World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
போர்த்துக்கல் EU expansion worsens Portugal's economic crisis ஐரோப்பிய ஒன்றிய விரிவாக்கத்தால் மோசமடையும் போர்த்துக்கல்லின் பொருளாதார நெருக்கடி By Daniel O'Flynn போர்த்துக்கல் பொருளாதாரமானது ஓராண்டிற்கு முன்னர் இருந்ததைவிட முதல் மூன்று மாதங்களில் 1.2 வீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. இந்த பொருளாதார நிலைப்பாடு குறித்து, தேசிய புள்ளி விவரக் கழகம் (INE) வெளியிட்டுள்ள உண்மையான மதிப்பீடு இதுவாகும். உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) பலவீனமான உள்நாட்டுத் தேவையின் காரணமாக வீழ்ச்சியுற்றதுடன், முந்தைய கால்பகுதியின் பொழுது அவதானித்த வீழ்ச்சியைவிடவும் மேலும் சுருங்கிப் போனது. காலாண்டின் அடிப்படையில், முதல் காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி (G.D.P) 0.1 வீதம் உயர்ந்தபோது, இது பொருளாதார பின்னடைவிலிருந்து மீட்கப்பட்ட நிலையை காட்டியது. ஆனால் பொருளாதாரப் பின்னடைவைப் பற்றி பாடப் புத்தகங்கள் தருகின்ற விளக்கங்களின்படி தொடர்ந்து இரண்டு காலாண்டு கால அளவில் சுருங்கிக் கொண்டு வரும், பொருளாதாரம் மிகப்பெரிய சோதனைக் கட்டத்தில் இருக்கிறது என்பதை அது தெளிவாக்கும். 2002 இறுதி காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்றாவது காலாண்டிலிருந்து 0.8 வீதம் வீழ்ச்சியடைந்தது. 2002 கடைசி காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி முந்தைய ஆண்டு கணக்கோடு ஒப்பிடுகையில் 1.3 வீதம் சுருங்கியது. 2002 ன் மூன்றாவது காலாண்டில் ஒப்பிடுகையில் 0.3 சதவீதம் சுருங்கியது. அண்மை வாரங்களில் கிட்டத்தட்ட தினசரி வருகின்ற தகவல்கள் பொருளாதார வீழ்ச்சியை பறைசாற்றுவதாக அமைந்திருக்கின்றது. போர்த்துக்கல் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள், வர்த்தகத்துறையில் நம்பிக்கைக் குறியீட்டெண் 1993 ல் நடைபெற்ற பிரதான பொருளாதாரப் பின்னடைவுக்குப் பின்னர் மிகக் குறைவாகப் பதிவானது இதுதான் என்று விளக்கிறது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேலையில்லாத் திண்டாட்டம் இதே கால கட்டத்தில் சென்ற ஆண்டு நிலவரத்தோடு ஒப்பிடும்போது 49.6 வீதம் உயர்ந்திருந்தது. கடந்த வருட நிலவரத்தோடு ஒப்பிடும்போது சென்ற ஆண்டு வேலையிழந்தவர்கள் எண்ணிக்கை 26.3 வீதம் அதிகரித்திருந்தது. 2002 ம் ஆண்டு நிலவரத்தோடு ஒப்பிடும்போது தற்போது வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு 6.7 வீதம் ஆகும். 2002 ம் ஆண்டில் இது 4.3 வீதமாக இருந்தது. அதேவேளை தொழிற்சங்கங்கள், உண்மையிலேயே வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு 7.6 வீதத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் இலக்கின்படி வேலையில்லாத் திண்டாட்டம் 5 வீதத்திற்கு மேல் போகக்கூடாது. ஆனால், மிகப்பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் 7 வீதத்திற்கும் மேல் அதிகமாக உள்ளது. 