World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியாParliamentary whitewash of Blair's lies on Iraq falls flat ஈராக்கைப் பற்றி பிளேயர் பொய்கள் கூறியதைப் பாராளுமன்றம் மறைக்க முற்பட்டமை தோல்வியடைந்தது By Chris Marden பிரதம மந்திரி பிளேயர் ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி பிரிட்டனை அமெரிக்கத் தலைமையிலான சட்டவிரோதப் போருக்கு இழுத்துச் செல்ல பொய்யுரைத்தார் என்ற நேரடிக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கும் வகையில் பாராளுமன்றத்தின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான குழுவின் அறிக்கையின் முயற்சிகள் சொற்களால் சிலம் பாடியுள்ளன. ஆனால் அது பிளேயர் மற்றும் அவருடைய கதாசிரியர் (Spin doctor) அலாஸ்டர் காம்பல் மற்றும் பல உயர் அதிகாரிகள் நெளிந்து தப்பிவிட வழிவகுத்திருந்தாலும், தூண்டிலிலிருந்து அவர்களை இன்னமும் முழுமையாக விடுவிக்கவில்லை. வெளிநாட்டு விவகாரங்களுக்கான குழு, தொழிற்கட்சி பாராளுமன்ற அங்கத்தவர்களின் ஆதிக்கத்தில் இருந்ததாலும் பழமைவாத மற்றும் தாராண்மை ஜனநாயக எதிர்க்கட்சியினரும் அரசியல் முதுகெலும்பில்லாத நிலையில், வெளிநாட்டு விடயங்களுக்கான குழுவின் 7ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கை அரசாங்கத்திற்குச் சற்று ஆறுதலளிக்கும் வகையில் இருந்தது. ஆனால் அறிக்கையில் கூறப்பட்ட விஷயங்கள் பலவும் இன்னமும் பிளேயருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனுடைய அறிக்கை, ''ஈராக்கில் போர் தொடுப்பதற்கான முடிவு,'' அரசாங்கத்தின் செயல்களையும் நோக்கங்களையும் தன்னால் இயன்றளவு மெழுகுபூசி மறைக்கப் பார்த்துள்ளது. ''முந்தைய முரண்பாடுகளைப் போல் அல்லாமல், பாராளுமன்றத்தில் முன்வைத்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டுத்தான், இப்போர் நடந்தது. இந்த அணுகுமுறையை நாங்கள் வரவேற்கிறோம்'' என்று புகழ்ந்ததுடன் ''உளவுத்துறைத் தகவல் பற்றிய ஆதாரத்துடன்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.... இது அரசாங்கத்தின் மற்றொரு வரவேற்கத்தக்க புதிய வழிவகை'' என்றும் கூறியுள்ளது. பெரும்பாலான பிரிட்டிஷ் மக்கள் வெளிப்படுத்திய கருத்துக்களுக்கு எதிராக இந்த பாராளுமன்ற வாக்கெடுப்பு என்றோ அல்லது மக்களில் பெரும்பாலானோர் ஈராக்கின் மீதான 12 வருட பொருளாதாரத் தடைகளின் தாக்கம் பற்றியோ, தொடர்ச்சியான ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் கண்காணிப்பின் கீழ் இருந்ததைக் கருத்தில் கொள்ளாது, நல்ல ஆய்வற்ற தகவல், மட்டமான பிரச்சார நோக்கை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பதைப் பற்றியோ அறிக்கை ஏதும் தெரிவிக்கவில்லை. அப்பொழுது தனக்குக் கிடைத்திருந்த சிறந்த