World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு
US, Israel push Palestinian prime minister to launch crackdown அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டும் பாலஸ்தீனியப் பிரதம மந்திரியை கடும் நடவடிக்கை எடுக்கத் தூண்டுகின்றனர் By Chris Marsden "அவர் நம்மவர், வாஷிங்டன் அனைவருக்கும் தெரியும்படி அவருக்கு ஆதரவு கொடுக்கவேண்டும்" என்று Cato Institute ன் வெளியுறவுக் கொள்கை ஆய்வுகள் பிரிவின் துணைத் தலைவரான (Ted Gallen Carpenter) டெட் காலன் கார்ப்பென்டர் கூறியுள்ளார். இந்த அமைப்பு அதன் இயக்குநர்களுள் செய்தி ஊடக செல்வாக்குமிக்கவரான Rupert Murdoch-ஐ உள்ளடக்கிய மற்றும் செல்வாக்குமிக்க வலதுசாரி அமெரிக்க சிந்தனைக்குழு ஆகும். பாலஸ்தீனியப் பிரதம மந்திரி மக்மூத் அப்பாசைப் பற்றி கார்ப்பென்டர் அவ்வாறு கூறினார்; புஷ் நிர்வாகத்தின் சாலை வரைபடத்தில் உள்ள ஆணைகளை பெரும்பாலும் குரோத மனப்பான்மையும் ஐயுறும் நிலையும் கொண்ட பாலஸ்தீனிய மக்கள் மீது சுமத்தும் முயற்சியில் வாஷிங்டனின் ஆதரவை அப்பாஸ் பெற்றுள்ளார். சாலை வரைபடத்தின் விதிகளை நடைமுறைப்படுத்த முயற்சிகள் கொள்வது பற்றிய அறிவிப்புக்கள் அறிவிக்கப்பட்ட, இஸ்ரேலிய பிரதமர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் ஜூலை 1ம் தேதி அப்பாஸ், ஏரியல் ஷரோனுடன் அருகே இருந்து பேசினார். இவரோடு துணை வந்திருந்த ஏழு காபினெட் மந்திரிகளும் இஸ்ரேலின் ஏழு காபினெட் மந்திரிகளோடு அமர்ந்திருந்தனர். மிக முக்கியமாக வந்திருந்த அவருடைய பாதுகாப்புத் தலைமை அதிகாரி முகம்மத் தலன் இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி ஷாஉல் மொபஸிக்கும் (Shaul Mofaz) லிக்குட்டின் பழைய ஜெருசலம் மேயரும் துணைப் பிரதம மந்திரியுமான எகுட் ஓல்மெர்ட்டுக்கும் நடுவில் உட்கார்ந்திருந்தார்; இருவரும் களிப்புடன் பேசிக்கொண்டும் நகைத்துக்கொண்டும் இருந்தனர். அப்பாஸிற்கும் தலெனிற்கும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான இன்டிபடாவை முடிவுக்குக் கொண்டுவர வாஷிங்டனில் உள்ள அவர்களுடைய அரசியல் எஜமானர்கள் சார்பில் பொறுப்பேற்றிருக்கின்றனர். ஜூன் 29ம் தேதி, ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாத், யசீர் அராபத்தின் பஃதா ஆகிய மூன்று அமைப்புக்களும் மூன்று மாத கால போர் நிறுத்தத்தை அறிவித்ததையடுத்து இந்த மாநாடு சாத்தியமாயிற்று. முகம்மது அப்பாஸ், அராபிய நாடுகள், வெள்ளை மாளிகை பிரதிநிதி, புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொண்டலீசா ரைஸ் ஆகியோர் மிரட்டலுக்குப் பின்னேதான் போர் நிறுத்த ஒப்பந்தம்கூட வந்துள்ளது. இந்த முயற்சிகளுக்கு ஈடாக, சாலை வரைபடத்தில் வற்புறுத்தப்பட்ட வழியோடு பொருந்தும் வகையில் காசா கரையிலும், பெத்லேஹேம் நகரின் மேலைக்கரை இவற்றிலிருந்து ஓரளவு படைகளை ஷெரோன் திரும்புமாறு பணித்தார். கட்டாயத்தின் பேரில் பேசவேண்டிய கடமையான அமைதிக்கான விழைவை அவர் தெரிவித்ததோடு "பயங்கரவாதத்துடன் சமரசத்திற்கு இடமில்லை" என்ற அச்சுறுத்தலையும் தெரிவித்தார். காசாப் பகுதி, பெத்லஹேம் இவற்றிலிருந்து