2002 ல், போர்த்துக்கல்லில் வேலையின்மை அதிகரிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் 25 முதல் 34 வயதுக்கு இடைப்பட்ட வயதிலுள்ளவர்கள் ஆவர். அங்கு 81 சதவீதம் அதிகரிப்பு இருந்தது. இது 2002 ல் வேலைக்காக காத்திருப்போரில் 700,000 அளவில் அதிகரிப்பைக் கூட்டி இருக்கிறது. இந்த ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்து வேலை தேடி வருகின்ற இளைஞர்களின் எண்ணிக்கை மேலும் 700,000 அதிகரிக்கும். வேலை வாய்ப்பு நிலையங்கள் பிரசுரித்த புள்ளி விபரங்களின்படி, மிகப்பெரும் அளவிற்கு கல்வித் தகுதிகள் உள்ளவர்கள் தான் மிகப்பெரும் அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2001 ம் ஆண்டில், 24,000 பல்கலைக்கழக பட்டதாரிகள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருந்தனர். இத் தொகையானது சென்ற ஆண்டு இறுதியில் 30,000 க்கும் அதிகமாக உயர்ந்துவிட்டது. யூரோ நாணயத்தை ஆரம்பத்திலிருந்து உற்சாகத்தோடு ஆதரித்து வருகிற நாடு போர்த்துக்கல் ஆகும். யூரோ மண்டலத்தில் சேருகின்ற தனது எண்ணத்தை போர்த்துக்கல் அறிவித்த நேரத்தில் வட்டி வீதங்கள் ஜேர்மனி மற்றும் பிரான்சை விட அதிகமாகயிருந்தது. இந்த வட்டி உயர்வை பயன்படுத்தி லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் போர்த்துக்கல்லின் வங்கிகள் ஜேர்மன் மார்க் மற்றும் பிரெஞ்சு பிராங் நாணயங்களை உள்நாட்டினதை விட குறைந்த வட்டி வீதத்தில் அதிகமாய் கடன்வாங்கிக் குவித்தன. இப்படிக் கிடைத்த கடன்களை உள்நாட்டு நாணயமாக மாற்றி போர்த்துக்கல் வங்கிகள் மிகப்பெரும் அளவிற்கு கடன்களை வழங்க பயன்படுத்தின. இப்படி ஏராளமாக நாணயப் புழக்கம் ஏற்பட்டதும் யூரோ நாணயம் துவக்கப்படுவதற்கு முன்னரே ஜேர்மனியில் நிலவிய அளவிற்கு வட்டி வீதங்கள் போர்த்துக்கல்லில் குறைந்தது. இப்படி மலிவாக மிக அதிக அளவில் கடன்கள் கிடைத்ததால் கம்பெனிகள் மற்றும் வீடுகளின் சொந்தக்காரர்கள் பெருமளவில் கடன்களை பெறத் துவங்கினர். வீடுகள் கட்டுவதற்கான முதலீடுகள் உயர்ந்தன. நுகர்வோர் நிலைநாட்ட முடியாத அளவிற்கு வேகமாக செலவிட ஆரம்பித்தன. கம்பெனிகளது முதலீடுகள் மிகப்பெரும் அளவிற்கு உயர்ந்தன. இப்படி போர்த்துக்கல்லில் கடன்கள் வழங்கப்படும் அளவு அதிகரித்துக்கொண்டே போனதால், வர்த்தக பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் உருவாயிற்று. ஐரோப்பிய மத்திய வங்கி (European Central Bank - ECB) இந்த நிலவரம் குறித்து கவலை தெரிவித்தது. சற்று சங்கடம் அளிக்கிற வகையில் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் அளவிற்கு வட்டி வீதங்களை ECB உயர்த்தியதற்கு காரணம், போர்த்துக்கல்லின் பணவீக்கம் தான் ஆகும். சென்ற வாரம் ECB யின் தலைவரான விம் டிசன்பர்க் (Wim Diusenberg) யூரோ வட்டி வீதங்களை 2.5 வீதத்திலிருந்து 2 வீதமாக குறைத்தார். இதனால் ஒரு யூரோ நாணயம், 1.1814 என்ற அமெரிக்க டொலர் வீதத்தில் விற்பனை செய்யப்பட்டது. இதற்கு முன்னர் 1.1932 டொலர் வீதத்தில் யூரோ விற்பனை செய்யப்பட்டது. இது, 12 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாணயம் 1999 ம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட மிக உயர்ந்த மட்டமாகும். கடன்கள் பூரிப்பு முடிந்துவிட்டதால், பொருளாதாரம் மிக மந்தமான நிலையில் சென்று கொண்டிருக்கின்றது. ஆனால் நிலவரம் கட்டுப்பாட்டில் இல்லாதிருக்கிறது. போர்த்துக்கல் அதன் நிதிக் கொள்கைக்காக அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தால் கண்டிக்கப்பட்டது மற்றும் நலிவடைந்து வரும் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த தொடர்ந்து கடன் வாங்குவதால் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி ஒப்பந்தத்தின் பற்றாக்குறை வரவு-செலவுத் திட்ட விதிகளை மீறியதாக அறிவிக்கப்பட்டது. 