உளவுத்துறைத் தகவலுக்கு ஏற்ப அரசாங்கம் நடந்துகொண்டதாக அதற்கு மன்னிப்பளிக்கும் விதத்தில் அக்குழு கூறியதுடன், அரசாங்கம் வேண்டுமென்றே ஏமாற்றுதலில் ஈடுபடவில்லை என்ற கருத்தையும் வெளியிட்டுள்ளது. இந்த உளவுத்துறைத் தகவல் மிகவும் சிறந்ததல்ல என்று ஒத்துக்கொண்ட குழு அத்தகைய தரமற்ற தகவலை முதலில் ஏன் அரசாங்கம் ஏற்றுக்கொண்டது என்ற முக்கிய கேள்வியை முதலில் கேட்கவில்லை. பிரிட்டிஷ் உளவுத்துறை அமைப்புக்கள் மிகக் கூடுதலான அளவு ''தங்களது சொந்த நோக்கத்தை கொண்ட ஈராக்கிலிருந்து விட்டோடியவர்கள், புலம்பெயர்ந்தோரை'' நம்பியது என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது. அரசாங்கம் ஈராக்கியப் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய அச்சுறுத்தலை மிகைப்படுத்தியதா என்ற கேள்வியை எழுப்பி, ''ஈராக்கிலிருந்து நம்பத்தகுந்த மனித ரீதியான ஆதாரத் தகவல்கள் பற்றிக் குறைவான தொடர்பே இருந்த அளவில் பிரிட்டன் கூடுதலான அளவில் அமெரிக்கத் தொழில்நுட்ப உதவியிலும், தங்களது சொந்த நோக்கத்தை கொண்ட ஈராக்கிலிருந்து விட்டோடியவர்கள், புலம்பெயர்ந்தோரை அதிக அளவு நம்பியிருக்கக்கூடும்'' என்ற கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளது. அது மேலும் கூறுவதாவது: ''ஈராக்கின் இரசாயன, உயிரியல் ஆயுதங்களின் வலிமை பற்றிய அரசாங்கத்தின் ஊகங்கள் உருவாக்கப்பட்டதா என்று கூறுவது தற்போது இயலாது. எவ்வாறிருந்தபோதிலும், பிரிட்டன் எதிர்நோக்கிய ஆபத்தாக, உண்மையான உடனடியான ஆபத்து என்பதைப் பற்றி எங்களுக்குச் சந்தேகமில்லை.'' செப்டம்பர் 2002 அரசாங்கம் தயாரித்திருந்த முதல் உளவுத்துறை கோப்பு தொகுப்பிற்கு ''அப்பொழுது நன்கு அறியப்பட்டிருந்த உளவுத்துறைத் தகவலின் ஆதாரத்தில் அது தயார் செய்யப்பட்டிருந்த அளவில்'' ஏற்கத்தகுந்ததே என்ற ஒப்புதலைக் குழு கொடுத்துள்ளது. ஈராக் நைகரிடம் யூரேனியம் பெற முயற்சித்தது என்ற அதன் முக்கியமான கூற்றுக்களில் ஒன்று மோசமான போலி ஆவணத்தை ஆதாரமாகக் கொண்டிருந்தது என்பதை ஒத்துக்கொள்கிறது. அமெரிக்காவிடமிருந்து இக்கூற்றையொட்டிய சில ஆவணங்கள் போலியானவை என்ற தகவல் எப்பொழுது வந்தது என்ற தகவலை வெளியுறவு அலுவலகம் இன்னமும் கூறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ''இந்தச் சான்றை அதிகம் நம்பவில்லை என்று அரசு சொல்வது வினோதமாக உள்ளதாக நாங்கள் கருதுகிறோம் - இவை போலியானவை என்று பின்னர் தெரியவந்துள்ளது; ஆனால் எட்டு மாதங்களுக்குப் பிறகும் மற்ற ஆதாரத்தைப் பரிசீலனை செய்து வருகிறது.'' என முடிவிற்கு வருகின்றோம் எனவும் தெரிவித்தது. எதிர்பார்த்தது போலவே செப்டம்பர் கோப்புத் தொகுப்பில் ஈராக் பேரழிவு ஆயுதங்களை 45 நிமிடத்திற்குள் பயன்படுத்திவிட முடியும் என்பதை சேர்த்து