இஸ்ரேலியர் சற்று வெளியேறியது அப்பாஸிற்கு மறைத்துக்கொள்ளும் மூடிமறைப்பைக்கூடக் கொடுக்கவில்லை. ஜூலை 2ம் தேதி அவை நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போதே, இந்த மாற்றம், கொண்டிருப்பதால் மேலைக்கரையிலும் இஸ்ரேலின் மற்ற பகுதியிலும் கிடைக்கும் வேலைகளுக்கும் செல்வதைத் தடுக்கும் இஸ்ரேலிய சாலைத் தடைகளைத் தடுத்து நிறுத்தவில்லை என்று பகுதி வாழ்மக்கள் குறைகூறினர். இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) உடனடியாக அதனுடைய ஆக்கிரமிப்பில் ஈடுபடவும் மூடியவில்லை. IslamOnline க்கு உம் முகம்மது தெரிவித்தார்: "இது ஒரு தந்திரம், ஓர் பொய், வெளியேறுகிறோம் என்று சொல்வது ஏமாற்றுத்தனம். எங்களை விட்டுத் தொலைதூரம் அவர்கள் போகவில்லை; மீண்டும் அவர்கள் எந்த நேரமும் எங்கள் பகுதிக்குள் எங்களை விரட்டிவிட்டு தெருக்களையும் மூடிவிடலாம்."IDF விட்டுச்சென்ற அழிவு வேலையின் அளவினால் உள்ளூர் மக்களின் சீற்றம் அதிகமாக உள்ளது. Beit Honoun என்ற இடத்தில் ஆயுத புல்டோசர்கள் டஜன் கணக்கில் வீடுகளையும் ஆலைகளையும் தகர்த்தும், சாலைகளை அழித்தும், மரங்களை வெட்டி வீழ்த்தியும் நாசம் செய்துள்ளன. 1000 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த சிட்ரஸ் மரங்களையும் அழித்துள்ளனர்; இதை நம்பித்தான் பகுதியின் பொருளாதாரம் உள்ளது; இதைச் சீரமைக்க 10 ஆண்டுகள் ஆகலாம்.இஸ்ரேலின் இடுக்கிப்பிடி மீண்டும் இறுக அதிக நேரம் பிடிக்கவில்லை, Kfar Darum ல் உள்ள சியோனிச குடியிருப்பின் மீது நடந்த ஏவுகணைத் தாக்குதலை அடுத்து IDF முக்கிய வடக்கு-தெற்கு காசா கரையோர சாலையை "Tancher" நெடுஞ்சாலையை அடைத்துவிட்டது. ஒப்பந்தத்திற்கு உடன்படாத அல் அக்சா அணியைச் சேர்ந்த ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று இராணுவம் கூறுகிறது. அந்த நபர் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்டார். இஸ்ரேலுடைய உண்மையான நோக்கங்களை வெளிப்படுத்தும் வலிதரும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் இது. ஜூலை 3ம் தேதி Guardian இதழில் அதன் நிருபர் Chris Mc Greal இந்த வாரம் இஸ்ரேலிய அரசாங்கம் சியோனிஸ்ட் குடியிருப்புக்கள் அமைப்பதற்காக பாலஸ்தீனியரின் நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் நிலத்தை மேற்குக் கரையில் எவ்வாறு பறிமுதல் செய்தார்கள் என்று எழுதியுள்ளார். பெத்லஹேமை விட்டு IDF நீங்கிய அன்றே ஜெருசலேத்துக்கு வடக்கில் இருந்த கிராமங்களைச் சுற்றியிருந்த நிலங்கள் பறிக்கப்பட்டன. பாலஸ்தீனிய மந்திரி யசீர் அபெட் ரப்பூ (Yasser Abed Rabbo) படை வெளியேற்றம் என்பது நிலப் பறிப்புக்களை மூடி மறைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைதான் என்று கூறியுள்ளார். "இது ஒரு கொள்ளை, ஜெருசலேத்தின் புறநகர்ப் பகுதியில் இனச் சுத்திகரிப்பு நடைமுறையைக் கொண்டு வருகின்றனர்". கார்டியனிடம் உள்ளூர் வாசி ஒருவர், "இது எல்லாமே 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது... கடந்த ஆண்டுகளில் 4000 ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளனர். நாம் தொடர் அழுத்தத்தில் உள்ளோம். 