2002 இறுதியில் போர்த்துக்கல்லின் பற்றாக்குறை 4.1 வீதமாகயிருந்தது. இது மாஸ்ரிட்ச்சில் (Maastricht) நிர்ணயிக்கப்பட்ட இலக்கான GDP யில் 3 வீதம் என்பதற்கும் அதிகமானது. போர்த்துக்கல் வங்கிகள் வெளிநாட்டு நாணயங்களை பயன்படுத்தி கடன்களை வழங்கி வருகின்றன. இதனால் கடன்களை திரும்பிச் செலுத்துகின்ற அளவிற்கு நாட்டில் போதுமான அளவிற்கு பணம் இல்லை என்ற அச்சம் நிலவுகின்றது. பிரிட்டனில் உள்ள யூரோ நாணயத்திற்கு எதிரான முகாமை சேர்ந்தவர்கள் ஒரே நாணயத்தை ஏற்றுக்கொண்டதால்தான் போர்த்துக்கல் இந்த நிலவரத்திற்கு ஆளானது என்று காரணம் காட்டுகின்றனர். ஆனால் உண்மையான காரணம், போர்த்துக்கல்லின் மாறிய பூகோள நிலையில் காணப்பட வேண்டும். 1990 களில், போர்த்துக்கல்லானது ஐரோப்பிய நாடுகளிலேயே மிக மலிவான உழைப்பு கிடைக்கும் நாடு என்ற நிலையில் இருந்தது. இதற்கு முன்னர் ஸ்பெயின் தான் அப்படிப்பட்ட நிலவரத்தில் இருந்தது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி நாடுகடந்த கூட்டுத்தாபனங்கள் போர்த்துக்கல்லில் தங்களது உற்பத்திகளை பெருமளவில் நிறுவிக் கொண்டன. இதன் விளைவாக இதர ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைவிட, போர்த்துக்கல்லின் சராசரி பொருளாதார வளர்ச்சி 3.5 வீதமாகயிருந்தது. அப்போது, வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு குறைவாக இருந்தது. பொது சேவைகள் மிகவும் மேம்பட்ட நிலையில் நடைபெற்று வந்தன. எனவே, 1999 தேர்தல்களில், அன்டானியோ குட்டர்ஸ் (Antonio Guterres) தலைமையிலான சோசலிஸ்ட் கட்சி என்றும் காணா அளவிற்கு பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்றது. ஆயினும், இரண்டாண்டுகளுக்குள் டிசம்பர் 2001 ல் நடைபெற்ற நசரசபைத் தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சி படுமோசமாக தோல்வியடைந்ததால், குட்டர்ஸ் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஏழாண்டுகள் எதிர்கட்சியாக இருந்த PSD (சமூக ஜனநாயகக் கட்சி) மீண்டும் ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு வழிவகை செய்யப்பட்டது. தற்போது ஜோஸ் மேனுவல் டிரோபாரசோ (Jose Manuel Durao Barroso) தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்சியானது PSD மற்றும் பழமைவாத மக்கள் கட்சி கூட்டணியாகும். இப் புதிய அரசாங்கம் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பாகமாக, (Value Added Tax - VAT) மதிப்பு கூடுதல் வரிவிதிப்பை 19 சதவீதம் அளவிற்கு உயர்த்தியது. இளைஞர்களுக்கான வீட்டு வசதித் திட்டம் வெட்டப்பட்டது. 50,000 பொதுச்சேவை ஊழியர்கள் வேலையிழப்பார்கள் என்ற அச்சுறுத்தல் உருவாயிற்று. அரசாங்கமும் தனியாரும் இணைந்து வரும் ஆண்டுகளில், பத்து புதிய மருத்துவமனைகளை துவக்க திட்டமிட்டுள்ளன. அத்துடன் சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களை காப்பீட்டுக் கழகங்கள் பொறுப்பில் அரசாங்கம் விட்டுவிட்டது. சமூக ஜனநாயகக் கட்சி- மக்கள் கட்சி கூட்டரசாங்கம் புதிதாக குடியேறுவோருக்கு கடுமையான குடியேற்ற எதிர்ப்பு விதிகளை அங்கீகரித்துள்ளது. யூரோ மத்திய வங்கியில் ஒத்துக்கொள்ளப்பட்ட புதிய தொழிலாளர் சட்டங்கள் கடுமையான