காம்பல் (Campbell) ஆவணத்தை ''குழப்பியது'' பற்றிய கருத்தையேற்காமல் அவரைக் கெளரவமாக நடத்தியுள்ளது. ஆனால் காம்பலைப் பற்றிய பரந்த அளவிலான குறிப்புக்கள் இந்தத் தீர்ப்பை சிறிய அளவில் நகைப்பிற்கிடமாக்கியுள்ளன. பிளேயரின் கதாசிரியர் (Spin-doctor), காம்பல்தான் 45 நிமிடம் பற்றிய செய்தியை, அறிக்கையில் சேர்த்ததாக ஒரு பெயர் குறிப்பிடாத மூத்த MI6 அதிகாரி தெரிவித்த தகவலை வெளியிட்டதற்காக BBC மற்றும் அதன் செய்தியாளர் அன்டுரு ஜில்லிகன் (Andrew Gilligan) ஆகியோரை எதிர்த்துப் பிரச்சாரம் செய்துவருகிறார். ஆனால் 45 நிமிடம் பற்றிய செய்தி ஒரே ஒரு, வேறொரு உறுதிப்படுத்தப்படாத ஆதாரத்திலிருந்து தான் வந்துள்ளது என்பதை குழு ஒப்புக்கொண்டுள்ளது. ''இந்த ஆதாரம் பிரதம மந்திரியால் அவர் கோப்புத் தொகுப்பை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது உயர்த்திப் பேசப்பட்டதுடன், மந்திரிகளுடன் கூட்டு உளவுத்துறைக் குழுத்தலைவர் ஜோன் ஸ்காலட் (John Scarlett) கலந்துரையாட அழைக்கப்பட்ட கூட்டம் திரு. காம்பலின் தலைமையில் நடைபெற்றுள்ளது'' எனக் குறிப்பிடுகிறது. திரு காம்பல் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்லர். ''திரு.காம்பல் தலைமைதாங்கப்பட்ட ஈராக்கியத் தகவல்கள் குழுவிற்கும், கூட்டமைப்புத் தகவல் மையத்திற்கும் கொடுக்கப்பட்ட கூடுதலான சுயாதீன அதிகாரமும், நடைமுறைப் பொறுப்பு இல்லாமையும் ''கறைபடிந்த கோப்புத் தொகுப்பிற்கு'' துணைக் காரணங்களாக அமைந்துவிட்டன'' என அறிக்கை கூறுகின்றது. இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தயாரிக்கப்பட்ட கோப்புத் தொகுப்பு அமெரிக்க ஆய்வு மாணவர் இப்ராகிம் அல் மராஷியின் (Ibrahim al-Marashi) இன் கட்டுரையிலிருந்து பெருமளவு பிரதிபண்ணப்பட்டதென்றும் அதனுடைய வார்த்தைகள் மாற்றப்பட்ட விதம் ஈராக், அல்கொய்தா போன்ற பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு கொண்டிருந்தது என்ற கூற்றைக் கொண்டிருந்தது. ''அரசாங்கம் மேற்கோளாகக் காட்டாமலும், முதலில் ஆய்வுக் கட்டுரை எழுதியவரின் அனுமதி பெறாமல் சிதைத்ததும், திருந்திய படிவங்களைக் கொண்டதும், மாற்றியதைக் கூறாமல் மாற்றியமைத்துக் கருத்துக்கள் வேறுவிதமாக வெளிப்படுத்தப்பட்டதும் முதலான செயல்களைச் செய்தது முழுமையாக ஏற்கப்பட முடியாதவையாகும்'' என்று அறிக்கை முடிக்கிறது. ஈராக்கிய தகவல்கள் குழு ஆதாரங்களைத் தெரிவிக்காத நிலைதான் உளவுத்துறைத் தகவலைத் தக்க சான்றாகப் பாராளுமன்றத்தில் `தவறாக எடுத்துக் கூறியதற்கு` காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தக் காரணத்திற்காகத்தான், ''பாராளுமன்றத்தை தவறான திசையில் அமைச்சர்கள் இட்டுச் சென்றனர் என்ற மத்திய குற்றச்சாட்டை'' தவறு எனத் தீர்மானிக்க