1967ல் இங்கு 20,000 பேர் வசித்து வந்தனர். இப்பொழுது 1300 பேர் தான் உள்ளனர்." னே கூறினார் இப்பறிப்புக்களின் நோக்கம் ஜெருசலேத்தைச் சுற்றி இஸ்ரேலியக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை மேற்குக் கரை வரை விரிவு படுத்துதலும் பின்னர் அதை நகரத்துடன் சேர்த்து பெரிய இஸ்ரேலை உருவாக்க வேண்டும் என்பதும்தான். டெல் அவீவும் வாஷிங்டனும் இதையும் விட மோசமாக அப்பாஸிடம் எதிர்பார்ப்பது என்னவென்றால் ஆயுதமேந்திய போராளிகளை நசுக்குதலும், அது தவிர்க்க முடியாதவாறு பாலஸ்தீனிய மக்களோடு மோதும் பாதையில் அவரை வைக்க வேண்டும் என்பதுதான். இஸ்ரேலின் உள்நாட்டுப் பாதுகாப்புப் படையான ஷின் பெட்டின் (Shin Bet) தலைவரான Avi Ditcher ஜூலை 1ம் தேதி செய்தியாளர் கூட்டத்திற்கு முன், "காசாவில் பயங்கரவாதக் குழுக்களின் ஆயுதக் களைப்பு தொடங்கிவிட்டது என்பது தெளிவாகும் வரை, மேற்கு கரை பொறுப்பை மாற்றிக் கொடுக்க மாட்டோம்" என்று ஓர் எச்சரிக்கை விடுத்தார். ஜூலை 2ம் தேதி இஸ்ரேலியப் பாதுகாப்பு மந்திரி ஷால் மொபாஸ்ஸும் அமைச்சர் குழுவினரிடம் இஸ்ரேல் மற்றைய பகுதிகளில் இருந்து வெளியேறும் முன்னர், பாலஸ்தீனியர் முதலில் காசாவிலும் பெத்லஹேமிலுமுள்ள போராளிக் குழுவிடம் ஆயுதத்தைப் பறிக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார். வெளியுறவு மந்திரி சில்வன் ஷலோம் ஜூன் 29ம் தேதி அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தை ஒரு தந்திரமென்று கண்டித்ததுடன் அது ஒரு "பயங்கரவாதத்தின் உள்ளமைப்பை" காப்பதற்காக வைக்கப்பட்டுள்ள "தந்திர குண்டு" என்றும் வர்ணித்தார். பாலஸ்தீனிய நிர்வாகம் (PA) இந்தப் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி போராளிகளின் ஆயுதங்களைத் களைத்துவிட வேண்டுமெனக் கூறியுள்ள ரைஸ் ஆதரவை, இவர் பெற்றார். IDFன் தலைமைத் தளபதி மோசே யாலோன் Yediot Aharonot என்ற இதழில் வந்துள்ள பேட்டியில், "இஸ்ரேல் இன்டிபடாவை வெற்றிகொள்ளும் என்றும் போர் முழக்கத்திற்கு முன்பே போர் நிறுத்தம் கேட்பதற்காக ஹமாசை எள்ளியும் நகையாடியுள்ளார். ஹமாஸ் சரிந்து கொண்டிருப்பதற்கான வாய்ப்பு வந்து விட்டது" என்றும் கூறியுள்ளார். மஹ்மூத் அப்பாஸ் தனக்கு மக்களிடையில் சிறிதளவோ, ஓரளவோ கூட ஆதரவு கிடையாது என்பதால் தன்னுடைய பாலஸ்தீனிய எதிர்ப்பாளர்களை நேரடிச் சவாலில் சந்திக்க மிகுந்த தயக்கம் காட்டியுள்ளார். Kfar Darom தாக்குதலை "நாசவேலை" என்று விவரித்து கண்டனப்படுத்தும் நிலைமை அவருக்கு ஏற்பட்டுள்ளது. ஜூலை 3ம் தேதி பாலஸ்தீனியப் போலீசார் 7 போராளிகளைக் கைது செய்தனர்; இதில் 3 பேர் பாத்தா உறுப்பினர்கள் ஆவார்கள்; இது அவருடைய மற்றும் தலனுடைய காசா இல்லங்களுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு உட்பட சினம் கொண்ட ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிவிட்டது. துப்பாக்கி ஏந்தியவர்கள் காசா நகரத்தில் ஆகாயத்தை நோக்கிச் சுட்டதுடன் கைத்தயாரிப்புக் குண்டுகளையும் வீசியெறிந்தனர். ஜூலை 7ம் தேதி பாலஸ்தீனிய ஒரு 18 வயதுப் பெண்மணியைத் தற்கொலைக் குண்டாகச் செயல்பட இருந்ததற்குக் கைது