குரோதத்தை நாடு எங்கும் தூண்டி விட்டிருக்கிறது. இதனால் சென்ற ஆண்டு நாடு முழுவதிலும் தொழில்துறை நடவடிக்கை இடம் பெற்றது. யூரோ வட்டி வீதக் குறைப்பு தொடர்பான முடிவைப் பற்றி பிரதமர் டுராவோ பாராசோ கருத்து தெரிவிக்கும்போது, அமெரிக்க டொலருக்கு இணையாக யூரோ நாணயத்தின் உச்ச மட்டத்திலிருந்து தளர்த்துவதைவிட, ஐரோப்பிய பொருளாதாரத்தை ஊக்குவிக்க பொருளாதார சீர்திருத்தங்கள் மிக முக்கியமானவையாகும் என்றார். பிப்ரவரி மாதம் வரையிலான போர்த்துக்கல்லின் ஏற்றுமதிகள் 3 மாதங்களில் 6 வீதம் உயர்ந்துள்ளதை டுராவோ பாராசோ சுட்டிக்காட்டி, "போர்த்துக்கல்லின் - உண்மையில் ஐரோப்பிய - பொருளாதாரத்துடனான அடிப்படைப் பிரச்சினையாகக் காட்டுவது என்னவெனில், யூரோ-டொலர் வீதம் பற்றிய பிரச்சினை அல்ல. இன்னும் சொல்லப் போனால் நமது பொருளாதாரத்தை சீர்திருத்துவதைத் தூண்டிவிடல் நடவடிக்கையின் இருப்பைப் பற்றியதாகும். "சொல்லப்போனால் பொருளாதாரத்தை சீர்திருத்துவதற்கு, பலமான அல்லது பலவீனமான யூரோவைக் கொண்டு, எமது செயல் வரம்பிற்குள்ளே நாம் எப்போதும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என அவர் மேலும் குறிப்பிட்டார். டுராவோ பராசோவின் சீர்திருத்தத்திற்கான திட்டங்கள் என்பன, தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான கடும் தாக்குதல்கள் மூலமாகவும், பட்ஜெட் பற்றாக்குறையை சரிக்கட்டுவதையும், அதே நேரத்தில் கம்பெனிகளுக்கான வரிவிதிப்பு தற்போதைய 30 வீதத்திலிருந்து 2004 ம் ஆண்டில் 25 வீதமாக குறைக்கப்படுவதையும் 2006 ம் ஆண்டில் 20 வீதமாக குறைக்கப்படுவதையும் உள்ளடக்கியுள்ளன. போர்த்துக்கல்லைப் பொறுத்தவரை ஐரோப்பாவிற்கான மலிவான கூலி உழைப்பு மேடையாக தனது நிலையைப் பராமரிக்க, மேற்கு ஐரோப்பாவில் ஏற்கெனவே ஐரோப்பிய நாடுகளிலேயே மிக ஏழ்மை நிலையில் உள்ள தொழிலாளர்கள் நிலையை அது எடுத்தாக வேண்டும். மற்றும் அவர்களை கிழக்கில் உள்ள தொழிலாளர்களது வாழ்க்கைத் தரத்தை விட மிகவும் தாழ்ந்த நிலைக்கு கொண்டு வந்தாக வேண்டும். கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் இரண்டு கம்பெனிகள் மூடப்பட்டு வருவதும் முந்தைய கிழக்கு ஐரோப்பிய அணி நாடுகளில் உள்ள மலிவான கூலி உழைப்பு செலவு மற்றும் குறைவான வரிகளும் போர்த்துக்கல்லை அவற்றைச் சாதகமாக எடுத்துக்கொள்ளும்படி விட்டுள்ளது. போர்த்துக்கல்லில் சராசரி ஊதியம் 750 யூரோக்கள் ஆகும். பல்கேரியாவுடன் ஒப்பிட்டால் அங்கு சாரசரி ஊதியம் 100 யூரோக்கள் மற்றும் செக் நாட்டில் தேர்ச்சி பெற்ற தொழிலாளி பெறுவது 350 யூரோக்கள் ஆகும். ஐரோப்பிய ஒன்றியம் விரிவாக்கப்படல் போர்த்துக்கல் முதலாளித்துவம் எதிர்கொள்ளும் நெருக்கடியை ஆழப்படுத்தி வருகின்றது. ஏழ்மை நிலையில் உள்ள ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்கின்ற கம்பெனிகளுக்கு கணிசமான அளவிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் மானியம் கிடைக்கும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து போர்த்துக்கல் வாங்குவதைவிடவும், அல்லது போர்த்துக்கலிருந்து கம்பெனிகள் வெளியேறுவதை தடுப்பதற்கு அவற்றுக்கு அது வழங்க முடிகிறதை விடவும், மற்றும் தொடர்ந்த பொருளாதார வீழ்ச்சி உருவாக்கவிருக்கும் சமூகக் கொந்தளிப்பின் ஆபத்தைத் தடுத்து நிறுத்துவதற்கும் அதனிடம் பொருளாதார வசதியில்லை. |