ஏதுவாக உள்ளது. இந்தத் தீர்ப்பிற்குப் பல துணை அறிவிப்புக்களைச் சேர்க்கவேண்டிய கட்டாயம் குழுவிற்கு ஏற்பட்டது. மிக முக்கியமாகக் கூறப்படுவது ''செப்டம்பர் கோப்புத் தொகுப்பு பற்றிய சரியான தன்மையைப் பற்றி, ஈராக்கியப் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய சான்றுகள் அல்லது அவை அழிக்கப்பட்டதில் சான்றுகள், இவை அறியப்படுவதற்கு ஜூரிகள் இன்னமும் தங்கள் பணிகளை முடிக்கவில்லை'' என்று அறிக்கை முடிக்கப்படுகிறது. காம்பல் நேரடியான அளவிற்குப் பொறுப்பாயிருந்த பெப்ரவரி கோப்புத் தொகுப்பு ''முற்றாக எதிர்விளைவானது'' என்றும் குழு கூறுவதுடன், பாராளுமன்றத்திற்கு இது வழங்கப்பட்ட விதம் ''அடிப்படையிலேயே தவறானது'' என்றும் இதையொட்டி பிளேயர் ''தன்னையுமறியாமல் ஒரு கெடுதலான நிலையை இன்னும் மோசமான நிலையாகச் செய்ய நேர்ந்துவிட்டது'' என்றும் குழுவின் அறிக்கை குறிப்பிடுகின்றது. அடுத்த இரண்டு மாதத்திற்குள் அரசாங்கம் விடையளிக்க வேண்டிய நான்கு கேள்விகளை அது முன்வைத்துள்ளது: ஈராக்கின் இரசாயன, உயிரியல் ஆயுதங்கள் பற்றிய அச்சுறுத்தல் உள்ள செப்டம்பர் கோப்புத் தொகுப்பு இன்னமும் உண்மைக்குட்பட்டதா? சமோத் 2 (Samoud 2) ஏவுகணைகளையும் மற்றும் ஈராக்கிடம் கணக்கிற்குட்படாத 20 ஹூசேன் ஏவுகணைகள் உள்ளன எனக் கூறப்பட்டிந்த செப்டம்பர் கோப்புத் தொகுப்பின் தற்போதைய மதிப்பீடு என்ன? ஈராக் நைகரிடமிருந்து யூரேனியத்தைக் கேட்டது பற்றிய ஆவணம் போலியானவை என்பது வெளிநாட்டு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோவிற்கு எப்பொழுது தெரிவிக்கப்பட்டது? ஈராக் எந்த பேரழிவிற்குரிய ஆயுதங்களையும் பயன்படுத்தவில்லை என்ற உண்மையின் அடிப்படையில் 45 நிமிடக் கூற்று இன்னம் எந்த அளவிற்குச் சரியானது எனக் கொள்ளப்படுகிறது? அறிக்கை மனநிலை குழம்பிய தன்மைகளுக்கு இயைந்து காணப்படுகின்றன. ஒரு பத்தி பிளேயர், காம்பல், பாதுகாப்புச் செயலர் ஜெப் ஹுன் ஆகியோரை தவறுகள் ஏதுமிழைக்கவில்லை என்று கெளரவமாக விட்டுவிடுகிறது. அடுத்த பத்தியில் அரசாங்கத்திற்கு மேலதிக தாக்குதல்களுக்கான வழியை விட்டுவிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் 11 பேர் அடங்கிய குழு அதனுடைய டோரி, தாராளவாத உறுப்பினர்களுக்கும் சலுகை காட்டவேண்டியிருந்ததுதான். மூன்று பழமைவாத உறுப்பினர்களும் ஒரு தாராளவாத ஜனநாயவாதியும் குழுவின் அறிக்கை வாசகம் கடுமையாக அமைய வலியுறுத்தி தொடர்ச்சியான வாக்கெடுப்பை முன்வைத்தனர். சில நேரத்தில் குழுத்தலைவர் டோனால்ட் ஆன்டர்சன் (Donald Anderson-தொழிற்கட்சி) ஆதரவு கொடுத்தார். கூடுதலான அளவில் தொழிற்கட்சி பின் வாங்கிலில் இருப்பவரான ஆண்ட்ரூ மக்கன்லி (Andrew Mackinlay) ஆதரவு கொடுத்தார். இறுதியில் 45 நிமிடக் கூற்று பற்றிய