செய்து பின்னர் அவருடைய வீட்டில் விடுவித்து விட்டனர். IDF திரும்பப் பெற்ற பின்னர் நடத்திய முதல் கைது சம்பவம் இதுவாகும். அப்பாஸ், ஹமாஸ், பாத்தா, இஸ்லாமிக் ஜிஹாத் இவற்றுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்; ஆனால் முழுமையான தாக்குதலை நடத்த வேண்டும் என்ற வாஷிங்டன் மற்றும் இஸ்ரேலை இதெல்லாம் திருப்திப்படுத்தாது. தன்னுடைய எதிரிகளைத் தாக்க முற்பட்டால், நிறையப் பண உதவி கிடைக்கும் என்ற ஆசையையும் அமெரிக்கா தூண்டிவிட்டுள்ளது; அப்பாசின் பாதுகாப்புப் படைகளுக்கு சீரமைப்பின் பொருட்டு 300 மில்லியன் டாலர்கள் கூடுதலாகத் தருவதாகவும் ஹமாஸ் வழங்கும் தற்பொழுதைய சமுதாயநலத் திட்டங்களுக்குத் தேவையான பண உதவியை மக்கள் ஆதரவைத்திரட்டுவதற்காக அவருக்குக் கொடுப்பதாகவும் கூறியுள்ளது. இதுவரை IDA மேற்குக்கரை மற்றும் காசா கரையில் அழித்த உள்கட்டுமானத்தை மீண்டும் அமைக்க 30 மில்லியன் டாலர்கள் உதவிப் பொதியம் வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. எப்படி பணம் உபயோகப்படுத்தப்படுகிறது என்பதற்கு ஓர் உதாரணம்; காசாவில் முன்சிபல் தொழிலாளர்கள் இன்டிபடா தொடர்புடைய இஸ்ரேலிய எதிர்ப்பு வாசகங்களை வெள்ளையடிக்கும் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு நகரம் அழகுபடுத்தல் திட்டத்தில் பணம் பயன்படுத்தப்படுகிறது. பாலஸ்தீனிய நிர்வாகத்தின் அமெரிக்க சார்புத்தலைமையின் நிலைமை இதைவிட மோசமாக இருக்க முடியாது. அதனுடைய 17000 போலீஸ் அதிகாரிகளில் நான்கில் ஒருவரிடம்தான் ஆயுதம் உள்ளது; இஸ்ரேலுடனான காசா எல்லை வழியே இருந்த 45 போலீஸ் சாவடிகளும் IDF ஆல் தகர்க்கப்பட்டு விட்டன. ஓர் உயர் அதிகாரி பின்வருமாறு வர்ணித்தார்: "இப்பொழுது அவர்கள் ஹமாசை ஆயுதம் களைய வேண்டும் என்கிறார்கள், அழிக்க வேண்டும் என்கிறார்கள்? இஸ்ரேலியர்கள் எங்களை ஓர் உள்நாட்டுப் போரில் தள்ள முயலுகின்றனர்." இந்தக் குற்றச்சாட்டு மிகச் சரியானதேயாகும். ஜூலை 1ம் தேதியில் தலானுடைய நண்பர் எகுட் ஒல்மெர்ட், நியூயோர்க்கில் உள்ள WNBC க்கு மே 18ம் தேதி அளித்த பேட்டியில், "அப்பாஸ் பயங்கரவாதத்திற்குதான் எதிரி என்பதை நிரூபிக்க வேண்டும்; எங்களுக்கு நியாயமாகப்படும் ஒரே நிருபணம் அது... அதை அவர் முடிக்க வேண்டும், அதற்கு எதிராக போரிட வேண்டும், இந்த ஹமாசையும், ஹெஜ்போல்லாவையும் ஜிஹாத் குழுக்களையும் முறியடிக்க வேண்டும், அவருடைய பாதுகாப்புப் படைகள் நேரடியாக இந்தக் குழுக்களை எதிர்கொண்டு அவர்களை நிறுத்த வேண்டும், அவ்வாறு செய்தால் நாங்கள் அவர்களை நிறுத்தத் தேவையில்லாமல் போகும். ... ஹமாஸ் பயங்கரவாதத்தைத் தொடரத் தயாராயுள்ளது, எனவே பாலஸ்தீனிய நிர்வாகம் அபு அப்பாஸ் தலைமையில் அவர்களோடு சண்டையிட வேண்டும்..... எவ்வாறாயினும் வெற்றி கொள்ளவேண்டுமானால் எந்தத் தயக்கங்களும் காட்டாமல் இருக்க வேண்டும்" என்றார். "சிக்கல் என்னவென்றால் அப்பாசை பற்றி மிகுந்த நம்பிக்கையுடன் நாங்கள் பேசினால், அவருடைய மக்களில் சிலர் அவரைத் துரோகியென்றும், இஸ்ரேலியருடன் இணைந்து செயலாற்றுபவர் எனவும் அழைக்கத் தொடங்கிவிடுவர்" என்பதை பின்னர் அவர் ஒப்புக்கொண்டார். |