த திறனைக்கொண்டு
அப்படிப்பட்ட பேரழிவு ஆயுதங்களைத் தயாரிக்கும் அமைப்புக்களைக் பல ஆண்டுகளுக்கு முன்பே கலைத்துவிட்டது என்பது
தெரியும்.
மேம்போக்காகக் காணும்போது கடந்த வார வாக்கெடுப்பு ஐ.நா-வின் பாதுகாப்புக்
குழுவிலுள்ள பெரிய வல்லரசுகளிடையே ஒருமித்துச்செல்லும் மனப்பான்மை மீண்டும் வந்துவிட்டது போலத்தோன்றும் ஆனால்
உண்மையில் ஐரோப்பிய முதலாளித்துவ அரசாங்கங்கள் அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்றமை போருக்கு முன்னால் ஏற்பட்ட
பிளவுகளின் வரிசைகள் வெடித்துவிடாமல் தற்காலிக பூச்சினால் தடுத்து நிறுத்திய தன்மையைத்தான் உணர்த்துகின்றது.
ஐரோப்பிய முதலாளித்துவ நலன்களுக்கெதிரான, அமெரிக்க உலக ஆதிக்கத்திற்கும் உள்ள அடிப்படை நலன்கள் பிரச்சனையில்
அமெரிக்காவின் ஈராக்கின் மீதான போர் ஒரு பகுதியே என்பதையொட்டிய இராஜதந்திர தொடர் போர், முந்தைய
குழுவான பிரான்ஸ், ஜேர்மன், ரஷ்யா வின் காலங்கடந்த விழிப்பையே காட்டுகிறது.
ஐ.நா, விருப்பு வெறுப்பற்ற நிலையில் செயல்படும் அளவிற்கு மீண்டும் வந்துவிட்டது என்று
எவரேனும் நினைத்திருந்தால் (ஒரு கவலைதரும் தனித்த நிகழ்வுக்குப்பின் என்று) அந்த எண்ணத்திற்கு கடுமையான அதிர்ச்சியே
காத்திருக்கிறது. அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே பனிப்போரை ஒட்டி இருந்த நெருக்கமான
தொடர்பு சோவியத் யூனியன் தகர்க்கப்பட்ட அளவில் அடிப்படையை இழந்துவிட்டது. புஷ் நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பு
முறையிலான செயல்பாடுகள் பன்னாட்டு அளவில் இதுகாறும் கடைபிடிக்கப்பட்ட உறவுகளின் நெறிகளைப் புறக்கணித்துச் செயல்படும்
முறை இவையனைத்தும் தீர்க்க முடியாத, தவிர்க்கமுடியாத உள்நாட்டுப் பிளவுகளை அயல்நாடுகளின் மீதான இராணுவ
நடவடிக்கைகள் மூலம் திசைதிருப்பும் முறையே ஆகும். இந்நிலை வருங்கால நெருக்கடி நடவடிக்கைகளுக்கு அரங்கு அமைத்துக்
கொடுப்பதுடன் இறுதியில் பெரிய ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே போர் மூளும் நிலைமையையும் ஏற்படுத்தும்.
உலகம் முழுவதும் போரெதிர்ப்பு இயக்கங்களில் பங்குபெற்ற மில்லியன் கணக்கான மக்களுக்கு
ஐ.நா வாக்கெடுப்பு அரசியல் கற்கவேண்டிய தக்க பாடமாக அமைந்துள்ளது. முதலாளித்துவ முறையை சிறிதும்
நம்புவதில் பயனில்லை என்பதுடன் அதனுடைய அரசாங்கக் கருவிகள் ஏகாதிபத்தியப் போருக்கு எதிராகச் செயல்படமாட்டது
என்பதைத் தெளிவாக்குவதுடன் ஒரு உலகம் தழுவிய பொது அரசியல் மூலோபாயம் அதற்குத் தேவை என்பதையும்
உணர்த்தியுள்ளது. சுயாதீனமான முறையில் தொழிலாள வர்க்கத்தை அனைத்து நாடுகளிலிருந்தும் ஒன்றாக அணிதிரட்டி
போருக்கு அடிகோலும் முதலாளித்துவ முறையை அழிப்பதற்கும் சமுகத்தை மீண்டும் சோசலிச அடித்தளத்தை கொண்ட நெறியின்படி
சமூக சமத்துவமின்மையை மற்றும் தேவைகளை அகற்றுவதற்கான பெரும் போராட்டம் நடத்தி வெற்றி காண்பதே நிரந்தர
உலக அமைதிக்கு வழி கோலும்.
Top of page
|