காம்பலின் பங்கு குழுத்தலைவரின் நிர்ணய வாக்கினால்தான் 6-5 என்ற முறையில் நிரூபிக்கப்படவில்லை என்று தோற்கடிக்கப்பட்டது. ஒழுங்குமுறையான தீர்ப்பை வழங்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போதுமான ஆவணங்கள் வழங்கப்படவில்லை என்ற டோரி திருத்தத்தை வாக்கெடுப்பு தள்ளியதையொட்டி இது சாத்தியமாயிற்று. முக்கிய அறிக்கையில் கொடுக்கப்பட்ட இந்தச் சலுகைகள்தாம் தொழிற்கட்சி உறுப்பினர்கள் அல்லாதவர்கள் தமது எதிர் அறிக்கையை வழங்கி கூடுதலான அளவு சேதப்படுத்தலையும் குழுவை வெளிப்படையாகக் கட்சி அடிப்படையில் பிரிப்பதற்கும் காரணமாகும். அப்படியிருந்தும்கூட வெளிவிவகார குழு (Foreign Affairs Committee -FAC) வின் டோரி உறுப்பினர் ரிச்சார்ட் ஒட்டாவே ''பாராளுமன்றத்தில் முக்கியமான வாக்கைப் பெறுவதற்காக போருக்கான வெள்ளோட்ட நடவடிக்கைகளில் அரசாங்கம் தன் வாதத்தை மிகைப்படுத்திவிட்டது என்ற முடிவுக்குத்தான் நான் வந்துள்ளேன்.'' என வெளிப்படையாக அறிவித்தார். மேலும் டோரித் தலைவர் Iain Duncan Smith உம் தாராளவாத ஜனநாயக கட்சி தலைவர் சார்ல்ஸ் கென்னடியும் தனியான விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆண்டர்சன் குழுவினர் கூறிய உடன்பாட்டு சமரசத்திற்கு டோரிகளும் தாராளவாத ஜனநாயகவாதிகளும் கொண்டிருந்த பங்கு, ஈராக்கின் போருக்கு உந்துதலுக்கான அவர்களின் அரசியல் குற்றத்தினை உறுதிப்படுத்துகின்றது. மூன்று முக்கிய காரணங்களுக்காக பிரச்சினையை வெளிப்படையான பிரிவிற்கு அவர்கள் கொண்டுவரவில்லை. முதலாவதாக, பொய்யின் அடிப்படையில் அரசாங்கம் மேற்கொண்ட போரை ஆதரித்ததால், அவர்களது கட்சிகளும் குற்றமிழைத்தவர்கள்தாம். பிளேயர் குழு கொடுத்த பயனற்ற உளவுத்துறை அறிக்கையினால் அவர்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்றால் யாரும் அதை நம்பமாட்டார்கள். இரண்டாவதாக இத்தாக்குதல் மூலம் வாஷிங்டனின் புஷ்ஷின் நிர்வாகத்துடன் ஒரு கூட்டிற்குள் இட்டுச்சென்றதால், அவர்கள் அனைவரும் பிரிட்டனின் உண்மை நட்பு நாடு ஆபத்தான விரோதியாக மாற்றப்படுவதை ஒருவரும் விரும்பமாட்டார்கள். மூன்றாவதாக போருக்கான காரணங்களையொட்டி கேள்விகள் தொடுக்கப்பட்டால், அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பு மக்களிடையே பெருகிவிடும். இது ஈராக்கில் பிரிட்டிஷ் படைகள் தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளதை ஆபத்திற்கு உட்படுத்துவதோடு அந்நாட்டின் எண்ணெய் வளத்தைச் சூறையாடுவதில் பங்கு போய்விடும். இது உள்நாட்டில் அரசியல் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி ஏற்கனவே வாழ்க்கைத்தரம், சமூக நலன்கள் மீதான இடைவிடாத் தாக்குதல்களால் சீற்றமும் ஏமாற்றமும் அடைந்துள்ள மக்களுக்கு ஒரு புதிய எரிநிலையை ஏற்படுத்திவிடும். டோரிகளும், தாராளவாத ஜனநாயகவாதிகளும் பாராளுமன்றத்தின் உயரிடச் சூழ்நிலையில் ஒரு அரசியல் சேதத்தை விரும்பினாலும், அது சமாளிக்கப்பட்டு தங்கள் எண்ணங்களைப் பூர்த்தி செய்ய பயன்படுத்திக்கொள்வர். எந்தக் காரணங்கள் அவர்கள் எச்சரிக்கையை தூண்டியிருந்தாலும் அரசாங்கத்தின் மதிப்பு மிக மிகக் குறைந்து அது பாரியளவில் அம்பலப்படுத்தப்பட்டு நிற்கிறது. பிளேயரின் பிரச்சினைகள் கடந்த சில நாட்களாகப் பெருகியுள்ளன அரசாங்கம் H.H.C (BBC) இன்பால் கவனத்தைக் குவிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் அதற்கே கெடுதல்களைத் திருப்பியளித்துள்ளன. இந்த அறிக்கை வெளியிடப்படுவதற்கு முதல் நாள் Observer க்கு அவர் கொடுத்த பேட்டியில் மீண்டும் பி.பி.சி ஐத் தாக்கி ''என்னுடைய கெளரவத்திற்கு மாசு எவ்வளவு கற்பிக்க முடியுமோ அவ்வளவு கற்பித்ததற்காக'' மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கோரினார். பாதுகாப்பு சேவையினர் மத்தியில் அதிருப்தி உள்ளது என்பதைத் தாங்கள் அறிவித்ததை வெளிவிவகார குழு உடைய கண்டுபிடிப்புக்களும் உறுதி செய்துள்ள அளவில் தாங்கள் கூறியதைத் திரும்பப்பெற பி.பி.சி யும் மறுத்துவிட்டது. பிளேயரின் முயற்சிக்கு எதிரிடையாக Observer க்குத் தங்களுடைய அதிகாரிகள் MI6ன் தலைவர் சேர் ரிச்சார்ட் டியர்டோவ் (Sir Richard Dearlove) விற்குடையே நடந்த உரையாடலில் குறிப்பப்ை பார்க்க அனுமதித்தனர். சிரியாவும் ஈரானும் உலகப் பாதுகாப்பிற்கு ஈராக்கைவிடக் கூடுதலான அச்சுறுத்தலைக் கொடுக்கக்கூடும் என்று அக்குறிப்பில் அவர் தெரிவித்திருந்தார். காம்பலைப் பற்றிய குறை கூறப்பட்ட கருத்தை அவர்களுக்கு தகவல் கூறியதை இக்குறிப்பைக் கருத்திற்கொண்டு வெளியிட்டதாகவும் பி.பி.சி கூறுகிறது. செய்தியாளர் ஆண்ட்ரூ ஜில்லிகனுடைய MI6 க்குள் உடைய தொடர்பு பற்றி விசாரணை வேண்டும் என குழு தெரிவித்துள்ள அதன் நம்பிக்கை, பிரச்சனையை வெடிப்பிற்குக் கொண்டு செலுத்திவிடலாம். இந்தக் கோரிக்கை அரசாங்கத்தால் ஏற்கப்பட்டால் மிகுந்த அளவு மகிழ்ச்சியற்ற ஏற்கனவே மதிப்பற்ற தகவலைக் கொடுத்ததற்காகக் குறை கூறப்படும், போலி ஆவணங்கள் வழங்கும் மற்றும் பிரதிபண்ணப்பட்ட விஷயத்திற்கு ஒப்புதல் அளித்த மற்றும் எப்படியாயினும் போருக்குப் போவதற்கு ஆதரவு கொடுக்காத உளவுத்துறையினரில் சிலரை அரசு பழிவாங்கத் தூண்டும் நிலைதான் ஏற்படும். வெளிவிவகார குழு அறிக்கை வெளிவந்த அன்றே, பாதுகாப்பு மந்திரி அலுவலகம் ஈராக் போர் மற்றும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகள் பற்றித் தன்னுடைய முதல் அறிக்கையை வெளியிட்டது. போதுமானதல்லாத உளவுத்துறையின் தகவலையொட்டி, சதாமின் தளபதிகள் பேரழிவு ஆயுதங்கள் கூட்டணிப் படைகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுமா என்பது பற்றி பிரிட்டன், அமெரிக்கா அறிந்திருக்கவில்லை என்ற நாசகரமான ஒப்புதலை வெளியிட்டுள்ளது. 2003 ல் ஈராக்கில் நடவடிக்கைகள்; முதல் பிரதிபலிப்புகள் (Operations in Iraq 2003: First Reflections) என்ற தலைப்பில் போரில் ஈராக்கியப் படையின் பரிதாபத்திற்குரிய நிலையைப் பற்றிக் கூற முற்படுகையில்: ''வருடக்கணக்கான உத்திகபூர்வமான புறக்கணிப்பு, குற்ற நடவடிக்கை, சர்வதேச பொருளாதாரத் தடைகள், போரின் நாசம் போன்றவற்றால் ஈராக்கின் அடிப்படைக் கட்டுமானங்கள், நிறுவன அமைப்புகள் முறை, சமூக நிலை ஆகியவை எந்த அளவிற்கு உண்மையில் சரிந்து தகர்ந்துவிட்டன என்பது பின்னர்தான் தெரியும்'' எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் போரில் எந்தவொரு சுயநலம் அற்ற மற்றும் அறிவார்ந்த ஒவ்வொரு பார்வையாளரும், இந்தத் துயரம் நிறந்த முக்கிய காரணங்களை, வாஷிங்டன், இலண்டன் இவற்றிலிருந்து வெளியான பிரச்சாரங்களுக்கு முன்பே தமது ஆரம்ப புள்ளியாக கொண்டிருப்பார். ஜூலை 7ம் தேதி இணைப்புக் குழு (Liaison Committee) - பாராளுமன்ற தெரிவுக்குழுக்களில் உள்ள பாராளுமன்ற அங்கத்தவர்களைக் கொண்ட குழுவானால் பிளேயர், ஸ்ட்ரோ, ஹூன் ஆகியோரால் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய அச்சுறுத்தல் மிகைப்படுத்தப்பட்டதா என்று பிளேயரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அவர் குற்றச்சாட்டையொட்டி வெளிவிவகார குழு (FAC) அறிக்கையை அலட்சியமாகத் தாக்கும் முயற்சியில், ''என்னைப் பொறுத்தவரையில் ஜூரி இன்னமும் முடிவடையவில்லை.... பேரழிவு ஆயுதங்கள் பற்றிய சான்றுகளை நாங்கள் கண்டுபிடிப்போம் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் கிடையாது.'' என்றார். ஆனால் பிளேயரின் கெட்டித்தனத்தால் அவர் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளின் முழுப் பரிணாமும் அவரின் முகத்தில் தெரிவதை மறைத்துவிட முடியவில்லை. சிலவேளை அதிகாரத்திலிருந்து இவர் வீழ்ச்சியடைந்துவிடுவாரோ என்ற எண்ணம் அவருடைய அரசியல் நண்பர்களிடையே கூட ஏற்பட்டுள்ளது என்பதற்கு ஒரு அடையாளம் காணப்படுகின்றது. நியூயோர்க் டைம்ஸின் கட்டுரையாளர் Nicholas D.Kristot சமீபத்தில் ''எமது ஈராக் போரில் கவலைக்குரிய விளைவுகளில் ஒன்றாக இருப்பது, அது சதாம் ஹூசேனுக்கு முன்னர் டோனி பிளேயரை முடித்துவிடுமோ என்பதுதான்'' எனக் கூறினார். பிரிட்டனில் நான் எங்கு சென்றாலும் மக்கள், "திரு. பிளேயரை ஜனாதிபதி புஷ்ஷின் செல்லமான நாயைய்போல் மரியாதைக் குறைவாக நோக்குவதுடன், ....அவரிடம் நிறைய நேரம் இருக்குமானால், சிலவேளை திரு. புஷ் அவரை தன்னுடைய ஆலோசகராக நியமித்துக்கொள்ளலாம்.'' எனக் கூறுகின்றனர் என மேலும் குறிப்பிட்டார். |